Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

மேற்கு இந்தியதீவுகள் வெற்றி..

12417780_575050055991657_438251705504091

12472799_575050052658324_564182852363958

12670669_575050035991659_207598066298146

12936622_575050075991655_218350201430828

12919794_575050085991654_818793435760401

12923376_575052612658068_679389604738830

12923170_575050592658270_845747936166174

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் உள்ளே, இந்தியா வெளியே

 

உலகக் கோப்பை டி 20 போட்டியில் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆடி இந்திய அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

160327112826_west_indies_512x288_getty_n

 வெற்றிக் களிப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்

மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

எதிர்வரும் ஞாயிறு கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 5 ஓட்டங்களே எடுத்து ஆட்டமிழந்தாலும், லெண்டல் சிம்மன்ஸ் நிதானமாக உறுதியுடன் ஆடி தமது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற பெரிதும் உதவினார்.

160320173050_west_indies_cricket_512x288 சிம்மன்ஸ் மற்றும் ரசல் அதிரடி ஆட்டம்

அவருக்கு உறுதுணையாக இருந்த ஆண்ட்ரே ரசலும் அபாரமாக ஆடி ஓட்டங்களை குவித்து வந்தார்.

முன்னதாக இந்திய அணி தமது 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை எடுத்தது. இதில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 89 ஓட்டங்களை எடுத்தார்.

துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் அகிஞ்சய் ரஹானி இந்திய அணிக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி கெயில் மற்றும் சாமுவேல் மார்லன்ஸை விரைவாக இழந்தாலும் பின்னர் ஆடவந்த சிம்மன்ஸ் மற்றும் ரசல் தமது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தனர்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160331_t20_ind_wi_sf?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுப் பசங்களா
ரொம்ப நன்றிகள்.

  • தொடங்கியவர்

"பவர் ஹிட்டிங்" மே.இ.தீவுகள் அபார வெற்றி: இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைவு

 

  • வெற்றி நாயகன் சிம்மன்சை தூக்கிக் கொண்டாடும் மே.இ.தீவுகளின் வீரர்கள். | படம்: விவேக் பெந்த்ரே.
    வெற்றி நாயகன் சிம்மன்சை தூக்கிக் கொண்டாடும் மே.இ.தீவுகளின் வீரர்கள். | படம்: விவேக் பெந்த்ரே.
  • விராட் கோலி அபார இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் செல்கிறார். அருகில் தோனி. படம்: ஏ.பி.
    விராட் கோலி அபார இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் செல்கிறார். அருகில் தோனி. படம்: ஏ.பி.
  • மும்பையில் மே.இ.தீவுகளை விளாசிய விராட் கோலி. | படம்: விவேக் பெந்த்ரே.
    மும்பையில் மே.இ.தீவுகளை விளாசிய விராட் கோலி. | படம்: விவேக் பெந்த்ரே.

மும்பையில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 அரையிறுதியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.

193 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இந்தியாவை வெளியேற்றி இறுதியில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது.

கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் நெஹ்ரா, பும்ரா, பாண்டியா ஓவர்கள் முடிய, அஸ்வினுக்கு பதிலாக தோனி ஜடேஜாவிடம் பந்தைக் கொடுக்க, 19-வது ஓவரில் முதல் 4 பந்துகளில் 2 ரன்களையே கொடுத்தார் ஜடேஜா, ஆனால் மீண்டும் ஒரு லெந்த் பந்து விழ ரசல் அதனை நேராக சிக்ஸ் அடித்தார். அதோடு இல்லாமல் கடைசி பந்தை கவர் திசையில் சக்தி வாய்ந்த ஷாட் ஒன்றை ரசல் ஆடி பவுண்டரியும் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் ஏற்கெனவே விக்கெட் ஒன்றையும் கைப்பற்றிய விராட் கோலியிடம் கடைசி ஓவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் 2 பந்துகளில் 1 ரன்னையே கொடுத்தார், ஆனால், 3-வது பந்தை ஸ்கொயர் லெக் இடைவெளியில் பவுண்டரி அடித்தார் ரஸல், பிறகு 4-வது லெந்த் பந்தை டீப் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்ஸ் அடிக்க அதுவே வெற்றி ஷாட்டாக அமைய மே.இ.தீவுகளின் கொண்டாட்டம் தொடங்கியது.

சிம்மன்ஸின் அதிர்ஷ்டம்:

ஆட்ட நாயகனான சிம்மன்ஸ் மூன்று முறை தப்பிப் பிழைத்தார். ஒரு முறை அஸ்வின் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுக்க அது நோபாலாக அமைந்தது பிழைத்தார், மீண்டும் ஒரு முக்கியக் கட்டத்தில் பாண்டியா பந்திலும் கேட்ச் கொடுத்தார், கேட்சும் பிடிக்கப்பட்டது, ஆனால் அதுவும் நோபால் ஆனது.

கடைசியில் 18-வது ஓவரில் பும்ரா பந்தை லாங் ஆனில் சிம்மன்ஸ் சுழற்ற ஜடேஜா பவுண்டரி அருகே ஓடி வந்து கேட்சைப் பிடித்தார், பேலன்ஸ் தவறிய தருணத்தில் பந்தை கோலிக்கு கொடுக்க கோலி அதனை கேட்ச் பிடித்தார், ஆனால்... ரீப்ளேயில் ஜடேஜா பந்தைப் பிடித்த போது எல்லைக்கோட்டை மிதித்தது தெரியவந்தது, இதனால் அது சிக்ஸ் ஆனது.

கெயில் சோபிக்கவில்லை:

தொடக்கத்தில் 2-வது ஓவரில், அதாவது, பும்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே அபாய அதிரடி வீரர் கெய்ல் (5) விக்கெட்டை பவுல்டு முறையில் கைப்பற்றினார்.

3-வது ஓவரில் ஆஷிஷ் நெஹ்ரா 8 ரன்கள் எடுத்த அடுத்த அபாய வீரர் மர்லன் சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார், சாமுவேல்ஸ் மோசமான ஷாட் தேர்வு செய்ய ஆஃப் திசையில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. 19/2 என்ற நிலையிலிருந்து சிம்மன்ஸ், சார்லஸ், ரஸல் திரும்பிப் பார்க்கவில்லை.

சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி சேர்ந்து புரட்டல்:

2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், அஸ்வின், ஜடேஜா, பாண்டியா என்று இவர்களிடம் சிக்கினர், எல்லாம் லெந்த் பந்துகளை வீசி வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர், ஆனால், சார்லஸ், சிம்மன்ஸ் அருமையான அதிரடியைக் காண்பித்தனர், ஒவ்வொரு ஷாட்டும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இருவரும் இணைந்து 10.1 ஓவர்களில் 97 ரன்களை விளாசினர் இதில் சிம்மன்ஸ், சார்லஸ் இருவரும் சரிசமமாக 47 ரன்களை முறையே பங்களிப்பு செய்தனர்.

சார்லஸ் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து 14-வது ஓவரில் விராட் கோலியின் பந்தில் அவுட் ஆனார். இதுவும் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்து இறங்கிய ரசல், சிம்மன்ஸுடன் இணைந்து அடுத்த 6.3 ஓவர்களில் 80 ரன்களை விளாசியதில் இந்திய அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அஸ்வின் 2 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்தார், மீண்டும் கொண்டு வரப்படவில்லை, ஜடேஜா 4 ஓவர்கள் 48 ரன்கள். முதல் 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்த நெஹ்ரா கடைசி ஓவரில் 9 ரன்களை கொடுத்தார், இந்த ஓவரும் இந்திய அணிக்கு முக்கியத் தருணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது, ஹர்திக் பாண்டியா தொடர்ந்து லெந்த் பந்துகளை வேகமாக வீச அவர் 4 ஓவர்களில் 43 ரன்களையும் பும்ரா 4 ஓவர்களில் 42 ரன்களையும் கொடுத்தனர்.

லெண்டில் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, அதிரடி மன்னன் ஆந்த்ரே ரசல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மொத்தம் 20 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் அதாவது 146 ரன்கள் ஓடாமலேயே எடுக்கப்படும் அளவுக்கு இந்திய பந்து வீச்சு புரட்டி எடுக்கப்பட்டது. ஆனால் பவர் ஹிட்டிங் என்றால் என்ன என்பதை மே.இ.தீவுகள் இன்று காண்பித்தது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மே.இ.தீவுகளின் ஆடவர், மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் விராட் கோலியின் ‘மாஸ்டர் கிளாஸ்’ : இந்தியா 192 ரன்கள் குவிப்பு

முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது.

முதல் ஓவர் 6 ஓவர்களில் 55/0, 10 ஒவர்களில் 86/1, 15 ஓவர்களில் 127/1; 20 ஓவர்களில் 192/2. இதுதான் ரோஹித், ரஹானே, விராட் கோலி, தோனி ஆகியோர் இன்னிங்ஸைக் கட்டமைத்த விதம்.

