Jump to content

Recommended Posts

Posted

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

 

 

 

சோயா சங்ஸ் கிரேவி

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - ஒரு கப்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்),    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 ,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  தேங்காய்த் துருவல் - 3  டேபிள்ஸ்பூன்  பாதாம் - 6.

2_1529923066.jpg

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கிச் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா ஸ்டப்ஃடு சப்பாத்தி

தேவை- மேல் மாவு செய்ய:  கோதுமை மாவு - ஒரு கப்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

ஸ்டஃபிங் செய்ய:  சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 15,   உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), கொத்தமல்லித்தழை - 2  டேபிள்ஸ்பூன்,   மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,   இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

3_1529923079.jpg

செய்முறை: கோதுமை மாவுடன் எண்ணெய் உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசி வடியவிட்டு,  மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சோயா, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்த கோதுமை மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். நடுவே சிறிதளவு சோயா கலவையை வைத்துப் பரப்பி, மூடி மீண்டும் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


சோயா பீன்ஸ் பருப்பு உசிலி

தேவை:      பொடியாக நறுக்கிய பீன்ஸ் - ஒரு கப்,   காய்ந்த சோயா பயறு, துவரம்பருப்பு - தலா அரை கப்,   காய்ந்த மிளகாய் - 4,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   கறிவேப்பிலை - தேவையான அளவு,   கடுகு - ஒரு டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

4_1529923091.jpg

செய்முறை:     காய்ந்த சோயாவுடன் துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். பீன்ஸையும், அரைத்த பருப்புக் கலவையையும் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த பருப்பை ஆறியதும் உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உதிர்த்த பருப்பு, வேகவைத்த பீன்ஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


சோயா அடை

தேவை:      பச்சரிசி, இட்லி அரிசி - தலா அரை கப்,   கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா கால் கப்,   பாசிப்பருப்பு  - 2 டேபிள்ஸ்பூன்,   காய்ந்த மிளகாய் - 6,   பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,   தேங்காய்த் துருவல் - கால் கப்,   கறிவேப்பிலை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

5_1529923107.jpg

செய்முறை:    அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


சோயா பெசரட்

தேவை:      காய்ந்த சோயா, முளைகட்டிய பச்சைப் பயறு - தலா அரை கப்,   பச்சரிசி - கால் கப்,   பச்சை மிளகாய் - 3,   தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,   நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,   கேரட் துருவல் - தேவையான  அளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

6_1529923123.jpg

செய்முறை:     சோயாவை 4 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சோயாவுடன் அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிதளவு கேரட் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


சோயா பருப்பு வடை

தேவை:      காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப்,   காய்ந்த மிளகாய் - 4,   சோம்பு - ஒரு டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

7_1529923139.jpg

செய்முறை:      சோயாவுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


சோயா தால்

தேவை:      சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப்,   சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,   பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்),   கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   நெய் - ஒரு டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

8_1529923161.jpg

செய்முறை:    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில்  சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். குக்கரில் சோயா உருண்டைகள், முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, சீரகம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த சோயா கலவை, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா கட்லெட்

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்),   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
 கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   பிரெட் தூள் - கால் கப்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

9_1529923177.jpg

செய்முறை:    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். அதனுடன் சோயா கலவையைச் சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும்.  ஆறியவுடன்  சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, விருப்பமான வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு கட்லெட்டுகளை வைத்து, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


சோயா கார சப்பாத்தி

தேவை:      கோதுமை மாவு, சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்),   அரைத்த விழுது - தலா அரை கப் ,  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

10_1529923192.jpg

செய்முறை:    கோதுமை மாவுடன் அரைத்த சோயா விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். அரை மணி நேரம் கழித்து, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி,  சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


சில்லி சோயா

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன்,   இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,   கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தக்காளி, குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

11_1529923210.jpg

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துத் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். இதனுடன் தக்காளி விழுது, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பிசிறிய சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா பெப்பர் ஃப்ரை

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   கறிவேப்பிலை - சிறிதளவு,   கடுகு - ஒரு டீஸ்பூன்,   மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.  

12_1529923226.jpg

அரைக்க:      தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  பச்சை மிளகாய் - ஒன்று  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  முந்திரி - 6.

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.  பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, நறுக்கிய சோயா உருண்டைகள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.


சோயா லட்டு

தேவை:      சோயா மாவு - ஒரு கப்,   வெல்லத்தூள் - முக்கால் கப்,   குளுக்கோஸ் பவுடர், பால் பவுடர் - தலா கால் கப்,   நெய் - தேவையான அளவு,   முந்திரி - 10,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

13_1529923242.jpg

செய்முறை:     வெறும் வாணலியில் சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.  சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்தெடுக்கவும். சோயா மாவுடன் வெல்லத்தூள்,  குளுக்கோஸ் பவுடர், பால் பவுடர், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவுக் கலவையில் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.


சோயா ஸ்டஃப்டு பூரி

தேவை: மேல் மாவு செய்ய:   கோதுமை மாவு - ஒரு கப்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

ஸ்டஃபிங் செய்ய:  சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 15,   உருளைக் கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்),   கொத்தமல்லித்தழை - 2  டேபிள்ஸ்பூன்,   மிளகாய்த்தூள், இஞ்சி விழுது - தலா அரை டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

14_1529923267.jpg

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா  உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கு, சோயா உருண்டைகள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதுவே ஸ்டஃபிங். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும். அதன் நடுவே சிறிதளவு சோயா கலவையைப் பரப்பி, மூடி மீண்டும் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, திரட்டிய பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


சோயா பர்ஃபி

தேவை:      சோயா மாவு - ஒரு கப்,   பொடித்த வெல்லம் - ஒன்றரை கப்,   நெய் - அரை கப்,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,   முந்திரி - 10,   வறுத்த பாசிப்பருப்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன்.

15_1529923286.jpg

செய்முறை:     அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் சோயா மாவைச் சேர்த்து வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி நன்கு கரைந்ததும் வடிகட்டவும். அதனுடன் வறுத்த மாவு சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும். கலவைப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது பாசிப்பருப்பு மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


சோயா பாயசம்

தேவை:      சோயா மாவு - அரை கப் ,  காய்ச்சி ஆறவைத்த பால் - 3 கப்  , பொடித்த வெல்லம் - ஒரு கப் ,  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   முந்திரி - 6,   திராட்சை - 6,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

16_1529923303.jpg

செய்முறை:     வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதனுடன் 2 கப் பாலை ஊற்றி,  அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவிடவும். மாவு வெந்ததும் வெல்லக் கரைசல், மீதமுள்ள பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.


