Jump to content

Recommended Posts

Posted

விதம்விதமான வெளிநாட்டு விருந்து:

லெபனான் ஃபலாஃபல்

 

 
lebanonjpg

என்னென்ன தேவை?

வெள்ளைக் கொண்டைக்கடலை – 1 கப்

 

பேசில் இலைகள் – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

மிளகுத் தூள் – தேவைக்கு

கெட்டித் தயிர் – அரை கப்

சிறிதாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்

சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, வேகவையுங்கள். அதனுடன் உப்பு, மிளகுத் தூள், பேசில் இலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதை வடைபோல் தட்டிப் போடுங்கள்.  இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுங்கள். 

ஒரு கிண்ணத்தில் தயிர், சிறிதளவு உப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சில்லி சாஸ் சேர்த்து, பொரித்து வைத்துள்ள வடைகளை அதில் சேர்த்துப் பரிமாறுங்கள். பேசில் இலைகள் கிடைக்கவில்லை என்றால் துளசி, கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்தும் இதைச் செய்யலாம்.

மெக்சிகன் கேசரினாஸ்

mexicanjpg

என்னென்ன தேவை?

மைதா – 1 கப்

 

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

நீள்வாக்கில் மெலிதாக அரிந்த முட்டைகோஸ், தக்காளி, குடைமிளகாய் – தலா கால் கப்

துருவிய சீஸ் – கால் கப்

வெள்ளை மிளகுத் தூள் - 4 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுபோல் பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் மெலிதாக அரிந்த காய்கறிகள், சீஸ் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சிறிதளவு சில்லி சாஸ்  ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை அப்பளம் போல்  மெலிதாகத் திரட்டி ஒருபக்கம் மட்டும் தவாவில் போட்டு, சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள். கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையைச் சுட்டு வைத்துள்ள ஒரு பக்க மாவின் மீது வைத்து மூடி, ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டிவிடுங்கள். இதை மீண்டும் தவாவில் போட்டு மேல் பகுதி மொறுமொறுவென வெந்த பிறகு எடுத்துப் பரிமாறுங்கள்.

https://tamil.thehindu.com

Posted

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை

 
அ-அ+

குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை
 
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
சோம்பு - 10 கிராம்
கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - 5 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
 
201808231403393204_1_mutton-vadai._L_styvpf.jpg

செய்முறை :

எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.
 
சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/23140339/1185894/mutton-vadai.vpf

Posted

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா

 
அ-அ+

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா
 
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
மிளகாய் தூள் - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிதளவு
பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
 
201808241411553484_1_chicken-pakora._L_styvpf.jpg

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/24141155/1186167/chicken-pakora.vpf

Posted

சுவரொட்டி கறி பிரட்டல்

 
அ-அ+

ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இன்று இந்த சுவரொட்டி கறி பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சுவரொட்டி கறி பிரட்டல்
 
தேவையான பொருட்கள்

ஆட்டு சுவரொட்டி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2

அரைக்க

தேங்காய் - 2 துண்டு
மிளகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவைக்கு
 
201808251404421723_1_Mutton-Spleen-Curry._L_styvpf.jpg

செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

ஆட்டு சுவரொட்டியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சற்று தூக்கலாக விட்டு சூடானதும் சுத்தம் செய்த ஆட்டு சுவரொட்டியை போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு பொதியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை  மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

சிறிது வாசம் வந்ததும் அரைத்த தேங்காய் விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசம் போனபிறகு இறக்கி பரிமாறவும்.
 
சூப்பரான சுவரொட்டி கறி பிரட்டல் ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/25140442/1186452/Mutton-Spleen-Curry.vpf

Posted

இது அவகாடோ ஸ்பெஷல்!

 

 

89p1_1534921382.jpg

``பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, ரத்த அழுத்தப் பிரச்னையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. புற்றுநோயை எதிர்க்கிறது. ஆர்த்ரிடிஸ் வராமல் பாதுகாக்கிறது. சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கிறது.

 

இதன் ருசி இனிப்பாகவோ, துவர்ப்பாகவோ, புளிப்பாகவோ இருக்காது. இனிப்பில்லா பப்பாளிப் பழம் போன்ற புதிய சுவையையும் வெண்ணெய் சாப்பிடுவது போன்ற உணர்வையும் அளிக்கும். வீட்டிலேயே செய்யும் வகையில் வித்தியாசமான அவகாடோ ரெசிப்பிகளை வண்ணமயமான படங்களுடன் அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

இது ஃபுரூட்ஃபுல் சமையல்!


89p2_1534921508.jpg

அவகாடோ...  சில குறிப்புகள்

அவகாடோ பழம் பச்சை நிறத்தில் உருண்டை வடிவம் முதல் பெயார்ஸ் காய் வடிவம் வரை பலவிதங்களில் கிடைக்கிறது. இதில் நல்ல கொழுப்புகள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகள் உள்ளன.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இப்பழம் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.

அவகாடோவை தேர்ந்து எடுக்கும் முறை: பழத்தின் மேல் தோல் கரும்பச்சை நிறத்திலோ, பிரவுன் நிறத்திலோ இருக்க வேண்டும். பழுக்கிறபோது தோல் கருத்து வரும். சதைப் பகுதி பச்சை நிறமாக இருக்க வேண்டும். தொட்டுப் பார்க்கும்போது பழம் சற்றுக் கனமாக இருக்க வேண்டும்.  `பொதபொத’ என்று அழுந்தக்கூடாது. பழத்தின் காம்பைச் சற்று அகற்றிப் பார்த்தால் சதைப் பகுதி பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். பழத்தின் தோல் இலைப் பச்சை நிறத்தில் இருந்தால் காயாக இருக்க வாய்ப்புள்ளது.

பயன் படுத்தும் முறை: மாம்பழத்தை நறுக்குவது போல இரண்டு பாகமாக நறுக்கினால் உள்ளே ஒரு எலுமிச்சை அளவுக்குக் கொட்டை இருக்கும். இதனை நீக்கிவிட்டு, பழத்தின் சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் வழித்து எடுக்க வேண்டும். தோல் மிகவும் மெலிதாக இருக்கும். சதைப் பகுதியை மட்டும்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும்.


89p3_1534921526.jpg

அவகாடோ சப்பாத்தி வித் அவகாடோ கிரேவி

தேவையானவை - சப்பாத்தி செய்ய:

கோதுமை மாவு - ஒரு கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கிரேவி செய்ய:

அவகாடோ  காய் - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவகாடோ விழுதுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.   அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு அவகாடோ துண்டுகள், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறி, மூடிபோட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். இந்த கிரேவியை அவகாடோ சப்பாத்தியுடன் பரிமாறவும்.


