Jump to content

Recommended Posts

Posted

p113h.jpg

தக்காளி தோசை 

தேவையானவை:

தோசை மாவு  அரை கிலோ

பழுத்த தக்காளி கால் கிலோ

பச்சைமிளகாய்  ஒன்று

மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன்

சீரகம்  ஒரு டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

தக்காளியை வேகவைத்து தோலுரித்து ஆறவிடவும். தக்காளியுடன் பச்சைமிளகாய், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பதமாக வார்த்தெடுக்கவும்.


p113k.jpg

கேழ்வரகு ரவா தோசை 

தேவையானவை:

கேழ்வரகு மாவு  200 கிராம்

ரவை  50 கிராம்

கோதுமை மாவு  50 கிராம்

பச்சை மிளகாய்  ஒன்று

இஞ்சி  ஒரு துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

பெருங்காயம்  சிறிதளவு

உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு, ரவை, கோதுமை மாவை ஒன்றாகக் கலந்து எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்துக்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

Posted

p35j.jpg

இறால் கீமா கோலா 

தேவையானவை:

இறால்  200 கிராம் (சுத்தம் செய்தது)

கடலைப்பருப்பு  200 கிராம்

சின்னவெங்காயம்  100 கிராம் (ஒன்றிரண்டாக அரைக்கவும்)

பூண்டு  7 பல் (ஒன்றிரண்டாக தட்டியது)

சோம்பு  2 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள்  அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்  4

கொத்தமல்லித்தழை  2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு

தேங்காய்துருவல்  10 டீஸ்பூன் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்) 

செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து முதலில் நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும். பிறகு மீதமுள்ள பருப்பை ஒன்றிரண்டாக கெட்டி பதத்தில் மிக்ஸியில் சேர்த்து அரைத்தெடுக்கவும். சுத்தம் செய்த இறாலை மஞ்சள்தூள், சிறிது உப்பு தண்ணீரில் 5 நிமிடம் வேகவிட்டு தண்ணீரை வடித்து ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்துக் கொள்ளவும். இரண்டு பாகமாக அரைத்த பருப்புக் கலவை, சின்னவெங்காயம், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு, தட்டிய இஞ்சிபூண்டு, அரைத்த தேங்காய் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், இறால் கீமா கோலா ரெடி.


p35k.jpg

இறால் கோல்டன் ஃப்ரை 

தேவையானவை:

இறால்  250 கிராம் (சுத்தம் செய்தது)

கார்ன்ஃப்ளார்  2 டீஸ்பூன்

மைதா மாவு  2 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)

உப்பு  தேவையான அளவு

பிரெட் தூள்  தேவையான அளவு

எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு 

செய்முறை:

ஒரு பவுலில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு, சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கவும். இறாலை சுத்தம் செய்து கார்ன்ஃப்ளார் கலவையில் புரட்டி, கால் மணி நேரம் ஊற விடவும். பிறகு ஊறிய இறாலை ஒவ்வொன்றாக எடுத்து பிரெட் தூளில் புரட்டி வைக்கவும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்தால், இறால் கோல்டன் ஃப்ரை ரெடி.

குறிப்பு:

இறாலைப் பொரிக்கும்போது எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும். இறால் பொன்னிறமாக வரும்வரை, கரண்டியால் புரட்டி விட்டு நிதானமாகப் பொரிக்கவும்.

Posted

p113m.jpg

சுரைக்காய் தோசை 

தேவையானவை:

இட்லி அரிசி  அரை கிலோ

உளுந்து  200 கிராம்

சுரைக்காய் அரை கிலோ

காய்ந்த மிளகாய்  6

உப்பு  தேவையான அளவு

கறிவேப்பிலை  சிறிதளவு

கொத்தமல்லித்தழை  சிறிதளவு

துருவிய தேங்காய்  ஒரு கப்

பொடியாக நறுக்கிய

சின்னவெங்காயம்  50 கிராம் 

செய்முறை:

இட்லி அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை தோல்நீக்கித் துருவிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் காய்ந்த மிளகாய், சேர்த்து அரைத்துக்கொள்ளவும். துருவிய சுரைக்காய், உப்பு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விதம் விதமான தேநீர் வகைகள் , தினத்துக்கு ஒன்றாகச் செய்து அருந்தலாம் ....! ஆனால் இந்த ஆவாரம் பூ  ஆயிட்டம்தான்  டீயா , குடிநீரா என்று ஒரு டவுட் ...... மற்றும்படி ஓ கே .....!  tw_blush:

Posted

மைக்ரோவேவ் அவனை உபயோகிக்க ஆசைப்படுபவர்களுக்கு இந்தப் பக்கங்கள் நிச்சயம் உபயோகமாக இருக்கும். மைக்ரோவேவ் அவனில் ஸ்பெஷலிஸ்டான சசிமதன், இனி உங்களுக்குத் தொடர்ந்து மைக்ரோ அவன் ரெசிப்பியைத் தர இருக்கிறார்.

மைக்ரோவேவ் அவன் ஓர் அறிமுகம்

சில வகைகள்.

1. சோலோ  இதில் உணவுகளை சமைப்பது, சூடு செய்வது, வேகவைப்பது போன்றவற்றைச் செய்யமுடியும்.

2. கிரில்  பதார்த்தங்கள் சிவக்க வேக வேண்டும் என்றால், கிரில் மோடில் வைக்கவேண்டும்.

3. கன்வெக்‌ஷன்  கேக், பிஸ்கட், பஃப், பன், பிரெட் போன்றவை செய்யமுடியும்.

கேக், பிஸ்கட் போன்றவற்றை பேக்கிங் அவனில் மட்டுமே செய்கின்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வெளிவரும் மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, பிறகு பேக்கிங் செய்யலாம்.

அவனில் உள்ள ஹீட் மோடின் அளவுகளைப் பார்க்கலாம்.

ஹை பவர்  100%

ஹை மீடியம்  80%

நடுத்தர ஹை மீடியம்  60%

மீடியம் லோ  40%

லோ  20%

அவரவர் வைத்திருக்கும் மைக்ரோ வேவ் அவனுக்கு ஏற்றவாறு, நேரம் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்.

p47b.jpg

தேங்காய் பிஸ்கட்

தேவையானவை:

மைதா மாவு  முக்கால் கப்

வெண்ணெய்  1/3 கப்

கொப்பரைத்துருவல்  4 டேபிள்ஸ்பூன்

பொடித்த சர்க்கரை  அரை கப்

செய்முறை:

ஒரு பவுலில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையையும் சேர்த்து நுரைக்க அடித்துக் கொள்ளவும். இத்துடன் மைதா மாவு மற்றும் கொப்பரைத்துருவலையும் சேர்த்துப் பிசைந்து கையால் தட்டி பிஸ்கட் கட்டர் அல்லது ஏதாவது ஒரு வட்டமான மூடியால் விருப்பமான வடிவத்துக்கு கட் செய்யவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேயில் பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றுக்கும் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, டிரேயை உள்ளே வைத்து மூடி 80 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடம் பேக் செய்யவும். பிறகு வெளியே எடுத்து ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். கரகரப்பான கிரன்சி பிஸ்கட் ரெடி.