சோயா பாலக் கிரேவி

தேவை:       சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   பாலக்கீரை - ஒரு கட்டு,   வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,   பூண்டு - 10 பல்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

17_1529923319.jpg

செய்முறை:    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.   பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுச் சூடாக்கி, கொதிக்கும்போது பாலக்கீரையைச் சேர்த்து மூடி இறக்கவும். ஆறியதும் இலைகளை மட்டும் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், அரைத்த பாலக்கீரை விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.


சோயா குணுக்கு

தேவை:      இட்லி மாவு - ஒரு கப்,   சோயா சங்ஸ் (பவுடராக அரைத்தது) - ஒரு கப்,   பச்சை மிளகாய் - 4  (பொடியாக நறுக்கவும்),   தோல் சீவி, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு, 
 பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

18_1529923335.jpg

செய்முறை:    இட்லி மாவுடன் அரைத்த சோயா பொடி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவைக் கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.


சோயா அவியல்

தேவை:      உரித்த சோயா பீன்ஸ் - அரை கப்,   கேரட், வாழைக்காய், முருங்கைக்காய் - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),   புளிக்காத தயிர் - ஒரு கப்,   ஓமம் - ஒரு டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் ,  கறிவேப்பிலை - சிறிதளவு,   தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      தேங்காய்த் துருவல் - கால் கப்  பச்சை மிளகாய் - 2  சீரகம் - ஒரு டீஸ்பூன்.

19_1529923350.jpg

செய்முறை:     அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு  விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன்  சோயா பீன்ஸ் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் கேரட் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து, முருங்கைக்காய் சேர்க்கவும். பிறகு 2 நிமிடங்கள் கழித்து வாழைக்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது, தயிர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே ஓமம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும். தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பரிமாறலாம்.


சோயா பயறு பூசணி விதை இட்லி மிளகாய்ப் பொடி

தேவை:      காய்ந்த சோயா பயறு - அரை கப்,   பூசணி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்,   காய்ந்த மிளகாய் - 15,   உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,   பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,   எண்ணெய் - 2 டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

20_1529923366.jpg

செய்முறை: வாணலியில்  எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மிளகாயை வறுத்தெடுக்கவும்.  பிறகு சோயா, பூசணி விதை, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் வறுத்த பொருள்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து பவுடராக அரைத்தெடுக்கவும்.


சோயா வடகறி

தேவை:  காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப்,   காய்ந்த மிளகாய் - 4 ,  சோம்பு - ஒரு டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   சோயா உருண்டைகள் - 20 ,  சீரகம் - ஒரு டீஸ்பூன்,   குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  தேங்காய்த் துருவல் - கால் கப்  பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்  முந்திரி - 10  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு.

21_1529923381.jpg

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா  உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். சோயா பயறுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்க
வும். அதனுடன் காய்ந்த  மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், அரைத்த விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும்.  அதனுடன் வடைத் துண்டுகள், சோயா உருண்டைகள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா பீன்ஸ் கூட்டு

தேவை:      சோயா பீன்ஸ் (உரித்தது) - ஒரு கப்,   வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      தேங்காய்த் துருவல் - கால் கப்,   பச்சை மிளகாய் - 2,   சீரகம், பூசணி விதை - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:       கடுகு - ஒரு டீஸ்பூன்,   உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,   காய்ந்த மிளகாய் - 2,   கறிவேப்பிலை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய் - 2 டீஸ்பூன்.

22_1529923401.jpg

செய்முறை:    அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் சோயா பீன்ஸுடன் 2 கப் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து, சோயாவுடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கூட்டுடன் கலந்து பரிமாறவும்.


சோயா உருண்டை புலாவ்

தேவை:       பாசுமதி அரிசி - ஒரு கப்  சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   பிரியாணி இலை - ஒன்று,   வெங்காயம், தக்காளி, கேரட் - தலா ஒன்று,   இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,   மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,   மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன்,   கொத்தமல்லித்
தழை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

23_1529923433.jpg

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட், பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள், அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா இட்லி

தேவை:      இட்லி அரிசி - 2 கப்,   உளுத்தம்பருப்பு - கால் கப்,   காய்ந்த சோயா - கால் கப்,   வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

24_1529923448.jpg

செய்முறை:     அரிசியைத் தனியாகவும், உளுத்தம்பருப்பு, சோயா, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித்தனியாக அரைத்தெடுக்கவும். மாவுகளை  ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டுக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். மறுநாள் மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


சோயா அல்வா

தேவை:      சோயா மாவு – ஒரு கப்,   பொடித்த வெல்லம் - முக்கால் கப்,   நெய் – அரை  கப்,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ,  முந்திரி – 6.

25_1529923465.jpg

செய்முறை:     வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். அடிகனமான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். மேலே வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


சோயா ஓட்ஸ் பான் கேக்

தேவை:       சோயா மாவு, ஓட்ஸ் மாவு - தலா அரை கப்,   கோதுமை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,   பொடித்த வெல்லம் - முக்கால் கப்,   கனிந்த வாழைப்பழம் - ஒன்று,   முந்திரி -10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்),  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,   பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன் ,  தேங்காய்த் துருவல் -  2 டேபிள்ஸ்பூன்,   நெய் - தேவையான அளவு.

26_1529923483.jpg

செய்முறை:     வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில்  சோயா மாவுடன், ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், முந்திரி, ஏலக்காய்த்தூள், பால் பவுடர், தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் சேர்த்து, கெட்டியாகக் கரைக்கவும் (தோசை மாவு பதத்தைவிடக் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்).   தோசைக்கல்லைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைக் கரண்டியில் எடுத்துச் சற்று கனமாக ஊற்றி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


சோயா சன்னா மசாலா

தேவை:       சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப்,   தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்),  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் ,  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   புளிக்கரைசல் - அரை கப்,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

27_1529923500.jpg

செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில்  சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய்,  ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சோயா உருண்டைகள், வேகவைத்த கொண்டைக்கடலை, உப்பு, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும் (நீர்க்க இருந்தால் சிறிதளவு கொண்டைக்கடலையை மிக்ஸியில் அரைத்தும் சேர்க்கலாம்). மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா வெஜ் குருமா

தேவை:       சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்),   பீன்ஸ் – 10,   வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு – தேவையான அளவு.  கொத்தமல்லித் தழை - சிறிதளவு,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு ,  பிரியாணி இலை - ஒன்று.

