Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி இல்லாத யுத்தமா? தோல்வி இல்லாத சமாதானமா?

Featured Replies

http://www.tamilnaatham.com/articles/2007/jan/sabesan/09.htm

"பொன்சேக்காவே சொன்னவர்" புலிகள் பலமாக இருக்கிறார்கள். "வரலாற்றில் முதல் தடவையாக திருகோணமலை தளங்களிற்கு எறிகணை அடிக்கிறம்" என்ற முதுகு சுரண்டலில் உடன்பாடில்லை. சிறீலங்காவும் வரலாற்றில் முதற்தடவையாக செய்த பலவற்றைப் பட்டியல் இடமுடியும்.

முடிவுரையில் கேட்பவர்களை (வாசகர்களை) திருப்த்திப்படுத்தும் வகையல் "வெகுவிரைவில்" பாச்சல் நடக்கும் என்ற வழமையான பீச்சலில் உடன்பாடில்லை.

மற்றும் படி சமாதான காலத்தின் சவால்கள் சதிகள் வெற்றிகள் பற்றி நல்லதொரு பார்வை.

இன்று நாம் எதிர்கொள்ளும் கவலைக்குரியதும் வேதனையானதுமான விடையமும் எமது மிகப்பெரும் பலவீனமாக மாறக்கூடிய ஆபத்தில் இருப்பதும் "புலிகள் இராணுவ ரீதியில் பலமாக இருக்கிறார்கள்" என்று அடிக்கடி காட்டி வெளிப்படையாக சாகசங்கள் செய்து ஒளிப்பதிவில் காட்டி செய்தித்தலையங்கங்களாக ஆக்கினால் தான் எம்மவர்கள் (அதாவது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றில் நம்பிக்கை உள்ள விடுதலைக்கும் சுதந்திர தமிழீழ தனியரசிற்கு ஏங்குபவர்கள்) தமது நிலைப்பாட்டை தொடர்வார்கள் போலுள்ளது. இல்லாவிட்டால் தமது அபிமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ரசிகர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் நடந்து காட்டாவிட்டால் மாற்றிக் கொள்வது போல் மாறிவிடும் நிலையில் இருக்கிறார்களா?

ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்...

சிறீலங்காவோடு ஒப்பிடும் பொழுது புலிகளின் நிலை பின்வரும் 3 இல் ஒன்றாகத்தான் இருக்கும்.

-1- புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள்

-2- புலிகள் சமபலத்துடன் இருக்கிறார்கள்

-3- புலிகள் பலமாக இருக்கிறார்கள்.

போராட்டத்திலும் அதன் அடிப்படைகளிலும் உண்மையான விசுவாசம் இருந்தால் மேலுள்ள 3 இல் எதுவாக இப்பொழுது புலிகள் இருக்கிறார்கள் என்பது விவாதத்திற்கும் ஆய்விற்கு தேவையானதா?

புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்ற worst case assumption எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக பலப்படுத்துவதிலும் எம்மால் முடிந்ததை தொடர்ந்து பங்களிப்பதையும் எமக்குரிய கடமையை செய்ய எமக்கு பக்குவம் இல்லாது இருப்பது ஏன்? 30 வருடத்திற்கு மேலான போராட்ட அனுபவத்தில் இருந்து இந்த அடிப்படைப் பக்குவத்தைக் கூட பெறாத பரதேசிகளாக ஏன் நாம் இன்னமும் இருக்கிறோம்?

ஏன் இப்படியான சஞ்சலங்கள் எமக்குள்? அதை தெளிவுபடுத்த ஆய்வுகள் ஏன் அடிக்கடி தேவையாகிறது? இவற்றால் சுதந்திரமாக தனிநாடு ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பும் பக்குவமும் தகுதியும் உள்ள ஒரு இனமாக உலக அரங்கில் நாம் தெரிவோமா? இல்லை எம்மை அங்கீகரித்து தனி நாட்டை உருவாக்க உதவினால் கடமையில் பொறுப்பில் கவனம் இன்றி வறுமையும் குற்றங்களும் நோயும் மரணங்களும் குடி கொண்ட இன்னொரு தோல்வி அடைந்த நாடாக மாறும் என்ற சந்தேகத்தை சர்வதேசத்திற்கு கொடுக்கிறோமா? ஒரு சுதந்திர தனிநாட்டிற்குரிய கடமையை பொறுப்புகளை பொறுமைகளை அர்ப்பணிப்புகளை உணர்ந்தவர்களாக விளங்கியவர்களாக பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்கிறோமா?

