Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !


ஆண் :
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான்
இன்பத்தைக் கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது
நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ

ஆண் : உன் பெயர் உச்சரிக்கும்
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது
வேணிற்க் காலம்தான்

ஆண் : என் மனம் உன் வசமே
கண்ணில் என்றும் உன் சொப்பனமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன்
வண்ணக் கோலம்தான்

ஆண் : ஆலம் விழுதுகள் போலே
ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும்
பாடும் உனதருள் தேடி
இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும்
எந்தன் உயிர் உனைச் சேரும்

ஆண் : சென்றது கண்ணுறக்கம்
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது
உந்தன் ஞாபகம்

ஆண் : உன்னிடம் சொல்வதற்கு
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல
ஏது வாசகம்

ஆண் : பாதச் சுவடுகள் போகும்
பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும்
கூட மறுப்பதோ நீயும்
உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும் ........ !

--- ஊரெல்லாம் உன் பாட்டுதான் ---

  • Replies 5.9k
  • Views 327.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன் எந்த
இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

ஆண் : உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்

ஆண் : காதலென்றால்
பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு
கொண்டேன் எந்தன் கழுத்து
வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

ஆண் : வாய்மொழியும்
எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும்
உருலுதடி

ஆண் : காத்திருந்தால்
எதிா் பாா்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப்
பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி

ஆண் : இது சொா்க்கமா
நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு
போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி

ஆண் : கோகிலமே நீ
குரல் கொடுத்தால் உன்னை
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச்
சாய்த்துக்கொண்டு உந்தன்
கூந்தலில் மீன் பிடிப்பேன்

ஆண் : வெண்ணிலவே
உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

ஆண் : என் காதலின்
தேவையை காதுக்குள்
ஓதிவைப்பேன் உன்
காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ........ !

--- என்னவளே அடி என்னவளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......... !

பெண் : { பூவ பூவ
பூவ பூவ பூவே } (3)
பூவ பூவ பூவே

பெண் : பூவே எந்தன்
கூந்தலில் உன்னை
நான் சூடிட என்ன
விலை நீ என்னிடம்
கேட்பாயோ

பெண் : ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு
அழகில் பூத்து நீ
குலுங்கினாய் வண்ண
வண்ண இதழ்களை
எல்லாம் எங்கே நீ
வாங்கினாய்

பெண் : வண்ணங்களோடு
மலருகிறாய் வாசனையோடு
வாழுகிறாய் பறித்திடும்
பொழுதிலும் சிரிக்கின்றாய்

பெண் : பூவே சிறு பூவே
உன்னை போல் வாழ்ந்திடும்
வாழ்க்கையே வேண்டுமே

பெண் : நீ ஓர் நாள்
வாழ்வில் உலகை
ஆளும் ராணி நீ தானே
என்றும் எனக்கு நல்ல
தோழி பூவே எந்தன்
கூந்தலில் உன்னை நான்
சூடிட தன தீம் தன தீம்
தன தீம் தன நா

பெண் : வசந்தம் வந்த
செய்தியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா
இரண்டிலுமா

பெண் : தேனை நீ தந்து
எதை நீ பெறுவாய்
பூவே பூவே

பெண் : உன் தேகம்
தீண்டி பறந்து சென்ற
வண்டு பிற பூவை
பார்த்தால் கோபம்
உனக்கு வருமா

பெண் : பூவே எந்தன்
கூந்தலில் உன்னை
நான் சூடிட என்ன
விலை நீ என்னிடம்
கேட்பாயோ ......... !

--- பூவ பூவ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா

ஆண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை

ஆண் : சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்…
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்புச் சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார்

ஆண் : கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்… ஏ…
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே ........ !

--- அத்தை மகள் ரத்தினத்தை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

பெண் : நாரே நாரே நாரே
நாரே நன்னாரே நாரே நாரே
நாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ

பெண் : பன்னீரை மூட்டை
கட்டி பெண் மேலே கொட்ட
சொல்லி விண் இன்று
ஆணை இட்டதோ

பெண் : { மேகத்தின் தாரைகளில்
பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
சில்லுகளை அடிமடியில்
சேமிப்பேன் } (2)

பெண் : ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் மனசெல்லாம் ஜில்

பெண் : கிலி கிலி கிலி
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ

பெண் : வயல்விழி ஆடும்
வண்ண தும்பிகளே உங்கள்
வாள்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை
நண்டுகளே மணல்
வலைகளில் நான்
இருந்தேன் ஓ

