Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

 
மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம்.
மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை.

அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன், டேவிட் வார்னர் துணை கேப்டன், ஏரோன் பிஞ்ச், ஜார்ஜ் பெய்லி, ஷான் மார்ஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்ரவுண்டராக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை அறிமுகம் இல்லாத இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக ஜொயெல் பாரிஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜொயெல் பாரிஸ் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஸ்காட் போலண்ட் கடந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்டோரியா அணிக்காக சிறப்பாக வீசியுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் ராட் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

கேன் ரிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில் ஆகியோர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை.

முதல் போட்டி பெர்த்தில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. முழு நேர ஸ்பின்னர் இல்லாதது அமையப்போகும் பிட்சை அறிவுறுத்துவதாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சு பார்ம் ஆஸ்திரேலிய அணி தேர்வில் பிரதிபலித்துள்ளதாக தெரிகிறது.

அணி விவரம்:

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், ஜேம்ஸ் பாக்னர், ஏரொன் பிஞ்ச், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஜோயல் பாரிஸ், மேத்யூ வேட்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8064904.ece

  • Replies 53
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

”அவுஸ்திரேலியா மிகவும் சவால் மிகுந்த அணி” டோனி

January 06, 2016

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இருப்பதால் நிம்மதி அடைகிறேன் என்று அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 12ம் திகதி பெர்த்தில் நடக்கிறது.

308816-ms-dhoni-nets-sad-700

இந்த தொடருக்காக டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து அவுஸ்திரேலிய கிளம்பியது. இதற்கு முன்னதாக டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:- “அவுஸ்திரேலியா மிகவும் சவால் மிகுந்த அணி. அவுஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக விளையாடும் போது எப்போதும் அனுபவமும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.

இந்திய துணை கண்டத்தை காட்டிலும் வெளிநாட்டில் உள்ள ஆடுகளத்தன்மை வேறு. சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டிலும் வித்தியாசத்தை பார்க்க முடியும். அஸ்வின் எங்களது பிரதான சுழற்பந்து வீச்சாளர். ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியிருப்பதும் நல்ல விடயம். வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படாத போது, எனது பணியை ஓரளவு குறைக்கக்கூடியவர் அஸ்வின் தான். அவர் அணியில் இருப்பதால் நான் நிம்மதி அடைகிறேன்.

அவரது பந்து வீச்சு கொஞ்சம் சோடை போன சமயத்தில், அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவர் நல்ல நிலைக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்பாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பது மனநிறைவு தருகிறது. இது டி20 உலக கிண்ணத்திற்கு முன்பாக சரியான லெவன் அணியை அடையாளம் காண உதவும்” என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=7261&cat=2

  • தொடங்கியவர்

இந்தியா- அவுஸ்திரேலிய பயிற்சிப்போட்டிகள் ஆரம்பம்

January 08, 2016

இந்தியா- அவுஸ்திரேலிய லெவன் அணிகள் மோதும் முதல் பயிற்சிப் போட்டி இன்று பெர்த்தில் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது.

India-vs-Australia-Warm-match-live-streaming-preview-8th-Feb-2015

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதன்படி இன்று வெஸ்டன் அவுஸ்திரேலிய லெவன் அணிக்கெதிராக டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. 50 ஓவரைக் கொண்ட 2வது பயிற்சி ஆட்டம் நாளை நடக்கிறது. இந்த இரண்டு போட்டியும் பெர்த்தில் நடக்கிறது.

http://www.onlineuthayan.com/sports/?p=7378

  • தொடங்கியவர்

செல்ஃபி, சிக்ஸருடன் விராட் விஸ்வரூபம்: ஆஸி. பயணத்தை வெற்றியோடு துவங்கியது இந்தியா!

 

ந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி,  டி20 போட்டியாக நடைபெற்றது. பெர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா,  பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 12 ரன்களாக இருந்தபோது ரோஹித் ஷர்மா அவுட் ஆக,  துணை கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தவான் - கோலி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேற்கு ஆஸ்திரேலியா தடுமாறியது.

230895.jpg

விராட் கோலி,  7 பவுண்டரி 3 சிக்சருடன் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறவிட்டார். மறுபுறமும் தவான் அதிரடியாக அரை சதம் அடிக்க,  இவர்களது பார்ட்னர்ஷிப் 149 ரன்களாக உயர்ந்தபோது,  கோலி அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் தோனியின் அதிரடியால், இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து,  192 ரன்களை குவித்தது.

230897.jpg


பின்னர் ஆடிய மேற்கு ஆஸ்திரேலியா,  இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால்,  20 ஓவர்களில் 118 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து,  74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஜடேஜா, அக் ஷர் படேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, வெற்றியோடு பயணத்தை துவங்கியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்துவோம் என போட்டிக்கு பின் பேசிய ஷிகர் தவான் தெரிவித்தார்.

வைரலான விராட் கோலி செல்ஃபி :

 

 

 



ஆட்டத்தின் நடுவே, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ரசிகர்களோடு இந்திய துணை கேப்டன் விராட் கோலி செல்ஃபி எடுத்து,  ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.

இந்த சுற்றுப்பயணத்துக்கு முன்பு பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவின்போது,  ஆஸ்திரேலிய பயணம் குறித்த கேள்விக்கு,  " எங்கள் ஆட்டத்தை ரசிக்க,  அடிலெய்டு பாலத்தில் மக்கள் வரிசையில்  காத்திருந்தது தான் என்னை சதமடிக்க வைத்தது. அவர்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/57402-indian-team-started-aussie-tour-with-74-run-win.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் கடும் சவாலாக இருக்கும்: டேரன் லீ மேன்

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன். | கோப்புப் படம்.
ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன். | கோப்புப் படம்.

வரும் செவ்வாயன்று பெர்த்தில் முதல் ஒருநாள் போட்டியுடன் தொடங்கவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு முதல் ஒருநாள் தொடரில் இந்திய அணியை சந்திக்கிறது ஆஸ்திரேலியா

இரு அணிகளுமே ஆவேசமான விதத்தில் ஆடுவதால் இது ஒரு விறுவிறுப்பான தொடராக அமையும் என்றார் டேரன் லீ மேன்.

“இந்திய அணியினரும் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், ஆகவே இந்த 5 போட்டிகளில் அந்த விதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்புகிறேன்.

இந்திய அணியும் ஆஸ்திரேலியா போல் ஆடுவதால் இந்தத் தொடரில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

இளம் பவுலர்களான ஸ்காட் போலண்ட், ஜொயெல் பாரிஸ் ஆகியோர் சூழ்நிலையை சரியாகக் கையாள்வார்கள் என்று கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட் அவர்களுக்கு ஒரு மேம்பாட்டை அளிக்கும், அவர்கள் இதன் அழுத்தங்களை சரியாகக் கையாள்வார்கள்.

பெர்த் பிட்ச் நிச்சயம் வேகமும், பந்துகள் எழும்பும் ஆட்டக்களமாகவே இருக்கும். இந்திய அணி ஒரு திறமையான ஒருநாள் அணியாகும், உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி. தரமான அணியாகும் இந்திய அணி, எனவே ஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தொடர் சவாலே.

எனவே நாம் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. முதல் போட்டியில் நன்றாகத் தொடங்குவது அவசியம்” என்றார் டேரன் லீ மேன்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/article8081939.ece

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

January 09, 2016

அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது.

 

இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.  இதன்படி இந்தியா- அவுஸ்திரேலிய லெவன் அணிகள் மோதும் முதல் டி20 பயிற்சிப் போட்டி இன்று பெர்த்தில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இதன் படி ஷிகர் தவான், ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தவான், கோஹ்லி அதிரடியில் மிரட்டினர். தவான் 46 பந்தில் 74 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), கோஹ்லி 44 பந்தில் 74 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். அடுத்து வந்த அணித்தலைவர் டோனி 2 சிக்சருடன் 14 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது. டோனி (22), குருகீரட் சிங் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய லெவன் அணி இந்திய பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது. இதனால் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது. தொடக்க வீரர் டிராவிஸ் பிர்ட் மட்டும் அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனையடுத்து இந்தியா 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் நின்று போராடிய பிர்ட் டிராவிஸ் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில், பாரிந்தர் சரன், ஜடேஜா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா- அவுஸ்திரேலிய லெவன் அணிகள் மோதும் 50 பயிற்சிப் போட்டி நாளை நடக்கிறது.

http://www.onlineuthayan.com/sports/?p=7407&cat=2

  • தொடங்கியவர்

2வது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

 
 
ஜடேஜா (2/38), அஸ்வின் (2/32) சிறப்பாக வீசி மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளித்தனர். | படம்: ஏ.பி.
ஜடேஜா (2/38), அஸ்வின் (2/32) சிறப்பாக வீசி மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளித்தனர். | படம்: ஏ.பி.

மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

50 ஓவர்களை கொண்ட இந்த போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 49.1 ஓவரில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷிகர் தவண் 4, விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 5.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன் என்ற நிலையில் ரோஹித் சர்மாவுடன் இணைந்த ரஹானே சிறப்பாக ஆடினார்.

ரோஹித் 67, ரஹானே 41 ரன்களில் வெளியேறினர். அடுத்த வந்த குர்கீரத் சிங் மான் 6, தோனி 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் மனிஷ் பான்டே 58, ஜடேஜா 26, அக்ஸர் படேல் 8 ரன்கள் சேர்க்க இந்திய அணி கவுரவமான ஸ்கோரை பெற்றது.

மேற்கு ஆஸி. தரப்பில் போர்ட்டர் 5 விக்கெட் வீழ்த்தினார். 250 ரன்கள் இலக்குடன் விளையாடிய மேற்கு ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவரில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக மோர்கன் 50, கார்டர் 45 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ரிஷி தவண், ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்திய அணி நேற்றுமுன்தினம் இதே அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இரு பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது.

இந்த புத்துணர்ச்சியுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வரும் 12ம் தேதி இந்திய அணி மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article8088884.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒருநாள் போட்டி தொடர் ஆஸி. அணிக்கே சாதகம்: இயன் சேப்பல்

 

 
ian_2690911f.jpg
 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆஸ்திரேலிய அணிக்கே சாதகமாக இருக்கும் என அந்நாட்டின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தி டெய்லி டெலிகிராப் நாளிதழில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் ஒரு மந்தமான டெஸ்ட் தொடர் முடிவடைந்து ரசிகர்கள் ஒரு அர்த்த முள்ள தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரு அணிக்கும், 2015-ம் உலகக்கோப்பை வென்ற ஒரு அணிக்கும் இடையிலான போட்டி நடக்கப்போகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு உண்மையான சோதனையை தோனி வழங்க இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்க, இந்திய அணியில் தலைசிறந்த வீரர்கள் மற்றும் திறமையானவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று கூறிவிட முடியாது.

இந்த தொடரால் இரு அணிகளும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்காக தங்களை வலிமையாக்கிக்கொள்ளும். ஆஸி. அணிக்கு முதல் இரண்டு போட்டிகளும் சாதகமாக இருக்கும்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாக இருந்தாலும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் குறைவாக உள்ளார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆடரில் நல்ல தொடக்கம் கொடுக்கும் வார்னர், ஆரோன் பின்ஞ்ச் உள்ளனர். அவர்களை தொடர்ந்து மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், பால்க்னர் ஆகியோரும் விரைவு ரன் குவிப்பில் திறன் படைத்தவர்கள். இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. மேலும் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் சரிவை சந்திப்பதும் வழக்கமாக உள்ளது. இதுவே அணியின் பலவீனமாகவும் இருக்கிறது.

திறமையாகவும், ஆக்ரோஷத் துடன் விளையாடக்கூடிய வீரர்களை இந்திய அணி டாப் ஆர்டரில் கொண்டுள்ளது. ஆனால் விரைவிலேயே விக்கெட்டுகள் சரிந்துவிட்டால் இவர்கள் எச்சரிக்கையுடன் விளையாட தொடங்கிவிடுகின்றனர்.

2011-2012 டெஸ்ட் தொடரில் வாகாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கி வார்னர் 180 ரன்கள் குவித்தார். அப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பந்து வீச்சாளர்கள் தற்போதும் உள்ளனர். உலககோப்பை அரையிறுதியில் ஆரோன் பின்ஞ்ச், ஸ்மித் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தனர்.

வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகிய இவரும் வேகப்பந்து வீச்சை அடித்து ஆடி ரன் சேர்க்கும் திறன் கொண்டவர்கள். இது நடைபெற்றால் வாகா, காபா மைதானங்களில் இந்திய அணி மாற்று வழியாக தங்களுக்கே உரித்தான சுழற்பந்து வீச்சை தான் கையாள முற்சிக்கும்.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணியை தாக்கும் திட்டத்தையே விரும்பும். உள்ளூரில் ஜெயிப்பதற்கான திட்டங்களை ஆஸி. நன்கு தெரிந்து வைத்திருக்கும். ஸ்மித் ஒரு வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.

தோனி யாரையும் குறைசொல்லாத வீரர். ஒருநாள் போட்டி மற்றும் டி 20ல் அவர் உலககோப்பையை வென்று கொடுத்துள்ளார். அடுத்த டி 20 உலககோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால் தனது அணியின் வாய்ப்புகள் குறித்து அறிய அனைத்து உரிமைகளும் தோனிக்கு உள்ளது.

இவ்வாறு இயன் சேப்பல் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article8088922.ece?homepage=true

  • தொடங்கியவர்

சவாலே வாய்ப்பு... வாய்ப்பே சவால்: இளம் வீரர்களுக்கு தோனி

 

 
பெர்த்தில் தோனி. | படம்: பிடிஐ.
பெர்த்தில் தோனி. | படம்: பிடிஐ.

பெர்த்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதான செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் தோனி அணியின் உத்திகள் பற்றி பேசினார்.

அதில் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர் கூறும்போது, “ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாகவும் ஒவ்வொரு வாய்ப்பையும் சவாலாகவும் இளம் வீரர்கள் கருத வேண்டும்” என்று ஊக்க அறிவுரை வழங்கினார்.

மேலும் அவர் கூறியதாவது:

3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் என்பதாகவே அணிச்சேர்க்கை அமையும். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நம்மிடம் இல்லை. யார் சிறப்பாக ஆடப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒவ்வொரு வாய்ப்பையும் சவாலாகவும், ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாகவும் கருத வேண்டும்.

மொகமது ஷமி புதிய பந்து, மிடில் ஓவர்கள், இறுதி ஓவர்கள் என்று அனைத்துப் பகுதியிலும் வீசும் திறனும் அனுபவமும் மிக்கவர். அவரைப்போன்று ஒருவர் அணியில் இருப்பது பலமே, அவரை இழந்தது வருத்தமளிக்கிறது. புதிய வீரர்களைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் அவர்களை களமிறக்குவோம்.

குர்கீரத் அல்லது மணிஷ் பாண்டேயில் ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இருவரில் ஒருவர்தான் 6-ம் நிலையில் களமிறங்க வேண்டும். அது பேட் செய்ய கடினமான இடமாகும். முதல் 4 அல்லது 5 வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது தீர்மானமாகும். எனவே ஆட்டத்தின் போக்கை வைத்து 6-ம் நிலை வீரர் களமிறக்கப்படுவார். 5 அல்லது 6-ம் நிலையில் இறங்கும் வீரர்கள் பேட்டிங் நிலையைப் பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தால் நல்லது.

இந்திய அணியின் வெற்றியை எடுத்துப் பார்த்தால், சில வீர்ர்கள் பல்வேறு தரப்பட்ட டவுனில் இறங்கி விளையாட முடியும், 6 அல்லது 7ம் நிலையில் ஒருசில வீர்ர்களே வெற்றியடைந்துள்ளனர். முதல் தர கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் சிலர் 3-ம் நிலையில் இறங்கியுள்ளதையும், 4 அல்லது 5ம் நிலையில் இறங்கும் வீர்ர்கள் தொடக்க வீரர்களாக முடிவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

எனவே தகவமைத்துக் கொள்வதும், நெகிழ்வுத்தன்மையும் முக்கியம். எனவே நிலையான டவுனை அளிப்பது என்பது யாருக்கும் பயனளிக்காத ஒன்று. மனநிலைதான் முக்கியம் இங்குதான் ஒவ்வொரு வாய்ப்பையும் சவாலாகாவும், ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாகவும் கருத வேண்டியுள்ளது.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8092698.ece

  • தொடங்கியவர்

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரண் பற்றி ஆலோசித்தோம்: ஸ்டீவ் ஸ்மித் தகவல்

 

 
ஆஸ்திரேலிய வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரண் பந்துவீச்சு பற்றி விவாதிக்கப்பட்டது. | கோப்புப் படம்: பிடிஐ.
ஆஸ்திரேலிய வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரண் பந்துவீச்சு பற்றி விவாதிக்கப்பட்டது. | கோப்புப் படம்: பிடிஐ.

இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரீந்தர் ஸ்ரணின் பந்து வீச்சு குறித்து ஆஸ்திரேலிய ஓய்வறையில் வீரர்களிடம் அறிமுகம் செய்து விவாதித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

"நான் ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ரணை அவ்வளவாக பார்த்ததில்லை, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவரது பந்து வீச்சை பார்த்திருக்கிறேன். அவர் பந்துவீச்சு கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. உயரமான ஸ்ரண், தொடக்கத்தில் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்கிறார், பிறகு பல்வேறு விதமாக மாற்றி வீசும் திறமையையும் அவர் கொண்டுள்ளார். நான் அவரைப்பற்றி எங்கள் அணி வீரர்களிடம் பேசியுள்ளேன்.

ஐபிஎல் மூலம் சில இளம் வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு பெறுவார்கள் என்பதை நான் அறிவேன். மணிஷ் பாண்டே, இவர் நன்றாக முன்னேற்றமடைந்த வீரராக திகழ்கிறார். சில நல்ல இன்னிங்ஸ்களையும் அவர் ஆடியுள்ளதை பார்த்திருக்கிறேன். விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோரது அனுபவத்துடன் இந்திய டாப் ஆர்டர் விளங்குகிறது, இவர்களை விரைவில் வீழ்த்துவோம்.

பெர்த் பிட்ச் நியூஸிலாந்துக்கு எதிராக ஆடும்போது வேகமும், எழுச்சியும் இல்லாமல் இருந்தது, தற்போது இந்தியாவுக்கு எதிராக பிட்ச் தனது வேகத்தை மீட்டிருக்கும் என்று நம்புகிறோம்.

முதல் 2 போட்டிகள் வேகப்பந்துக்குச் சாதகமான பெர்த், பிரிஸ்பனில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இரண்டு மைதானங்களும் எங்கள் கோட்டையாகும். இந்திய அணிக்கு வித்தியாசமாகவே இருக்கும்.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சுக்கு எதிரான சில தரமான வீரர்கள் உள்ளனர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி இந்த சூழ்நிலைகளுக்கு தங்களை மாற்றி அமைத்து கொண்டுள்ளார்கள் என்றே நான் கருதுகிறேன்"

இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article8092595.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடினமாக இருக்கும்: ஜார்ஜ் பெய்லி கருத்து

 

ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் என்று ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் நாளை நடக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் பெய்லி, பெர்த்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையேயான ஒருநாள் போட்டித் தொடர் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். அந்த விறுவிறுப்பு இந்த தொடரிலும் இருக்கும் என்று நம்புகிறேன். கடைசியாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்தோம். அதன் பிறகு இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் இந்த தொடர் நடக்கிறது.

இந்திய அணி வலுவானது என்றாலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது அவர்களுக்கு கடினமாக இருக்கும். மேலும் உலகக் கோப்பை போட்டி உட்பட பல ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வென்றுள்ளதால் எங்கள் வீரர்கள் அதிக மனஉறுதியுடன் உள்ளனர். முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8091898.ece

  • தொடங்கியவர்

தோனியின் அனுபவமா? ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி கேப்டன்சியா?: பெர்த்தில் முதல் பலப்பரீட்சை

 
ஸ்மித்துக்கு சவால் அளிப்பாரா தோனி? நாளை பெர்த்தில் முதல் போட்டி. | கோப்புப் படம்.
ஸ்மித்துக்கு சவால் அளிப்பாரா தோனி? நாளை பெர்த்தில் முதல் போட்டி. | கோப்புப் படம்.

நாளை (செவ்வாய் கிழமை) அனுபவமிக்க தோனியின் தலைமையில் இந்திய அணியும் புதிய கேப்டனான ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் முதன் முதலாக ஆஸ்திரேலியாவில் இருதரப்பு ஒருநாள் தொடரில் பெர்த் மைதானத்தில் முதல் போட்டியில் சந்திக்கின்றன.

2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் கோலியின் தலைமையில் புதிய நம்பிக்கை பிறந்திருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கடும் பின்னடவைச் சந்தித்தது. உலகக் கோப்பையில் அரையிறுதி வரை எதிரணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் சவாலின்றி சரணடைந்ததை ரசிகர்கள் இன்னமும் மறந்து விடவில்லை. அதே போல் உலகக் கோப்பைக்கு முந்தைய முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா படு மோசமாக விளையாடியதையும் ரசிகர்கள் மறக்கமுடியாது.

பிறகு வங்கதேசத்திடம் முதன்முறையாக ஒருநாள் தொடரை இழந்ததும், தென் ஆப்பிரிக்காவிடம் உள்நாட்டில் ஒருநாள் தொடரை இழந்ததும் இந்திய அணியின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெற்றி வாய்ப்புகள் குறித்து கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த முறை மீண்டும் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்கிய ரஹானே ஆகிய டாப் ஆர்டர் பேட்டிங்கை நம்பியே இந்தியா களமிறங்குகிறது. இந்த வரிசையை வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தை இட்டு முதல் 15 அல்லது 20 ஓவர்களில் காலி செய்ய ஆஸ்திரேலியா நிச்சயம் உத்திகளை வகுக்கும். எனவே இவர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

இயன் சேப்பல் கூறுவது போல் இந்த நால்வர் அணியை விரைவில் காலி செய்தால் இந்தியா தடுமாறி வந்ததையே பார்த்துள்ளோம். ஒரு ஸ்திரத்தன்மைக்காக முரளி விஜய்யை தேர்வு செய்திருக்கலாம், ஆனால் ஏனோ இந்த அணிச்சேர்க்கையை தேர்வாளர்கள் மாற்ற விரும்பவில்லை.

ஆனால் நடுக்களத்தில் மணிஷ் பாண்டேஅல்லது குர்க்கீரத் சிங் மான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இடமுண்டு. பந்துவீச்சில் பரீந்தர் ஸ்ரண் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 பயிற்சி ஆட்டங்களிலும் நன்றாக வீசி நம்பிக்கை அளித்தார். ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் நம்பிக்கை அளித்தனர். சுரேஷ் ரெய்னா இல்லாதது இந்தியாவுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென் குறைவு என்பதை எதிரணியினருக்கும் உணர்த்தியிருக்கும். எனவே மணிஷ் பாண்டே அல்லது குர்கீரத் சிங் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். பாண்டே 2-வது பயிற்சி ஒருநாள் போட்டியில் 58 ரன்களை நல்ல முறையில் எடுத்துள்ளது இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கலாம்.

ஆல்ரவுண்டராக ரிஷி தவண் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக இப்போதைக்கு தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தோனியின் பேட்டிங் பார்ம் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. கேப்டன்சியிலும் வேகப்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்தும் பிட்ச்களில் எதிரணியினர் அடித்து நொறுக்கும் போது ஒன்றுமே செய்ய இயலாதவராக தோனி ஆகிவிடுவதையும் நாம் பார்த்துள்ளோம். எனவே தோனியின் மனநிலை எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து இந்தத் தொடர் தீர்மானமாகும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா:

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர்களில் 62 ரன்கள் சராசரி வைத்துள்ள விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15.83 என்ற சராசரியை வைத்துள்ளார். இதனை அவர் எப்படியும் இந்தத் தொடரில் சரி செய்ய முற்படுவார், ஆனால் அவரை எழும்ப விடாமல் செய்ய இப்போதே ஆஸி. உத்திகளும் தயாராக இருக்கும் என்றே கருத வேண்டியுள்ளது.

மாறாக ரோஹித் சர்மா நடப்பு பேட்டிங் வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள பேட்ஸ்மெனாக திகழ்கிறார். ஆஸி.க்கு எதிராக இவரது சராசரி 57.06, 3 சதங்களை அடித்துள்ளார், இதில் கடந்த முறை முத்தரப்பு ஒருநாள் போட்டியில் எடுத்த 138 ரன்களும் அடங்கும்.

இந்திய-ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்கள்: ஆஸ்திரேலிய ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் தோல்வி-வெற்றி விகிதம் 10-31 என்று உள்ளது. கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் இந்தியா 4-ல் மட்டுமே வென்றுள்ளது அதில் 2007-08 முத்தரப்பு தொடர் 2 இறுதிப் போட்டி வெற்றிகள் அடங்கும்.

ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தாலும் மொத்தம் இரு அணிகளும் 118 போட்டிகளில் மோதியதில் ஆஸ்திரேலியா 68-ல் வென்றுள்ளது இந்தியா 40-ல் மட்டுமே வென்றுள்ளது. முடிவு தெரியாத ஆட்டம் 10. ஆஸ்திரேலியாவில் அந்த அணியின் ஆதிக்கம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவில் 51 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 21-ல் மட்டுமே வெல்ல, ஆஸ்திரேலியா 25ல் வென்று இங்கும் ஆதிக்கம் செலுத்துகிறது.

நடுநிலை மைதானங்களில் 24 போட்டிகளில் ஆஸ்திரேலியா 12 போட்டிகளிலும் இந்தியா 9 போட்டிகளிலும் வென்றுள்ளன. முதன் முதலாக ஆஸ்திரேலியாவில் இந்தியா 1980-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை ஒரு போட்டியில் இந்தியா வீழ்த்தியது. அதில் ஆட்ட நாயகன், தற்போதைய தேர்வுக்குழு தலைவர், அதிரடி மன்னன் சந்தீப் பாட்டீல் எனபது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை நிலவரம்:

இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா குறைந்தது ஒரு போட்டியையாவது வென்றால்தான் 2-ம் இடத்தைத் தக்க வைக்க முடியும். மாறாக ஆஸ்திரேலியா 5 போட்டிகளிலும் தோற்றாலும் முதலிடத்தை இழந்து விடாது. இதுவே அந்த அணிக்கு பெரிய பலமாகும்.

ஆஸ்திரேலிய அணியின் பலம்:

இந்திய அணி இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டுமெனில் கபில்தேவ் கூறியது போல் முதல் 15 ஓவரிகளில் ஸ்கோர் 75-80ஆக இருந்தாலும் சரி 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் அப்போதுதான் ஆஸ்திரேலியாவை 270-280 ரன்களுக்கு மட்டுப்படுத்த முடியும்.

இந்த முறை வார்னர், பின்ச், ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் மிட்செல் மார்ஷ், ஜார்ஜ் பெய்லி, ஜேம்ஸ் பாக்னர் என்று வரிசை அமையலாம், எனவே வார்னர் வேறு விதமான பங்கை ஆற்ற வாய்ப்பிருக்கிறது. ஒரு முனையில் அவர் நிற்க, அவரைச் சுற்றி மற்றவர்கள் பங்களிப்பு செய்யும் உத்தியை கடைபிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் வார்னர் ஒரு அபாயகரமான வீரர். அதே போல் ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல.

இசாந்த் சர்மா, அஸ்வின் ஆகிய அனுபவ வீச்சாளர்கள் இந்த வரிசையை ஏதாவது செய்தால்தான் உண்டு. பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் இல்லாதது நமக்கு ஒரு பெரிய சாதகம், ஆனாலும் ஜொயெல் பாரீஸ், போலண்ட் என்ற இரண்டு புதுமுகங்களை ஆஸ்திரேலியா களமிறக்குகிறது. ஸ்விங் நிபுணர் ஜோஷ் ஹேசில்வுட் இருக்கிறார். எனவே இந்திய அணியில் யாராவது ஒரு தொடக்க வீரர் ரிஸ்க் எடுத்து ஹேசில்வுட்டை ‘பதம்’ பார்த்தால் மற்ற வீரர்களுக்கு அது ஊக்கமளிக்கும்.

அப்படியல்லாமல் பழைய பாணியில் நின்று, பிறகு வெளுப்பது என்ற முறையில் ஆடி அது பயனளிக்காமல் போனால் பின்னால் இறங்கும் வீரர்களுக்கும் சிக்கல் அதிகரித்து விடும், ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சிறு பிடியைக் கொடுத்தாலும் அவர்கள் அதனை நழுவ விடமாட்டார்கள், முற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டம் தேவை. சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடக்கத்தில் ஒரு மூடில் களமிறங்குவாரே அத்தகைய மன நிலை அனைவருக்கும் ஆட்டம் முழுதும் இருந்தால்தான் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.

நாளைய போட்டியில் இந்திய அணி பரிசோதனை முயற்சியில் இறங்காது அனுபவ அணிச்சேர்க்கையையே விரும்பும், அதாவது, தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, ஸ்ரண், ரிஷி தவண்( ஆல்ரவுண்டர்) என்ற அணியை களமிறக்க வாய்ப்புள்ளது.

செவ்வாய்கிழமை காலை இந்திய நேரம் காலை 8.50 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8092520.ece

  • தொடங்கியவர்

ரோகித் அபார சதம்: இந்தியா ரன் குவிப்பு- ஆஸி திணறல்

 

பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இந்த அணி 37 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 75 ரன்னில் களத்தில் உள்ளார்.

பெர்த்தில் நடைபெறும் இந்தியா- ஆஸி இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் இளம் வேகப் பந்துவீச்சாளர் பரின்தர் சரண் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸி அணியில் போலந்து, பாரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மூன்று வேகப்பந்துவீச்சாளர், இரண்டு ஸ்பின்னர்கள் என்ற உத்தியில் களமிறங்கியுள்ளது.

rohit%20oneday%20long.jpg


அதிரடி துவக்கமும், கோலிக்கு வெல்கம் பவுன்ஸரும்!

முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டத்தை துவக்கினார் ரோஹித் ஷர்மா. முதல் 4 ஓவர்களில் 28 ரன் குவித்து அதிரடியாக ஆரம்பித்தது, 9 ரன்கள் குவித்த நிலையில் தவான் வெளியேறினார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி களமிறங்கிய முதல் பந்தே பவுன்சராக வீசப்பட்டது. 2014ம் ஆண்டு டிசம்பரில் சென்ற ஆண்டு பயணம் செய்த போதும் கோலியை பவுண்ஸரொடு ஆஸி அணி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கோலி, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதறடித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இவர் தனது 9வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் கோலி 75 ரன்னுடன் களத்தில் உள்ளார். தற்போது இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 195 ரன்கள் குவித்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/57550-india-bat-first-in-inagural-odi.art

  • தொடங்கியவர்

ரோகித் ருத்ரதாண்டவம்: ஆஸி.க்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

 

பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 171 ரன்கள் குவித்தார். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் இளம் வேகப் பந்துவீச்சாளர் பரின்தர் சரண் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸி அணியில் போலந்து, பாரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மூன்று வேகப்பந்துவீச்சாளர், இரண்டு ஸ்பின்னர்கள் என்ற உத்தியில் களமிறங்கியுள்ளது.

rohit%20oneday%20long.jpg


முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டத்தை துவக்கினார் ரோஹித் ஷர்மா. முதல் 4 ஓவர்களில் 28 ரன் குவித்து அதிரடியாக ஆரம்பித்தது, 9 ரன்கள் குவித்த நிலையில் தவான் வெளியேறினார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி களமிறங்கிய முதல் பந்தே பவுன்சராக வீசப்பட்டது. 2014ம் ஆண்டு டிசம்பரில் சென்ற ஆண்டு பயணம் செய்த போதும் கோலியை பவுண்ஸரொடு ஆஸி அணி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கோலி, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதறடித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இவர் தனது 9வது சதத்தை நிறைவு செய்தார்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி, 91 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இதைத் தொடர்ந்து கேப்டன் தோனி களம் புகுந்தார். மறுமுனையில் விளாசி வந்த ரோகித் 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

பின்னர் கேப்டன் தோனி 18 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஜடேஜா 10 ரன் எடுத்தார். ரோகித் அபாரமாக விளையாடி 171 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் போலன்ட் 10 ஓவர்கள் வீசி 74 ரன்கள் வாரிக் கொடுத்தார்.

310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்க உள்ளது.

http://www.vikatan.com/news/sports/57550-india-bat-first-in-inagural-odi.art

  • தொடங்கியவர்

முதல் ஒருநாள் போட்டி: ஸ்மித், பெய்லி அதிரடியில் வீழ்ந்தது இந்தியா!

 

பெர்த்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் அபாரமாக விளையாடி 149 ரன்கள் விளாசினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 36 ரன்னுக்கு தவான் விக்கெட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கோலி 91 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த கேப்டன் தோனி 18 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் நன்றாக விளையாடிய தொடக்க வீரர் ரோகித் சர்மா 171 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 9வது சதம் ஆகும். ஜடேஜா 10 ரன் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.
 

