Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கன்னத்தில்
முத்தத்தின் ஈரம் அது
காயவில்லையே கண்களில்
ஏன் அந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தை பார்த்தால்
மணமாகவில்லையே காதலன்
மடியில் பூத்தாள் ஒரு பூ போலே

ஆண் : மன்னவனே உன்
விழியால் பெண் விழியை
மூடு ஆதரவாய் சாய்ந்து
விட்டால் ஆரிராரோ பாடு
ஆரிராரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

ஆண் : என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா ஆ

ஆண் : கூந்தலில் நுழைந்த
கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை
அதை தாங்காதோ உதட்டில்
துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து
போனதோ உள்ளங்கள் துடிக்கும்
ஓசை இசை ஆகாதோ

ஆண் : மங்கையிவள் வாய்
திறந்தால் மல்லிகை பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை
உச்சரித்தே பேசும் யார் இவர்கள்
இரு பூங்குயில்கள் இளம் காதல் மான்கள்......!

--- என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : { ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா } (2)

ஆண் : { ஆடையை திருத்துறா

அள்ளி அள்ளி சொருகுறா } (2)

ஆண் : { அரை கொறை
வார்த்தை சொல்லி
பாதிய முழுங்குறா } (2)

ஆண் : பின்னலை முன்னே
விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு
கையாலே இழுக்குறா

ஆண் : பூப் போல
காலெடுத்து பூமிய
அளக்குறா பொட்டுணு
துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா

ஆண் : { நெலையிலே
கைய வெச்சு நிக்கிறா நிமிருறா } (2)

ஆண் : நிறுத்தி மூச்சு விட்டு
{ நெஞ்சை தாலாட்டுறா } (2)

ஆண் : { காலாலே
நிலத்துல கோலம் போட்டு காட்டுறா

ஆண் : கம்பி போட்ட
ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா } (2)

ஆண் : கண்கள மூடி
மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா

ஆண் : கரந்த பாலை
நான் கொடுத்தா கைய
தொட்டு வாங்குறா
ஆண் : கை விரல்
பட்டதிலே பால் சொம்பு குலுங்குது

ஆண் : கைய இழுத்து
கிட்டு பாலோடு ஒதுங்குது

ஆண் : { உன்ன போலே
எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது } (2)

ஆண் : உன் முகம்
பார்த்ததும் தான்
உண்மை எல்லாம் விளங்குது......!

--- ஒரு பக்கம் பாா்க்குறா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா.........!

---தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்

ஆண் : நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

ஆண் : பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

பெண் : { காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண் : நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே

பெண் : நீ இன்றி ஏது
பூ வைத்த மானே

ஆண் : இதயம் முழுதும் எனது வசம்.....!

--- வா வா அன்பே அன்பே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் தெரித்து மலர்வளை தொடுத்து
ஏழை என் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
 
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
இதயத்தில் தோன்றும் காதல் நிலவே
உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்
காதலின் விதியே இதுவானால்
கல்லறை தானே முடிவாகும்
 
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம்
காதல் நினைவும் மாறுமா
கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்
கல்லறை முடிவை தாங்குமா
காதலை வென்ற காதலன் உயிரை
பிரிந்தால் இனியும் வாழுமா.........!
 
---கண்மணி நில்லு காரணம் சொல்லு---
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

ஆண் : முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்

பெண் : காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

ஆண் : வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

பெண் : நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்

ஆண் : பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது

பெண் : தேவியே மேவிய
ஜீவனே நீதான்
நீ தரும் காதலில்
வாழ்பவள் நான்தான்

ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே….

பெண் : மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்

ஆண் : மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

பெண் : வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

ஆண் : நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

பெண் : காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்

ஆண் : வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை

பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ......!

--- அதிகாலை நேரம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்..........!

பெண் : முத்துக்கு யாரும் முழுகத்தான் வேணும்
முழுகாம நானே முத்தேடுத்தேனே
மலையோடி பாயும் மணிமுத்து ஆறு
மடியேறி ஆடும் மகனாச்சு பாரு
நான் பாடும் பாட்டு தூங்காதே கேட்டு
அஞ்சாத சிங்கம் போல் ஐயா நீ முன்னேறு

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு

பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை
இந்த பிஞ்சுக்கு
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு.....!

--- ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கோகிலமே நீ
குரல் கொடுத்தால் உன்னை
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச்
சாய்த்துக்கொண்டு உந்தன்
கூந்தலில் மீன் பிடிப்பேன்

ஆண் : வெண்ணிலவே
உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

ஆண் : என் காதலின்
தேவையை காதுக்குள்
ஓதிவைப்பேன் உன்
காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.......!