89p4_1534921542.jpg

அவகாடோ மஃபின் வித் அவகாடோ ஃக்ரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப்
 மைதா மாவு - ஒன்றே கால் கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
 அவகாடோ விழுது - ஒரு கப்
 முட்டை - 2
 சர்க்கரை - ஒரு கப்
 மோர் - ஒரு கப்
 வெண்ணெய் - கால் கப்
 தண்ணீர் - அரை கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - அரை டீஸ்பூன்

ஃப்ரோஸ்டிங் செய்ய

 குளிர்ந்த விப்பிங் க்ரீம் - கால் கப்
 க்ரீம் சீஸ் - 2 கப்
 அவகாடோ விழுது - ஒரு கப்
 ஐசிங் சுகர் - 3 கப்
 எலுமிச்சைத் தோல் துருவல் - ஒரு பழத்தின் துருவல் (பழத்தின் தோலை மேலாகத் துருவவும். கீழே இருக்கும் வெள்ளை பாகத்தைத் துருவக் கூடாது)
 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

பேக்கிங் அவனை 80 டிகிரியில் 20 நிமிடங்கள் `ப்ரீஹீட்’ செய்யவும்.  மஃபின் ட்ரேயில்  மஃபின் பேப்பர் கப்புகளைப் போட்டு வைக்கவும். மைதா மாவுடன் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், மோர், அவகாடோ விழுது, சர்க்கரை, வெனிலா எசென்ஸ் தண்ணீர் சேர்த்து எக் பீட்டரால் நன்கு அடிக்கவும். மாவுக் கலவையை முட்டைக் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டி தட்டாமல் மெதுவாகக் கலக்கவும்.  பிறகு, மாவுக் கலவையை மஃபின் கப்களில் பாதியளவுக்கு ஊற்றவும்.  இதை ப்ரீஹீட் செய்த பேக்கிங் அவனுக்குள் (baking oven) வைத்து 8 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும் (டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி வெந்துவிட்டதா எனப் பார்க்கவும். டூத்பிக்கில் மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அறியலாம்). பிறகு வெளியே எடுத்து 20 நிமிடங்கள் ஆறவிடவும்.  

ஃப்ரோஸ்டிங் செய்யக் கொடுத்துள்ள க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் 5 நிமிடங்கள் நன்றாக அடிக்கவும். அதனுடன் ஐசிங் சுகர், அவகாடோ விழுது, எலுமிச்சைத் தோல் துருவல், எலுமிச்சைச் சாறு, வெனிலா எசென்ஸ் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் நன்றாக அடித்து எடுக்கவும். இதை `பைப்பிங் பேக்’கில் ஊற்றி, ஆறிய மஃபின்கள் மீது பைப் செய்து பரிமாறவும்.


89p5_1534921573.jpg

அவகாடோ க்ரீம்

தேவையானவை:

 குளிர்ந்த விப்பிங் க்ரீம் - 500 மில்லி
 ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
 அவகாடோ விழுது - ஒரு கப்
 அவகாடோ துண்டுகள் - கால் கப்
 ஐசிங் சுகர் - ஒரு கப்
 வெனிலா எசென்ஸ் - அரை  டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது நேரம் கழித்து  அதனுடன் ஐசிங் சுகர் சேர்த்து, பஞ்சு போல வரும் வரை அடித்து எடுக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழாமல் இருக்க வேண்டும்). அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு அதனுடன் அவகாடோ துண்டுகள் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).

விருப்பம்போல் நறுக்கிய அவகாடோ பழத்துண்டுகளை மேலே வைத்து அலங்கரித்தும் பரிமாறலாம்.

குறிப்பு:

அவகாடோவைப் பாதியாக நறுக்கி, உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி,  உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஒரு ஸ்பூனால் ஸ்கூப் செய்து எடுக்கவும். அவகோடா விழுது தயாரிக்க அவகாடோவின் சதைப்பகுதியுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.


89p6_1534921590.jpg

அவகாடோ ஸ்பினச் லச்சா பராத்தா

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப்
 அவகாடோ விழுது - ஒரு கப்
 பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 2
 ஓமம் - கால் டீஸ்பூன்
 வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாலக்கீரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து வடியவிடவும். அதனுடன் அவகாடோ விழுது, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கோதுமை மாவுடன், உப்பு, சீரகத்தூள், ஓமம், நெய், அரைத்த விழுது, தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டவும். அதன் மீது எண்ணெய் அல்லது நெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். சப்பாத்தியின் இரு ஓரங்களையும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்து வட்டமாகச் சுருட்டவும். பிறகு, உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி, சற்றுக் கனமான பராத்தாக்களாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்துத் திரட்டிய பராத்தாக்களைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.


89p7_1534921605.jpg

அவகாடோ ஐஸ்க்ரீம்

தேவையானவை:

 அவகாடோ விழுது - ஒரு  கப்
 குளிர்ந்த விப்பிங் க்ரீம் - ஒரு கப்
 சர்க்கரை - ஒரு கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய நட்ஸ் கலவை (பாதாம், பிஸ்தா, வால்நட்) - கால் கப்

செய்முறை:

சிறிதளவு நட்ஸ் கலவையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து, பஞ்சு போல வரும் வரை மேலும் அடிக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழக் கூடாது). அதனுடன் அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். பிறகு நட்ஸ் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).

இதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மேலே அலங்கரிக்க வைத்துள்ள நட்ஸ் தூவிப் பரிமாறவும்.


89p8_1534921621.jpg

சேவரி அவகாடோ பேன்கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒன்றரை கப்
 மைதா மாவு - கால் கப்
 அவகாடோ விழுது -  ஒரு  கப்
 கேரட் துருவல் - அரை கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 மோர் - 2 கப்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் சோடா – அரை  டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் அவகாடோ விழுது, வதக்கிய கலவை, மோர் சேர்த்து நன்கு கெட்டியாகக் கலக்கவும்.  தோசைக்கல்லைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


89p9_1534921635.jpg

க்ரீன் டிடோக்ஸ் ஸ்மூத்தி

தேவையானவை:

 அவகாடோ  - பாதியளவு
 வெள்ளரிக்காய் - பாதியளவு (தோலுரித்து, துண்டுகளாக்கவும்)
 பாலக்கீரை - அரை கப்
 தோல் சீவிய இஞ்சி - அரை இன்ச் துண்டு
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
 ஆளிவிதை (Flaxseeds) பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
 வறுத்த சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு
 குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவகாடோவின் சதைப்பகுதியுடன் வெள்ளரிக்காய், பாலக்கீரை,   இஞ்சி, கொத்தமல்லித்தழை, ஆளிவிதைப் பொடி, உப்பு,   சீரகத்தூள், மிளகுத்தூள்   ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, குளிர்ந்த தண்ணீர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அடித்து எடுத்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.


89p10_1534921651.jpg

அவகாடோ ஸ்வீட் லஸ்ஸி

தேவையானவை:

 அவகாடோ - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, சதைப்பகுதியை எடுக்கவும்)
 சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
 காய்ச்சி ஆறவிட்டு, குளிரவைத்த பால் - ஒரு கப்
 குளிர்ந்த நீர் - ஒரு கப்
 ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு

செய்முறை:

அவகாடோ சதைப்பகுதியுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் பால், குளிர்ந்த நீர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அடித்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.


89p11_1534921665.jpg

அவகாடோ கேசடியா

 தேவையானவை - மேல் மாவு செய்ய:
 மைதா மாவு -  2 கப்
 உப்பு - தேவையான அளவு
 ஸ்டஃபிங்க் செய்ய:
 அவகாடோ - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
 உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் - தலா ஒன்று (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
 வேகவைத்த ராஜ்மா - கால் கப்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 மோசரெல்லா சீஸ் துருவல் - அரை கப்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 டொமேட்டோ கெட்சப் - 3 டீஸ்பூன்
 மயோனைஸ் - 3 டீஸ்பூன்
 புதினா சட்னி - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

புதினா சட்னி செய்ய:

 புதினா - கால் கட்டு
 கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
 பச்சை மிளகாய் - 2
 க்ரீம் சீஸ் (அ) தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினாவுடன் கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், பச்சை மிளகாய் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் உப்பு, க்ரீம் சீஸ் அல்லது தயிரைச் சேர்த்து, மீண்டும் சட்னி பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.  இதுவே புதினா சட்னி. மைதா மாவுடன் உப்பு, சிறிதளவு நீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். மயோனைஸுடன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி எண்ணெய்விட்டு, தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். காய்கறிகளுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை நன்றாக மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வேவைத்த ராஜ்மா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு சப்பாத்தியின் மீது 2 டேபிள்ஸ்பூன் புதினா சட்னி தடவவும். மற்றொரு சப்பாத்தியின் மீது 2 டேபிள்ஸ்பூன் கெட்சப் கலவையைப் பரப்பவும். அதன் மீது தேவையான அளவு வேகவைத்த காய்கறி கலவை, அவகாடோ துண்டுகள் வைத்து, மேலே சிறிதளவு சீஸ் துருவலை தூவவும். இதன் மீது புதினா தடவிய சப்பாத்தியை வைத்து மூடவும். அதன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவவும். இதை கிரில் செய்து டூபிக்கால் குத்திப் பரிமாறவும்.