Smith-%20bailey%20oneday.jpg

இதைத் தொடர்ந்து 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிஞ்ச் 8 ரன்னிலும், வார்னர் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர் களம் புகுந்த கேப்டன் ஸ்மித்- பெய்லி ஜோடி இந்திய பவுலர்களை துவம்சம் செய்தனர். தனது 3வது சதத்தை நிறைவு செய்த பெய்லி 112 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மெக்ஸ்வெல் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஸ்மித் அபாரமாக விளையாடி தனது 5வது சதத்தை நிறைவு செய்தார்.

கடைசி 5 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்மித் 149 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் மார்ஷ் (12) வந்து வெற்றி இலக்கை அடைய வைத்தார். 49.2 ஓவரில் 310 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் சரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 9 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்துள்ளது. 2வது போட்டி வரும் 15ம் தேதி பிரின்பேனில் காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது.

http://www.vikatan.com/news/sports/57588-1st-odi-australia-india-perth.art

  • தொடங்கியவர்

ஸ்மித், பெய்லி சதங்களில் நொறுங்கியது இந்தியா: ஆஸ்திரேலியா அபார வெற்றி

 

 
  • தனது சதத்தினால் இந்திய பந்து வீச்சை பதம் பார்த்த ஆஸி.கேப்டன் ஸ்மித். ஆட்ட நாயகன். | படம்: கெட்டி இமேஜஸ்.
    தனது சதத்தினால் இந்திய பந்து வீச்சை பதம் பார்த்த ஆஸி.கேப்டன் ஸ்மித். ஆட்ட நாயகன். | படம்: கெட்டி இமேஜஸ்.
  • தோல்வியில் துவண்ட இந்திய முகங்கள். | படம்: ஏ.பி.
    தோல்வியில் துவண்ட இந்திய முகங்கள். | படம்: ஏ.பி.

பெர்த் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 310 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி மிகச்சுலபமாக விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஜார்ஜ் பெய்லி 120 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் எடுக்க, ஸ்மித் 135 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 149 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் 310/5 என்று வெற்றி பெற்றது. அறிமுக இளம் வீச்சாளர் ஸ்ரண் 9.2 ஓவர்கள் வீசி 56 ரன்களுக்கு பிஞ்ச், வார்னர், கடைசியில் ஸ்மித் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்றைய பெர்த் பிட்சில் ஸ்விங், ஸ்பின் எதுவும் இல்லை, கொஞ்சம் பவுன்ஸ் மட்டுமே இருந்தது. பந்துகள் மட்டைக்கு அருமையாக அடிப்பதற்கு வாகாக தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தன. விராட் கோலி ஆட்டமிழக்காமல், இவரும் ரோஹித் சர்மாவும் இறுதி வரை ஆடியிருந்தால் சொத்தை ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு எதிராக ஸ்கோர் 340-345 ரன்களை எட்டியிருக்கக் கூடும் அப்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஏனெனில் அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரீந்தர் ஸ்ரண் தொடக்கத்திலேயே அதிரடி மன்னர்களான ஏரோன் பிஞ்ச், வார்னர் ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 21/2 என்று பின்னடைவு காணச் செய்தார்.

இந்திய பேட்டிங் போது ரோஹித்-கோலி கூட்டணி 2-வது விக்கெட்டுக்காக 207 ரன்களைச் சேர்க்க, ஆஸ்திரேலிய விரட்டலில் பெய்லி-ஸ்மித் ஜோடி 242 ரன்களை சுமார் 36 ஓவர்களில் சேர்த்தனர். ஒரே போட்டியில் இரண்டு இரட்டைச் சத கூட்டணி இதுவரை நிகழ்ந்ததில்லை என்றே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம் ஒன்றில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து இந்தத் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் ஆயிரக்கணக்கில் ரன் குவிக்க தற்போது 99.2 ஓவர்களில் 619 ரன்கள் இந்தப் போட்டியில் விளாசப்பட்டுள்ளது. பெர்த் பிட்சை இனியும் வேகப்பந்து ஆட்டக்களம் என்று யாரேனும் அழைக்க முடியுமா?

ஒரு சுவாரசியமான புள்ளிவிவரம் என்னவெனில் 2015, 2016 ஆகிய ஆண்டுகளை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியிலேயே தொடங்கியுள்ளது. இரண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியே, இரண்டிலும் ரோஹித் சர்மா சதம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.

21/2 என்ற நிலையில் களமிறங்கிய ஜார்ஜ் பெய்லிக்கு அவுட் கொடுத்திருந்தால் ஓரளவுக்கு அவர்களை நெருக்கியிருக்க வாய்ப்பு கிடைக்கும், ஆனால் ஜார்ஜ் பெய்லி தனது இன்னிங்ஸ் முடிந்தவுடன் கூறிய போது, “டீ.ஆர்.எஸ்.இல் இது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் டீ.ஆர்.எஸ். முறையை விரும்பாத அணி நாங்களல்ல” என்று சூசகமாக இந்திய டீ.ஆர்.எஸ். எதிர்ப்பை சாடினார்.

அதன் பிறகு 10 ஓவர்களில் 40 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தது ஆஸ்திரேலியா. 11-வது ஓவரில் ஸ்ரணை 2 பவுண்டரிகளுடன் பெய்லி களம் புகுந்தார். பிறகு தேவையில்லாமல் தோனி, ரோஹித் சர்மாவைக் கொண்டு வரை பெய்லி சிக்சர் ஒன்றையும் விளாசி செட்டில் ஆனார். உமேஷ் யாதவ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பெய்லியின் கையை பதம் பார்த்தார்.

அதன் பிறகு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. அஸ்வின் பெரிய ஏமாற்றமளித்தார். உதவியில்லாத பிட்சில் அஸ்வினும், ஜடேஜாவும் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதல் 2 ஓவர்களிலேயே 17 ரன்கள் விளாசப்பட்டது. பிறகு 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்திருந்தார். 5-வது ஓவரில் பெய்லி ஒரு சிக்சரையும், ஸ்மித் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. 5 ஓவர்களில் அஸ்வின் 48 ரன்களை கொடுத்தார். பெய்லி அவ்வப்போது அஸ்வினை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரிகளையும் அடித்தார்.

33-வது ஓவரில் ஸ்கோர் 200 ரன்களை எட்டியது. 36-வது ஓவரில் ஜார்ஜ் பெய்லி, புவனேஷ் குமார் பந்தில் 2 ரன்கள் எடுத்து 107 பந்துகளில் சதம் கண்டார். பிறகு 39-வது ஓவரில் ஸ்மித் 97 பந்துகளில் சதம் கண்டார். சதத்தை கொண்டாடும் விதமாக உமேஷ் யாதவ்வை இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ஸ்மித். பிறகு ஜடேஜாவை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார்.

ஒருவழியாக 42-வது ஓவரி ஜார்ஜ் பெய்லி அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க முயன்று குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், உடனடியாக கிளென் மேக்ஸ்வெல்லும் அஸ்வினை தூக்கி அடிக்க முயன்று தவணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசியாக வெற்றியெல்லாம் உறுதியான பிறகு ஸ்ரண், ஸ்மித் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணியில் புவனேஷ் குமார் 9 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார், பந்து வீச்சில் ஒன்றுமேயில்லை. யாதவ் 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார். அஸ்வின் 9 ஓவர்களில் 68 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். ஜடேஜா 9 ஓவர்கள் 61 ரன்கள்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8098343.ece

  • தொடங்கியவர்

சுலபமாக பவுண்டரி வழங்கும் பந்துகளை ஸ்பின்னர்கள் தவிர்க்க வேண்டும்: தோனி

 
கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ்.
கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ்.

பெர்த் ஒருநாள் போட்டியில் 309 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி தழுவியதற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி சில காரணங்களை விளக்கினார்.

இந்தப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா இணைந்து 18 ஓவர்களில் 129 ரன்களைக் கொடுத்தனர், இது பெரிய ஏமாற்றமளித்தது.

தோனி கூறும்போது, “பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லாதது பற்றி நேற்று நான் பேசும்போது வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றியே பேசினேன். ஸ்பின்னர்களுக்கு மோசமான நாளாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மற்றவர்களும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பந்துவீச்சை பொறுத்த அளவில் பார்த்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாகவே வீசினர். ஸ்பின்னர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வீசியிருக்க முடியும். அதாவது சுலபமாக பவுண்டரிகளை வழங்கும் பந்துகளை அவர்கள் வீசுவதை தவிர்த்தால் போதும் என்ற பொருளில் இதனைக் கூறுகிறேன். எதிரணி பேட்ஸ்மென்கள் லாங் ஆன் அல்லது லாங் ஆஃபில் அடித்தால் பரவாயில்லை, அத்தகைய ஷாட்களில் ஒருவித ரிஸ்க் உள்ளது. களத்தடுப்பு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் எங்கு பீல்டர்கள் இல்லையோ அங்கு அடிக்குமாறு பந்து வீசக்கூடாது. இதனை நாம் தவிர்க்க வேண்டும்.

