Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தானியேலின் தீர்க்கதரிசனங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களாக  இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பைபிளில் குறிப்பிட்டிருக்கிறபடி ஒரு தொடராக எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.  கடந்த வருட இறுதியில் இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைத்திருந்தமையினால் இணையத்தில் பல தேடுதல்களையும் ஒரு சில புத்தகங்களையும் வாசித்துப் புதிய பல தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் குறிப்புக்களாக எடுத்துக்கொண்டிருந்தேன். எனது தேடல்களுக்குச் சற்று அதிகமாக உலக அரங்கில் நிகழ்ந்த பல்வேறு வியத்தகு நிகழ்வுகளை அறியக்கூடியதாக இருந்ததெனினும் இடைக்கிடையே யாழ் இணையத்தில் ஒரு சில திரிகளுக்குக் கருதெழுதிக்கொண்டிருந்தமையினால் சரியாகத் தொடரமுடியாமல் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என அந்த நினைப்பைக் கிடப்பில் போட்டுவிட்டிருந்தேன். ஓரிரு நாள்களுக்கு முன்னர் படித்த  "ரஸ்யாவின் ISIS அமைப்புக்கு எதிரான தாக்குதல்களின் தீவிரம்" மற்றும் "ISIS அமைப்பு பயப்படும் ஒரே நாடு இஸ்ரேல்" போன்ற செய்திகள் மீண்டும் எழுதுமாறு தூண்டுகின்றன. இம்முறை சற்று மாறுதலாக தானியேல் என்ற யூத தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் விடயங்களை முதலில் "தானியேலின் தீர்க்கதரிசனங்கள்" என்ற தலைப்பின் கீழ் எழுத முயல்கின்றேன். இது ஒரு மதத்துக்கு ஆதரவானதோ அல்லது எதிரானதோ இல்லாமல் பைபிளில் நான் விளங்கிக்கொண்டதும், எனது தேடல்களில் நான் அறிந்துகொண்டதுமான விடயங்களை வைத்து மட்டும் எழுதுகின்றேன். முடிந்த மட்டும் பைபிள் வசன ஆதாரங்களையும், இணையத் தொடுப்புக்களையும் இணைக்க விழைகின்றேன். யாழ் இணையத்தில் அரசியல் திரிகளில் தேவையில்லாமல் ஈடுபடுவதும் தமிழில் தட்டச்சுச் செய்வதுமே என் முன்னே உருவெடுத்து நிற்கும் பாரிய இரண்டு பிரச்சினைகளாக இருக்கின்றன. இவையிரண்டினையும் சிறப்பாக மேற்கொள்ள முடிந்தால் தொடராக எழுதலாம். முயற்சிசெய்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

கி.மு 500 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகமே தீர்க்கதரிசி தானியேலின் புத்தகமாகும். இவருடைய புத்தகத்தில் மேசியாவின் (இயேசுவின்) வருகையை பற்றி முன் குறிக்கும் பல தீர்க்க தரிசனங்கள் கூறப்பட்டுள்ளன.

நேபுகாத் நேச்சர் எனும் பாபிலேனிய ராஜாவினால் சிறுவயதில் சிறை பிடிக்கபட்ட இவர், தன்னை ஒருபோதும் பாபிலோனிய பழக்க வழக்கங்களால் தீட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.

இவரும் இவருடைய நண்பர்களும் கற்கால கொடூர தண்டனை முறைகளான, சிங்கத்தின் வாயில் எறிதல், தீ சூளையை எழு மடங்காக சூடக்கி எறிதல் போன்றவற்றில் இருந்து தேவன் இவர்களை இரட்சித்ததாக கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதத் தொடங்குங்கள் வாலி. எழுதத் தொடங்கினால் மற்றவர்களது விமர்சனத்திற்கு பதில் எழுதி நேரத்தை வீணாக்கமல் தொடரை கட்டாயம் எழுதி முடிக்கவும். தொடர் எழுதி முடிந்தபின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாலி...! எனக்கும் சில சந்தேகங்கள் உண்டு அப்புறம் கேட்கின்றேன்...!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1

