Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

 

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்
 
தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் (தனியா தூள்) - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 2
மல்லி(தனியா) - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4

செய்முறை :

* சேனைக்கிழங்கை சமமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நறுக்கிய சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்த தூள் சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

* சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!
Link to comment
Share on other sites

‘வாலன்டைஸ் டே’ ஸ்பெஷல்

ஹசினா செய்யது

 

* மாதுளை மாக்டெய்ல்
* ரோஸ் மூஸ்
* லவ் ரோஸ்
* லப்டப் பீட்சா
* பனீர் சாலட்
* பிரான் பெஸ்டோ ஸ்பெகட்டி
* ரெட் ஹார்ட்ஸ்
* பொட்டேட்டோ லவ் கேக்

p47.jpg

ருகிறதே வாலன்டைன்ஸ் டே! பிப்ரவரி 14 அன்று அன்புகலந்து பரிமாற அசத்தலான ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது.


மாதுளை மாக்டெய்ல்

தேவையானவை:
 மாதுளைச் சாறு – 300 மில்லி
 சர்க்கரைப் பாகு – 10 மில்லி
 சோடா - 180 மில்லி
 ஸ்ட்ராபெர்ரி - 2
 மாதுளை முத்துகள் - அலங்கரிக்க

p47c.jpg

செய்முறை:
சோடாவைக்  குளிரவைக்கவும். ஸ்ட்ராபெர்ரியை இதய வடிவில் நறுக்கவும். மாதுளைச் சாறு, சர்க்கரைப் பாகு உடன் குளிர்ந்த சோடா சேர்த்து கலக்கவும். பின்பு ஸ்ட்ராபெர்ரி, மாதுளை முத்துகள் போட்டு ஜில்லென்று பரிமாறவும்.


ரோஸ் மூஸ்

தேவையானவை:
 கட்டித் தயிர் - 2 கப்
 குங்குமப்பூ – சிறிதளவு
 தேன், குல்கந்து - தலா
  2 டேபிள்ஸ்பூன்
 பால் - 6 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 ஜெலட்டின் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
அலங்கரிக்க:
 ரோஜா இதழ்கள் – சிறிதளவு
 பாதாம்பருப்பு – சிறிதளவு
 ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன்

p47d.jpg

செய்முறை:
கட்டித் தயிரை  ஒரு துணியில் கட்டி, இரவில் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். மறுநாள் காலையில் தயிரை நன்றாக அடித்து கட்டி இல்லாமல் கடையவும். இதில் குல்கந்து, குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். ஜெலட்டினுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரைச் சேர்த்து கொதிக்க விடவும், அடுப்பைவிட்டு இறக்கி ஜெலட்டினை பாலுடன் சேர்த்து கட்டித் தட்டாமல் கலக்கவும். பின்பு தயிர் கலவையுடன் சேர்த்து கலக்கவும். பின்பு ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர் கலந்து, எண்ணெய் தடவிய புட்டிங் டீரேயில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட்டான புட்டிங்கை ஒரு தட்டில் கவிழ்த்து, ரோஜா இதழ், பாதாம், தேன் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.


லவ் ரோஸ்

தேவையானவை:
மாவு செய்ய:
 மைதா மாவு - ஒன்றேகால் கப்
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 குளிர்ந்த வெண்ணெய்  (உப்பு
   சேர்க்காதது) -  8 டேபிள்ஸ்பூன்
 குளிர்ந்த நீர் - 3 டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்ய:
 ஆப்பிள் - 2 (தோலுடன் நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
 சர்க்கரை - அரை கப்
 உருக்கிய வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 4 டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன்
 மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - கால் கப்