ஆஸ்திரேலியர்கள் பெரிய ஷாட்களை ஆடினர், மேலும் அது கிடைக்காத தருணத்தில் ஒன்று, இரண்டு என்று சிறுகச் சிறுகவும் சேர்த்தனர். அப்படியும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் அவர்கள் எடுக்க முடிந்தது. இங்குதான் எங்களுக்கு நெருக்கடி நேர்ந்தது, ஸ்பின்னர்கள் பந்துவீச்சிலும் நிறைய பவுண்டரிகள் வந்தன. இந்த இடத்தில் கொஞ்சம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம், மற்றபடி வேகப்பந்து வீச்சு நன்றாகவே இருந்தது.

310 ரன்கள் இலக்கு என்பது நல்ல இலக்குதான். அவர்கள் நன்றாக பேட் செய்தாலும் கடைசி ஓவரில்தான் வெற்றி பெற முடிந்தது. அதனால்தான் கூறுகிறேன், பந்துவீச்சை இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருந்தால் அவர்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுத்திருக்கலாம். தொடக்கத்திலேயே பெரிய ஷாட்களை அவர்களை ஆடவைத்து வீழ்த்த முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.

மேலும், இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடி கூடுதல் ரன்களை சேர்த்திருக்கலாமோ என்ற விவாதம் எப்போதுமே நடப்பதுதான். நன்றாக அடித்தளம் அமைத்து பிறகு ஓரிரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தால் என்ன ஆகும்? எனவேதான் நன்றாக செட் ஆன பேட்ஸ்மென் சுலபமாக விளாச முடியும். ஆம்! விக்கெட்டுகள் கைவசம் இருந்தது இன்னும் 15-20 ரன்களை கூடுதலாக எடுத்திருக்கலாம்தான், ஆனால், 309 ரன்களையே எடுக்க முடியாமல் போயிருந்தால், எனவே இதெல்லாம் இரண்டக சூழ்நிலையாகும். 309 ரன்கள் நல்ல ஸ்கோர்தான்”

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8098628.ece

  • தொடங்கியவர்

மீண்டும் பேட்டிங் ஃபர்ஸ்ட், ஆஸியை வெல்லுமா இந்தியா?

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி பிரிஸ்பனில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளார். இந்திய அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு பதில் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

 


ஆஸி அணி தரப்பில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வார்னர், ஹேசல்வுட், மார்ஷ் நீக்கப்பட்டு ஷான் மார்ஷ், ஹேஸ்டிங்ஸ், ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் போட்டியில் அனைவரும் ரன் குவித்தும் இந்திய அணியால் அதனை வெற்றியாக மாற்ற முடியவில்லை என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஸ்பின்னர்களை கவனமாக பந்துவீச அறிவுறை கூறிய தோனி. இந்த போட்டிகளில் அஸ்வினை கவனமாக கையாளுவார் என்று தெரிகிறது.


கோலி, ரோஹித், ராஹானே ஹிட் அடித்தால் இன்றும் இந்தியா ரன் மழை பொழிவார்கள், இஷாந்த் வருகை அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/57700-india-bat-again-in-2nd-odi-vs-australia.art

  • தொடங்கியவர்

ரோஹித் சர்மா சதம் மீண்டும் வீண்: மிக எளிதாக வென்றது ஆஸ்திரேலியா

 

பெர்த் போட்டியின் மறு ஒளிபரப்பு போல் மீண்டும் ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்தது பிரிஸ்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டி. மீண்டும் ரோஹித் சதம், மீண்டும் சொதப்பலான பந்து வீச்சு, மீண்டும் செயலூக்கம் அற்ற கேப்டன்சி, மீண்டும் ஆஸ்திரேலியா வெற்றி.

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் இந்தியா இன்னமும் வெற்றி பெறவில்லை.

இந்தியா 330 ரன்களை எடுத்திருக்க வேண்டும் ஆனால் 308 ரன்களையே எடுக்க ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 309/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதாவது அயல்நாடுகளில் இந்திய பந்து வீச்சு மிகவும் சொத்தையாக உள்ளது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒன்றானது. அதாவது ஆஸ்திரேலிய பவுலர்கள் முதல் போட்டியில் செய்த தவற்றை அடுத்த போட்டியில் திருத்தி கொள்கின்றனர், ஆனால் இந்திய பவுலர்கள் எவ்வளவு அடி வாங்கினாலும் பந்து வீச்சை மாற்றுவதில்லை, லெக் திசையில் வீசுவது, ஷார்ட் பிட்ச் பந்துகளை பேட்ஸ்மென்களுக்கு அடிக்க வாகாக வீசுவது என்று எதிலும் மாற்றமில்லை. வீச்சாளர்கள் மாறலாம் ஆனால் வீச்சு மாறுவதில்லை என்பது இந்திய பந்துவீச்சின் அயல்நாட்டு மகாவாக்கியமாகவே மாறிவிட்டது.

அதே போல் எதிரணி பேட்ஸ்மென்கள் கூட்டு சேர்ந்து அடித்து நொறுக்கும் போது தோனி செயலூக்கமற்ற கேப்டன்சி முறையை கையாள்கிறார். அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. அதாவது 309, 310 ரன்கள் இலக்கை மற்ற கேப்டன்கள் இவ்வளவு சுலபமாக எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதே சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன்சி என்பது. தோனியின் செயலூக்கமற்ற கேப்டன்சிக்கு இந்தப் போட்டியின் எளிய உதாரணமாக ஒன்றைச் சுட்டலாம், அஸ்வின் 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்தார். இதில் 3 பவுண்டரிகளே அடிக்கப்பட்டன. மீதி 48 ரன்கள் வெறும் ஒன்று, இரண்டு என்று எடுக்கப்பட்டுள்ளது என்றால் களவியூகத்தை ஊகிக்க முடிகிறது. அதே போல் ஜடேஜா 50 ரன்களை விட்டுக் கொடுத்ததில் 4 பவுண்டரிகள்தான் வந்துள்ளது. மீதி 34 ரன்கள் ஒன்று, இரண்டு என்றே வந்துள்ளது.

மொத்தமாக ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் 309 ரன்களில் 104 ரன்களே பவுண்டரி மற்றும் சிக்சர்; மீதி 205 ரன்கள் ஒன்று, இரண்டு என்று எடுக்கப்பட்டது என்றால் களவியூகம் அவர்கள் எளிதில் ரன் எடுக்க எவ்வளவு சாதகமாக இருந்தது என்பதையும் தோனியின் கற்பனை வளமற்ற வறட்டு கேப்டன்சியையும் பிரதிபலிக்கிறது. உடனே இந்தியா பேட் செய்யும் போது இது நடந்தது என்று கூறுவது பொருந்தாது, ஏனெனில் முதலில் பேட் செய்யும் அணியை பெரிய இலக்குகளை எட்டவிடக்கூடாது என்பதற்காக களவியூகத்தை தளர்வாக அமைத்து பவுண்டரி, சிக்சர்களை குறைக்கும் உத்தியாகும் அது. ஆனால் 309 ரன்கள் இலக்கை துரத்தும் போது 6 பந்துகளில் ரன் வரவில்லையெனில் அது எதிரணியினருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் அப்போதுதான் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சி செய்வார்கள், நமக்கும் விக்கெட் வாய்ப்புகள் கிட்டும். ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் எந்த வித உத்தியும் நம் கேப்டனிடம் இல்லாததால்தான் வங்கதேசத்திலிருந்து தொடங்கி, பிறகு டிவில்லியர்ஸ் சாத்துமுறையில் தென் ஆப்பிரிக்கா தற்போது ஆஸ்திரேலியா என்று உதை மேல் உதை வாங்கிக் கொண்டிருக்கிறது இந்திய அணி.

மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது கேப்டன்சியில் நாம் இத்தகைய தளர்வான போக்கைக் காண்பது அரிதிலும் அரிது.

எளிதாகிப் போன விரட்டல்:

பெர்த் போட்டியில் 21/2 என்ற பிறகு 310 ரன்கள் விரட்டப்பட்டது, ஆனால் பிரிஸ்பனில் தொடக்க வீரர்கள் ஏரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் இணைந்து 145 ரன்களை 25 ஓவர்களில் எடுத்தனர். ஷான் மார்ஷ் 19 ரன்களில் இருந்த போது இசாந்த் சர்மா எளிதான கேட்சை கோட்டை விட்டார், ரன் அவுட் வாய்ப்பும் தவற விடப்பட்டது.

