Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்! இந்த இனப்பாகுபாடு மைத்திரி நல்லாட்சியிலும் மறையவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்! இந்த இனப்பாகுபாடு மைத்திரி நல்லாட்சியிலும் மறையவில்லை?

b3b3f157-d174-4ea3-a7ba-8e2fc1f52156blank.gifசிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்ப்பதற்காக நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கமைவாக அங்குள்ள சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணங்களுக்கமைவாக 35000 ரூபா சம்பளத்துடன் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்துவருகின்றன. அங்கு ஆசிரியராகக் கடமையாற்றுவதற்காக வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம் வழங்கி ஆசிரிய உதவியாளர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நல்லாட்சியிலும் ஆசிரியர் நியமனத்தில் சிங்களவர் தமிழர் என்ற இனப்பாகுபாடும் இனப்புறக்கணிப்பும் வெளிப்படுவதனை கீழ்வருமாறு நோக்க முடிகின்றது:-
01) சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றி ஆசிரியர் சேவை தரம்-3-II இல் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் அதே வேளை தமழிர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றாமல் அரசியல் சுயலாபங்களுக்காக ஆசிரிய உதவியாளர் நியமனம்.
02) சிங்களவர்களுக்கு 35000 ரூபா மாதச் சம்பளம் தமிழர்களுக்கு வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம்.
03) சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் படிகள் வழங்கப்படும் அதேவேளை தமிழர்களுக்கு வாழ்க்கைப் படிகள் மறுக்கப்பட்டுள்ளன.

04) சிங்களவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆனால் தமிழர்களுக்கு ஓய்வூதியத் திட்டமே இல்லை.
05) சிங்களவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படும் அதேவேவை தமிழர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கைவிட்டாலும் கருத்திலெடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன.
06) சிங்களவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் தமிழர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் மறுக்கப்படுகின்றன.
07) சிங்களவர்களுக்குச் சிறப்பான வாழ்க்கை தமிழர்களுக்குச் சீரழிந்த வாழ்க்கை.
ஆசிரிய உதவியாளர்கள் என அரசாங்கத்தால் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்கள் கண்ணீரோடு கலங்கித் தவிக்கின்றன. இவர்களை ஆசிரியர் சேவையினுள் அரசாங்கம் உள்ளீர்ப்புச் செய்யாது இவர்களின் உழைப்புக்கான சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றமையால் ஆசிரிய உதவியாளர் குடும்பங்கள் பல வறுமையோடு வாடிவதங்குகின்றன.

ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை இலங்கை அரசாங்கம் தமிழர்கள் வாழும் கஸ்டப்பட்ட பகுதிகளிலேயே வழங்கி தமிழர்களை அவலத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளான மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கில் பின்தங்கிய வன்னிப் பகுதிகளிலும் கிழக்குப் பகுதிகளிலுமே அரசில் நோக்கம் கருதி ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையை சீரழிவதற்குக் காரணமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் கண்மூடி இருந்து வருகின்றார்கள்.
இதேவேளை சிங்களவர்கள் வாழும் பகுதிகளை இனங்கண்டு அங்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றமையானது இனப்பாகுபாட்டையும் இனப் புறக்கணிப்புக்களையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்களாகிய எம்மையும் இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுத்து எமக்கான சம்பளத்தையும் சிங்களவர்களுக்கு வழங்குவதைப் போல அதிகரித்து வழங்க இந்த நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உடனடியாக எமக்கு உதவ வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரிய உதவியாளர்கள்.
b3b3f157-d174-4ea3-a7ba-8e2fc1f52156blank.gif2012223e-6345-4e6b-8ed4-f4352b9d3ab7

http://ttnnews.com/சிங்களவர்களுக்கு-35000-ரூபா-ச/blank.gif

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இதைப்பற்றிக்கதைக்க மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் யாரும் வரமாட்டார்களே. இந்தத்தரப்படுத்தல்களால்தானே போராட்டமே உருவானது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாகுபாடு சகல துறைகளிலும் இன்றும் உண்டு. மக்கள் வாழப்பழகி விட்டார்கள். இருப்பதை வைத்து வாழ்ந்து விடுவோம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, பெருமாள் said:
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்! இந்த இனப்பாகுபாடு மைத்திரி நல்லாட்சியிலும் மறையவில்லை?

இதென்ன கோதாரியாய்க்கிடக்கு......

பிரச்சனையளை மெல்ல மொள்ளத்தான் அவையளோடை கதைச்சு பேசி வெண்டெடுக்கவேணும்....tw_tounge_wink:

சுடூது மடியைபிடி எண்டு அவசரப்பட்டால் என்னெண்டு நாங்கள் வெட்டியாடுறது.tw_angry: tw_angry:

இப்பதானே நாங்கள் எதிர்க்கட்சி பொசிசனுக்கு வந்திருக்கிறம்......tw_confused:

அடுத்த லெக்சனுக்கிடையிலை செய்து முடிப்பம்...இல்லாட்டி அதுக்கு அடுத்த லெக்சனுக்கிடையிலையாவது .........:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கோத்தா மாதிரி அடிமையாக நடத்தாமல்.. 6000 ரூபா கூலி கொடுக்கிறாரில்ல.. மைத்திரின்னு பெருமைப்படத் தெரியாத பசங்களா இருக்காங்கப்பா. இவங்களோட என்னத்தை அரசியலுன்னு பண்ணுறது. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.