p47e.jpg

செய்முறை:
மாவுக்குத் தேவையான, மைதா மாவு மற்றும் உப்பு, சர்க்கரை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். அதன் மேல் குளிர்ந்த வெண்ணெய் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து எடுக்கவும். பின்பு குளிர்ந்த நீரையும் சேர்த்து லேசாக பிசைந்துக் கொள்ளவும். இதை மூடிபோட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த மாவை, மைதா மாவுத் தூவி கால் இன்ச் தடிமனில் பரப்பிக் கொள்ளவும். பரத்திய மாவை வட்டமான மூடியை வைத்து வட்ட வட்டமாக வெட்டி எடுக்கவும். வெட்டிய வட்ட வடிவ மாவை, வெண்ணெய் தடவிய கப் கேக் டிரேயில் கப் வடிவத்தில் அழுத்தி வைக்கவும். பின்பு இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பூரணம் செய்முறை:
நீளவாக்கில் வெட்டிய ஆப்பிள் துண்டுகளை, எலுமிச்சைச்சாற்றில் பிரட்டி எடுக்கவும். சிறிது வெண்ணெயையும், கால் கப் சர்க்கரையையும் ஆப்பிளின் மேல் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வேக விடவும். மீதமுள்ள வெண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த கப்பின் உள்பக்கமாக தடவிக் கொள்ளவும். பின்பு ஆப்பிள் துண்டுகளை (18) நீளவாக்கில் அடுக்கி வைத்து, மெதுவாக உருட்டி, ரோஜாப்பூ போல வடிவமைத்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த கப்பின் உள்ளே வைக்கவும்.அதை 25-30 நிமிடங்கள் அவனில் வைத்து வேக விடவும். ஆறியவுடன் ஜாமை (அவனில்) வைத்து  லேசாகச் சூடாக்கி, பிரஷ் கொண்டு ஆப்பிளின் மேல் தடவிப் பரிமாறவும்.


லப்டப் பீட்சா

தேவையானவை:
 மைதா மாவு - 2 கப்
 ஈஸ்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 வெதுவெதுப்பான வெந்நீர் -
2/3 கப் + 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - அரை டீஸ்பூன்

டாப்பிங் செய்ய:
 தக்காளி சாஸ் - கால் கப்
 குடமிளகாய் (பச்சை, மஞ்சள்
  சிவப்பு ) – தேவைக்கு
 மொசேரல்லா சீஸ் துருவல் - அரை கப்
 பேசில், ஆரிகனோ, திரித்த மிளகாய் - தூவுவதற்கு

p47f.jpg

செய்முறை:
குடமிளகாயை இதய வடிவில் நறுக்கவும். ஒரு கப் மைதா மாவு, ஈஸ்ட், உப்பு, சர்க்கரை, வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசையவும். மீதமுள்ள ஒரு கப் மைதா மாவை சிறிது சிறிதாக கலந்து பிசைந்து புரோட்டா மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை 15 நிமிடத்துக்கு துண்டில் சுற்றி வைக்கவும். பின்பு  இதய வடிவில் தேய்க்கவும். எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டின் மேல் வைத்து, அதன் மேல் தக்காளி சாஸ் தடவி, சீஸ் துருவல் தூவி,  இதய வடிவில் வெட்டிய குடமிளகாய்களை நன்றாக அடுக்கவும். பின்பு பேசில், ஆரிகனோ, திரித்த மிளகாய் ஆகியவற்றைத் தூவி, பின்பு இதை, 180 டிகிரி ஃபாரன்ஹீட் ஃப்ரீஹீட் செய்த அவனில் 12-15 நிமிடங்கள் பேக் செய்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: ஆரிகனோ, திரித்த மிளகாய் இல்லையெனில், ரெடிமேட் பீட்சா ஆர்டர் செய்யும்போது கிடைக்கும் பாக்கெட் தூளைப் பயன்படுத்தலாம்.


பனீர் சாலட்

தேவையானவை:
 பனீர் - 200 கிராம்
 தர்பூசணி - 200 கிராம்
 லெட்டீஸ் இலை – 6
 கொத்துமல்லித் தழை – சிறிதளவு
 ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
 பால்சாமிக் வினிகர் -
ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு, மிளகு – தேவைக்கு

p47g.jpg

செய்முறை:
பனீர், தர்பூசணியை இதய வடிவில் நறுக்கவும்.  மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். லெட்டீஸ் இலையின் மேல் சிறிதளவு உப்பு தூவி  வைக்கவும். ஆலிவ் ஆயில், பால்சாமிக் வினிகர், மிளகு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். லெட்டீஸ் இலையை தட்டில் பரப்பி அதன் மேல் தர்பூசணி, பனீர் என மாற்றி மாற்றி இரண்டு வரிசைகளாக அடுக்கவும். ஆலிவ் ஆயில் கலவையை அதன் மேல் பகுதியில் ஊற்றவும். இதை  ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