ஸரண் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு கொஞ்சம் இறுக்கியதால் ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 40 ரன்களையே எட்டியிருந்தது. 13-வது ஓவரில்தான் ஜடேஜா பந்தில் இசாந்த் சர்மா ஷான் மார்ஷ் கொடுத்த எளிதான கேட்சை லாங் ஆனில் கோட்டை விட்டார், ரசிகர்கள் கேலி ஒலி எழுப்பினர். பிறகு உமேஷ் யாதவ் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார். பிஞ்ச் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் விளாசினார். பிறகு ஜடேஜாவையும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 24-வது ஓவரில் மார்ஷ், யாதவ்வை புல் ஆட அது டீப்பில் ஸரணிடம் சென்றது, ஸரண் ஓடி வந்து டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் கேட்ச் கையில் பட்டு சிதறியது, ஆனால் இது ஒரு அருமையான முயற்சி.

கடைசியில் 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்த பிஞ்ச், ஜடேஜா பந்தை தூக்கி அடித்து லாங் ஆஃபில் ரஹானே கேட்சுக்கு பெவிலியன் திரும்பினார். மார்ஷ் தனது 67 ரன்களில் இருந்த போது இசாந்த் பந்தில் எட்ஜ் செய்ய மணீஷ் பாண்டே கேட்சை விட்டார், காரணம் அவர் சரியான ஸ்லிப் நிலையில் இல்லை. தள்ளி நின்றதால் கேட்ச் நழுவ விடப்பட்டது. ஆனால் அதன் பிறகு மார்ஷ் நீண்ட நேரம் நீடிக்கவில்லை இசாந்த் பந்த் ஒன்று கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆக லெக் திசையில் திருப்ப முயன்ற மார்ஷ் மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கோலியிடம் ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. மார்ஷ் 84 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஸ்மித் மீண்டும் ஒரு அலட்சியமாக 47 ரன்களை எடுத்து உமேஷ் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று பவுல்டு ஆனார். ஆனால் ஸ்கோர் 41-வது ஓவர் முடிவில் 244 ரன்கள் என்று இருந்தது.

ஜார்ஜ் பெய்லி மீண்டும் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். மேக்ஸ்வெல் 26 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ 49 ஓவர்களில் 309/3 என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டதே இந்திய அணிக்கு ஒரே ஆறுதல். இந்திய அணியில் இசாந்த் சர்மா 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். யாதவ் 10 ஓவர்களில் 74 ரன்கள் வாங்கிக் கட்டிக் கொண்டார். ஸரண் 9 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மொத்தம் 11 வைடுகள் வீசப்பட்டது. நெருக்கடி கொடுக்க வேண்டிய தருணங்களில் வைடுகள் வீசப்பட்டது.

அடுத்த போட்டி மெல்பர்னில் நடைபெறுகிறது. அதில் இந்திய அணியின் அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பதை பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article8112312.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவுசைப் பிடிக்காது என்டாலும் இந்தியா தோற்பது மிக்க மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

எனக்கு அவுசைப் பிடிக்காது என்டாலும் இந்தியா தோற்பது மிக்க மகிழ்ச்சி

தங்கச்சி! விளையாட்டு விசயத்திலை மட்டும் பிடிக்காதோ இல்லாட்டி ஒட்டுமொத்தமாய் அவுசையே பிடிக்காதோ?
 

முன்கூட்டியே தெரிஞ்சு வைச்சிட்டால் சுகமெல்லே.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  வென்டால் அவுஸ் காட்டும் பவுசும், தோல்வி நெருங்கும்போது செய்யும் ரவுசும் பிடிக்காது....!  :)

  • தொடங்கியவர்

இன்னும் கூடுதல் ரன்களை எடுத்து, வைடுகளை தவிர்க்க வேண்டும்: தோனி

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த், பிரிஸ்பன் ஒருநாள் போட்டிகளில் தோல்வி தழுவிய இந்திய அணி இருபோட்டிகளிலும் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தது பற்றி பாராட்டிய தோனி, அந்த ரன்கள் போதாது என்றார்.

"ரன்களை எடுப்பதினால் மட்டும் போட்டியை வென்று விட முடியாது, 280 ரன்களை அடித்து விட்டு பவுலர்கள் போட்டியை வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்று கூற முடியாது. இருதிறமும் மேம்பாடு அடைவது முக்கியம். அடுத்தடுத்து 2 போட்டிகளில் 300க்கும் மேல் எடுத்திருப்பது எங்கும் கடினமே, ஆனால் அதனை ஆஸ்திரேலியாவில் செய்துள்ளோம்.

ஆனால் பேட்ஸ்மென்கள் இன்னும் தங்கள் மேல் சுமையை ஏற்றிக் கொண்டு 300 என்பதை 330-340 ரன்கள் இலக்கை நோக்கி எடுத்துச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இதனை எட்ட முயற்சி செய்யும் போது 280 ரன்களில் முடிந்து போகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் சவுகரியமாக வெற்றி பெற வேண்டுமெனில் ஸ்கோர் விகிதத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

இரண்டு போட்டியிலுமே உதிரிகள் வகையில் ரன்களை அதிகமாக கொடுத்துள்ளோம். இதனால் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தாலும் அதைவிட குறைவாக எடுத்ததாகவே ஆகிறது. மைதானத்தின் காற்று இசாந்த் சர்மாவுக்கு சற்றே கடினமாக அமைந்தது. நாம் உதிரிகளைக் குறைத்தாலும் கூட இன்னும் ரன்கள் கூடுதலாக தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். எனவே ஒன்று முதலில் பேட் செய்து அதிக ரன்களை எடுப்பது அல்லது அவர்களை பேட் செய்ய அழைத்து விட்டு இலக்கைத் துரத்துவது.

கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை அடிக்க முயற்சி செய்தோம், ஆனால் ஆஸ்திரேலிய வீச்சாளர்கள் அந்த 10 ஓவர்களில் நன்றாக வீசினர். விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தால் கடினம்தான். புதிய பேட்ஸ்மென் களமிறங்கி நேரடியாக பெரிய ஷாட்களை ஆடுவது கடினம்.

பவுலர்கள் தங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தி கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென இறங்கி பெரிய ஷாட்களை ஆட முடியாது என்று நான் பல முறை கூறியிருக்கிறேன். அவர்கள் நல்ல யார்க்கர்களை வீசி கடினமாக்குகின்றனர்.

அடுத்த போட்டியில் நாங்கள் இன்னமும் அடித்து ஆடி கூடுதல் ரன்களை சேர்ப்போம், அல்லது டாஸில் வென்று அவர்களை பேட் செய்ய அழைத்து அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை வெற்றிகரமாக துரத்த வேண்டும் இந்த 2 வாய்ப்புகளை விட்டால் வேறு நம்மிடம் இல்லை.

ரிஷி தவணுக்கு வாய்ப்பளிப்பது கடினம்:

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியுடன் சென்றுள்ள இமாச்சல ஆல்ரவுண்டர் ரிஷி தவணுக்கான வாய்ப்பு பற்றி தோனி கூறியபோது, “3 முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை அதிகமாக வழங்குகிறார்கள் எனும்போது, புதுமுக வீரர் ரிஷி தவணுக்கும் கடினம்தான். அவர் நன்றாகக்கூட வீசலாம் ஆனால் களக்கட்டுப்பாடுகளில் அவர் வீசுவது கடினம்தான். அவரும் வேகமாக வீசக்கூடியவர் அல்ல. மேலும் நடு ஓவர்களில் ரன் கொடுக்காத பந்துகளை வீச வேண்டும். இந்த இடத்தில்தான் 2 ஸ்பின்னர்களுடன் விளையாடுவது சிறந்ததா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ஒரேயொரு தெரிவு இருக்கிறது, பேட்டிங்குக்கு ஜடேஜா இருப்பதால் ரிஷி தவணைச் சேர்க்க வேண்டுமெனில் அஸ்வினைத்தான் உட்கார வைக்க வேண்டும். ஆனால் அது கடினமான முடிவு. எனவே 3 வேகம் 2 சுழல் என்ற சேர்க்கைதான் சிறந்தது என்று கருதுகிறேன். எனவே ரிஷி தவணை அணிக்குள் கொண்டு வர வேண்டுமெனில் முறையான பேட்ஸ்மென் ஒருவரை நீக்க வேண்டும். 6 பவுலர்களுடன் ஆட வேண்டும், இப்போதைக்கு அப்படி யோசிக்க முடியாது.