குறிப்பு:

பிஸ்கட் வகைகளுக்கு அவனை ப்ரீஹீட் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.


p47c.jpg

புடலங்காய்க் கூட்டு

தேவையானவை:

புடலங்காய்  அரை கிலோ

பயத்தம்பருப்பு  அரை ஆழாக்கு

பெருங்காயம்  சிறிதளவு

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

கடுகு  ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு

சீரகம்  ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்  3

தேங்காய்த்துருவல்  அரை கப்

எண்ணெய்  தேவையான அளவு

உப்பு   தேவையான அளவு

செய்முறை:

பயத்தம்பருப்பை பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். புடலங்காயை சுத்தம் செய்து பொடியான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊறிய பருப்பு, நறுக்கிய புடலங்காய், பெருங்காயம், மஞ்சள் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடவும். பிறகு அவனின் உள்ளே வைத்து மூடி அவனை ஹை பவரில் 12 நிமிடம் வைக்கவும். வெந்த கலவையில் உப்பு, தேங்காய்த்துருவல் (தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம்) சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். மற்றொரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு அவனில் மைக்ரோ

ஹை பவரில் பாத்திரத்தை மூடாமல் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். அதே எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு லேசாக மூடவும். அதாவது பாதி மூடியும் பாதி மூடாமல், அவன் உள்ளே நடுத்தர ஹை மீடியத்தில் 2 நிமிடம் வைத்தெடுக்கவும். தாளிப்பு தயாரானதும், அதை அப்படியே கூட்டில் சேர்த்துக் கலந்து ஹைபவரில் ஒரு நிமிடம் மூடாமல் வைத்து, எடுத்து சூடாக சாதத்துடன் பரிமாறவும். இந்தக் கூட்டை சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.


p47d.jpg

தேங்காய்ப்பால் நெய் சாதம்

தேவையானவை:

பாசுமதி அரிசி  ஒன்றரை கப்

நெய்  4 டீஸ்பூன்

பட்டை  ஒன்று

லவங்கம்  ஒன்று

சோம்பு  கால் டீஸ்பூன்

பிரிஞ்சி இலை  ஒன்று

பெரிய வெங்காயம்  ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது)

பச்சை மிளகாய்  5 (நீளவாக்கில் நறுக்கியது)

இஞ்சிபூண்டு விழுது  2 டீஸ்பூன்

தேங்காய்ப்பால்  ஒரு கப்

தண்ணீர்  2 கப்

உப்பு  தேவையான அளவு

செய்முறை:

அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் நெய் விட்டு அதனுடன் பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து, ஹை பவரில் ஒரு நிமிடம் வைக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்துக் கலந்து மீண்டும் 3 நிமிடம் ஹை பவரில் வைத்தெடுக்கவும். இத்துடன் ஊற வைத்த அரிசி, 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி ஹை பவரில் 10 நிமிடம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும். சாதம் வேகவில்லை என்று நினைத்தால், மேலும் ஒரு நிமிடம் மைக்ரோ ஹை பவரில் வைத்தெடுத்துக் கொள்ளவும்.


p47e.jpg

பாலக் பனீர்

தேவையானவை:

பசலைக்கீரை  ஒரு சிறிய கட்டு

பனீர்  200 கிராம்

தக்காளி  4

பச்சை மிளகாய்  2

இஞ்சி விழுது  ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

பெருங்காயம்  ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்)  ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன்

ஃபிரெஷ் கிரீம்  2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை  அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள்  கால் டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

செய்முறை:

பசலைக்கீரையை சுத்தம் செய்து, ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து

2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடி, அவன் உள்ளே ஹை பவரில் வைத்து அவனை மூடி 4 நிமிடம் வேகவிடவும். மிக்ஸியில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பனீர் துண்டுகள் மேல் உப்பு தூவி குலுக்கி, 2 நிமிடம் தனியாக வைக்கவும். ஆறிய பசலைக்கீரையை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம், மஞ்சள் தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்து ஹை பவரில்  2 நிமிடம் வைத்து பாத்திரத்தை மூடாமல் வேகவிட்டு எடுக்கவும். பிறகு வெளியே எடுத்து அத்துடன் தக்காளி விழுது, பெருங்காயத்தூள் இஞ்சி விழுது, சர்க்கரை, பனீர், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து ஹை பவரில்

3 நிமிடம் வைத்தெடுக்கவும். பிறகு ஃபிரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும். இதை சப்பாத்தி, நான், பூரி, புல்கா, குல்சா போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

குறிப்பு:

பனீரை வெளியில் திறந்து வைத்தால், சற்றுநேரத்தில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதைத் தடுக்கவே அதன் மீது உப்பைத் தூவி குலுக்கி வைக்கிறோம். உப்பு தூவினால், பனீருக்கு சற்று சுவை கிடைக்கும்.


p47f.jpg

பனீர் டிக்கா

தேவையானவை:

பனீர்  200 கிராம்

மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன்

ஆம்சூர் பொடி  ஒரு டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள்  ஒரு டீஸ்பூன்

கெட்டித் தயிர்  ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

கரம் மசாலாத்தூள்  அரை டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலில் தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறி (பனீர் உடைந்துவிடாதபடி) ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் ஒரு குழிவான மைக்ரோவேவ் தட்டில் ஒவ்வொரு பனீராக அடுக்கவும். தட்டை அவனின் உள்ளே வைத்து மூடி, ஹை பவரில் 4 நிமிடம் வேக வைக்கவும். பிறகு தட்டில் உள்ள பனீரின் அடிப்புறத்தைத் திருப்பி மேல்புறமாக வைத்து, ஊற வைத்ததில் விழுதுகள் ஏதேனும் மீதம் இருந்தால், அவற்றை பனீரின் மீது தடவி, 4 நிமிடங்கள் ஹை பவரில் மறுபடியும் வேகவிட்டு எடுத்தால் பனீர் டிக்கா ரெடி. இந்த டிக்காவை அதற்கான மரக்குச்சியில் செருகி கிரில் மோடில் 1015 கிரில் செய்தும் பரிமாறலாம்.