89p12_1534921683.jpg

குயாகாமோல்

தேவையானவை:

 நன்கு பழுத்த அவகாடோ - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, சதைப்பகுதியை எடுக்கவும்)
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவகாடோ சதைப்பகுதியைக் கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இதனை சப்பாத்தி, பிரெட் உடன் பரிமாறவும்.


89p13_1534921700.jpg

அவகாடோ கேசரி

தேவையானவை:

 ரவை - அரை கப்
 அவகாடோ விழுது - ஒரு கப்
 சர்க்கரை - ஒன்றேகால் கப்
 வெந்நீர் - ஒன்றரை கப்
 பச்சை ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்
 டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 நெய் - கால் கப்

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி, ரவையைச் சேர்த்து வறுக்கவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, வெந்நீர் ஊற்றிக் கிளறவும். அதனுடன் அவகாடோ விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறி வேகவிடவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பச்சை ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். அவகாடோ கேசரி வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது டூட்டி ஃப்ரூட்டி தூவிக் கிளறி இறக்கவும்.

89p14_1534920962.jpg

https://www.vikatan.com

Posted

அருமையான நெத்திலி மீன் பொரியல்

 
அ-அ+

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
அருமையான நெத்திலி மீன் பொரியல்
 

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் - 1/2 கிலோ, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,


கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 6,
பச்சைமிளகாய் - 2,
இடிச்ச பூண்டு - 5 பல்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,

உப்பு -  தேவைக்கு.
 
201809031506425777_1_meen-poriyal._L_styvpf.jpg

செய்முறை :

நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
 
சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/03150642/1188612/nethili-meen-poriyal.vpf

Posted

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை

 
அ-அ+

இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை
 

தேவையான பொருட்கள் :  

மேல் மாவு செய்ய:


கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

பூரணம் செய்ய:

இனிப்பு கோவா - ஒரு கப்,

உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.
 
201809121513301571_1_palkova-stuffed-kozhukattai._L_styvpf.jpg

செய்முறை :

தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்

ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.

மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.  
 
சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/12151330/1190846/palkova-stuffed-kozhukattai.vpf

Posted

அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு

 
அ-அ+

சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 

தேவையான பொருட்கள் :

வாளை கருவாடு - 6 துண்டுகள்,

வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு - 5 பல்,
சாம்பார் வெங்காயம் - 6,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
உப்பு - தேவைக்கு.
புளி - நெல்லிக்காய் அளவு,

நல்லெண்ணெய் - தேவையான அளவு.
 
201809141213596961_1_Karuvattu-Kuzhambu1._L_styvpf.jpg

செய்முறை :

வாளை கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

பின்பு கரைத்த புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 
சூப்பரான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/14121359/1191201/dry-fish-mochai-curry.vpf

Posted

மாங்காய் நெய் இறால் மசாலா

 

என்னென்ன தேவை?

இறால் - 1/2 கிலோ,
நெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மாங்காய் - 4 துண்டு,
சாம்பார் வெங்காயம் - 6,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கு.

 மசாலா அரைக்க...

எண்ணெய் - சிறிது,
மிளகு, தனியா, சீரகம் - தலா 25 கிராம்,
காய்ந்தமிளகாய் - 5,
புளி - எலுமிச்சை அளவு,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
.25.jpg
எப்படிச் செய்வது?


தோசைக்கல் மசாலாவை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு தாளித்து கறிவேப்பிலை,  வெங்காயத்தை வதக்கி, மாங்காய், தோசைக்கல் மசாலா, இறால் சேர்த்து சிறிது வதக்கி கெட்டியாக வந்ததும் கொத்தமல்லி, மிளகுத்தூள்  கலந்து இறக்கவும்.

வாளை கருவாட்டு குழம்பு

 

என்னென்ன தேவை?

செக்கு எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு - 5 பல்,
சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
வாளை கருவாடு - 6 துண்டுகள்,
 உப்பு - தேவைக்கு.
27.jpg
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்தயம், மிளகு, சீரகம் தாளித்து பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மஞ்சள்  தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய்,  கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி  பரிமாறவும்.
 

http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2922&id1=0&issue=20180901

Posted

இதயம் காக்கும் இதமான உணவுகள் - 30 வகை

 

 

 

செம்பருத்திப்பூ பானம்

தேவை:      சுத்தம் செய்த ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15  பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்)  நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்  எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)  தண்ணீர் - 500 மில்லி.

2_1537173280.jpg

செய்முறை: செம்பருத்திப்பூ இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். ஆறியதும் வடிகட்டவும். அதனுடன் பாதாம் பிசின் சேர்த்துக் கலந்து பருகவும்.

பயன்:     ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், பதற்றம், அதிக கோபம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. கோபத்தைத் தூண்டும் ஹார்மோனைச் சமன் செய்கிறது. இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால் இதயத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.


3_1537173290.jpg 

வாயு முறுக்கி பால்

தேவை:       பூண்டு - 3 பல்  சிறிது தண்ணீர்விட்டுக் காய்ச்சிய பால் - 200 மில்லி  பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்  மருதம்பட்டைப் பொடி - கால் டீஸ்பூன்.

செய்முறை:     பாலை நன்றாகக் காய்ச்சவும். அதனுடன் பூண்டு, பனங்கற்கண்டு, மருதம்பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி இளஞ்சூடாகப் பருகலாம். இதை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பருகலாம்.

பயன்:   இது ஒரு சிறந்த வாயு முறுக்கியாகச் செயல்படும். அதாவது உடலில் உள்ள வாயுக்களை நீக்கும். கபத்தைக் குறைக்கும். பித்தத்தைச் சமன் செய்யும். வாயு பிரச்னையால் வரும் நெஞ்சுவலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும்.


4_1537173302.jpg 

கொள்ளு சூப்

தேவை:      கொள்ளு - 50 கிராம்  பூண்டு - 8 பல்  தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  சின்ன வெங்காயம் - 5  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு  மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்  எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  இந்துப்பு - 2 சிட்டிகை  அரிசி கழுவிய நீர் - 3 கப்.

செய்முறை:   கொள்ளுப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் ஊறவைத்த கொள்ளு, பூண்டு, இஞ்சித் துருவல், மஞ்சள்தூள், இந்துப்பு, தோலுரித்த சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, மிளகு - சீரகத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 5 விசில் வரை விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் நன்கு கடையவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும்.

பயன்:    இந்தச் சூப்பை வாரத்தில் மூன்று நாள்கள் பருகிவர தேவையற்ற கொழுப்பு நீங்கி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். கபத்தைக் குறைத்து நுரையீரல் சரிவர இயங்க உதவும். கெட்ட கொழுப்பைக் கரைப்பதன் மூலம் இதயத்துடிப்பு சீராக இயங்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும்.


5_1537173317.jpg 

புரோக்கோலி சூப்

தேவை:     நறுக்கிய புரோக்கோலி - ஒரு கப்  பூண்டு - 10 பல்  தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்  பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,  கொத்தமல்லித்தழை,  புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு  இந்துப்பு, வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்  ஆரிகானோ - ஒரு டீஸ்பூன் அல்லது காய்ந்த துளசி இலை - சிறிதளவு  எலுமிச்சைப் பழம் - பாதி அளவு (சாறு பிழியவும்)  பட்டை - 2 சிறிய துண்டு  சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்)  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை:  குக்கரில் புரோக்கோலியுடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, இந்துப்பு, பட்டை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து மத்தால் ஒரு சுற்று கடையவும். அதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், ஆரிகானோ, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வடிகட்டாமல் இளம் சூடாகப் பருகலாம்.

