Jump to content

Recommended Posts

Posted
46 minutes ago, ஜீவன் சிவா said:

இப்ப மிகுதி நம்ம செய்முறை.

அப்படியே இஞ்சி, உள்ளி, வெங்காயம், கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இவற்றுடன் ஒரு பவுலில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு ஊற்றி பேஸ்ட் போன்று கலக்கவும்.

நான் எலும்பிச்சை சாறு விடுவதில்லை - பதிலாக லெமன் தோலை ஸ்க்ரேபரில் உராய்ந்து சிறு துகள்களாக்கி கலவையுடன் கலந்து விடுவேன்.

இதனுள் மீனை போட்டு நன்றாக கலந்து ஒவ்வொரு  துண்டாக அவற்றுடன் ஒட்டிய துகள்களுடன் கவனமாக எடுத்து அலுமினிய பேப்பரில் சுற்றி 1 மணிநேரம் குளிரூட்டியில் வைக்கவும். 

பின்னர் எடுத்து 45 நிமிடம் 200 பாகை செல்ஷியஸில் அவனினுள் நடுவில் வைத்து எடுக்கவும்.

அவித்த உருளை கிழங்கு + குக்கும்பர் சலாட் + மீன் சாஸுடன் பரிமாறவும்.

நன்றி ஜீவன்..:)

உங்கள் இடத்தில்தானே இந்த மீன் நிறைய கிடைக்கும்.. நோர்வேயில்.

நான் மேல தந்த ரெசிப்பி கொஹ்லிக்கு பிடித்த உணவாம்..:)

வி.ஐ.பி. ரெசிப்பி!

 

p24a.jpg

1 1/2 லிட்டர் தண்ணீர் 500 ரூபாய்!

‘You are what you eat’

இந்த ஆங்கில பழமொழிதான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விராட் கோஹ்லியின் ஃபேவரைட் வாசகம். டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே கோஹ்லிக்கு சாப்பிடுவதில், கிரிக்கெட்டைவிட ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் அதுவே அவரது பெர்ஃபார்மென்ஸுக்கு எதிரியாக, அதிரடியாக எடையைக் குறைத்தார் கோஹ்லி. அதன் பின்னர்தான், தான் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை எல்லாம் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், இப்போதும் தனக்கு பிடித்த உணவு ஐட்டங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்கிறார்.

 

ஜப்பானிய உணவுகள் என்றால், கோஹ்லிக்கு சேஸிங்கில் சதம் அடிப்பது போல அவ்வளவு இஷ்டம். “என்னால் வாரத்தின் ஏழு நாட்களும், மூன்று வேளையும் ஜப்பானிய உணவுகளைமட்டும் சாப்பிட முடியும்” எனச் சொல்லியிருக்கிறார் கோஹ்லி. ஜப்பான் நாடும் விரைவில் கிரிக்கெட் ஆட வேண்டும். நாம் அடிக்கடி அங்கே சுற்றுப்பயணம் நடத்த வேண்டும் என்பது கோஹ்லியின் விஷ் லிஸ்ட்டில் ஒன்று.

விராட் கோஹ்லியின் ஒரு நாள் உணவில் மீன், ஆட்டுக்கறி, காய்கறி சாலட் ஆகியவை நிச்சயம் இடம்பெறும். உணவு வகைகள் பெரும்பாலும், வீட்டில் சமைத்தவையாகத்தான் இருக்கவேண்டும். அன்றைய மேட்ச்சில் கோஹ்லியால் அவர் அணி வெற்றிப்பெற்றால், அன்று இரவு மட்டும் சாக்லேட் பிரவுனி போனஸ். அதற்கேற்ப ஜிம்மில் எக்ஸ்ட்ராவாக ஓடிவிடுவார் கோஹ்லி.

தண்ணீருக்குக் கூட எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கொள்வார். அவர் குடிக்கும் ஏவியான் (evian) பிராண்ட் மினரல் வாட்டரின் விலையைக் கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒன்றரை லிட்டர் பாட்டில் 500 ரூபாயாம். அவருக்குப் பிடித்த ஃபிஷ் ஃபிரை ரெசிப்பி கீழே.

Posted

p37c.jpg

சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவி

தேவையானவை:

 எலும்பில்லாத சிக்கன் - 350 கிராம்

 பச்சைமிளகாய் - 2

 பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - ஒன்று

 இஞ்சி-பூண்டு விழுது -  2 டீஸ்பூன்

 பாலக்கீரை விழுது - ஒரு கப்

 வால்நட் - அரை கப்

 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நறுக்கி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வால்நட் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பாலக்கீரை விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் அரைத்த வால்நட் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான சாதம், ரொட்டி, ஃபுல்காவுடன் சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவியைப் பரிமாறவும்.

Posted

சிறுதானிய கார அடை!

13612106_1169760026416119_54653954816121

குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என
சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில்
சத்துக்களைக் கூட்டலாம்.

செய்முறை:

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு,
கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத்
துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத்
தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!

பலன்கள்:

கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்,
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

Posted

p109e.jpg

மீன் பிரியாணி

தேவையானவை:


 பாசுமதி அரிசி - 200 கிராம்
 தண்ணீர் - 300 மில்லி
 பெரிய வெங்காயம் - 150 கிராம் (நறுக்கியது)
 தக்காளி - 100 கிராம்
 புதினா - கால் கட்டு
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 தயிர் - ஒரு கப்
 பச்சைமிளகாய் - 4 கீறியது
 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
 உப்பு - தேவையான அளவு
 நெய் + ஆலிவ் ஆயில் - முக்கால் கப்
 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (வெதுவெதுப்பான கால் கப் பாலில் ஊற விடவும்)
 கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
 எலுமிச்சை - அரை பழம் (சாறு எடுக்கவும்)
 எண்ணெய் - தேவையான அளவு
 ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்

மீன் ஊற வைக்க:

 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
 ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்
 நெய் மீன் - கால் கிலோ

செய்முறை:

நறுக்கி சுத்தம் செய்த மீனை ஊற வைக்கத் தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பொன்னிறமாக மீன் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும். பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஆழமான பாத்திரம் அல்லது குக்கரில் நெய் + ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி நன்கு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழையை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

இத்துடன் 300 மில்லி தண்ணீர், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி கொதிக்க விட்டு, உப்பு, காரம் சரிபார்த்து அரிசி, குங்குமப்பூ சேர்த்து வேகவைத்து தனியே வைக்கவும். அகலமான பாத்திரத்தில் 3 பொரித்த மீன் துண்டுகள், அதன் மேல் 3 டீஸ்பூன் வதக்கிய பெரியவெங்காயம், அதன் மேல் வேகவைத்த சாதம் என ஒன்றின் மேல் ஒன்றாக இப்போது சொல்லியிருக்கும் வரிசையில் வைக்கவும். பிறகு பாத்திரத்தை மூடி அப்படியே அடுப்பில் வைத்து தீயைக் குறைக்கவும். பாத்திரத்தின் மேல் கனமான பொருளை வைத்து, 5 நிமிடங்கள் ‘தம்’ போடவும். சுவையான மீன் பிரியாணி ரெடி. சட்னியுடன் பரிமாறவும்.

சட்னி

தேவையானவை:


 கொத்தமல்லித்தழை காம்புடன் - ஒரு கைப்பிடி
 புதினா - ஒரு கைப்பிடி
 பூண்டுப்பல் - 6 பல்
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 பேரீச்சம்பழம் - 4 (கொட்டை நீக்கியது)
 வெல்லம் - சிறிய துண்டு
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மை போல அரைத்து உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு சரிபார்த்து பிரியாணியுடன் பரிமாறவும்.

Posted

வி.ஐ.பி. ரெசிப்பி!

 

p32a.jpg

துரையில் இருக்கும் பிரபல ஹோட்டல்களில் ஒன்று... குமார் மெஸ். ஹோட்டலின் உரிமையாளர் ராமச்சந்திரகுமாரின் பெயரில் இயங்கும் மெஸ், இப்போது சென்னையிலும் பிரபலமாகி வருகிறது.

‘‘என்னோட ரெண்டு தாத்தாவுமே நல்ல சமையல்கலைஞர்கள். நான் பி.ஃபார்ம் முடிச்சாலும், குடும்பத் தொழிலான சமையல்லயே இறங்கிட்டேன். என் தம்பிக்காகத்தான் முதன்முதல்ல 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டோட மதுரையில ‘குமார் மெஸ்’ஸை சின்ன அளவில ஆரம்பிச்சேன். இப்போ அவர் உயிரோட இல்லை என்பது பெரிய வருத்தம். 26 வருஷமாச்சு... ஹோட்டல் ஆரம்பிச்சு.

14.jpg

சென்னையில கால்வெச்சு 10 மாதங்களாச்சு. அடுத்தடுத்த கிளைகள் தொடங்கிற திட்டம் பற்றி யோசிக்கிற அளவுக்கு வெற்றி கிடைச்சிருக்கு” என்றவருக்கு மிகவும் விருப்பமான உணவு அசைவம்தானாம்.