இஸ்ரவேல் அரசும் யூதா அரசும்
தாவீது மன்னரால் ஒன்றிணைக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட ஒன்றுபட்ட இஸ்ரவேல் தேசம் சாலொமோன் மன்னரின் இறப்பின் பின்னான காலத்தில் இரண்டு அரசுகளாகப் பிரிந்துவிடுகின்றது. வடக்கில் இருந்த அரசு இஸ்ரவேல் எனவும் தெற்கில் இருந்த அரசு யூதா என்றும் அழைக்கப்படலாயிற்று. இஸ்ரவேல் அரசின் தலைநகராமாக சமாரியாவும், யூதா அரசின் தலைநகரமாக ஜெருசலேமும் விளங்கின. வட அரசு இஸ்ரவேலரின் 10 கோத்திரங்களை உள்ளடக்கியதாகவும் தென் அரசு 2 கோத்திரங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன. லேவி கோத்திரத்தார் இரண்டு அரசுகளிலும் பரவலாக வாழ்ந்து வந்தனர். இந்த லேவியர்களுக்கு இரண்டு தேசங்களிலுமே காணிகளிலே சுதந்திரம் இருக்கவில்லை. ஏனெனில் இஸ்ரவேலரின் கடவுளாகிய யாவே தான் அவர்களின் சுதந்திரமாக இருந்தார். அதாவது கர்த்தருடைய ஆலயங்களில் ஆசாரியர்களாகவும் வேலைசெய்கிறவர்களாகவுமே லேவி கோத்திரத்தார் இருந்தனர். அது போலவே யோசேப்பு கோத்திரம் என்று ஒரு கோத்திரம் இருக்கவில்லை, மாறாக யோசேப்பின் 2 மகன்மாரான எப்பிராயீம், மனாசே என்பவர்கள் கோத்திரத் தலைவர்களாகின்றனர்.

வட அரசின் ஆழுகைக்குட்பட்ட கோத்திரங்கள்
1. ரூபன்
2. சிமியோன்
3. இசாக்கர்
4. செபுலோன்
5. தாண்
6. காத்
7. நப்தலி
8. ஆசேர்
9. எப்பிராகீம் (யோசேப்பின் இளைய மகன்)
10. மனாசே (யோசேப்பின் மூத்த மகன்)

தென் அரசின் ஆழுகைக்குட்பட்ட கோத்திரங்கள்
1. யூதா
2. பென்யமீன்

இஸ்ரவேலின் கடைசி அரசனான ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரியாவின் அரசன் சல்மனாசார் சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறைப் பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். இத்துடன் இஸ்ரவேல் அரசு முடிவுக்கு வந்தது.  (2 இராஜாக்கள் 17 3-7)

இது இவ்வாறு இருக்க யூதா அரசு கிமு 587-586 ஆண்டளவில் நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய அரசனால் கைப்பற்றப்பட்டது. அப்போது யூதாவின் அரசனாக சிதெக்கியா என்பவன் இருந்தான். வேதாகமத்திலே 2 வது இராஜாக்கள் புத்தகத்திலே 25 வது அதிகாரத்திலே இச் சம்பவம் எழுதப்பட்டிருக்கின்றது. இந்த நேபுகாத்நேச்சார் யூதா நாட்டிலே சிலரை மட்டுமே விட்டு வைத்து மிகுதியானோரைப் பாபிலோனுக்குச் சிறைப்படுத்திக்கொண்டு போய்விட்டான். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் ஒருவராகவே தானியேல் தீர்க்கதரிசியும் பாபிலோனுக்கு வந்தார்.

(இஸ்ரவேல் சந்ததியாரின் முழு வரலாற்றையும் பிறிதொரு சந்தர்ப்பத்திலே முழுமையாக எழுதுகின்றேன்)

இன்னும் வரும்........