குறிப்பு:

டிக்கா குச்சியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பனீரைச் சொருகவும்.


p47g.jpg

எக்லெஸ் சாக்லேட் பிரவுனீஸ்

தேவையானவை:

மைதா மாவு  முக்கால் கப்

சர்க்கரை  அரை கப்

பேக்கிங் பவுடர்  அரை டீஸ்பூன்

ஆப்ப சோடா  கால் டீஸ்பூன்

உப்பு  ஒரு சிட்டிகை

கோகோ பவுடர்  ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய்  கால் கப்

வெனிலா எசன்ஸ்  கால் டீஸ்பூன்

வினிகர்  அரை டேபிள்ஸ்பூன்

தண்ணீர்  அரை கப்

அலங்கரிக்க  ஜெம்ஸ் மிட்டாய் /

சீரக மிட்டாய்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். பிறகு அதனுடன் எண்ணெய், வெனிலா எசன்ஸ், வினிகர், தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் தடவி, அதன் மேல் மைதா மாவை சிறிது தூவிவிடவும். இனி, கலந்து வைத்துள்ள கலவையை பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடில் 180 டிகிரி செல்சியஷில்

20 நிமிடங்கள் பிரீஹீட் செய்துகொள்ளவும்.

பிறகு, பாத்திரத்தை அவனின் உள்ளே வைத்து, 180 டிகிரி செல்சியசில் 2025 நிமிடங்கள் வரை பிரவுனீஸ் பேக் செய்து எடுத்து ஆற விட்டு மேலே முந்திரியோ, ஜெம்ஸ் மிட்டாய், அல்லது சீரக மிட்டாயால் அலங்கரித்துப் பரிமாறவும்.


p47h.jpg

ஸ்டஃப்டு கத்திரிக்காய்

தேவையானவை:

சின்ன கத்திரிக்காய்  அரை கிலோ

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி விழுது  ஒரு டீஸ்பூன்

சோம்புத்தூள்  ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள்  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள்  ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்)  

ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கத்திரிக்காயை குறுக்காக நான்காக கீறிக்கொள்ளவும். அதன் அடிப்பாகத்தை நறுக்கிவிடக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கத்திரிக்காயின் உள்ளே அடைக்கவும். பிறகு மைக்ரோவேவ் அவனுக்காக தட்டிலோ அல்லது பாத்திரத்திலோ கத்திரிக்காய்களை அடுக்கி ஹைபவரில் 4 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு வேகாத கீழ்ப்பகுதியை, மேலாக திருப்பி வைத்து

3 நிமிடம் மீண்டும் ஹை பவரில் மூடிபோட்டு வேகவைத்து எடுக்கவும். வெந்ததும்

5 நிமிடம் கழித்து (Standing time) திறந்து பரிமாறவும். இதை சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அசத்தலான சுவையாக இருக்கும்.

Posted (edited)

கீரை கார்ன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, ஏதாவது ஒரு கீரை - ஒரு கப், வேகவைக்கப்பட்ட மக்காச்சோள முத்துக்கள் - ஒரு கப், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகத் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையை உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பிரெட்டின் மீது கீரை, மக்காச்சோளம், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் தூவி, அதன் மேல் பிரெட் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.

p73a.jpg

பலன்கள்: இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ளன. காலை உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளும் வயதானவர்களும் சாப்பிடலாம்.

 

Edited by நவீனன்
Posted
மாலு பாண் : செய்முறைகளுடன்...!

 

 

fishbun.jpg


தேவையான பொருட்கள் :

  • மா - 3 பேணி
  • ஈஸ்ட் - 3 தேக்ககரண்டி
  • சீனி - ஒரு தேக்ககரண்டி
  • பட்டர் - அரை தேக்ககரண்டி
  • முட்டை (மஞ்சள் கரு) - ஒன்று
  • உப்பு - தேவையான அளவு
  • மீன் டின் பிரட்டல் கறி - தேவையானளவு
  • உப்பு - தேவையான அளவு (ஒரு தேக்கரண்டி)
  • எண்ணெய் - தேவையானளவு


செய்முறை :
 

  • ஈஸ்ட், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும் (2 நிமிடங்களுக்குள் இக்கலவை பொங்கி வரும்).
  • இக்கலவை பொங்கி வந்த பின்பு இதில் மா, உப்பு, பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.
  • இதை கொஞ்ச நேரம் மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் வைப்பது போல் மீன் டின் பிரட்டல் கறியினை போட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள்.
  • பின்னர் எண்ணெய் தடவிய தட்டில் எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள்.
  • வேகும் போது பாணின் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையினால் (Brush) தொட்டு பூசிவிடுங்கள்.
  • 200 டிகிரி Cயில் 15 நிமிடங்கள் 150 டிகிரி C யில் 20 நிமிடங்கள் அவனில் பேக் பண்ணி கொள்ளுங்கள். நன்றாக பேக் பண்ணியதும் அதை பரிமாறவும்.
Posted

ட்ரை கலர் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்- 2, வெள்ளரி - அரை துண்டு, தக்காளி - ஒன்று, வெங்காயம்- 4 ஸ்லைஸ், புதினா சட்னி, நெய் - தேவையான அளவு.

p74a.jpg

செய்முறை: பிரெட் மீது புதினா சட்னியைத் தடவி, அதில் காய்கறிகளைச் சுற்றிவைத்து, இன்னொரு பிரெட் ஸ்லைஸை மேலே மூடி வைத்து டோஸ்ட் செய்தும் செய்யாமலும்கூட சாப்பிடலாம். விருப்பத்துக்கேற்ப காய்கறிகளையும் மாற்றிக்கொள்ளலாம்.

பலன்கள்: மல்டி வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் முழுமையாகவும் கிடைக்கும். நெய் இருப்பதால் கொழுப்புச்சத்தும் கிடைத்துவிடும். இதை காலை உணவாகவே சாப்பிடலாம்.

Posted

பிட்டா - காளான் சாண்ட்விச்

தேவையானவை: பிட்டா பிரெட் ஸ்லைஸ் - 2, (பிட்டா என்பது பிரெட்டின் ஒருவகை) வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, காளான் - 50 கிராம், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p76a.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை வதக்கி, துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள காளான்களை அதில் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இறக்குவதற்கு முன் மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். இந்த காளான் கலவையை பிட்டா பிரெட்டின் நடுவில் வைத்து, டோஸ்ட் செய்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

பலன்கள்: சிறுநீரகத்துக்கு காளான் உணவு நல்லது. ஆண்கள் காளான் சாப்பிட்டு வர,  பிராஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நார்ச்சத்து சிறிதளவு உள்ளது. தாதுஉப்புக்கள், மாவுச்சத்து நிறைந்துள்ளன.

