Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்ல மீன் வாங்குவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இணைப்புக்கள்,.என்னை மாதிரி ஒழுங்காக ஒரு வேலையும் செய்யத் தெரியாதவர்களுக்கு உபயோகமானவை..:)

பயனுள்ள இணைப்பு... நன்றி சகோதரம்!! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோ...! நல்ல தகவல்கள்...!

  • தொடங்கியவர்
20 hours ago, யாயினி said:

இப்படியான இணைப்புக்கள்,.என்னை மாதிரி ஒழுங்காக ஒரு வேலையும் செய்யத் தெரியாதவர்களுக்கு உபயோகமானவை..:)

நன்றி யாயினி உங்கள் கருத்துக்கும் வரவுக்கும்:)

19 hours ago, மீனா said:

பயனுள்ள இணைப்பு... நன்றி சகோதரம்!! :)

 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மீனா:)

12 hours ago, suvy said:

நன்றி சகோ...! நல்ல தகவல்கள்...!

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா:)

ஆஆஆ அப்ப நவீன் இனி இல்லையா<_<

8 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி நவீனன்

வரவுக்கு நன்றி சுவைப்பிரியன்:)

 

 

சரி இப்ப எல்லோருக்கும் எப்படி நல்ல மீன் வாங்குவது என்று  தெரியும்தானே.

இனி அடுத்து மீன் ரெசிப்பி வரும்:grin:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரிலை இருக்கேக்கையெண்டால் உதிலை சொல்லுறவரை விட எனக்கு கனக்கத்தெரியும். :cool:
இஞ்சை வாறதெல்லாம் ஐஸ்மீன். நல்லது கெட்டது ஒண்டையுமே கண்டு பிடிக்கேலாது. நாறல் மணத்தை தவிர.....:(

  • 1 year later...
  • தொடங்கியவர்

மீன் வாங்கும்போது அது நல்ல மீனா?... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது?...

 
ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட... 
 
fish.jpg
 
மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்... மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 
 
ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். 
 
லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர். நெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். 
 
மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்களின் மருத்துவப்பண்புகள் சில... 1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். 
 
தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது. 2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. 3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. 
 
மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது. 4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது. 5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
 
 6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது. 
 
7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 
 
8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது. 
 
9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது. இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. 
 
மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. சரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா?... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது?... மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்... 
 
இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்... அவை என்னென்ன?... மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்... தரமான மீன்கள் என்றால்...
 1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.
 2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும். 
3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். 
4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். 
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். 
7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும். தரம் குறைந்த மீன்கள் என்றால்.. 
 
1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். 
2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
 3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 
4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். 
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். 
6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். 
7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும். என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா?... 
 
அப்புறமென்ன?... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்.
 

http://www.dinanewspaper.com/

  • 1 month later...
  • தொடங்கியவர்

மீன் சாப்பிடத் தெரிஞ்சா போதுமா? பார்த்துப் பார்த்து வாங்கவும் தெரியனுமே!

 

 
fish_fry111

 

சாதாரண மீன் சமாச்சாரம்... ஆனால் சாப்பிடத் தெரிந்த அளவுக்கு எத்தனை பேருக்குப் பார்த்துப், பார்த்து வாங்கத் தெரியும்?

மீன்! அசைவப் ப்ரியர்களின் சொர்க்கம். சிக்கன், மட்டன் சாப்பிடக் கூட சில வகை டயட்களில் தடையுண்டு. ஆனால் மீனுக்கு மட்டும் அசைவப் பட்சிணிகளிடையே எங்கும், எப்போதும் தடையே இருப்பதில்லை. சருமத்தில் ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் கூட கருவாடு சாப்பிடக் கூடாது என்று தான் ஒதுக்குவார்களே தவிர மீனை அல்ல; அடடா... இந்த உலகத்தில் ரசித்து, ருசித்துச் சாப்பிடத் தோதாக எத்தனை, எத்தனை மீன் வகைகளை ஜோராகப் படைத்துக் கடவுள், நமக்காக மீன் ருசிகர்களுக்காக அனுப்பித் தந்திருக்கிறார்! யோசித்துப் பாருங்கள்... குறைந்த பட்சம் சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் உங்களால் வாங்க முடிந்த சில வகை மீன்களையாவது வகைப்படுத்த முடிகிறதா? என்று பாருங்கள்...