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாலி,வாசிக்க காத்திருக்கின்றோம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On January 11, 2016 at 0:12 AM, வாலி said:

1

இஸ்ரவேல் அரசும் யூதா அரசும்
தாவீது மன்னரால் ஒன்றிணைக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட ஒன்றுபட்ட இஸ்ரவேல் தேசம் சாலொமோன் மன்னரின் இறப்பின் பின்னான காலத்தில் இரண்டு அரசுகளாகப் பிரிந்துவிடுகின்றது. வடக்கில் இருந்த அரசு இஸ்ரவேல் எனவும் தெற்கில் இருந்த அரசு யூதா என்றும் அழைக்கப்படலாயிற்று. இஸ்ரவேல் அரசின் தலைநகராமாக சமாரியாவும், யூதா அரசின் தலைநகரமாக ஜெருசலேமும் விளங்கின. வட அரசு இஸ்ரவேலரின் 10 கோத்திரங்களை உள்ளடக்கியதாகவும் தென் அரசு 2 கோத்திரங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன. லேவி கோத்திரத்தார் இரண்டு அரசுகளிலும் பரவலாக வாழ்ந்து வந்தனர். இந்த லேவியர்களுக்கு இரண்டு தேசங்களிலுமே காணிகளிலே சுதந்திரம் இருக்கவில்லை. ஏனெனில் இஸ்ரவேலரின் கடவுளாகிய யாவே தான் அவர்களின் சுதந்திரமாக இருந்தார். அதாவது கர்த்தருடைய ஆலயங்களில் ஆசாரியர்களாகவும் வேலைசெய்கிறவர்களாகவுமே லேவி கோத்திரத்தார் இருந்தனர். அது போலவே யோசேப்பு கோத்திரம் என்று ஒரு கோத்திரம் இருக்கவில்லை, மாறாக யோசேப்பின் 2 மகன்மாரான எப்பிராயீம், மனாசே என்பவர்கள் கோத்திரத் தலைவர்களாகின்றனர்.

வட அரசின் ஆழுகைக்குட்பட்ட கோத்திரங்கள்
1. ரூபன்
2. சிமியோன்
3. இசாக்கர்
4. செபுலோன்
5. தாண்
6. காத்
7. நப்தலி
8. ஆசேர்
9. எப்பிராகீம் (யோசேப்பின் இளைய மகன்)
10. மனாசே (யோசேப்பின் மூத்த மகன்)

தென் அரசின் ஆழுகைக்குட்பட்ட கோத்திரங்கள்
1. யூதா
2. பென்யமீன்

இஸ்ரவேலின் கடைசி அரசனான ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரியாவின் அரசன் சல்மனாசார் சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறைப் பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். இத்துடன் இஸ்ரவேல் அரசு முடிவுக்கு வந்தது.  (2 இராஜாக்கள் 17 3-7)

இது இவ்வாறு இருக்க யூதா அரசு கிமு 587-586 ஆண்டளவில் நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய அரசனால் கைப்பற்றப்பட்டது. அப்போது யூதாவின் அரசனாக சிதெக்கியா என்பவன் இருந்தான். வேதாகமத்திலே 2 வது இராஜாக்கள் புத்தகத்திலே 25 வது அதிகாரத்திலே இச் சம்பவம் எழுதப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் இரு தடவைகள் நேபுகாத்நேச்சாரின் படைகள் எருசலேம் நகரை முற்றுகை போட்டுக் கைப்பற்றி இருந்திருக்கின்றன. முதலாவது முறை யோயாக்கிம் அரசனுடைய காலத்தில் நடைபெற்றது. 3 வருடங்கள் யோயாக்கீம் பாபிலோனின் ஆட்சிக்கு அடங்கியிருந்துவிட்டு பின்னர் கிளர்ச்சிசெய்தான். பாபிலோனியர் எருசலேமைக் கைப்பற்றி யோயாக்கீமின் மகனான யோயாக்கீனை அரசனாக்கி விட்டுச் சென்றனர். மூன்று மாதங்களின் பின்னர் யோயாக்கீனும் கலகம் செய்யவே இரண்டாம் முறை எருசலேம் முற்றுகையிடப்பட்டு யோயாக்கீனின் சிறிய தகப்பனான சிதெக்கியா அரசனாக்கப்பட்டான். சிதெக்கியா அரசனும் நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்வே மூன்றாம் முறை எருசலேம் கைப்பற்றப்பட்டு யூதர்கள் சிதறடிக்கப்பட்டனர். இந்த நேபுகாத்நேச்சார் யூதா நாட்டிலே சிலரை மட்டுமே விட்டு வைத்து மிகுதியானோரைப் பாபிலோனுக்குச் சிறைப்படுத்திக்கொண்டு போய்விட்டான். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் ஒருவராகவே தானியேல் தீர்க்கதரிசியும் பாபிலோனுக்கு வந்தார்.