Posted

பனினி - கார்ன் சாண்ட்விச்

தேவையானவை: பனினி பிரெட் ஸ்லைஸ் - 2, (பனினி என்பது பிரெட்டின் ஒருவகை) ஸ்வீட்கார்ன் அல்லது சாதாரண மக்காசோள முத்துக்கள் - ஒரு கப், தக்காளி சட்னி - அரை கப், சீஸ் - தேவையான அளவு.

p78a.jpg

தக்காளி சட்னி செய்முறை: தக்காளி, உப்பு, புளிக் கரைசல், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இதற்கு `தக்காளி ப்யூரி’ என்று பெயர்.

செய்முறை: பிரெட்டில் தக்காளிச் சட்னியைத் தடவி, அதில் மக்காசோளத்தைத் தூவி டோஸ்ட் செய்யவும். விருப்பப்பட்டால் இதில் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யலாம்.

பலன்கள்: மாவுச்சத்து, கொழுப்புச்சத்து நிறைவாக உள்ளன. குழந்தைகளுக்குத் தரலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

கோகோ சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, கோகோ சாக்லேட் - 50 கிராம், ஆளிவிதை - ஒரு டீஸ்பூன் (தேவை எனில்), நெய் - தேவையான அளவு .

p80a.jpg

செய்முறை: பிரெட் துண்டுகளின் நடுவில் கோகோ சாக்லேட்டை வைத்து, நெய்விட்டு டோஸ்ட் செய்ய வேண்டும். சுவைக்கு ஏற்றதுபோல சாக்லேட்டின் அளவைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால், ஆளிவிதை சேர்த்துக் கொள்ளலாம்.

பலன்கள்: குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு. ஃபிளேவனாய்ட்ஸ், வைட்டமின்கள் நிறைந்தது. உடனடி எனர்ஜி தரும். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு மாலையில் சிற்றுண்டியாகத் தரலாம்.
 

Posted

டியூனா ஃபிஷ் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், புதினா சட்னி - அரை கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி - ஒரு கப், வேகவைத்த டியூனா ஃபிஷ் - அரை கப்.

p82a.jpg

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னி தடவி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, டியூனா ஃபிஷ் தூவி டோஸ்ட் செய்து பரிமாறவும்.

பலன்கள்: ஓமேகா -3 ஃபேட்டி ஆசிட், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ள ஒரு முழுமையான உணவு. காலை உணவாக சாப்பிட, சரியான சாண்ட்விச்.

பிட்டா - பனீர் சாண்ட்விச்

தேவையானவை: பிட்டா பிரெட் ஸ்லைஸ் - 2, பனீர் - 50 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p84a.jpg

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, சதுரத் துண்டுகளாக அரிந்த பனீரை சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பனீர் வேக சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுவது நல்லது. பனீரை எண்ணெயில் பொரித்து நேரடியாகவும்  சேர்க்கலாம். இறக்குவதற்கு முன் மிளகுத் தூள் சேர்க்கவும். இந்த பனீர் கலவையை பிட்டா பிரெட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்து பரிமாறலாம்.

பலன்கள்: புரதம், கொழுப்பு, கால்சியம் நிறைந்துள்ளன. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டியிருக்கும் என்றால், இந்த சாண்ட்விச் சாப்பிடலாம். வயிறும் நிறையும்; பசியும் சீக்கிரமே எடுக்காது.

Posted (edited)
சில்லி ஃபிஷ் ஸ்டெவ் : செய்முறைகளுடன்...!

 

 

fish.jpg


தேவையான பொருட்கள் :
 

  • முள்ளில்லாத பெரிய மீன் - 4 துண்டுகள்
  • தக்காளி - 6 (சின்னத்துண்டுகளாக வெட்டவும்)
  • வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கவும்)
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • தக்காளிவிழுது - 1மேசைக்கரண்டி
  • வினிகர் அல்லது எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி
  • வெண்ணை - 2 1/2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - 1 கப் (250மி.லி)


செய்முறை :
 

  • முதலில் மீன் துண்டுகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் சூடு வந்ததும் வெண்ணையை போடவும்.
     
  • சற்று உருகினதும் அதனோடு தக்காளி, வெங்காயம், மிளகாய் தூள், எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர், தக்காளி விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
     
  • பிறகு தண்னீரையும் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு மீன் துண்டுகளை சேர்க்கவும்.
     
  • எண்ணை மிதந்ததும் மீனை திருப்பி போட்டு லேசான தீயில் 4 நிமிடம் வேகவைத்து இறக்கி வைக்கவும்.
Edited by நவீனன்
Posted

ஃபொகாஸியா - வெஜ் சாண்ட்விச்

தேவையானவை: ஃபொகாஸியா பிரெட் ஸ்லைஸ் - 2, (ஃபொகாஸியா பிரெட் கடைகளில் கிடைக்கும். இதில் அடர்த்தித் தன்மை அதிகமாக இருக்கும்), கேரட், தக்காளி, வெள்ளரி, காலிஃபிளவர் - தலா அரைத் துண்டு

p86a.jpg

செய்முறை: பிரெட்டின் நடுவில் காய்கறிகளை வைத்து, டோஸ்ட் செய்து பரிமாறலாம்.

பலன்கள்: நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி பிரெட்டில் வைத்து டோஸ்ட் செய்து தருவதால், சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். காலை உணவாகச் சாப்பிட ஏற்றது.

பிட்டா - சிக்கன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், வேகவைத்த சிக்கன் - 1 கப், சோம்பு - 1/2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 1, சீரகத் தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p88a.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கி, இதில் மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த் தூள், உப்பு, சிக்கன் துண்டுகள், மிளகுத் தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக கொத்தமல்லி் தூவி இறக்கவும். இதை  பிரெட்டின் இடையில் வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்: முழுமையான உணவு இது. காலை உணவாகச் சாப்பிடலாம். புரதச்சத்து, வைட்டமின்கள் உள்ளன. அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஹெல்த்தி சாண்ட்விச் இது.

வேர்கடலை - வெண்ணெய் 

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, அரைத்த வேர்க்கடலை - அரை கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அரைத்த வேர்க்கடலை விழுதை வெண்ணெயோடு கலந்து, பிரெட்டுக்கு நடுவில் வைத்து, டோஸ்ட் செய்ய வேண்டும்.

p90a.jpg

பலன்கள்: புரதச்சத்து இருக்கிறது. வெண்ணெயில் கொழுப்பு நிறைந்துள்ளது.  எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்கு தரலாம். 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

Posted

பிரெட் ஆம்லெட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, முட்டை - 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், புதினா சட்னி - அரை கப், உப்பு - தேவையான அளவு.

p92a.jpg

செய்முறை: புதினா சட்னியை பிரெட்டில் தடவி வைத்துக்கொள்ளவும். ஒரு கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து, தவாவில் ஆம்லெட்போல செய்துகொள்ளவும். பின்னர் ஆம்லெட்டை எடுத்து, பிரெட்டின் நடுவே வைத்துப் பரிமாறலாம். பிரெட்டை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.