30 வருடங்களிற்கு மேலான காலத்தில் 65000 மேற்பட்ட மக்களின் இறப்புகள் 18000 மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களிற்கு பிறகும் போராட்டைத்தை பொழுது போக்கும் அங்கலாய்ப்பாக ஏன் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

Edited by kurukaalapoovan

  • 2 weeks later...
  • Replies 62
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Situation Report

By Iqbal Athas

.......The near two decades of fighting by Security Forces and the Police (including the STF) in the separatist war have generated considerable international attention. In the past, US Army teams were in Sri Lanka to study some aspects including the use of improvised explosive devices (IEDs). Now, the United Kingdom's Ministry of Defence has shown interest.

Representatives of two British organizations will arrive in Sri Lanka tomorrow. One is from the Joint Counter Terrorism Training Advisory Team (JCTTAT) in the Ministry of Defence whilst the other is the Royal Navy Maritime Warfare Centre (MWC). They want to interact with senior officers in the Army, Navy, Air Force and the Police Special Task Force on their experiences in irregular warfare, force protection, securing of harbours and military bases. The three member team is also expected to visit Trincomalee. ......

கடந்த காலங்களை விட சர்வதேச நாடுகளின் ஆளுமை அதிகம் காணப்படுவதை வாகரைப் யுத்தம் மட்டும் அல்ல ஈழப்போர் - 4 இல் தொடர்ந்தும் அவதானிக்க முடியும்.

  • தொடங்கியவர்

.............நாம் எமது போராட்டத்தின் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம்.புலத்திலும்,களத்

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் வெற்றியோ/ தோல்வியோ ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பது வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டது. இந்திய அணுகு முறை பற்றி ஏற்கனவே பலதடவை எழுதியுள்ளேன். கீழ் உள்ள இணைப்பு இன்னுமொரு பார்வையை தரும்.....

LTTE AVOIDS BATTLE OF ATTRITION IN THE EAST - INTERNATIONAL TERRORISM MONITOR---PAPER NO. 178

http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2105.html

இக்கட்டுரையின் ஆசிரியர் டெல்ஹியில் உள்ள கொள்கை வகுப்பு பிரிவு சவுத் புளெக்கின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உங்களைப் போன்றோருக்கு பிச்சை போட்ட நிறுவனத்தில் இருந்தவர் என்று கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்..

அவருக்கு மஹிந்தவையும் பிடிக்காது. பிரபாகரனையும் பிடிக்காது.. அவரின் எதிர்வுகூறல்கள் பல பொய்த்துப் போயின, அப்படியிருந்தும் சளைக்காமல் ஆய்வறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றார்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, அதற்கு அவரோ, நீங்களோ, நாங்களோ விதிவிலக்கல்ல..

எமது போராட்டம் வெற்றியோ/ தோல்வியோ ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பது வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டது. இந்திய அணுகு முறை பற்றி ஏற்கனவே பலதடவை எழுதியுள்ளேன். கீழ் உள்ள இணைப்பு இன்னுமொரு பார்வையை தரும்.....

LTTE AVOIDS BATTLE OF ATTRITION IN THE EAST - INTERNATIONAL TERRORISM MONITOR---PAPER NO. 178

http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2105.html

இக்கட்டுரையின் ஆசிரியர் டெல்ஹியில் உள்ள கொள்கை வகுப்பு பிரிவு சவுத் புளெக்கின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் இன்னும் போரைத் துவக்கவே இல்லை அதுக்குள்ள முடிவுரை எழுதிப்போட்டியள். நீங்கள் யார் என்ன நோக்கத்துக்காக இங்க எழுதுறியள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிட்டுது.கனக்க அவசரப்படாதையுங்கோ பிறகு சொன்னதெல்லாத்தையும் திருப்பி எடுக்க வேண்டி இருக்கும்.உங்களுக்கு பழசுகளை அடிக்கடி நாபகப் படுத்த வேண்டியதக் கிடக்கு.ஜெயசிகுறுவுக்கும் இப்படித் தான் குதிச்சனியள், கொன்சம் யோசிச்சுப் போட்டு எழுதுங்கோ.