"வாளை மீன், விலாங்கு மீன், விரால் மீன், வஞ்சிரம் மீன், சீலா மீன், கெண்டை மீன், கெளுத்தி மீன், குறவை மீன், கட்லா மீன் (ஜிலேபிக் கெண்டை), சுறா மீன், மாங்காய்ச் சாளை மீன், தேங்காய் பாறை மீன், ஊழி மீன், கிழங்கா மீன், வெள்ளைக் கிழங்கா மீன், இறால் மீன், சங்கரா மீன், சென்னாக்குண்ணி மீன், கொடுவா மீன், மத்தி மீன், கணவாய் மீன், கானாங்கெளுத்தி மீன், அயிரை மீன், அயிலை மீன், அசுரப் பொடி மீன், உழுவ மீன், நெத்திலி மீன், காரப் பொடி மீன், மீசைக்கார கடுவா மீன், வாவல் மீன், கூனிப்பாறை மீன், கூனி இறால் மீன், சுதும்பு மீன், சூடை மீன், திருக்கை வால் மீன், திமிங்கலம், வெல மீன், சால்மன் மீன், கோலா மீன், செம்மீன்... "

- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் எனக்குத் தெரிந்த, நான் சாப்பிட்டுப் பழகிய மீன்கள். இதைக் காட்டிலும் இன்னும் அதிகமான அளவில், தினுசு, தினுசாகச் சமைக்கத் தோதாக ருசியான மீன் வகைகள் சென்னையில் கிடைக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் கீழே பட்டியலிடுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

மீன்களைப் பொருத்தவரை, மீன் போஜனப் ப்ரியர்கள் பலருக்கும் ருசி, மசியாய்ச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடத் தெரிந்த அளவுக்குப் பார்த்து, பார்த்து மீன் வாங்கத் தெரியுமா? என்றால், பலரும் சொல்லக் கூடிய ஒரே பதில், இல்லையென்பதாகவே இருக்கக் கூடும். ஆனால் சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு, அந்தப் பொருட்களைத் தரம் பார்த்து, கண்ணாலேயே ருசி பார்த்து வாங்கத் தெரியவில்லை என்றால் அவர்களது சுவை நரம்புகள் ஒரு மாற்றுக் குறைவு தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

சரி... சரி அதெல்லாம் போகட்டும், இதுநாள் வரையிலும் தான், மீன் சாப்பிடுவதைத் தவிர்த்து வாங்கத் தெரியாத மக்குகளாக இருந்து விட்டோம்... இனிமேலாவது நல்ல மீன்களாகப் பார்த்து வாங்கக் கற்றுக்கொள்வோம் என்று யாருக்காவது ஆர்வம் வந்திருந்தால் அவர்கள் தொடர்ந்து வாசியுங்கள். 

ஃப்ரெஷ் மீன்களைப் பார்த்ததுமே கண்டறிவது எப்படி?

