Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

 

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ

ஆண் : சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா
வா அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா ஆஆ ஆஆ


வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்

பெண் : எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்

ஆண் : எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
ஏ நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால

பெண் : குத்துவிளக்கா
சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச
மனச இப்போது

ஆண் : நம்ம பக்கம்
காத்து வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து

பெண் : கந்தனுக்கு வள்ளிய
போல கண்ணனுக்கு ராதைய
போல ஆசைகொண்ட
உயிருக்கெல்லாம்
துணையிருக்கு பூமியில

ஆண் : கண்ணுக்குள்ள
கண்ணன் இருக்க
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா
தெரிஞ்சவங்க யாருமில்லை

பெண் : றெக்கை கட்டி
பறக்கும் பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும்
மறைக்கும் நெஞ்சோடு

ஆண் : ஹே சிட்டுகுருவி
சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும்
குதிக்கும் என்னோடு

பெண் : சிட்டான் சிட்டான்
சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம்
நமக்கு கெட்டத தான் ஒதுக்கு
இனி நம்ம கிட்ட கெழக்கு........!

--- கொக்கர கொக்கரக்கோ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே…

ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண் : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெண் : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்.......!

--- இந்த மான்  உந்தன் சொந்த மான் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
ஆண் : சுகம் கோடி காணட்டும்

ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
ஆண் : புதுச்சோலை பூக்களே
 

ஆண் : வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ

ஆண் : திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்

ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்
நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும்
இன்பம் இங்கே என்றதே

ஆண் : வெண்மலை அருவி
பன்னீர் தூவி
பொன்மலை அழகின்
சுகம் ஏற்காதோ

ஆண் : இவை யாவும் பாடங்கள்
இனிதான வேதங்கள்.......!
 

--- கோடைக்கால காற்றே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்

ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

ஆண் : கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

ஆண் : உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு

ஆண் : ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்

ஆண் : உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது

ஆண் : கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

ஆண் : என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

ஆண் : பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது

ஆண் : காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது.......!

 

--- நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : { தங்கத் தாமரை
மகளே வா அருகே தத்தித்
தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விாிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே
உன்னாலே } (2)
 

ஆண் : செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை
வந்து நின்றேனே வெறித்த
கண்ணால் கண்கள் விழுங்கும்
பெண்மானே உன் கனத்த
கூந்தலின் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை
ஒன்று கொதிக்க எந்த மூடி
போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க

ஆண் : பறக்கும் வண்டுகள்
பூவில் கூடும் காா்காலம்
கனைக்கும் தவளை துணையைச்
சேரும் காா்காலம் பிாிந்த குயிலும்
பேடை தேடும் காா்காலம்
பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் காா்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே
ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது
பூஜை நெருக்கமே காதல் பாஷை .......!

 

--- தங்கத் தாமரை மகளே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
 

ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
 

ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே
பித்த நாடி சத்தமாச்சு
ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம
மொட்ட மாடி கெட்டுப்போச்சு
ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
 

ஆண் : காதல் சங்கதி
ஆண் : கூறும் சுந்தரி
ஆண் : மாலை சூட வேளை கூட
போதை ஏற ஆசை தீர ஹோய்

ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்
நம்மாளு போல ஏது
ஆண் : மாமன் நானாக பாவம் தானாக
வாசல் தேடி வந்த மாது
 

ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
 

ஆண் : பாலைக் காச்சுடா
ஆண் : பாயைப் போடுடா
ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை
வாங்கி வந்து தூவு தூவு ஹேய்........!

 

--- பாக்கு வெத்தல போட்டேன் பத்தல ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி ….

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தொியாதடி

ஆண் : உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

ஆண் : காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

ஆண் : உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஆண் : ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

ஆண் : யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

ஆண் : என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் …….!

 

--- என் காதல் சொல்ல நேரம் இல்லை ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே

பெண் : இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ

பெண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்

பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண் : புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ

பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்

பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி திறப்பேன்

பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது வாசல் தேடுதே

பெண் : காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ

பெண் : பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
 

பெண் : என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்.......!