“முன்பெல்லாம் நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப உடம்புல கொஞ்சம் பிரச்னை இருக்கிறதால ட்ரீட்மென்ட்ல இருக்கேன். அதனால சைவம். என் மனைவி சமைப்பதில் ஸ்டஃப்டு சப்பாத்தி, பருப்பு சட்னி, இறால் மசாலா, மட்டன் குருமா உணவுகளுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்” என்று லயித்து சொன்னவரின் குடும்பமே ‘குமார் மெஸ்’ உணவுகளைத்தான் சாப்பிடுகிறார்கள்.
‘‘பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப, காலை உணவு மட்டும் வீட்டில் செஞ்சுக்குவோம். மதியத்துக்கு தினமும் கடைச் சாப்பாடுதான். அமாவாசை அன்னைக்குமட்டும்தான் வீட்டில் சமைப்போம். எங்க ஹோட்டல்ல சமையலுக்கு ரெடிமேட் மசாலாத்தூள்களைப் பயன்படுத்துறதில்ல. எல்லாமே கையால அரைக்கிற மசாலாக்கள்தான். சென்னையில கிடைக்கிற மீன், கறி வகைகள் எதுவும் எங்களுக்குப் பிடிக்கல. அதனால, தினமும் மதுரையில் இருந்துதான் அதை வரவழைக்கிறோம்.

மதுரையில பொறந்து வளர்ந்ததுனால எங்கெங்க என்னென்ன உணவுப் பொருட்கள் தரமா கிடைக்கும்னு மனப்பாடமா தெரியும். ஆனா, சென்னையில ஹோட்டல் ஆரம்பிச்சப்போ, அப்படி எதுவும் தெரியாததால, ஆரம்பத்துல கிட்டத்தட்ட 15 இடங்கள்ல உணவுப் பொருட்கள் வாங்கி, வீட்டில் சமைச்சு ருசிபார்த்து, அப்புறம்தான் ஹோட்டலைத் திறந்தோம். அந்த மெனக்கெடலுக்குப் பரிசாதான் இப்போ நல்ல ரீச் கிடைச்சிருக்கு’’ என்று கணவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவி ஜெயமாலா.

p32b.jpg

‘இவரு நல்லா சமைப்பாரு. இவர் செய்ற எல்லா பிரியாணி வகைகளும் எனக்குப் பிடிக்கும். இப்போ இவருக்குப் பிடிச்ச இறால் மசாலா மற்றும் மட்டன் குருமா ரெசிப்பியைப் பத்தி சொல்றேன்...’’ என்று தயாரானார்.

மட்டன் குருமா

தேவையானவை:

 மட்டன் - ஒரு கிலோ

 கடலை எண்ணெய் - 100 மில்லி

 எலுமிச்சை - ஒன்று

 சீரகம் - 3 கிராம்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

அரைக்க:

 சின்னவெங்காயம் - 200 கிராம்

 பச்சைமிளகாய் - 25 கிராம்

 தேங்காய் - ஒன்று

 கசகசா - 15 கிராம்

 மிளகு - 20 கிராம்

 சோம்பு - 3 கிராம்

 சீரகம் - 5 கிராம்

 பட்டை - சிறிதளவு

 கிராம்பு - ஒன்று

 அன்னாசிப்பூ - ஒன்று

 முந்திரிப்பருப்பு - 20 கிராம்

p32c.jpg

செய்முறை:

தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து லேசாக வதக்கி, பேஸ்டாக அரைக்கவும். அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மட்டனைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு மட்டனை வேகவிடவும். மட்டன் வெந்ததும் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதி வருவதற்கு முன்னர் இறக்கிப் பரிமாறவும்.


‘குமார் மெஸ் ஓனரு... கேட்கவா வேணும்... தினமும் கறிசாப்பாடுதான்...’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ‘நான் வேற மாதிரி’ என்று சிரிக்கும் ராமச்சந்திரகுமார் தந்த அவரின் தினசரி மெனு இதுதான்.

p32d.jpg

காலை

6 மணிக்கு: பூண்டு-10 பல், இஞ்சிச் சாறு-ஒரு டேபிள்ஸ்பூன்

9 மணிக்கு: கேப்பைக்கூழ், காய்கறி, பழங்கள் (அல்லது) 3, 4 இட்லி அல்லது தோசை.

11 - 12 மணிக்கு: நறுக்கிய பழங்கள்.

மாலை 

4 மணிக்கு: மதிய உணவாக அவரது உணவகத்திலேயே ஏதாவது ஒரு சைவ உணவு.

இரவு

11 மணிக்கு: 2 சப்பாத்தி அல்லது கோதுமை தோசை.


இறால் மசாலா

தேவையானவை:

 இறால் - ஒரு கிலோ

 தயிர் - 100 மில்லி

 கடலை எண்ணெய் - 150 மில்லி

 சின்னவெங்காயம் - 100 கிராம்

 பச்சைமிளகாய் - 3

 கறிவேப்பிலை - சிறிதளவு

 தக்காளி - 2

 பூண்டு - 30 கிராம்

 இஞ்சி - 20 கிராம்

 மல்லித்தூள்

(தனியாத்தூள்) - 15 கிராம்

 மிளகாய்த்தூள் - 10 கிராம்

 மஞ்சள்தூள் - 5 கிராம்

 மிளகு-சீரகத்தூள் - 15 கிராம் (மிளகு-10 கிராம், சீரகம்-5 கிராம்)

 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 பட்டை - ஒன்று

 கிராம்பு - 2

 ஏலக்காய் - ஒன்று

 அன்னாசிப்பூ - ஒன்று

 சோம்பு - 2 கிராம்

 வெந்தயம் - ஒரு கிராம்

p32e.jpg

மசாலா செய்ய:

 சோம்பு - 2 கிராம்

 சீரகம் - 2 கிராம்

 மிளகு - 10 கிராம்

 கிராம்பு - ஒன்று

 ஏலக்காய் - ஒன்று

 பட்டை - ஒன்று

 கொத்தமல்லித்தழை  - சிறிதளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து தயிரில் ஊறவைக்கவும். மசாலா செய்ய கொடுத்த பொருட்களை வெறும் சட்டியில் நன்கு வறுத்து, மிக்ஸியில் பேஸ்ட் பதத்துக்கு அரைக்கவும். பூண்டு, இஞ்சியைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதை சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய்,
இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சில துளி தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள்,
அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை கிளறவும். இத்துடன் இறாலை 15 நிமிடங்கள் வேகவிட்டு (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை) மிளகு, சீரகத்தூள் தூவி இறக்கவும். 

Posted

p109c.jpg

கோதுமை உப்புமா பிரியாணி

தேவையானவை:


 மட்டன் (அ) சிக்கன் - கால் கிலோ
 கோதுமைக் குருணை - 2 கப்
 நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பட்டை - ஒன்று
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 3
 பிரிஞ்சி இலை - ஒன்று
 சின்னவெங்காயம் - அரை கைப்பிடி (நறுக்கியது)
 பெரியவெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
 இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
 பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 4 (கீறியது)
 தக்காளி - 2 (நறுக்கியது)
 புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 பச்சைப்பட்டாணி - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
 தேங்காயப்பால் - 4 கப்
 முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடாக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வெடிக்க விடவும். இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு, இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். கூடவே பச்சைப்பட்டாணி, பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை ஒன்றன் பின் ஒன்றாக மசிய வதக்கி மட்டன்/சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும். மட்டனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி, மட்டனை வேக விடவும். மட்டன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். கோதுமையும் கறிகுழம்பும் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும். கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Posted
வெஜிடபிள் போண்டா : செய்முறைகளுடன்...!

 

vegbonda.jpg


தேவையான பொருள்கள்

  • மேல் மாவிற்கு
  • கடலை மாவு - 1கப்
  • அரிசி மாவு -13 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மிளகாய்ப்பொடி - 3/4 டீஸ்பூன்
  • சமையல் சோடா - 2 சிட்டிகை

காய்கறி மசாலா செய்ய

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்

பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப்

காலிப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ்,

கேரட்

உரித்த பட்டாணி - 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப்

நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

லெமன் - 1
 

செய்முறை

நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில்வேக வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது,பொடியாக அரிந்த வெங்காயம் 
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதிலேயே மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச்சேர்க்கவும்.
 பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

ஈரம்நன்கு வ்ற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்த்து வரும்போது உப்பு,
நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சங்காயளவுஉருண்டைகள் செய்யவும்.சலித்த 
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த்தூள் தண்ணீர்சேர்த்து 
கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல்மாவைத் தயாரிக்கவும். 

தோசைமாவு பக்குவத்தில் செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை 
ஒவ்வொன்றாக அதில்தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். 
சூடாகப்பரிமாறவும்.

Posted

என் ஹெல்த் ரகசியம், என் மனைவி!

வி.ஐ.பி. ரெசிப்பி!

 

p18a.jpg

'வெற்றிபெற்ற ஆண்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் இருக்கிறார்கள்’ எனச் சொல்வதுண்டு. காலணி உலகில் தன் வெற்றியை நிலைநாட்டி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.கே.சி குழுமங்களின் இயக்குநர் யாசினின் வெற்றிக்கு, உடல்நலனுக்குப் பின்புலமாக இருந்து செயல்படுவது அவருடைய மனைவி சிந்து யாசின். 

12.jpg

சிந்துவே பேசினார் ‘‘வேலை டென்ஷனில் இருந்து அவரைத் திருப்ப எனக்கு உதவியாக இருப்பது எங்கள் வீட்டுச் சூழலும், என் கைபக்குவமும்தான். அதுவும் முக்கியமாக அவர் வீட்டில் இருக்கும் நாள் மற்றும் நேரங்களில் அவருக்குப் பிடித்த உணவுகளே எங்கள் மெனுவை நிரப்பியிருக்கும். அவருக்கு ‘ஸ்வீட்’ என்றால், அத்தனை விருப்பம். அதனால், ஏதாவது ஒரு ஸ்வீட் அவர் மெனுவில் இருக்கும். மிகவும் விரும்பி உண்ணும் ஸ்வீட் என்றால், அது கேரட் புடிங், பைனாப்பிள் புடிங் கேக் என்று லிஸ்ட் சற்றே நீளும். 