பெண் : மழையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று
நதியாய் இறங்குகின்றேன்

பெண் : ஒரு காதல் குரல்
பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை
மயக்கியதே காட்டு புறா இந்த
மண்ணை விட்டு விண்ணை
முட்டும்

பெண் : விடை கொடு சாமி
விட்டு போகின்றேன் உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல்
தாண்டுகிறேன் உந்தன்
திண்ணைக்கு நன்றி
சொன்னேன் போ

பெண் : கதவுகள் திறக்கும்
வழி எந்தன் கனவுகள்
பறக்கட்டுமே போகின்ற
வழி முழுக்க அன்பு
பூக்களே மலரட்டுமே

பெண் : இந்த செல்ல கிளி
மழை மேக துளி இந்த
செல்ல கிளி மழை மேகம்
விட்டு துள்ள துள்ளி .......... !

--- நன்னாரே நன்னாரே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன

ஆண் : ஒரு மாலையிடவும்
சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ

பெண் : மேள தாளம் முழங்கும்
முதல் நாள் இரவு
மேனி மீது எழுதும்
மடல் தான் உறவு
தலையில் இருந்து பாதம்
வரையில் தழுவி கொள்ளலாம்….

ஆண் : அதுவரையில் நான்…..
அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைக் கடலில்தான்
அலையும் படகோ

பெண் : ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ

ஆண் : காற்று வந்து தொடத்தான்
கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான்
நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே

பெண் : பிறர் அறியாமல்…….
பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது

பெண் : வீணை மீது விரல்கள்
விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள்
விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்

ஆண் : சுதி விலகாமல்
இணையும் நேரம்
சுவைக் குறையாமல்
இருக்கும் கீதம் ........ !

--- குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......... !


ஆண் :
{ ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ } (2)

ஆண் : பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு

பெண் : ஒரு ஆணு
ஒன்னு நான் பாா்த்தேன்
கண்ண தொறந்து பாக்க
சொல்லி கேட்டேன் அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே

ஆண் : தாய் தந்தை முகமே
மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே

பெண் : குளிக்கும் அறையில்
ஒரு கூத்து நினைக்கும் போது
வெட்கம் வருதே ஆடையில்லாமல்
வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே

ஆண் : ஒரு கொசு
கடித்தாலும் உயிா்
துடிக்கும் அது இதுவரை
எனக்குள்ள வழக்கம்

பெண் : இன்று தேள்
கடித்தாலும் தொிவதில்லை
அட என்னாச்சு என்னாச்சு
எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு

ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்
கனவுகள் வருது கண்ண மூடி
கிடந்தும் காட்சிகள் வருது இது
உனக்கும் இருக்குமே உண்மை
சொல்லிவிடு

குழு : இது ஏன் என்று
தொியவில்லை இது
நீதானா புாியவில்லை
ஒரு வாய் பேச முடியவில்லை
இது இனிப்பில் நனைந்த கவலை

பெண் : ஜாமத்து சந்திரன்
வந்து ஜன்னல் ஓரம் சண்டை
பிடிக்கும் தென்றலை நான்
துணைக்கழைத்தால் தீயை
வாாி இரைக்கும்

ஆண் : நவம்பா் மாதத்து
மழையில் நாக்கு வறண்டு
கொஞ்சம் துடிக்கும் எச்சிலை
விழுங்கும் பொழுது வறண்டு
தொண்டை வலிக்கும்

பெண் : அட பெண்களை
பாா்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட
பகை ஆகும்

ஆண் : அட ஆண்களை
பாா்த்தால் எாிச்சல் வரும்
என் இரவுக்கு வெளிச்சம்
சுமை ஆகும் பாப்பு பாப்பு
பாப்பு பாப்பு

பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை இதயத்தின்
ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு .......... !

--- ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் ---

அப்பா . ....... எவ்வளவு சுகமான வரிகள் . ..........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........... !