பலன்கள்: புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள் உள்ளன. இதை காலை உணவாகச் சாப்பிட்டால், இதனுடன் காய்கறியோ அல்லது பயறு வகைகளையோ உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைவரும் சாப்பிட ஏற்றது.

கேரட் - சீஸ் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, கேரட் - ஒன்று, சாண்ட்விச் சீஸ் - ஒன்று, நெய் - 2 டீஸ்பூன்.

p94a.jpg

செய்முறை: பிரெட்டின் மேல் சீஸ் வைத்து, அதன் மேல் மெலிதாக அரிந்த கேரட் அல்லது துருவிய கேரட்டை  வைத்து, டோஸ்ட் செய்யவும்.

பலன்கள்: கேரட்டை பச்சையாகச்  சாப்பிடுவதால் மொறுமொறுப்பான சுவை கிடைக்கும். கரோட்டீன் சத்து, வைட்டமின்-ஏ, சி, நார்ச்சத்து, கால்சியம் நிறைவாகக் கிடைக்கும். மாறுதலான சுவையை விரும்புபவர்கள் இந்த சாண்ட்விச்சை  காலை நேரத்தில் சாப்பிடலாம்.

Posted

உளுந்து சாதம்

107p3.jpg

தேவையானவை:
* பாசுமதி அரிசி - ஒரு கப்
* உடைத்த கறுப்பு உளுந்து - அரை கப்
* கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - சிறு துண்டு
* பச்சை மிளகாய் - 4
* எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
* உளுந்துப்பொடி - ஒரு டீஸ்பூன்
* உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - கால் டீஸ்பூன்
* உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
* ஓமம் - கால் டீஸ்பூன்
* நெய் - ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உளுந்தைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை பொலபொலவென்று வடித்து ஆறவைக்கவும். ஊறிய உளுந்தின் நீரை வடித்துவிட்டு, கொத்தமல்லித்தழை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு, தீயை மிதமாக்கி அரைத்தவற்றைச் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் உளுந்தை வதக்கினால் உளுந்து மொறுமொறுப்பாகி விடும்.

சாதத்தில் தேவையான உப்பு, வதக்கிய மசாலாவைச் சேர்த்துக் கிளறி உளுந்துப் பொடியைத் தூவவும். பரிமாறும் முன் நெய்யில் கறிவேப்பிலை, முந்திரியை வறுத்து சாதத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:
அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு நீரை வடித்து, வாணலியில் வறுத்து பின்னர் சாதம் வடிக்கவும். உளுந்துப் பொடிக்கு, வெறும் வாணலியில் முழு உளுந்தை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

Posted

மல்டிப்பிள் லேயர் பீட்சா

தேவையானவை: புதினா சட்னி, தக்காளி சட்னி, மக்காச்சோள முத்துக்கள் - தலா அரை கப், வெங்காயம், தக்காளி, வெள்ளரி - தலா 2 ஸ்லைஸ்.

p96.jpg

செய்முறை: ஒரு பிரெட்டில் புதினா சட்னியும், அடுத்த பிரெட்டில் தக்காளி சட்னியும் தடவி, அதில் பனீர், மக்காச்சோளத்தைப் பரப்ப வேண்டும். அதன் மேல் கேரட் துருவல், வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை அடுக்கி, பிரெட்டை மூடி டோஸ்ட் செய்தால் மல்ட்டிபிள் லேயர் சாண்ட்விச் தயார்.

பலன்கள்: கலோரிகள் குறைவு என்பதால் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.  முழுமையான உணவாக இருப்பதால், காலை உணவாகச் சாப்பிடலாம். வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.

பனீர் மின்ட் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 , பனீர்  - ஒரு கப், புதினா சட்னி - ஒரு கப், வெங்காயம், தக்காளி- தலா ஒன்று, மிளகுத்தூள், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

p98.jpg

செய்முறை: எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை வதக்கி, இதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் பனீரை சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். பிறகு, மிளகுத் தூள் தூவி இறக்கிப் பரிமாறவும். பிரெட்டில் புதினா சட்னி தடவி, இதில் பனீர் கிரேவியை ஸ்டஃப் செய்து, இதன் மேல் எலுமிச்சைச் சாறு ஊற்றி டோஸ்ட் செய்து பரிமாறவும்.

பலன்கள்: புரதம், கொழுப்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை உணவாக சாப்பிடலாம். ஆனால், இதனுடன் பழமோ, பழச்சாறோ அருந்தினால் சமச்சீரான சத்துக்களை பெறலாம்.

வெள்ளரி சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, வெள்ளரி - 1, புதினா சட்னி - ஒரு கப், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.

p100.jpg

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னியை தடவி, வெள்ளரித் துண்டுகளை வரிசையாகவைத்து, அதன் மேல் உப்பு, மிளகுத் தூள் தூவி பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்து பரிமாறலாம்.

பலன்கள்: கோடைக்கேற்ற சாண்ட்விச் இது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. சிற்றுண்டியாகச் சாப்பிட மிகவும் ஏற்றது.

தக்காளி - கார்ன்  சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, நறுக்கிய தக்காளி - 1, கார்ன் - அரை கப், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள், புதினா சட்னி, உப்பு - தேவையான அளவு.

p102.jpg

செய்முறை: தக்காளி, கார்ன் இரண்டையும் உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிரெட்டின் ஒரு பக்கம் புதினா சட்னியைத் தடவி, இந்தக் கலவையை வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்ய வேண்டும்.

பலன்கள்: தக்காளியில் லைக்கோபீன் உள்ளதால், உடலுக்கு நல்லது.  ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின், மாவுச்சத்து உள்ளன. மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

பேரீச்சை சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், பேரீச்சை - 6, பாதாம் - 4, வாழைப்பழம் - 4 ஸ்லைஸ்.

செய்முறை: பிரெட்டை டோஸ்ட் செய்து நடுவில் வாழைப்பழ ஸ்லைஸ், துண்டாக நறுக்கிய பேரீச்சை, பாதாம் ஆகியவற்றை நடுவில் வைத்து மூடி டோஸ்ட் செய்ய வேண்டும்.

p104a.jpg

பலன்கள்: இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து நிறைந்துள்ளன. மாலை நேர உணவாகச் சாப்பிடலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி சாப்பிடலாம். பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் தொடர்ந்து சாப்பிடலாம்.

