Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக நுழைவுக்கு யாழ்.மாணவர்களே அதிகளவு தகுதி

Featured Replies

பல்கலைக்கழக நுழைவுக்கு யாழ்.மாணவர்களே அதிகளவு தகுதி
 
 
பல்கலைக்கழக நுழைவுக்கு யாழ்.மாணவர்களே அதிகளவு தகுதி
2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக இலங்கையின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 7,346 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர். இவர்களில் 4,872 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர். இது 66.33 வீதமாகும்.
 
குறைந்தபட்சமாக, பொலநறுவை மாவட்டத்தில் இருந்து 56.76 வீதமான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இங்கிருந்து 3,455 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றிய போதும், 1961 மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகைமை பெற்றுள்ளனர்.
 
இந்தப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும், சித்திபெறத் தவறிய மாணவர்களின் எண்ணிக்கையில் கொழும்பு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 2,071 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்திபெறவில்லை.
 
அடுத்து கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த, 1771 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி பெறத் தவறியுள்ளனர்.
 
கணிதத்துறையில் முதலிடத்தை வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.  விஞ்ஞானத்துறையில் மேல்மாகாணமும், சப்ரகமுவ மாகாணம் வர்த்தகத்துறையிலும், ஊவா மாகாணம் கலைத்துறையிலும் முன்னணி பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாகவும் இலங்கையின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தல் அறிமுகப்படுத்தபடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறி விட்டுது தரப்படுத்தல் சொரிலங்கவுக்குள் மாத்திரமே நெட்மூலம் உலக பல்கலைக்கழகம்கள் தமது வாசல்களை எமது தமிழ் மாணவர்களுக்கு  திறந்தே வைத்துள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.