28_1529923519.jpg

அரைக்க:  தேங்காய்த் துருவல் - கால் கப்  முந்திரி – 5  பச்சை மிளகாய் – 2  பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு  அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா மட்டர் கிரேவி

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) 20,   பச்சைப் பட்டாணி - ஒரு கப்,   வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்),   இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   கொத்தமல்லித்
தழை - சிறிதளவு,   எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

29_1529923582.jpg

செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில்  சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பச்சைப் பட்டாணியை வேகவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோயா உருண்டைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி  தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே எண்ணெயில் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மேலும் வதக்கவும். பிறகு சோயா உருண்டைகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


சோயா பக்கோடா

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20,   கடலை மாவு - அரை கப்,   வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) ,  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),   தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,   கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30_1529923539.jpg

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.


சோயா புளிக்குழம்பு

தேவை:       சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20,   சின்ன வெங்காயம் – 15 (தோல் உரிக்கவும்),   பூண்டு – 10,   கறிவேப்பிலை – சிறிதளவு,   தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்),   பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்),   சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்,   புளி – எலுமிச்சை அளவு,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:       வெந்தயம், மிளகு – தலா 5  கடுகு - ஒரு டீஸ்பூன்  சீரகம், ஓமம் – தலா அரை டீஸ்பூன்  பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய் - தேவையான அளவு.

31_1529923604.jpg

செய்முறை:     புளியைக் கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வெந்தயம், மிளகு, கடுகு தாளிக்கவும். அதனுடன் சீரகம், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி,  மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, புளிக்கரைசல், சோயா உருண்டைகள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி கொதிக்கவிடவும்.  எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கவும். 


குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்த..!

`பசி எடுக்கும்போது வயிற்றை நிரப்பத் தேவைப்படுவது உணவு’ என்கிற எளிய எண்ணத்தை மீறி, உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன, அவை நம் உடல் இயக்கத்துக்கு எவ்வாறு பயன்படுகின்றன, எத்தகைய உணவுகள் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் போன்ற கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களின் அடிப்படையில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் போக்கு, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

32_1529923618.jpg

உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது புரதம். இது இறைச்சியில் அதிகம் உள்ளது. சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாவில்தான் புரதம் மிக அதிக அளவில் இருக்கிறது.  அத்துடன் கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்படப் பல்வேறு சத்துகளும் உள்ளன. இத்தகைய தனிச்சிறப்புமிக்க சோயாவில் இட்லி, சப்பாத்தி, கிரேவி, வடை, பாயசம், லட்டு, புலாவ், பான்கேக் என விதவிதமான ரெசிப்பிகளை இங்கே வழங்கும் மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் பிருந்தா இரமணி, ``அளப்பரிய பெருமைகள் கொண்ட சோயாவில், சுவையான சத்துமிக்க ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறி, குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்துங்கள்’’ என்று அன்புடனும், அக்கறையுடனும் கூறுகிறார்.

https://www.vikatan.com

https://www.vikatan.com

Posted

செம்ம டேஸ்டி பூண்டு சட்னி

 

 
garlic

தேவையான பொருள்கள்:

தக்காளி-10
உரித்தப் பூண்டு-100 கிராம்
காய்ந்த மிளகாய்-2
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: முதலில் மிக்ஸியில் பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்.

பின்னர், அரைத்த விழுதை ஊற்றி சுமார் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.

சுவையான பூண்டு சட்னி ரெடி.

http://www.dinamani.com

Posted

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்

 
அ-அ+

குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
 
சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல்
 
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெதுவெதுப்பான தண்ணீர்,
உப்பு - தேவைக்கு.
இறால் -  200 கிராம்,
சீஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
பெங்களூர் தக்காளி - 1,
குடைமிளகாய் - 1/4 கப்,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

201806301017561084_1_chapati-prawn-cheese-roll._L_styvpf.jpg

செய்முறை

கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

https://www.maalaimalar.com

Posted

உடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம்

 
அ-அ+

உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
உடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம்
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 4 டம்ளர்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

ரசப் பொடி செய்ய :

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பூண்டு - 2

தாளிக்க :

கடுகு,
உளுத்தம் பருப்பு,
வரமிளகாய் - 1,
கறிவேப்பிலை



செய்முறை :

சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.

இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.

இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.

https://www.maalaimalar.com

Posted

சாதத்திற்கு அருமையான மலபார் முட்டை கறி

 
அ-அ+

தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மலபார் முட்டை கறி. இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சாதத்திற்கு அருமையான மலபார் முட்டை கறி
 
தேவையான பொருட்கள்

முட்டை - 6,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
தக்காளி - 2,
ப. மிளகாய் - 4,
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி,
கரம் மசாலா - அரை தேக்கரண்டி,
முதல் தேங்காய் பால் - ஒரு கப்,
இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

201807031504029943_1_malabar-egg-curry-coconut-milk._L_styvpf.jpg

செய்முறை :

முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.

சுவையான மலபார் முட்டை கறி தயார்.

https://www.maalaimalar.com/

Posted

நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

 
அ-அ+

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
 
தேவையான பொருட்கள் :      

நாரத்தங்காய் - 3,  
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,  
காய்ந்த மிளகாய் - 8,  
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

201807051146261887_1_citron-pickle._L_styvpf.jpg

செய்முறை :     

நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.

வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும்.

இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும்.

வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.

https://www.maalaimalar.com/

Posted

கீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி!

 

 

 

தினம்தோறும் நம் சமையலில் முடிந்த வரை காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்க்க முயல்கிறோம். இருப்பினும் குழந்தைகளைத் தினமும் கீரை மற்றும் காய்கறிகள் சாப்பிட வைப்பது அவ்வளவு எளிதல்ல. இவற்றைச் சப்பாத்தியுடன் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனதைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், உடம்புக்கும் ஆரோக்கியத்தை அளிக்க முடியும்.