(இஸ்ரவேல் சந்ததியாரின் முழு வரலாற்றையும் பிறிதொரு சந்தர்ப்பத்திலே முழுமையாக எழுதுகின்றேன்)

இன்னும் வரும்........

 சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டவைகள் எனது கவனக் குறைவால் பதிவிடப்படாமல் தவறவிடப்பட்டுவிட்டன. தவறுக்கு மன்னிப்புக் கோரும் அதேவேளை இனி இவ்வாறான தவறு இடம்பெறமாட்டாது என எண்ணுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2

பாபிலோனில் தானியேலின் தொடக்கம்
தானியேல் பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டு வந்தபோது அவருக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயது இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் 20 வயதிருக்கலாம் என்கின்றனர்.  தானியேல் புத்தகத்தினுள் நுழைவதற்கு முன்னர் ஒரு சுவையான வரலாற்றுச் சம்பவம் ஒன்றைப் பார்த்து விடலாம். 

கி.மு. 332 ஆம் ஆண்டளவில் மகா அலெக்ஸாண்டர் எருசலேம் நகருக்கு வந்து தேவாலயத்தில் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றார். அப்போது ஆலயத்தின் பிரதான ஆசாரியர், தானியேல் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த "மேதிய மற்றும் பெர்சிய (பாபிலோன்) அரசுகள் கிரேக்கர்களினால் முடிவுக்கு வரும்" என்ற முன்னறிவிப்பைக் காண்பித்தபோது அலெக்ஸாண்டர் மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றுவிட்டதாக கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று அறிஞர் பிளேவியஸ் யோஸபஸ் என்பவர் தமது பதிவு ஒன்றில் பதிவுசெய்திருக்கின்றார். இதுபற்றி மேலதிகமாக பின்பு எழுதுகின்றேன்.

 

தானியேல் புத்தகம்: அதிகாரம் 1: வசனங்கள் 1-9

யூதா நாட்டின் அரசனாகிய யோயாக்கீம் அரசாளத் தொடங்கின  மூன்றாம்  ஆண்டிலே பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதனை முற்றுகையிட்டு யோயாக்கிமையும் எருசலேமின் சலொமோன் மன்னர் கட்டிய தேவாலயத்தின் பாத்திரங்கள் சிலவற்றையும் கைப்பற்றிக்கொள்கின்றான். அவ்வாறு கைப்பற்றிய பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன்னுடைய கடவுளின் கோவிலுக்குக் கொண்டுபோய், தன்னுடைய கடவுளின் பண்டசாலைக்குள் வைத்தான். இச் சம்பவம்  கி.மு. 604 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் சொல்லப்படுகின்றது.