ஷிகர் தவண் பற்றி:

ஷிகர் தவண் ஷாட்கள் ஆடுவதில் நாட்டமுடையவர். தொடக்கம் முதலே அடித்து ஆடும் ஒரு வீரர் சில வேளைகளில் ரன்கள் எடுக்காத காலக்கட்டம் ஏற்படும். நாம் அதனை அலட்சியமான ஷாட், தேவையில்லாத ஷாட் என்று கூறலாம், ஆனால் அணியின் ஸ்ட்ரோக் பிளேயர்களை நாம் பாதுகாத்துத்தான் ஆகவேண்டும்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8114210.ece

  • தொடங்கியவர்

ஆஸி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க தோனிக்கு 5 அறிவுரைகள்!

 

இந்திய அணி ஆஸிதிரேலியாவில் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது ரோஹித் ஷர்மா இரண்டு போட்டிகளிலும் சதம், மோசமான ஃ பார்மில் இருந்த இந்திய துணை கேப்டன் விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் அரைசதம் என பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதும், ராஹானே, தோனியின் பேட்டிங்கும் கைகொடுத்தது. ஆனால் இரண்டு போட்டிகளிலும் தோனி அண்டு கோ சொதப்ப காரணம்ம் பந்துவீச்சு தான். தோனிக்கு ஆஸ்திரேலியாவில் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு தோனி தலைவலியாக இருப்பது இந்த 5 விஷயங்கள் தான். இதனை சரி செய்தால் போதும் இந்திய அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.

ஒரு ஸ்பின்னர் உத்தி:

1.jpg

அஸ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்களை கொண்டு தடுமாறி வருகிறது. துணை கண்ட பிட்ச் போல 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னர்கள் உத்தி  ஆஸி ஆடுகளங்களில் எடுபடாது. எகிறி செல்லும் தன்மை கொண்ட ஆடுகளங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு மிரட்ட வேண்டும். அதுவும் இஷாந்த், உமேஷ் போன்ற அதி வேகப்பந்துவீச்சாளர்கள் மணிக்கு 140 கி.மி வேகத்தில் பந்துவீசக்கூடியவர்களை பயன்படுத்த வேண்டும். அஸ்வின், ஜடேஜாவை சுழற்சி முறையில் பயன்படுத்துவது சிறந்தது.


வேகம், தரம், துல்லியம்:

2.jpg

தற்போது உள்ள அணியில் இஷாந்த், உமேஷ், புவனேஷ் குமார், சரண் ஆகியோர் வேகம் நன்றாக இருந்தாலும் சரியான இடத்தில் பந்துவீசுவது. ஸ்டெம்புகளை நோக்கிய துல்லியமான பந்துவீச்சு ஆகியவை மெருகேற வேண்டும். சரியான பந்துவீச்சு பார்ட்னர்ஷிப் இன்றி தடுமாறும் வேகப்பந்துவீச்சு துறையை முறையாக பலப்படுத்த தோனி முயல வேண்டும்.  ஆஸி அணியில் ஸ்டார்க், ஜான்ஸன் இல்லாத போதும் சமாளிக்கும் விதம் அணி தயார் படுத்தப்பட்டுள்ளது. அதனை இந்திய அணியும் கவனத்தில் கொண்டு அணியை மேம்படுத்த வேண்டும், இது அனைத்து வெளிநாட்டு தொடர்களுக்கும் பொருந்தும்.

யார் அந்த 7வது நபர்!

இந்திய அணி நீண்ட நாட்களாகவே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லமால் தடுமாறி வருகிறது. பேட்டிங்கிற்கு பெரிதும் உதவ அவசியம் இல்லை என்றாலும். கடைசி நேரங்களில் சிக்ஸர்களை விளாசவும், பந்துவீச்சில் கைகொடுக்கவும் யாரும் இன்றி தவிக்கிறது. ஆஸி அணியின்  ஃபால்க்னர் போன்ற நபர் இந்திய அணியில் இல்லை என்பது நீண்டகால கோரிக்கை. தோனி இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயிற்சியாளர்  தேவை!

4.jpg

இந்திய அணிக்கு தனி பயிற்சியாளர் தேவை, ரவி சாஸ்த்ரியின் பணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளுக்கும் மேலாளர் மற்றும் பயிற்சியாளர் பதிவுயை மேற்கொண்டு வருகிறார். இவர் தலைமையில் டெஸ்ட்டில் மட்டுமே பிரகாசிக்கும் இந்தியா ஒருநாள், டி20 தொடர்களை இழந்துள்ளது. கிரிஸ்டனுக்கு பிறகு இந்தியா ஒருநாள் போட்டியில் தடுமாறியே வருகிறது. பிளட்சரும் இந்திய அணியின் சரியான காம்பினேஷனை உருவாக்க தவறவிட்டார். கேப்டன் தோனி பிசிசிஐயுடன் இணைந்து இந்திய அணிக்கு ட்ராவிட், கங்குலி போன்ற இந்திய அணியின் நிலையை நன்றாக உணர்ந்த நபரை பயிற்சியாளராக்க வேண்டும்.

தோனி ஃபேக்டர்:

தோனி இந்திய அணியின் வெற்றி காம்பினேஷனை பெரிதும் டெஸ்ட் செய்து பார்க்கவில்லை. 2011ம் ஆண்டு உலககோப்பையை வென்ற அணிக்கு பின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பதில் சர்வதேச போட்டி ஆடிய வீரர்களை மாற்றினார். 2015ம் ஆண்டு உலககோப்பை அரையிறுதிக்கு சென்ற அணியில் இன்று வரை பெரிய மாற்றம் எதும் இல்லை. காயம் காரணமாக வீரர்கள் வெளியேறினால் புதுமுக வீரர்களை களமிறக்குகிறார். ஆஸி முதல் போட்டியில் பாரிஸ், போலந்து என இரண்டு புதுமுக வீரர்களை களமிறக்குகிறது இது போன்ற சோதனைகளை தோனி செய்யவில்லை என்பது தான் பெரிய குறையாக உள்ளது. இந்திய முதல்தர போட்டிகளில் 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் பல பந்து வீச்சாளர்களை அணிக்குள் இணைக்க தோனி தனது வின்னிங் ஃபேக்டரை தளர்க்க வேண்டும்.

3.jpg


இந்த ஐந்து அறிவுரைகள் தோனிக்கு மட்டுமல்ல. அணியில் வீரராக ஆடும் டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கும் தான். இன்னும் அவரும் ஒரு அந்நிய தொடரை கூட சந்திக்கவில்லை. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க, ஆஸி ஆடுகளங்களில் விரைவில் இந்த விஷயங்களை சரிசெய்து இந்திய அணி கெத்தான வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/57714-advices-to-indian-cricket-captain-dhoni.art

  • தொடங்கியவர்

கோலி சதத்தின் துணையுடன் 295 ரன்களை எட்டிய இந்தியா

 
 
சதமடித்த மகிழ்ச்சியில் கோலி | படம்: கெட்டீ இமேஜஸ்
சதமடித்த மகிழ்ச்சியில் கோலி | படம்: கெட்டீ இமேஜஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 295 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. கடந்த 2 போட்டிகளிலும் சதமடித்த ரோஹித் சர்மா இம்முறை 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான், இன்று சற்று நிதானித்து ஆடினார். 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி - தவான் இணை 134 பந்துகளில் 119 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது. கோலி 51 பந்துகளிலும் தவான் 76 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினர்.

தவான் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த ரஹானே கோலியின் ஆட்டத்துக்கு துணை நின்று ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். 40 ஓவர்களை தாண்டி களத்தில் இருந்த இந்த ஜோடி 105 பந்துகளில் 109 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தது. 105 பந்துகளில் விராட் கோலி சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 24-வது சதம். மேலும் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 7000 ரன்களை எட்டியவர் என்ற சாதனையையும் கோலி படைத்தார்.

தொடர்ந்து, 54 பந்துகளில் அரை சதம் கடந்த ரஹானே, அரை சதம் எடுத்த அடுத்த பந்திலேயே வீழ்ந்தார். 45 ஓவர்களில் 249 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணிக்கு தொடர்ந்து வந்த வீரர்கள் ஏமாற்றம் தந்தனர். கோலி 117 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குர்கீரத் சிங், 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் தோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்தது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.