Jump to content

Recommended Posts

Posted
 
 
 
Bild könnte enthalten: Essen
 

வாழைக்காய்த்தோல் பொரியல் தேவையானவை:

வாழைக்காய் தோல்- 2 டம்ளர்
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும். வாழைக்காயைப் பொரியலாகச் செய்வது போல் அதன் தோலையும் வீணாக்காமல் பொரியலாகச் செய்து அசத்தலாம்.
2. மிகவும் பொடியாக வாழைக்காய் தோலைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.
4. வாழைக்காய் தோல்களைத் தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வேக விடவும்.
5. தோல் வெந்ததும் சாம்பார்பொடி, காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் இட்டு வரவும்.
6. காய் வெந்தவுடன் பாத்திரத்திற்கு மாற்றவும். துவர்ப்புச் சுவையுடன் இருக்கும் இந்த வித்தியாசமான பொரியல் மோர்க்குழம்பு, தீயல், சாம்பார், ரசம் என்று எவ்வகைக் குழம்பு, ரசத்திற்கும் சரியான ஜோடியாக இருக்கும்.

Posted

நெத்திலி மீன் வறுவல்

நெத்திலி மீன் - அரை கிலோ
மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
தனியாதூள்-3டீஸ்பூன்
மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது
எப்படி செய்வது?

சுத்தம் செய்த நெத்திலி மீனை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலநது நன்கு பிசறி விடவேண்டும். சிறிது நேரம் கழித்து கடாயில் என்ணெய் விட்டு நெத்திலி மீனை போட்டு மொறுமொறு வென வறுத்தெடுக்கவும்

Bild könnte enthalten: Essen

"வாழைக்காய் பொரியல் செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - ஒன்று
தனியா - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

வாணலியில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

வாழைக்காயை சதுரமாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வறுத்து பொடி செய்த கடலைப்பருப்பு பொடியைச் சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி.

Bild könnte enthalten: Essen
Posted

சிம்பிளான தவா மஸ்ரூம்

 

சப்பாத்திக்கு கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான், குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள்.

 
 
பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்
 
தேவையான பொருட்கள் :

மஸ்ரூம்/காளான் - 1 கப்
குடமிளகாய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1/4
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

* காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளான நறுக்கி வைத்து கொள்ளவும்.

* குடமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு தாளித்த பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

*  இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போக நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி, காளானை சேர்த்து 8 நிமிடம் நன்கு கிளறி விட்டு, காளான் மசாலாவை நன்கு உறிஞ்சும் படி வேக வைக்க வேண்டும்.

* பிறகு குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* கடைசியாக மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!
Posted

"வத்தல் குழம்பு செய்யும் முறை

15726891_683184531859959_699892969185244

 

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - கால் லிட்டர்
வெண்டைக்காய் - ஒரு கிலோ
மிளகாய் வற்றல் - 20
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் கப்
புளிக்கரைச்சல் - 3 கப்
பெருங்காயம் - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - கால் கப்
மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி

செய்முறை:

மிளகாய் வற்றலை இரண்டாக பிய்த்து விதையை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கி, வெந்தயம், கடுகு போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு பிரட்டிவிடவும்.

அதனுடன் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள் போட்டு பிரட்டவும்.

நன்கு பிரட்டிவிட்டு புளிக்கரைச்சலை ஊற்றி, உப்பு மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளறிவிட்டு உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்.

அதனுடன் தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

சுவையான வாசனை நிறைந்த வத்தல் குழம்பு ரெடி.

Posted

சிப்பிக் காளான் குழம்பு

தேவையானவை:
 சிப்பிக் காளான் - ஒரு பாக்கெட்
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 தக்காளி - 2
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 கசகசா - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 பட்டை, சோம்பு - சிறிதளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p115e.jpg

செய்முறை:
சிப்பிக் காளானின் பெரிய இதழை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அப்படியே தண்ணீரில் நன்கு அலசி வைக்கவும். சின்ன வெங்காயம் 10-ஐ தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தனியே எடுத்துவைத்த முழுதான வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, இறுதியாக மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி, ஆறிய பிறகு, விழுதாக அரைத்து வைக்கவும். தேங்காயுடன் கசகசா சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் சின்ன குக்கர் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் நறுக்கிய காளானைச் சேர்க்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீரை குழம்பு பதத்துக்கு வருவது போல சேர்க்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், பாதியளவு கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி, இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து அரைத்த தேங்காய்க்கலவை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி, மீதமுள்ள கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
சாதம், டிபனுக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும். பட்டன் காளானை விட சிப்பிக் காளானில் சத்துகள் அதிகம். இது வேக சிறிது நேரம் பிடிக்கும்.

Posted

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

 

வெஜிடபிள் பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி - 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
நெய் - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பெரிய தேங்காய - 1/2 மூடி
உப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
பச்சை மிளகாய் - 2

செய்முறை :

* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அரிசியை கழுவி வைக்கவும்.

* எலும்ச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை பொடித்து கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, காய்கறிகள், பொடித்த கிராம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது கழுவி வைத்த அரிசி, எலுமிச்சை சாறு, உப்பு போடவும்.

* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.

* அரிசி நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.

* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.

* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

சாம்பார் பொடி செய்வது எப்படி

கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியை விட வீட்டிலேயே செய்யக்கூடிய சாம்பார் பொடி சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
சாம்பார் பொடி செய்வது எப்படி
 
தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா - 200 கிராம்
மிளகு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை :

* மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்.

* இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.

* இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் மணக்கும். மேலும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு:

சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
Posted (edited)

ஸ்டார் ஓட்டல் ரெசிப்பி

கரி பவுலெட் எட் க்ரீவெட்ஸ்

15747743_618223585032966_143290404548354

 

தேவையானவை:

* சிக்கன் - அரை கிலோ

* நரம்பு நீக்கிய இறால் - 200 கிராம்

* கத்திரிக்காய் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)

* வாழைக்காய், உருளைக்கிழங்கு - தலா 250 கிராம் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)

* பட்டை - 5 கிராம்

* புதினா - ஒரு கட்டு

* மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

*மஞ்சள்தூள் - 5 கிராம்

*சீரகம் - 5 கிராம்

*நெய் - 2 டீஸ்பூன்

*பச்சைமிளகாய் - 10 கிராம்

* கொத்தமல்லித்தழை - 1 கட்டு

*கிராம்பு, சோம்பு - தலா 2 கிராம்

*எலுமிச்சைச்சாறு - 25 மில்லி

*எண்ணெய் - 50 மில்லி

* பெரியவெங்காயம் - 100 கிராம்

*பூண்டு - 50கிராம்

*தேங்காய்ப்பால் - 500 மில்லி

*பிரிஞ்சி இலை - ஒன்று

* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறிகளைச் சேர்த்து வேகும்வரை வதக்கி, தனியாக எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழை, மஞ்சள் தூள், புதினா, சீரகம், பூண்டு, மல்லி (தனியா) மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன், இறால் மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்துக் குறைந்த தீயில் வேகவிடவும். எல்லாம் வெந்துவரும்போது வெந்த காய்கறிகளைச் சேர்த்து உப்பு, எலுமிச்சைச்சாறு, தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதி வரும் முன்னர் அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

 

 

 

ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி

மீன் புயாபெஸ்

Bild könnte enthalten: Essen

 

தேவையானவை:

* நெய் - 2 டேபிள்ஸ்பூன்

* மைதா மாவு - ஒரு டீஸ்பூன்

* பெரியவெங்காயம் - 3

* இஞ்சி - ஒரு பெரிய துண்டு

* பச்சை மிளகாய் - 6

* பிரிஞ்சி இலை - ஒன்று

* பட்டை - 10 கிராம்

* சங்கரா மீன் - அரை கிலோ

* மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

* இறால் (ஓடு நீக்கியது) - அரை கிலோ

* கல் நண்டு (மட் கிராப்) - 2

* முட்டைகோஸ் - 150 கிராம்

* கத்திரிக்காய் - 150 கிராம்

* உருளைக்கிழங்கு, கேரட் - தலா 200 கிராம்

* சுடுதண்ணீர் - ஒரு லிட்டர்

* உப்பு - தேவையான அளவு

* பெரிய எலுமிச்சை - 2

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி உருகியதும் மைதா மாவு, பெரியவெங்காயத்தைச் சேர்த்துக் குறைந்த தீயில் பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி, பச்சைமிளகாய், பிரிஞ்சி இலை, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்து இஞ்சியின் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு சிறு துண்டுகளாக்கிய மீன், இறால், கல்நண்டைச் சேர்த்து நண்டின் நிறம் மாற வதக்கவும்.

பிறகு காய்கறிகளை நீங்கள் விரும்பும் வடிவத்தில் நறுக்கிச் சேர்த்து அவற்றை லேசாக வதக்கி, சுடுநீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி குறைந்த தீயில் வேகவிடவும்.

காய்கறிகளும் மீன்களும் வெந்ததும் எலுமிச்சைச்சாறைச் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

Edited by நவீனன்
Posted

தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி

சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பரான விரைவில் செய்யக்கூடிய தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி
 
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 2,
தக்காளி - 2,
சீரகம் - கால் டீஸ்பூன்,
சீரகத்தூள் - - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - - அரை டீஸ்பூன்,
தனியாத்தூள் - - அரை டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு -  தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லி, தக்காளி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி, உருளைக்கிழங்கு நன்றாக வதங்கி வரும் போது அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

* இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
Posted

செட்டிநாடு அவித்த முட்டை பிரை

அனைவருக்கும் முட்டையில் செய்த உணவுகள் பிடிக்கும். இப்போது அவித்த முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
செட்டிநாடு அவித்த முட்டை பிரை
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 4
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
புதினா -   சிறிதளவு
மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

7F0C6E09-EB4C-4EB6-97AA-D1D137297403_L_s

செய்முறை :

* கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பேஸ்ட் செய்தும் போடலாம்.

* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

* அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

* மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

* இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

* பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

* முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.

குறிப்பு :

பச்சைமிளகாயை பேஸ்ட்டாககூட உபயோகிக்கலாம்.
Posted

சன்டே ஸ்பெஷல்:  கோழி பிரியாணி

 

மதுரை ஸ்பெஷல் பிரியாணிக்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து செய்வார்கள். இப்போது நாளை சன்டே ஸ்பெஷல் மதுரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சன்டே ஸ்பெஷல்: சிக்கன் கோழி பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
நாட்டுத் தக்காளி (பெரியது) - 3
பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 3 கப்
தயிர் - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

தாளிக்க:

பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - 1
அன்னாசிப்பூ - 1
கடல்பாசி - 1
லவங்க மொட்டு - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
நெய் - கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி

செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.  

* தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.

* அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.

* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.

* எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.

* சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.

* பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.  

* இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!
Posted

ஈஸி மஷ்ரூம் ஃப்ரை

தேவையானவை:
 பட்டன் காளான் - ஒரு பாக்கெட்
 பெரிய வெங்காயம் - 3
 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p115a.jpg

செய்முறை:
காளானை கழுவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, காளான் வேகும்வரை மூடி போட்டு வைக்கவும் (காளானிலிருந்தே நீர் பிரியும் என்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). காளான் வெந்து, சுண்டியதும் இறக்கவும்.

குறிப்பு:
பட்டன் காளானைச் சுத்தம் செய்யும்போது, மைதா மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் காளானை புரட்டிக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.


ஸ்டஃப்டு மஷ்ரூம்

தேவையானவை:
 பட்டன் காளான் - 10 (பெரியது)
 பிரெட் தூள் - தேவைக்கேற்ப
 முட்டை - ஒன்று
 மைதா மாவு - 3 டீஸ்பூன்
 டூத்பிக் - சில

ஸ்டஃப் செய்ய:
 பெரிய வெங்காயம் - 2
 பூண்டு - 10 பல்
 கொத்தமல்லித்தழை - சிறிது
 பச்சை மிளகாய் - 2
 சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

p115b.jpg

செய்முறை:
காளானை தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும். முட்டையை அடித்து மைதா மாவுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி தனியே வைக்கவும்.

காளானின் தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு, காளானின் நடுவே வதக்கிய கலவையை ஸ்டஃப் செய்யவும். இறுதியாக சீஸ் துருவல் வைக்கவும். இனி, தண்டு நீக்கிய மற்றொரு காளானை ஸ்டப் செய்த காளானோடு ஒன்றாக இணைத்து டூத் பிக்கால் காளானின் நடுவே படத்தில் காட்டியுள்ளபடி செருகவும். இரண்டும் பிரிந்து வராமல் இருக்கவே டூத்பிக்கை செருகுகிறோம். பிறகு, முட்டை-மைதா கலவையில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை சிறு தீயில் வைத்து, ஸ்டஃப் செய்த காளான் துண்டுகளைச் சேர்த்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


Posted
 
 
 
Bild könnte enthalten: Essen und Innenbereich
·

பனம் பழத்தில் பதமான பனங்காய்ப் பணியாரம்

பனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும்போது கூடவே யாழ்ப்பாணமும் நினைவுக்கு வரும். ஏனெனில் யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பனை வளங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் மாத்திரமல்லாமல் உலகம் எங்கும் பரந்து வாழும் நம் தமிழர்கள் இதை ரசித்து, ருசித்துச் சாப்பிடுவார்கள். ஒடியல் கூழ், ஒடியல் பிட்டு, பனங்காய்ப் பணியாரம், புழுக்கொடியல் மா, பனங்கிழங்குத் துவையல் போன்றவை பனை வளத்தில் இருந்து பெறப்படும் முக்கியமான உணவுகளாகும்.
இன்றைய நவீன உலகில் இது போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களைச் செய்து சுவைப்பதற்கு நம்மவர்களுக்கு நேரமில்லை என்பதுடன் வசதிகளும் இல்லை என்பதே உண்மையாகும். இதன் காரணமாக எம் தலைமுறையினரில் பலர் பனங்காய்ப் பணியாரம் போன்ற உணவுப் பண்டங்களின் ‘மறக்க முடியாத சுவையை மறந்து விட்டார்கள்’ என்று கூடச்சொல்லலாம்.

எனவே சுவையான பனங்காப் பணியாரத்தை வீட்டில் செய்வது எப்படி என்று யாழ் மண் வாசகர்களோடு நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

தேவையான பொருட்கள்

01. பனம்பழம் – 02
02. கோதுமை மா – 1/2 கிலோ கிராம்
03. சீனி – 400 கிராம்
04. உப்பு – தேவையான அளவு
05. தண்ணீர் – தேவையான அளவு
06 தேங்காய் எண்ணெய் – 1/2 லீற்றர்

செய்முறை

01. பனங்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் உள்ள பனங்களியை நன்றாகப் பிழிந்தெடுக்க வேண்டும்.
02. அதன் பின்னர் பனங்களியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் சீனி, தேவையான அளவு உப்புச் சேர்த்து, பனங்காயின் பச்சை வாடை போகும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும்.
03. காய்ச்சிய பனங்களி நன்றாக ஆறியதும், கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்றாகக் குழைக்க வேண்டும்.
04. அடுப்பில் ஒரு தாச்சியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் அதில் பனங்களிக் கலவைவையை சிறு சிறு உருண்டைகளாகப் போடவேண்டும்.
05. பனக்காய்ப்பணியாரம் பொன்னிறமாக வரும்போது வடித்து இறக்குங்கள்.
06. ஆரோக்கியமான, சுவையான பனங்காய்ப் பணியாரத்தை ஆறவைத்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு -

பனங்காய்ப் பணியாரத்தை நன்றாக சூடு ஆறிய பின்னர் உண்ண வேண்டும். காரணம் என்னவெனில் பனங்காய்ப் பணியாரத்தை சூடாகச் சாப்பிட்டால் ஒருவித கசப்புத்தன்மை இருக்கும். அதுமாத்திரமல்லாமல் வயிறு சம்பந்தமான நோய்களும் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான ஒரு சிற்றுண்டி ....சில சமயம் நான் உந்த சோட்டைக்காக காரட் களியில் (போத்தலில் இருக்கும்)  செய்வதுண்டு .... பரவாயில்லை நல்லா இருக்கும்.....!  tw_blush:

Posted

3 நிமிடங்களில்....சூப்பர் சுவை ஸ்பானிஷ் ஆம்லெட்! #BachelorRecipe

சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட்

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'ஸ்பானிஷ் ஆம்லெட்' பேச்சுலர் ரெசிப்பையை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
முட்டை - 2 
பச்சைமிளகாய் - 1
குடமிளகாய்  - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம்(நறுக்கியது) - 2 டீஸ்பூன்
தக்காளி(நறுக்கியது) - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் பேனை வைத்து சூடாக்கி வெண்ணெய் சேர்த்து உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

இந்த ஆம்லெட்டின் ஸ்பெஷலே வெண்ணெய்தான்.

http://www.vikatan.com

Posted

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த குழம்பபை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
 
கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு
 
தேவையான பொருட்கள் :

தக்காளி - 4
வெங்காயம் - 2  
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் தேங்காய், வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வெந்ததும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அரைத்த தேங்காய், வெங்காய கலவையை தக்காளி கிரேவியுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு ரெடி!!!

* இந்த தக்காளி குழம்பானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
Posted

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி ஸ்டஃபிங்! #BachelorRecipe

சுவையான வெஜ் சப்பாத்தி ரோல் பேச்சுலர் ரெசிப்பி

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'வெஜ் சப்பாத்தி ரோல்' பேச்சுலர் ரெசிப்பையை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
 

தேவையானவை:

சுட்ட சப்பாத்தி - 2
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன் 
கேரட் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்  
முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் முட்டைகோஸ், கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் முக்கால் பதத்துக்கு வெந்ததும், அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்தக் கலவையை சப்பாத்தியின் ஒரு ஓரத்தில் வைத்து அப்படியே சுருட்டினால் வெஜ் சப்பாத்தி ரோல் தயார். 

குறிப்பு:

விருப்பப்பட்டால் கேரட் சேர்க்கும் போது பீன்ஸ், காளானையும்,  இறுதியாக சிறிது கரம்மசாலா தூளும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்டஃபிங்கை தோசை, பிரெட் நடுவில் வைத்தும் சாப்பிடலாம்

Posted

வெண்டைக்காய் மோர் குழம்பு

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

 
பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் - 1 கப்
வெண்டைக்காய் - 10
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 1
தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை :

* வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* தயிரை நன்றாக கடைந்து வைத்து கொள்ளவும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!
Posted

வாழைத்தண்டு ரெசிப்பி

 

* வாழைத்தண்டு சாலட்
* வாழைத்தண்டு பொரியல்
* வாழைத்தண்டு சட்னி
* வாழைத்தண்டு கூட்டு
* வாழைத்தண்டு சூப்
* வாழைத்தண்டு லோலா
* வாழைத்தண்டு - சீஸ் உருண்டை
* வாழைத்தண்டு புலாவ்
* வாழைத்தண்டு ஊறுகாய்
* வாழைத்தண்டு வடை
* வாழைத்தண்டு - கீரை - முட்டை புஜியா

p75.jpg

வாழைத்தண்டு என்றவுடனே ‘ஹைய்’ என்பவர்களுக்கு சுவாரஸ்யமான ரெசிப்பிகளை வழங்கியிருக்கிறார், திருநெல்வேலியை சேர்ந்த ஹசினா செய்யது.


வாழைத்தண்டு சாலட்

தேவையானவை:
 நறுக்கி அவித்த வாழைத்தண்டு - 50 கிராம்
 முளைகட்டி, அவித்த பச்சைப் பயறு - 2 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75a.jpg

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி, பிறகு தேவையான அளவு உப்பு போட்டு காலை அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம்.


வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - 250 கிராம்
 நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 50 கிராம்
 வறுத்த அரிசித்தூள் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
 நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 80 மில்லி
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

p75b.jpg

செய்முறை:
50 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி, அதில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து  தண்ணீர் வடித்த கடலைப்பருப்பு, நறுக்கிய வாழைத்தண்டு, மீதமிருக்கும் 30 மில்லி தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த வாழைத்தண்டு - கடலைப்பருப்பு கலவையை இத்துடன் சேர்க்கவும். பிறகு, வறுத்த அரிசித்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:
வறுத்த அரிசித்தூள் என்பது, அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடியாக்கவும்.


வாழைத்தண்டு சட்னி

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 பச்சை மிளகாய் - 4
 பூண்டு - ஒரு பல்
 தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சிறு துண்டு
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தண்ணீர் - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75c.jpg

செய்முறை:
கொடுத்துள்ளவற்றில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். உப்பு, காரம் சரிபார்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:
வாழைத்தண்டை வேகவைக்காமல்தான் சட்னி அரைக்க வேண்டும். என்னதான் நார் உரித்தாலும் அரைக்கும்போது நார் வரத்தான் செய்யும். தாளித்து கொட்டுவதால், சாப்பிடும்போது பச்சையாக சாப்பிடுகின்ற உணர்வு வராது. அந்தளவுக்கு சாப்பிட சுவையாக இருக்கும். உடல்நலன் விரும்பிகளுக்கு இந்த சட்னி மிகவும் பிடிக்கும்.


வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - 100 கிராம்
 பாசிப்பருப்பு - 100 கிராம்
 தக்காளி - 2
 பச்சை மிளகாய் - ஒன்று
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
 தண்ணீர் - 200 மில்லி
 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75d.jpg

செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் கழுவி குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், ஒரு துளி நல்லெண்ணெய் சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வாழைத்தண்டு, தக்காளி, பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு, 200 மில்லி தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாழைத்தண்டு முக்கால் பதம் வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பை கலந்து கொதிக்கவிடவும்.

அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் வெந்த வாழைத்தண்டு - பாசிப்பருப்பு கலவையைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


வாழைத்தண்டு சூப்

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - 250 கிராம்
 நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 100 கிராம்
 நறுக்கிய தக்காளி - 100 கிராம்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - 2 கப்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

p75e.jpg

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டு, குடமிளகாய், தக்காளியை குக்கரில் சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும் (கலவை நன்றாக மசிந்து இருக்க வேண்டும்). கலவையை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். அதில் வடிகட்டிய சாற்றைச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் (சூப் அதிக கெட்டியாக இருந்தால் மட்டும்) சேர்த்துக் கொதிக்கவிடவும். சூப் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.


வாழைத்தண்டு லோலா

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்
 அரிசி மாவு - ஒரு கப்
 தண்ணீர் - ஒன்றேகால் கப்
 பச்சை மிளகாய் - 2
 பூண்டு - 2 பல்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75f.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஒன்றேகால் கப் தண்ணீருடன், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டிபடாமல் கிளறவும். தீயை மிதமாக்கி அரிசி மாவு வேகும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து மூடி போட்டு வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய வாழைத்தண்டு, பச்சைப் பட்டாணி, உப்பு, தண்ணீர் சேர்த்து, வேகவைத்து இறக்கி ஆறவைக்கவும். ஆறிய கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து வைக்கவும்.

அரிசி மாவை உருண்டையாக உருட்டி, ஒரு உருண்டையை கையில் வைத்துப் பரப்பி, நடுவில் வாழைத்தண்டு - பச்சைப் பட்டாணிக் கலவையை வைத்து, அரைவட்டமாக மடிக்கவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் செய்யவும். பின்னர் அவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 - 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து, விரும்பிய சட்னியுடன் பரிமாறவும்.


வாழைத்தண்டு - சீஸ் உருண்டை

தேவையானவை:
 பொடியாக நறுக்கிய
வாழைத்தண்டு - ஒரு கப்
 மோர் - 1 டம்ளர்
 மொசரல்லா சீஸ் - ஒன்றேகால் கப்
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
 பெரிய வெங்காயம் - ஒன்று
 தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
 நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய பாதாம் - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூனில் பாதி
 சீரகத்தூள் - 2 சிட்டிகை
 மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை
 கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை
 கார்ன்ஃப்ளார் மாவு - அரை கப்
 கார்ன்ஃபிளேக்ஸ் - 2 கப்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p75h.jpg

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டை ஒரு டம்ளர் மோரில் ஊறவைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கார்ன்ஃப்ளார் மாவை, கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். உருளைக்கிழங்கை மசிக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, மோரில் ஊறிய வாழைத்தண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், முந்திரி, பாதாம், தேங்காய்த் துருவல், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

உருட்டிய உருண்டையின் நடுவில் ஒரு குழியிட்டு, அதில் ஒரு சதுர வடிவ மொசரல்லா சீஸ் துண்டை வைத்து மூடவும். இதேபோல் மீதமிருக்கும் அனைத்து உருண்டைகள் உள்ளேயும் சீஸ் வைத்து மூடவும். பிறகு, கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, கார்ஃப்ளேக்ஸில் புரட்டி தனியாக வைக்கவும். இப்படி எல்லா உருண்டைகளையும் செய்த பிறகு ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்தெடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், வாழைத்தண்டு உருண்டைகளைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு, சூடாக சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும்.


வாழைத்தண்டு புலாவ்

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - ஒரு கப்
 நறுக்கிய வாழைத்தண்டு - ஒன்றரை கப்
 மோர் - ஒரு கப் + சிறிதளவு (வாழைத்தண்டை ஊற வைக்க)
 தண்ணீர் - ஒரு கப்
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பிரிஞ்சி இலை - ஒன்று
 பட்டை - ஒரு சிறிய துண்டு
 கிராம்பு, ஏலக்காய் - தலா 2
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 புதினா - சிறிதளவு

p75i.jpg

செய்முறை:
பெரிய வெங்காயத்தை நறுக்கவும். பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். நறுக்கிய வாழைத்தண்டை மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். இத்துடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (மோரும் வாழைத்தண்டும் சேர்ந்து அரிசியில் இரண்டு மடங்காக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்). ஊறிய பாஸ்மதி அரிசியை கொதிக்கும் கலவையில் சேர்த்து, அரிசி உடையாமல் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப்போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து, உடனே இறக்கி, பிரஷர் நீங்கியதும் சூடாக தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


வாழைத்தண்டு ஊறுகாய்

தேவையானவை:
 வாழைத்தண்டு - 4 கப் (நறுக்கியது)
 நல்லெண்ணெய் - முக்கால் கப்
 பூண்டு - 20 பல் நறுக்கவும்
 இஞ்சி - 2 துண்டு (ஒரு இஞ்ச் அளவு) நறுக்கவும்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப
 வினிகர் - அரை கப்
 கடுகு - 1 டீஸ்பூன்

p75j.jpg

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டை ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். இத்துடன் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, வாழைத்தண்டை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிடவும். ஆறிய ஊறுகாயின் மேல் வினிகரை ஊற்றி கலக்கவும்.

சுத்தமான, ஈரம் இல்லாத ஊறுகாய் ஜாடியில் வைத்து உபயோகிக்கவும்.


