Jump to content

Recommended Posts

Posted

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்
 
தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5
மிளகு - 3 டீஸ்பூன்

செய்முறை :

* வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

* வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

* பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!
Posted

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை டிரை பண்ணிப் பாருங்க.

 
கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.

செய்முறை :

* கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

* வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும்.

* கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).

* சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.
Posted

அசரவைக்கும் நெல்லை சமையல்: அவியல்

 
படம்: மு.லெட்சுமிஅருண்
படம்: மு.லெட்சுமிஅருண்
 
 

திருநெல்வேலி என்றதுமே அல்வாதான் பலருக்கும் நினைவு வரும். “அல்வாவைத் தவிர நெல்லை மண்ணுக்கே உரிய சில பிரத்யேக உணவு வகைகள் எளிமையான செய்முறையாலும் சொக்க வைக்கும் சுவையாலும் நம்மை அடிமைப்படுத்திவிடக்கூடியவை” என்கிறார் வள்ளியூரைச் சேர்ந்த பி. பாஞ்சாலி. ஆரோக்கியம் தரும் சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் அவர்.

அவியல்

என்னென்ன தேவை?

சேனை - 50 கிராம்

கத்தரிக்காய் - 150 கிராம்

முருங்கைக்காய் - 1

கேரட், பீன்ஸ் - தலா100 கிராம்

அவரை - 50 கிராம்

உருளை - 150 கிராம்

உப்பு – தேவையான அளவு

அரைக்க - தேங்காய் - அரை மூடி

பச்சை மிளகாய் – 5

சீரகம் - அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3

பூண்டு - 4 பல்

தாளிக்க - தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்

உளுந்து, கடுகு – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

 

எப்படிச் செய்வது?

காய்களை நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒன்றரை டம்ளர் தண்ணீரில் அனைத்துக் காய்கறிகளையும் வேகவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வேகும் காயில் கொட்டி, பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, கறிவேப்பிலைச் சேர்த்துக் கிளறி பரிமாறுங்கள்.

Posted

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா

போளி

 

குழந்தைக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை வைத்து போளி செய்து கொடுத்து அசத்துங்கள்.

 
 
 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி
 
தேவையான பொருட்கள் :
 
உருளைக்கிழங்கு - 4
கடலை பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு - எட்டு
மைதா மாவு - இரண்டு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
நெய் - தேவையான அளவு

CC4A39A9-A4BC-4510-B8B2-B43C955FE948_L_s

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

* ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
 
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
 
* பிறகு, ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி நடுவில் உருளைக்கிழங்கு பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி தயார்.
Posted

அசரவைக்கும் நெல்லை சமையல்: புளி இல்லா கறி

 
படம்: மு.லெட்சுமிஅருண்
படம்: மு.லெட்சுமிஅருண்
 
 

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 200 கிராம்

அவரை - 150 கிராம்

சின்ன வெங்காயம் - 10

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் - கால் டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

அரைக்க - தேங்காய் - அரை மூடி

சீரகம் - கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 4

பூண்டு - 2 பல்

தாளிக்க - தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுந்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்

 

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை லேசாக வறுத்து, பெருங்காயம் சேர்த்து வேகவையுங்கள். அவரைக் காயுடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வேகவையுங்கள். வேகவைத்த பாசிப் பருப்பையும் அரைத்த விழுதையும் அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, பருப்புக் கலவையில் கொட்டி இறக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎22‎/‎01‎/‎2017 at 11:59 AM, நவீனன் said:

 

நன்றி நவீனன்...வாழைத் தண்டு இங்க கடையில் விக்குதோ?

Posted
13 hours ago, ரதி said:

நன்றி நவீனன்...வாழைத் தண்டு இங்க கடையில் விக்குதோ?

இங்கு தாய்லாந்து, வியட்நாம் கடைகளில் இருக்கு.

லண்டனில் china town இல் இருக்கலாம். Leicester square tube நிலையத்தில் இறங்கி ஒரு சுற்று போய் பாருங்கள்..:)

Posted

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

கோவக்காய் சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் நல்லது. இன்று கோவக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா
 
தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
இடித்த பூண்டு - நான்கு பல்
பெருங்காயம் - சிறிதளவு
கோவக்காய் -300 கிராம்

பவுடர் செய்ய :

கடலை பருப்பு - மூன்று டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - மூன்று டீஸ்பூன்
சீரகம் - இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - நான்கு

செய்முறை :

* கோவக்காயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கோவக்காய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

* கோவக்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு அரைத்த பொடி சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா ரெடி.

* இந்த செட்டிநாடு கோவக்காய் மசாலா தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

ஈசியா செய்யலாம்...சில்லி இட்லி! #BachelorRecipe

சுவையான சில்லி இட்லி பேச்சுலர் ரெசிப்பி

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'சில்லி இட்லி' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:

இட்லி - 4 
பெரிய வெங்காயம் - 1
குடமிளகாய் - பாதி அளவு
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
கொத்தமல்லித்தழை (அ) வெங்காயத்தாள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் விழுது - ஒர் டீஸ்பூன் (மிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும்)
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கார்ன் ஃபிளவர் மாவு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை மீடியம் சைஸ் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் இட்லி துண்டுகளைச் சேர்த்து பொன்நிறமாக பொறித்தெடுத்து தனியாக வைக்கவும். பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயை சேர்த்து நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம், காய்ந்த மிளகாய் விழுது, குடமிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கியதும் சிறிதளவு நீர் சேர்த்து வேக விடவும். கலவை கொதிக்கும்போது அதனுடன் கரைத்து வைத்திருக்கும் கார்ன் ஃபிளவர் மாவு கரைசலை கலந்து, கூடவே பொறித்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை (அ) வெங்காயத்தாளைத் தூவிவிட்டு சில்லி இட்லியை சூடாகப் பரிமாறவும்

குறிப்பு:
விருப்பப்பட்டால் மிளகாய் விழுது சேர்த்தப் பின்னர் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸையும் சேர்க்கலாம்.

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை! #BachelorRecipe

சுவையான பீட்ஸா தோசை பேச்சுலர் ரெசிப்பி

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'பீட்ஸா தோசை' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலக்ஷ்மி.

தேவையானவை:
தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
குடமிளகாய்(பொடியாக நறுக்கியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
தக்காளி(பொடியாக நறுக்கியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
காளான்(பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ்  - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீஸ்(துருவியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். 

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி சூடானதும் ஒரு கரண்டி மாவை சற்று கனமாக பரப்பிவிடவும். தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸையும், அதன்மேல் வதக்கிய காய்கறிகளையும், துருவிய சீஸையும் பரப்பிவிட்டு வேகவிடவும். சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

சூப்பர் டேஸ்ட் தயிர் சாண்ட்விச்! #BachelorRecipe

சுவையான தயிர் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சாண்ட்விச் பேச்சுலர் ரெசிப்பி

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'தயிர் சாண்ட்விச்' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:
பிரெட் - 4 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 3 டீஸ்பூன்
குடமிளகாய் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
கேரட் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
தக்காளி (நறுக்கியது) - 1
பச்சைமிளகாய் (நறுக்கியது) - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு மெல்லிய துணியைக் கொண்டு தயிரை வடிகட்டவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு  மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும். பின்னர் முக்கோணம், சதுரம் என  விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.

