Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மீன் வங்கிகள் இரண்டு அழிவடைகின்றன

Featured Replies

எமது மீன் வங்கிகள் இரண்டு அழிவடைகின்றன
 
 

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தின் மீன் வங்கிகள் எனப்படும் வடமராட்சி கடல் மற்றும் நெடுந்தீவு கடல் ஆகியன இந்திய மீனவர்களின் தடை செய்யப்பட்ட உபகரணங்களின் பயன்பாட்டால் அழிவடைவதால் எதிர்கால சந்ததியினருக்கு மீன் வளம் இல்லாமல் போகவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தலைவர் கே.என்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தங்கள் மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் எனச் சொல்கின்றார் இல்லை. எங்கள் எல்லையை தாண்டாதீர்கள் என அவர்களிடம் மண்டையிட்டுக் கேட்டும் எவ்வித பயனும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் சீனக் கொடிகளுடன் காணப்பட்ட படகுகளும் எங்கள் எல்லைகளை ஆக்கிரமித்தன என்றார்.

யாழ்.மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கூறுகையில்,

எல்லைகள் தெரியாமையால், மீனவர்கள் எல்லை தாண்டுவதும் ஒரு காரணம். அதனால் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் மீனவர்களின் படகுகளில் எல்லை தாண்டுவதற்கான ஒலியமைப்பை பொருத்த வேண்டும். இதன்மூலம் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் கூறுகையில்,

எல்லை மீறும் மீனவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய எமக்கு பச்சைத் துரோகம் செய்கின்றது. மீனவர்களைக் கட்டுப்படுத்தாமல் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களை மோதவிட்டுப் பார்க்கின்றது என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/163304#sthash.hPqsJSp8.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை தரம் சொன்னாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். எல்லை தாண்டி எமது கடல் வளங்களையும் எமது மீனவர்களையும் சூறையாடும் இவர்களைக் கைதுசெய்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் போன்றவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்களின் கடற்பிரதேசங்களில் தமிழர்கள் சென்று மீன் பிடிப்பதில்லை. அதேபோல் சிங்களவர்களும் தமிழர்பிரதேசங்களுக்கு வந்து வலைவீசுவதை தூண்டில் போடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.