காலை உணவைப் பொறுத்தவரை இட்லி, தோசை, இடியாப்பம், பூரி என்று நமக்கு பழக்கமான உணவுகள் ஏதாவது ஒன்று அவருடைய தட்டை அலங்கரிக்கும். உணவை முடித்தவுடன் ஆரஞ்ச், சாத்துக்குடி என்று ஹெல்தியான பழச்சாறு கண்டிப்பாக இருக்கும்.

மதிய உணவுக்கு அவர் வீட்டுக்கு வர இயலாத சூழலே பெரும்பாலும் இருக்கும். மிக அரிதாக அவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதாக இருந்தால், அசைவ உணவுகளுக்கு எப்போதும் ‘க்ரீன் சிக்னல்’ தான். அசைவத்தில் மீனுக்குத்தான் முக்கியத்துவம். மீன் குழம்பு, மீன் ஃப்ரை என ஏதாவது ஒன்று மெனுவில் இருக்கும். உணவில், அன்றும் இன்றும் அவருக்குப் பிடித்தது மலபார் சிக்கன் பிரியாணிதான். ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மலபார்’ சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இருக்கும். மதிய உணவைப் பொறுத்தவரை குழம்பு அசைவமாக இருந்தால், கண்டிப்பாக ஏதாவது ஒரு சைவ பொரியல் இருக்கும். அதுவே அசைவமாக அதுவும் டிரையான ரெசிப்பியாக இருந்தால் குழம்பு சைவமாக இருக்கும்.

மாலைநேரத்தில் டீயுடன் கட்லெட், இரவு உணவாக சப்பாத்தி தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது சைவக் குழம்பு என்று தினம் ஒன்றாக இருக்கும். உணவு முடித்த பிறகு வெஜிடபிள் சாலட் எடுத்துக்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்ற சிந்து, தன் கணவருக்குப் பிடித்த அன்னாசி பிஸ்கட் புடிங் மற்றும் மலபார் சிக்கன் பிரியாணியைச் செய்து காட்டி அசத்தினார். அவற்றின் ரெசிப்பி இதோ...

மலபார் சிக்கன் பிரியாணி

தேவையானவை:

* சிக்கன் - அரை கிலோ

* சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் (அரை கிலோ)

* பெரியவெங்காயம் - 2 + ஒன்று

* தக்காளி - 3

* பட்டை - ஒன்று

* ஏலக்காய் - 2

* கிராம்பு - 2

* அன்னாசிப்பூ - 2

* பச்சை மிளகாய் - 4 (பேஸ்டாக்கிக் கொள்ளவும்)

* இஞ்சி-பூண்டு விழுது - இரண்டரை டேபிள்ஸ்பூன்

* கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

* புதினா - ஒரு கைப்பிடி

* தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

* மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

* மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

* தயிர் - அரை கப்

* கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - கால் கப்

* நெய் - கால் கப்

* முந்திரி - 10

* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

* பால் - 2 டேபிள்ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

p18b.jpg

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும். ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். 

மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இனி வதக்கிய கலவையோடு அரைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு, சிக்கன் சேர்த்து வதக்கி, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும்.

அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில்  வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும்.
ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுக்கவும்.

பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும். இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார்.

அன்னாசி பிஸ்கட் புடிங்

தேவையானவை:

* அன்னாசிப்பழம் - ஒன்று பெரியது

* வெண்ணெய் - 100 கிராம்

* பவுடர் சுகர் - ஒரு கப்

* மேரி பிஸ்கட் - ஒரு மீடியம் சைஸ் பாக்கெட்

* பால் - அரை கப்

* முந்திரி - தேவையான அளவு

* சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

p18c.jpg

செய்முறை:

அன்னாசிப்பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து அரைத்துப் பிழிந்து சாறு எடுக்கவும். இத்துடன் வெண்ணெய் மற்றும் பவுடர் சர்க்கரையைச் சேர்த்து கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலில் நனைத்த ஒரு மேரி பிஸ்கட்டை வைக்கவும். அதன் மீது அன்னாசி வெண்ணெய்க் கலவையைப் பரப்பவும். அதன் மீது மீண்டும் மேரி பிஸ்கட்டை வைக்கவும். இப்படி பிஸ்கட் தீரும்வரை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கவும்.

வாணலியில் சர்க்கரை மற்றும் முந்திரியை அடுத்தடுத்து சேர்த்து வறுக்கவும். ஆறியதும், இடித்துக் கொள்ளவும். ரெடி செய்து வைத்த பிஸ்கட் கலவையின் மீது இடித்ததைத் தூவவும். அப்படியே பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, பிறகு பரிமாறினால், சூப்பர் சுவையில் புடிங் ரெடி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் எளீமையான செய்முனறகள். அன்னாசி பிஸ்கட் புடிங் சுப்பர்....!

அதுதான் அத்தான் ரசித்துச் சாப்பிடுகின்றார்....! tw_blush:

Posted

p109f.jpg

இறால் பிரியாணி

தேவையானவை:


 இறால் - ஒரு கிலோ (சுத்தம் செய்தது)
 வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
 தக்காளி - 2 (நறுக்கியது)
 பச்சைமிளகாய் - 6 (கீறியது)
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பட்டை - 2
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 2
 எலுமிச்சைச் சாறு - அரை பழம்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 நெய் - 100 கிராம்
 தயிர் - 100 கிராம்
 மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - இரண்டே கால் டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சோம்புத்தூள் - இரண்டரை டீஸ்பூன்
 பிரிஞ்சி இலை - ஒன்று
 புதினா - கால் கைப்பிடி (நறுக்கியது)
 கொத்தமல்லித்தழை - கால் கைப்பிடி (நறுக்கியது)
 ரோஸ் வாட்டர் - கால் டீஸ்பூன்
 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (2 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)
 பாசுமதி அரிசி - மூன்றரை கப்
 தண்ணீர் - நாலே கால் கப்
 முந்திரிப்பருப்பு - 10
 தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிக்ஸியில் தேங்காய்த்துருவல், முந்திரிப்பருப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல் அரைக்கவும். சுத்தம் செய்த இறாலுடன் தயிர், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும். பாசுமதி அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி,  பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கரைய வதக்கி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு, நாலே கால் கப் தண்ணீரை இறால் கலவையில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் அளவுக்கு வேகவிடவும். 

பிறகு மூடியைத் திறந்து அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய் விழுது, எலுமிச்சைச்சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி இறால் கலவையை மீண்டும் கொதிக்க விடவும். ஊறவைத்த அரிசியை வடித்து இறால் கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றிக் கலக்கவும். மீண்டும் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் அளவுக்கு வேகவிட்டு
5 நிமிடங்கள் தீயை சிம்மில் வைத்து பிறகு அடுப்பை அணைக்கவும். விசில் சத்தம் அடங்கியதும், இறால் பிரியாணியை சட்னியுடன் பரிமாறவும்.

Posted

‘சமைக்கத் தெரியும்... ஆனாலும், சமையலா?’ என்று ஜகா வாங்கும் பேச்சுலர்களுக்காக அவர்களே தயாரிக்கும் வகையில், நாவில் எச்சில் ஊறவைக்கும் ரெசிப்பியைத் தந்திருக்கிறார் சமையல்கலைஞர் ரேவதிசண்முகம்.

p30a.jpg

ஃகார்ன் புலாவ்

தேவையானவை:

 பாசுமதி அரிசி - ஒரு கப்

 வேகவைத்து உரித்த ஃகார்ன் முத்துக்கள் - அரை கப்

 பெரிய வெங்காயம் - 2

 தக்காளி விழுது - அரை கப்

 மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 பிரியாணி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடானதும், மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), பிரியாணி மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு, ஃகார்ன் முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, அரிசியைச் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

கவனிக்க வேண்டியவை:

சமைக்கும்போது நேர அளவோ, தண்ணீர் அளவோ அதிகமானால், சாதம் குழைந்துவிடும். அதேபோல தண்ணீரின் அளவு குறைந்தால், சாதம் வேகாமல் நறுக்கென்று இருக்கும். அதனால், ஆரம்பத்திலேயே கவனமுடன் தண்ணீரின் அளவை வைப்பது நல்லது.


p30b.jpg

பனீர் பட்டாணி குருமா

தேவையானவை:

 பச்சைப் பட்டாணி - அரை கப்

 பனீர் - 200 கிராம்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 தக்காளி - 2

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2

 கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க:

 தேங்காய்த்துருவல் - அரை கப்

 முந்திரி - 8

செய்முறை:

பனீரை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பனீர், பச்சைப் பட்டாணி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு, மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குருமாவில் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

கவனிக்க வேண்டியவை:

தண்ணீர் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாணி அதிகம் வெந்துவிடக்கூடாது. அதிக நேரம் கொதிக்கக் கூடாது. இதில் தண்ணீர் அளவு அதிகமானால், மட்டும் பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கலாம்.

Posted
இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்...!

 

 

tthokkuuuu.jpg

தேவையான பொருள்கள்: 
 

  • அதிக நார் இல்லாத இஞ்சி - 100 கிராம்
  • புளி - எலுமிச்சை அளவு
  • வெல்லம் - சிறிது
  • தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • கடுகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க


செய்முறை: 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும்.

வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

Posted

p109d.jpg

கொண்டைக்கடலை பிரியாணி

தேவையானவை:


 பாசுமதி அரிசி (வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்) - ஒரு கப்
 வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப்
 தக்காளி - 3
 பெரியவெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
 பூண்டு - 3 பல் (நறுக்கியது)
 பச்சைமிளகாய் - 4
 தேங்காயப்்பால் - ஒன்றரை கப்
 கஸூரி மேத்தி - ஒரு டேபிள்ஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - கால் டீஸ்பூன்
 பட்டை - ஒன்று
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - ஒன்று
 நெய் - 3 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - கால் கப் (நறுக்கியது)
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

அரைக்க:

 பெரியவெங்காயம் - ஒன்று
 காய்ந்தமிளகாய் - 8
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பூண்டு - 5 பல்
 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெள்ளைக் கொண்டைக்கடலையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு அவித்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, ஆறவிட்டு மிக்ஸியில் மை போல அரைக்கவும். தக்காளியை சுடுநீரில் முழுதாகச் சேர்த்து நோல் நீக்கி சதைப்பகுதியை மட்டும் அரைத்து வைக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, ஒரு டீஸ்பூன் சூடான நெய்யில் வறுத்து வைக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையைச் சேர்த்து வெடிக்க விடவும்.
நறுக்கிய பூண்டுப்பல் சேர்த்து சிவக்க வறுக்கவும். பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு அரைத்த மசாலா விழுது, அரைத்த தக்காளி விழுது உப்பு, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். இத்துடன் அவித்த கொண்டைக்கடலை, கஸுரி மேத்தி, கரம் மசாலாத்தூள், ஒன்றரை கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து வறுத்த அரிசியைச் சேர்த்துக் கிளறி வேக விடவும். இத்துடன் நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி உருளைக்கிழங்கு சிப்ஸ் உடன் பரிமாறவும்.

பின்குறிப்பு:

விருப்பமுள்ளவர்கள் நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து மேலே தூவிப் பரிமாறவும்.

Posted

வி.ஐ.பி. ரெசிப்பி!

 

p76a.jpg

ரவு 7 மணிக்கு மேல் வயிற்றுக்குப் பூட்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் இனிப்பு, ஞாயிறு குடும்பத்துக்கு மட்டுமேயான நாள்... என உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான இந்த ஷெட்யூலுக்கு சொந்தக்காரர், ‘கெவின் கேர்’ ரங்கநாதன். ஷாம்பூவில் ஆரம்பித்து, பல வகையான மில்க் ஷேக்குகளை அறிமுகப்படுத்தி, தற்போது பாக்கெட் இளநீர் விற்பனையில் அத்தியாயமிட்டிருக்கும் ரங்கநாதனின் ஒருநாள் சாப்பாட்டு மெனுவை அறிவோமா?!

15.jpg

‘‘காலையில எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிப்பேன். நாள் முழுக்க நடை, நடைதான். நான் கையில் கட்டியிருக்கும் இந்த டிஜிட்டல் வாட்ச், எவ்வளவு அடிகள் நடந்திருக்கேன் என்பதைக் காட்டும். ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள், அதாவது கிட்டத்தட்ட ஏழரை கிலோ மீட்டர்தான் என் இலக்கு. காலையில் தினமும் 2 டீஸ்பூன் முளைகட்டிய அல்ஃபா விதைகள் எடுத்துக்கிறது சிறுநீரகத்துக்கு நல்லது. தவிர, இன்னும் சில பயறு வகைகளை முளைகட்டி ஃபிரிட்ஜில் வைத்து, தினமும் தேவைக்கேற்ப தோசைக்கு சைடு டிஷ் கிரேவியா செஞ்சுக்குவோம்.

கைக்குத்தல் அரிசி சாதம்தான் சாப்பாட்டுக்கு. அதில் நிறைய நார்ச்சத்து இருக்கு. இரவு ஏழு மணிக்கு கொட்டை வகைகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கிறதோட டின்னர் ஓவர். எங்க வீட்டில் சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம்னு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. காரணம், உணவுக் கட்டுப்பாடு மட்டுமில்ல, வாரம் ஒருமுறை அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்க எல்லோரும் குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தைக் கழிப்பதும்தான் ’’ என்று ரங்கநாதன் பெருமையுடன் சொல்ல, அவர் மனைவி தேன்மொழி ரங்கநாதன் தன் கணவர் விரும்பி சாப்பிடும் உணவுகள் பற்றிச் சொன்னார்.

‘‘ஞாயிற்றுக்கிழமை இவருக்கு பிரியாணி நிச்சயம் வேண்டும். பெரும்பாலும் வெளியே எங்கேயும் சாப்பிடமாட்டார். அசைவ உணவில் பிரியாணி, சிக்கன்-65, மலபார் மீன்குழம்பு மற்றும் சைவ உணவில் வாழைத்தண்டுக் கூட்டு இதெல்லாம் இவருக்குப் பிடித்த உணவுகள்’’ என்றவர், மலபார் மீன் குழம்பு மற்றும் வாழைத்தண்டுக்கூட்டை நமக்காகச் செய்துகாட்டினார்.

p76b.jpg

மலபார் மீன் குழம்பு

தேவையானவை:

 வஞ்சிரம் மீன்- அரை கிலோ
 சின்னவெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி- 2 (பொடியாக நறுக்கவும்)
 சின்னவெங்காயம் மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
 பச்சைமிளகாய்- 2 (குறுக்காக நறுக்கவும்)
 மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
 வறுத்த வெந்தயத்தூள்- ஒரு டீஸ்பூன்
 முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
 இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும். இரண்டாவது தேங்காய்ப்பால் மற்றும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதிக்கவிடாமல் உடனே அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழையை நறுக்கித் தூவவும். மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.

வாழைத்தண்டுக் கூட்டு

தேவையானவை:

 பாசிப்பயறு - ஒரு கப்
 சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - ஒரு கப்
(பொடியாக நறுக்கவும்)
 வாழைத்தண்டு - ஒன்று (நறுக்கவும்)
 வடகம் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - 10 இலைகள்

p76c.jpg

செய்முறை:

பாசிப்பயறு, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும். குழைந்த பதத்துக்கு வந்தவுடன் வாழைத்தண்டு சேர்த்து வேகவிடவும் (வாழைத்தண்டை தனியாக வேகவைத்தால், நிறம் மாறிவிடும்). நன்கு வெந்தவுடன் உப்பு, வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இறக்கும்போது தேங்காய்த்துருவல் தூவவும். சத்தான, சுவையான வழைத்தண்டுக் கூட்டு தயார்.

‘கெவின்கேர்’ ரங்கநாதனின் ஒரு நாள் மெனு!

p76d.jpg

காலை

6 மணிக்கு - 1/2 லிட்டர் தண்ணீர்.
8 மணிக்கு முட்டைதோசை - ஒன்று (முட்டையின் வெள்ளைக்கரு + ஒரு கரண்டி மாவு மட்டும்), முளைகட்டிய  அல்ஃபா விதைகள் - 2 டீஸ்பூன், சைடு டிஷ்- மஷ்ரூம் கிரேவி/முளைகட்டிய பயறு கிரேவி. (அல்லது) முட்டை பிரெட் டோஸ்ட் (முட்டையின் வெள்ளைக்கரு ஆம்லெட் மற்றும் வெள்ளரிக்காய் வைத்தது), பச்சை சட்னியுடன்  - 2

மதியம்

1 மணிக்கு கைக்குத்தல் அரிசி- சாதம் 250 கிராம், 3 வகையான காய்கறிப் பொரியல், ஏதேனும் ஒரு வகை கீரை, சிக்கன் அல்லது மீன்-குழம்பு (குறைந்த எண்ணெயில் பொரித்தது).

இரவு

7 மணிக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்பு வகைகள் மற்றும் பழங்கள்.

Posted

p109k.jpg

காலிஃப்ளவர்-65 பிரியாணி

தேவையானவை:


 பாசுமதி அரிசி - 2 கப்
 தக்காளி - கால் கிலோ (வெந்நீரில் ஒரு நிமிடம் ஊறவைத்து தோல் உரித்து அரைக்கவும்.)
 பெரிய வெங்காயம் - 5 (நீளவாக்கில் நறுக்கியது)
 பச்சைமிளகாய் - 5 (கீறியது)
 பட்டை - ஒரு அங்குல துண்டு (பொடித்தது)
 கிராம்பு - 2 (பொடித்தது)
 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய்த்துருவல் - அரை கப் (அரைத்தது)
 நெய் - 4 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - 4 கப்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

காலிஃப்ளவர்-65 க்கு தேவையானவை:

 காலிஃப்ளவர் - ஒரு பூ பெரியது (அரை கிலோ அளவு - நடுத்தர அளவு பூவாக எடுத்து வைக்கவும்)
 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - அரை பழம்
 வினிகர் - கால் டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 சிவப்பு ஃபுட் கலர் - ஒரு துளி
 எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவர் மற்றும் எண்ணெய் தவிர 65 க்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். காலிஃப்ளவர் பூவை கலக்கிய கலவையில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் காலிஃப்ளவரை முறுகலாகப் பொரித்தெடுக்கவும்.