பிரான் பெஸ்டோ ஸ்பெகட்டி

தேவையானவை:
 ஸ்பெகட்டி - 250 கிராம்
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 புதினா இலை – சிறிதளவு
 தக்காளி – பாதி
 இறால் மீன் - கால் கிலோ
 பெஸ்டோ சாஸ்,
  உப்பு, துளசி இலை, புதினா
  இலை, மல்லித்தழை – தேவைக்கு
 சீஸ் துருவல் - கால் கப்
 வால்நட் (அக்ரூட்) - கால் கப்
 பூண்டு - 4 பல்
 ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்

p47h.jpg

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பெஸ்டோ சாஸ், துளசி இலை, புதினா இலை, மல்லித்தழை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தண்ணீருடன், ஆலிவ் ஆயில், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் ஸ்பெகட்டி சேர்த்து வேகவிடவும். வெந்த ஸ்பெகட்டியை வடிகட்டவும்.  தண்ணீரையும் ஸ்பெகட்டியையும் தனியாக எடுத்துவைக்கவும். ஆலிவ் ஆயிலைச் சூடாக்கி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இறால் மீன், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் மேல் பெஸ்டோ சாஸ் ஊற்றி 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஸ்பெகட்டி சேர்த்து நன்றாகக் கலக்கவும். 4 டேபிள்ஸ்பூன் ஸ்பெகட்டி, வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புதினா, சீஸ் துருவல், வால்நட் துருவல் தூவிப் பரிமாறவும்.


ரெட் ஹார்ட்ஸ்
 
தேவையானவை:
 மைதா மாவு - ஒரு கப்
 பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன்
 பூண்டு - 2 பல்
 சீஸ் ஸ்பிரட் - கால் கப்
 சிவப்பு குடமிளகாய் - ஒரு கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

p47i.jpg

p47j.jpg

செய்முறை:
பூண்டு, சிவப்பு குடமிளகாயை நறுக்கவும், மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஆரிகானோ ஆகியவற்றுடன் வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். குடமிளகாய், சீஸ், வெண்ணெய், பூண்டு சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை கால் இன்ச் தடிமனில் சதுரமாகத் தேய்க்கவும். அதன் மேல் சீஸ், குடமிளகாய் கலவையைச் சரிசமமாகப் பரப்பவும். சப்பாத்தி மாவின் மேல் சீஸ் தூவி, வலதுபுற ஓரத்தை உள்புறமாக மடிக்கவும். இதேபோன்று இடதுபுறமும் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் பரப்பி, அதன் மேல் இதை வைக்கவும். இதை 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். அவனை 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யவும். ஃப்ரீசரில் வைத்த மாவை எடுத்து, அதனுடைய கீழ்பகுதியை அழுத்தி ஹார்ட் வடிவில் கொண்டு வரவும். அரை இன்ச் கனமான துண்டுகளாக கூர்மையான கத்தியை வைத்து ரோலை வெட்டி எடுக்கவும். வெட்டி எடுத்த துண்டுகளை கால் இன்ச் இடைவெளி விட்டு ஃபாயில் பேப்பர் மேல் வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் (பொன்னிறமாகும் வரை) அவனில் வைத்தெடுக்கவும். 10 நிமிடங்கள் ஆறவிட்டு பரிமாறவும்.


பொட்டேட்டோ லவ் கேக்

தேவையானவை:
 உருளைக்கிழங்கு - ஒன்றரை கிலோ
 வெங்காயம் - 2
 வெண்ணெய் - 60 கிராம்
 சீஸ் - 2 கப்
 மல்லித்தழை – சிறிதளவு
 உப்பு, மிளகு – தேவைக்கு

p47k.jpg

செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சீஸைத் துருவவும். உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக மெல்லிதாகத் தோலுடன் நறுக்கவும். வெண்ணெயைச் சூடாக்கி  வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். அவனை 200 டிகிரிக்கு சூடாக்கவும். ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தின் ஓரங்களில் வெண்ணெய் தடவவும். வட்டவடிவில் உருளைக்கிழங்குத் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன்மேல் உப்பு, மிளகு, வெங்காயம், சீஸ், கொத்துமல்லித்தழை தூவவும். இதை போலவே பாத்திரம் மேல் பாகம் நிரம்பும் வரை அடுக்கடுக்காக வைக்கவும். மேல்பாகத்தில் வெண்ணெய் தடவி வைக்கவும். ஃபாயில் பேப்பர் வைத்து மூடி ஒன்றரை மணி நேரம் அவனில் வைத்து பேக் செய்யவும். பின்பு ஃபாயில் பேப்பரை எடுத்து 30 நிமிடங்கள் அவனில் வைத்து முறுக விடவும். 10 நிமிடங்கள் ஆறவிட்டு வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
ஸ்பிரிங் / பொம் (Spring Foam) என்னும் பாத்திரத்தில் செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.''

