Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது!: புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Featured Replies

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது!: புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!
 
 
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது!: புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் என்பது ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது. ஆகவே வடக்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று ஹைத்ரமணி ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
போர்க் காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகள் உள்ளிட்ட இளைஞர், யுவதிகள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகாண்பேன். இந்தப் பிரச்சினைகள் எனது மனதில் பதிந்துள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
மணல், சீமெந்து, கற்களினால் மாத்திரம் மனிதனால் நிம்மதியான வாழ்க்கையை தேடிவிட முடியாது. நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
 
போர் இடம்­பெற்ற காலத்தில் வடக்கில் பல்­வேறு குற்­றச்­செ­யல்கள் பரந்து காணப்­பட்­டன. யுத்தம் என்­பது எமக்கு மிகவும் மோச­மான அனு­ப­வ­மாகும். யுத்தம் என்­பது எவ­ருக்கும் பிர­யோ­சனம் தரக்­கூ­டி­யது அல்ல.
 
கடந்த முறை பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்­ஸிசை சந்­தித்த போது யுத்தம் தொடர்பில் என்­னிடம் சில கேள்­வி­களை தொடுத்தார். யுத்தம் தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன என்று கேட்டார். யுத்தம் என்­பது பாரிய அழி­வாகும். அது மனித சமூ­கத்­திற்கு தேவை­யற்ற ஒன்­றாகும் என்று நான் கூறினேன்.
 
அப்­போது அடுத்த வினா­டியில் என்­னிடம்  இன்­னு­மொரு கேள்­வி­யையும் தொடுத்தார். அதா­வது உலகில் நிலவும்
மோச­மான யுத்தம் எவ்­வாறு முடி­வுறும் என்று தொடுத்த கேள்­விக்கு நான் அழித்த பதி­லை கேட்டு பாப்­ப­ரசர் சிரித்த
முகத்­துடன் என்னை பார்த்தார். 
 
அதன்­பின்னர் பாப்­ப­ரசர் என்­னிடம் சில வார்த்­தை­களை கூறினார். அதா­வது, யுத்தம் மனி­தர்­க­ளினால்
செய்­யப்­ப­டு­வ­தில்லை. மாறாக, குற்­ற­வா­ளி­களே யுத்தம் செய்­கின்­றனர். யுத்தம் செய்­ப­வர்கள் அனை­வ­ரிடம் ஆயுதம் இருக்கும் என்று நீர் நம்­பு­கின்­றீரா ? யுத்­தத்தில் ஆயுதம் பிர­யோகம் செய்யும் எவரும் ஆயுதம் தயா­ரிப்­ப­தில்லை.
 
ஆயு­தத்தினால் ஒரு­வ­னு­டைய உயிரை பறிக்கும் அதே நப­ருக்கும் ஆயு­தத்­தினால் தான் சாவு எற்­படும். ஆயு­தத்தை ஏந்தி யுத்தம் செய்­ப­வர்கள் குற்­ற­வாளி அல்ல. மாறாக ஆயுதம் தயா­ரிப்­ப­வரே குற்­ற­வாளி என்று பாப்­ப­ரசர் குறிப்­பிட்டார்.
 
ஆகவே வடக்கில் போர்க் கா­லத்தின் போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­ட­னர். இலங்­கையில் இனி­மேலும் யுத்தம் இடம்­பெ­று­வ­தற்கு நான் இட­ம­ளிக்க மாட்டேன். நாட்டில் அனைத்து இனங்­க­ளுக்­கு­மி­டையில்
நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.
 
ஆகவே தேசிய நல்­லி­ணக்­கதை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் பூரண அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும். நாட்டில் யுத்­தத்தை முழு­மை­யாக ஒழித்­து­விட்டு சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­திய இரா­ணுவ வீரர்களை எம்மால் ஒரு­போதும் மறந்து விட்டு செயற்­பட முடி­யாது.
 
இந்த தொழிற்­சா­லையில் பணிப்­பு­ரி­கின்ற இளைஞர் யுவ­தி­களை நான் சந்­தித்து அவர்­க­ளிடம் உங்­க­ளுக்கு என்னபிரச்­சினை இருக்­கின்­றது என்று வின­வினேன். அதற்கு அந்த இளை­ஞர்கள் அனை­வரும் யுத்­தக்­கா­லத்தின் காணாமல் போன­வர்­களை மீட்டு தர­வேண்டும். அதே­போன்று பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களை
விடு­விக்க வேண்டும் என்றே என்­னிடம் கோரினர்.
 
வடக்கில் வாழும் இளை­ஞர்­க­ளினால் விடுக்­கப்­பட்ட அந்த இரண்டும் கோரிக்­கை­களும் எனது மனதில் ஆழ­மாக
பதிந்­துள்­ளன. இது தொடர்பில் தற்­போது அர­சாங்கம் உரியவகை­யி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஆகவே வடக்கு இளை­ஞர்­க­ளினால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குறித்த பிரச்­சி­னைகள் அனைத்தும் தீர்த்து வைக்­கப்­படும். அவற்றுக்கு நான் தீர்வுகாண்பேன்.
 
அத்துடன் வடக்கு மாகாண இளைஞர் யுவ­தி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னைகளை தீர்த்து வைப்­ப­தற்கு அர­சாங்கம்
திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்கு ஏற்றால் போல் அதி­க­ள­வி­லான முத­லீ­டு­களை வடக்­கிற்கு நாம் பெற்று தர­வுள்ளோம். இந்த
சந்­தர்ப்­பத்தில் வடக்கு இளை­ஞர்­க­ளிடம் விசேட கோரிக்­கை­யொன்­றறை நான் முன்­வைத்தே ஆக வேண்டும்.
 
தற்­போது நாட்டில் ஏனைய பிர­தே­சங்­களில் இல்­லாத அள­விற்கு வடக்கில் போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது.
போதைப்­பொருள் என்­பது ஆயுத்தை விடவும் மிகவும் பயங்­க­ர­மா­னது. போதைப்­பொருள் என்­பது உயிரை 
கொல்­ல­வல்­லது. ஆகவே வடக்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும்.
 
வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதன்போது இந்தியாவின் முன்னாள் தலைவர் ஜவஹர்லால் நேருவின் கூற்றுபடி நாட்டின் தலைவராக நான் வரும்போது மக்கள் அனைவரதும் பிரச்சினைகளும் நாட்டு தலைவரின் பிரச்சினைகளாக மாறிவிடும். ஆகவே தற்போது நாட்டு ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு இரண்டு கோடி பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு என்னிடம் உள்ளது என்றார்.
 
                                                   MAITHIRI1.jpg
 
                                                   MAITHIRI2.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிள்ளையைக் கிள்ளித் தொட்டில் ஆட்டுவதில் மிக்க வல்லவராகத் தெரிகிறார். :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிள்ளையைக் கிள்ளித் தொட்டில் ஆட்டுவதில் மிக்க வல்லவராகத் தெரிகிறார். :shocked:

எங்களுக்கு ரொம்ப கோபம் வரும் நீங்கள் அப்படி சொன்னீங்கள் என்றால்.....tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எங்களுக்கு ரொம்ப கோபம் வரும் நீங்கள் அப்படி சொன்னீங்கள் என்றால்.....tw_tounge_wink:

தவறுதான், கன்னத்தில் போட்டுக்கொள்கிறேன். ஆனாலும் ஒரு கேள்வி புத்த பகவானே! உங்களைப் பின்பற்றாதவர்கள், பிள்ளையைக் கிள்ளமாட்டார்களா! கிள்ளினாலும்.... தொட்டிலை ஆட்டமாட்டார்களா...??:)  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.