இந்தச் சினேயார் தேசத்தில்தான் பல்வேறு மொழிகள் தோற்றம் பெற்றதாக வேதாகமத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் கூறுகின்றது. தாங்கள் சிதறிப் போகாதபடி, வானளாவும் மிகப் பெரிய கோபுரத்தைக் கொண்ட நகரம் ஒன்றைக் கட்டி நமது பெயரை நிலைநாட்டுவோம் எனச்சொல்லி நகரைக் கட்டத் தொடங்கினர். இது கடவுளுடைய பார்வையில் பொல்லாப்பானதாகவும் அவமதிப்பாகவும் இருந்தது. அதுவரை மக்கள் எல்லோரும் ஒரே மொழியைப் பேசிக்கொண்டிருந்தனர். எனவே ஒருவர் பேசும் மொழியை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி கடவுள் தாறுமாறாக்கிப் பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார். மனுக்குலம் தமது பெருமையை பறைசாற்றிக்கொள்ளக் கட்டப்பட்ட நகரம் இவ்வாறு பாதியிலேயே நின்றுபோயிற்று. எனவே அந்த இடம் பாபேல் என அழைக்கப்பட்டது. பாபேல் என்றால் குழப்பம் என்பது அர்த்தமாம்.  பாபேல் கிரேக்க மொழியில் பாபிலோன் என்று சொல்லப்படுகின்றது.  

 

பின்பு இஸ்ரவேல் அரச குடும்பங்களிலிருந்தும் உயர் குடும்பங்களிலிருந்தும்  ஆரோக்கியமான, உடம்பில் தழும்போ, காயமோ, குறைபாடுகளோ இல்லாத அழகான, சுறுசுறுப்பான, எல்லாவற்றையும் எளிதாகவும், வேகமாகவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலுடைய, அரசனாகிய தன் வீட்டில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களைக் கொண்டுவந்து அவர்களுக்குக் கல்தேயரின் மொழியையும் எழுத்தையும் கற்பிக்குமாறு நேபுகாத்நேச்சார் தன்னுடைய அரண்மனைப் பணியாளர்களின் தலைவனாகிய அஸ்பெனாஸ் என்பவனுக்கும் கட்டளை கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தான் சாப்பிடும் உணவிலும் தான் குடிக்கும் திராட்சைப்பழச் சாற்றிலும் ஒரு பங்கை அந்த இளைஞர்களுக்குக் கொடுத்து அவர்களை 3 வருடம் பயிற்றுவித்து  மூன்றாம் வருட முடிவிலே  பாபிலோன் அரசனாகிய தனது பணியாட்களாக இருக்கவேண்டும் என விரும்பினான். இந்த இளைஞர் கூட்டத்திலே யூதா கோத்திரத்தைச் சேர்ந்த  தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள். இந்த நான்கு பேருக்கும் அரண்மனைப் பணியாளர்களின் தலைவனாகிய அஸ்பேனாஸ் என்பவன் முறையே தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் பெயர்களை மாற்றினான். அன்றைய பாபிலோனிய அரண்மனையில் பணிசெய்தவர்கள் அனைவரும் காயடிக்கப்பட்ட அண்ணகர்களாகவே இருந்தனர். இந்த அஸ்பேனாஸ் அண்ணகர்களின் தலைவன் என்றே வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. எனவே தானியேலும் நண்பர்களும் காயடிக்கப்பட்ட அண்ணகர்களாக இருந்திருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்.

தானியேல் பாபிலோனிய  அரசனது உணவினாலும் திராட்சைப்பழச் சாற்றினாலும் தன்னைத்தானே தீட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாஸிடம் தன்னைத் தானே தீட்டுப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான். யூதர்கள் புறஜாதி மக்கள் உண்ணும் உணவுகளை உண்ண மாட்டார்கள். மோசே கற்றுக் கொடுத்த நியாயச் சட்டத்தில் இஸ்ரவேலர் எதை உண்ணவேண்டும் எதனை விலக்க வேண்டும் என்ற வரையறை உண்டு. மட்டுமல்ல எந்த உணவாயினும் சிலைகளுக்குப் படைத்தது எனத் தெரிந்தால் அதை அவர்கள் உண்ணக்கூடாது. இஸ்ரவேல் மக்களுக்குள் நசரேயர் என்றொரு விரதம் காக்கும் பிரிவு உண்டு. இம் மக்கள் மதுபானத்தையோ, திராட்சைப்பழச் சாற்றினையோ அல்லது திராட்சைப்பழத்தினால் ஆக்கப்பட்ட எந்தவொரு பதார்த்தத்தையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டார்கள். மரக்கறி உணவுகளையே உண்பார்கள். தானியேலும் அவர் நண்பர்களும் நசரேயர்களாக இருந்திருக்கவே வாய்ப்புக்கள் உண்டு. அரண்மனைப் பணியாளர்களின் தலைவன் அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி கடவுள் உதவிசெய்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3