- படங்கள்: எல்.ராஜேந்திரன்

Link to comment
Share on other sites

பசியை தூண்டும் சீரகம் - தனியா சூப்

வயிற்று கோளாளு, அஜீரணம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த சீரகம் - தனியா சூப் மிகவும் நல்லது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
பசியை தூண்டும் சீரகம் - தனியா சூப்
 
தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்
தனியா (மல்லி) - கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகு - 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 2
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து வைக்கவும்.

* தனியா (மல்லி), சீரகம், மிளகை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

* ஊறவைத்த பொருட்களுடன் கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின் வடிகட்டி சக்கையை எடுத்து விடவும்.

* வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

* கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.

* இந்த சூப் பசியை தூண்டும். உணவு நன்று செரிமானம் ஆகும். இந்த சூப் கெட்டியாக இருக்காது. கெட்டியாக வேண்டுமானால் சோளமாவு சேர்த்து கொள்ளலாம்.
Link to comment
Share on other sites

குடல் ரெசிப்பி

திவ்யா பிரமிள்

 

* குடல் மிளகு வறுவல்
* குடல் பிரியாணி
* குடல் மசால் தோசை
* மிளகாய் - வெங்காயம்
*குடல் வதக்கல்
* ஸ்பைஸி குடல் மசாலா
* குடல் தேங்காய்ப்பால் குழம்பு
* குடல் 65

p107.jpg

தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞரும் உணவுப் புகைப்பட நிபுணருமான திவ்யா பிரமிள், விதவிதமான மட்டன் ரெசிப்பிகளை வழங்கியிருக்கிறார்.


குடல் மிளகு வறுவல்

தேவையானவை:
 குடல் - 200 கிராம்
 சின்ன வெங்காயம் - 10
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
 முழு மிளகு - கால் டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 சோம்பு – கால் டீஸ்பூன்
 சிறிய பச்சை மிளகாய் - ஒன்றில் பாதி
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 பட்டை - சிறிய துண்டு
 கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு - சிறிதளவு

p107a.jpg

செய்முறை:
குக்கரில் குடலோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். வெந்த குடலை தனியாக எடுத்துவைக்கவும். குடல் வேகவில்லை என்றால், மீண்டும் குக்கரில் தண்ணீர் ஊற்றி (தேவையெனில்) வேகவைக்க வேண்டும். குடல் வெந்தது போக மீதம் உள்ள தண்ணீரை நான்-வெஜ் உணவுகள் செய்யப் பயன்படுத்தலாம். வெறும் வாணலியில் கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் முழு மிளகைச் சேர்த்து லேசாக வறுத்து தட்டிவைக்கவும். பொடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வறுத்தால் குடல் வறுவல் மணம் நன்றாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லேசாக தட்டிய சோம்பு, பட்டை, பச்சை மிளகாய், மீதமிருக்கும் கால் டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த குடல் மட்டும் சேர்த்து, 3 நிமிடங்கள் வதக்கி, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பிறகு, தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். குடல் மிளகு வறுவலில் எண்ணெய்க்கேற்ப சுவை கூடும். கொழுப்பு நிறைந்த குடலாக இருந்தால், எண்ணெய் குறைவாகச் சேர்த்தால் போதும்.