 குறிப்பு: 
* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.
* தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.

Posted

எளிய முறையில் செய்யலாம் முட்டை குழம்பு

அவித்த முட்டையோடு, குழம்பு கொதிக்கும் போது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி வேக வைப்பது இன்னும் சுவையைக்கூட்டும். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
எளிய முறையில் செய்யலாம் முட்டை குழம்பு
 
தேவையான பொருட்கள்:

முட்டை - 5 (4+1)
வெங்காயம் - 1
பூண்டு - 7 பல்
தக்காளி - 1
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி, அல்லது
மிளகாய்த்தூள் - 1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
புளிச்சாறு  - 2 மேஜைக்கரண்டி

செய்முறை :

* 4 முட்டையை அவித்து ஒட்டை உடைத்து விட்டு மேல் சிறிய கீறல்கள் போடவும். இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டையின் சுவையைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.

* வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், வெந்தயம் போட்டு தாளித்த பின் வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.

* புளிக்கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

* நன்கு கொதிக்கும் போது தீயை சிம்மில் வைத்து 1 முட்டையை உடைத்து நிதானமாக குழம்பின் நடுவில் ஊற்றவும்.

* இரண்டு நிமிடம் இளந்தீயில் கொதித்தபின் தீயை கூட்டவும்.

* நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* சுவையான முட்டை குழம்பு தயார்.

குறிப்பு :

முட்டையை உடைத்து ஊற்றும் போது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும். இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.

ஊற்றிய முட்டை வேகும் வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.

சூப்பரான மொச்சை கத்திரிக்காய் குழம்பு

மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசைக்கு நல்ல பொருத்தமானது. இப்போது மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான மொச்சை கத்திரிக்காய் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

மொச்சை - 1/2 கப்
கத்திரிக்காய் பிஞ்சாக - 6
பூண்டு - 7 பல்
சின்ன வெங்காயம் -  50 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1/4
புளிச்சாறு  - 2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி (அல்லது) தனி மிளகாய்த்தூள் - 2 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய்  - 1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

* மொச்சையை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் புளிச்சாறு, மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

* குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.
Posted

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். இன்று சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.

 
 
கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு
 
தேவையான பொருள்கள் :

மத்தி மீன் - 1/2 கிலோ
கறிமசாலா - 1
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லி தூள் -1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
சோம்பு -1 1 /2 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - 1 /2 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிமசாலா போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போனவும் இறக்கவும்.

* சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரெடி. 
Posted

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

மசாலா தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை வீட்டில் எப்படி செய்வதென்று கீழே பார்க்கலாம்.

 
 
வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை
 
தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

உருளைக்கிழங்கு - 2  
வெங்காயம் - 2  
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் சட்னிக்கு...

சிவப்பு மிளகாய் - 5
வறுத்த கடலைப் பருப்பு - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பூண்டு - 2 பற்கள்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

F81E8EDE-E586-4770-9348-398510ECA486_L_s

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனைக் கழுவி, நன்கு மென்மையாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் புளிக்க விடவும்.

* மிளகாய் சட்னிக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, ப.மிளகாயை போட்டு வதக்கிய பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

* கடைசியாக இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி குளிர வைத்துக் கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் மாவை ஊற்றி மெல்லிய தோசைப் போன்று சுற்றி, 1 நிமிடம் கழித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் பரப்பி (தோசை முழுவதும் படும்படி), நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, சுற்றி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மெதுவாக, தோசையின் ஒரு பக்கமாக மடித்து, தட்டில் எடுத்து வைத்து பரிமாற வேண்டும்.

* இப்போது சூப்பரான மைசூர் தோசை ரெடி.
Posted

செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு

செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு
 
தேவையான பொருட்கள் :

பூண்டு - அரை கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 5 பற்கள்
வரமிளகாய் - 1
தக்காளி - 1/2

செய்முறை :

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

* புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அதில் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு ரெடி!!!
Posted

சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா

இட்லி உப்புமா கேள்விபட்டிருப்பீர்கள். துவரம் பருப்பில் செய்யும் இட்லி உப்புமா சூப்பராக இருக்கும். இப்போது துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா
 
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சோடா உப்பு - 1 சிட்டிகை,
மோர் மிளகாய் - 3,
காய்ந்தமிளகாய் - 3.

தாளிக்க...

எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :

* இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.

* இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.

* இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெயை காயவைத்து மோர் மிளகாய், காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக கையால் பொடித்து கொள்ளவும்.

* பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும். இட்லி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

* கடைசியாக இறக்கும் போது கொரகொரப்பாக பொடித்த மோர் மிளகாய், காய்ந்தமிளகாயை போட்டு கிளறி பரிமாறவும்.

* சூப்பரான சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா ரெடி.
Posted

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

 
வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி
 
தேவையான பொருட்கள் :

பன்னீர் - 500 கிராம்
குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பற்கள்
தயிர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* பன்னீர், வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு, மல்லித் தூள், சீரகப் பொடி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, அதில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மீதமுள்ள பாதியில் சோள மாவு, தந்தூரி மசாலா, சாட் மசாலா, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* கலந்த மசாலாவில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து பிரட்டி, க்ரில் கம்பியில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம், என்று வரிசைப்படுத்தி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து க்ரில் கம்பியை நீட்டி பன்னீரை பொன்னிறமாக க்ரில் செய்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் நிறம் மாறும் வரை வதக்கி, பின் அதில் 2 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சாட் மசாலா மற்றும் மல்லித் தூள சேர்த்து 5 நிமிடம் இறக்கவும்.

* இந்த மசாலாவை பன்னீரின் மேல் ஊற்றினால், பன்னீர் பஹடி ரெடி!
Posted

செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப்

சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சிக்கன் சூப் வைத்து குடிக்கலாம். இன்று செட்டிநாடு முறையில் சிக்கன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப்
 
தேவையான பொருட்கள் :

கோழி(எலும்புடன்) - 1/2  கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1  துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2  தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவைக்கு

செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* தக்காளி, ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

* பின்பு இநத் சிக்கன் சூப்பில் கொத்தமல்லி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் ரெடி.
Posted

30 வகை கத்திரி-வாழை-பாகல் சமையல்!

 

 

வாழை, கத்திரி, பாகல் - இந்த மூன்று காய்களும் ஆண்டு முழுக்க கிடைக்கக்கூடியவை. நாவுக்குப் புதிய சுவை அளிக்கக்கூடியவை... சத்தானவை... மருத்துவ குணம் நிரம்பியவை. இம்மூன்று காய்களைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய 30 அருமையான உணவுகளை அளித்திருக்கிறார் சமையல் கலைஞர் நங்கநல்லூர் பத்மா. மூன்றே காய்களில் முழுமையான சமையல் அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது!

p101a.jpg


வாழைப்பூ வடை

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், வாழைப்பூ (ஆய்ந்தது) - 10 மடல், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு, இஞ்சி - சிறிது, பூண்டுப்பல் (தோல் உரித்தது) - 4, காய்ந்த மிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

1.jpg

செய்முறை: வாழைப்பூவைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும். பருப்பு கள் மூன்றையும் அரை மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். பிறகு பருப்புகளுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி நறுக்கிப் போட்டு கெட்டி யாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் உப்பு, கறிவேப்பிலை, வதக்கிய வாழைப்பூவைச் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து, பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்!