ஆலிவ் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, ஆலிவ் - அரை கப், ஆலிவ் எண்ணெய், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.

p106a.jpg

செய்முறை: பிரெட்டின் மேல் ஆலிவ்களை வரிசையாக அடுக்கி, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, அதன் மேல் ஆலிவ் எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்ய வேண்டும்.

பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் நிறைவாக உள்ளன. வித்தியாசமான சுவை கொண்டது என்பதால், பெரும்பாலும் குழந்தைகள் இதை விரும்ப மாட்டார்கள். பெரியவர்கள் சாப்பிடலாம். இதயத்துக்கு மிகவும் நல்லது. ஓமேகா - 3 கொழுப்பு அமிலம் இருக்கிற ஒரே சாண்ட்விச் இதுதான்.

வொயிட் அண்ட் டார்க் சாக்லேட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, வொயிட் சாக்லேட் - 20 கிராம், டார்க் சாக்லேட் - 20 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன்

p108a.jpg

செய்முறை: பிரெட்டின் மேல் இரண்டு சாக்லேட்டையும் தூவி, பிரெட்டை மூடிய பிறகு, லேசாக டோஸ்ட் செய்யவேண்டும்.

பலன்கள்: குழந்தைகளுக்கு மாற்று உணவாகத் தரலாம். டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோவின் சத்துக்கள் இதயத்துக்கு நல்லது. சோர்வாக இருப்பவர்கள் சாப்பிட, ஹார்மோன்களைத் தூண்டி எனர்ஜி கிடைக்கும். சிறிதளவு கால்சியம் சத்துக்களும் கிடைக்கும். ஆனால், அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

ஆலு சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, மிளகாய் ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள், உப்பு, நெய் - தேவையான அளவு.

p110.jpg

செய்முறை: உருளைக்கிழங்கை ஸ்லைஸாக வெட்ட வேண்டும். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில், உருளைக்கிழங்கு ஸ்லைஸ் வைத்து, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு தூவி இருபுறமும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

பலன்கள்: உருளையில் மாவுச்சத்து அதிகம். உடலின் எடை அதிகரிக்கும். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது. கூடுதல் ஆற்றல் கிடைக்கும். மாலை நேர உணவாகச் சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்

தேவையானவை: பிரெட்- 2, ஸ்ட்ராபெர்ரி - 4, வெண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

p112.jpg

செய்முறை: ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனுடன் வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல தயார் செய்ய வேண்டும். இந்த ஸ்ட்ராபெர்ரி பசையை பிரெட்டின் மீது தடவி டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: லைக்கோபீன் சத்து உள்ளது. வைட்டமின்கள் சி, ஏ உள்ளன. புளிப்புச் சுவையைத் தவிர்க்க, வெண்ணெயோடு கலப் பதால் புதுச்சுவை கிடைக்கும். மாலை உணவாக மட்டும் சாப்பிடலாம். ஃபிரெஷ் ஸ்ட்ராபெர்ரி பழங்களாகச் சேர்த்துக்கொண்டால், சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

ஸ்டீம் எக் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ், வேகவைத்த முட்டை - தலா 2, மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத் தூள் - அரை டீஸ்பூன்.

p114.jpg

செய்முறை: டோஸ்ட் செய்த பிரெட்டின் நடுவே, வேகவைத்து மெலிதாக நறுக்கிய முட்டையை வைத்து, அதன் மேல் மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு தூவி டோஸ்டட் பிரெட்டால் மூடிப் பரிமாறவும்.

பலன்கள்: எளிதில் செய்யக்கூடிய சாண்ட்விச் இது. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை இதில் நிறைந்திருக்கின்றன. காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர். காலை வேளையில் சாப்பிடலாம்.

தேன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், தேன் - ஒரு கப், பனை சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பிரெட்டின் மேல் தேனை ஊற்றி, அதன் மேல் பனை சர்க்கரை தூவி, அப்படியே டோஸ்ட் செய்து பரிமாறவும்.

p116.jpg

பலன்கள்: ஸ்வீட் சாண்ட்விச் இது. சிலருக்கு, முதல் உணவாக இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு ஏற்றது. சாப்பிட்ட பிறகு, கூடுதல் உணவாகச் சாப்பிடலாம். ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்ட் நிறைந்தது என்பதால் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தேன், தொண்டை நோய்த்தொற்றைத் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தேன் ஆர்கானிக்காக இருந்தால் நல்லது.

டபுள் கிரீன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, புதினா சட்னி - ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா, கீரை - தலா அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

p118.jpg

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னியைத் தடவி, புதினா இலைகளை வைத்து, சிறிதளவு கீரையை அதன் மேல் பரப்பி, பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: ஃபோலிக் ஆசிட், வைட்டமின்-கே  கிடைக்கும். இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இதை காலை உணவாகச் சாப்பிடலாம். ஆனால், இதனுடன் காய்கறி, பயறு, பருப்பு வகைகள் சேர்த்துக்கொள்வது அவசியம்.

மாம்பழ சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, மாம்பழக் கூழ் - ஒரு கப், பனை சர்க்கரை - ஒரு டீ ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பிரெட்டில் மாம்பழக் கூழ் தடவி, நாட்டுச் சர்க்கரை தூவி, லேசான நெய்விட்டு டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

p120.jpg

பலன்கள்: வைட்டமின்-ஏ, சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. மாம்பழ விரும்பிகளுக்கு புதிய சுவையை அளிக்கும். பனை சர்க்கரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த சாண்ட்விச் சாப்பிட உடனடி எனர்ஜி கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

நட்ஸ் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, முந்திரி, பாதாம், பேரீச்சை, பிஸ்தா, வால்நட், காய்ந்த திராட்சை - தலா  4, தேன் - அரை கப்.

p122.jpg

செய்முறை: அரை கப் தேனில், முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை பாதியாக உடைத்து சேர்த்து கலக்க வேண்டும். இதை பிரெட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: ஒவ்வொரு நட்ஸிலும் ஒவ்வொரு வகையான சத்து நிறைவாக உள்ளன. ஓமேகா-3, புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

சென்னா சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், வேகவைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய பயறு - அரை கப், வெங்காயம் - 3 ஸ்லைஸ், புதினா சட்னி - அரை கப்

p1241.jpg

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னி தடவி, இதில் வெங்காய ஸ்லைஸ்களை வைத்து,  வேகவைத்த கொண்டைக்கடலை, வேக வைக்காத முளைகட்டிய பயறுகளைச் சேர்த்து மிளகுத்தூள், கறுப்பு உப்பு தூவி, பிரெட். ஸ்லைஸ் வைத்துப் பரிமாறவும்.