விராட் கோலி 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 47 பந்துகளில் 89 ரன்களை அடித்து நொறுக்கி 89 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பவுண்டரி, சிக்ஸ் தவிர விக்கெட்டுகளுக்கு இடையே விரைவில் ஓடி 2 ரன்களை அதிகம் எடுத்தார் கோலி, ஓட்டம் கோலியின் பேட்டிங்கில் புதிதாக சேர்ந்துள்ள அம்சம், இந்தப் போட்டியிலும் அது அவருக்கு தகைந்தது. மே.இ.தீவுகள் ஒரு விதத்தில் அவரது ஓட்டத்தைக் கண்டு வெறுப்படைந்தது என்றே கூற வேண்டும்.

ஆனால் இதற்கும் அவர்கள் தங்களைத் தாங்களே குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டியதுதான்.

கோலிக்கு அடுத்தடுத்து ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட மே.இ.தீவுகள்:

ஆட்டத்தின் 9-வது ஓவரில்தான் விராட் கோலிக்கு இந்த ‘சான்ஸ்’ வழங்கப்பட்டது. முதலில் பவுன்சர் போட்ட பிராவோவுக்கு நோ-பால் கொடுக்கப்பட்டு ஃப்ரீ ஹிட் அளிக்கப்பட்டது, அந்தப் பந்தை கோலியால் அடிக்க முடியவில்லை பந்து அவரைக் கடந்து செல்ல, கோலி ஒரு ரன் எடுக்கலாம் என்று முன்னேறி வர, ரஹானே அவரைத் திருப்பி அனுப்ப, முதலில் விக்கெட் கீப்பர் அடித்த த்ரோ நூலிழையில் ஆஃப் ஸ்டம்பைத் தவற விட்டது, தாண்டி வந்த பந்தை பவுலர் பிராவோ எடுத்து அடிக்கும் போது கூட விராட் வெளியில்தான் இருந்தார், ஆனால் பிராவோவின் த்ரோவும் நூலிழையில் ஸ்டம்பைத் தவற விட 1 ரன்னில் இரண்டு வாய்ப்புகள் நழுவியது.

இதை விடவும் கொடுமை, அடுத்த பந்தை லெக் திசையில்தட்டி விட்டு 2-வது ரன்னுக்காக ஓடி வந்தார், அப்போது லெண்டில் சிம்மன்ஸ் அடித்த த்ரோவை ராம்தின் சரியாக சேகரிக்கவில்லை, அவர் ஒழுங்காகச் சேகரித்திருந்தால் கோலி ரன் அவுட் ஆகியிருப்பார், இது கடந்த அவுட் வாய்ப்பை விட மேலும் எளிதானது. இந்த 2 வாய்ப்புகளையும், அதாவது 3 வாய்ப்புகளையும் மே.இ.தீவுகள் கோட்டை விட்டதன் பலனை இறுதியில் அனுபவித்தனர்.

டேரன் சமியின் புதிர் கேப்டன்சி:

முதல் ஓவரை ஆந்த்ரே ரசல் வீசினார், நன்றாகவே வீசினார் ஒரு பீட்டனுடன் 2 ரன்களே வந்தது. 2-வது ஓவரை பத்ரி வீசினார் 4 ரன்களே வந்தது. ஆனால் திடீரென 3-வது ஓவரை பிராத்வெய்ட்டிடம் கொடுக்க முதல் பந்து அல்வா போன்ற ஓவர் பிட்ச் பந்தை லாங் ஆனில் அலட்சியமாக பெரிய வலுவெல்லாம் இல்லாமல் அனாயாசமாக தூக்கி சிக்ஸ் அடிக்க, மே.இ.தீவுகளுக்கு சாத்துமுறை தொடங்கியது.

அந்த ஓவரில் 9 ரன்கள். ஏன் பந்து வீச்சு மாற்றம் செய்தார் என்று புரியவில்லை. உடனே 4-வது ஓவரில் இடது கை ஸ்பின்னர் சுலைமான் பென்னைக் கொண்டு வந்தார். ரோஹித் கவரில் ஒரு பவுண்டரியையும் பிறகு சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டில் ஒரு பவுண்டரியையும் விளாசினார். அந்த ஓவரில் 11 ரன்கள். மீண்டும் ஏனோ பத்ரியைக் கொண்டு வந்தார் சமி. அந்த ஓவரில் ரஹானே ஒரு எட்ஜ் பவுண்டரி அடிக்க 9 ரன்கள். சரி 5 ஓவர்களுக்குள் இப்படி பந்து வீச்சாளர்களை மாற்றியதால் ஒருவருக்கும் லைன் மற்றும் லெந்த் கிடைக்கவில்லை.

இதை விடவும் தமாஷ் கேப்டன்சி, அடுத்த ஓவரில் மீண்டும் ரசலைக் கொண்டுவந்தார். அவர் முதல் ஒவருக்குப் பிறகு தேவையில்லாமல் கட் செய்யப்பட்டு, தற்போது ரோஹித் சர்மாவுக்கு மாட்டத் தொடங்கியதும் மீண்டும் 6-வது ஓவரில் கொண்டு வந்தார். ஆனால் ஒரு இடுப்பக்கு மேலான புல்டாஸை அவர் வீச பந்து சிக்ஸுக்கு பறந்தது. இது நோபால் என்பதால் ப்ரீ ஹிட், இது மீண்டும் ஒரு லெந்த் பந்து, பவுலர் தலைக்கு மேல் இன்னொரு சிக்ஸ். அந்த ஓவரில் 20 ராக்ள் வர 2 ஓவர்களில் 4 ரன்கள் என்றிருந்த இந்திய அணி பவர் பிளே முடிவில் 55/0 என்று ஆனது.

பத்ரீ வீசிய 3-வது ஓவரில்ம் 31 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, பத்ரீ பந்தில் எல்.பி.ஆனார். உள்ளே வந்த பந்திற்கு பின்னங்காலில் வாங்கினார் ரோஹித்.

இதன் பிறகு ரஹானே, கோலி இணைந்தனர் அப்போதுதான் மேற்கூறிய ரன் அவுட் அத்தியாயம் நடந்து முடிந்து, கோலி செட்டில் ஆகத் தொடங்கினார், நிறைய 2 ரன்களை ஓடினார், பந்துகளை அனாயாசமாக இடைவெளியில் தட்டி விட்டு 2 ரன்களை அவர் அடிக்கடி எடுக்க முடிந்தது. ரஹானே பத்ரீயை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாச 10 ஒவர்களில் 86/1 என்று இருந்தது இந்திய அணி. இருவரும் இணைந்து 8.1 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 66 ரன்களைச் சேர்த்தனர், இதில் கோலியின் பங்களிப்பு 41 ரன்கள் ரஹானேயின் பங்களிப்பு 22 ரன்கள்.

ரஹானே நீண்ட இடைவெளிக்குப் பின் ஆடினாலும் நிதானத்துடன் ஆடி 35 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து 16-வது ஓவரில், அருமையான சிக்ஸர் ஷாட்டில் பவுண்டரிக்கு வெகுஅருகில் பிராவோவின் எம்பிப் பிடித்த அபார கேட்சுக்கு வெளியேறினார். 33 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எட்ட்டிய விராட் கோலி அடுத்த 14 பந்துகளில் 39 ரன்களை விளாசினார், இதில் மேலும் 5 அருமையான பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் எடுத்தார். கடைசி 4.3 ஓவர்களில் விராட் விளாச, தோனி அவருக்கு உறுதுணையாக நிற்க 64 ரன்கள் விளாசித் தள்ளப்பட்டது. கோலி 47 பந்துகளில் 89 நாட் அவுட், தோனி 9 பந்துகளில் 15 நாட் அவுட். மே.இ.தீவுகள் தரப்பில் பத்ரீ மட்டுமே சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

2016-ம் ஆண்டில் கோலியின் டி20 ஸ்கோர்: 90*, 59*, 50, 7, 49, 56*, 41*, 23, 55*, 24*, 82*, 89*, இதில் 10 நாட் அவுட்கள், 8 அரைசதங்கள்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article8418782.ece?homepage=true

  • தொடங்கியவர்
உலக மகளிர் இருபது 20 கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் முதல் தடவையாக  மேற்கிந்தியத் தீவுகள்
2016-03-31 21:08:15

இந்­தி­யாவில் நடை­பெற்­று­வரும் ஐந்­தா­வது மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் அத்­தி­யா­யத்தின் இறுதிப் போட்­டியில் மூன்று தட­வைகள் தொடர்ச்­சி­யாக சம்­பி­ய­னான நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லி­யாவை எதிர்த்­தா­டு­வ­தற்கு மேற்­கிந்­தியத் தீவுகள் தகு­தி­பெற்­றுக்­கொண்­டது.

 

15862west-indies-women.jpg

 


நியூ­ஸி­லாந்து மகளிர் அணிக்கு எதி­ராக மும்பை, வான்­கடே விளை­யாட்­ட­ரங்கில் இன்று  நடை­பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்­டியில் நியூ­ஸி­லாந்து மகளிர் அணியை 6 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்­டதன் மூலம் இறுதி ஆட்­டத்தில் விளை­யாடும் வாய்ப்பை மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணி பெற்­றது.