--- என்னவளே அடி என்னவளே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

அனைவரும் : தவிக்கவிட்டு போனாலும்
தனியா விட்டு போனாலும்
கழட்டி விட்டு போனாலும்
கை கழுவி விட்டு போனாலும்

அனைவரும் : ப்ரெண்டு கூட போனாலும்
நீ பெஸ்டி கூட போனாலும்
ஃபாரினுக்கு போனாலும்
நீ விண்வெளிக்கே போனாலும்

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் போட்டோடும்
நல்லா இரும்மா

ஆண் : காத்திருந்த காதலுக்கு
ரெட் கார்டு போட்டுட்ட
நேத்து வந்த மாமனுக்கு
க்ரீன் சிக்னல் காட்டிட்ட

ஆண் : மிங்கிள் ஆக நெனச்சவன
சிங்கிள் ஆத்தான் ஆக்கிட்ட
தாலி கட்ட வந்த என்ன
பப்ஜி கேம் சுட்டுட்ட

அனைவரும் : தேவதாசு
பார்வதிய ஹார்ட்-ல வை…
தூக்கிப்போட்டு போனவள
தாட்டு-ல வை
எக்ஸ்-லவ்வர்க்கு மேரேஜ்-ன்னு
வேணா பீலிங்கு
எக்ஸ்ட்ரா லார்ஜ் உள்ள போனா
அவன் சூப்பர் கூலிங்கு......!

--- நல்லா இரும்மா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
 
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
 
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
 
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா......!
 
---என் காதலே என் காதலே---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : செந்தாழம் பூவை கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா… சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமோ….

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்….

பெண் : தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு,
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூமஞ்சமும் ….தேன்கின்னமும்
நீ தேடி வா ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…..!


--- தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே நான்
இசைத்தேனம்மா எனக்காக
நான் பாடும் முதல் பாடல் தான்

ஆண் : கானல் நீரால்
தீராத தாகம் கங்கை
நீரால் தீர்ந்ததடி நான்
போட்ட பூமாலை மணம்
சேர்க்கவில்லை நீதானே
எனக்காக மடல் பூத்த முல்லை

ஆண் : நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா நான் வாடும்
நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா

ஆண் : ஏதோ ஏதோ
ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது கால்போன
பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது......!

--- கேளடி கண்மணி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

 

தேவன் கோவில் கனியும் மனமும்

தேவி என்னிடம் தந்தாயோ

 ஆவி கலந்து கோவில் எடுக்க

அழகுச் சிலையென வந்தாயோ

என்னை அழைக்கும் உந்தன் சன்னதி

தன்னைக் கொடுத்தால் நிம்மதி

கேள்வி இங்கே மௌனம் அங்கே

கிள்ளை மொழிகள் போனதெங்கே .

 

அன்பே அமுதா, அன்பே - நீ பால் அமுதா, சுவை தேன் அமுதா - இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா - உந்தன் சொல்லமுதா, இதழ் சுவை அமுதா, - கொஞ்சம் நில் அமுதா, அதை சொல் அமுதா.....!

 

கண்கள் என்னும் கனிந்த திராட்சை

கன்னி என்றுனைச் சொல்லாதோ

 கன்னம் இரண்டில் மின்னும் அழகு

காதல் மயக்கம் கொள்ளாதோ

வெள்ளி நிலவை பாதி பிளந்து

அள்ளி அணிந்த குங்குமம்

 போனதெங்கே எங்குமில்லை

என்றும் இருக்கும் என்னிடம் ........!

 

---  அன்பே அமுதா, அன்பே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : விரலோ நெத்திலி
மீனு கண்ணோ காரகுடி
முகமோ கெலுத்தி மீனு
மனமோ ஜனாா்துனி

ஆண் : { இது விலாங்குடா
கையில் சிக்காதுடா அவ
ரெக்கை வச்ச வவ்வாலுடா } (2)

ஆண் : ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ பொன்மேனி
ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல
கேளு அலைய சொல்லும் தண்ணிய
கேளு புது கதைய சொல்லும்

ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி
சங்கு கழுத்துக்காாி இரவில்
விளக்கு போடும் லைட் ஹவுஸ்
கண்ணு காாி

ஆண் : { அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு
போகாதுடா } (2)

ஆண் : ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ தொட்டுபுட்டா
அது அன்சான்சு மீன் கொழம்ப
போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன
சுமக்கும் கண்ணு

ஆண் : { சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா } ( 2).......!

--- சலோமியா ஆ ஆ ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் .......!

என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

கட்டழகைக் கண்டவுடன்
கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு
ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
 
திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகம்
வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை
உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா.......!
 
--- அவள் வருவாளா---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : இதழில் கதை எழுதும்
நேரமிது இதழில் கதை எழுதும்
நேரமிது இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….

பெண் : மனதில் சுகம்
மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ….. 
 