பிரியாணி செய்யும் முறை:

அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நெய்யை அகலமான பாத்திரத்தில் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து வெடிக்கவிட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 6 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, பச்சைமிளகாய் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு, காரம் சரிபார்த்து ஊற வைத்த அரிசியை வடித்து தண்ணீர் 4 கப் சேர்த்துக் கலக்கவும். அரிசி வெந்து தண்ணீர் பாதியளவு வற்றிய பிறகு, பொரித்த காலிஃப்ளவர் பூவையும், கொத்தமல்லித்தழையையும் சேர்த்து அரிசி உடையாமல் புரட்டி சிம்மில் 10 நிமிடங்கள் தம் போட்டு வேகவிட்டு எடுக்கவும். தயாரான காலிஃப்ளவர்-65 பிரியாணியை தயிர் சட்னி, பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

Posted

p109l.jpg

சிக்கன் சீஸ் கோலா உருண்டை பிரியாணி

கோலா உருண்டை தயாரிக்க:

 எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - கால் கிலோ (தண்ணீர் சேர்க்காமல் பச்சையாக அரைக்கவும்)
 பிரெட் - 2 துண்டுகள் (மிக்ஸியில் பொடிக்கவும்)
 கொத்தமல்லித்தழை நறுக்கியது - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீஸ் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 5 (கொர கொரப்பாகத் திரிக்கவும்)
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
 முட்டை - ஒன்று

செய்முறை:

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் கலந்து உருண்டை பிடித்து வைக்கவும்.

பிரியாணி தயாரிக்கத் தேவையானவை:

 பாசுமதி அரிசி - இரண்டே கால் கப் (முக்கால் பாகம் வெந்தது)
 நெய் - 6 டேபிள்ஸ்பூன்
 தயிர் - 6 டேபிள்ஸ்பூன்
 ரோஸ் எசன்ஸ் - 2 துளி
 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)
 உப்பு - தேவையான அளவு

குழம்பு செய்ய தேவையானவை:

 பெரியவெங்காயம் - 4 (நீளவாக்கில் நறுக்கியது)
 தக்காளி - 3 (நறுக்கியது)
 பச்சைமிளகாய் - 10 (கீறியது)
 கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)
 புதினா இலை - 3 டேபிள்ஸ்பூன்
 பட்டை - 2
 ஏலக்காய் - 2
 கிராம்பு - 2
 இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
 பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 நெய் - 5 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - அரை பழம்

p109m.jpg

குழம்பு செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, எலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். இத்துடன் பெரிய வெங்காயம் சேர்த்து 8 நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். பிறகு
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை என அடுத்தடுத்து சேர்த்துக் கரைய வதக்கி உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தண்ணீர் (இரண்டரை கப்) சேர்த்துக் கொதிக்க விடவும். கோலா உருண்டைகளை கொதிக்கும் குழம்பில் இடவும். கோலா உருண்டையின் மேல் இறங்க, குழம்பை எடுத்து உருண்டையின் மீது 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். மிதமான சூட்டில் மேலும் 5 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும். அடுப்பை அணைக்கும் முன்பு எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கி அடுப்பை அணைக்கவும்.

பிரியாணி ‘தம்’ வைக்கும் பக்குவம்:

பிரியாணிக்கு கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் 2 கரண்டி பிரியாணி அரிசிக் கலவையிட்டு பரப்பவும். அதன் மேல் 6 கோலா உருண்டை மற்றும் 2 கரண்டிக் குழம்பைப் பரப்பவும். இதைப்போல் குழம்பும், பிரியாணி அரிசிக் கலவையையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு, மூடி போட்டு மிதமான தீயில், அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் ‘தம்’ போட்டு வேக விடவும். தயாரான கோலா உருண்டை பிரியாணியை சூடாக தயிர் சட்னியுடன் பரிமாறவும்.

தயிர் சட்னி

தேவையானவை:


 பெரியவெங்காயம் - 2 (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
 பச்சைமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
 தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தயிர் - ஒரு கப் (புளிப்பு இல்லாதது)

செய்முறை:

தயிரைத் தவிர்த்து தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்துகொள்ளவும். பிறகு தயிரையும் சேர்த்துக் கலக்கினால், தயிர் சட்னி ரெடி.

பின்குறிப்பு:

தேவையென்றால்,  துருவிய கேரட் மற்றும் மாதுளை முத்துக்கள் சேர்த்துப் பரிமாறவும்.

Posted
நண்டு மசாலா : செய்முறைகளுடன்...!

 

 

nandumasala.jpg

தேவையான பொருள்கள்: 

  • நண்டு பெரியது - 3 
  • தக்காளி - 2 
  • இஞ்சி - 1 
  • பூண்டு - 1 
  • பெரிய வெங்காயம் - 2 
  • குடை மிளகாய் - 1 
  • மிளகு துள் -1 ஸ்பூன் 
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • தனியா தூள் - 1 /2ஸ்பூன் 
  • சோளமாவு - சிறிது அளவு 



செய்முறை: 
முதலில் நண்டை நன்றாக கழுவி அதன் பிறகு நண்டை சோள மாவில் பிசையவும் பிறகு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நைசாக அரைத்து சேர்க்கவும் 

கொஞ்சம் எண்ணையை வானலியில் உற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .பிறகு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும். வதக்கிய பிறகு தக்காளி குடை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பின்னர் உப்பு தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரத்தில் கலவை கட்டி ஆகிவிடும் இதில் நண்டு துண்டுகளை போட்டு நன்றாக வேக விட வேண்டும். நன்றாக சுண்டியவுடன் பரிமாறவும்.

சுவையான நண்டு மசாலா ரெடி.

Posted

ஃப்ரெஞ்ச் மக்களின் உணவுகள் வித்தியாசமானவை. நம்மைப் போல் அதிக காரசாரமாக இல்லாமல் மென்மையான உணவை எடுத்துக்கொள்வார்கள். அப்படி ஃப்ரெஞ்ச் மக்களின் உணவுகளை அவர்களுடைய பிரத்யேக தளங்களில் சென்று படித்து அப்படியே நமக்காக செய்து காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். இந்த ரெசிப்பிக்களைச் செய்ய செலவு சற்று கூடுதலாக ஆகும். இவற்றுக்கான பொருட்கள் பெரிய பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும். வித்தியாசமாக சாப்பிட்டுப் பார்க்க விரும்புபவர்கள், ஒரு கை பார்க்கலாம்.

ஏப்ரிகாட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட்

(4 நபர்களுக்கான அளவு)

p81b.jpg

தேவையானவை:

 ஏப்ரிகாட் - 6
 வெனிலா கஸ்டர்டு பவுடர் - 50 கிராம்
 பிரெட் ஸ்லைஸ் - 4
 வெண்ணெய் - 50 கிராம்
 கேரமல் சாஸ் - 60 மில்லி

கேரமல் சாஸ் தயாரிக்கும் முறை:

3 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறவும். அது, பிரவுன் கலராக மாறும்போது, 60 மில்லி தண்ணீரை ஊற்றி, சாஸ் பதத்தில் கிளறி இறக்கினால், கேரமல் சாஸ் தயார். 

ஏப்ரிகாட்டை பாதியாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருக்கவும். அடுத்து, ஏப்ரிகாட்டை சேர்த்து, அதன் இருபக்கமும் லேசான பொன்னிறம் ஆகும்வரை வதக்கவும். பிறகு, கேரமல் சாஸை ஊற்றி நன்றாகக் கிளறவும். சாஸ், திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறி இறக்கவும். இதுதான் கேரமல் ஏப்ரிகாட்.
ஒரு பவுலில் சிறிது கஸ்டர்டு பவுடர், சிறிது தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். டைமண்ட் வடிவத்தில் கட் செய்த பிரெட் துண்டுகளைக் கலக்கி வைத்திருக்கும் கஸ்டர்ட் மாவில் முக்கி எடுக்கவும். பேனை அடுப்பில் வைத்து, சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், கஸ்டர்ட் மாவில் முக்கி எடுத்த பிரெட் துண்டுகளை நன்றாக உதறி பேனில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். இதை, கேரமல் ஏப்ரிகாட்டுடன் சூடாகப் பரிமாறவும்.


லைட்டர் க்ரீம் ப்ரூலீ (Lighter  Creme Brulee)

(3 நபர்களுக்கான அளவு)

p81c.jpg

தேவையானவை:

பழுப்புச் சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
கஸ்டர்டு பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் - 200 மில்லி
முட்டையின் மஞ்சள் கரு - 2
ஃப்ரெஷ் க்ரீம் - 250 மில்லி
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் பழுப்புச் சர்க்கரை, கஸ்டர்டு பவுடர், கார்ன்ஃப்ளார் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து நன்றாகக் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வேறொரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும், ஃப்ரெஷ் க்ரீமையும் சேர்த்து லேசாக சூடு செய்யவும். அதிகமாக சூடுபடுத்தக்கூடாது. இந்த பால் க்ரீம் கலவையை, கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு கலவையில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

அதோடு, வெனிலா எசன்ஸையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்துகொள்ளவும். இக்கலவை முழுவதையும் ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் விடாமல் கிளறவும். இது 20 நிமிடங்களில் திக்காக மாறும். கரண்டியால் கிளறிப் பார்த்தால், பாத்திரத்தில் ஒட்டாமல் சுத்தமாக ஒரு கோடு போல வரும். நன்கு கெட்டியானதும் இறக்கி, ஆற வைத்து ராமிகின் கிண்ணங்களில் ஊற்றி, கிண்ணங்களை மூடாமல் ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைக்கவும். மூடாமல் வைத்தால்தான் மேலே ஆடை போல ஒரு லேயர், வரும். இந்த லேயர் கேரமலை உள்ளே போகாமல் வைக்கும். மீதமுள்ள சர்க்கரையை கருக்கி கேரமல் சாஸ் செய்து ஒவ்வொரு கிண்ணத்தின் மீதும் ஊற்றவும். மீண்டும் கிண்ணங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