மகளிர் உலக இரு­பது 20 கிரிக்ெகட் வர­லாற்றில்  மேற்­கிந்­தியத் தீவுகள் இறுதி ஆட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெற்­றது இதுவே முதல் தட­வை­யாகும்.


இப் போட்­டியில் நியூ­ஸி­லாந்து மகளிர் அணி முதலில் களத்­த­டுப்பில் ஈடு­படத் தீர்­மா­னித்­ததை அடுத்து துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 143 ஓட்­டங்­களைப் பெற்­றது.


 பிரிட்னி கூப்பர் 48 பந்­து­களில் 2 சிக்­ஸர்கள், 5 பவுண்ட்­றிகள் அடங்­க­லாக 61 ஓட்­டங்­களைப் பெற்று மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணியின் மொத்த எண்­ணிக்­கைக்கு வலு சேர்த்தார்.

நியூ­ஸி­லாந்து மகளிர் அணி பந்­து­வீச்சில் சொஃவி டிவைன் 22 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.


144 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து மகளிர் அணி 20  ஓவர்­களில் 8 விக்­ெகட்­களை இழந்து 137 ஓட்­டங்­களைப் பெற்று தோல்­வியைத் தழு­வி­யது.


துடுப்­பாட்­டத்தில் சாரா மெக்­லெஷான் 38 ஓட்­டங்­க­ளையும் அமி சட்­டர்த்வெய்ட் 24 ஓட்­டங்­க­ளையும் பெற்­ற­துடன் நான்­கா­வது விக்­கெட்டில் 59 ஓட்­டங்­களைப் பகிர்ந்து தமது அணிக்கு சிறு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தினர்.

ஆனால் இவர்கள் இரு­வரும் 17ஆவது ஓவரில் ஸ்டெஃபானி டெய்­லரின் அடுத்­த­டுத்த பந்­து­வீச்சில் ஷேர்மெய்ன் கெம்­பெ­லிடம் கிட்­டத்­தட்ட ஒரே இடத்தில் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழக்க மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணிக்கு சாதகமாக ஆட்டம் திரும்பியது.


மேற்கிந்திய பந்­து­வீச்­சா­ளர்­களில் அணித் தலைவி ஸ்டெஃபானி 26 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். ஆட்­ட­நா­ய­கி­யாக  பிரிட்னி கூப்பர் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15862#sthash.uZ6ryPqh.dpuf
  • தொடங்கியவர்

டோனியின் கலாய்பு

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோனி அடுக்கிய தோல்வி காரணங்களும் 'ஓய்வு' கேள்வியை எதிர்கொண்ட விதமும்!

 
தோல்விக்குப் பின் தோனி | படம்: கெட்டி இமேஜஸ்
தோல்விக்குப் பின் தோனி | படம்: கெட்டி இமேஜஸ்

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மே.இ.தீவுகளின் காட்டடி தர்பாருக்கு இந்திய அணி சரணடைந்து வெளியேறியது. இதற்குப் பனிப்பொழிவும், வீசப்பட்ட நோ-பால்களுமே காரணம் என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.

முதலில் ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் கூறியதை அவர் கூறியதைப் பார்ப்போம்:

"டாஸ் தோற்றது முதல் பின்னடைவு. இதனால் பனிப்பொழிவில் பந்து வீச நேர்ந்ததால் ஸ்பின்னர்கள் பந்தை நன்றாக பற்ற முடியாமல் போனது. ஈரப்பந்தில் ஸ்பின்னர்கள் வீசுவது பற்றிய பிரச்சினைகளின் வரலாறு நம்மிடம் உள்ளது. ஆனால் நான் உண்மையில் ஏமாற்றமடைந்தது அந்த 2 நோ-பால்களே. வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தப் போட்டியை வெற்றிக்குத் திருப்ப வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் கடினமாக அமைந்தன. இந்த டி20 வடிவம் அதிகம் நம்மிடமிருந்து உழைப்பைக் கோருவது" என்றார் தோனி.

அஸ்வினும் உலகக் கோப்பையும்

இந்தியப் பந்துவீச்சைத் தலைமை தாங்குபவராக அஸ்வின் கருதப்படுகிறார். ஆனால் அவருக்கு இந்த உலகக் கோப்பை ஓர் அமைதியான தொடராக மாறிப்போனது. ஓரளவுக்கு இதற்கு தோனியும் பொறுப்புதான். காரணம் ஸ்பின்னுக்குச் சாதகமான ஆட்டக்களமே இந்தியாவுக்கு கிடைத்தது (அரையிறுதி நீங்கலாக) ஆனால், அஸ்வின் 5 போட்டிகளில் வீசிய ஓவர்கள் 15 மட்டுமே. 5 போட்டிகளில் அஸ்வின் 2 போட்டிகளில் மட்டுமே தனது முழு 4 ஓவர்களையும் வீசினார். கொல்கத்தா பிட்சில் பாகிஸ்தானுக்கு எதிராக பந்துகள் ஸ்கொயராகத் திரும்பிய பிட்சில் அஸ்வின் 3 ஓவர்களே வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களை வழங்கிய 2 ஓவர்கள், பிறகு நேற்று அரையிறுதியில் 2 ஓவர்கள்.

தோனி நேற்று அஸ்வினை 7 மற்றும் 9-வது ஓவரில் பயன்படுத்தினார். 20 ரன்கள் கொடுத்தார், ஆனால் அதன் பிறகு மிடில் ஓவர்களிலும் கொண்டுவரவில்லை, கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்படும் நிலையிலும் பகுதி நேர வீச்சாளரான கோலியிடம் அளிக்கப்பட்டது. அஸ்வின் ஒரு ஆகிருதி, கடைசி ஓவரை அவரிடம் கொடுத்திருந்தால் ஒருவேளை... ஒருவேளை... மே.இ.தீவுகளின் பேட்ஸ்மென் பதற்றமடைந்திருக்கலாம், விராட் கோலி என்றவுடன் அவர்கள் எப்படியும் ஒரு பந்து சிக்கும் என்ற நம்பிக்கை பெற்று விட்டனர். எப்போதும் இப்படிப்பட்ட நெருக்கடியான (crunch) போட்டிகளில் முன்னணி பவுலர்களையே பயன்படுத்த வேண்டும். ஆனால் இடை ஓவர்களில் பாண்டியா வாங்க வாங்க கொடுத்துக் கொண்டே இருந்தார் தோனி.

ஏன் இப்படி? - தோனி விளக்கம்:

"பந்தின் தையலில் ஈரம் படியத் தொடங்கியது, ஆடுகளத்திலும் பந்துகள் பேட்டுக்கு நன்றாக வந்தன. அஸ்வின் 2 ஓவர்களே வீச முடிந்தது, ஜடேஜா முழு ஓவர்களை முடிக்கத் தள்ளப்பட்டோம். கடைசியில் இரண்டு வலது கை பேட்ஸ்மென்கள் (ரஸல், சிம்மன்ஸ்) கிரீசில் இருந்ததால் இடது கை ஸ்பின் தெரிவு செய்யப்பட்டது.

கடைசி ஓவரை அஸ்வினிடம் கொடுக்க வேண்டும் என்பது என் மனதில் இல்லை. பிட்சில் பந்துகள் மட்டைக்கு நன்றாக வரும் வேளையில், பந்து ஈரமாக இருக்கும்போது அஸ்வின் வீச சரியான நேரம் அதுவல்ல என்றே கருதினேன். பந்துகள் திரும்பும் பிட்சில் நான் அவரை பயன்படுத்தியிருப்பேன்.

கொல்கத்தாவில் பும்ராவை பயன்படுத்தியதற்குக் காரணம், ஒரு ஸ்பின்னரின் ஓவரில் 15 ரன்கள் எடுக்க வாய்ப்பிருப்பதாக கருதினேன், அஸ்வின் சரியாக வீச மாட்டார் என்று நான் கருதவில்லை, அந்தப் போட்டியில் பாதுகாப்பான தெரிவாக பும்ராவை வீச அழைத்தேன். நேற்று சூழ்நிலை அஸ்வினை அழைக்க ஏதுவாக இல்லை.

மேலும் 30 ரன்களைக் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அரை மணி நேரம் முன்னால் ஆட்டம் தொடங்கியது, டாஸில் வேறு தோற்றோம். அவர்கள் பேட் செய்யத் தொடங்கிய போது பரவாயில்லை, ஆனால் சிறிது நேரம் கழித்து பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் ஸ்பின்னர்கள் பந்தை சரியாகப் பற்ற முடியவில்லை.

பந்து ஈரமாக இருக்கும்போது பேட்டுக்கு அருமையாக வரும், இதுதான் முதலில் பேட் செய்வதற்கும், 2-வதாக பேட் செய்வதற்குமான வேறுபாடு. 190 ரன்களை எடுப்பது கடினம்தான், ஆனால் 2-வது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவினால் ஆடுகளம் மாறிப்போனது.