ஆண் : இளமை அழகை
அள்ளி அணைப்பதற்கே இரு கரம்
துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும்
பிறக்குது

ஆண் : காதல் கிளிகள்
ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என்
நெஞ்சில் உதிக்கும்

பெண் : நானும் நீயும்
சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என்
நெஞ்சம் இனிக்கும்

ஆண் : இனிய பருவமுள்ள
இளங்குயிலே  ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத

பெண் : நானும் எழுதிட
இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து
இடையினில் தடுக்குது

ஆண் : ஏங்கித் தவிக்கையில்
நாணங்கள் எதற்கடி ஏக்கம்
தனிந்திட ஒரு முறை தழுவடி

பெண் : காலம் வரும் வரை
பொறுத்திருந்தால் கன்னி
இவள் மலர்க்கரம் தழுவிடுமே

ஆண் : காலம் என்றைக்கு
கனிந்திடுமோ காளை மனம்
அதுவரை பொறுத்திடுமோ

பெண் : மாலை மலா்
மாலை இடும் வேளை
தனில் தேகம் இது
விருந்துகள் படைத்திடும்......!

--- இதழில் கதை எழுதும் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : மிஸ்ஸிசிபி
மிஸ்ஸிசிபி நதி இது
வெனிஸ் கட்டில்
வெனிஸ் கட்டில் நடக்குது
பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது
படுக்கையில் போராடுது

பெண் : நான்தான் உனை மெச்சும்படி…..
நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி
சிக்கத்தின் மச்சப்படி

பெண் : ஏய்
ஆண் : நீ ஒத்துப்போடி
நான் உன்ன ஒதுக்கப்போறன்
பெண் : ஓ….
ஆண் : நீ பத்துக்கோடி
நான் உன்ன சுருட்டுப்போறன்

ஆண் : குன்னக்குடி சமங்குடி லால்குடி
காரைக்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி அல்ல அல்ல
இந்தக்குடி அடிக்கடி ஊத்திக்குடி......!

--- மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த மானிட காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூடவரும்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

---ஓர் ஆயிரம் பார்வையிலே---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.

ஆண் : சந்தன மாலை அள்ளுது ஆள
வாசம் ஏருது.
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது.
சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த
மாமன் வரட்டுமா….

ஆண் : வழியில பூத்த
சாமந்தி நீயே.
விழியில சேர்த்த
பூங்கொத்து நீயே

ஆண் : அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே .
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே

ஆண் : நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன பாரேன் மா......!

--- ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

ஆண் : முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்

பெண் : காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

ஆண் : வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

பெண் : நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்

ஆண் : பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது

பெண் : தேவியே மேவிய ஜீவனே நீதான்
நீ தரும் காதலில் வாழ்பவள் நான்தான்

ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே….

பெண் : மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்

ஆண் : மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

பெண் : வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

ஆண் : நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

பெண் : காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்

ஆண் : வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை

பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ.....!

--- அதிகாலை நேரம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

ஆண் : எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

ஆண் : அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா .....ஆ

ஆண் : தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா...... ஆ

ஆண் : உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

ஆண் : முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

ஆண் : பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா

ஆண் : பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா

ஆண் : தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்.......!

---நினைத்து நினைத்து பார்த்தேன்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : { ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே } (2)

பெண் : குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு கோலம்
போடும் பாட்டாலே மயிலு இள
மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

பெண் : ஒன்ன எண்ணி
நானே உள்ளம் வாடிப்
போனேன் கன்னிப்
பொண்ணுதானே என்
மாமனே என் மாமனே

பெண் : ஒத்தையிலே
அத்த மக ஒன்ன நெனச்சி
ரசிச்ச மக கண்ணு ரெண்டும்
மூடலையே காலம் நேரம்
கூடலையே

பெண் : மாமன் ஒதடு
பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும்
கேட்ட வரம் கூடும் காலம்
வாராதா மாமன் காதில் ஏறாதா

பெண் : நிலா காயும்
நேரம் நெஞ்சுக்குள்ள
பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்

பெண் : ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு
வச்சேன் இஷ்டப்பட்ட
ஆச மச்சான் என்ன
மேலும் ஏங்க வச்சான்......!

--- ஊரு சனம் தூங்கிருச்சு---

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் முழுவதும் கேட்க 

அப்பா மட்டுமல்ல அம்மாவும்   இல்லாவிடடால்  வாழ்வே நரகம் தான்.   V.M. மகாலிங்கம் சிறந்த ஒரு பாடகன் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, நிலாமதி said:

அப்பா மட்டுமல்ல அம்மாவும்   இல்லாவிடடால்  வாழ்வே நரகம் தான்.   V.M. மகாலிங்கம் சிறந்த ஒரு பாடகன் 

அக்கா இவருடைய குரலுக்கேற்ற ஒரு சிறந்த பாடல்.

பாட்டு கேட்கும் போது கொஞ்சம் சத்தத்தைக் கூட்டிக் கேட்க நன்றாக இருக்கும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.