தானியேல் புத்தகம்: அதிகாரம் 1: வசனங்கள் 10-21

எனினும் அரண்மனைப் பணியாளர் தலைவன் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் அரசரான என் தலைவருக்குப் பயப்படுகிறேன். அரசர் தாம் உண்ணும் உணவையும், தாம் குடிக்கும் திராட்சைப்பழச் சாற்றையும் உங்களுக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் செழுமை குன்றியிருப்பதை அரசர் கண்டால் என் தலை சீவப்பட்டுவிடும். நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்" என்றான். ஆனால் தானியேலோ அஸ்பேனாஸினால் தன்னையும், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரையும் கவனித்துக் கொள்ளும்படி நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்காரனான மேல்ஷார் என்பவனிடம் இது குறித்துப் பேசினார். பத்து நாள்களுக்காவது எங்களுக்குச் சாப்பிடப் பருப்பு மற்றும் காய்கறிகளையும் குடிக்கத் தண்ணீரையும் தந்து அரசனுடைய உணவுகளை உண்ணுகின்ற மற்றவர்களின் முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அதன் பின்னர் எங்களை எவ்வாறு நடத்துவது என்பதை நீரே முடிவுசெய்யும் என மேல்ஷாரிடம் தானியேல் கேட்டுக் கொண்டார். எனவே, மேல்ஷார் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான். பத்து நாள்களுக்குப் பின்பு, தானியேலினதும் அவரது நண்பர்களினதும் தோற்றம் அரசனது உணவை உண்டுவந்த மற்ற அனைவரையும் விடவும் மிகக் களையுள்ளதாகவும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாகவும் இருந்தது. எனவே, மேல்ஷார் கொடுக்கவேண்டிய அரசனது உணவுக்கும் திராட்சைப் பழச்சாற்றுக்கும் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளையும் தண்ணீரையும் கொடுத்தான்.

கடவுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகிய இந்த நான்குபேருக்கு பலமொழிகளை எழுதும் வாசிக்கும் திறமையையும், கல்வி அறிவையும், ஞானத்தையும் கொடுத்தார். சிறப்பாகத் தானியேல், பலவித (தீர்க்க)தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருந்தார். இவ்வாறு மூன்று வருட பயிற்சிக் காலம் முடிவடைந்தபோது எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் அரசனாகிய நேபுகாத்நேச்சாரின் முன்பாகக் கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அவர்களோடு பேசினான்; அப்பொழுது அவர்கள் அனைவருக்குள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக எவரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் நால்வரும் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர். ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் நேபுகாத்நேச்சார் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா ஞானிகளையும் அறிஞர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டான்.

இவ்வாறு அரசவை அரண்மனைப் பணியாளாக பாரசீக அரசன் சைரஸ் கி.மு 539 இல் பாபிலோனைக் கைப்பற்றி ஆண்ட முதலாம் ஆண்டுவரை தானியேல் இருந்தார். (இந்த முதலாம் ஆண்டு கணக்கு என்பது தானியேல் தமது குறிப்புக்களை எழுதிய குறிப்பிட்ட காலப்பகுதியை மட்டுமெ குறிக்கின்றது. தானியேலின் இறுதிக் குறிப்பு சைரஸ் அரசனின் 3 ஆவது ஆண்டு காலப் பகுதியிலும் எழுதப்பட்டிருக்கின்றது. தானியேல் அதிகாரம் 10 : வசனம் 1. அதற்கு மேலும் தானியேல் சிலகாலங்கள் வாழ்ந்தார்).

(இன்னும் வரும்........)

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.