நான் ஏமாற்றமடைந்தது அந்த 2 நோபால்களே. மற்றபடி சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத போதும் நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சி மேற்கொண்டோம்" என்றார் தோனி.

டி20 ஓய்வு எப்போது?- தோனி சுவாரசியம்

போட்டி முடிந்தபின்பு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர், தோனியின் டி20 போட்டி ஓய்வுத் திட்டம் குறித்த கேள்வியை எழுப்பினார்.

அந்தச் செய்தியாளரை தன் அருகே அழைத்து அமரவைத்த தோனி, "நான் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு, "இல்லை... இல்லை... நான் ஜஸ்ட் கேட்டென்" என்றார் செய்தியாளர். அதற்கு, "நான் உடல்தகுதியுடன் இல்லை என்று நினைக்கிறீர்களா?" என்று தோனி கேட்டார். இல்லை என்று பதில் வந்ததும் "என்னுடைய ஓட்டத்தைப் பார்த்தீர்கள்தானே?" என்றார். "ஆம்... ரொம்ப வேகம்தான்" என்றார் செய்தியாளர்.

அதன் பிறகும் விடாத தோனி, "2019 உலகக் கோப்பை வரை என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்க, "நிச்சயமாக, ஆம் நிச்சயமாக" என்று அந்தச் செய்தியாளர் சொல்ல, "அப்புறம் என்ன... நீங்களே கேள்விக்குப் பதில் சொல்விட்டீர்கள்" என்றார் முடித்தார் தோனி.

தோனியின் இந்த வித்தியாசமான அணுகுமுறை செய்தியாளர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8421447.ece?homepage=true

  • தொடங்கியவர்

வெற்றியை நடனமாடிக் கொண்டாடிய மே.இந்திய வீரர்கள் 

 

உலகக் கிண்ண இருபதுக்கு - 20 அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றதன் அந்த அணி வீரர்கள் வெற்றியை நடனமாடி கொண்டாடியுள்ளனர்.

wi.gif

sfsfs.gif

http://www.virakesari.lk/article/4758

 

https://www.youtube.com/watch?v=0FpnAorJXH4&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

 

tw_blush:

  • தொடங்கியவர்

இந்த 5 காரணங்களால் தான் இந்தியா தோற்றது!

 

நூறு கோடி இதயங்கள் நொறுங்கி போயிருக்கிறது. இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள்,   அரையிறுதியில் இந்திய அணி தோற்ற சோகத்தில் இருக்கிறார்கள். கோப்பையை கண்டிப்பாக வெல்லும் அணி  என உலகமே அடித்துச்சொன்ன போதும்,  இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரை கொடுத்து விளையாடிய கோலியாலும், மாஸ்டர் மைண்ட்  தோனியாலும் கூட இம்முறை இந்திய அணியை கரை சேர்க்க முடியவில்லை. 

239107.jpg

வெற்றி பெறும் சமயங்களில் எப்போதுமே பலவீனமான விஷயங்களை பற்றி நாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் தோல்வி அடைந்தால் பலவீனங்கள் எப்போதுமே கண் முன் வந்து நிற்கும். நிறைய பாதகங்கள் இருந்தபோதும் ஒரு வேளை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் , பாதகங்கள் குறித்து  ஆராய வேண்டிய அவசியம் இருந்திருக்காது, யாரும் ஆராய்ந்திருக்கவும் மாட்டார்கள்.

சரி இந்திய அணி எப்படி சறுக்கியது எங்கே?  எப்படி,  ஏன் தோற்றது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்...

வில்லனான டாஸ் :

அரையிறுதி போட்டி முடிந்ததும்,  வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சமி பேட்டியளிக்கும்போது முதலில் சொன்ன விஷயம்,  " இந்தியாவுடனான போட்டியில் எப்படியாவது டாஸ் ஜெயித்துவிட வேண்டும் என கடைசி நிமிடம் வரை பிரார்த்தித்து கொண்டிருந்தேன்" என்பதுதான்.  நமது கேப்டன்,  "டாஸ் தோல்வி இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு"  என்றார்.  சரி,  இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராத் கோலி, தோனி போன்ற தலை சிறந்த வீரர்கள் இருக்கும்போது டாஸ் அவ்வளவு பெரிய முக்கியமா என நமக்கு சந்தேகம் எழுந்திருக்க கூடும். 

 

உண்மையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணி மோதிய அரையிறுதி போட்டியில்,  டாஸ்தான் முக்கிய நாயகன். மும்பையில் பனிப்பொழிவு இருக்கும் சமயம் இது. பனிப்பொழிவு இருந்தால் பந்து வீசுவது மிகவும் சிரமம். ஏனெனில் பந்தில் ஈரப்பதம் அதிகமானால் இலக்கு தவறும். தவிர சுழற்பந்து வீச்சுக்கு பந்து ஒத்துழைக்காது. இந்தியாவின் பலமே சுழற்பந்து வீச்சுதான் எனும்போது, பனிப்பொழிவு இந்திய அணியின் அத்தனை கேம் பிளான்களையும் காலி செய்துவிட்டது. பனிப்பொழிவு மட்டுமின்றி, மைதானமும் சிறியது என்பதால் எவ்வளவு பெரிய ரன்களையும் சேஸ் செய்யக்கூடிய பிட்ச் என்பதால், இரண்டாவதாக பேட்டிங் செய்யவே எந்தவொரு அணியும் இங்கே விருப்பப்படும். வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன்,  இந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து முறையும் டாஸ் வென்று சேஸிங் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தட்டையான - லாயக்கற்ற  பிட்ச்:

2011 -ம் ஆண்டு இதே வான்கடே பிட்சில்தான் இலங்கை நிர்ணயித்த இலக்கை,  தோனியின் சிக்சருடன் சேஸ் செய்து, கோப்பையை வென்றது இந்திய அணி. இன்று அதே மைதானம்தான் வில்லனாக அமைந்தது. மும்பை வான்கடே பிட்சை பற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்கு முன்னர் சில சம்பவங்களை ஞாபகபடுத்திவிடுகிறேன்.

2014 ஐ.பி.எல்  அரையிறுதி போட்டியில் பஞ்சாப்பும், சென்னையும் மோதின. முதலில் பஞ்சாப் பேட்டிங் பிடிக்க, ஷேவாக் ருத்ர தாண்டவம் ஆடினார். 58 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சர் உதவியுடன் பஞ்சாப் 226 ரன்களை குவித்தது. நெஹ்ரா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர்  தலா நான்கு ஓவர்களை வீசி 51, 44, 48 ரன்களை விட்டுக்கொடுத்தனர். சென்னை இரண்டாவதாக பேட்டிங் பிடித்தது. ரெய்னா வெறும் 25 பந்தில் 12 பவுண்டரி, ஆறு சிக்சர்கள் விளாசி 87 ரன்கள் எடுத்திருந்தார். ரெய்னா அவுட்டாகும் போது ஸ்கோர்,  ஆறு ஓவரில் நூறு ரன்கள். சென்னை 202 ரன்கள் எடுத்தது.

 

9443241111307928890899733724467626452294



கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியுடன்,  பெங்களூரு அணி லீக் போட்டியொன்றில் விளையாடியது.  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலியும், டிவில்லியர்சும் இணைந்து  வான்கடேவில் வாண வேடிக்கை காட்டினர். கோலி 50 பந்தில் 87 ரன்கள் எடுக்க, டிவில்லியர்ஸ் மரண மாஸ் காட்டினார். வெறும் 59 பந்தில் 19 பவுண்டரி, நான்கு சிக்ஸர் என பிரித்து மேய்ந்து  133 ரன்களை குவித்திருந்தார். பெங்களூரு 236 ரன்களை குவித்தது. பும்ரா நான்கு ஓவரில் 52 ரன்னையும், ஹர்டிக் பாண்டியா மூன்று ஓவரில் 51 ரன்களையும் விட்டுகொடுத்திருந்தனர். இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை சிம்மன்ஸ், அதிரடியாக விளையாடினாலும் 196   ரன்களை எடுத்து தோற்றது.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா,  இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்திருந்தது. ஒருதின தொடரில் இந்தியா- தெ.ஆ தலா இரண்டு போட்டிகளை வெல்ல,  கோப்பை யாருக்கு என முடிவு செய்யும் பரபரப்பான ஐந்தாவது போட்டி  மும்பையில் நடந்தது. தென்னாப்பிரிக்கா முதலில்  பேட்டிங் செய்தது. இந்தியாவின் பவுலிங்கை டீ காக் - டு பிளசிஸ் -டி வில்லியர்ஸ் கூட்டணி சிதைத்தது. மூவரும் சதம் அடித்தார்கள். டிவில்லியர்ஸ் 61 பந்தில் மூன்று பவுண்டரி, 11 சிக்ஸர்கள் விளாசி 119 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா 438 ரன்கள் என்ற இமாலாய இலக்கை எட்டியது. இந்தியா பேட்டிங் செய்யும்போது ரஹானே அற்புதமாக விளையாடினாலும் 36 ஓவர்களில் 224 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, 214 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா.