பாகற்காய் பிட்ளை

தேவையானவை:  மிதி பாகற்காய் - 200 கிராம், தேங்காய்த்துருவல் - ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு - 2
டேபிள்ஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சாம்பார்பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு ஸ்பூன்.

2.jpg

செய்முறை: பாகற்காயை இரண்டாக நறுக்கி விதைகளை எடுத்து, வேக வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் போட்டு வறுத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார்பொடி போட்டு கொதிக்கவிட்டு வேகவைத்த பாகற்காயைப் போடவும். நன்கு கொதித்ததும் அரைத்த விழுதுடன் துவரம்பருப்பைக் குழைவாக வேகவைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.


கத்திரிக்காய் அடை

தேவையானவை:  இட்லி அரிசி - 200 கிராம், கத்திரிக்காய் - 10 (சிறிய அளவில்), துவரம் பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மிலி.

3.jpg

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் தனியாக ஊறவைத்து களைந்து, அரிசியைச் சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். அந்த மாவுடன் ஊற வைத்த பருப்புகளையும் சேர்த்து, இஞ்சியைத் தோல் சீவி நறுக்கிப்போட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை சிறிது கனமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: கத்திரிக்காய் அடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்!


வாழைப்பூ பருப்பு உசிலி

தேவையானவை:  வாழைப்பூ (சிறியதாக) - ஒன்று, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 4  டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள்தூள் -  ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள்- சிறிதளவு, கடுகு - ஒரு ஸ்பூன்.

4.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து அதன் நடுவே உள்ள நரம்புப்பகுதியை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு தண்ணீரில்லாமல் பிழிந்து கொள்ளவும்.பருப்பு வகைகளைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாகவும் கொரகொரப்பாகவும் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த பருப்பைப் போட்டு மிதமான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறினால் பருப்பு வெந்து உதிரியாகிவிடும். பிறகு வேகவைத்து பிழிந்த வாழைப்பூவைப் போட்டு நன்றாகக் கலந்து கிளறி இறக்கவும்.
குறிப்பு: மோர்க்குழம்புக்குச் சிறந்த காம்பினேஷன்!


வாழைப்பூ துவையல்

தேவையானவை:  வாழைப்பூ (ஆய்ந்த மடல்) - 10, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள்- சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

5.jpg

செய்முறை: வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். புளியைத் தண்ணீரில் ஊற விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு பூவைச் சேர்த்து வதக்கவும். ஆறியதும் புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம் பருப்பு, உப்பு, வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் சிறிது தண் ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்.


வாழைப்பூ கூட்டு

தேவையானவை:  வாழைப்பூ (சிறியது) - ஒன்று, பாசிப்பருப்பு - 100 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த்துருவல் - சிறிய கப், காய்ந்த மிளகாய் - 2, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

6.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நரம்புப் பகுதியை நீக்கிப் பொடியாக நறுக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசலை விட்டு வேகவைக்கவும். தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாயைச் சேர்த்து மிக்ஸியில் விழு தாக அரைக்கவும். பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிட்டு, அரைத்த விழுது, வாழைப்பூவுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து கலந்து இறக்கவும்.

குறிப்பு: பாசிப்பருப்பை வறுத்து வேக வைப்பதால் மணமும் ருசியும் கூடும். வயிற்றுப் புண் ஆற்றும்.


வாழைப்பூ அடை

தேவையானவை:  இட்லி அரிசி - 200 கிராம், வாழைப்பூ (சிறியது) - ஒன்று, முளை கட்டிய கறுப்பு முழு உளுந்து, முளைவிட்ட கொண்டைக்கடலை - தலா 100 கிராம், முளை கட்டிய கொள்ளு - 2 ஸ்பூன், பூண்டுப்பல் (தோல் உரித்தது) - 4, காய்ந்த மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

7.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி வதக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து களைந்து கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். முளைகட்டிய உளுந்து, கொண்டைக்கடலை, கொள்ளு, பூண்டுப்பல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து தனியாக அரைக்கவும். அரைத்த அரிசியுடன் பருப்பு விழுது, வாழைப்பூ, வெங்காயத்தைச் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி  சிறிது எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப்போட்டு மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இட்லிப்பொடி, வெல்லம், வெண்ணெய், அவியல் சிறந்த காம்பினேஷன். புரதச்சத்து மிகுந்தது இந்த அடை.


வாழைப்பூ உருண்டை குழம்பு

தேவையானவை: வாழைப்பூ - சிறியது ஒன்று, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார்பொடி - 2 டேபிள்ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு.

8.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிறகு உப்பு, வாழைப்பூவைப் போட்டு பிசைந்து சிறு உருண்டைகளாக  உருட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து உப்பு, சாம்பார்பொடி போட்டு கொதிக்க விடவும். பிறகு வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் உருண்டைகளாகப்போட்டு பிசைந்து சாம்பார் தொட்டு சாப்பிடலாம்.


வாழைப்பூ பொரியல்

தேவையானவை:  வாழைப்பூ (சிறியது) - ஒன்று, பாசிப்பருப்பு - 4 ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள்- சிறிது.

9.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி அலசவும். பிறகு பாசிப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள்  புளிக்கரைசல் விட்டு வேக வைக்கவும். தண்ணீர் வடித்துப் பிழிந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து பிழிந்து வைத்த வாழைப் பூவையும் போட்டு வதக்கி தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


வாழைப்பூ பக்கோடா

தேவையானவை:  வாழைப்பூ (சிறியது) - ஒன்று, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

10.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி அலசவும். சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி - பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய், வதக்கிய வாழைப்பூ சேர்த்து மாவைச் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தீயைக் குறைத்து மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து  எடுக்கவும்.

குறிப்பு: சட்னி அல்லது சாஸ் தொட்டு சாப்பிடலாம். டீ, காபியுடன் சூடான மாலை நேர சிற்றுண்டி.


வாழைப்பூ இனிப்பு  பச்சடி

தேவையானவை:  வாழைப்பூவை (ஆய்ந்து பொடியாக நறுக்கியது) – ஒரு கப்,  எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் - (பொடித்தது) - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

11.jpg

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து அலசவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்துவிட்டுக் கொதிக்க வைக்கவும். பச்சை மிளகாய், தேங் காயை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பிறகு அரைத்த விழுது கள், வெல்லம் போட்டு ஒரு கொதி விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்.


பாகற்காய் பொரியல்

தேவையானவை:  பாகற்காய் - 200 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த்துருவல் - ஒரு கப்.

தாளிக்க: எண்ணெய், கடுகு உளுத்தம்பருப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறி வேப்பிலை - சிறிதளவு.

12.jpg

செய்முறை: பாகற்காயை அலம்பி பொடியாக நறுக்கவும். புளியை ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், பாகற்காய் துண்டுகள் போட்டு வேகவிடவும். பிறகு தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து பாகற்காய், சர்க்கரை போட்டு நன்றாகக் கிளறி இறக்கும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.