ஆண் : { பச்ச மலப்பூவு
நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ
நந்தவனத் தேரு } (2)

ஆண் : அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி கிளியே
கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

ஆண் : { காத்தோடு
மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு
சங்கதி பாட } (2)

ஆண் : மஞ்சளோ தேகம்
கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு
வரும் ராகம்

ஆண் : நிலவ வான்
நிலவ நான் புடிச்சு
வாரேன் குயிலே
பூங்குயிலே பாட்டெடுத்துத்
தாரேன் ஹோய்

ஆண் : { பூநாத்து முகம்
பார்த்து வெண்ணிலா
நாண தாளாமல் தடம்
பாா்த்து வந்த வழி போக } (2)

ஆண் : சித்திரத்துச்
சோல முத்துமணி
மாலை மொத்ததுல
தாரேன் துக்கமென்ன
மானே

ஆண் : வண்ணமா
வானவில்லில் நூலெடுத்து
வாரேன் விண்ணிலே நூல்
புடிச்சு சேல தச்சுத் தாரேன்
ஹோய் .......... !

--- பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


பெண் :
ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

ஆண் : { தில்லானா
தில்லானா நீ
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா } (2)
ஹோ மஞ்சக் காட்டு
மைனா என்ன கொஞ்சிக்
கொஞ்சிப் போனா திக்குத்
திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான்
கப்பம் கட்ட காமன்
சொன்னானா தில்லானா
தில்லானா

பெண் : பட்டிக்காட்டு
முத்து நீயோ படிக்காத
மேதை தொட்டுத் தொட்டுப்
பேசத் தானே துடித்தாளே ராதை

ஆண் : கள்ளம்
கபடமில்லை நானோ
அறியாத பேதை
மக்கள் மனம் தானே
எந்தன் வழுக்காத பாதை

பெண் : ஹேய்
கொடுத்தால நான்
வந்தேன் எடுத்தால
வேண்டாமா

ஆண் : அடுத்தாளு
பாராமல் தடுத்தாள
வேண்டாமா

பெண் : முடி கொண்ட
உன் மார்பில் முகம்
சாய்க்க வேண்டாமா

ஆண் : முடி போட்டு
நம் சொந்தம் முடிவாக
வேண்டாமா

பெண் : தடையேதும்
இல்லாமல் தனித்தாள
வேண்டாமா

பெண் : கட்டில் போட்டு
நீ கப்பம் கட்ட காமன்
சொன்னானா

ஆண் : சிவப்பான
ஆண்கள் இங்கே
சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக்
கண்டு கண் வைத்ததென்ன

பெண் : கடல் வண்ணம்
வானின் வண்ணம்
கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது
உனைக் கண்டேன் நானே

ஆண் : மண்ணோடு
சேராமல் நடக்கின்றேன்
உன்னாலே

பெண் : மருதாணி
பூசாமல் சிவக்கின்றேன்
உன்னாலே

ஆண் : சுட்டுவிழி
கண்டாலே சொக்குதடி
தன்னாலே

பெண் : சிக்குப்பட்ட
எள் போலே நொக்கு
பட்டேன் உன்னாலே

ஆண் : கட்டுத்தறி
காளை நானும்
கட்டுப்பட்டேன்
உன்னாலே ....... !

--- தில்லானா தில்லானா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............ !

பெண் : { உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே } (2)
உலகமே சுழளுதே உன்ன
பாா்த்ததாலே

ஆண் : தங்கம் உருகுதா
அங்கம் கறையுதா வெட்கம்
உடையுதா முத்தம் தொடருதா

பெண் : சொக்கி தானே
போகிறேனே மாமா
கொஞ்சம் நாளா

ஆண் : ஹே அம்புலியில்
நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி
விடியுது இரவு ஹோய்

பெண் : ஏழு கடல் தாண்டி
தான் ஏழு மலை தாண்டி
தான் என் கருத்தமச்சான்
கிட்ட ஓடி வரும் மனசு

ஆண் : நாம சோ்ந்து
வாழும் காட்சி ஓட்டி
பாக்குறேன்

பெண் : ஆஆ காட்சியாவும்
நெசமா மாற கூட்டி
போகிறேன்

ஆண் : ஓ சாமி பாா்த்து
கும்பிடும் போதும் நீதானே
நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ
ஏ யே

ஆண் : ஊரைவிட்டு எங்கயோ
வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்னாலதான் வாழுறேன்

பெண் : கூரப்பட்டு சேலைதான்
வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
காதலால சுத்துறேன்

ஆண் : கடவுள்கிட்ட
கருவறை கேட்டு
உன்ன சுமக்கவா

பெண் : உதிரம் முழுக்க
உனக்கே தான்னு எழுதி
குடுக்கவா

ஆண் : ஓ மையிட்ட
கண்ணே உன்னை
மறந்தால் இறந்தே
போவேன் ஓஓ ......... !