 

--- குயில்பாட்டு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : பூங்காற்று
திரும்புமா என் பாட்ட
விரும்புமா பாராட்ட
மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா

பெண் : ராசாவே
வருத்தமா ராசாவே
வருத்தமா ஆகாயம்
சுருங்குமா ஏங்காதே
அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

ஆண் : என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல

பெண் : இந்த வேதனை
யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஆண் : ஏதோ என்பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி

பெண் : சோக ராகம்
சொகம் தானே சோக
ராகம் சொகம் தானே
ஆண் : யாரது போறது
பெண் : குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா

ஆண் : உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்

பெண் : உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

ஆண் : மானே என்
நெஞ்சுக்குப் பால்
வார்த்த தேனே
முன்னே என்
பார்வைக்கு வாவா பெண்ணே

பெண் : எசப் பாட்டு
படிச்சேன் நானே
ஆண் : பூங்குயில் யாரது
பெண் : கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க

ஆண் : அடி நீதானா
அந்தக் குயில் யார்
வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததே
ஒலகமே மறந்ததே

பெண் : நான்தானே
அந்தக் குயில் தானாக
வந்தக் குயில் ஆத்தாடி
மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா........!

 

--- பூங்காற்று திரும்புமா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்

 

பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

பெண் : பூங்கதவே தாள் திறவாய்

ஆண் : பூவாய் பெண் பாவாய்

 

ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…....!

 

--- பூங்கதவே தாள் திறவாய் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்

ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம்
அதை ஊரும் உலகும் மதிக்கும்

ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம்
அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு
 

ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு......!

 

--- அகரம் தமிழுக்கு சிகரம் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

குழு : ஒஹ் ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண் : யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
குழு : பூக்கள் அங்கே வீசும் மனம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

பெண் : தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
குழு : தீயில் மனம் நீராடுது
மீட்சி பெற போராடுது........!

--- ராத்திரி நேரத்து பூஜையில் ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
 

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்
அத மாத்திக் கொள்ளணுமாம்
நல்ல நாள் குறிக்கணுமாம்
அத நிச்சயம் செய்யணுமாம்
அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்

பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல்
உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா
காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து
உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா

ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி
கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி
சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும்
பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்

பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம்
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்……..

ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா
சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா
வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம்
தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்

பெண் : முத்தான நிலவொளியில்
அன்பு குடிசை போடலாம்
காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம்
இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே
நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்

ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்………!

--- ஒரு சின்ன மணிக்குயிலு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்

பெண் : வெள்ளி நிலா
வானவெளி போவது போல்
பிள்ளை நிலா
துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ

பெண் : அள்ளி அள்ளி
கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின்
செல்லமொழி கேட்டதம்மா

பெண் : ஒரு மர சிறு கூட்டில்
கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது
தாய் அன்பின் எல்லை

பெண் : பால் முகம் மறக்காமல்
தடுமாறும்
சேய் முகம் கண்டால்தான்
நிலை மாறும்
 

பெண் : தென்றல் ஒன்று
தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில்
வந்தது என்ன….ஹோ….ஓ…

பெண் : சொர்க்கமொன்று
பூமி தன்னில் கண்டது போல்
இன்பங்களை தந்து விட்டு
சென்றது என்ன….

ஆண் : துணையாய் வழி வந்து
எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப் போல
இணை ஏது அன்பே

ஆண் : எனக்கென நீதானே
நம் வாழ்வில்
உனக்கென நான்தானே
எந்நாளும்.......!
 

--- உயிரே உயிரின் ஒளியே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

ஆண் : கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

ஆண் : உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு

ஆண் : ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்

ஆண் : உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது

ஆண் : கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

ஆண் : என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

ஆண் : பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது

ஆண் : காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது

 

--- நான் பாடும் மௌன ராகம் ---
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ...........!

 

பெண் : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா

பெண் : கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா
நீ ரெண்டு மொழதுல
பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா

பெண் : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
 

பெண் : வாங்கி போட்டேன் வெத்தலை
செவக்கள சாமி
வாயி முத்தம் குடுத்தா
செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோணும்
நல்ல வழி காமி

பெண் : ஓ ஒட்டுக்கின்னு மேனி
தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே
வளரட்டும் வயிறு

பெண் : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா

பெண் : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா

பெண் : கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா

பெண் : மச்சு வீடு வேணாம்
மெட்டு கட்டு போதும்
மெத்த ஏதும் வேண்டாம்
ஒத்த பாயி போதும்

பெண் : மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்கு போதும்
ஓ சைவ முத்தம் கொடுத்தா
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்

பெண் : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா.........!

 

--- கோழி கோழி இவ சண்டைக் கோழி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ............!