வாழைப்பூ புட்டிங்

தேவையானவை:  வாழைப்பூ - சிறியது ஒன்று, எல்லாம் கலந்த முளைகட்டிய பயறு வகைகள் - ஒரு பாக்கெட், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - (நறுக்கியது) சிறிதளவு, எண்ணெய் - ஒரு ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

13.jpg

செய்முறை: வாழைப்பூவை வாணலி யில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். முளைகட்டிய பயறு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்து சிறிது உப்பு சேர்த்து வதக்கிய வாழைப்பூவையும் போட்டுப் பிசைந்து இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி வடைகளாகத் தட்டி ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும் ஒரு பரவலான தட்டில் போட்டு சிறு துண்டுகள் போட்டு கடுகு தாளித்து மேலே கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும். எலுமிச்சைச் சாற்றைப் பரவலாக ஊற்றவும்.


பாகற்காய் தீயல்

தேவையானவை:  பாகற்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 2,  தக்காளி - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்.

14.jpg

செய்முறை:  வெங்காயம், தக்காளி, பாகற்காயைப் பொடி யாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள், பாகற்காய் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.


வேர்க்கடலை - பாகற்காய் சாம்பார்

தேவையானவை:  பச்சை வேர்க் கடலை - 100 கிராம், பாகற்காய் - 2, புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம் பார் பொடி - 2 ஸ்பூன், உப்பு - தேவை

யானஅளவு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு கலவை - 100 கிராம், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு ஸ்பூன்.

15.jpg

செய்முறை: பச்சை வேர்க் கடலையை வேகவைக்கவும். பாகற் காயைப் பொடியாக நறுக்கவும்.  புளியை ஊற வைக்கவும். பருப்பை மலர வேக விடவும். பாகற்காயை வேகவைத்து தண்ணீர் வடித்து அலசிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விட்டு வேகவைத்த கடலை, பருப்பு, பாகற்காய் போட்டு மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து பரிமாறவும்.
குறிப்பு: வேகவைத்த பாகற்காயை மீண்டும் அலம்புவதால் கசப்பு குறையும். இரண்டு பருப்பும் சேர்ப்பதால் ருசி கூடுதலாக இருக்கும். வேர்க்கடலை அல்லது கொண்டைக்கடலையை ஊறவைத்து சேர்த்தும் தயாரிக்கலாம்.


பாகற்காய் ரோஸ்ட்

தேவையானவை:  பாகற்காய் - 4, மிளகாய்த்தூள், புளி பேஸ்ட், கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

16.jpg

செய்முறை: பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை எடுக்கவும். பிறகு பாகற்காய், மிளகாய்த்தூள், புளி பேஸ்ட், உப்பு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாகக் கலக்க வும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மிதமான தீயில் வைத்து சிறிது சிறிதாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.


பாகற்காய் தொக்கு

தேவையானவை:  பாகற்காய் (நீளமானது) - 2, இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, பூண்டுப்பல் - 4 (தோல் உரித்தது), புளி - நெல்லிக் காய் அளவு, வெல்லம் - ஒரு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன்.

17.jpg

செய்முறை: பாகற்காயை அலம்பி பொடியாக நறுக்கி விதை எடுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய பாகற்காய், இஞ்சி, பூண்டுப்பல், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கி உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்க வும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்ததைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்.


பாகற்காய் ஜூஸ்

தேவையானவை:  பாகற்காய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, பனங் கற்கண்டு - 100 கிராம், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

19.jpg

செய்முறை:  பனங்கற்கண்டை பொடிக்கவும். பாகற்காயை அலம்பி பொடியாக நறுக்கி விதையை எடுக்கவும். இதனுடன் தோல் சீவிய இஞ்சி சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, வடிகட்டி ஜூஸ் எடுத்து தேன், பனங்கற்கண்டு பொடி போட்டு கலந்து குடிக்கவும்.

குறிப்பு: சர்க்கரை நோயாளி களுக்கு இந்த ஜூஸ் மிகவும் சிறந்தது.


பாகற்காய் வறுவல்

தேவையானவை:  பாகற்காய் - 4, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - சிட்டிகை.

18.jpg

செய்முறை: பாகற் காயை வில்லைகளாக நறுக்கி விதை எடுக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் போட்டு கலந்து ஒருநாள் ஊற வைத்து வெயிலில் காய விடவும். நன்றாகக் காய்ந்ததும் வாணலியில் எண் ணெய் வைத்து மிதமான தீயில் வைத்து பாகற்காய் வற்றலைப் போட்டு வறுக் கவும்.


பாகற்காய் பொரித்த கூட்டு

தேவையானவை:   பாகற்காய் - 2, தேங்காய்த்துருவல் - ஒரு கப், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையானஅளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், கடுகு உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

211.jpg

செய்முறை: பாசிப்பருப்பை வேக வைக்கவும். பாகற்காயை அலம்பி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய்த்துருவலுடன் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வேகவைத்த பாகற்காயுடன் அரைத்த விழுது, பருப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விட்டு இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துப் பரிமாறவும்.


பாகற்காய் வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்

தேவையானவை:  பாகற்காய் - ஒன்று, கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன், வெள்ளரிக்காய் - பொடியாக நறுக்கியது – ஒரு கப், மாதுளம்பழ முத்து - ஒரு டீஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள் - தலா 4, நெய் - ஒரு டீஸ்பூன்.

20.jpg

செய்முறை: பாகற்காயைப் பொடியாக நறுக்கி விதை எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு பாகற்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பாகற்காய், வெள்ளரித் துண்டுகள், கேரட் துருவல், மாதுளம் பழ முத்துகள், வாழைப்பழத்துண்டுகள், பைனாப்பிள் துண்டு கள் எல்லாம் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடலாம்.


கத்திரிக்காய் ரஸவாங்கி

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கத்திரிக்காய் - 10, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, தேங்காய்த்துருவல் - ஒரு கப், வெல்லம் - சிறு துண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.

22.jpg

செய்முறை: துவரம் பருப்பை வேக விடவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கத்திரிக் காயுடன் உப்பு, புளிக்கரை சல் விட்டு வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கத்திரிக்காயுடன் பருப்பு, அரைத்த விழுது, வெல்லம் போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து கலந்து பரிமாறவும்.


கத்திரிக்காய் மசால்

தேவையானவை: கத்திரிக்காய் - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, கரம் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்.

23.jpg

செய்முறை: காம்புடன் கத்திரிக் காயை நீளவாக்கில் நறுக்கவும். காய்ந்த மிளகாய், புளி, உப்பு, மசாலா பொடி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கத்திரிக்காயைப் பரவலாக வைத்து, அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: காம்புடன் கத்திரிக்காயை நறுக்கி, உள்ளே அரைத்த விழுது சேர்த்து, கத்திரிக்காய் நன்கு வெந்த தும் அப்படியே சாப்பிடலாம்.


எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு

தேவையானவை:  பிஞ்சு கத்திரிக்காய் - சிறிதாக 10, எண்ணெய் - 100 மிலி, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

24.jpg

செய்முறை: வாண லியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளிக்கவும். கத்திரிக்காயின் காம்பை மட்டும் நறுக்கிவிட்டுச் சேர்த்து வதக்க வும். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி போட்டு வறுத்துபுளியைக் கரைத்து விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு கெட்டி யானதும் இறக்கவும்.