குடல் பிரியாணி

தேவையானவை:
 சீரகச் சம்பா அரிசி - 450 கிராம்
 மட்டன் எலும்புத்துண்டுகள் - 250 கிராம்
 குடல் - 250 கிராம்
 பெரிய வெங்காயம் - 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
 சோம்பு - 1 டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - அரை கப்
 புதினா - அரை கப்
 பட்டை - ஒரு பெரிய துண்டு
 கிராம்பு - 5
 ஏலக்காய் - 8
 பிரிஞ்சி இலை - 2
 பிரியாணி பூ - 2
 கடல்பாசி - 2 துண்டுகள்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
 தயிர் - அரை கப்
 தேங்காய்ப்பால் - 1 கப்
 எலுமிச்சை - ஒன்றில் பாதி
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p107b.jpg

ஊற வைக்க:
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 தயிர் - கால் கப்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
குடல் மற்றும் மட்டனை ஒரு பாத்திரத்தில் இட்டு, ஊறவைக்க கொடுத்தவற்றோடு பிசிறி ஊறவைக்கவும். சீரகச் சம்பா அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கடல்பாசி, பிரியாணி பூ சேர்த்து வதக்கவும். அதிகம் வதக்கிவிட வேண்டாம். நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் கீறிய மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி தயிர், கொத்தமல்லித்தழை, புதினா சேர்க்கவும். புதினா இலைகள் சுருங்கியதும் ஊறவைத்த குடலைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து உப்பு போட்டு குக்கரை மூடி 20 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு, குக்கரை திறந்து ஊறவைத்த சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பிறகு திறந்து பரிமாறவும். குடலில் இருந்து வெளிப்படும் கொழுப்பே போதுமானது. தனியே நெய் சேர்க்கவேண்டிய அவசியமில்லை.


குடல் மசால் தோசை

தேவையானவை:
 புளிக்காத தோசை மாவு - 2 கப்
 குடல் மிளகு வறுவல் - 3 டேபிள்ஸ்பூன் (பக்கம் 108-ல் உள்ள ரெசிப்பி பார்க்க)
 நெய்/எண்ணெய் - தேவையான அளவு

p107c.jpg

செய்முறை:
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய்/எண்ணெய் விட்டு, ஒரு பெரிய கரண்டி மாவெடுத்து வட்டமாக ஊற்றவும். அதன்மீது குடல் மிளகு வறுவலை வைத்துப் பரப்பவும். பிறகு, மூடியால் மூடி மிதமான தீயில்  நிமிடங்கள் வேகவிடவும். பிறகு திருப்பிப் போட்டு சுற்றிலும் நெய்/எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுத்து, குடல் குழம்பு அல்லது சால்னாவோடு பரிமாறினால் சுவை அள்ளும்.

குறிப்பு:
குடல் உள்ள பகுதியை அதிகம் வேகவிட வேண்டியதில்லை.


மிளகாய் - வெங்காயம் குடல் வதக்கல்

தேவையானவை:
 குடல் - 100 கிராம்
 பெரிய வெங்காயம் - 2
 பச்சை மிளகாய் - 2
 கறிவேப்பிலை - சிறிது
 மஞ்சள்தூள் - சிறிது
 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p107d.jpg

செய்முறை:
குடலை நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகவிட்டு, எடுத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் வேகவைத்த குடலை இத்துடன் சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்த்து 4 நிமிடங்கள் நன்கு வதங்கியதும் இறக்கி, ரசம் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:
குடலை வதக்கும்போது தீயை மிதமாக்கிக் கொண்டால் குடல் சட்டியில் ஒட்டாது. காரம் அதிகம் வேண்டாம் எனில், பச்சை மிளகாயை குறைத்துக்கொள்ளலாம். காரம் வேண்டும் எனில் மிளகாயை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.


ஸ்பைஸி குடல் மசாலா

தேவையானவை:
 குடல்  - 150 கிராம்
 சின்ன வெங்காயம் - 5
 தக்காளி - 1
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பட்டை - சிறிய துண்டு
 கிராம்பு - 1
 சீரகம் - அரை டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p107e.jpg

செய்முறை:
குடலை சிறிது சுடுநீர் ஊற்றி நன்கு கழுவி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, வெங்காயம், சேர்த்து நிறம் மாற வதக்கி அத்துடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், குடல் சேர்த்து வதக்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேகவிடவும்.

பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து, தண்ணீர் அதிகம் இருந்தால் கிரேவி பதத்துக்கு வற்றவைத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:
குடலில் இருக்கும் கொழுப்பு, கலவையில் பிரிந்து மிதக்கும் என்பதால், எண்ணெயைக் குறைவாகவே சேர்க்கலாம்.