கஸ்டர்டு கலவையைக் கிளறும்போது அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக்கிளறவும். இல்லையென்றால், கலவை அடிப்பிடித்து கட்டிகள் வந்துவிடும். அவ்வாறு கட்டிகள் வந்துவிட்டாலும், விஸ்க்கால் கலவையை நன்கு அடித்தால், க்ரீம் போல ஆகி விடும்.


p81d.jpg

ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப் (French Onion Soup)

(2 நபர்களுக்கான அளவு)

சூப்புக்கு:


 வெள்ளை வெங்காயம் - 2
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தைம் இலைகள் - ஒரு கொத்து
 பட்டை - ஒன்றில் பாதி
 ஒயிட் வைன் - 2 டீஸ்பூன் (அல்லது வினிகர்)
 ஸ்விஸ் வெஜிடபிள் ப்யுயான்
(bouillon) - ஒரு டீஸ்பூன்
 மைதா மாவு - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

டாப்பிங்குக்கு:

 பூண்டு - ஒரு பல் (நசுக்கியது)
 ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்
 பார்மேசன் சீஸ்  - 2 டேபிள்ஸ்பூன்
 பிரெட் துண்டுகள் - 2

செய்முறை:

வெள்ளை வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, அதை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேனில் ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தைம் இலைகள் மற்றும் பட்டை இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து வெங்காயம் ஃப்ரவுன் கலர் ஆகும் வரை நன்றாக வதக்கவும். மைதா மாவை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவு, ஒயிட் ஒயின், 2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு முதலியவற்றை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கட்டி ஆகாமல் நன்றாக கொதிக்க விடவும்.

சூப் நன்கு கொதித்தவுடன் பட்டை இலையை எடுத்துவிட்டு ஸ்விஸ் வெஜிடபிள் ப்யுயானை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிட்டால் சூப் ரெடி.

பிரெட்டை வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கி அவற்றின் மேல்... நசுக்கிய பூண்டு, ஆலிவ் ஆயில் மற்றும் சீஸை நன்றாகக் கலந்து வைக்கவும். இந்த பிரெட் துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து பொன்னிறமாகும்வரை பேக் செய்து எடுக்கவும். பேக் செய்த பிரெட் துண்டுகளை சூப்பின் மேல் வைத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

ஒயிட் வைனுக்கு பதில் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம். தைம் ஸ்பிரிக்ஸுக்கு பதில் உலர்ந்த தைம் சேர்த்துக் கொள்ளலாம். ஸ்விஸ் வெஜிடபிள் ப்புயுயானுக்கு பதில் கார்ன் ஃப்ளார் சேர்த்துக் கொள்ளலாம். ஸ்விஸ் வெஜிடபிள் ப்யுயான், ஃப்ரான்ஸ் நாட்டில் சூப்பில் சேர்க்கும் சூப் ஃப்ளார் ஆகும். ப்ளைன் ஃப்ளாருக்கு பதில் மைதா சேர்த்துக் கொள்ளலாம். பார்மேசன் சீஸுக்குப் பதில் செடார் சீஸ் சேர்த்துக் கொள்ளலாம்.


p81e.jpg

ஃப்ரெஞ்ச் ஆம்லெட் (French Omlet)

(2 நபர்களுக்கான அளவு)

தேவையானவை:


 முட்டை - 3
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பார்மேசன் சீஸ் - ஒரு டீஸ்பூன் 
 டேரகான் (tarragon) - 3 கொத்துக்கள்
 ஸ்னிப்டு சிவ்ஸ் (snipped chives) - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பார்ஸ்லி - ஒரு கொத்து

செய்முறை:

டேரகான், ஸ்னிப்டு சிவ்ஸ் மற்றும் பார்ஸ்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சீஸை துருவிக் கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸ், நறுக்கிய டேரகான், ஸ்னிப்டு சிவ்ஸ் மற்றும் பார்ஸ்லியைச் சேர்த்து ஃபோர்க்கால் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

ஒரு பேனில் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி அதில் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றி, ஆம்லெட்டுகளாக ஊற்றி எடுக்கவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும். ஆம்லெட்டுகளைக் கருக விடாமல் மஞ்சள் நிறத்திலேயே எடுத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

டேரகானுக்கு பதில் சோம்புக்கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம். ஸ்னிப்டு சிவ்ஸ்க்குப் பதில் ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்துக் கொள்ளலாம். பார்மேசன் சீஸுக்கு பதில் செடார் சீஸ் சேர்த்துக் கொள்ளலாம்.


p81f.jpg

சிக்கன் மரிங்கோ (Chicken Marengo)

(2 நபர்களுக்கான அளவு)

தேவையானவை:


 சிக்கன் லெக் - 4 பீஸ்
 மஷ்ரூம் - 200 கிராம்
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கார்லிக் ஹெர்ப் பசாட்டா (passata) - அரை கப்
 சிக்கன் ஸ்டாக் க்யூப் - ஒன்று
 கறுப்பு ஆலிவ்ஸ் - 100 கிராம்
 பார்ஸ்லி - 2 கொத்து
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மஷ்ரூமை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் பேனில் ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து வதக்கவும். பிறகு, சுத்தம் செய்த சிக்கன் லெக் பீஸையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து, பசாட்டா மற்றும் கறுப்பு ஆலிவை சேர்க்கவும். சிக்கன் ஸ்டாக் க்யூபையும் உடைத்துச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பேனை மூடி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்தவுடன் நறுக்கிய பார்ஸ்லியை தூவி இறக்கவும்.

குறிப்பு:

கார்லிக் ஹெர்ப் பசாட்டாவை வீட்டிலேயே செய்யலாம். கால் கிலோ தக்காளியுடன் 2 பூண்டுப்பல், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் சர்க்கரை மற்றும் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து ஒரு குக்கரில் வேகவைக்கவும். தேவையென்றால், தக்காளியின் தோலை எடுத்து விட்டும் வேகவைக்கலாம். வெந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஒரு பேனில் ஊற்றி நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கினால், பசாட்டா ரெடி. சிக்கன் வேகவைத்த தண்ணீரை உறைய வைப்பதுதான் சிக்கன் ஸ்டாக் கியூப் இதை வெளிநாடுகளில் உபயோகிப்பார்கள்.


p81g.jpg

ப்ரான் & ஃப்னல் பிஸ்க் (Prawn & Fennel Bisque)

(4 நபர்களுக்கான அளவு)

தேவையானவை:


 ப்ரான் (இறால்) பெரியது - 200 கிராம்
 ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
 வெங்காயம் - ஒன்று நறுக்கியது
 சோம்புக்கீரை - 2 கொத்து
 கேரட் - ஒன்று
 ஒயிட் வைன் வினிகர் - 50 மில்லி
 தக்காளி - ஒன்று (பெரியது)
 ஸ்டாக் வாட்டர் - 500 மில்லி
 பாப்ரிக்காதூள் - 2 பெரிய சிட்டிகை
 உப்பு, வெண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்யவும். அதன் மேல் ஓடுகளை தனியே வைக்கவும். அடுப்பில் பேனை வைத்து, ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி, வெங்காயம், சோம்புக்கீரை, கேரட் மற்றும் இறாலை ஓடுகள் சேர்த்து வதக்கி வேகவிடவும். காய்கறிகள் வெந்தவுடன் ஒயிட் வைன், தக்காளி, ஸ்டாக் வாட்டர் மற்றும் பாப்ரிக்காதூள் சேர்த்து வேகவிடவும். அலங்கரிப்பதற்காக நான்கு இறாலை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை நறுக்கிக் கொள்ளவும்.

வெந்த காய்கறிகளை ஒரு ப்ளண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இறால் ஓடுகளை எடுத்துவிட்டு, காய்கறிகளை மட்டும் நைசாக அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் நறுக்கி வைத்த இறாலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த உடன் இறக்கவும்.

இவ்வாறு செய்து ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு தேவைப்படும்போது ரீ ஹீட் செய்து பரிமாறலாம்.

ஒரு பேனில் வெண்ணெயை சேர்த்து உருக்கி, அதில் தனியாக எடுத்து வைத்துள்ள நான்கு இறாலைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பரிமாறும் போது சூடான சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, அதன் மேல் வெண்ணெயில்் வேகவைத்த ஒரு இறாலைச் சேர்த்து சோம்புக் கீரையை சிறிது தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

ஒயிட் வைனுக்கு பதில் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம். பாப்ரிக்காதூள் என்பது மிளகாய்த்தூள் ஆகும். ஸ்டாக் வாட்டர் தயாரிக்க, 4 இறாலைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும். இதில் உள்ள இறாலை சூப்பில் சேர்த்து விடவும்.