பயன்:  காலை உணவுக்குப் பதிலாக அல்லது 11 மணியளவில் இதைப் பருகலாம். புரோக்கோலி உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகிறது; கொலஸ்ட்ரால் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் வலிமை பெற மிகவும் துணைபுரிகிறது. இதில் அதிக கால்சியம்,  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.


6_1537173328.jpg 

ஹார்ட் ஸ்பெஷல் கிரீன் டீ

தேவை:      கிரீன் டீ இலைகள் - ஒரு டீஸ்பூன்  ஏலக்காய் - ஒன்று  நெல்லிமுள்ளி - 10 கிராம்  வெட்டி வேர் - 5 கிராம்  தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை:      பாத்திரத்தில் தண்ணீருடன் ஏலக்காய், வெட்டி வேர், நெல்லிமுள்ளி சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதனுடன் கிரீன் டீ இலைகள் சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம் (நெல்லிமுள்ளி சேர்க்காவிட்டால் வடிகட்டிய பிறகு பாதியளவு எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து சேர்த்துக் கலக்கவும்). விரும்பினால் சிறிதளவு தேன் சேர்த்துப் பருகலாம்.  இதை உணவுக்குப்பின் 60 மில்லி வரை வாரம் மூன்று நாள்கள் பருகலாம்.

பயன்:   இந்த டீ இதயப் படபடப்பை சரி செய்யும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடியது. தேவையற்ற எடை அதிகரிப்பைத் தடுக்கும். வெட்டி வேரின் நறுமணம் மன அமைதிக்கு உதவும். ஏலக்காய், சிறுமூளை பாதிப்பைத் தடுக்கும்.


7_1537173340.jpg 

இதயம் காக்கும் பொடி

தேவை:     தாமரைப்பூப் பொடி, ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூப் பொடி, மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராகிழங்குப் பொடி, சுத்தமான விரளி மஞ்சள் பொடி - தலா 10 கிராம்  தேன் - அரை டீஸ்பூன்.

செய்முறை:    தாமரை, செம்பருத்தி, மருதம் பட்டை, அமுக்கிராக்கிழங்கு, மஞ்சள் பொடி வகைகளை ஒன்றாகக் கலக்கவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துக் குழைத்துத் தினமும் இரவு படுப்பதற்கு முன் உண்ணலாம். 200 மில்லி தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் காய்ச்சி 100 மில்லி ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி தேன் சேர்த்துக் காலையில் குடிக்கலாம்.

பயன்:    மேலே கூறிய அனைத்துப் பொடிகளிலும் இதயம் காக்கும் சத்துகள் அடங்கியுள்ளன. இதயம் திறம்படச் செயல்பட இந்தப் பொடி உதவும்.


8_1537173355.jpg 

பசலைக்கீரை ஆளிவிதை பானம்

தேவை:     நறுக்கிய பசலைக்கீரை - 2 கைப்பிடி அளவு  வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன்  எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)  புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  இந்துப்பு - ஒரு சிட்டிகை  தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:  பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதனுடன் பசலைக்கீரை, புதினா இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் அப்படியே மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி, இந்துப்பு. எலுமிச்சைச் சாறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 100 மில்லி அளவு பருகலாம்.

பயன்:   இதய நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இந்தப் பானம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இது எடை அதிகரிப்பைத் தடுக்கும். மேலும், இரும்புச்சத்து, போலிக் அமிலம் இதில் அதிகமுள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.


9_1537173368.jpg 

இஞ்சி பூண்டு வடிநீர்

தேவை:    தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு - தலா 100 கிராம்  எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)  தேன் - ஒரு டீஸ்பூன்  தண்ணீர் - 3 டம்ளர்.

செய்முறை:  இஞ்சியுடன் பூண்டு சேர்த்து இடிக்கவும். அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் கலக்கவும். தினமும் காலை இந்த வடிநீரை, இளம் சூடாக வெறும் வயிற்றில் 2 டேபிள்ஸ்பூன் பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

பயன்:   ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். செரிமான மண்டலத்தைச் சுத்தம் செய்யும். அஜீரணப் பிரச்னையால் வரும் வாயுத் தொல்லை மற்றும் வாயு பிடிப்பால் வரும் இதயவலிக்கான சிறந்த நிவாரணியாக விளங்கும். இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் நடைபெற உறுதுணை புரியும்.


10_1537173380.jpg 

நெல்லிக்காய் கறிவேப்பிலை சாரம்

தேவை:     பெரிய நெல்லிக்காய் - 2  கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு  வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - கால் டீஸ்பூன்  தேன் (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன்  தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை:     நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில்  அரைத்து வடிகட்டவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இதைக்  காலை, மாலை என இருவேளையும் 100 மில்லி பருகலாம்.  விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.

பயன்:   இது ஒரு காயகல்பமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; ரத்தக் கொதிப்பைச் சீராக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ரத்த சோகையை விரட்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. 


11_1537173391.jpg 

ஹெல்த்தி மோர்

தேவை:   நன்கு நீர்விட்டுக் கடைந்த மோர் - 200 மில்லி  தோலுடன் சேர்த்து அரைத்த வெள்ளரிக்காய்ச்சாறு - 50 மில்லி  சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி - தலா கால் டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கலவை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  நீர் மோருடன் வெள்ளரிக்காய்ச்சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கலாம். 100 மில்லி முதல் 200 மில்லி வரை காலை 11 மணி அளவிலும் அல்லது மாலை 4 மணி அளவிலும் பருகலாம்.

பயன்:   இதில் நுண்ணுட்டச்சத்துகள் அதிகம். மாரடைப்பு வராமல் தடுக்கும். உச்சிமுதல் பாதம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் புத்துயிர் கொடுக்கும். இதில் உள்ள தாது உப்புகள் மற்றும் புரோட்டீன், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்புக் காரணியாக விளங்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்னைகளுக்கும் தீர்வாகும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.


12_1537173406.jpg 

அகத்திக்கீரை நீர்ச்சாறு

தேவை:     அகத்திக்கீரை - ஒரு கப்  சின்ன வெங்காயம் - 12 (தோலுரிக்கவும்)  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  சீரகம், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)  பூண்டு - 5 பல்  இந்துப்பு - கால் டீஸ்பூன்  அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்.

தாளிக்க:    ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:    குக்கரில் அகத்திக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், இந்துப்பு, பூண்டு, மிளகுத்தூள், சீரகம், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நான்கு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் கடையவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கீரையுடன் கலக்கவும்.  இதனை அப்படியே ஒரு கப் சாப்பிடலாம். அல்லது சாதம், சப்பாத்தி, இட்லி போன்ற வற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

பயன்:   அகத்திக்கீரை பித்த சூட்டைக் குறைக்கும். தோல் நோய்களுக்கும் மருந்தாகும். இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை நீங்கும்; நெஞ்சடைப்பு அகலும்; மலச்சிக்கல் சீராகும்.


13_1537173420.jpg 

முருங்கைக்கீரை மசியல்

தேவை:     முருங்கைக்கீரை (பூக்களுடன்) - ஒரு கப்  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப்  சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 5 பல்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)  இந்துப்பு - தேவையான அளவு  தண்ணீர் - தேவையான அளவு.

தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:  துவரம்பருப்புடன் பாசிப்பருப்பைச் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, பருப்பு வகைகள், தேவையான அளவு தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், இந்துப்பு சேர்த்துக் கலந்து மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கரண்டியால் நன்கு மசிக்கவும்.  சூடான, சுவையான, சத்தான, ஆரோக்கியமான முருங்கைக்கீரை மசியல் தயார்.

பயன்:  இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு படிமானங்களைக் கரைக்கும். இதயத்துக்குப் பாதுகாப்பாக அமையும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்; நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.


14_1537173443.jpg 

ஸ்ட்ரெஸ் கிளியரன்ஸ் டிரிங்க்

தேவை:    தூய்மையான விரளி மஞ்சள்தூள் - 4 கிராம்  தூய்மையான சந்தனம் - 4 கிராம்  தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி - 4 கிராம்  அதிமதுரப் பொடி - 4 கிராம்  அமுக்கிராக்கிழங்குப் பொடி - 5 கிராம்  உலர் திராட்சை - 5  தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை:  பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சந்தனம், தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, அதிமதுரப் பொடி, அமுக்கிராக் கிழங்குப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதை 30 முதல் 50 மில்லி அளவு உணவுக்குப் பிறகு அருந்தி வரலாம்.

பயன்:  மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படாமல் இருக்கப் பெரிதும் துணைபுரியும். ஹார்ட் அட்டாக் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்ட்ரெஸ் ஆகும். இதைச் சரிசெய்ய இந்த டிரிங்க் உதவும்.

குறிப்பு:     தேவையான பொருள்களில் கொடுத்துள்ள அனைத்து பொருள்களும் 50 கிராம் அளவில் வாங்கி ஒன்றாகக் கலக்கவும். அதிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவு 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்தும் பருகலாம்.


15_1537173461.jpg 

ஹெர்பல் பொடி மிக்ஸ்

தேவை:      மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் - தலா 10 கிராம்  தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சேகரிக்கவும். அரை டீஸ்பூன் பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.

பயன்:    இந்தப் பொடியைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, இதயம் பலவீனம் அடைவதைத் தடுக்கும். சீதாப்பழ இலை பொடியில் பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை (உப்பு) உறிஞ்சி ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது இதயத்தின் செயல்பாடும் திறம்பட இருக்கும்.


16_1537173477.jpg 

தாமரைப்பூ சர்பத்

தேவை:     வெண்தாமரை (அ) செந்தாமரைப்பூ - ஒன்று (இதழ்கள் மட்டும்)  பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்  பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்)  தண்ணீர் - 200 மில்லி  மருதம்பட்டைப் பொடி - 10 கிராம்.

செய்முறை:    பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன்  தாமரைப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறவிடவும். அதனுடன் மருதம்பட்டைப் பொடி, பாதாம் பிசின் சேர்த்து வாரம் இருமுறை 100 மில்லி அளவு பருகி வரலாம்.

பயன்:   இதயம் பலப்படும். இதயம் சம்பந்தமான நோய்கள் விலகும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இது எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்தாக அமைந்த உணவாகும். இதைத் தயாரிக்க வெண்தாமரைப்பூவே சிறந்தது.


17_1537173489.jpg 

மருதம்பட்டை பானம்

தேவை:     மருதம்பட்டை - 10 கிராம்  தண்ணீர் - 200 மில்லி  சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன்  தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்  சீரகத்தூள் - அரை டீஸ்பூன்  காய்ந்த ரோஜா இதழ்கள் - ஒரு டீஸ்பூன்  பனை வெல்லம் அல்லது தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:   பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீருடன் மருதம்பட்டை, சுக்குத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்துக் குறைந்த தீயில் கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றியதும் வடிகட்டவும். இத்துடன் பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இதன் சுவை சற்றுச் துவர்ப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் பானமாக அமையும்.

பயன்:    ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குவரும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீங்கும். மருதம்பட்டை மற்றும் ரோஜா சேர்ந்த கலவை மன அமைதிக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் உதவும். இதயப் படபடப்பை நீக்கும். உடல் எடை மற்றும் வயிற்றுப்பகுதி சதையைக் குறையும். இதய இயக்கம் சீராகி, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.


18_1537173503.jpg 

சீரகப் பொடி பானம்

தேவை:     சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன்  துளசி இலைகள் - 5  பட்டை - 2 சிறிய துண்டு  ஏலக்காய் - 2  பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்  தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை:  பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாகச் சூடு செய்யவும். அதனுடன் சீரகப் பொடி, துளசி இலைகள், பட்டை, ஏலக்காய் சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் சூடு செய்து இறக்கி மூடிவைக்கவும். 2 மணி நேரம் கழித்து மீண்டும் லேசாக ஒரு நிமிடம் சூடு செய்து வடிகட்டவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து மாலை அல்லது இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் குடிக்கலாம்.

பயன்:     நுரையீரல் சம்பந்தமான நோய்கள் விலகும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கம் மற்றும் நுரையீரல் திறம்பட செயல்படுதல் இவை இரண்டுமே இதயத்துக்கு முக்கியமான செயல்பாடுகளாகும். எனவே, இந்தச் சீரகப் பொடி பானம் இதயத்தை வலுவூட்டி, திறம்படச் செயல்பட வைக்கும். மேலும், ரத்தக் கொதிப்பும் சீராகும்.


19_1537173518.jpg 

திராட்சை கோசம்பி

தேவை:    விதையுள்ள பன்னீர் திராட்சை - ஒரு கப்  சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம் - தலா கால் டீஸ்பூன்  தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:     பன்னீர் திராட்சையுடன் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து வடிகட்டாமல் பருகவும். இதில் சுவைக்காக உப்பு, சர்க்கரை சேர்க்கக் கூடாது. ஏனென்றால் இது மருந்தாகும் உணவாகும். இதனை அப்படியே உண்ணும்போது முழுப் பயனையும் நம் இதயம் பெறும்.

பயன்:   இது வைட்டமின் பி, சி மற்றும் போலிக் ஆசிட், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துகளைப் பெற்றுள்ளது. இதயத்துக்கு வலுவூட்டவும், ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்யவும் இது உதவுகிறது.


20_1537173534.jpg 

அறுகம்புல்  சாறு

தேவை:      புதிதாகப் பறிக்கப்பட்ட அறுகம்புல் - அரை கட்டு  தேன் - ஒரு டீஸ்பூன்  எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)  இந்துப்பு - ஒரு சிட்டிகை  சீரகத்தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:  அறுகம்புல்லை நன்றாகச் சுத்தம் செய்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் மேலும் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு, சீரகத்தூள், தேன் சேர்த்துக் கலக்கவும். இதைத் தினமும் 100 மில்லி குடித்து வர, இதயம் வலுப்பெறும்.

பயன்:    அறுகம்புல்லில் நார்ச்சத்தும் பல நுண் ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை கொழுப்பைக் கரைக்கவும் ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கவும் பெருந்துணை புரிகின்றன.  இதய படபடப்பு குறையவும், ரத்த சுத்திகரிப்புக்கும், இதய தசைகளில் படிந்துள்ள கொழுப்பு படிமானங்களை அகற்றவும் இது உதவுகிறது.


21_1537173544.jpg 

துளசி மஞ்சள் சாரம்

தேவை:    துளசி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  சுத்தமான விரளி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  தண்ணீர் - 200 மில்லி  சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை:  பாத்திரத்தில் தண்ணீர்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் துளசி இலைகள், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். இதைத் தினமும் காலை அல்லது மாலை வேளையில் 100 மில்லி வரை குடிக்கலாம்.