ஆண் : { உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை
பக்கத்தில மேயுதுன்னு
சொன்னாங்க மேயுதுன்னு
சொன்னதில நியாயமென்ன
கண்ணாத்தா } (2)

ஆண் : பாட்டுல மாடுகட்டி
பால கறந்து வெச்சா பால்
திரிஞ்சி போனதுன்னு
சொன்னாங்க சொன்னவங்க
வார்த்தையில சுத்தமில்ல
அடி சின்ன கண்ணு நானும்
அத ஒத்துகல

ஆண் : வட்டு கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சதுன்னு
சொன்னாங்க கட்டுக்கதை
அத்தனையும் கட்டுக்கதை
அத சத்தியமா நம்ப மனம்
ஒத்துகல

ஆண் : பொங்கலுக்கு
செங்கரும்பு பூவான
பூங்கரும்பு செங்கரையான்
தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க
நியாமில்ல அடி சித்தகத்தி
பூவிழியே நம்பவில்ல.......!

 

--- உச்சி வகுந்தெடுத்து---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா

பெண் : பூமி எங்கும் பூமேடை
பொங்கி பாயும் நீரோடை
ஆண் : மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன் ஆடை

பெண் : மாந்தளிர் மேனியில்
மழை வேண்டும்
ஆண் : இள மாலையில் நான்
அதை தர வேண்டும்

பெண் : சிவந்த கன்னம் தாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்

பெண் : தேவதை விரித்தது
மலர் மஞ்சம்
ஆண் : அதில் தேவையை முடிப்பது
இரு நெஞ்சம்

பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
ஆண் : இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை

பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும்
மனம் வேண்டும்
ஆண் : அது சொல்லும் வண்ணம்
துள்ளிசெல்லும் உடல் வேண்டும்........!


--- உலகம் அழகு கலைகளின் சுரங்கம் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்

பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)

பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால்
சிங்கபூரு போகுமா
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால்
பெண்ணின் தேவை தீருமா} (2)

பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு
வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு
போக வேண்டும் நல்லதை
படாஃபட்

பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே} (2)

பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம்
கடவுள் போட்டதல்லடி
கொல்லும் போது கொல்லு
தாண்டி செல்லும்போது செல்லடி
படாஃபட்

பெண் : {காதல் போதை என்பதெல்லாம்
காமதேவன் கட்டளை
காமதேவன் கட்டளைக்கு
காதலர்கள் முத்திரை} (2)

பெண் : பங்குனிக்கு பின்பு என்ன
ஐயமின்று சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும்
பழமை வெறும் கண்திரை
படாஃபட் .........!

 

--- அடி என்னடி உலகம் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா

பெண் : பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

ஆண் : தாயாரின் சீதனமும் தம்பிமார்
பெரும் பொருளும்

ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா
அது மானாபி மானங்களை
காக்குமா 

பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை
பொன் நகையாம் } (2)

பெண் : நாணமாம் துணை இருந்தால்
போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே

ஆண் : அங்கம்
குறைந்தவனை…
ஆண் : அழகில்லா ஆண்
மகனை மங்கையர்கள்
நினைப்பதுண்டோ
பொன்னம்மா

ஆண் : வீட்டில்  மணம் பேசி
முடிப்பதுண்டோ சொல்லம்மா 

பெண் : { மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை 

பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
 கண்ணிலே களங்கமுண்டோ
சொல்லையா ......!

 

--- தாழையாம் பூ முடிச்சு ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..
முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
நேரம் போனால் வாசம் போகும்
வாசம் போனாலும் பாசம் போகாது

ஆண் : எந்த கோவில் ஆனால் என்ன
தெய்வம் தெய்வம்தான்
ஓடும் நதியின் நீரும்
ஆடும் கடலில் சேரும்
கரையில் நிற்கும் நாணல்
கண்ணீர் சிந்தலாமா

ஆண் : எந்த கோலம் கொண்டால் என்ன
சொந்தம் சொந்தம்தான்
எந்த பிறவி வந்தால் என்ன
பந்தம் பந்தம்தான்

ஆண் : பிரியும் பெண்ணைக் கண்டு
உருகும் நெஞ்சம் உண்டு
தந்தை உள்ளம் ஒன்று
தனிமை ரோஜா ஒன்று

ஆண் : பொட்டும் பூவும் கட்டித் தந்தோம்
பச்சைக் கிளியொன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும்
கருணை மனம் கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும்
மை விளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க
மங்கல மங்கையாக .........!