கத்திரிக்காய்  பஜ்ஜி

தேவையானவை:  கத்திரிக் காய் - பெரிதாக ஒன்று, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

25.jpg

செய்முறை: கத்திரிக்காயை வில்லைகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்
தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலி யில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்திரிக்காய் துண்டுகளை மாவில் தோய்த்துப் போட்டு, நன்கு வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்!


கத்திரிக்காய் சாதம்

தேவையானவை:  பாசுமதி அரிசி - 200 கிராம், கத்திரிக்காய் - 6, பெரிய வெங்காயம் - 2, பூண்டுப்பல் - 4, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடுகு, சீரகம் - தலா ஒரு ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.

 

27.jpg

 

செய்முறை:  கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். பாசுமதி அரிசியை ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு நிறுத்தவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும். பிறகு அதே நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், பூண்டுப்பல், வெங்காயம், கத்திரிக் காய், உப்பு, கரம் மசாலா தூள் போட்டு நன்றாக வதங்கியதும் சாதத்தைப் போட்டு கலக்கவும். முந்திரிப்பருப்பு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: மேலே முந்திரி வறுத்து அல்லது வேர்க்கடலை வறுத்துப் போடலாம். சிப்ஸ் சிறந்த காம்பினேஷன்.


கத்திரிக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை: கத்திரிக்காய் - 6, தனியா, கடலைப்பருப்பு, அரிசி - தலா ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மோர் - 500 மிலி, தேங்காய்த்துருவல் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, வெந்தயம்.

26.jpg

செய்முறை: கத்திரிக்காயைச் சிறிதாக நறுக்கி உப்பு சேர்த்து வேக விடவும். அத்துடன் தனியா, சீரகம், கடலைப்பருப்பு, அரிசியும் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். மோருடன் உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து லேசாக கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து வேகவைத்த கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து பரிமாறவும்.


கத்திரிக்காய் பொரியல்

தேவையானவை:  கத்திரிக்காய் - 200 கிராம், கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு.

29.jpg

செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய கத்திரிக்காய்களைப் போட்டு வதக்கி, உப்பு, பெருங்காயத்தூள், வறுத்த பொடியைத் தூவி மிதமான தீயில் வைத்து கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் இறக்கவும்.


கத்திரிக்காய் கொத்சு

தேவையானவை:  கத்திரிக்காய் - 4, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு.

தாளிக்க: பெருங்காயத்தூள், கடுகு, எண்ணெய், வெல்லம் - சிறிது.

28.jpg

செய்முறை: தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து கத்திரிக்காய், உப்பு, புளியைக் கரைத்து விட்டு நன்றாக வேக விடவும். பிறகு அரைத்த பொடியைச் சேர்த்து ஒரு கொதி விட்டு  இறக்கவும்.

குறிப்பு: கத்திரிக்காயின் காம்புப் பகு தியை ஒரு கம்பியில் செருகி மிதமான தீயில் சுட்டு, தோல் உரித்தும் செய்யலாம். அரிசி உப்புமாவுக்கு கொத்சு சிறந்த காம்பினேஷன்.


கத்திரிக்காய் கூட்டு

தேவையானவை:  கத்திரிக்காய் - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள் - சிட்டிகை, தேங்காய்த் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2,  உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,  சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

30.jpg

செய்முறை: பருப்பை மலர வேக விடவும். கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கவும். கத்திரிக்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேக விடவும். பச்சை மிளகாயுடன் தேங்காயைச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த கத்திரிக்காய், பருப்பு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

Posted

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள பாலக்கீரை தால் சூப்பராக இருக்கும். இன்று சத்தான சைட் டிஷ் பாலக்கீரை தால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்
 
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - ஒரு கட்டு,
பாசிப்பருப்பு - 100 கிராம்,
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று,
வெங்காயம் - ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாலக்கீரையை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

* இரண்டும் நன்றாக வதங்கியதும் இதனுடன் கீரை - பருப்பு கலவை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

* பாலக்கீரை தால் ரெடி.

* இது சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் சரி ....,ஆனால் இந்தப் பாவக்காயிலை புரூட் சாலட்  போட்டிருக்கிறீங்கள் , அதை நினைக்கத்தான் கண்ணில ஜலம் கொட்டுது....!  tw_blush:

Posted

சண்டே ஸ்பெஷல்

சந்திரலேகா ராமமூர்த்தி

 

* சாக்லேட் பால்ஸ் இன்
*கஸ்டர்ட் சாஸ்
* பாலக் தாலி பித் (கீரை அடை)
* பூரி பரோட்டா
* உருளைக்கிழங்கு கறி
* குல்சா
* மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்)
* கேஷு தம் புலாவ்
* மக்னா மலாய் கறி
* தயிர் ராய்த்தா

p19aa.jpg

வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும்கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே... ஞாயிறுதோறும் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே... இதோ குடும்பமே சேர்ந்து சமைத்து, ஒன்றாக அமர்ந்து கதைகள் பல பேசி, விருந்து உண்ணும் அனுபவத்துக்குத் தயாராகுங்கள். அதற்காகவே அருமையான ரெசிப்பிகளை அளிக்கிறார் ரெசிப்பி ராணி சந்திரலேகா ராமமூர்த்தி.


சாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ்
 
தேவையானவை:
 பால் - 2 கப்
 சர்க்கரை - அரை கப்
 கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 சாக்லேட் பிஸ்கட் – 10
 துருவிய சாக்லேட் அல்லது
 சாக்லேட் சிப்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ்,
 நட்ஸ் - தேவையான அளவு

p19a.jpg

செய்முறை:
பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரைச் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொதிக்கவிடவும். கெட்டியாக தோசை மாவு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

சாக்லேட் பிஸ்கட்டுகளை கரகரப்பாகப் பொடிக்கவும். பிறகு பாலுடன் கலக்கவும். சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து,  மேலே துருவிய சாக்லேட் அல்லது சாக்லேட் சிப்ஸ், பொடித்த ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் தூவிப் பரிமாறலாம்.


பாலக் தாலி பித் (கீரை அடை)
 
தேவையானவை:
 பாலக் கீரை - நறுக்கியது
 கோதுமை மாவு – தலா ஒரு கப்
 கடலை மாவு - அரை கப்
 கம்பு மாவு, அரிசி மாவு – தலா கால் கப்
 உப்பு, பச்சை மிளகாய்,
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
 எண்ணெய் - தேவைக்கு
 மஞ்சள், இஞ்சி, சீரகம் -
தலா ஒரு டீஸ்பூன்
 ஓமம் - சிட்டிகை
 சர்க்கரை - அரை டீஸ்பூன்
 தயிர் - அரை கப்

p19b.jpg

செய்முறை:
இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயை மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு, அரிசி மாவு, கீரை, உப்பு, தயிர், சர்க்கரை, ஓமம், மிளகாய் தூள், அரைத்த பொடிச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதமாக பிசையவும். பிறகு சிறிது எண்ணெய் தடவி மூடி அரைமணி நேரம் வைக்கவும்.

மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாழை இலையில் மாவை வைத்து தட்டவும். சூடான தவாவின் மேல் போட்டு இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு கரகரப்பாக வேகவைத்து எடுக்கவும்.


பூரி பரோட்டா
 
தேவையானவை:
 மைதா மாவு - 2 கப்
 உப்பு - அரை டீஸ்பூன்
 சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 நெய் - ஒரு டீஸ்பூன்

p19c.jpg

செய்முறை:
மைதாவுடன் சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும். மேலே சிறிதளவு எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை அடித்துப் பிசைய வேண்டும். பிசைந்த மாவில் நெய் தடவி மீண்டும் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கிப் பூரிகளாகத் தேய்க்கவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


உருளைக்கிழங்கு கறி
 
தேவையானவை:
 உருளைக்கிழங்கு - 4
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 காஷ்மீர் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
 கொத்தமல்லி - அலங்கரிக்க
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p19d.jpg

செய்முறை:
உருளைக்கிழங்கைக் கழுவிச் சதுரமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு காயவைத்து சீரகம் போட்டு வெடித்ததும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், காஷ்மீரீ மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கரைத்து, உருளைக்கிழங்குடன் சேர்த்து மூடி, சிறிது நேரம் வேக விடவும். குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி, பூரி அல்லது புரோட்டாவுடன் சூடாகப் பரிமாறவும்.


குல்சா
 
தேவையானவை:
 மைதா - 2 கப்
 சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன்
 ஈஸ்ட் - கால் டீஸ்பூன்
 வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
 ராஜ்மா - ஒரு கப்
 தக்காளி, வெங்காயம் - தலா 2
 சீரகம், மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கரம் மசாலா - ஒரு சிட்டிகை
 உப்பு, எண்ணெய், பால் -
தேவையான அளவு
 பச்சைமிளகாய், இஞ்சி,
கொத்த மல்லித்தழை,
எலுமிச்சைச்சாறு - அலங்கரிக்க.

p19e.jpg

செய்முறை:
ஈஸ்டை பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும். மைதாவுடன் சர்க்கரை, உப்பு, வெண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்து பிசையவும். இதுவே பேஸ். ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.

பேஸ்-இல் இருந்து ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிது கனமான ரொட்டியாக தட்டவும். தவாவில் ரொட்டியைப் போட்டு எண்ணெய்விட்டு மூடி போட்டு வேக விடவும். பின் ரொட்டியை திருப்பிப் போட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும். சூடான குல்சாவின் மேல் ராஜ்மாவைப் பரப்பி அதன் மேல் மிக பொடியாக வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு கொண்டுத் தூவி அலங்கரித்துப் பாரிமாறவும்.


மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்)

தேவையானவை:
 பாசுமதி அரிசி - ஒரு கப்
 மசூர் பருப்பு - அரை கப்
 வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
 பச்சைப்பட்டாணி, கேரட்,
  பீன்ஸ் கலவை - ஒரு கப்
 பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2
 இஞ்சி-பூண்டு விழுது, சீரகம்,
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய், நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - இரண்டரை கப்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 முந்திரி - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p7l.jpg

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், உப்புச் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா, மஞ்சள்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், பருப்பு, அரிசி, தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும். இதில் சூடான நீர் இரண்டரை கப் விட்டு, மிதமான தீயில் மூடி வேகவிடவும். முந்திரியை வறுத்துத் தூவவும். கொத்தமல்லித்தழைத் தூவி ராய்தாவுடன் பரிமாறவும்.


கேஷு தம் புலாவ்

தேவையானவை:
 பாசுமதி அரிசி - 2 கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 பிரிஞ்சி இலை - 2
 எண்ணெய், நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
 பனீர் - 50 கிராம்
 வெள்ளித்தாள் -
  தேவையான அளவு
 முந்திரி - 20
 சர்க்கரை - சிறிது
 உப்பு, மஞ்சள்தூள் -
தேவையான அளவு

அரைக்க:
 பச்சை மிளகாய் – 2
 புதினா இலைகள்- 10
 பூண்டு - 4 பல்
 இஞ்சி - ஒரு துண்டு
 உப்பு - சிட்டிகை
 கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - தலா சிறிதளவு

p19f.jpg

செய்முறை:
பனீரைச் சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கவும். உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்குத் தேய்த்து அழுத்தி பிசறி, சிறுசிறு கோலிகளாக உருட்டி, வெள்ளித்தாளில் சுற்றிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைக்கவும். பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து, உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும். மீதி உள்ள நெய், எண்ணெய்விட்டு, சீரகம், பட்டை (உடைத்தது), பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிவக்கும் வரை வறுத்து, பின் அரைத்த விழுதைச் சேர்க்கவும். சர்க்கரை, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சாதத்தைச் சேர்த்து உடையாமல் கலக்கவும். பனீரை புலவில் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, குங்குமப்பூத் தூவி அலங்கரிக்கவும்.


மக்னா மலாய் கறி
 
தேவையானவை:
 தாமரைக்காய் பதப்படுத்தியது -
(மக்னா) 200 கிராம்
 பச்சைப் பட்டாணி - 50 கிராம்
 வெங்காயம், தக்காளி - தலா 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், வெண்ணெய், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
 ஃப்ரெஷ் க்ரீம் - 2 டீஸ்பூன்
 முந்திரி - 10
 பச்சை மிளகாய் - 2
 சர்க்கரை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
 உப்பு - தேவையான அளவு

p19g.jpg

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி அரைக்கவும். முந்திரியை விழுதாக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய், எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கிளறவும். உப்பு, முந்திரி விழுது, பச்சைப் பட்டாணி, சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். கால் கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும், ஃப்ரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி வைக்கவும். பின் வேறு ஒரு கடாயில் சிறிது எண்ணெயில் தாமரைக் காயை வறுத்து கிரேவியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

(மக்னா: தாமரைக்காயை உலரவைத்து பதப்படுத்துவது.)


தயிர் ராய்த்தா
 
தேவையானவை:
 பெரிய வெங்காயம் - 2
 பச்சை மிளகாய் – 2
 புளிப்பு இல்லாத கெட்டி தயிர் - ஒரு கப்
 தேங்காய்த்துருவல் – சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். தயிரைக் கடையவும். பிறகு இத்துடன் தேங்காய்த்துருவல், உப்பு கலந்து பரிமாறவும்.

p19h.jpg

இரண்டாவது முறை:
 துருவிய வெள்ளரிக்காய் - ஒன்று
 பொடித்த கொத்தமல்லி,
பச்சை மிளகாய் - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 கேரட் (துருவிக்கொள்ளவும்) - 2
 கெட்டித் தயிர் - 2 கப்
இவை எல்லவற்றையும் கலந்து புலாவுக்கு, பச்சடி போலப் பரிமாறலாம்.

மூன்றாவது முறை:
 பழக்கலவை (ஆப்பிள், பைனாப்பிள்
 மாதுளை மற்றும் வாழைப்பழம்) - தலா அரை கப்
 உப்பு - ஒரு சிட்டிகை
 வடித்த தயிர் - ஒரு கப்
 வறுத்துப் பொடித்த சீரகத்தூள்
இவை எல்லாவற்றையும் கலந்து இனிப்பான ராய்த்தா செய்யலாம்.