பயன்:    துளசி மற்றும் மஞ்சளில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நுரையீரல் நோய்த்தொற்றைச் சரிசெய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத் துடிப்புக்கு மிகவும் உறுதுணை புரிகிறது. மூளை செல்கள் சிதைவடையாமல் காத்து மன அமைதிக்கும் வழிவகுக்கிறது. செரிமான மண்டலத்தைச் சீர் செய்கிறது. மனச்சோர்வை நீக்குகிறது. இதயத்தின் படபடப்பை நீக்குகிறது. குழந்தைகளுக்கு துளசி - மஞ்சள் சாரத்துடன் சிறிதளவு பால் கலந்தும் கொடுக்கலாம்.


22_1537173556.jpg 

நெல்லிக்காய் சர்பத்

தேவை:     பெரிய நெல்லிக்காய் - 2  தோல் சீவிய இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு  எலுமிச்சை (விரும்பினால்) - பாதி அளவு (சாறு பிழியவும்)  தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்  புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  இந்துப்பு - ஒரு சிட்டிகை  ஊறவைத்த சப்ஜா விதை - கால் டீஸ்பூன்  தண்ணீர் - 250 மில்லி.

செய்முறை:     நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கவும். அதனுடன்  இஞ்சி, இந்துப்பு, புதினா, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து வடிகட்டவும்.  தேன், சப்ஜா விதைகள் சேர்த்துக் கலந்து பருகலாம். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

பயன்:    இதில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி எலும்புக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் இதயத்துக்கு இதமளித்து, ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் பிராண வாயுவை அதிகரித்துச் செல்களுக்கும் மூளைக்கும் புத்துணர்வு அளிப்பதால், இதயம் சீராகச் செயல்பட உறுதுணை புரிகிறது.


23_1537173569.jpg 

மோர்க் கற்றாழை

தேவை:    கடைந்த நீர் மோர் - 200 மில்லி  சோற்றுக்கற்றாழை - ஒரு மடல்  இந்துப்பு - ஒரு சிட்டிகை  கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை:  சோற்றுக்கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல்லிப் பகுதியை ஐந்து முதல் ஏழு தடவை வரை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுச் சுற்றவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, இந்துப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும். இறுதியாக மோர் சேர்த்து நன்கு அடித்து எடுத்து உடனே பருக வேண்டும்.

பயன்:    இது தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் உறுதுணை புரியும். உடல் சூட்டைத் தணிக்கும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்துக்கு வலுவூட்டும்.


24_1537173582.jpg 

ரோஜாப்பூ இயற்கை லேகியம்

தேவை:      நாட்டுப் பன்னீர் ரோஜா இதழ்கள் - 3 கைப்பிடி அளவு பனங்கற்கண்டுத்தூள் (அ) நாட்டுச் சர்க்கரை - 100 கிராம் தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     சுத்தம் செய்த ரோஜா இதழ்களை ஜாடியில் போடவும். அதன் மீது பனங்கற்கண்டுத்தூள் அல்லது நாட்டுச் சர்க்கரை, மீண்டும் ரோஜா இதழ்கள் என மாற்றி மாற்றி நிரப்பவும். பிறகு ஜாடியைச் சுத்தமான துணியால் மூடி கட்டவும். தினமும் குலுக்கிவிடவும். மூன்றாவது நாள் காலையில் நன்கு கலந்து வெயிலில் துணி கட்டியபடியே ஒருநாள் வைத்து எடுக்கவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இயற்கை முறையில் செய்த ரோஜாப்பூ லேகியம் தயார்.

பயன்:     இந்த லேகியம் மூளையில் செரடோனின், மெலடோனின் போன்றவை சரியான நிலையில் உற்பத்தியாக உதவுகிறது. இது மன அமைதிக்கு உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து இதயம் சீராகச் செயல்பட உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கிறது.


25_1537173599.jpg 

அங்காயப் பொடி

தேவை:    மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, வேப்பம்பூ  - தலா 20 கிராம்  தனியா (மல்லி) - 50 கிராம்  மிளகு, சீரகம் - தலா 25 கிராம்  காய்ந்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு  கல் உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: வெறும் வாணலியில் மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, தனியா, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துச் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டுச் சூடான சாதம் அல்லது இட்லியுடன் சேர்த்து உண்ணலாம்.

பயன்:  இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. இவை இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும்; கெட்ட கொழுப்பை கரைக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றைச் சரி செய்யும். நரம்புகளுக்கு வலுவூட்டும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.


26_1537173610.jpg 

பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல்

தேவை:    வெற்றிலை - 10 (காம்பு, நுனி கிள்ளவும்)  பன்னீர் ரோஜாப்பூ - 3 (இதழ்கள் மட்டும்)  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  பச்சை மிளகாய் - 5  (அல்லது காரத்துக்கேற்ப)  எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு  சீரகம் - ஒரு டீஸ்பூன்  வெல்லம் - ஒரு சிறிய துண்டு (பொடிக்கவும்)  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:  வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக வெற்றிலை, ரோஜாப்பூ இதழ்கள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பிறகு வெல்லம், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, அரைத்தெடுத்த துவையலில் சேர்க்கவும். சாதம், இட்லி, தோசை என அனைத்துக்கும் இது சூப்பர் காம்பினேஷன்.

பயன்:  வெற்றிலை மற்றும் ரோஜாப்பூவில் உள்ள மருத்துவக் குணங்கள் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை நீக்கி இதயத்தைப் பாதுகாத்து, பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சரி செய்யும். நுரையீரல், இதயம் சரிவர இயங்கத் துணை புரியும்.


27_1537173626.jpg 

துளசி நெல்லித் துவையல்

தேவை:     துளசி இலைகள் - 2 கைப்பிடி அளவு  பெரிய நெல்லிக்காய் - ஒன்று (கொட்டை நீக்கி நறுக்கவும்)  சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்)  பூண்டு - 5 பல்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - 3 (அ) மிளகு - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் அல்லது மிளகு சேர்த்து வதக்கவும். பிறகு நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். இறுதியாக துளசி இலைகள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்து வைத்த துவையலில் கலக்கவும். கமகமவென்ற மணத்துடன், உடலுக்கும் மனத்துக்கும் ஆரோக்கியம் தரும் துவையல் தயார்.

பயன்:   துளசியும் நெல்லிக்காயும் பல்வேறு சத்துகள் கொண்டவை. இவை இரண்டும் சேர்ந்து ஓர் உணவாகும்போது அது மருந்தாக வேலை செய்கிறது. நுரையீரல் மற்றும் இதயம் இவை இரண்டுக்கும் நன்மை செய்யும் விதமாக அமைகிறது.


28_1537173640.jpg 

வெந்தய மல்லி பானம்

தேவை:    வெந்தயம், மல்லி (தனியா), சுக்கு, விரளி மஞ்சள், சீரகம் - தலா 100 கிராம்  பட்டை -  50 கிராம்  எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)  தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை:   வெறும் வாணலியில் வெந்தயம், மல்லி, சுக்கு, மஞ்சள், சீரகம், பட்டை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தண்ணீருடன் அரைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாகக் குறைந்ததும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இளம் சூடாகப் பருகவும். இதை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அருந்தலாம்.

பயன்:    நாம் உண்ட உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும், அதிக எடை போடாமல் தடுக்கவும் இந்தப் பானம் உதவுகிறது. மாரடைப்புக்கு முக்கிய காரணங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை ஆகும். இவற்றைச் சரி செய்து மாரடைப்பு வராமல் பாதுகாக்க இந்த வெந்தய மல்லி பானம் உதவுகிறது.


29_1537173657.jpg 

அமுக்கிராக்கிழங்குப் பொடி பால்

தேவை:   அமுக்கிராக்கிழங்குப் பொடி - 10 கிராம்  பால் - 200 மில்லி  பூசணி விதை - 10 கிராம்  நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 20 கிராம்  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:  பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன்  அமுக்கிராக் கிழங்குப் பொடி, பூசணி விதை, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டாமல் அருந்தவும்.