Posted

p37g.jpg

ஃபிஷ் பால்ஸ் இன் சிக்கன் சூப்

தேவையானவை:

 முழுசீலா மீன் - 2 (சதைப்பகுதி மட்டும்)

 கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்

 முட்டையின் வெள்ளைக்கரு - ஒரு முட்டையிலிருந்து எடுத்தது

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

சிக்கன் ஸ்டாக் தயாரிக்க:

 எலும்புள்ள சிக்கன் துண்டுகள் - 250 கிராம்

 ஸ்லைஸ்களாக்கிய பெரியவெங்காயம் - ஒன்று

 நறுக்கிய தக்காளி - ஒன்று

 பூண்டுப்பல் - 4

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 தண்ணீர் - 2 கப்

சூப் செய்ய:

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது) 

கொத்தமல்லித்தழை - கால் கப் (நறுக்கியது)

 தக்காளி - ஒன்று நறுக்கியது

 பட்டை - ஒன்று (அரை இஞ்ச்)

 சோம்பு - அரை டீஸ்பூன்

 மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் ஸ்டாக் செய்யக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அரை மணி நேரம் வேகவிடவும். சிக்கன் வெந்ததும் அடுப்பை அணைத்து, தண்ணீரையும், வெந்த காய்கறிகளையும் வடிகட்டி தனித்தனியாக பாத்திரங்களில் எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு சேர்த்துத் தாளித்து, பட்டை, பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து தக்காளி கரையும்வரை வதக்கி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இத்தோடு ஸ்டாக் செய்தபோது வடிகட்டிய கலவையைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். இனி, அரைத்தவற்றை சிக்கன் ஸ்டாக்கோடு சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.

மீனை நன்கு கழுவி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த மீன் கலவை, கார்ன்ஃப்ளார், முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சூப் கொதிக்க ஆரம்பிக்கும்போது, மீன் உருண்டைகளை மெதுவாகச் சேர்த்து கொதிக்கவிடவும். மீன் உருண்டை வெந்து மிதந்து மேலே வரும்போது கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி அடுப்பை அணைத்து பவுலில் ஊற்றிப் பரிமாறவும்.

Posted

இண்டியன் ஸ்ட்ரீட் ஃபுட்

 

 

ந்தியாவில் பல பாகங்களிலும் வலம் வந்தபோது, அங்குள்ள தெருவோரக் கடைகளில், தான் சுவைத்து ரசித்த பிரபலமான உணவு வகைகளை, அவற்றின் சுவைக் குன்றாமல் அப்படியே ரெசிப்பியாகத் தந்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.

p59b.jpg

ஜிலேபி

தேவையானவை:


 மைதா மாவு - ஒரு கப்
 கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆப்பசோடா - கால் டீஸ்பூன்
 தயிர் - அரை கப்
 மிதமான சுடுநீர் - முக்கால் கப்
 எண்ணெய் - தேவையான அளவு
 சர்க்கரை - ஒன்றரை கப் (சர்க்கரைப்பாகு தயாரிக்க)
 தண்ணீர் - முக்கால் கப்
 ஆரஞ்சு ஃபுட் கலர் - 2 சிட்டிகை

செய்முறை:

மைதா மாவு, கடலை மாவு, ஆப்பசோடா மூன்றையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், தயிர், சுடுநீர் சேர்த்து மாவைக் கரைத்துக் கொள்ளவும். அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். மெல்லிய துணியில் ஒரு துவாரம் போட்டுக் கொள்ளவும். துவாரம் மிகவும் சிறியதாகவோ அல்லது மிகவும் பெரியதாகவோ இருக்கக் கூடாது.

இனி துணியில் மாவை ஊற்றி மருதாணி கோன் பிழிவது போல சூடான எண்ணெயின் மேல் மாவைப் பிழிந்து பொன்னிறமாகப் பொரியவிட்டு எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். கம்பிப் பதம் வந்ததும், அடுப்பை அணைத்து, ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்க்கவும்.

ஜிலேபியை பொரித்தெடுத்ததும் அதிலேயே ஊற விட்டு விட வேண்டாம்.  சூடான சர்க்கரைப் பாகில் ஒரு நிமிடம் முக்கி எடுத்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் மேலே பாலாடை ஊற்றிப் பரிமாறலாம்.

குறிப்பு:

வடஇந்தியாவில் மிகப் பிரபலமான இந்த ஜிலேபியை, சுடச்சுட சாப்பிடும்போது இதன் சுவையே அலாதிதான்.


p59c.jpg

குல்ஃபி

தேவையானவை:


 ஃபுல் க்ரீம் பால் (அ) சுண்டக் காய்ச்சிய பால் - 4 கப்
 சர்க்கரை - கால் கப்
 சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை சேர்க்காத கோவா - முக்கால் கப்
 பிஸ்தா, பாதாம் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

சுண்ட காய்ச்சிய பாலில் இருந்து ஒரு கப் எடுத்து அதில் சோளமாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் பாலை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் சர்க்கரை மற்றும் சோளமாவு கரைத்த பாலைச் சேர்த்து, மிதமான தீயில் சூடாக்கவும். சர்க்கரை கரையும் வரை கிளறவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது ஆற விடவும். இதனுடன் சர்க்கரை சேர்க்காத கோவா, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, குல்பி அச்சுகளில் ஊற்றவும். 6 முதல் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். சூப்பர் குல்ஃபி தயார். பஞ்சாப் மாநிலத்தின் தெருவோரக் கடை பிரபல உணவுகளில் இதுவும் ஒன்று. தற்போது இந்தியா முழுக்கவே பிரபலம்.


p59d.jpg

ஆலு டிக்கி

தேவையானவை:


 வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 6 (மீடியம் சைஸ்)
 சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 கடலைப்பருப்பு - கால் கப் (பூரணம் தயாரிக்க)
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி - சிறிய துண்டு (துருவிக் கொள்ளவும்)
 பச்சைமிளகாய் - 2
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

செய்முறை:

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து குழையாமல் வேகவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த கடலைப்பருப்பை இதில் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். இத்துடன் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சித்துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி நன்கு மசித்துக் கொள்ளவும்.

உருளை கலவையுடன் சோளமாவு சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை உள்ளங்கையில் வைத்து குழியாக்கி அதனுள்ளே கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி, வடைகள் போல தட்டையாகத் தட்டவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டிக்கியை பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும். புதினா, புளி சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

சூடான ஆலு டிக்கி, பஞ்சாபியர்கள் விரும்பிச் சாப்பிடும் பிரபலமான தெருவோரக் கடை உணவு.


p59e.jpg

மூங்தால் பக்கோடா

தேவையானவை:


 பாசிப்பருப்பு - ஒரு கப்
 பச்சை மிளகாய் - 3
 மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊற விடவும். இதனுடன் மல்லி, மிளகு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் தேவையான உப்பு சேர்த்துப் பிசைந்து உருண்டை பிடிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை சேர்த்துப் பொரித்தெடுக்கவும். இனிப்பான சாஸ் மற்றும் பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

மும்பையின் தெருவோரங்களில் விற்பனையாகும் பாப்புலர் பக்கோடா இது.


p59f.jpg

வடா பாவ்

தேவையானவை:


 பாவ் பன் -  4
 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 இனிப்பு சட்னி - 2 டீஸ்பூன்

வடை செய்ய:

 மசித்த உருளைக்கிழங்கு - ஒன்றரை கப்
 உப்பு - தேவையான அளவு
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, பெருங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, வடை போல் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பாவ் பன்னை, குறுக்காக நறுக்கி இரண்டாக்கி வெண்ணெய் தடவி, சூடாக்கவும். பன்னின் உள்ளே இனிப்புச் சட்னியை தடவி வடையை நடுவே வைத்து மூடி பரிமாறவும்.

குறிப்பு:

மும்பையின் அடையாளங்களில் வடா பாவும் ஒன்றாகும். இதை ‘ஏழைகளின் பர்கர்’ என்று மும்பையில் அழைக்கிறார்கள்.


p59g.jpg 

பாவ் பாஜி

தேவையானவை:


 பாவ் பன் - 4
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

பாஜி தயாரிப்பதற்கு:

 உருளைக்கிழங்கு - ஒன்று
 கேரட் - 2
 பீன்ஸ் - 10
 காலிஃப்ளவர் - 10 பூக்கள்
 குடமிளகாய் - ஒன்று
 பச்சைப்பட்டாணி - 50 கிராம்
 வெங்காயம் -ஒன்று
 தக்காளி - ஒன்று
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 2
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 பாவ் பாஜி மசாலா - 3 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கி பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து குக்கரில் தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த காய்கறிகளை மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு சூடாக்கி, சீரகம் சேர்த்து பொரிய விடவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், பாவ் பாஜி மசாலா, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்து மசித்து வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். காய்கறிக் கலவை தண்ணீர் இல்லாமல் நன்கு கிரேவி பதத்துக்குச் சேர்ந்து வந்ததும், ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கவும். இதுதான் பாஜி மசாலா/கிரேவி வாணலியை சூடாக்கி வெண்ணெய் சேர்த்து உருக விட்டு, இரண்டாக நறுக்கி வைத்துள்ள பாவ் பன்னை டோஸ்ட் செய்யவும். தட்டில் பன்னை வைத்து, அருகே கிண்ணத்தில் ரெடி செய்த பாஜியை வைத்து மேலே கொத்தமல்லித்தழை தூவி ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறினால் பாவ் பாஜி ரெடி.


p59h.jpg

கச்சோரி

தேவையானவை:


 கோதுமை மாவு - அரை கப்
 மைதா மாவு - அரை கப்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு

பூரணம் செய்ய:

 பச்சைப்பட்டாணி - ஒரு கப் (வேக வைத்தது)
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 மாங்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 கடலைமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, ஆப்பசோடா, எண்ணெய் சேர்த்து பிசறிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்து மாவை ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வேகவைத்து மசித்த பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், சோம்புத்தூள், சாட் மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கலக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கடலைமாவை கலவையில் தூவி கிளறி இறக்கினால், உதிரியான பூரணம் தயார்.