  • 1 year later...

கிழக்குத் தேர்தலை ரத்து செய் இந்தியாவை தலையிடக் கோரிக்கை - த.தே.கூட்டமைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36366

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களுக்குத் திரும்பவேண்டும் என்று தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சமாதான முன்னெடுப்புக்களையே விரும்பி நிற்கிறது: சுரேஸ் பிரேமச்சந்திரன்

http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e

அரசும் புலிகளும் யுத்தத்தை நிறுத்தி 'சமாதான' பேச்சுகளை மீள ஆரம்பிக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் 'நடுநிலை' ஊடகங்கள் என்று தம்மை கூறிக்கொள்வோர் மட்டும் அல்ல தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் ஊடகங்களும் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டன.

சுமார் ஒரு வருடங்களுக்கு முன் யாழ் களத்தில் நிகழ்ந்த சில விவாதங்கள் இன்றும் தொடர்ச்சியாக விவாதிக்கக் கூடிய அனைத்து அம்சங்களும் கொண்டவை. அன்றைய விவாதங்களில் பங்கு கொண்டவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? கருத்துகள் என்ன? என்பது விவாதத்தின் தொடர்ச்சியை இன்னும் பயனுள்ளதாக்கும்; ஆரோக்கியமுள்ளதாக்கும்.

கிழக்கில் வாகரையில் நிகழ்ந்த இறுதி யுத்தகாலத்தில் மீண்டும் சமாதான பேச்சுகளைத் தொடங்கக்கூடிய அரிய வாய்ப்புகள் இருந்தன. அதனைப்போன்ற வடக்கில் ஆனையிறவில் தொடங்கவுள்ள அடுத்த பாரிய யுத்தத்துக்கு முன் 'சமாதான' பேச்சுகளைத் தொடவேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது.

சமாதான வழிமுறையிலான போராட்டத் தொடர்ச்சி மட்டுமே இனிவரும் காலத்தில் ''தமிழ்த் தேசியம்'' இதுவரை செய்த தியாகங்களுக்கும் சிந்திய குருதிக்கும் அர்த்தமுள்ள அரசியல் விளைச்சலை அறுவடை செய்ய உதவும்.

சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது எண்று தமிழீழ அரசில் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள்.. கூட்டமைப்பு நாடாளிமற்ற உறுப்பினர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகினவே... படிக்கவில்லையா காண்டம் அவர்களே...??

போரை நிறுத்தி சமாதானத்துக்கு வாருங்கள் எண்று நீங்கள் அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்புங்கள்....

என்ன சமாதாணம் இல்ல எங்களுக்கு காண்டமாகி விட்டதா?

ஐநா சாசனப்படி சுய உரிமைகளோடு தனித்து வாழும் தகுதியும் விழுமியங்களும் உடைய இனமாகத்தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். மட்டக்களப்பின் நடக்கும் கொடூரம் இலங்கை படைகள் செய்யும் அட்டூளியத்தின் உச்சமாகத்தான் பார்க்க படும்... தமிழர் மீதான ஒடுக்கு முறையின் அங்கம்தான் புலிகள் மீதான தாக்குதல் எண்று, மக்கள் மீது நடாத்தப்படும் அட்டூளியங்கள்... இதை உலகம் பார்க்கவில்லை என்று சொல்வது மிக மோசமான முட்டாள்த்தனம்...

இலங்கையில் முழு அளவில் யுத்தம் தொடங்கவில்லை... ஆனாலும் இலங்கையில் வருமானம் படுத்து விட ஆரம்பித்தாச்சு.. பங்குச்சந்தை விழுந்து செலவாணியின் நிலை பரிதாபமாக இருக்கும் வேளை இப்போதே ஆரம்பித்தாச்சு... முழு அளவான யுத்தம் என்பது சிங்கள மக்களை எப்படி எல்லாம் பாதிக்க போகிண்றது, இலங்கையை வறுமையில் வாட்ட போகிண்றது என்பதுக்கும் நல்ல உதாரணங்கள் எல்லாம் சொல்ல ஆசை, ஆனால் இப்போ வேண்டாம்.... சிங்களவர் பாதிக்க படும்போது தமிழர் பட்டதுன்பங்களின் முடிவாக அமையும்...! அப்போ தமிழரை தலைநிமிர்த்த புலம்பெயர் தமிழர் சமூகம் உறுதியாக கை கொடுக்கும்...! காரணம் அது எமது தேசம்...!