Posted

சிக்கன் சிந்தாமணி

 

 
 
 
 
chicken_3128380f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

சிக்கன் - ஒரு கிலோ

காய்ந்த மிளகாய் - 25

சின்ன வெங்காயம் - 200 கிராம்

நல்லெண்ணெய் - 150 கிராம்.

எப்படிச் செய்வது?

வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடானதும் சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு வதக்குங்கள். காய்ந்த மிளகாயில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு, மிளகாயை மட்டும் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள். அதன் பின் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிக்கறியைப் போட்டு, வதக்குங்கள். பத்து நிமிடங்களில் கறி முழுமையாகத் திரண்டுவிடும். பிறகு கல் உப்பு சேர்த்து, கறி முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூடிவைத்து வேகவிடுங்கள். 10 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியைத் திறந்து கிளறிவிடுங்கள். சிறிது நேரத்தில் நீர் முழுவதும் வற்றி, மிளகாயின் காரம் முழுவதும் சிக்கன் துண்டுகளில் முழுமையாக பரவிவிடும். இறக்கிவைத்து, சிக்கன் சிந்தாமணியைச் சூடாகப் பரிமாறுங்கள்.

சிக்கன் லாலிபாப்

 

 
chicken1_3128384f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

சிக்கன் தொடைப்பகுதி - 4 துண்டுகள்

முட்டை - 1

எலுமிச்சை - பாதி பழம்

மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன்

கடலை மாவு - 3 டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

மைதா மாவு - அரை டீஸ்பூன்

சிவப்பு கலர் பவுடர் - 4 சிட்டிகை

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அனைத்து மாவு வகைகளையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதனுடன் மிளகாய்ப்பொடி, சிவப்பு கலர் பொடி ஆகியவற்றைக் கலந்துவையுங்கள். முட்டையை அதில் உடைத்து ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவைவிட கெட்டியான பதத்தில், கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சிக்கன் துண்டுகளை லேசாகக் கீறி, கரைத்துவைத்துள்ள மசாலாவில் நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் மூடிவையுங்கள். குறைந்த தீயில் வேகவிடுங்கள். பிறகு முடியைத் திறந்து, மீண்டும் புரட்டிப் போட்டு எடுத்தால் மொறுமொறுப்பான சிக்கன் லாலிபாப் தயார்.

Posted

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு

கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம். இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு
 
தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு - கால்கிலோ
தேங்காய் - கால் முடி
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பூண்டு -  ஒன்று
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள்  - ஒரு மேசைக் கரண்டி
மஞ்சத்தூள் - அரைத் தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள்  -  தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கடுகு -  ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை :

* கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.

* தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

* புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

* பூண்டை நசுக்கி வைக்கவும்.

* தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து புளிக்கரைசலில் சேர்த்து நன்கு கரைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு தேவையான நீரை ஊற்றி கலக்கி வைக்கவும்.

* கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் பூண்டைப் போட்டு நன்கு வதக்கிய பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* புளி கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் எல்லாத் தூள்வகைகளையும் போட்டு பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.

* பின்பு அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

* குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும், ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

* காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு ரெடி.
Posted

சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி

முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்பில்தான் போடுவோம். ஆனால் முருங்கைக்காயை வைத்து கூட்டு வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும்.

 
 
சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 5
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.

தாளிக்க :

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.

அரைக்க :

தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* தேங்காயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முருங்கைக்காயை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

* முதலில் வெங்காயம், பூண்டை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அடுத்து அரைத்த வெங்காயம், பூண்டு, போட்டு நன்றாக வதக்கவும்..

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு சிறிது வதக்க வேண்டும்.

* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் முருங்கைக்காய், சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதி வந்தவுடன் கொர கொரப்பாக அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

* இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.

* வெந்ததும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.
Posted

செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல்

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல்
 
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை பட்டாணி - 1 கப்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - ருசிக்கு
தனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1/4 ஸ்பூன்
உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்

செய்முறை  :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

* அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

*  செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் ரெடி.
Posted

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா

 

குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

 
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
 
தேவையான பொருட்கள் :

பரோட்டா உதிர்த்தது - 2 (பெரியது)
வெங்காயம் பெரியது - 1
தக்காளி பெரியது - 1
பச்சை மிள்காய் - 1
குடமிளகாய் - பாதி
டொமட்டோ சாஸ் - 2 ஸ்பூன்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (விரும்பினால்)
சில்லி பவுடர் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1-2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஸ்பிரிங் ஆனியன் அல்லது கொத்தமல்லி தழை அலங்கரிக்க - சிறிது.

செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், தக்காளியை நீளவாக்கி வெட்டிகொள்ளவும்

* ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பரோட்டாவை உதிர்த்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, டொமட்டோ சாஸ், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* தேவைக்கு உப்பு சிறிது அஜினமோட்டோ சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். நன்கு மசிந்து விடும்.

* அடுத்து அதில் கரம்மசாலா, சில்லி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.

* அடுத்து பொடியாக உதிர்த்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். புளிப்பு தேவையென்றால் 1-2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.

* கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* சுவையான சில்லி பரோட்டா ரெடி.
Posted

ஓட்ஸ் ரெசிப்பி

அன்னம் செந்தில்குமார்

 

* ஓட்ஸ் - கேரட் ரொட்டி
ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா
ஓட்ஸ் கீர்
ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா
ஓட்ஸ் - புரோக்கோலி சூப்
ஓட்ஸ் - மாதுளம்பழ ஸ்மூதி
ஓட்ஸ் - டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்
ஓட்ஸ் - க்ரனோலா பார்ஸ்
ஓட்ஸ் லட்டு
ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக்

p119.jpg

ட்ஸ் என்றால் கஞ்சி மட்டும்தானா? சூப், கீர், ஸ்மூதி, பக்கோடா, லட்டு, ரொட்டி என விதவிதமாகச் சமைத்து ருசிக்க ரெசிப்பிகள் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.


ஓட்ஸ் - கேரட் ரொட்டி
 
தேவையானவை:
 ஓட்ஸ் பவுடர் - அரை கப்
 கோதுமை மாவு - ஒரு கப்
 கேரட் துருவல் - கால் கப்
 மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு, மல்லித்தழை, நெய் - தேவையான அளவு.

p119a.jpg

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கோதுமை மாவு, கேரட் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்து கையால் நன்கு கலக்கவும். தன்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு நெய் விட்டு, இரு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். சூடாக தயிர்ப் பச்சடி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.


ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா
 
தேவையானவை:
 ஓட்ஸ் மாவு - 1 கப்
 அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 கடலை மாவு -கால் கப்
 வெங்காயம் - ஒன்று
 வல்லாரைக் கீரை – 1 கட்டு
 இஞ்சித்துருவல் - சிறிதளவு
 பச்சை மிளகாய் - 2
 உப்பு - தேவைக்கு
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

p119b.jpg

செய்முறை:
வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்துவைத்துள்ள மாவை கைகளால் சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்துப் போடவும். நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.
 