குடல் தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை:
 குடல் - அரை கிலோ
 தேங்காய் - அரை கப் (துருவியது)
 தக்காளி - 1
 சின்ன வெங்காயம் - 15
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் -  3 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 சோம்பு - 1 டீஸ்பூன்
 பட்டை - ஒரு சிறிய துண்டு
 ஏலக்காய் - 3
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 உப்பு, எண்ணெய் - சிறிதளவு

p107f1.jpg

செய்முறை:
தேங்காயை மிக்ஸியில் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, பால் எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தில் ஐந்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மீதம் உள்ள வெங்காயத்தை உரித்து தனியே வைக்கவும். இந்த வெங்காயத்துடன் சீரகம், சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை, நறுக்கிய  வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வதக்கவும். விழுதில் பச்சை வாசனை நீங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும். பிறகு, தேவையான உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் கழுவி வைத்துள்ள குடலைச் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு, தீயை முற்றிலும் குறைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் குடல் வெந்துவிட்டதா என்று பார்த்து, வேகவில்லை என்றால் மீண்டும் சிறு தீயில் வேகவிடவும். வெந்த குடலில் அதிக தண்ணீர் இருந்தால், சிறிது வற்றவிடவும்.

பிறகு, எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை குடலில் ஊற்றி 4 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். அதிகம் கொதிக்க விட வேண்டாம். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். குழம்பு கெட்டியாக வேண்டுமானால் தேங்காய் சிறிதளவு விழுதாக அரைத்து குழம்பில் சேர்க்கலாம்.


குடல் 65

தேவையானவை:
 குடல் - 100 கிராம்
 கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
 சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
 சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 வினிகர் - 1 டீஸ்பூன்
 சோடா உப்பு - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

குடல் வேகவைக்க:
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

p107g.jpg

செய்முறை:
குடலை குக்கரில் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும். வெந்ததும், குடலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். குடல் வேகவில்லை என்றால், கூடுதலாக 5 அல்லது 10 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.

தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சிறிது நீர்விட்டு பேஸ்ட்டாகக் கரைக்கவும். பிறகு, கரைத்தவற்றில் வெந்த குடல் துண்டுகளைப் புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

Link to comment
Share on other sites

பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட்

பட்டாணியில் போலிக் ஆசிட், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம்.

 
 
 
 
பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட்
 
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி - 3/4 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 1/4 கப் (துருவியது)
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

* இப்போது பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!!

* இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

 

மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.

 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்
 
தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் - 20,
கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன்,
கடலை மாவு - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

* நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.
Link to comment
Share on other sites

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். இன்று செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

தேவையான பொருட்கள் :

காளான் - 300 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
சீரகம் - 3/4 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை- 2 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய் - கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை

செய்முறை :

* ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

* சூப்பரான காளான் குழம்பு ரெடி.

* இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.
Link to comment
Share on other sites

 
சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு!
 
 
E_1486716782.jpeg
 

இட்லிக்கு, தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் இட்லி பொடியை மட்டுமே சுவைத்தவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவில், மேல ரதவீதி மற்றும் எஸ்.பி. கோவில் தெருவிலுள்ள, இரவு நேர சாலையோர கடைகளுக்கு சென்றால், இட்லிக்கு தொட்டுக் கொள்ள, சுவைமிகுந்த கத்தரிக்காய் கொத்சை ருசிக்கலாம்.


மிதக்கும் நல்லெண்ணெய்க்கு நடுவே, கடுகு, கறிவேப்பிலை கலந்த மசாலுடன் மிதக்கும் கத்தரிக்காயை பார்த்தாலே, நாவில் நீர் ஊறும். தோசை, சப்பாத்தி, அடை தோசை என, எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பழைய கஞ்சிக்கு ஏற்ற, பொருத்தமான சைடு டிஷ் இது!


சிதம்பரம் நடராஜருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில், கொத்சுவும் உண்டு; சாம்பார் சாதத்தோடு சேர்த்து படைப்பர். அவ்வகையில், சிதம்பரத்தில் இந்த உணவு பிரபலம்.


சிறிதளவு தனியா, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்க வேண்டும்.
நல்லெண்ணெயில் சிறிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, நான்கு துண்டாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காயையும் சேர்த்து, வதக்க வேண்டும். அதில், இடித்து வைத்த பொடி, புளி கரைத்த நீர், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து, வேக விட வேண்டும். நன்கு வெந்து, கத்தரிக்காய் மசிந்து, மசாலாவோடு, சேர்த்து தொக்கு போல இருக்கும். அப்பதத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கினால், மணமணக்கும் கொத்சு தயார்!