சரி இந்த உலககோப்பைக்கு வருவோம். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய முதல் போட்டியில்,  இங்கிலாந்து 182 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில்,  கெயில் 48 பந்தில் சதமடிக்க,  18 ஓவரிலேயே இலக்கை கடந்தது வெஸ்ட் இண்டீஸ். இங்கிலாந்து - தென்னாப்பிரிக்காவும் இங்கேதான் மோதின. அம்லா, டீ-காக் என எல்லா பேட்ஸ்மேன்களும் விளாசித்தள்ள, 20 ஓவரில் 229 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா. ஆனால் 19.4 ஓவரில் 229 ரன்னை சேஸ் செய்தது இங்கிலாந்து. தென்னாப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா,  டிவில்லியர்ஸ் விளாசலில் 209 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான்,   ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தாலும், கடைசி கட்டத்தில் அதிரடி வீரர்கள் இல்லாததால் 172 ரன்கள் மட்டும் குவித்தது.

2390473.jpg

இப்போது மும்பை  வான்கடே பிட்ச் பற்றி ஒரு தெளிவு பிறந்திருக்கும். ஆமாம்! பந்துவீச்சாளர்கள் பந்துவீசவே விரும்பாத ஒரு பிட்ச் இதுவாகத்தான் இருக்க முடியும். எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கனவு பிட்ச் என்றால் அது இதுதான். மிக சராசரியான பேட்ஸ்மேன் கூட எளிதாக ரன்களை குவிக்க முடியும். அதே சமயம் ஸ்டெயின், அஷ்வின் போன்ற உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் கூட,  இங்கே ஒரு ஓவர் கூட நன்றாக வீசமுடியாது.

உலகின் எப்பேர்பட்ட பந்துவீச்சாளராக இருந்தாலும் இந்த மைதானத்தில் ஜொலிப்பது கடினம். வேகமான 'அவுட்ஃபீல்டு' வான்கடேவில் உள்ளதால், எளிதில் பவுண்டரிகளை நோக்கி பந்துகள் ஓடும். சுழற்பந்துக்கு ஆகவே ஆகாத மட்டமான மைதானம் என்பதால்  பந்து மெதுவாக, நேராக, அழகாக பேட்டுக்கு வரும். மைதானமும் சிறியது என்பதால் சுழற்பந்து வீச்சை சிக்ஸர் அடிப்பது ஈஸி.  இதனால்தான் ஆப்கானிஸ்தானின் பகுதி நேர பந்துவீச்சாளர்களிடம் பம்மி,  122 ரன்களை கூட அடிக்க முடியாமல் சொதப்பிய  வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால்,  எளிதாக இங்கே சரமாரியாக சிக்ஸர்கள் விளாசமுடிகிறது. நல்ல உடற்கட்டுடன் பவர் ஹிட்டர்களை கொண்ட அணியானது இங்கே எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சேஸ் செய்ய முடியும். நாற்பது ஓவரில் சராசரியாக 400 ரன்களை விளாச ஏற்ற பிட்ச் இது. எனவே இது போன்ற பிட்சில் 192 ரன்னை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு தடுப்பது எந்த ஒரு வலுவான அணிக்கும்  கூட மிக மிக கடினமான காரியம்.

சொதப்பிய பேட்டிங் : -

'என்னடா இது பேட்டிங் சொதப்பலா... நல்லாதானே விளையாடினார்கள்!'  என  நீங்கள் நினைக்கக்கூடும்.  டாஸ் தோற்றுவிட்டாகிவிட்டது, எவ்வளவு பெரிய ரன்களையும் எளிதில் சேஸ் செய்யகூடிய பிட்ச் இது என இந்திய அணிக்கு நன்றாகவே தெரியும். ஆக இப்படிப்பட்ட பிட்சில் 230 - 250 ரன்களை இலக்காக கொண்டு,  இந்தியா விளையாடியிருக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறாக ஏழு மணிக்கே போட்டி ஆரம்பித்தது இந்திய அணிக்கு கொஞ்சம் பின்னடைவுதான். பனிப்பொழிவு சுத்தமாக இருக்காது என்பதால் முதல் ஆறு -எட்டு ஓவர்கள் வரை ரன்கள் குவிப்பது  சற்று எளிதான விஷயமில்லை.

முதல் இரண்டு -மூன்று ஓவர்கள் சொதப்பினாலும்,  பின்னர் ரோஹித் ஷர்மா வெகுண்டெழுந்து 31 பந்தில்  மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் விளாசி 43 ரன்களை குவித்தார்.  ரோஹித் ஷர்மா அவுட் ஆகும்போது,  இந்தியாவின் ஸ்கோர் 7.2 ஓவரில் 62 ரன்கள்.  பேட்டிங்க்குக்கு சாதகமான பிட்சில் எளிதில் சிக்ஸர் விளசக்கூடிய ரெய்னா, தோனி, பாண்டியா, மனிஷ் பாண்டே போன்ற வீரர்கள் இருந்தும்,  மெதுவாக ஒன்றிரண்டு ரன்களாக ஓடிக்கொண்டிருந்தார்கள் ரஹானேவும், கோலியும். கோலி அவ்வப்போது பவுண்டரிகளை எடுத்தாலும், ரஹானே மறந்தும் கூட பவுண்டரியோ, சிக்ஸரோ விளாச முயற்சிக்ககூட இல்லை.

239045.jpg

எளிதான பந்துகளை கூட தட்டிவிட்டு இரண்டு ரன்களாக எடுத்து கொண்டிருந்தார் ரஹானே. ரஹானேவும்,  கோலியும் விளையாடிய ஏழு ஓவர்களில்,  வெறும் ஐந்து பவுண்டரிகள் மட்டுமே வந்தன. ஒரு சிக்ஸர் கூட இல்லை. 35 பந்துகளை பிடித்து வெறும் இரண்டு பவுண்டரிகளை மட்டும் விளாசி,  நாற்பது ரன் எடுத்துவிட்டு அவுட்டானார் ரஹானே. ரஹானேவால் ரன் ரேட் வெகுவாக குறையவே, விராட் கோலிக்கு உணர்த்தவும், ரன்ரேட்டை ஏற்றவும் தோனியே களத்தில் இறங்கினார். ரஹானே அவுட்டாகும் போது ஸ்கோர் 15.3 ஓவரில் 133 ரன்கள். அடுத்த 27 பந்துகளில் 59 ரன்களை கோலியும், தோனியும் விளாச, இந்தியா 192 ரன்களை எடுத்தது. பனிப்பொழிவு சுமாராக இருந்ததால் ஸ்லோ-பால் வீசி ஓரளவு ரன்களை கட்டுப்படுத்தினார்கள்  பிராவோ போன்ற  வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்.

நமக்கு சுழற்பந்து வீச்சே பிரதான ஆயுதம் மற்றும் ஏற்கனவே இந்த பிட்சில் விளையாடி அனுபவப்பட்டுள்ளோம் என்ற நிலையில், 192 ரன்கள் என்பது மிக எளிதாக சேஸ் செய்யக் கூடிய இலக்கு என்பது இந்திய வீரர்களுக்கு தெரிந்திருக்கும்.  குறைந்தபட்சம் இருபது ரன்கள் முதல்  முப்பது - நாற்பது ரன்கள் வரை  இன்னமும் இந்தியா கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். பவுலர்களால ஒண்ணுமே செய்ய முடியாத ஆடுகளத்தில் சற்று குறைவான ரன்களை எடுத்ததற்கு இந்திய பேட்டிங் வரிசையே பொறுப்பு.

மிஸ்ஸிங்  யுவராஜ் :

யுவராஜுக்கு ஏற்பட்ட காயம் அவருக்கு மட்டுமல்ல  இந்தியாவுக்கே பெரும் பின்னடைவாகிப் போனது. யுவராஜுக்கு பதிலாக களமிறங்கிய மனிஷ் பாண்டேவால் இந்திய அணிக்கு எந்த பலனும் இல்லை. இந்திய அணியில் நெஹ்ரா- பும்ரா இருவரும் நன்றாகவே பந்து வீசினார்கள். கெயில் விக்கெட்டை,  நல்ல இன்ஸ்விங் யார்க்கர் முறையில் வீழ்த்தினார் பும்ரா. பவர் ப்ளேவுக்கு பிறகு பனிப்பொழிவு அதிகமனாதால் எந்த பவுலருக்குமே விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. நெஹ்ரா மட்டுமே ஒரு ஓவரை நன்றாக வீசினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் வலது கை ஆட்டக்காரர்கள் களத்தில் நின்ற சமயத்தில்,  பந்துகளே திரும்பாத ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. 