கோதுமையுடன் காய்கறிகள், கீரைகள், சோயா, ஓட்ஸ் சேர்த்துச் செய்யும் சப்பாத்திகள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகின்றன. மேலும், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து இருப்பதுடன் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன சென்ற இதழ் `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் நாம் கோதுமையில் இருந்து பேஸிக் மாவு தயாரித்து அதை உபயோகித்து விதவிதமான சப்பாத்தி மற்றும் ரொட்டிகள் தயாரிப்பது எப்படி என்று பார்த்தோம். இந்த இதழில் கீரைகள், காய்கறிகளைச் சேர்த்து சூப்பர் சுவையுடன் பல்வேறு வகையிலான சப்பாத்தி மற்றும் தேப்லாக்களை எளிதாகத் தயாரிப்பது பற்றி அறிவோம். நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வோம்.

p68f_1529664025.jpg

மேத்தி தேப்லா, சோயா - மேத்தி தேப்லா, ஓட்ஸ் - மேத்தி தேப்லா: வெல்லத்தைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ள வும். வெந்தயக்கீரையை ஆய்ந்து, நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மூலி தேப்லா: துருவிய முள்ளங்கியில் இருந்து தண்ணீரைப் பிழிந்துகொள்ளவும். பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும்.

p68c_1529663808.jpg

மூலி தேப்லா வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

 

தூதி தேப்லா: துருவிய சுரைக்காயுடன் உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக்கொள்ளவும்.

முட்டைகோஸ் தேப்லா: முட்டைகோஸை கேரட் துருவியில் பொடியாகத் துருவிக் கொள்ளவும்.

பப்பாளிக்காய் தேப்லா: தோல் மற்றும் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும்.

கத்து (Kaddu) பாலக் தேப்லா: துருவிய பறங்கிக்காய், பாலக் கீரையை அரிந்து நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கரேலா தேப்லா: பாகற்காய்த் தோலைத் துருவி, உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக்கொள்ளவும். பத்து நிமிடங்கள் கழித்துப் பாகற்காயில் இருந்துவரும் தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். இப்படிச் செய்வதன் மூலம் பாகற்காயில் இருக்கும் கசப்பு போய்விடும்.

வெங்காயச் சப்பாத்தி: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக்கொள்ளவும்.

p68e_1529663977.jpg

கேரட் வெங்காயம் சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

p68ee_1529663987.jpg

சோயா தால் சப்பாத்தி: பருப்பை மலர வேக வைத்துக்கொள்ளவும்.

கீரை சப்பாத்தி : ஏதாவது ஒரு வகை கீரையை உபயோகித்து சப்பாத்தி செய்யவும். கீரையை நறுக்கி, நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்கீரை / சிறுகீரை / முளைக்கீரை / வல்லாரைக்கீரை / மணத்தக்காளிக்கீரை: நறுக்கிய கீரையை மாவு மற்றும் இதர பொருள்களுடன் சேர்க்கவும்.

பசலைக்கீரை / முடக்கத்தான் கீரை/ பொன்னாங்கண்ணிக்கீரை/ அகத்திக்கீரை / முருங்கைக்கீரை / தூதுவளை / முள்ளங்கிக்கீரை: வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சற்று சூடு ஏறியதும் நறுக்கிவைத்துள்ள கீரையைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சீரகத்தூள், ஓமம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துச் சற்று வதக்கி இறக்கி ஆறவிடவும்.

p68d_1529663852.jpg

பொன்னாங்கண்ணி கீரை சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

p68dd_1529663861.jpg

சோயா - புதினா - சதகுப்பி சப்பாத்தி, ஓட்ஸ் - சதகுப்பி சப்பாத்தி: சதகுப்பி கீரையை ஆய்ந்து  நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலி யில் சிறிது எண்ணெய் ஊற்றி, சற்றுச் சூடு ஏறியதும் நறுக்கிவைத்துள்ள கீரையைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சீரகத்தூள், ஓமம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, சற்று வதக்கி இறக்கி ஆறவிடவும்.

p68a_1529663751.jpg

ஓட்ஸ் சதகுப்பி சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

p68aa_1529663772.jpg

ஆலு சப்பாத்தி: உருளைக் கிழங்கைத் தோல் உரித்து, உப்பு சேர்த்த தண்ணீரில் குழைய வேகவைத்துக்கொள்ளவும்.

p68ff_1529664059.jpg

உருளைக்கிழங்கு சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

பீட்ரூட் சப்பாத்தி: துருவிய பீட்ரூட் மற்றும் வெங்காயத்துடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும்.

p68b_1529663678.jpg

கான்டினென்டல் சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

p68bb_1529663689.jpg

கான்டினென்டல் சப்பாத்தி: காய்கறிகளை நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

சோயா - மேத்தி - கார்லிக் நான் / கார்லிக் நான்: வெந்தயக்கீரையை ஆய்ந்து, நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மாவைப் பிசையும்போது பூண்டு சேர்க்க வேண்டாம். ஓர் உருண்டை கோதுமை மாவைச் சற்று கனமான நாண்களாக இடவும். ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டை நாண் மேல் தூவி லேசாக அழுத்தி விடவும். நாணின் பின்புறம் தண்ணீர் தடவி, ஈரமான பக்கத்தை நன்கு சூடான தோசைக்கல்லில் போட்டு லேசாக அழுத்தி வேக வைக்கவும். மேல்பக்கம் லேசாக வெந்ததும் தவாவைத் திருப்பி ரொட்டியை நேரடியாக தீயில் காட்டி வேக வைக்கவும். மீண்டும் தவாவை அடுப்பில் வைத்து கீழ் பாகத்தை நான்கு வேக வைத்து பரிமாறவும்.

பட்டாணி சப்பாத்தி: வேகவைத்த பட்டாணி மற்றும் பச்சை மிளகாயைக் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பொங்கல் சப்பாத்தி: பொங்கலை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.

பருப்புக்கீரை சப்பாத்தி: மாவில் தண்ணீர் தேவைப்பட்டால் மட்டுமே ஊற்றவும்.

உப்புமா சப்பாத்தி: உப்புமாவை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சப்பாத்தி: சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தோல் உரித்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்த தண்ணீரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும்.

பனீர் சப்பாத்தி: திரண்ட பாலை வடிகட்டி அரை மணி நேரம் துணியில் கட்டித் தொங்கவிடவும். வடிகட்டிய தண்ணீரைத் தனியாக எடுத்துவைத்து, மாவு பிசையும்போது இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தவும்.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துப் பிசறிக்கொள்ளவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைத்து ஊறவிடவும். பிறகு, சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து மைதா அல்லது கோதுமை மாவில் தொட்டுக்கொண்டு ஆறு அங்குலம் அகலம் உள்ள மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு லேசாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய்விடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் சூடாகப் பரிமாறவும். ஸ்கூல் மற்றும் ஆபீஸ் லஞ்ச் பாக்ஸிலும் கொடுத்துவிடலாம்.