பயன்:    உயர் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும். இதயம் சீராக இயங்க உதவும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் சோர்வு நீக்கும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வெப்பத்தைச் சீர் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


30_1537173670.jpg 

சுரைக்காய் சாரம்

தேவை:  சுரைக்காய்த் துண்டுகள் - ஒரு கப்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  சின்ன வெங்காயம் - 10  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  இந்துப்பு - தேவையான அளவு  புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை கலவை - ஒரு கைப்பிடி அளவு  பூண்டு - 10 பல்
 தண்ணீர் - 2 கப்.

தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:  குக்கரில் சுரைக்காய்த் துண்டுகளுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பூண்டு, இந்துப்பு, தண்ணீர் சேர்த்து மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து சுரைக்காய்க் கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதை பிரவுன் ரைஸ் அல்லது சிறுதானிய சாத வகைகளுடன் மதிய உணவாகச் சாப்பிடலாம். அல்லது காலை நேரங்களில் பிரவுன் அல்லது கோதுமை பிரெட்டுடன் சாப்பிடலாம்.

பயன்:  சுரைக்காயில் நீர்ச்சத்து, கனிமச்சத்துகள், உயிர்ச்சத்துகள் கூடுதலாக உள்ளன. இவையனைத்தும் உடலின் தேவையற்ற கொழுப்பை எரிக்கவல்லவை.  ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்தி இதயம் சீராக இயங்க உதவுபவை.


31_1537173683.jpg 

செம்பருத்திப்பூ தோசை

தேவை:    ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 முதல் 20 (பொடியாக நறுக்கவும்)  வரகு பச்சரிசி - 200 கிராம்  இட்லி அரிசி - 50 கிராம்  கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம்  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:  வரகு பச்சரிசியுடன் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 6 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அரைத்தெடுத்து உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணிநேரம் புளிக்கவிடவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.  அதனுடன்  பொடியாகக் கிள்ளிய செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்க செம்பருத்திப்பூ தோசை ரெடி. இதற்குப் பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல் அல்லது துளசி நெல்லித் துவையல் நல்ல காம்பினேஷன்.

பயன்:  இது இதயத்துக்கு இதமளிக்கும். இதில் உள்ள காசி பால் எனும் பொருள் ஹார்மோனை சமன் செய்யும். ரத்த விருத்தியை ஏற்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்பைச் சீர் செய்யும்.


 

அவசர யுகத்துக்கு அவசிய உணவுகள்

இன்றைய அவசர உலகில் நோய்களும் அவசர அவசரமாக நம்மைத் தாக்குகின்றன. வயோதிகத்தில் நம்மைத் தாக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நோய்கள் பலவும் வாலிபப் பருவத்திலேயே வாட்டி வதைக்கின்றன. குறிப்பாக, இதயம் சார்ந்த நோய்கள் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளன. இதற்கு முக்கிய காரணங்கள் வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப் பழக்க மாற்றம். இதயம் சார்ந்த நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நல்ல தூக்கம், உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் அவசியம். இதயம் காக்கும் முயற்சியில் இறங்கி, நாம் உண்ணும் உணவேயே மருந்தாக, அதிலும் இதயத்துக்கு உறுதியளிக்கும் மருந்தாக விளங்கும் விதத்தில் தோசை, சூப், துவையல், மசியல், சர்பத் என வகை வகையாகத் தயாரித்து விருந்து படைக்கிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி.

``இங்கே வழங்கப்பட்டுள்ள  உணவு வகைகள் இதயம் சம்பந்தப்பட்டவை என்பதால் சோடியத்தை (உப்பு) குறைத்து பொட்டாசியத்தை (காய்கறி, பழங்கள் மற்றும் இயற்கை பொருள்கள் மூலம்) அதிகரித்து வழங்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில், அதே நேரம் அனைவரும் சமைத்து உண்ணும் விதமாகவும் அமைந்துள்ளன. இவை நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறக்க உறுதுணைபுரியும்’’ என்கிறார் ஓசூர் சாந்தி.

https://www.vikatan.com

Posted

சூப்பரான ஆட்டு மூளை பொரியல்

 
அ-அ+

ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு மிகவும் நல்லது.

 
 
 
 
சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 

தேவையான பொருள்கள்:

ஆட்டு மூளை - 2

மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
 
201809221313315473_1_Brain-Fry1._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.
 
சூப்பரான ஆட்டு மூளை பொரியல் ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/22131331/1193043/Mutton-Brain-Fry.vpf

சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்

 
அ-அ+

கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்
 

தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,

காய்ந்த மிளகாய் - 4,
புளி - கொட்டைப்பாக்களவு,
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடுகு - தாளிக்க,
எண்ணெய் - சிறிது,

உப்பு - தேவைக்கேற்ப.
 
201809241016234224_1_Murungai-Keerai-Thogayal._L_styvpf.jpg

செய்முறை :

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும்.

நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/09/24101623/1193331/Murungai-Keerai-Thogayal.vpf

Posted

அருமையான வறுத்த மீன் குருமா

 
அ-அ+

சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
அருமையான வறுத்த மீன் குருமா
 

தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)

பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க....

தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்

முந்திரிபருப்பு 10
 
201809271518123870_1_meen-kurma._L_styvpf.jpg

செய்முறை :

மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.

அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

வறுத்த மீன் குருமா ரெடி.

இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/27151812/1194156/fried-fish-korma.vpf

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிச்சன் கீர்த்தனா: புரட்டாசி ஸ்பெஷல் - பாரம்பரிய சாம்பார்!

6.jpg

புரட்டாசி சனிக்கிழமை நாளையுடன் முடியப்போகுது. அப்புறம் விரதம் எதுவும் கிடையாது. எப்பப் பார்த்தாலும் புரட்டாசி மாசம், அசைவ உணவு சாப்பிட மாட்டோம்; சைவ உணவுதான் சாப்பிடுவோம் என்கிற வார்த்தையை இந்த மாசம் முழுவதும் கேட்டிருப்போம்.

அதனால, பெரும்பாலான வீடுகளில் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, பருப்புக் குழம்பு, காரக் குழம்பு இப்படியான ஒரேவிதமான சமையல்தான் இருந்திருக்கும். இதில், சற்று வித்தியாசமாக பாரம்பரிய சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு இன்றைய கிச்சன் கீர்த்தானாவில் அதற்கான செய்முறையை பார்க்கலாம் வாங்க.

 

தேவையான பொருட்கள்

 

சாம்பார் பொடி தயாரிக்க

துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5

தனியா – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

 

விழுதுக்கு

தேங்காய்த் துருவல் – கால் கப்

சின்ன வெங்காயம் – 7

சீரகம் – கால் டீஸ்பூன்

 

சாம்பாருக்கு

துவரம்பருப்பு – 200 கிராம்

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

புளி – எலுமிச்சையளவு

தக்காளி - 2

கத்திரிக்காய் – 2

முருங்கைக்காய் – 1

உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நறுக்கிய வெங்காயம் – கால் கப்

கடுகு – கால் டீஸ்பூன்

 

அலங்கரிக்க

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

 

செய்முறை

6a.jpg

முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து லேசான தீயில் வறுத்து சாம்பார் பொடி தயார் செய்து கொள்ளவும்.