தட்டையான ஆடுகளங்களில் ஜடேஜாவுக்கு பந்தை திருப்ப தெரியாது என்பதால், இடது கை பந்துவீச்சாளராக இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்நிலையில்தான் வேறு வழியே இன்றி ஸ்லோ லெக் பிரேக் வீசக்கூடிய விராட் கோலியை பந்துவீச அழைத்தார் தோனி. விராட் கோலி  முதல் ஓவரில் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து,  ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி ஓவருக்கு  பிறகு பதினைந்தாவது ஓவரை  வீசிய பாண்டியா,  இந்திய அணிக்கு வில்லனாக அமைந்துவிட்டார். ஒரு நோ- பால் உட்பட   24 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒரே ஓவரில் போட்டி,  வெஸ்ட் இண்டீஸ் கைக்கு சென்று விட்டது. இதனால்தான் அடுத்தடுத்து  நெஹ்ரா, பும்ராவை மூன்று ஓவர்களுக்கு  தோனி பயன்படுத்தினார். இந்த மூன்று ஓவரில் 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர் இவ்விருவரும்.

ஒருவேளை யுவராஜ் அணியில் இருந்திருந்தால், இந்திய அணிக்கு பந்துவீச்சில் முக்கிய ஆயுதமாக ஒருவேளை இருந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இடது கை பந்துவீச்சாளரான யுவராஜ் பந்தை தட்டையான ஆடுகளங்களில் கூட ஸ்லோவாக வீசி பந்தை திருப்பும் ஆற்றல் கொண்டவர். இதனால் விக்கெட்டுகள் விழுந்திருக்ககூடும். கோலி- யுவராஜ் பந்துவீச்சு கூட்டணி மேஜிக் நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் தோனிக்கு எந்த ஆப்ஷனுமே இல்லாமல் போனது. அதனால் கடைசி இரண்டு ஓவர்களை  வீசுவதற்கு   லெக் ஸ்பின் வீசும் ஜடேஜா, கோலியை தேர்ந்தெடுத்தார்  தோனி. கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகளை கோலி நன்றாக வீசியது குறிப்பிடத்தக்கது. 192 ரன்களை மட்டும் வைத்து கொண்டு இந்தியா கடைசி ஓவர் வரை போராடியது ஆறுதலான விஷயம் தான்.

எமனான நோ-பால் :

அஷ்வின் நோ-பால் வீசுவது அரிதிலும் அரிதான நிகழ்வு. அஷ்வின் ஓவரில் விழுந்த ஒரே விக்கெட்டும் நோபாலாகி போனது துரதிர்ஷ்டம். பாண்டியாவின் ஓவரிலும் நோபாலில் விக்கெட் விழுந்தது. ஜடேஜா கஷ்டப்பட்டு தட்டிவிட்டு, கோலி கேட்ச் பிடித்ததிலும் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் சிம்மன்ஸ் அவுட் ஆவதற்கு பதிலாக அவருக்கு சிக்ஸர் பரிசாக கிடைத்தது. மூன்று முறை இந்தியாவுக்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

239117.jpg

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் பெரிய பேட்டிங் வரிசையும், வலுவான ஹிட்டர்களும் இருக்கிறார்கள். அணியில் ஒன்பது சிறந்த ஹிட்டர்களை வைத்துள்ள அணியிடம்தான் நாம் தோற்று போயிருக்கிறோம். தோனி தலைமையிலான இந்தியா அணி எல்லாவகையிலும் முயற்சி செய்து தான் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் மனதில் நன்மைதிப்பையே பெற்றிருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதி போட்டியில் சிறப்பாக் விளையாட நம் வாழ்த்துக்களை சொல்வோம்.

http://www.vikatan.com/news/sports/61659-reasons-why-india-lost-semi-final.art

  • தொடங்கியவர்

கரிபீயனின் களைகட்டும் கொண்டாட்டம் - அரையிறுதி வெற்றியைக் கொண்டாடும் மேற்கிந்தியத் தீவுகள்.
இந்த கோலாகலக் கொண்டாட்டத்துக்காகவே இவர்கள் எத்தனையும் வெல்லலாம்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

இரண்டு நோபால்களால்தான் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது: லெண்டில் சிம்மன்ஸ் கருத்து

 
லெண்டில் சிம்மன்ஸ் | கோப்பு படம்
லெண்டில் சிம்மன்ஸ் | கோப்பு படம்

டி 20 உலகக் கோப்பை இந்தியா வுக்கு எதிரான அரையிறுதியில் இரண்டு நோபால்களால்தான் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்ததாக மேற் கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் லெண்டில் சிம்மன்ஸ் தெரிவித்தார்.

டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரை யிறுதி ஆட்டத்தில் 18, 50 ரன் களில் ஆட்டமிழக்க வேண்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் லெண்டில் சிம்மன்ஸ் இரு நோபால்களால் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்து கிடைத்த வாய்ப்பை மேலும் சிறப்பாக பயன்படுத்தில் 51 பந்தில் 82 ரன் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

இதுதொடர்பாக லெண்டில் சிம்மன்ஸ் கூறியதாவது:

இரண்டு நோபால்கள்தான் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமைய உதவியது என்று நினைக் கிறேன். தொடக்க வீரரான சார்லஸ் முதலில் நெருக் கடியை குறைத்தார். சூழ் நிலையை நன்கு அறிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடி பவுண்டரிகள் அடித்தார்.

பேட்டிங்கில் நான் களமிறங் கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனெனில் இலக்கை துரத்துவதற்காக நாங்கள் திட்டம் அமைத்திருந்தோம். இந்த நாள் எனது நாளாக அமைந்திருந்தது. அதிர்ஷ்டமும் என் பக்கம் இருந்தது. அதன் வழியே சென்று நான் விரும்பிய ஆட்டத்தை விளையாடினேன்.

எங்கள் அணி தனிப்பட்ட எந்த ஒரு வீரரின் ஆட்டத்தையும் சார்ந்ததில்லை. கிறிஸ் கெய்லுக்கு ஆட்டம் சிறப்பாக அமையாத போதும் ஆட்டத்தின் போக்கை நிர்வகித்து வெற்றி கண்டுள்ளோம். பெரிய இலக்கை நோக்கி துரத்தும் போது கெய்ல் ஆட்டமிழந்தாலும் போராடி வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது. அந்த வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர்.

இறுதிப்போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானம் இதே போன்று பேட்டிங்கிற்கு சாதக மாக இருக்காது. அங்கு வித்தியா சமான சூழ்நிலை இருக்கும். ஐபிஎல் தொடர்தான் என்னை சிறந்த வீரராக மேம்பட செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வான்கடே மைதானத்தில் அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ள தால் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்திருந்தேன். இது சிறப்பாக செயல்பட உதவியது.

இவ்வாறு சிம்மன்ஸ் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8425846.ece

  • தொடங்கியவர்

சுழற்பந்து வீச்சில் நோபாலை ஏற்க முடியாது: சுனில் கவாஸ்கர் ஆதங்கம்

 

 
சுனில் கவாஸ்கர். | கோப்புப் படம்.
சுனில் கவாஸ்கர். | கோப்புப் படம்.

டி 20 உலகக் கோப்பை அரையிறுதியில் முக்கியமான கட்டத்தில் நோபால்கள் வீசிய இந்திய பந்து வீச்சாளர்களை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், சுழற்பந்து வீச்சாளர் நோபால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே நோபால் வீசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வேகப்பந்து வீச்சா ளர்கள் யார்க்கர் அல்லது பவுன்சர் வீசும் போது சில சமயங் களில் நோபாலாக மாறக்கூடும். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் நோபால் வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால் வலை பயிற்சியில் ஏதோ பிரச்சினை உள்ளது என்றே அர்த்தம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தனிப்பட்ட ஒரு வீரரை சார்ந்த அணி கிடையாது. நாம் கெய்லையும், விராட் கோலியை மட்டுமே ஒப்பிட்டு பேசினோம். ஆனால் கெய்ல் ரன் குவிக்கவில்லை. ஆனால் மற்ற வீரர்கள் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். கிரிக்கெட் எப்போது ஒரு குழு விளையாட்டு.

நாம் ஒன்று அல்லது இரு வீரர்களை மட்டுமே உயர்த்தி பேசுகிறோம். ஆனால் கிரிக்கெட் என்பது தனிப்பட்ட ஒரு வீரரின் ஆட்டம் கிடையாது, இதை மேற்கிந்தியத் தீவுகள் அணி நிருபித்துள்ளது.

வெற்றியின் பெருமை மேற் கிந்தியத் தீவுகள் அணிக்கே சேரும். கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். பேட்டிங்கில் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினர்.

இந்திய அணி 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். கூடுதலாக 20 ரன்கள் சேர்ப்பது என்பது சாத்தியமான விஷயம்தான். நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் சிறந்த பேட்டிங் வரிசை, ரன்குவிப்புக்கான சிறந்த ஆடுகளம் அமைந்த நிலையில் ஓவருக்கு 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது எதிர்பார்க்காத ஒன்று தான். நல்ல பார்மில் வீரர்கள் இருக்கும் நிலையில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8425915.ece

  • தொடங்கியவர்

ஷாகித் அப்ரிடிக்கு ஒன்றும் புரியவில்லை: அணி மேலாளர் இன்டிகாப் ஆலம் குற்றச்சாட்டு

 

 
படம்: எஸ்.சுப்பிரமணியம்.
படம்: எஸ்.சுப்பிரமணியம்.