பொதுவாக இந்த வகைச் சப்பாத்தி மற்றும் தேப்லாவுக்குத் தனியாக சைடிஷ் எதுவும் தேவைப்படுவதில்லை. தயிர், தயிர்ப் பச்சடி, மாங்காய் சுண்டா, நெல்லிக்காய் சுண்டா, மாங்காய்த் தொக்கு, தக்காளித் தொக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் பரிமாறலாம்.

p70a_1529664100.jpg

p70b_1529664109.jpg

p70c_1529664119.jpg

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தேப்லா வகைகளைப் பொதுவாக 15 நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவையானபோது தோசைக் கல்லில் சூடுபடுத்திச் சாப்பிடலாம்.

குறிப்பு: உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கும் காய்கறிகள் தண்ணீர்விட்டுக்கொள்ளும். இந்தத் தண்ணீருடன் காய்கறிகளைக் கோதுமை மாவில் சேர்க்கவும். மேலும் தண்ணீர் சேர்ப்பதற்கு முன்னர், மாவில் சேர்த்திருக்கும் அனைத்துப் பொருள்களையும் நன்கு அழுத்திப் பிசிறவும். இவ்வாறு செய்யும்போது காய்கறி மற்றும் கீரைகளில் இருந்து மேலும் தண்ணீர் கசிந்து வரும் வாய்ப்பு உள்ளது. பிறகு, தேவைப்படும் தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கெட்டியான மாவாகப் பிசையவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு, மாவில் சேர்த்திருக்கும் காய்கறிகள், கீரைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் கசியலாம். அதனால் கெட்டியாகப் பிசைந்து வைத்து இருக்கும் மாவு சற்றுத் தளர்த்தியாகி இருக்கும். கையில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு மீண்டும் மாவைப் பிசைந்து உபயோகிக்கவும்.

சப்பாத்தி, பராத்தா மற்றும் தேப்லாவைப் பதப்படுத்தும் முறை: ஓர் உருண்டையை எடுத்து மைதா அல்லது கோதுமை மாவில் தொட்டுக்கொண்டு ஆறு அங்குலம் அகலம் உள்ள மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு லேசாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிதளவு எண்ணெய்விட்டு லேசாக வேகவைக்கவும். இரண்டு புறமும் பாதி வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும். பட்டர் பேப்பரை ஆறு அங்குலம் அகலம் உள்ள சதுரத் துண்டுகளாகக் கிழித்து வைத்துக்கொள்ளவும். ஆறிய சப்பாத்தி ஒன்று பட்டர் பேப்பர் ஒன்றும் என மாறி மாறி அடுக்கவும். ஒரு வேளை சாப்பாட்டுக்குத் தேவையான அளவு சப்பாத்தி அடுக்கை ஒரு `ஜிப்லாக்' பையில் வைத்து, காற்றை நன்கு வெளியே தள்ளிவிட்டு, பையைச் சீல் செய்யவும். பையின் மேல், உள்ளே வைத்திருக்கும் சப்பாத்தி, பராத்தா, தேப்லாவின் பெயர் மற்றும் அதைச் செய்த தினம் ஆகியவற்றை எழுதவும். இப்போது இந்தப் பையை ஃப்ரீஸ் செய்யவும். இப்படி ஃப்ரீஸ் செய்த சப்பாத்தி, தேப்லா, பராத்தாக்களை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

ஃப்ரீஸ் செய்த சப்பாத்தி, தேப்லா, பராத்தாக்களைத் தேவையானபோது எடுத்து பத்து நிமிடங்கள் வெளியே வைக்கவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டுச் சூடான தோசைக்கல்லில் போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் பரிமாறவும்.

https://www.vikatan.com

Posted

அதென்ன புடலங்காய் விதை சட்னி? ருசிக்கலாமா?

 

 
images_(2)

 

தேவையான பொருள்கள்:
புடலங்காய் உள்ளே உள்ள விதை - 2 கிண்ணம்
வெங்காயம் பெரியது - 2
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

snake_gourd_chutney.jpg


செய்முறை: முதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு போன்று உள்ளதை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், புடலங்காய் விதை இவைகளை நன்கு வதக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுதைச் சேர்க்கவும்.

நன்கு கொதித்த பின் உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான புடலங்காய் விதை சட்னி ரெடி.

http://www.dinamani.com

Posted

முருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ பலன்களா!

 

 
Murungai_Keerai

ஓர் அவுன்ஸ் முருங்கைக்கீரையின் சாற்றில் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து படுக்கைக்குப் போகும் முன் சாப்பிட வயிற்றிலுள்ள எல்லாவிதமான பூச்சிகளையும் வெளியேற்றும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இக்கீரையின் சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது இரத்தத்தோடு சேரும் கொழுப்பையும் குறைக்கும்.

இக்கீரையின் சாற்றோடு தேனும், சுண்ணாம்பும் சேர்த்துத் தொண்டையில் தடவ, குரல்கம்மல், இருமல், நாவறட்சி நீங்கும்.

இலையை மட்டும் சுத்தமாக அரைத்துப் பிழிந்து இச்சாற்றை கண்களில் விட்டுக்கொண்டால் மெட்ராஸ் ஐ என்று சொல்லும் கண்வலி குணமாகும்.

keerai_drumstick.jpg

குழந்தை பிறந்து பால்சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைப் பிஞ்சை, மிளகுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும்.

முருங்கைக்கீரையின் சாற்றுடன், உப்பு மற்றும் வசம்புத் தூளையும் சேர்த்து குழைத்து வயிற்றின் மேல் பற்றாகப் போட வயிற்று வலியுடன் கூடிய உப்பிசம் சரியாகும்.

keerai.jpg

முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான கண்வலி, கண்எரிச்சல், கண்களிலிருந்து நீர்வடிதல் போன்றவை குணமாகும். பார்வை மங்கல் மற்றும் மாலைக்கண் நோய் குறையிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

முருங்கைக்கீரையை ஆய்ந்து மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கைக்கால் அசதி, உடல்வலி நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

உதிரப்போக்கைக் கட்டுப்படுத்த முருங்கைப்பிஞ்சை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

http://www.dinamani.com

Posted

சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட்

 
அ-அ+

வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் வைட்டமினும் நார்ச்சத்தும் கிடைக்கும். இந்த ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட்
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 3,
துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை - கால் கப்,
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
சீரகத்தூள் -கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை பொடி - 2 டீஸ்பூன்,
பால் - 2 டீஸ்பூன்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

201807111208332870_1_egg-vegetable-omelet-1._L_styvpf.jpg

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், சீரகத்துள், முட்டை, பொட்டுக்கடலை, பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் நெய் விடவும்.

ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.

வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

https://www.maalaimalar.com

Posted

 

வாழை இலை ஃபிஷ் ஃப்ரை

 

என்னென்ன தேவை?

மீனை பொரிக்க...

நெய் மீன் அல்லது வஞ்ஜர மீன் - 200 கிராம்,
லெமன் ஜூஸ் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

கிரேவி செய்ய...

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1/2 கப்,
டொமேட்டோ சாஸ் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2½ டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

வாழை இலையில் வைத்து மடிக்க...

பெரிய வாழை இலை - 1,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது.
20.jpg

 
எப்படிச் செய்வது?


மீன் பொரிக்க கொடுத்த பொருட்களை கலந்து மீனில் பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொறித்தெடுக்கவும். மொறு  மொறுவென்று பொரிக்கத் தேவையில்லை. கிரேவிக்கு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம்,  தக்காளி சேர்த்து வதக்கி டொமேட்டோ சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும்  இறக்கவும்.

வாழை இலையை தீயில் வாட்டிக் கொள்ளவும். பின் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கிரேவியை வைத்து அதன் மேல் மீனை  வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையை நன்றாக மடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு  வாழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி போட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்.

http://www.kungumam.co.in/

Posted

தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்

 
அ-அ+

வெங்காய ஊறுகாய் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - கால் கிலோ,
காய்ந்த மிளகாய் - பத்து,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 100 மில்லி,
பெருங்காயம் - தேவையான அளவு,
வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
கடுகு - அரை டீஸ்பூன்.

201807141130184257_1_onion-pickle._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கால் டீஸ்பூன் கடுகை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

மிக்ஸியில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

ஊறுகாய் அடிபிடிக்காமல் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொள்ளவும்.

ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல மணம் வந்தவுடன் வறுத்து பொடித்த கடுகை போட்டு ஊறுகாயில் கலந்து ஆறிய பின் ஊறுகாயை காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

குறிப்பு - சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கலாம்.

https://www.maalaimalar.com

Posted

வெந்தயக்குழம்பு... தனி ருசி!


 

 

vendhyakuzhambu

 

 

எந்த வேலையையும் ஈஸியா செய்றதுக்கு வழி என்னன்னு தெரியுமா என்று அம்மா அடிக்கடி கேட்பார். அந்த வழி. அந்த வேலையை ரசித்து ரசித்துச் செய்யவேண்டும் என்பார்.

சமையல் என்பதும் கலையே! அற்புதமானதொரு வேலைதான்! இந்த வேலையை எல்லா வீட்டுச் சமையலறையிலும் அம்மாக்களோ, மனைவிமார்களோ, சகோதரிகளோ நமக்காக, ரசித்து ரசித்து, ஆத்மார்த்தமாகச் சமைப்பார்கள்.

 

அப்படி முழுஈடுபாட்டுடன் செய்தால், சமைப்பது எளிது. பொதுவாகவே இதில் இன்னும் எளிதானது... வெந்தயக்குழம்பு!

குழம்பு, காரக்குழம்பு, வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்றெல்லாம் பண்ணுவார்கள். இந்த வெந்தயக்குழம்பு, எல்லா வீடுகளிலும் பண்ணுவதில்லை. ஏன் இப்படி வெந்தயத்தை விரோத மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள்? 

உண்மையில், வெந்தயக்குழம்பு எளிமையானது. சுவையானது. உடலையும் குளிர்ச்சிப்படுத்தக்கூடியது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மரகதம் பாட்டி, ‘வெந்தயக்குழம்பு பிரமாதம். பேச்சிலர்ஸ் கூட ஈஸியாப் பண்ணி இறக்கிடலாம்’ என்று விளக்கினார்.

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு

பூண்டு   - எட்டு அல்லது பத்து பல்

வெந்தயம்  - ஒரு டீஸ்பூன் அல்லது ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்பொடி  - கால் டீஸ்பூன்

மல்லிப்பொடி - 2 டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

புளி - ஒரு கோலிக்குண்டு அளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி  - சிறிதளவு

இப்படித்தான் செய்யணும்!

 முதலில் புளியை நன்றாக ஊறவைத்து கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அந்தச் சக்கையை நீக்கிவிடுங்கள். இதையடுத்து  வெந்தயத்தை வெறுமனே வாணலியில் வறுத்து நைசாக பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நன்றாக எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்களை அதில் இட்டு, நன்றாகத் தாளித்துக்கொள்ளவேண்டும். சின்ன வெங்காயத்தை உரித்து ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்றாக வதக்குங்கள்.

பிறகு, புளித்தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி , மல்லிப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து போதுமான நீர் விட்டு கொதிக்கவிடுங்கள்.

குழம்பு எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.

அப்புறம் என்ன... ஒருவித புதிய சுவையுடன் வெந்தயக்குழம்பு தயாராகிவிட்டது. நீங்கள் சாப்பிடவேண்டியதுதான் பாக்கி!

சுவைக்கும் சுவையாச்சு. உடம்பின் உஷ்ணத்தையும் தணிக்கவும் செய்யும். சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு இறக்கிடலாம்... வெந்தயக்குழம்பு! 

https://www.kamadenu.in/news/cooking/3897-vendhyakuzhambu.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Posted

முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்

 
அ-அ+

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.

 
 
 
 
முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்
 
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

*  மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
 
*  ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
 
201807241010045887_1_flower._L_styvpf.jpg

*  குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.  

*  முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

*  முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.

குறிப்பு:  மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு.

https://www.maalaimalar.com

மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு

 
அ-அ+

பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

 
 
 
 
மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு
 
பழைய சோறு... தமிழர்களின் பாரம்பரிய உணவு. கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள்.

பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு.
 
சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு.
 
201807251020154684_1_Neeragaram._L_styvpf.jpg

முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது.

கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு.

அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம்.

https://www.maalaimalar.com/

Posted

அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி

 
அ-அ+

தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி
 
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1
இறால் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201807301506087484_1_drumstick-prawn-thokku-1._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

https://www.maalaimalar.com

Posted

செட்டிநாடு நண்டு வறுவல்

 

sl5269900730.jpg

என்னென்ன தேவை?