வாழைத்தண்டு வடை

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 காய்ந்த பட்டாணி - 2 கப்
 காய்ந்த மிளகாய் - 6
 சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
 பச்சை மிளகாய் - 2
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 தோல் நீக்கிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு
 கேரட் - ஒன்று
 பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p75k.jpg

செய்முறை:
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். காய்ந்த பட்டாணியை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அதிலிருந்து 2 டேபிள்ஸ்பூன் ஊறிய பட்டாணியை எடுத்து தனியாக வைக்கவும்.

மீதம் உள்ள ஊறிய பட்டாணியுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மீதமிருப்பதில், எண்ணெய் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் அரைத்த பட்டாணியுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தனியாக எடுத்து வைத்த 2 டேபிள்ஸ்பூன் ஊறிய பட்டாணியையும் கலந்துவிடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அரைத்த கலவையை சிறு வடைகளாகத் தட்டிச் சேர்த்து, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.


வாழைத்தண்டு - கீரை முட்டை - புஜியா

தேவையானவை:
 வாழைத்தண்டு - 1 (மீடியம் சைஸில் நறுக்கவும்)
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பச்சை மிளகாய் - 2
 முருங்கைக் கீரை - ஒரு கப்
 முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
 முட்டை - 3
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவைக்கேற்ப

p75l.jpg

செய்முறை:
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டை தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அதில் வாழைத்தண்டு துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு,  அதில் முருங்கைக் கீரை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் பொரித்த வாழைத்தண்டை சேர்த்து, 3 நிமிடங்கள் பிரட்டவும். பிறகு கலவையை ஓரங்களில் ஒதுக்கவும். நடுவில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறவும். நன்றாக வெந்தவுடன் ஓரங்களில் ஒதுக்கிய கலவையை முட்டையுடன் கலந்து பிரட்டவும். இந்த சைடு டிஷ், சாதத்துக்கு பொருத்தமாக இருக்கும்.

Posted

சூப்பரான மட்டன் கீமா புலாவ்

 

மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். மட்டன் கீமா புலாவை எப்படி வீட்டில் எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

 
 
சூப்பரான மட்டன் கீமா புலாவ்
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
மட்டன் கொத்துக்கறி - 400 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 5
மிளகு - 1/2 டீஸ்பூன்
பாதாம் - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
காய்ந்த திராட்சை - 1/2 கப்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டன் கொத்துகறியை சுத்தம் செய்து வைக்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு கறியை வேக விடவும்.

* பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

* மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

* இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.

 

 

 

காய்கறி - ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு சாலட்டை சாப்பிடலாம். இன்று காய்கறி - ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காய்கறி - ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்
 
தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - 100 கிராம்,
வெள்ளரிக்காய் - 2,
தக்காளி - 3,
ஸ்ட்ராபெர்ரி - 5,
ஆப்பிள் - 1,
கொய்யா - 1
மாதுளம் பழம் - 1
திராட்சை - 100 கிராம்
மிளகு தூள் - தேவைக்கு
தேன் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - தேவைக்கு

செய்முறை :

* ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* வெள்ளரிக்காய், கொய்யா, ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.   

* முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும்.

* மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை உதிர்த்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், பழங்களை போட்டு அதனுடன் மிளகு தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

* காய்கறி - ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெடி.
Posted

சத்தான சுவையான பீட்ரூட் சூப்

பீட்ரூட்டை பொரியலாகவோ, கூட்டாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் சூப் தயாரித்து அருந்தலாம். இப்போது பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான பீட்ரூட் சூப்
 
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1/4 கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 25 கிராம்
மிளகுத்தூள் - தேவையான அளவு
கரம்மசால் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோளா மாவு - 2 டீஸ்பூன்
கிரீம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்

செய்முறை :

* பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோளா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

* குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்கும் போது அத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.

* சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி.

* பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.
Posted

செட்டிநாடு இறால் குழம்பு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய எளிமையான செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.

 
செட்டிநாடு இறால் குழம்பு
 
தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)

வறுத்து அரைப்பதற்கு...

சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2-4

குழம்பிற்கு...

சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

* அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

*  அதனுடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

* பின் அதில் இறாலை சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎16‎/‎01‎/‎2017 at 7:10 PM, நவீனன் said:

வாழைத்தண்டு ரெசிப்பி

 

* வாழைத்தண்டு சாலட்
* வாழைத்தண்டு பொரியல்
* வாழைத்தண்டு சட்னி
* வாழைத்தண்டு கூட்டு
* வாழைத்தண்டு சூப்
* வாழைத்தண்டு லோலா
* வாழைத்தண்டு - சீஸ் உருண்டை
* வாழைத்தண்டு புலாவ்
* வாழைத்தண்டு ஊறுகாய்
* வாழைத்தண்டு வடை
* வாழைத்தண்டு - கீரை - முட்டை புஜியா

p75.jpg

வாழைத்தண்டு என்றவுடனே ‘ஹைய்’ என்பவர்களுக்கு சுவாரஸ்யமான ரெசிப்பிகளை வழங்கியிருக்கிறார், திருநெல்வேலியை சேர்ந்த ஹசினா செய்யது.


வாழைத்தண்டு சாலட்

தேவையானவை:
 நறுக்கி அவித்த வாழைத்தண்டு - 50 கிராம்
 முளைகட்டி, அவித்த பச்சைப் பயறு - 2 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75a.jpg

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி, பிறகு தேவையான அளவு உப்பு போட்டு காலை அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம்.


வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - 250 கிராம்
 நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 50 கிராம்
 வறுத்த அரிசித்தூள் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
 நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 80 மில்லி
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

p75b.jpg

செய்முறை:
50 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி, அதில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து  தண்ணீர் வடித்த கடலைப்பருப்பு, நறுக்கிய வாழைத்தண்டு, மீதமிருக்கும் 30 மில்லி தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த வாழைத்தண்டு - கடலைப்பருப்பு கலவையை இத்துடன் சேர்க்கவும். பிறகு, வறுத்த அரிசித்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:
வறுத்த அரிசித்தூள் என்பது, அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடியாக்கவும்.


வாழைத்தண்டு சட்னி

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 பச்சை மிளகாய் - 4
 பூண்டு - ஒரு பல்
 தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சிறு துண்டு
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தண்ணீர் - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75c.jpg

செய்முறை:
கொடுத்துள்ளவற்றில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். உப்பு, காரம் சரிபார்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:
வாழைத்தண்டை வேகவைக்காமல்தான் சட்னி அரைக்க வேண்டும். என்னதான் நார் உரித்தாலும் அரைக்கும்போது நார் வரத்தான் செய்யும். தாளித்து கொட்டுவதால், சாப்பிடும்போது பச்சையாக சாப்பிடுகின்ற உணர்வு வராது. அந்தளவுக்கு சாப்பிட சுவையாக இருக்கும். உடல்நலன் விரும்பிகளுக்கு இந்த சட்னி மிகவும் பிடிக்கும்.


வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - 100 கிராம்
 பாசிப்பருப்பு - 100 கிராம்
 தக்காளி - 2
 பச்சை மிளகாய் - ஒன்று
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
 தண்ணீர் - 200 மில்லி
 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75d.jpg

செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் கழுவி குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், ஒரு துளி நல்லெண்ணெய் சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வாழைத்தண்டு, தக்காளி, பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு, 200 மில்லி தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாழைத்தண்டு முக்கால் பதம் வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பை கலந்து கொதிக்கவிடவும்.

அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் வெந்த வாழைத்தண்டு - பாசிப்பருப்பு கலவையைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


வாழைத்தண்டு சூப்

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - 250 கிராம்
 நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 100 கிராம்
 நறுக்கிய தக்காளி - 100 கிராம்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - 2 கப்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

p75e.jpg

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டு, குடமிளகாய், தக்காளியை குக்கரில் சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும் (கலவை நன்றாக மசிந்து இருக்க வேண்டும்). கலவையை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். அதில் வடிகட்டிய சாற்றைச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் (சூப் அதிக கெட்டியாக இருந்தால் மட்டும்) சேர்த்துக் கொதிக்கவிடவும். சூப் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.


வாழைத்தண்டு லோலா

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்
 அரிசி மாவு - ஒரு கப்
 தண்ணீர் - ஒன்றேகால் கப்
 பச்சை மிளகாய் - 2
 பூண்டு - 2 பல்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p75f.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஒன்றேகால் கப் தண்ணீருடன், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டிபடாமல் கிளறவும். தீயை மிதமாக்கி அரிசி மாவு வேகும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து மூடி போட்டு வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய வாழைத்தண்டு, பச்சைப் பட்டாணி, உப்பு, தண்ணீர் சேர்த்து, வேகவைத்து இறக்கி ஆறவைக்கவும். ஆறிய கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து வைக்கவும்.

அரிசி மாவை உருண்டையாக உருட்டி, ஒரு உருண்டையை கையில் வைத்துப் பரப்பி, நடுவில் வாழைத்தண்டு - பச்சைப் பட்டாணிக் கலவையை வைத்து, அரைவட்டமாக மடிக்கவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் செய்யவும். பின்னர் அவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 - 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து, விரும்பிய சட்னியுடன் பரிமாறவும்.


வாழைத்தண்டு - சீஸ் உருண்டை

தேவையானவை:
 பொடியாக நறுக்கிய
வாழைத்தண்டு - ஒரு கப்
 மோர் - 1 டம்ளர்
 மொசரல்லா சீஸ் - ஒன்றேகால் கப்
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
 பெரிய வெங்காயம் - ஒன்று
 தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
 நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய பாதாம் - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூனில் பாதி
 சீரகத்தூள் - 2 சிட்டிகை
 மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை
 கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை
 கார்ன்ஃப்ளார் மாவு - அரை கப்
 கார்ன்ஃபிளேக்ஸ் - 2 கப்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p75h.jpg

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டை ஒரு டம்ளர் மோரில் ஊறவைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கார்ன்ஃப்ளார் மாவை, கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். உருளைக்கிழங்கை மசிக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, மோரில் ஊறிய வாழைத்தண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், முந்திரி, பாதாம், தேங்காய்த் துருவல், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

உருட்டிய உருண்டையின் நடுவில் ஒரு குழியிட்டு, அதில் ஒரு சதுர வடிவ மொசரல்லா சீஸ் துண்டை வைத்து மூடவும். இதேபோல் மீதமிருக்கும் அனைத்து உருண்டைகள் உள்ளேயும் சீஸ் வைத்து மூடவும். பிறகு, கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, கார்ஃப்ளேக்ஸில் புரட்டி தனியாக வைக்கவும். இப்படி எல்லா உருண்டைகளையும் செய்த பிறகு ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்தெடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், வாழைத்தண்டு உருண்டைகளைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு, சூடாக சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும்.


