Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன்

Featured Replies

கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன்
 
கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன்
தமிழர் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே தாம் விரும்புவதாகவும், மாறாக அவர்களை புறந்தள்ளி செயற்படுவது தமது நோக்கமல்லவெனவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது, வடக்கு கிழக்கு விடயத்தில் அமைச்சர் சுவாமிநாதன் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
 
இதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக யாழ்ப்பாண அபிவிருத்தி மற்றும் அங்குள்ள பிரச்சினைகளில் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் இணைந்து செயற்படவே முயற்சிப்பதாகவும், அவர்களை புறந்தள்ளி செயற்படுவது தமது நோக்கமல்லவெனவும் இதன்போது குறிப்பிட்டார்.
 
மேலும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே பனை அபிவிருத்தி சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதெனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை,எதிர்வரும் மார்ச்மாத காலப்பகுதியில்65,000 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும்,அவை பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகள் தேவையுடைய தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு பேதமின்றி பகிர்ந்தளிக்கப்படுமெனவும், மன்னாரில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்ட காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், யோகேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டது போல மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்
Quote

போரினால் பாதிக்கப்பட்டது அதிகம் தமிழ் மக்கள். அதென்ன தமிழர் பகுதியில் எல்லாருக்கும் சமனா பாரபட்சமின்றி வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுமாம். இல்லாதவனையும் கொண்டு வந்து புதிசு புதிசா இருத்தவா. இதைத்தான் திட்டமிட்ட குடியேற்றங்கள் என்று சொல்லுவினம். சுவாமிநாதனுக்கு உது தெரியுமோ..???! :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.