குறிப்பு:
மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்துவிட்டால் பக்கோடா கரகரப்பாக (Crispy) இருக்காது. அதனால், தண்ணீர் பார்த்துச் சேர்க்கவும். வல்லாரை இலை சேர்த்திருப்பதால், இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.


ஓட்ஸ் கீர்

தேவையானவை:
 ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 பால் - ஒரு கப்
 பாதாம் பவுடர் - 2 டீஸ்பூன்
 சர்க்கரை  - 4 டேபிள்ஸ்பூன்
 முந்திரி - 10
 குங்குமப்பூ - சிறிதளவு
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள்-2 சிட்டிகை

p119c.jpg

செய்முறை:
முந்திரியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே நெய்யில் ஓட்ஸைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். பிறகு பால், தண்ணீர் ஒரு கப் சேர்த்து வேக விடவும். ஓட்ஸ் நன்றாக வெந்தவுடன் பாதாம் பவுடர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறு தீயில் வைத்து அடிபிடிக்காமல் ஓட்ஸை வேகவைக்கவும். பிறகு முந்திரி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.
 
குறிப்பு:
கீர் கெட்டியாகிவிட்டால், காய்ச்சிய பால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.


ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா

தேவையானவை:
 ஓட்ஸ், கடலை மாவு, அரிசி மாவு   - தலா அரை கப்
 வெண்ணெய், மிளகாய்த்தூள்,
எள் - தலா ஒரு டீஸ்பூன்
 பெருங்காயம் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

p119d.jpg

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், எள், பெருங்காயம், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும். முறுக்கு பிழியும் அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு மாவை நிரப்பவும். எண்ணெயைக் காயவிட்டு ரிப்பன்களாகப் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு 7 முதல் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.


ஓட்ஸ் - புரோக்கோலி சூப்
 
தேவையானவை:
 ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 புரோக்கோலி - 10 பூக்கள்
 வெங்காயம் - ஒன்று
 பூண்டு - 3 பல்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

p119e.jpg

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். புரோக்கோலியை சிறிய பூக்களாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது உப்பு போட்டு கொதிக்கவைக்கவும். பிறகு  புரோக்கோலியைச் சேர்த்து வேகவிடவும். பிறகு, வடியவிட்டு எடுக்கவும். மூன்று பூக்களை எடுத்து அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு, வெங்காயம், புரோக்கோலி போட்டு வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுடன், தண்ணீர், உப்பு, ஓட்ஸ் பவுடர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் மிளகுத்தூள், அலங்கரிக்க வைத்துள்ள பூக்களை  மேலே சேர்த்துப் பரிமாறவும்.
 
குறிப்பு:
தேவையென்றால், சிறிது பால் அல்லது ஃப்ரஷ் கிரீமும் சேர்த்துக்கொள்ளலாம்.



ஓட்ஸ் - மாதுளம்பழ ஸ்மூதி
 
தேவையானவை:
 ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 மாதுளம்பழம் - ஒன்று
 பால் - அரை கப்
 நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன்

p119f.jpg

செய்முறை:
மாதுளம்பழத்தை நறுக்கி முத்துகளை உதிர்க்கவும். முத்துகளை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். ஓட்ஸுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஒரு ஃப்ளண்டரில் வேகவைத்த ஓட்ஸ், மாதுளம்பழ ஜூஸ், காய்ச்சி ஆறிய பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து சில்லென்று பரிமாறவும்.
 
குறிப்பு:
மாதுளம்பழத்துக்குப் பதில் ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா போன்ற பழங்கள் சேர்த்தும் ஸ்மூதி செய்யலாம்.


ஓட்ஸ் - டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்
 
தேவையானவை:
 ஓட்ஸ் - முக்கால் கப்
 கோதுமை மாவு - கால் கப்
 டேமராரா சுகர் - கால் கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பால் - 2 டேபிள்ஸ்பூன்
 டூட்டி ஃப்ரூட்டி - அரை கப்
 ஜாதிக்காய்த்தூள்- 2 சிட்டிகை
 முந்திரி - 4

p119g.jpg

செய்முறை:
முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும். டேமராரா சுகரை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, டேமராரா சுகர், வெண்ணெய், டூட்டி ஃப்ரூட்டி, ஜாதிக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். வெளியே எடுத்து, ஒரே அளவுள்ள சிறிய உருண்டைகளாக உருட்டவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து ஒரே அளவாக கையால் அழுத்தி விடவும். அல்லது சப்பாத்தி போல தேய்த்து, குக்கி கட்டரால் விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்து, பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும். அவனை 180 டிகிரியில் 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயை அவனில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வைத்து பேக் செய்யவும். 10 நிமிடம் கழித்து குக்கீஸை மறுபக்கம் திருப்பி பேக் செய்யவும். ஆறியவுடன் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
 
குறிப்பு:
பேக்கிங் நேரம் அவரவர் அவனிற்கு ஏற்ப மாறுபடும். டேமராரா சுகருக்கு பதில் பழுப்பு சர்க்கரை உபயோகப்படுத்தலாம்.


ஓட்ஸ் - ஃக்ரனோலா பார்
 
தேவையானவை:
 ஓட்ஸ் - ஒரு கப்
 பாதாம், கேன்டிட் செர்ரி - தலா கால் கப்
 கறுப்பு உலர் திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
 தேன், பழுப்புச் சர்க்கரை - தலா 3 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

p119h.jpg

செய்முறை:
செர்ரி, பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாதாம், ஓட்ஸை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேன், வெண்ணெய், பழுப்புச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அது நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு, ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஓட்ஸ், பாதாம், செர்ரி, உலர் திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறவும். பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரைப் போட்டு, அதில் இந்த ஓட்ஸ் கலவையைக் கொட்டி, ஒரு கரண்டியால் நன்றாக அழுத்திவிடவும். 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து துண்டுகள் போடவும். ஓட்ஸ் ஃக்ரனோலா பார் ரெடி.


ஓட்ஸ் லட்டு
 
தேவையானவை:
 ஓட்ஸ் - ஒரு கப்
 நாட்டுச் சர்க்கரை - அரை கப்
 நெய் - கால் கப்
 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
 முந்திரி - 10

p119i.jpg

செய்முறை:
முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும்.தேங்காய்த்துருவல், ஓட்ஸை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஓட்ஸ் ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை உருக்கி, முந்திரி சேர்த்து வறுக்கவும். பிறகு, அதே நெய்யில் ஓட்ஸ் பவுடர், தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.
 
குறிப்பு:
உலர் பழங்கள், பருப்புகளை நெய்யில் வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.


ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக்
 
தேவையானவை:
 ஓட்ஸ் பவுடர் - ஒரு கப்
 தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய்
  - தலா ஒன்று
 மல்லித்தழை - சிறிதளவு
 மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p119j.jpg

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி அதில் மாவை சிறிய பான்கேக்குகளாக ஊற்றவும். எண்ணெய் ஊற்றி, இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். விருப்பமான சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா. நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும். ஆரம்பத்தில் கூத்தாடினாலும், தேர்தல் நெருங்கிய சமயம் அருச்சுனா போக்கில் நல்ல மாற்றம் தெரிந்தது.  ஆனால்…வெற்றிக்கு பின்…பழைய பல்லவிக்கு மாறி விட்டார் போல தெரிகிறது.
    • நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.