--- உருகுதே மருகுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே

ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு

பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு
திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா

ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு

பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே

பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்க விடு

ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
சிறு முத்தம் தந்து மயங்கவிடு

பெண் : மலர்களிலே அணை அமைப்போம்

ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம்
இரவேது பகலேது கண்ணே

பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

ஆண் : என் கண்ணே என் ராணி

பெண் : நீயின்றி நானில்லையே ........ !

--- தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........... !

ஆண் : முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
முத்து சிப்பிக்குள்ளே
ஒரு பூ வண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு

ஆண் : தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ

ஆண் : முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக

பெண் : தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி ........ !

--- முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !


ஆண் :
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக் கோலமே

பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ
இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ

ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ

பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ
ஆண் : ராஜாவின் வட்டாரமோ
இந்த ராஜாத்தி வித்தாரமோ

ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள்
இளமைப் பூப்பந்தலோ
இலையும் மூடாமல் தலையும் வாராமல்
அசையும் பொன் பூக்களோ

பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள்
இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று
உனக்கே தந்தார்களோ

ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
பெண் : கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ

ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா

பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா

ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன
பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன
ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன
பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன ........ !

--- கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

ஆண் : வல்லோர்கள் சுரண்டும்
பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி
வல்லோர்கள் சுரண்டும்
பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி

ஆண் : அன்று இல்லாமை நீங்கி
எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆண் : ஆற்றலும் அறிவும்
நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்
ஆற்றலும் அறிவும்
நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்

ஆண் : இதில் நாட்டினைக்கெடுத்து
நன்மைகள் அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல் ........ !

--- நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ....... !


பெண் :
கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்

பெண் : பூமி இங்கு சுற்றும்
மட்டும் ஆட வந்தேன் என்ன
நட்டம் ஓடும் மேகம் நின்று
பார்த்து கைகள் தட்டும்

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : நேற்று என் பாட்டு
ஸ்ருதியில் விலகியதே
பாதை சொல்லாமல்
விதியும் விலகியதே

பெண் : காலம் நேரம்
சேரவில்லை காதல்
ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை

பெண் : வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை கண்
திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின்
சோதனை புரியுமா இவள்
மனம் இது விடுகதை

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
நடனம் பாருங்கள் ஓ

ஆண் : ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
குழு : { ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம் } (2)

ஆண் : ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

பெண் : ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட ஜகம்
நடுங்க என் பாதங்கள்
ஆட

பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தக்க
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தம்

பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தக்க
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தம்

பெண் : ஜகன தீம்த
ஜகன தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட
ஜகம் நடுங்க என்
பதங்கள் ஆட

பெண் : பாறை மீது
பவள மல்லிகை பத்தியம்
போட்டதாரு ஓடும் நீரில்
காதல் கடிதம் எழுதிவிட்டது
யாரு அடுப்பு கூட்டி அவிச்ச
நெல்லை விதைத்து விட்டது
யாரு அலையில் இருந்து
உலையில் விழுந்து துடி
துடிக்கிது மீனு

பெண் : இவள் கனவுகள்
நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட
விடியட்டும் இந்த இரவு

பெண் : கிழக்கு வெளிச்சம்
இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு
பலிக்கட்டும் இருண்டு
கிடக்கும் மனமும்
வெளுக்கட்டும்

பெண் : ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட ஜகம் நடுங்க
என் பாதங்கள் ஆட ஓம்
ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என்
பாதங்கள் ஆட ........!

--- கவிதை கேளுங்கள் ---

எச்சரிக்கை : அனுபவமில்லாதவர்கள் இப் பாடலில் உள்ள சுரங்களைப் பாட முயற்சிக்க வேண்டாம் ...... ஜுரம் வந்திடும் . .......!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : { கொஞ்சநாள் பொறு
தலைவா ஒரு வஞ்சிக்கொடி
இங்க வருவா கண்ணிரண்டில்
போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ
தோற்கடிப்பா } (2)

ஆண் : காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த
ஊரோ நானறியேன்

குழு : ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி
வர நாங்க ரெடி

ஆண் : ஓ நேத்துக்கூட
தூக்கத்தில பாா்த்தேன்
அந்த பூங்குயில தூத்துக்குடி
முத்தெடுத்து கோா்த்துவெச்ச
மாலை போல வோ்த்துக்கொட்டி
கண்முழிச்சுப் பாா்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே
வந்து நிற்பா சொல்லப்போனா பேரழகில்
சொக்கத்தங்கம் போலிருப்பா வத்திகுச்சி
இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