சிங்கள தேசத்தின் பொருளாதாரம் பொறிந்து விழப்போகிறது என்ற வகையான கருத்துகளைக் கடந்த ஒரு வருட காலத்தில் சிங்களம் வாங்கிக்குவித்துள்ள போர்த்தளபாடங்களின் அளவுகளுடன் ஒப்பிடும் போது பெரும் தவறான முன் அனுமானங்களாகி விட்டன. கடந்த ஒரு வருடமாக சர்வதேச சமூகம் தமிழர் தலைமையின் மீது கொடுத்த அழுத்தம் போல் சிங்கள தரப்புக்கு கொடுக்க வில்லை என்பதை இப்போ தயா புரிந்து கொண்டதால்தான் என்னவோ ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது என்று தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள்.. கூட்டமைப்பு நாடாளுமற்ற உறுப்பினர்களிடம் கூறியதாக'' வந்த செய்திகள் குறித்து எனக்கு நினைவுபடுத்தியுள்ளார். நன்றி தயா.

தலைவரின் பேச்சையே திசை திருப்பி கருத்து வைக்கும் சமாதாணம் நீர் எல்லாம் எமக்கு சமாதாணம் பற்றி விளக்கம் சொல்லுறிங்களோ?

நிலமைப்பா வெய்யில் எறிக்கும் போது மழை பெய்வது எற்று கொள்ளாம் ஆனா வெய்யில் எறிக்கும் போது இரவு என்று அடம் பிடிப்பது கொஞ்சம் ஒவர்ப்பா

''வெய்யில் எறிக்கும் போது இரவு என்று அடம் பிடிப்பது'' சாத்தியமானது. நல்லிரவில் சூரியன் உதிக்கும் நாட்டில் வசிப்பவர்களிடம் இதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பயனுள்ள கருத்தாடல்கள்தான் இங்கு முக்கியமே அன்றி நபர்கள் முக்கியம் அல்ல. ஒருவருடத்துக்கு முன் யுத்தம்தான் 'தீர்வு' யுத்தத்தால்தான் 'தீர்வு' என்று இருந்த ஐ.வி. சசியின் கருத்தில் இன்னும் ஏதாவது மாற்றம் உள்ளதா தெரியவில்லை. நீங்கள்தான் சசி எழுதவேண்டும்.

சிங்கள தேசத்தின் பொருளாதாரம் பொறிந்து விழப்போகிறது என்ற வகையான கருத்துகளைக் கடந்த ஒரு வருட காலத்தில் சிங்களம் வாங்கிக்குவித்துள்ள போர்த்தளபாடங்களின் அளவுகளுடன் ஒப்பிடும் போது பெரும் தவறான முன் அனுமானங்களாகி விட்டன. கடந்த ஒரு வருடமாக சர்வதேச சமூகம் தமிழர் தலைமையின் மீது கொடுத்த அழுத்தம் போல் சிங்கள தரப்புக்கு கொடுக்க வில்லை என்பதை இப்போ தயா புரிந்து கொண்டதால்தான் என்னவோ ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது என்று தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள்.. கூட்டமைப்பு நாடாளுமற்ற உறுப்பினர்களிடம் கூறியதாக'' வந்த செய்திகள் குறித்து எனக்கு நினைவுபடுத்தியுள்ளார். நன்றி தயா.5

500 மில்லியன் டொலர்களுக்கு இறைமை அடகுகடையில் வைத்து இருக்கும் இலங்கை பற்றிதானே நீங்கள் பேசுவது....!!

பழசுதான் எண்டாலும்புதுசாக அப்போதைய தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணா சொல்வதை ஒரு தடவை கேட்டு பாங்கள்...