பலன்கள்: மாவுச்சத்து, வைட்டமின், புரதச்சத்து நிறைந்துள்ளன. காலைவேளையில் சாப்பிட ஏற்றது. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்து நிறைந்த சாண்ட்விச்.

முளைகட்டிய பயறு சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், முளைகட்டிய வேகவைத்த பச்சைப்பயறு, தட்டைப்பயறு மற்றும் கொள்ளு - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

p1261.jpg

செய்முறை: தவாவில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் முளைகட்டிய வேகவைத்த பயறுகளைச் சேர்த்து, மிளகாய்த்தூள், லேசாக தண்ணீர் கலந்து நன்றாக கிரேவியாக மாற்றவும். இதை பிரெட்டின் இடையில் வைத்து, டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: வைட்டமின்-சி, நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்புக்கள் நிறைந்துள்ளன. வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். காலையில் எடுத்துக்கொள்ளலாம்.

புரோகோலி சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், புரோகோலி -  ஒரு கப், வெங்காயம், தக்காளி - 2 ஸ்லைஸ், புதினா சட்னி - கால் கப், மிளகுத்தூள், கறுப்பு உப்பு- தேவையான அளவு

p128.jpg

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னி தடவி, அதன்மேல் வெங்காயம், தக்காளி வைத்து, ஆங்காங்கே புரோகோலியை  வைத்து, மிளகுத்தூள், கறுப்பு உப்பு தூவி, பிரெட்டால் மூடி பரிமாறவும்.

பலன்கள்: புரோகோலியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். காய்கறிகளில் உள்ள வைட்டமின், நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். காலை வேளையில் சாப்பிட ஏற்றது. இதனுடன் புரதச்சத்துக்கள் நிறைந்த பயறு, பருப்பு வகைகளைச் சேர்த்தால் சமச்சீர் உணவு முழுமை பெறும்.

லெட்டியூஸ் லீஃப் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், பெரிய லெட்டியூஸ் இலை - ஒன்று, வேகவைத்த முட்டை - ஒன்று, புதினா சட்னி - ஒரு கப், தக்காளி, குடமிளகாய், நறுக்கிய வெங்காயம் -  தலா 4 துண்டுகள், மிளகுத்தூள், கறுப்பு உப்பு - தேவையான அளவு

p130.jpg

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னியை தடவி இதில் லெட்டியூஸ் லீஃப் வைத்து, இதன் மேல் காய்கறிகளை அடுக்கி, முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் மேலே வைத்து பிரெட்டை மூடி டோஸ்ட் செய்ய வேண்டும்.

பலன்கள்: வேகவைக்கப்படாத காய்கறிகளில் அதிக அளவு நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. முட்டையில் இருக்கும் அமினோஅமிலங்கள் முழுமையாகக் கிடைக்கும். காலை வேளையில் சாப்பிட ஏற்றது.

வாழைப்பழ டோஸ்ட்

தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், வாழைப்பழம் - 2, உருக்கிய சாக்லெட் - 2 டீஸ்பூன்

p132a.jpg

செய்முறை: பிரெட்டில், வாழைப்பழ ஸ்லைஸ்களை முழுமையாகப் பரப்பி இதன் மேல் உருக்கிய சாக்லேட்டை  ஊற்றி டாப்பிங் போல செய்து, டோஸ்ட் செய்யவும்.

பலன்கள்: குழந்தைகளுக்கு ஏற்ற சாண்ட்விச் இது. நார்ச்சத்து, மாவுச்சத்து, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

p134.jpg

பிரெட் வாங்கும் முன்...

சமீபத்தில், சென்டர் ஆஃப் சயின்ஸ் அண்ட் என்விரோன்மென்ட் நடத்திய உணவுகள் தொடர்பான பரிசோதனையில், பிரெட், பாவ் பன், ரெடி டு ஈட் பர்கர் பிரெட், பீட்சா பிரெட்களில் பொட்டாசியம் பிரோமேட் (Potassium Bromate) உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பல முன்னணி நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

இந்த ரசயானங்கள் புற்றுநோய் உருவாக்கும் காரணி என்பதால், பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டும்  இன்னும்  இவ்வகையான கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரெட் எப்படி வாங்க வேண்டும்?

கோதுமை பிரெட், மல்டி கிரெயின் பிரெட், பொட்டாசியம் சேர்க்காத வெள்ளை பிரெட் வாங்கலாம்.

பொட்டாசியம் பிரோமேட் சேர்க்காத பிரெட் வகைகளை வாங்க வேண்டும்.

பிரபல முன்னணி நிறுவனங்களாக இருந்தாலும், லேபிளை சரிபார்த்து வாங்க வேண்டும்.

அருகில் உள்ள பேக்கரிகளில், கெமிக்கல்கள் சேர்க்கப்படாத பிரெட் வகைகளைக் கேட்டு வாங்கலாம்.

குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருளாக இருப்பதால், முடிந்த அளவுக்கு ஆர்கானிக் பிரெட் வகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

Posted (edited)

 

இறால் பக்கோடா : செய்முறைகளுடன்...!

 

 

PAKKODA.jpg

 


தேவையான பொருட்கள்: 

  • இறால் - 200 கிராம்
  • எண்ணெய் - 200 மில்லி
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு - சிறிதளவு
  • சோம்புத் தூள் - சிறிதளவு
  • கடலை மாவு - 100 கிராம்
  • அரிசி மாவு - 50 கிராம்
  • மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • வெங்காயம் - ஒன்று
  • கேசரி பவுடர் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
  • ரவை - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - சிறிதளவு


செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத் தூள், ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய், சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். (ரவை மொறுமொறுப்புக்காக‌வும், எண்ணெய் பொரிக்கும் போது எண்ணெய் குடிக்காமல் இருக்க‌வும் சேர்க்கிறோம்).

பிசைந்தவற்றுடன் சுத்தம் செய்த இறாலைப் போட்டு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விழும் பக்குவத்தில் பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பிசைந்து வைத்துள்ள இறால் கலவையை உதிர்த்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான இறால் பக்கோடா தயார்.

Edited by நவீனன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாலு பண் ??? பெயர்...

அப்படியே சுட்டுவிட்டார்களோ?

Posted
மீன் சூப் : செய்முறைகளுடன்...!