கச்சோரிக்கு பிசைந்த மாவை திரட்டி, வட்டமாகத் தேய்க்கவும். இதன் உள்ளே பூரணம் வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்தால். கச்சோரி தயார்.

கச்சோரியின் உள்ளே வைக்கப்படும் பூரணம் உங்கள் விருப்பப்படி காய்கறிகளாகவோ அல்லது முளைவிட்ட பயறு, கறுப்பு உளுந்து என வித்தியாசமாக வைத்தோ பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு:

ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான கச்சோரியை அங்கு காலைநேர சிற்றுண்டியாக உண்பார்கள்.


p59j.jpg

பேல் பூரி

(இந்தியா முழுவதும், இப்போது பிரபலமான இந்த பேல்பூரி மும்பை, டெல்லி மாநகரங்களில் ரொம்பவே ஸ்பெஷல்)

தேவையானவை:

 பொரி - 2 கப்
 உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்தது)
 முளைவிட்ட பயறு -அரை கப்
 புளி சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
 ஓமப்பொடி - கால் கப்
 பாப்படி - 6
 வறுத்த வேர்க்கடலை - கால் கப்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 கறுப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 வெங்காயம் - ஒன்று
 தக்காளி - ஒன்று
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கேரட் - ஒன்று (துருவியது)

செய்முறை:

கேரட்டைத் துருவிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய சதுரங்களாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பொரியைச் சேர்த்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். இத்துடன் புளி சட்னி, கொத்தமல்லித்தழை சட்னியை ஊற்றிக் கலக்கவும். பிறகு சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சேர்த்து நன்கு குலுக்கவும். பாத்திரத்தின் உள்ளே பாப்படியை இரண்டாக உடைத்துப் போட்டு எலுமிச்சைச் சாற்றை ஊற்றவும். இறுதியாக கறுப்பு உப்பு, ஓமப்பொடி, வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்கி, கொத்தமல்லித்தழை, துருவிய கேரட் தூவிப் பரிமாறவும்.


p59k.jpg

கோல்கப்பா (பானி பூரி)

பூரி செய்ய:


 வறுத்த ரவை - ஒரு கப்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
 உப்பு - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பூரணத்துக்கு:

 உருளைக்கிழங்கு - ஒன்று
(வேக வைத்தது)
 வெங்காயம் - ஒன்று
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

பானி செய்வதற்கு:

 கொத்தமல்லித்தழை - அரைகப்
 புதினா - கால் கப்
 இஞ்சி - ஒரு துண்டு
 பச்சைமிளகாய் - ஒன்று
 புளி - கோலி அளவு
 வெல்லம் - சிறிய துண்டு
 கறுப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கார பூந்தி - ஒரு கைப்பிடி

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் பூரி செய்ய கொடுத்துள்ள ரவை, மைதா, உப்பு, ஆப்பசோடா, எண்ணெய் சேர்த்துப் பிசிறவும். பிறகு தேவையான நீர் சேர்த்து மாவைக் கெட்டியாகப் பிசையவும். மாவைத் தேய்த்து சூடான எண்ணெயில் சின்னச் சின்ன பூரிகளாகப் பொரித்து எடுக்கவும்.

பூரணம் செய்ய, உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

பானி செய்வதற்கு, கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி, பச்சைமிளகாய், புளி, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக நீர் விட்டு அரைத்து கலக்கி, ஒரு பவுலில் வைக்கவும். கூடவே கறுப்பு உப்பு, சீரகத்தூள் சேர்த்து காரபூந்தியைத் தூவவும்.

பரிமாறும் முறை:

பூரியின் நடுவே துளைகளை போட்டு அதன் உள்ளே உருளைக்கிழங்கு வெங்காயக் கலவையை வைக்கவும். தயாரித்த பானியை உருளைக்கிழங்கின் மீது ஊற்றி மேலே ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

கொல்கத்தாவில் கோல்கப்பா எனவும், மும்பையில் பானிபூரி எனவும் அழைக்கப்படுகிறது. இனிப்பு நீர் சேர்த்தும் பரிமாறலாம். வடநாடுகளில் தொன்னையில் வைத்து கொடுக்கப்படுகிறது கோல்கப்பா எனும் பானி பூரி.


p59l.jpg

டோக்ளா

தேவையானவை:


 கடலை மாவு - ஒன்றரை கப்
 ரவை - ஒன்றரை டீஸ்பூன்
 இஞ்சி- பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 ஃப்ரூட் சாலட் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு, சீரகம், வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 சர்க்கரை - 2 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 தேங்காய்த்துருவல் - சிறிதளவு

செய்முறை:

ஒரு பவுலில் டோக்ளா செய்ய கொடுக்கப்பட்டுள்ள கடலை மாவு, ரவை, மஞ்சள்தூள், இஞ்சி பச்சைமிளகாய் விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் பெருங்காயத்தைச் சேர்த்துப் பிசிறவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தை தண்ணீர் ஊற்றி வைத்து சூடானதும், ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும். கரைத்த மாவில் ஃப்ரூட் சாலட் சேர்த்துக் கலக்கி பிறகு தட்டில் ஊற்றவும். இதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி 10-12 நிமிடம் ஆவியில் வேக விடவும். ஃப்ரூட் சாலட் கலந்து உடனே மாவை வேகவிட வேண்டும். வெந்த பிறகு இட்லியை எடுத்து சதுர வடிவில் கட் செய்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், எள், கறிவேப்பிலையைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு 2 டேபிள்ஸ்பூன் நீர் ஊற்றி, எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரை சேர்க்கவும். அடுப்பை அணைத்து தயார் செய்து வைத்த டோக்ளா மீது தாளித்ததை ஊற்றி, மேலே கொத்தமல்லித்தழை, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:

குஜராத்தின் மிகவும் பிரபலமான உணவு, நிறைய விதமான சுவைகளிலும் செய்வதுண்டு.


p59m.jpg

ஜிகர்தண்டா

தேவையானவை:


 சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப்
 பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன்
 நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 2 டீஸ்பூன்
 ஐஸ்க்ரீம் - தேவையான அளவு
 சர்க்கரை - கால் கப்
 பாதாம் - அலங்கரிக்க

செய்முறை:

சுண்டக் காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து அரை கப் ஆகும் வரை மீண்டும் சுண்ட காய்ச்சவும். இறக்குவதற்கு முன்னர் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, ஆற விட்டு குளிர வைக்கவும். பாதாம் பிசினை தண்ணீரில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 8 மணி நேரம் ஊற விடவும். பரிமாறப் போகிற கண்ணாடி டம்ளரை எடுத்து முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின் சேர்க்கவும். பிறகு நன்னாரி அல்லது ரோஸ் சிரப் ஊற்றிக் கலக்கவும். பிறகு பால் ஊற்றவும். இதேபோல் இன்னொரு அடுக்கு ஊற்றவும். மேலே ஐஸ்க்ரீம் வைத்து, பாதாம் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா.


p59n.jpg

பருத்திப்பால்

தேவையானவை:


 பருத்தி விதை - 100 கிராம்
 வெல்லம் (அ) கருப்பட்டி - 100 கிராம்
 அரிசி மாவு - 50 கிராம்
 சுக்குத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய்ப்பால் - 2 கப்
 ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - கால் கப்

செய்முறை:

பருத்தி விதையை 10 மணி நேரம் ஊற விட்டு, பிறகு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துப் பிழிந்து வடிகட்டி பால் எடுக்கவும். கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டவும். பருத்திப் பாலுடன் அரிசி மாவை கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். கொதி வரும் போது தீயை மிதமாக்கி கருப்பட்டிக் கரைசல், சுக்குத்தூள், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். கலவை மீண்டும் ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கி இறக்கிப் பரிமாறவும். பருத்திப்பால் ரெடி.

குறிப்பு:

மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால், ஆரோக்கியத்துக்கு ஏற்றது. ஜலதோஷம் இருமல் போக்கும். காலையில் வண்டியில் வைத்து, மதுரை வீதிகளில் விற்பர்.


p59p.jpg

காண்ட்வி

தேவையானவை:


 கடலை மாவு - ஒரு கப்
 தயிர் - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 இஞ்சி-பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு, சீரகம், எள் - தலா கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,  இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, உப்பு தயிர், தேவைக்கேற்ப நீர் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் கலக்கி வைத்த மாவை ஊற்றி கெட்டியாகக் கிளறவும். மாவு வெந்ததும், எண்ணெய் தடவிய தட்டின் பின்புறம் மாவை கொட்டி பரவி வைக்கவும். சற்று ஆறியதும் கத்தியால் நீளவாக்கில் கீறி உருட்டவும். எல்லாவற்றையும் உருட்டி, தட்டில் அடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, எள், சீரகம், கறிவேப்பிலை தாளித்து எலுமிச்சைச் சாறு விட்டு அதை உருட்டி வைத்துள்ள காண்ட்வி மேல் ஊற்றவும். தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

குஜராத்தில் மிகவும் பிரபலமான உணவு காண்ட்வி.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • முன்பு உசுபபேற்றல்கள்  செய்து கொண்டிருந்த  தமிழ் தேசியவாதிகள் இப்போது  அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்கள் பொறுமை காத்து மிகுந்த பொறுப்புணர்சியுடன்  யோசித்து ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டிற்கு எதுவிதமான பாதிப்பு வராதபடி நடந்து கொள்ளுமாறு பாடம் எடுக்கின்றனர்.
    • அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄
    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.