ஆண் : தேனாறு பாலாறு போல
வந்தா கண்ணுக்குள்ள தேசிய
கொடி போல குத்தி வச்சேன்
நெஞ்சுக்குள்ள

பெண் : பச்சை தாவணி
பறக்க அங்கு தன்னையே
அவன் மறக்க வச்ச கண்ணு
வாங்கலையே என் மாமன்
கண்ணு தூங்கலையே

ஆண் : என்னோடுதான்
கண்ணாமூச்சி என்றும்
ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல்
ஆட்சி கைகூடும் தென்றல்
சாட்சி சிந்தனையில் வந்துவந்து
போறா அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச
தேரா என்னுடைய காதலிய ரொம்ப
ரொம்ப பத்திரமா எண்ணம் எங்கும்
ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

ஆண் : ஆத்தாடி அம்மாடி என்ன
சொல்ல கட்டழகா ஆவாரம் பூவாக
வாய் வெடிச்ச மொட்டழகா ........ !

--- கொஞ்சநாள் பொறு தலைவா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


பெண் :
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காதோரம்
லோலாக்கு ……

பெண் : { நான் விரும்பும்
மாப்பிள்ளைக்கு நாள்
கணக்கா காத்திருந்தேன் } (2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு
ஜோடி

ஆண் : உன்னாட்டம் தான்
தங்கத்தேரு கண்டதில்லை
எங்க ஊரு காதல் போதை
தந்த கள்ளி கந்தன் தேடி
வந்த வள்ளி

பெண் : நீ தொடத்தானே
நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம்
நான் வளர்ந்தேன்

ஆண் : { வானவில்ல விலை
கொடுத்து வாங்கிடத்தான்
காசிருக்கு } (2)
என் கூட உன் போல் ஓவியப்
பாவை இல்லாமல் போனால்
நான் ஒரு ஏழை

பெண் : எந்நாளும் நான்
உந்தன் சொத்து இஷ்டம்
போல அள்ளி கட்டு மேலும்
கீழும் என்னை தொட்டு
மேளம் போலே என்னைத்
தட்டு

ஆண் : நான் அதற்காக
காத்திருந்தேனே நீ
வரும் பாதை பார்த்திருந்தேன் ........ !

--- காதோரம் லோலாக்கு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........... !

ஆண் : காசு மேல காசு
வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது

ஆண் : அட தட்டுனா
விட்டத்த கொட்டினா
நோட்டத்தான் ஆனந்தம்
காவேரி தான் அட சுக்ரன்
உச்சத்தில் லக் தான்
மச்சத்தில் வந்தது கை
காசு தான்

ஆண் : என்றும் மன்னர்
தான் எங்கும் வின்னர்
தான் ஹோய் யா

ஆண் : அண்ணாச்சி
ஆனந்தம் ஆயாச்சே
ஹே ஹேய் ஆரம்பம்
பம் பம் பம் ….

ஆண் : அக்கம்பா
ஹா ஹா போடே
போடே

ஆண் : யூ மேன் ஒத்தே
சாணி மேல கால் வச்சா
டிர்டி ஆகும் ஷூ ஒத்தே
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து
ஒத்து

ஆண் : தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்

ஆண் : ……………………..

ஆண் : தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்
தேசத்துல நாளும்
சாந்திய தான் காணும்

ஆண் : ரூபா நோட்ல
வாழுறாரு காந்தி வாய்
நிறைய ஜோரா
புன்னகைய ஏந்தி

ஆண் : காச பாத்தா
காந்தி தாத்தா போலே
நாம் சிரிப்போம்

ஆண் : வந்தாச்சே கை
காசு ஹேய் ஹேய்
ஹேய் பத்தாது

ஆண் : அமுக்கி
போடு சூட்கேஸு

ஆண் : தட்டினா
என்ன முடிஞ்சு
போச்சா

ஆண் : ராமலிங்கம் ஏய்
சுந்தரலிங்கம் ஏய்
ராமலிங்கம் கைல காசே
சுந்தரலிங்கம் வாய்ல
தோசை ராமலிங்கம்
சுந்தரலிங்கம் அவுத்து
உடே

ஆண் : ஆஹா வீணை
என்ன போடு போடுது
பார் என்னது வீணையா
ஐ நோ மேன் நம்ம
மண்டலின் ஸ்ரீனிவாசன்
வாசிப்பாரே அட அதான்
ஹிந்தில சித்தரு செம
ராகம் பா

ஆண் : நானும் நீயும்
தான் ஆடுகிற போது
அசந்து நிக்கும் ஊரு
பிகில் அடிக்கும் பாரு
டாப் டக்கர் ஜோடியின்னு
பேசும் ஆக மொத்தம்
தேசம் வாழ்த்துகள வீசும்

ஆண் : ராமலிங்கம்
சுந்தரலிங்கம் ரெண்டும்
ஆண் சிங்கம்

ஆண் : எந்நாளும் ஆ
ஊரெங்கும் நம்மோட
உட்டாலகடி ராஜாங்கம் ........ !