தினமும் சட்னி, சாம்பார் செய்ய அலுத்துக் கொள்பவர்கள், கொத்சு செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். புளிச் சேர்ப்பதால் கெட்டுப் போகாது.

Link to comment
Share on other sites

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

 

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள காரசாரமான சட்னி இருந்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
 
தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 10
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 1 பெரியது
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

* பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

* வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்..

* நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

* சுவையான பச்சைமிளகாய் சட்னி ரெடி.

* இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்,
Link to comment
Share on other sites

சூப்பரான மசாலா வடை குழம்பு

வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான மசாலா வடை குழம்பு
 
தேவையான பொருட்கள் :

மசாலா வடை - 10
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்த பின் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்த பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை துவி இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!!

* இந்த குழம்பை சாதம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா 65

 

குழந்தைகளுக்கு சோயா மிகவும் பிடிக்கும். மாலையில் காபியுடன் சாப்பிட சூப்பரான சோயா 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா 65
 
தேவையான பொருட்கள் :

சோயா உருண்டைகள் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 - 2 டீஸ்பூன்
சிக்கன் 65 மசாலா -  3 டீஸ்பூன்
கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.

செய்முறை :

* சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 30 நிமிடம் போட்டு நன்றாக ஊறி பெரிதாக வந்ததும் நன்கு பிழிந்து எடுக்கவும்.


* ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சோளாயை போட்டு அத்துடன் தயிர், சிக்கன் 65 மசாலா, சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்..

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சோயா உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான சோயா 65 ரெடி.

* சூடாகப் பரிமாறவும். ஸ்நாக்ஸ் போலும் சாப்பிடலாம்,
Link to comment
Share on other sites

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை

 

மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

 
 
 
 
சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 1 (1/2 + 1/2)
ப.மிளகாய் - 4
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம்மசாலாதூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

அரைக்க :

தனியா - 1 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 5 பல் பெரியது
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 1/2 (பாதி)

செய்முறை :

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

* சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

* கொத்தமல்லி, பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊற விடவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதிஉள்ள பாதி வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

* அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* சிக்கன் நன்றாக வெந்தவுடன் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான எளிதில் செய்யக்கூடிய ஆந்திரா மசாலா சிக்கன் பிரை ரெடி.

* இதை சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Link to comment
Share on other sites

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

முள்ளங்கியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். முள்ளங்கியை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்லகாம்.

 
 
 
 
உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்
 
தேவையான பொருட்கள் :

முள்ளங்கி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டு - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை :

* முள்ளங்கி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் முள்ளங்கி, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில் மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்து வைத்து வேகவைத்தை நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு வடிகட்டில் வைத்து சூப்பை தனியாக வடிகட்டி கொள்ளவும்.

* அடுப்பில் வடிகட்டிய சூப்பை வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

* கடைசியாக மிளகுதூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சத்தான முள்ளங்கி சூப் ரெடி.
Link to comment
Share on other sites

வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி

வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைக்காயில் பொடிமாஸ் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 1,
தேங்காய் - 3 பல்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
உப்பு - தேவைக்கு,
கடுகு - சிறிது,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

* குக்கரில் வாழைக்காயை தோல் உரிக்காமல் போட்டு வேகவைத்து, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

* தேங்காயை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உதிர்த்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம், வாழைக்காய் நன்றாக சேர்ந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவை, உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.

* கடைசியாக கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* இந்த வாழைக்காய் பொடிமாஸ் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

 

கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு
 
தேவையான பொருட்கள் :

நீளமான கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
மிளகாய் தூய் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூய், தனியா தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!
Link to comment
Share on other sites

காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு

வீட்டிற்கு திடீரென விருந்தாளி வந்து விட்டால் இந்த பொரிச்ச குழம்பை விரைவில் செய்து அசத்தலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு
 
தேவையான பொருட்கள் :

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், புடலங்காய், உருளைக்கிழங்கு) - 1/4 கிலோ,
பாசிப்பருப்பு - 1 கப்,
புளி - சிறிது,
மஞ்சள் தூள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

அரைக்க...

உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3

BCC71A9E-68CF-444B-9889-42CE0CA8C8C3_L_s

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வேகவைத்து கடைந்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.

* காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் கடைந்த பருப்பை ஊற்றவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, உப்பு, புளிக்கரைசல் ஊற்றவும்.

* எல்லாம் சேர்ந்து வரும் போது அரைத்த பொடியை 2 அல்லது 3 டீஸ்பூன் போடவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து காய்கறிகள் கலவையில் கொட்டி கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
Link to comment
Share on other sites

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை
 
தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
சின்னவெங்காயம் - 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

மீனை ஊற வைப்பதற்கு:

எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

81278383-D68B-43B4-833E-B992092C8E93_L_s

செய்முறை :

* சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

* மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும்.

* மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.
Link to comment
Share on other sites

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்து நிறைந்த கொள்ளு கார அடை
 
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 2 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க...

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு.

6AEFDD72-EF49-4EAA-986B-D29C87DD6C51_L_s

செய்முறை :

* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை
 
தேவையான பொருட்கள் :

பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

0ECF54C2-3B74-449D-A96E-75CFF291AA56_L_s

செய்முறை :

* இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

* மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.
Link to comment
Share on other sites

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்
 
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 200 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் - 10,
தயிர் - கால் கப்,
தண்ணீர் - தேவையான அளவு.

7D8ED113-0EFA-49C6-9940-45110CE133CA_L_s

செய்முறை:

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

* தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

* பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் கடலைவடையில் கடலைப்பருப்பும் சேர்த்தது விட்டிர்கள், இல்லையெனில் கடலைவடை  கஞ்சி வடையாய் போயிருக்கும்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்
 
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 200 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் - 10,
தயிர் - கால் கப்,
தண்ணீர் - தேவையான அளவு.

7D8ED113-0EFA-49C6-9940-45110CE133CA_L_s

செய்முறை:

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

* தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

* பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.

இந்த கூழ் எப்படி வெள்ளை நிறத்திலிருக்குது?

Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா
 
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3
புதினா - சிறிதளவு
முழு முந்திரி - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் -  பொரிப்பதற்கு தேவையான அளவு.

F82F739F-1A81-4235-87D3-45E103BEB806_L_s

செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* புதினாவை அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, .ப.மிளகாய், புதினா விழுது, முந்திரி, உப்பு சேர்த்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்’மில் வைத்து, பிசைந்து வைத்த மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

* சூப்பரான முந்திரி பக்கோடா ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா
 
தேவையான பொருட்கள் :

காளான் - அரை கிலோ
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
பட்டை - ஒன்று
லவங்கம் - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
கறிவேப்பில்லை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

924264E8-5368-46AB-AB12-6C84684EF03F_L_s

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.

* பிறகு அதில் காளான் சேர்த்து வதக்கவும். காளான் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

* காளான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* சூப்பரான சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.
Link to comment
Share on other sites

மசாலா ஆம்லெட்

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
மசாலா ஆம்லெட்
 
தேவையான பொருட்கள்:

முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - சிறிதளவு
நறுக்கப்பட்ட மிளகாய் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 2 சிறிதளவு
கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 1 முதல் 2 தேக்கரண்டி
உப்பு - சிறிது


செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி இலை முதலியவற்றை வெட்டி வைக்கவும்.

* ஒரு சிறிய கிண்ணத்தில், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மசாலா விழுது சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* வெட்டி வைத்த அனைத்தையும் இவற்றுடன் சேர்த்து கலந்து, கடாயில் எண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

* சுவையான மசாலா ஆம்லெட் தயார்.
Link to comment
Share on other sites

கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா

 

டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கோதுமையில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா
 
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 15
கேரட், பட்டாணி, பீன்ஸ் - மூன்றும் சேர்த்து 150 கிராம்,
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2,
கடலைப் பருப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
கொத்தமல்லி - சிறிதளவு

8D200316-6C6C-4A5D-BB29-4F4488DE45D1_L_s

செய்முறை :

* பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கிளறி வைக்கவும்.

* காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

* காய்கறிகள் வெந்தவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

* வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

* சூப்பரான கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா ரெடி.
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.