உலகக்கோப்பை டி20 மற்றும் ஆசியக் கோப்பை டி20 தொடர்களில் பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு கேப்டன் அப்ரிடியே காரணம் என்று அணி மேலாளர் இன்டிகாப் ஆலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

களத்திலும் களத்திற்கு வெளியேயும் அப்ரிடியின் உத்திகள், அணுகுமுறைகளே அணியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை டி20 தொடரில் நம் அணியில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே போதாமைகள் வெளிப்பட்டன, பீல்டிங்கில் ரன்களை கோட்டை விட்டு எதிரணியினரின் அழுத்தத்தை குறைத்து விடுகின்றனர். மொகமது ஆமிர் தவிர பந்து வீச்சில் ஒன்றுமில்லை. முடிவு ஓவர்களின் பந்து வீச்சும் சராசரிக்கும் கீழ்நிலையில் உள்ளது. பேட்டிங்கிலும் ‘பிஞ்ச் ஹிட்டர்கள்’ இல்லை பவர் ஹிட்டர்கள் இல்லை.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தொடர் இந்தியாவில் நடைபெற்றது அணி வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. நமது கேப்டன் கடைசி தொடரை ஆடுகிறார் என்பது ஒருபுறமிருக்க 20 ஆண்டுகள் அனுபவமிக்க அவரது கேப்டன்சியில் அவருக்கு எந்தவித புரிதலும் இல்லை என்பதாகவே அவரது கள உத்தியும், களத்திற்கு வெளியேயான் உத்திகளும் காணப்பட்டது.

மேலும் 2 தேவையற்ற சச்சரவுகளினால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது, முதலில் ஷாகித் அப்ரிடி ‘இந்தியாவில் பாகிஸ்தானை விட பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் நேசிக்கப்படுகின்றனர்’ என்று பேசியது, 2-வதாக உமர் அக்மல் தன்னை 3-ம் நிலையில் களமிறக்க இம்ரான் கான் உதவியை நாடியது, ஆனால் 4-ம் நிலையிலேயே தனது திறமைக்கேற்ப ஆடவில்லை என்பதே எதார்த்தம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்வுகளும் நமக்கு எதிராக சதி செய்தன. வானிலையும் நமக்கு சாதகமாக இல்லை. மழை பெய்து பிட்சை ஸ்பின் ஆட்டக்களமாக மாற்றி விட்டது, இதற்கு முன்பாக பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது.

அணியின் உத்வேகத்தைக் கூட்ட இம்ரான் கானை அழைத்து ஷாகித் அப்ரிடி பேச வைத்தார். இம்ரானும் அணி வீரர்கள் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை போராட வேண்டும் என்று உத்வேகம் அளித்தார், இதில் தவறில்லை, ஆனால் அவரது காலத்தில் அவருடன் ஆடிய மற்ற வீரர்கள் இந்த நவீன கிரிக்கெட் பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ள அளவுக்கு இம்ரான் தன்னை புத்தாக்கம் செய்து கொள்ளவில்லை. இந்த பின்-நவீன கிரிக்கெட் ஆட்டத்தின் உத்திகள், தேவைகள் பற்றி இம்ரான் அறிந்திருக்கவில்லை என்பதால் வெறும் உத்வேகப் பேச்சு மட்டும் சரியானதாக அமையவில்லை.

மேலும் ஷோயப் மாலிக் தொடக்கத்தில் வீசும் போது பீல்ட் வியூகம் சரியல்ல என்பதை நான் உணர்ந்தேன். கள வியூகம் நெருக்கமாக அமைந்திருந்தால் அவர் விக்கெட்டை வீழ்த்தியிருக்கக் கூடும் என்றே நான் கருதுகிறேன். குறைந்த ரன்கள் போட்டியில் தாக்குதல் பீல்டிங் வியூகமே சரியான உத்தியாகும். முதலில் ஸ்லிப் இல்லை, பிறகு ஷோயப் மாலிக்கிற்கு ஸ்லிப் நிறுத்தினார். யுவராஜ் அதற்கு முன்பாக இரண்டு பந்துகளை அப்பகுதியில் எட்ஜ் செய்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷாகித் அப்ரிடி தன்னை முன்னால் களமிறக்கிக் கொண்டார், ஆனால் மொகமது ஹபீஸையே களமிறக்கியிருக்க வேண்டும். விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமதுவுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்திய ஸ்பின் பவுலிங்கை ஷோயப் மாலிக் தவிர ஒருவரும் எதிர்த்து ஆடவில்லை, இதனால் கடைசியில் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம்.

எனவே ஒட்டுமொத்தமாக நமது அணித்தேர்வு முறையை மாற்ற வேண்டும் வீரரை நீக்குவது, பிறகு எடுப்பது, பிறகு நீக்குவது என்ற அணுகுமுறை சரியல்ல.

கண்டிப்பான தேர்வு அளவுகோல்களை நாம் கடைபிடிப்பது அவசியம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8426382.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தோல்வியே காட்ட அணிபோலவும் பிட்ச் சரியில்லாதால் தோற்றோம் டொஸ் விழாதால் தோற்றோம் என்பது ஆடத்தெரியாதவள் அரங்கம் கோணல்என்றாளாம் என்றகதையாக இருக்கிறது. வெஸ்டன் இண்டீசுக்கு ஜே!!!!!!!!!! 

  • தொடங்கியவர்

டி20 உலக கிண்ணம் யாருக்கு?

டி20 உலக கிண்ணம் யாருக்கு?

 

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நாளை மோத உள்ளன. 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8–ந் திகதி தொடங்கியது.

தகுதி சுற்று முடிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஓமன், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ‘சூப்பர் 10’ சுற்றுக்கு முன்னேறின.

‘சூப்பர் 10’ சுற்று ஆட்டம் கடந்த 15–ந் திகதி முதல் 28–ந் திகதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. கடந்த 30–ந் திகதி நடந்த முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், 31–ந் திகதி நடந்த 2–வது அரை இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவையும் வீழ்த்தின.

இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (3–ந் திகதி) நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து – டாரன்சேமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் எந்த அணி 2–வது முறையாக உலக கிண்ணத்தை வெல்லப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி 2010–ம் ஆண்டும், மேற்கிந்திய தீவுகள் அணி 2012–ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. வெற்றி பெறும் அணி உலககிண்ணத்தை 2–வது முறையாக கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெறும்.

இங்கிலாந்து அணியில் ஜோரூட், ஜேசன்ராய், ஹால்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், மொய்ன் அலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி ‘லீக்’ ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று இருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுத்து கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை அரை இறுதியில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. சிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அந்த அணி இங்கிலாந்தை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் கிண்ணத்தை வெல்ல முடியும் என்று நம்புகிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ்கெய்ல், சார்லஸ், லெண்டில் சிம்மன்ஸ், சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸ்சல், பிராவோ, டாரன்சேமி போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளுமே உலக கிண்ணத்தை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
  • தொடங்கியவர்

Australia and West Indies chase history in title clash - Cricket News

மகளிர் இறுதி போட்டி

மத்திய ஐரோப்பிய நேரம் 11.00 மணிக்கு

239211.jpg

மத்திய ஐரோப்பிய நேரம் 15.30 மணிக்கு

Umpires - HDPK Dharmasena and RJ Tucker
TV umpire - M Erasmus
Match referee - RS Madugalle
Reserve umpire - BNJ Oxenford

  • தொடங்கியவர்
உலக இருபது கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெற்றி குறித்து இங்கிலாந்து, மேற்கிந்திய அணித்தலைவர்கள் நம்பிக்கை
2016-04-03 10:22:07

(கொல்கத்தாவிலிருந்து நெவில் அன்தனி)

 

ஆறாவது உலக இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தில் சம்பியனாக முடியும் என தத்தமது வீரர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக இங்கிலாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கனும் மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் டெரன் சமியும் தெரிவிக்கின்றனர்.


இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் உலக இருபது 20  கிரிக்கெட்  இறுதிப் போட்டி  கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் ஞாயிறு இரவு நடைபெறவுள்ளது.


15890world-twenty-20-cricket-final-2.jpg

 

இதற்கு முன்னோடியாக விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இரண்டு தலைவர்களும் தத்தமது அணியினரால் வெற்றிக்கான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர்.


"எந்தவொரு ஆடுகளத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் அதில் புல் இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி அங்கு விளையாடக்கூடிய ஆற்றல் எமது வீரர்களிடம் இருக்கின்றது என்பதை அடித்துக்கூறுவேன். வெற்றிக்கான ஆற்றலை வெளிப்படுத்த என்ற மிதமான நம்பிக்கை அணியில் இருக்கின்றதா என இங்கிலாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவித்தார்.