 

--- நேத்து பறிச்ச ரோஜா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!  

பெண் : உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி

பெண் : ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும் நேரமடா 

பெண் : { கன்னத்தில்
ஒன்னே ஒன்னு கடனாக
தாடா கண்ணுக்குள்
விளையாடும் கலையே
நீ வாடா 

பெண் : எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன் எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன்

பெண் : எனக்கு இனி
நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
 

பெண் : { சித்திர பூப்போல
சிதறும் மத்தாப்பு தீயேதும்
இல்லாமல் வெடித்திடும் கேப்பு 

பெண் : முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு 

பெண் : முகமோ மலரோ
இது என்ன ரசிப்பு மின்னொளி
வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா.........!

--- உன்னைக்கண்டு நான் ஆட ---




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலில் அரசியல்வாதிகள், பொலிஸாரிடமிருந்தே  ஆரம்பியுங்கள் ஊழல் மோசடியை. ஊழல் மோசடியின் ஊற்று இவர்களே.
    • இன்று பலருக்கு தர்ம சங்கடம். மஹிந்த, ரணில் ஆட்சியில் இல்லாதது. இல்லையேல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தை எச்சரிப்பார்களா? மைத்திரி பிச்சை எடுத்து கட்டவில்லையா? அவ்வாறே இவரும் செய்ய வேண்டியதுதான். இல்லையேல் பணிப்பெண்ணாக அவுஸ்திரேலியாவில் வேலைது செய்ய கட்டவேண்டியதுதான் யாரும் ஏற்றுக்கொண்டால்.  வெளிநாட்டில் இவ்வாறு அந்தப்பெண்ணை நடத்தியவர் உள்நாட்டில் எப்படி நடத்தியிருப்பார்? 
    • உண்மை! மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது, வடக்கில் எல்லாம் இயல்பு நிலையில் உள்ளது எனக்காட்ட, இவர் அரசுக்கு முண்டு கொடுத்து, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிக்கமர்த்தி தேர்தலில் காலங்களில்  தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். அரசிடமும் கூலி வாங்கி, மக்களை கடத்தி கொலை, கொள்ளை நடத்தியும் சேகரித்துக்கொண்டார். இதில அரசோடு சேர்ந்து மக்களின் பிரச்னைக்காக உழைத்தாராம். அப்போ ஏன் மக்கள் இவரை நிராகரித்தனர் என்று யாரும் பேட்டி எடுக்கவில்லையா இவரிடம்? முன்பெல்லாம் கலைத்து கலைத்து பேட்டி எடுத்தார்களே. இவரே கேட்டு கொடுத்திருப்பாரோ? சிலர் தனக்கெதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியதால் தோற்றுவிட்டாராம். அதெப்படி, இவர் நன்மை செய்திருந்தால் எப்படி அவதூறு பாரப்பமுடியும்? சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? முறையிடுபவர்கள் முழுசம்பளம் பெறலாமென எதிர்பார்ப்போடு சேர்ந்திருப்பார்கள், உண்மை தெரிந்த பின் விலகவும் முடியாது, முறைப்பாடு அளிக்கவும் முடியாது, தாம் செய்தது தமக்கு எதிராக திரும்பும் எனத்தெரியும், அதனால் காத்திருந்திருக்கிறார்கள். சேர்த்தது எல்லாவற்றையும் பிடுங்கிப்போட்டு உள்ளே போடவேண்டும். எல்லாத்துறைகளிலும் இவரால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேலை செய்யவும் தெரியாது, நீதி நிஞாயமும் தெரியாது, ஊழலும் லஞ்சமும் சண்டித்தனமுமே நிறைந்திருக்கிறது. இவரால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் யாவரையும் விசாரணை செய்து தகுதியற்றவர்கள் நீக்கப்படவேண்டும். விசேஷமாக பிரதேச செயலகங்களில் அதிகமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு பிரச்சனைகளை கையாளும் அறிவுமில்லை திறனுமில்லை மக்களை அலைக்கழிக்கிறார்கள்.  
    • சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார்  இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.
    • அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம் அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றவகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம். அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம். எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்துள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.அந்தவகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். கடந்த முறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்றுபாரம்பரியம் கொண்ட தாய்கட்சி. எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார். https://thinakkural.lk/article/313624✂️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.