 

soupfish.jpg


தேவையான பொருட்கள்: 

  • சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள்
  • இஞ்சி - ஒரு செ.மீ
  • பூண்டு - 3 அல்லது 4 பல்
  • சின்ன வெங்காயம் - 5 அல்லது 6
  • பட்டை - ஒரு சிறிய துண்டு
  • அன்னாசிப்பூ - ஒன்று
  • ஏலக்காய் - ஒன்று
  • மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • வெங்காயத்தாள் (Spring onions) - தேவையான அளவு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • சூப் இலை - விருப்பப்பட்டால்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு


செய்முறை:
பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் மூன்றையும் இடித்து வெள்ளை துணியில் முடிந்து வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறி வாசம் வரும் வரை வதக்கவும்

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஆகியவற்றை சேர்க்கவும். நீர் கொதிக்க தொடங்கும் போது, மீனை சேர்க்கவும். அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.

கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் சூப் இலையை சேர்க்கவும்.

சுவையான மீன் சூப் தயார். இதனை சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது டயட்டில் இருப்பவர்கள் அப்படியே அருந்தலாம்.

காரமில்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Posted
முட்டை கபாப் : செய்முறைகளுடன்...!

 

kababb.jpg


தேவையான பொருட்கள்:

  • முட்டை வேக வைத்து நீளமாக நாலாக நறுக்கியது - 3
  • உருளைகிழங்கு - 2
  • குருமிளகு தூளும் உப்பும் கலந்தது - 1/4 ஸ்பூன்
  • மல்லி இலை நறுக்கியது - 3 ஸ்பூன்
  • புதினா - 4 இலைகள் நறுக்கியது
  • மைதா - 1/4 கப்
  • ப்ரெட் கர்ம்ப்ஸ் - 3/4 கப்
  • வதக்க
  • சின்ன வெங்காயம் - 10
  • இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • கறி மசாலா தூள் - 1/2 ஸ்பூன்


செய்முறை:
 

  • முதலில் முட்டையை வேக வைத்து ஒவ்வொரு முட்டையையும் நாலாக நீளமாக நறுக்கி வைக்கவும்..மொத்தம் 12 துண்டுகள் கிடைக்கும்.அதன் மேல் மிளகும் உப்பும் கலந்து தூவி வைக்கவும்
  • மைதாவை சிறிது தண்ணீரில் மாவு போல் கலந்து வைக்கவும்
  • உருளை கிழங்கை குக்கரில் 2 விசிலில் நங்கு வேக வைத்து உடைக்கவும்.
  • பின் வதக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக ஒவ்வொன்றாக 1 ஸ்பூன் எண்ணையில் வதக்கவும்..அதில் உருளை கிழங்கை சேர்த்து மசித்து விடவும்
  • மசாலா சேர்த்த மசித்த கிழங்கில் இரு கைய்யளவு உருண்டையை இடதி கைய்யில் எண்ணை தடவிக் கொண்டு வைத்து வலது கைய்யால் தட்டவும்..தட்டிய கிழங்கு மாவின் நடுவில் ஒரு முட்டை துண்டை வைக்கவும்.முட்டையின் மஞ்சள் புறம் உட்புறமாக வருமாறு வைத்தால் முட்டை பிரிந்து வெளியில் கொட்டாது.
  • பின்பு கிழங்கை முட்டையை சுற்றி மூடி உருட்டவும்..நீளமாக ரக்பி பாளின் வடிவத்தில் உருட்டவும்
  • இதே முறையில் 12 துண்டெஉகளையும் உருட்டவும்..கிழங்கினையும் 12 பிரிவுகளாக வைத்தால் அளவு சரியாக வரும்
  • பின்பு உருட்டிய கிழங்கு முட்டை கபாப்களை மைதா கலவையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எண்ணையில் வறுத்தெடுக்கவும்
Posted

பீட்ரூட் சூப்

 

sl4676.jpg

என்னென்ன தேவை?

துருவிய பீட்ரூட் - 3/4 கப்,
கேரட் - 1/2 கப்,
லேசாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1/2 கப்,
முட்டைகோஸ் - 3/4 கப்,
தக்காளி - 1/2 கப்,
மல்லித்தழை - 4 டீஸ்பூன்,
வெஜிடபிள் சூப் ஸ்டாக் கியூப் - 1,
ஆரஞ்சு ஜூஸ் - 2 பழத்தில் எடுத்தது,
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகு - தேவைக்கு,
தண்ணீர் - 3 கப்,
கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

எண்ணெயை சூடாக்கி வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், தக்காளி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் கியூப் சேர்த்து 7 நிமிடங்கள் வேக விடவும். ஆரஞ்சு ஜூஸ், மிளகு, உப்பு சேர்த்து, மேலே கெட்டித் தயிர், மல்லித்தழை தூவி பிரெட்டுடன் சூடாக பரிமாறவும்.

Posted
வெஜிடபுள் சீஸ் தோசை : செய்முறைகளுடன்...!

 

 

dosa.jpg

தேவையான பொருட்கள் :

  • தோசை மாவு - ஒரு கப்
  • காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
  • காரட் - 2
  • தக்காளி - ஒன்று
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய சீஸ் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - பொரிப்பதற்கு


செய்முறை :
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும்.

உருளைக்கிழங்கை ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே ஈட்டில் வேகவைத்து எடுக்கலாம்).

அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு சீஸ் துண்டுகளையும் மேலே தூவவும்.

தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும். (திருப்பிப் போட வேண்டாம்).

காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால். சீஸ் முழுவதும் உருகிவிடாமல் லேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான வெஜிடபுள் சீஸ் தோசை தயார்.

தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

Posted

உளுந்து மசாலா

107p7.jpg

தேவையானவை:
* முழு வெள்ளை உளுந்து - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
* சின்னவெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கவும்)
* கடுகு - கால் டீஸ்பூன்
* உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* தேங்காய்த் துருவல் - கால் கப்
* கறிவேப்பிலை - சிறிது.
* நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முழு உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மிக்ஸியில் சேர்க்கவும். பிறகு தேவையான நீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். இட்லித் தட்டில் நல்லெண்ணெய் தடவி, அரைத்த உளுந்து மாவை குழிகளில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உடைத்த உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, இஞ்சித் துருவல், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கி, உதிர்த்த உளுந்தைச் சேர்த்து, பச்சை வாசனை போக கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல் தூவி கிளறிப் பரிமாறவும்.இந்த உளுந்து மசாலாவை கொழுக்கட்டை நடுவே ஸ்டஃப் செய்து காரக் கொழுக்கட்டை செய்யலாம். இரு சப்பாத்திகள் நடுவே வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாக்கலாம்.

குறிப்பு:
இட்லித் தட்டில் ஊற்றியதை வெந்ததும் எடுத்து கட் செய்து, அதன் மேலே கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டினால், உளுந்து டோக்ளா தயார்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.