--- காசு மேல காசு வந்து ---

  • கருத்துக்கள உறவுகள்

501135234_4269072826653880_4770242483661

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : பன்னீரைத் தூவும்
மழை ஜில்லென்ற காற்றின்
அலை சேர்ந்தாடும் இந்நேரமே
குழு : லா லால லா
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
குழு : லா லால லா

ஆண் : வெண்ணிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதன்
உள்ளாடும் தாகம் புரியாதோ
என் எண்ணமே அன்பே

ஆண் : பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே பூவான
கோலங்களே
குழு : லா லால லா
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
குழு : லா லால லா

ஆண் : கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும்
காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே .......... !

--- என் இனிய பொன் நிலாவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


ஆண் :
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

ஆண் : ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ
ஏதோ… நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்
உயிரே……உயிரே……

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

ஆண் : கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு
உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை
தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான்
நான் தான்……
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத
மனிதன் மனிதன்

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே ....... !

--- ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ---

Edited by suvy
மாறிப் பதியப்பட்டு விட்டது ......!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........... !


ஆண் :
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா

பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண் : பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா

பெண் : தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

ஆண் : வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா

பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே ........ !

--- வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........ !

பெண் : உன்னோடு
வாழாத வாழ்வென்ன
வாழ்வு என் உள்நெஞ்சு
சொல்கின்றது பூவோடு
பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண் : மண்ணில் ஏன்
ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட
நீ பிறந்ததேன் நான் பிறக்கும்
போது நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தானோ

பெண் : மெல்லிய
ஆண்மகனை பெண்ணுக்கு
பிடிக்காது முரடா உனை
ரசித்தேன் தொட்டதும்
விழுந்துவிடும் ஆடவன்
பிடிக்காது கர்வம் அதை
மதித்தேன்

பெண் : முடி குத்தும்
உந்தன் மார்பு என் பஞ்சு
மெத்தையோ என் உயிர்
திறக்கும் முத்தம் அது
என்ன வித்தையோ
உன்னைப் போலே
ஆண் இல்லையே நீயும்
போனால் நான் இல்லையே
நீர் அடிப்பதாலே மீன்
நழுவ வில்லையே ஆம்
நமக்குள் ஊடலில்லை

பெண் : நீ ஒரு தீ
என்றால் நான் குளிர்
காய்வேன் அன்பே
தீயாய் இரு நீ ஒரு முள்
என்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாய் இரு

பெண் : நீ வீரமான
கள்ளன் உள்ளூரும்
சொல்லுது நீ ஈரமான
பாறை என் உள்ளம்
சொல்லுது உன்னை
மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

பெண் : நீ வசிக்கும்
குடிசை என் மாட
மாளிகை காதலோடு
பேதம் இல்லை ..... !

--- உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது ---

Edited by suvy
சிறு திருத்தம் .....!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பு ஏறலாம்
கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா……..ஹஹஹா…..

ஆண் : உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
பெண் : போட்ட லவுக்க துடிக்குது அய்யா
ஹா….இதுக்கு வைத்தியம் உண்டா

ஆண் : கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு
காரியம் மீறினா மெத்தை இருக்கு
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு
ஆண் : எங்கெங்கு சுகம் என்று
இலக்கணம் இருக்கு

பெண் : நெத்தியில் புரளும் கத்தமுடி
உனக்கு முத்தங்கள் தர ஒரு ஆசை
ஆண் : கண்மணி உனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக் கொள்ள ஆசை

பெண் : என்னமோ மாறுது புத்தி உனக்கு
என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு
ஆண் : டுர்ர்ர்ர்……ஆஹ்….ஹேய் ஹேய் ஹேய்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு
பெண் : அப்பா…..என்றாலும்
அதுக்கொரு இடம் பொருள் இருக்கு ....... !

--- சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.