பேச்சுக்கு நாங்கள் போவது பலவீனர்களாக அல்ல என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்....!!!!!

500 மில்லியன் டொலர்களுக்கு இறைமை அடகுகடையில் வைத்து இருக்கும் இலங்கை பற்றிதானே நீங்கள் பேசுவது....!!

பேச்சுக்கு நாங்கள் போவது பலவீனர்களாக அல்ல என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்....!!!!!

இலங்கை மீள முடியாத கடனாளியாக போவது குறித்த உங்கள் கருத்துடன் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்து இல்லை. பலவீனமான நிலையில் தமிழர் தலைமை பேச்சுக்கு மீண்டும் போவதாக 'நான்' கருதுவதாக நீங்கள் குறிப்பிடுவதுடன் 'நான்' கடுகளவும் உடன்பாடு உடையவன் அல்ல.

'பலவீனம்' அல்லது 'பலம்' , 'பலவீனம்' எதிர் 'பலம்' என்ற எதிரெதிராக உரையாடல்களை நாம் தொடர்ந்து நடத்துவது விளைச்சல் அற்ற கட்டாத்தரையில் விதைநெல் எறியும் வீண்வேலை.

தமிழ்த்தேசியம் இதுவரை கொடுத்த விலைமதிப்பற்ற 'ஈகைகள்' பயனுள்ள பெறுபேறுகள் உடைய அரசியல் 'மூலதனம்' ஆக்கி தேசிய விடுதலையைத் தொடர்வதே இன்றைய யதார்த்தமாய் எம்முன் உள்ள ஒரே வழியாகும். அதனைதான் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதனைதான் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

சமாதானக் கதவுகள் திறந்திருக்கின்றது என்பதனைப் புலிகள் பலமிழந்து விட்டதால் கால அவகாசம் கேட்கப் பாவிக்கிறார்கள் (அல்லது கப்பலில் இருந்து ஆயுதங்கள் வரவழைக்கப் பாவிக்கும் தந்திரம்) என மகிந்தவும் அவருக்குப் முண்டுகொடுக்கும் பேரினவாதிகளும் ஒட்டுண்ணிகளும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் தமிழீழத் தனிநாட்டை அடையப் போரிடும் போராளிகளும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்த் தேசியத்தில் பற்றுள்ள மக்களும் இதுவோர் இராஜதந்திர ரீதியான பேச்சு என்பதனை நன்குணர்வர்.

போரின் மூலம் தமிழர்களைத் தோற்கமுடியாது என்பதனை சிங்கள அரசும் அதன் படைகளும் உணரத் தலைப்பட்டால் சமாதானம் பேசச் சந்தர்ப்பம் உள்ளது. எனினும் இந்தியாவினதும், இணைத்தலைமை நாடுகளுடன், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராணுவ பொருளாதார உதவிகளுடன் வன்னி மீதான ஆக்கிரமிப்பையும், கிளிநொச்சி மீதான கொடியேற்றலையும் முதன்மைப்படுத்தி நிற்கும் மகிந்தவிற்கு தற்போது சமாதானத்தில் நாட்டமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. எனவே வலிந்து திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு எத்தகைய சவால்களையும் முறியடித்து தமிழ்த் தேசியத்தின் சக்தியை நிலைநாட்ட வேண்டிய தேவை தமிழர்களுக்கு உண்டு. வெற்றுச் சமாதான கோசங்களால் தற்போது தமிழர்களுக்குச் சாதகமான தீர்வைப் பெற்றுவிடமுடியாது என்பதனைப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசியத்தினைப் பலப்படுத்தும் முயற்சியில் உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள்..

நன்றி.

தமிழ்த்தேசியம் இதுவரை கொடுத்த விலைமதிப்பற்ற 'ஈகைகள்' பயனுள்ள பெறுபேறுகள் உடைய அரசியல் 'மூலதனம்' ஆக்கி தேசிய விடுதலையைத் தொடர்வதே இன்றைய யதார்த்தமாய் எம்முன் உள்ள ஒரே வழியாகும். அதனைதான் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

நீங்கள் பேச்சுக்கு எவ்வளவு தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் அரசூ பேச்சுக்கு வருமா எண்று ஒரு முறை ஆய்வு செய்யுங்கள்.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.