சுத்தம் செய்த நண்டு - 8.
இடித்த சின்ன வெங்காயம் - 1.
பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
கறிவேப்பிலை - 1 கொத்து.
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்.
கசகசா - 1 டீஸ்பூன்.
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 7.

 

எப்படிச் செய்வது?

காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது...  என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

http://www.dinakaran.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/30/2018 at 6:39 PM, நவீனன் said:

அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி

 

அ-அ+

தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி
 
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1
இறால் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201807301506087484_1_drumstick-prawn-thokku-1._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

https://www.maalaimalar.com

பழப்புளி இல்லாமலா?

சுவியர் கவனிக்கேல்ல போல கிடக்குது !?

Posted (edited)

பூரிக்க வைக்கும் பொரிச்ச கூட்டு!


 

 

poricha-koottu
 

எப்பப் பாரு சாம்பாரா? என்று அலுத்துக்கொள்ளும் வீடுகள் எப்போதும் உண்டு. அதற்காக வெறும் மோர் சாதம் சாப்பிட்டுவிடமுடியுமா? சாம்பார், வத்தக்குழம்பு என்று போரடிக்கிறது கணவன்மார்களும் குழந்தைகளும் மட்டுமல்ல, பெண்களே கூட சொல்லி அலுத்து சலித்துக்கொள்வார்கள்.

சட்டென்று ஒரு மாறுதல் தேவை என்று எல்லோருமே ஆசைப்படுகிறோம். உணவு விஷயத்தில் அப்படியொரு சாம்பாருக்கு இணையாக பொரிச்ச கூட்டைத்தான் சொல்வார்கள். இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல... அந்தக் காலத்தில் இருந்தே இருக்கிறது.

 

பொரிச்ச கூட்டை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், சொக்கிப் போய்விடுவீர்கள்.

சரி... பொரிச்ச கூட்டு இப்படித்தான் செய்யணும்.

 கத்தரிக்காய் - 1

பயத்தம் பருப்பு - 1/4 கப் 

உப்பு - தேவையான அளவு

 தேங்காய்த் துருவல் - 1/2 மூடி 

மிளகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2  

ஜீரகம் - 1/2 டீஸ்பூன் 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - கொஞ்சம் 

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 1

  • முதலில், பயத்தம்பருப்பை நன்றாக மலரும் வகையில் வேக வைக்கவும்.
  • நறுக்கிய பெங்களூர் கத்திரிக்காயை சேர்த்து வேக வைக்கவும்.
  • உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
  • அரைத்ததை வெந்த காயுடன் சேர்த்து சிறிது கொதிக்க விடுங்கள்.
  • சேர்ந்து வந்ததும் இறக்கி, தாளித்துக் கொட்டுங்கள்.
  • அவ்வளவுதான்... பொரிச்ச கூட்டு ரெடி.
  • இதில் அவரைக்காய், புடலங்காய்,  என போட்டும் பண்ணலாம். அத்தனையும் அற்புதம். அபாரம்.

https://www.kamadenu.in/

Edited by நவீனன்
Posted

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை

 
அ-அ+

ஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை
 
தேவையான பொருள்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்
புளி, உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - அரை ஸ்பூன்.
 
201808091127545973_1_andhra-style-puliyogare._L_styvpf.jpg

செய்முறை :

சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

அதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.

சாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.
 
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.

https://www.maalaimalar.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/15/2018 at 10:21 AM, நவீனன் said:

சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

இது எங்களது சீனிச் சம்பலை ஒத்தது போன்று இருக்கிறது. மாசிக் கருவாடு சேர்த்த அந்த சீனிச் சம்பல் அந்த மாதிரி

Posted

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

 
அ-அ+

அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
 
தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் - 500 கிராம்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம் பழ அளவு,
மிளகாய்தூள் - 50 கிராம்,
வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

201808111423489095_1_brinjal-pickle._L_styvpf.jpg

செய்முறை :

கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.
 
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால். கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

https://www.maalaimalar.com

Posted

அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்

 
அ-அ+

சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்
மிளகுத்தூள் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
அரிசிமாவு - 5 கிராம்
கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
வெள்ளை எள் - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயத்தாள் - சிறிதளவு
காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 
201808141507143791_1_nerlor-chicken-1._L_styvpf.jpg

செய்முறை :

கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).

மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.

அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.

https://www.maalaimalar.com

Posted

வில்லேஜ் விருந்து

 

 

``இயற்கையோடு ஒன்றிவாழும் கிராமத்து மக்களின் ஆரோக்கிய ரகசியம் அவர்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவிலும் ஒளிந்திருக்கிறது. அவசர யுகத்தில் கண்ணில் தென்படும் உணவுகளையெல்லாம் உள்ளே தள்ளிவரும் பலர், கிராமத்துச் சமையலின் ருசியை அறிந்ததே இல்லை. 

p121a_1533039593.jpg

p121aa_1533039601.jpg

இங்கே, கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன் அளித்திருக்கும் கிராமத்து உணவுகளைச் செய்து அளித்தால், நகரத்துக் குழந்தைகளும்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். சிற்றுண்டி வகைகளில்கூடச் சுவையான பல உணவுகள் கிராமத்து விருந்தில் உண்டு. ஓட்டல்களில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, மைசூர் போண்டாக்களுக்கு நல்லதொரு மாற்று, கலவை பருப்பு போண்டா. சாக்லேட்டுகளுக்குப் பதிலாக ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொடுத்தனுப்ப ஏற்றது சத்தும் சுவையும் கொண்ட பச்சைப்பயறு இனிப்பு உருண்டை. இப்படி ஒவ்வொன்றுமே சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது.மண் மணக்கட்டும்!

 - சரஸ்வதி அசோகன்,  படங்கள்: நா.ராஜமுருகன்


p121aaa_1533039613.jpg

தினை - தட்டப்பருப்பு பொங்கல்

தேவையானவை:

 தினை - 250 கிராம்
 தட்டப்பருப்பு -  75 கிராம்
 சீரகம், மிளகு - தலா 2 டீஸ்பூன்
 தோல் சீவி, துருவிய இஞ்சி - சிறிதளவு
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய், நெய் கலவை - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு
 நெய் - சிறிதளவு

செய்முறை:

தினையுடன் தட்டப்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு சூடாக்கி சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு  சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் ஊறவைத்த தினை - பருப்பு கலவையைச் சேர்த்து மூடி 3 விசில்விடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து சிறிதளவு நெய்விட்டு கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி பரிமாறவும்.