வாழைத்தண்டு புலாவ்

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - ஒரு கப்
 நறுக்கிய வாழைத்தண்டு - ஒன்றரை கப்
 மோர் - ஒரு கப் + சிறிதளவு (வாழைத்தண்டை ஊற வைக்க)
 தண்ணீர் - ஒரு கப்
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பிரிஞ்சி இலை - ஒன்று
 பட்டை - ஒரு சிறிய துண்டு
 கிராம்பு, ஏலக்காய் - தலா 2
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 புதினா - சிறிதளவு

p75i.jpg

செய்முறை:
பெரிய வெங்காயத்தை நறுக்கவும். பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். நறுக்கிய வாழைத்தண்டை மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். இத்துடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (மோரும் வாழைத்தண்டும் சேர்ந்து அரிசியில் இரண்டு மடங்காக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்). ஊறிய பாஸ்மதி அரிசியை கொதிக்கும் கலவையில் சேர்த்து, அரிசி உடையாமல் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப்போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து, உடனே இறக்கி, பிரஷர் நீங்கியதும் சூடாக தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


வாழைத்தண்டு ஊறுகாய்

தேவையானவை:
 வாழைத்தண்டு - 4 கப் (நறுக்கியது)
 நல்லெண்ணெய் - முக்கால் கப்
 பூண்டு - 20 பல் நறுக்கவும்
 இஞ்சி - 2 துண்டு (ஒரு இஞ்ச் அளவு) நறுக்கவும்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப
 வினிகர் - அரை கப்
 கடுகு - 1 டீஸ்பூன்

p75j.jpg

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டை ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். இத்துடன் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, வாழைத்தண்டை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிடவும். ஆறிய ஊறுகாயின் மேல் வினிகரை ஊற்றி கலக்கவும்.

சுத்தமான, ஈரம் இல்லாத ஊறுகாய் ஜாடியில் வைத்து உபயோகிக்கவும்.


வாழைத்தண்டு வடை

தேவையானவை:
 நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 காய்ந்த பட்டாணி - 2 கப்
 காய்ந்த மிளகாய் - 6
 சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
 பச்சை மிளகாய் - 2
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 தோல் நீக்கிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு
 கேரட் - ஒன்று
 பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p75k.jpg

செய்முறை:
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். காய்ந்த பட்டாணியை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அதிலிருந்து 2 டேபிள்ஸ்பூன் ஊறிய பட்டாணியை எடுத்து தனியாக வைக்கவும்.

மீதம் உள்ள ஊறிய பட்டாணியுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மீதமிருப்பதில், எண்ணெய் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் அரைத்த பட்டாணியுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தனியாக எடுத்து வைத்த 2 டேபிள்ஸ்பூன் ஊறிய பட்டாணியையும் கலந்துவிடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அரைத்த கலவையை சிறு வடைகளாகத் தட்டிச் சேர்த்து, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.


வாழைத்தண்டு - கீரை முட்டை - புஜியா

தேவையானவை:
 வாழைத்தண்டு - 1 (மீடியம் சைஸில் நறுக்கவும்)
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பச்சை மிளகாய் - 2
 முருங்கைக் கீரை - ஒரு கப்
 முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
 முட்டை - 3
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவைக்கேற்ப

p75l.jpg

செய்முறை:
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டை தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அதில் வாழைத்தண்டு துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு,  அதில் முருங்கைக் கீரை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் பொரித்த வாழைத்தண்டை சேர்த்து, 3 நிமிடங்கள் பிரட்டவும். பிறகு கலவையை ஓரங்களில் ஒதுக்கவும். நடுவில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறவும். நன்றாக வெந்தவுடன் ஓரங்களில் ஒதுக்கிய கலவையை முட்டையுடன் கலந்து பிரட்டவும். இந்த சைடு டிஷ், சாதத்துக்கு பொருத்தமாக இருக்கும்.

வாழைப்பூவையா இவர்கள் வாழைத் தண்டு என சொல்கிறார்கள்:unsure:

Posted

சூப்பர் டேஸ்ட் தயிர் சாண்ட்விச்! #BachelorRecipe

சுவையான தயிர் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சாண்ட்விச் பேச்சுலர் ரெசிப்பி

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'தயிர் சாண்ட்விச்' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:
பிரெட் - 4 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 3 டீஸ்பூன்
குடமிளகாய் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
கேரட் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
தக்காளி (நறுக்கியது) - 1
பச்சைமிளகாய் (நறுக்கியது) - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு மெல்லிய துணியைக் கொண்டு தயிரை வடிகட்டவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு  மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும். பின்னர் முக்கோணம், சதுரம் என  விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.

 குறிப்பு: 
* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.
* தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.

Posted

சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு

காரக்குழம்பில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு
 
தேவையான பொருட்கள் :
 
வெண்டைக்காய் - 12
புளி - எலுமிச்சை அளவிற்கும் மேல்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கொத்தமல்லி - அலங்கரிக்கச் சிறிதளவு

வறுத்து அரைக்க :
 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3(பெரியது)
பெருங்காயம் - சிறிதளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 3 பல்லு

தாளிக்க :

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
 
செய்முறை :

* வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், தனியா, மிளகாய்வற்றல் ஆகிய பொருட்களைச் போட்டு சிவக்க வதக்கி தனியாக வைக்கவும்.

* அடுத்து வெங்காயம் பூண்டு, தக்காளியை போட்டு தனித்தனியாக சிவக்க வதக்கி ஆற வைத்து, வறுத்த அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பை போட்டு தாளித்த பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதித்தவுடன் கறிவேப்பிலையைக் கசக்கி குழம்பில் போடவும்.

* தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சி குழம்புடன் சேர்க்கவும்.

* கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
Posted
On 20.1.2017 at 8:20 PM, ரதி said:

வாழைப்பூவையா இவர்கள் வாழைத் தண்டு என சொல்கிறார்கள்:unsure:

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.