அதன்பின்னர், தேங்காய்த் துருவல், வெங்காயம், சீரகத்தைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதற்கிடையில், குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

அதன்பின், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலையை போட்டுத் தாளித்தவுடன், வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காயையும் சேர்த்து வதக்கவும். பின்னர், புளிக்கரைசல், துவரம்பருப்பு, உப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வதக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்க்கவும். அதன் பின்னர், பொடித்துவைத்துள்ள சாம்பார் பொடியைச் சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். காய்கறிகள் அரை பதத்தில் வெந்ததும் அதனுடன் தேங்காய் விழுதைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர், அடுப்பை அணைத்து பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

 

https://minnambalam.com/k/2018/10/12/6

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா தோசை இட்லியுடன் ஆசையாய் உண்ணலாம். ஆனால் அந்த கடைசி வரிதான் புரியவில்லை....அடுப்பை அணைத்து அவதிப்படுதல் அவசியமா.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் லாலிபாப்!

19.jpg

தினமும் வேலை வேலை என பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதால், குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் சுவையான சாப்பாடு செஞ்சுக் கொடுக்க முடியலன்னு புலம்புகிற பெண்களை பார்க்காமல் இருக்கவே முடியாது. குறிப்பாக, வீட்ல உள்ள குழந்தைகள் கேட்குற சிக்கன் லாலிபாப்புகளைக் கூட ஸ்விகி, உபேர் ஈட்ஸ் போன்ற உணவு ஆப்களில் பதிவு செஞ்சு வாங்கி கொடுத்துக்கிட்டு இருக்குற நிறைய பேரை பார்க்கமுடியுது. சிக்கன் லாலிலாப்பை வீட்டிலேயே செய்றது எப்படின்னு இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷலாக பார்க்கலாம் வாங்க.

 

தேவையான பொருட்கள்

சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8

முட்டை - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ½ டீ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்

தயிர் - 50 மில்லி

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

சிவப்பு கலர் - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

 

19a.jpg

அலங்கரிக்க

வெங்காயத் தாள் அல்லது கொத்தமல்லித்தழை

 

செய்முறை

முதலில் சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம்செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சிவப்பு கலர் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுக்கவும். பின்னர், மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்யவும். இந்த கலவையை சுமார் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

19b.jpg

அதன்பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை ஒவ்வொன்றாக அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை டிஸ்யூ பேப்பர்களில் அல்லது சாதாரண பேப்பர் தாள்களில் எடுத்து வைத்து, எண்ணெய் உறிஞ்சியதும் டூத்பிக்கை சொருகி சூடாகப் பரிமாறவும். வீட்டிலேயே சூடான லாலிபாப் ரெடி!

 

குறிப்பு

டோமாட்டோ சாஸ் அல்லது சில்லி சாஸ்ஸுடன் பரிமாறவும்.

 

https://minnambalam.com/k/2018/10/13/19

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி சனியன்று சிக்கன் கிச்சினுக்கே வராது......!tw_blush:

  • Haha 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோதுமை – சீரக தோசை

 
Dosa-yaalaruvi-696x396.jpg

 

கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – முக்கால் கப்,
அரிசி மாவு – கால் கப்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
புளித்த மோர் – கால் கப்,
வெங்காயம் – ஒன்று,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை :

வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு அதனுடன் புளித்த மோர், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை விளிம்பிலிருந்து நடுவாக ஊற்றி, இடைவெளியை மாவால் பரத்தி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விடவும்.

ஒரு பக்கம் தோசை வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

இப்போது சுவையான கோதுமை – சீரக தோசை ரெடி.

 

https://www.yaalaruvi.com/கோதுமை-சீரக-தோசை/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவசரத்துக்கு உடனடியாக செய்து சாப்பிடலாம்.......! ஆனாலும் ஒரிஜினல் தோசை என்றால் அது உளுந்தை ஊறவிட்டு அரைத்து புளிக்க வைத்து வார்க்கும் தோசைதான்......!  ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

large_NV.png.ad42dc5046063001166ba93159ccf21d.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

:grin:  இதை உரிய பகுதிக்கு நகர்த்திவிடடால் நன்று 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நிலாமதி said:

:grin:  இதை உரிய பகுதிக்கு நகர்த்திவிடடால் நன்று 

அதுகளே அங்குதான் ஓடுதுகள் சகோதரி.....!  tw_blush:

  • Like 1
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு சிக்கன் சூப்!

4.jpg

உடனடி எனர்ஜிக்கு உதவும் சூப்

நம் பாரம்பரிய சமையலில் முக்கியமானது ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப் எனலாம். நம்முடைய மிளகு ரசம் என்பது மிகவும் சத்து உள்ள சூப் என்றாலும், ஒவ்வொருவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு வகையான சூப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் உடலில் உடனடி எனர்ஜிக்கு சிக்கன் சூப் உதவுகிறது.

தேவை: சிக்கன் (எலும்புடன்) - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

தக்காளி – ஒன்று

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 5 பல்

பட்டை, லவங்கம் - தலா ஒன்று

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – தேவைக்கு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, லவங்கம் போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக்கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப்பைப் பரிமாறவும்.

என்ன பலன்?

சிக்கனில் புரதம், கொழுப்புச் சத்து அதிகம். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள், இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற நினைப்பவர்கள், எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு சிக்கன் சூப் உதவும். உடனடி எனர்ஜிக்கும் உதவும்.

 

https://minnambalam.com/k/2019/03/02/4

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கவனம், 4: 37 ல்  நாலு விசில் அடிக்க வேண்டும் என்று சொல்லுறா , உடனே விசிலடிக்க   சின்முத்திரையுடன்  விரலைக் கொண்டுபோய் வாயில் வைக்க கூடாது.....அது குக்கருக்கு சொன்னது......! 🐱

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிச்சன் கீர்த்தனா: வெள்ளை ஆப்பம்

3.jpg

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆப்பம்

இட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டி வருகின்றன உணவகங்கள். வீட்டிலேயே ஆப்பம் செய்யலாம் என்றாலும், தோசை ஊற்றுவதைப்போல ஆப்பம் செய்வது அத்தனை எளிதல்ல. தோசையில் எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துவோம். ஆனால், ஆப்பத்திலோ அதற்கு அவசியமில்லை.

எப்படிச் செய்வது?

முதலில் ஆப்பத்துக்கான மாவு தயாரிக்கும் முறை.

தேவை:

பச்சரிசி - 1 கிலோ

தயிர் - 100 கிராம்

உப்பு - 30 கிராம்

முழு தேங்காய் - ஒன்று

சமையல் எண்ணெய் - 50 மில்லி

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதைத் தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும்.

அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து சூடானதும், துளி எண்ணெய்விட்டு, துணி கொண்டு சட்டி முழுவதும் எண்ணெயைப் பரப்பிவிட வேண்டும். பிறகு, முதல்நாள் தயாரித்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை ஒரு சுழற்று சுழற்றினால்... எல்லா பக்கத்திலும் மாவு உருண்டு ஓடி நிற்கும். ஒரு தட்டைக்கொண்டு சட்டியை மூடி, மிதமான தீயில் வைத்து நான்கு நிமிடங்கள் கழித்துத் திறந்தால், ஆப்பம் வெந்திருக்கும். அப்படியே எடுத்து விரும்பிய சைடிஷைத் தொட்டுச் சாப்பிடலாம்.

என்ன நன்மை?

பெரும்பாலோர் தேங்காய்ப் பாலை மாவில் சேர்க்காமல் ஆப்பம் செய்வார்கள். தேங்காய்ப் பாலைத் தனியாகத் தயாரித்து ஆப்பத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், மேற்படி முறையில் ஆப்பத்தைத் தயாரிக்கும்போது கூடுதல் சுவையுடன், உடலுக்கும் பலம் சேர்க்கும்.

தேங்காயில் 61 சதவிகிதம் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. அதனால் தேங்காய் கலந்த உணவுகளைச் சாப்பிட்டால் விரைவாகப் பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மை தேங்காய்க்கு இருக்கிறது.

 

https://minnambalam.com/k/2019/03/13/3




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.