  • மீன் வாங்கப் போகையில், மீனின் உடல் பகுதியில் விரலால் அழுத்தினால், விரலை எடுத்த வேகத்தில் மீன் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும். அது மட்டுமல்ல மீனின் மேல் தோலில் இருக்கும் உலோக மினு, மினுப்பு மங்காமல் அப்படியே மினுங்க வேண்டும். மீனின் தோல் கிழியாமல் இறுக்கமாக இருக்கவேண்டும், செதில்கள் கூட உதிராமல் இறுக்கமாக இருக்குமாயின்; மீன் ஃப்ரெஷ் ஆன மீன் தான் என்று தாராளமாக நம்பலாம். அப்படியில்லாமல் மீனின் மேல் தோல் கிழிந்தும், செதில்கள் அனைத்தும் வாங்கும் போதே தொட்டால் உதிரும் நிலையிலோ இருந்தால் அது நிச்சயமாகக் கெட்டுப் போன மீன் தான் என்று அர்த்தம்.
  • மீன் வாங்கச் செல்கையில் மீனை முகர்ந்து பாருங்கள்... அதற்காகக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து கடைக்காரரிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளத் தேவையில்லை. வெறுமே மீன் கடையில் நின்றாலே மீன் நாற்றம் நாசியைத் தீண்டி மெய்மறக்கச் செய்யும். பொதுவாக மீன் எங்கே பிடிக்கப் பட்டதோ அந்த ஆறு அல்லது கடலின் இயல்பான வாசம் அந்த மீனிலும் வந்து சேரும். அந்த வாசம் இயற்கையானது. ஆனால் கெட்டுப் போன மீன் என்றால் அதில் டிரைமெத்திலமைன் வாசம் வரும். அந்த வாசத்தை உங்களால் முகர் முடிந்தால் நிச்சயம் உங்களுக்கு முன்னிருப்பது கெட்டுப்போன மீனே தான். அதனால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது. 
  • கெட்டுப் போன மீன்களை மட்டும் தான் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. சில மீன்கள் ஃப்ரெஷ் ஆக இல்லாமல் துவண்டு போய் பார்த்தாலே சமைத்து உண்ணத் தோன்றாத அளவுக்கு எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தாத வண்ணமிருக்கும். அப்படி பட்ட மீன்கள் சுவையாக இருப்பதில்லை அவற்றையும் தவிர்த்து விடலாம்.
  • மீன் வாங்கச் செல்லும் போது, அது ஃப்ரெஷ் மீன் தானா? இல்லையா? என்று பார்க்க... மீனின் கண்களைப் பாருங்கள். மீன் பிடிக்கப் பட்டு சில மணி நேரங்களே தான் ஆகியிருக்கிறது என்றால் மீனின் கண்கள் நல்ல ஒளியுடன் பொலிவாக இருக்கும். அதுமட்டுமல்ல கண்களில் புகை படிந்ததைப் போலில்லாமல் மீனின் கண்கள் தெளிவுடன் இருந்தாலும் மீன் ஃப்ரெஷ் ஆன மீன் தான் என்று புரிந்து கொள்ளலாம்.
  • மீனின் செவுள் பகுதியைச் சோதித்துப் பார்த்தும் கூட அது ஃப்ரெஷ் மீன் தானா? இல்லையா? என்பதைக் கண்டுபிடித்து விடலாம். வாஙப் போகும் மீனின் செவுளைத் தூக்கிப் பாருங்கள், செவுள் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் லேசாக ஈரத்தன்மையுடன் மென்மையாக இருக்க வேண்டும். உலர்ந்தும், மெலிந்தும் நிறம் மாறியும் இருந்தால் அது பழைய மீன்.
  • மீனின் தோல்பகுதியிலிருக்கும் நிறமாற்றத்தைக் கவனியுங்கள், மீனின் மேல் தோல் மஞ்சளாகவோ, பிரவுன் நிறத்திலோ இருந்தால் அது நாள்பட்ட மீன் என்று அர்த்தம். அது மட்டுமல்ல மேல் தோல் அதிகம் சேதமாகி இருந்தாலும் கூட அது பழைய மீன் என்று தான் அர்த்தம்.

மேலே சொன்ன டிப்ஸ்களை எல்லாம் மீன் வாங்கச் செல்லும் போது மறவாமல் பின்பற்றி ஃப்ரெஷ் மீன்களாக வாங்கி அபார ருசியுடன் ரசித்துச் சமைத்து ருசியுங்கள்.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/sep/19/fish-buying-tips-2775956.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.