வரகு, பனி வரகிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.


p121b_1533039625.jpg

கலவை பருப்பு போண்டா

தேவையானவை:

 துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தட்டப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு கைப்பிடியளவு
 வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
 நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு  - தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, தட்டப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, வேகவைத்துச் சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

பச்சரிசி சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.


p121bb_1533039639.jpg

முடக்கத்தான் கீரை அடை

தேவையானவை:

 புழுங்கல் அரிசி - 100 கிராம்
 பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
 முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு
 பூண்டு - 3 பல்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
 தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியுடன் பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, அதனுடன் சோம்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, முடக்கத்தான் கீரை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அடை மாவு பதத்துக்கு அரைத்தெடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து, அடை மாவுடன் கலக்கவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைக்கலாம்). தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரை மிகச்சிறந்த நிவாரணி.


p121bbb_1533039652.jpg

அரிசி பருப்பு கார தோசை

தேவையானவை:

 பச்சரிசி - 200 கிராம்
 துவரம்பருப்பு - 75 கிராம்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு
 காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியுடன் துவரம்பருப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அதனுடன் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

மாவு புளிக்கத் தேவையில்லை.


p121c_1533039664.jpg

பூசணிவிதைப் பொடி

தேவையானவை:

 மஞ்சள் பூசணிவிதை - 100 கிராம்
 தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
 வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மஞ்சள் பூசணிவிதையை வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். கறிவேப்பிலையைக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும். வாணலியில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வறுத்தெடுக்கவும். பிறகு பூசணி விதை, கறுப்பு எள்ளைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். கறிவேப்பிலையுடன் உப்பு சேர்த்து வாணலியில் போட்டுச் சூடாக்கி பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து, இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்தெடுத்தால்... கமகம பூசணிவிதைப் பொடி ரெடி.
இதை சாதத்துடன் சேர்த்து, நெய்விட்டு பிசைந்து சாப்பிட, சுவை அள்ளும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.


p121cc_1533039675.jpg

கறுப்பு உளுந்து கறிவேப்பிலைத் துவையல்

தேவையானவை:

 உடைத்த கறுப்பு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடியளவு
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 பூண்டு - 5 பல்
 காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
 புளி - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு சேர்த்துச் சிவக்க வறுக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் வறுக்கவும். அதனுடன் இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். நன்கு ஆறிய பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  துவையலாக அரைத்தெடுக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.


p121ccc_1533039686.jpg

கம்பு இனிப்பு அப்பம்

தேவையானவை:

 கம்பு - 200 கிராம்
 பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்
 பொடித்த வெல்லம் - தேவையான அளவு
 ஏலக்காய் - 3
 தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
 எண்ணெய் -  பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கம்புடன் அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, கம்புக் கலவையை மிக்ஸியில் சேர்த்து வெல்லம், ஏலக்காய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து அப்பம் மாவுப் பதத்துக்குக் கரைக்கவும் (இட்லி மாவு பதத்தைவிட சற்றுக் கெட்டியாக இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைக் குழிவான கரண்டியால் எடுத்து அப்பமாக ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

மாவை ஒவ்வோர் அப்பமாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.


p121d_1533039697.jpg

மொச்சை கெட்டி பருப்பு

தேவையானவை:

 காய்ந்த மொச்சை - 200 கிராம்
 தோலுரித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
 காய்ந்த மிளகாய் - ஒன்று
 சாம்பார் பொடி - தேவையான அளவு
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பூண்டு - 6 பல் (தட்டவும்)
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்ந்த மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை மொச்சையின் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் பருப்பைத் தனியாக எடுக்கவும். குக்கரில் மொச்சையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து ஒன்றிரண்டாகக் கடையவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மொச்சை, உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு  டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து மொச்சைக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

இதைச் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.


p121dd_1533039709.jpg

சோளம்  தக்காளி பணியாரம்

தேவையானவை:

 சோளம் - 100 கிராம்
 இட்லி மாவு - ஒரு கப்
 தக்காளி - 3 (நறுக்கவும்)
 சீரகம் - 2 சிட்டிகை
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் தக்காளி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். உப்பு, இட்லி மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக்கல்லை காயவைத்துக் குழிகளில் எண்ணெய்விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். 

குறிப்பு:

இட்லி மாவில் உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கும்போது பார்த்துச் சேர்க்கவும். இட்லி மாவு புளித்திருப்பதால், சோளம், தக்காளியை அரைத்த உடனே சேர்த்துச் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தும் செய்யலாம்.

https://www.vikatan.com

Posted

சப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா

 
 அ-அ+

புலாவ், தோசை, நாண், சப்பாத்தி, பராத்தாவுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த ஹைதராபாதி சிக்கன் மசாலா. இந்த இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1 கிலோ
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் - 4
கிராம்பு - 6
காய்ந்த மிளகாய் - 15
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
தனியா (மல்லி) - 2 டீஸ்பூன்
பட்டை - 2
முந்திரி - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
நெய்/எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஜாதிக்காய் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ பியூரி - 200 மில்லி
உப்பு - தேவையான அலவு
தேங்காய்ப்பால் - 200 மில்லி
 
201808181323085163_1_hyderabadi-chicken-masala._L_styvpf.jpg

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), ஜாதிக்காய், முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

இத்துடன் தேங்காய்ப்பால், டொமேட்டோ பியூரி, ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.

அடுத்து அதில் சிக்கன், உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக விடவும்.

சிக்கன் வெந்து கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும்.

https://www.maalaimalar.com

Posted

நாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி?

 

 
wow

தேவையான பொருள்கள்:

முழு நெல்லிக்காய் - 6 
உளுத்தம்பருப்பு - அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு (அலசி ஆய்ந்தது)
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

hqdefault.jpg

செய்முறை:

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் நெல்லிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஆறியதும் அதனுடன் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துச் சட்னியுடன் கலக்கவும். சுவையான நெல்லிக்காய் சட்னி ரெடி. இது சத்தானதும் கூட என சொல்லவும் வேண்டுமா!

குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்தும் அரைக்கலாம்.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jun/29/nellikkaai-chutney-recipe-2949838.html




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
    • தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது. இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார். இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 – நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார். இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/313627
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.