எதரணி இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் தமது பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீசியது அணிக்கு தெம்மையும் நம்பிக்கையையும் ஊட்டுவதாக ஒய்ன் மோர்கன் கூறினார்.


"எதிரணி இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் எமது பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீசுவது எமக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்த மைதானம் அளவில் சிறியது. அத்துடன் நல்ல ஆடுகளமாக அமையும் எனக் கருதுகின்றேன். அது எமக்கு மிக முக்கியம். கடந்த போட்டியில் கடைசி நான்கு ஓவர்களில் (ஸ்டோக்ஸ் 2, ஜோர்டன் 2) நாங்கள் 20 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்தோம். எமது பந்துவீச்சாளர்கள் நின்று நிதானித்து சிறப்பாக செயற்பட்டனர் என நான் நினைத்தேன். பெரும்பாலான அணிகளில் கடைசிக் கட்டத்தில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.

 

கடந்த கால சம்பியன்களைத் திரும்பிப் பார்த்தால் அது தெளிவாகும். லசித் மாலிங்க போன்ற ஒருவர் உபாதைக்குள்ளானார். இதனால் என்ன நேர்ந்தது. ஒருவருமே கடைசிக் கட்டத்தில் சிறப்பாக பந்துவீசவில்லை" என்றார்.
ஆடுகளத்தில் புல் இல்லாமல் ஆடுகளத்தில் பந்து கடையுமாக இருந்தால் சுழல்பந்துவீச்சாளர் லியாம் டோசன் அறிமுக வீரராக களம் இறங்கலாம்" என ஒய்ன் மோர்கன் தெரிவித்தார்.


இந்தப் போட்டி மிகப் பெரிய போட்டியாக அமையுமே தவிர சாதாரணமானதாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


"இது மிகப் பெரிய போட்டியாக அமையும் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இது சாதாரண போட்டியல்ல. நாங்கள் அரை இறுதியில் விளையாடும்போது எம்மைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அப் போட்டியில் நாங்கள் முழுத் திறமையுடன் விளையாடினோம். எனது தேவையெல்லாம் ஒவ்வொருவரும் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகும். வெள்ளைப் பந்து கிரிக்கட் போட்டிகளில் சிறப்பாக செயற்படும் பொருட்டு நாங்கள் கடந்த 12 மாதங்களாக கடுமையாக உழைத்தோம். அது சிறந்த பலனைத் தந்துள்ளது. இப்போது வீரர்கள் மத்தியில் வெற்றி பெற முடியம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது" |என இங்கிலாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் மேலும் தெரிவித்தார்.


சுப்பர் 10 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக கேல் சதம் குவித்ததுடன் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றிருந்தது. இறுதிப் போட்டியிலும் கேல் அச்சுறுத்தலாக இருப்பாரா எனக் கேட்டபோது,


ஷஷகேல் மாத்திரம் மேற்கிந்தித் தீவுகள் அணி என்று கூறமுடியாது. சிறந்த அணிகளுடன் விளையாடும்போது ஒரிரு சிறந்த வீரர்களை மாத்திரம் நினைக்கமுடியாது. அனைவரையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த வீரராலும் மனதை நோகப்பண்ண முடியும். இந்தியாவுடனான போட்டியில் லெண்ட்ல் சிமன்ஸ் சாதித்ததை அனைவரும் கண்டு களித்தனர்|| என்றார்

.

டெரன் சமி

 

ஞாயிறன்று எமது அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமது அணிக்கு இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் டெரன் சமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


"2012இல் சம்பியனான பின்னர் நாங்கள் இங்கு வந்துள்ளோம். பங்களாதேஷில் பனிக்கட்டி மழை எங்களை வெளியேற்றியது. அதற்கு முன்னர் 2009இல் என்று நினைக்கின்றேன்... அரை இறுதியுடன் வெளியேற்றப்பட்டிருந்தோம். இவ் வகை கிரிக்கட் போட்டிகளில் நாங்கள் திறமையாக செயற்பட்டு வந்துள்ளோம். ஆனால் எமக்கு யாருமே சந்தர்ப்பம் வழங்க முன்வருவதில்லை. இவை அனைத்தும் எமது அணியை ஒன்று திரளவைத்தது. எங்களில் சிலருக்கு வயது சென்று கொண்டிருக்கின்றது. சில முக்கிய வீரர்களுக்கு இது கடைசி சந்தர்ப்பம் என்பதை நாங்கள் அறிவோம்" என அவர் கூறினார்.

 

15890world-twenty-20-cricket-final.jpg


"உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கு ஆறு அடிகள் எடுத்து வைக்கவேண்டியிருந்தது. அதில் ஐந்து அடிகளை கடந்துவிட்டோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எமது கால்கள் நீண்ட அடியை எடுத்து வைத்தன. அதற்கு முன்னர் ஒரு சறுக்கல் ஏற்பட்டது.

 

ஆனால் நாங்கள் வீறுகொண்டெழுந்தோம். இன்னும் ஒரு அடிதான் பாக்கி இருக்கின்றது. ஒரணி என்ற வகையில் நாங்கள் ஒவ்வொருவரிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒவ்வொருவரினது திறமை குறித்தும் நாங்கள் பூரிப்படைகின்நோம். எங்களால் நாளை (ஞாயிறன்று) கிண்ணத்தை சுமக்க முடியும் என நினைக்கின்றோம். அதன் பின்னர் நடக்கப்போவதை என்னால் நினைத்துப்பார்க்க முடிகின்றது. எனினும் நாங்கள் கிரிக்கட் விளையாட வந்துள்ளோம்.

 

இங்கிலாந்தை நாங்கள் வெற்றிகொண்டபோதிலும் அவ்வணி ஒரு சிறந்த அணி. அதன் பின்னர் அவர்கள் திறமையாக விளையாடி இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டு வெற்றிபெறவேண்டும் என்பதையே எப்போதும் நான் விரும்புகின்றேன். மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்று கிண்ணத்தை சுமக்கவேண்டும் என்பதே எனது தேவையாகும்|| என அவர் மேலும் குறிப்பிட்டார்.


'கோலியாத்தை டேவிட் வெற்றிகொண்டார். நீங்கள் தொடர்ந்தும் டேவிட்டா' எனக் கேட்டபோது,


"நாங்கள் எப்போதும் டேவிட்தான். டேவிட் ஒரு வெற்றியாளர். கவணைக் கொண்டு ஒரே அடியில் கோலியாத்தை வெற்றிகொண்டவர் டேவிட். நாங்கள் எப்போதும் எங்களை டேவிடாகத் தான் பார்க்கின்றோம். டேவிடைப் போன்று விளையாடுவோம். எம்மிடம் தன்னம்பிக்கை இருக்கின்றது. தன்னம்பிக்கையுடன் விளையாடி கிண்ணத்தை நாங்கள் வெல்வோம்" என்றார் டரன் சமி.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15890#sthash.iOt9r34X.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Australia Women 148/5 (20/20 ov)
West Indies Women 134/1 (17.4/20 ov)
West Indies Women require another 15 runs with 9 wickets and 14 balls remaining
  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: மேற்கிந்திய மகளிர் சாம்பியன்

இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகளிர் பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

160403113019_cricket_women_512x288_getty
 அதிரடியாக ஆண்டி 66 ஓட்டங்களைப் பெற்ற ஹேலி மேத்யூஸ்

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர்கள் ஆஸி அணியை வீழ்த்தி முதல் முறையாக இப்பட்டத்தை வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா இதற்கு முன்னர் மூன்று முறை மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் பட்டத்தை வென்றுள்ளது.

மகளிர் இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியினர் தமது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

இதில் விலானி மற்றும் லானிங் இருவரும் தலா 52 ஓட்டங்களை எடுத்தனர்.

எனினும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மகளிர் உறுதி தளராமல் ஆடி வெற்றி பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஹேலி கிறிஸ்டின் மேத்யூஸ் 59 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார். அவரும் அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரும் அணியின் தலைவியுமான ஸ்டெஃபனி டெய்லரும் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

டெய்லர் 59 ஓட்டங்களை எடுத்தார். இறுதி ஆட்டத்தில் மூன்று பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி தமது வெற்றியை பெற்றனர்.

http://www.bbc.com/tamil/sport/2016/04/160403_t20windieswomen_champs

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12891696_1216081038410990_44255636789012

12888505_1216081035077657_18302191624713

12898163_1216081031744324_23306492926697

  • தொடங்கியவர்

12890954_1216131988405895_78251973941275

12909696_1216131965072564_75472798744849

12888538_1216131961739231_37161975192720

12901002_1216132048405889_79688410909076

 

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் சாம்பியன்

 

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் வென்றுள்ளனர்.

160327112826_west_indies_512x288_getty_n
 வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்

மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் ஆடவர் இரண்டாவது முறையாக டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர்கள் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றனர்.

மிகவும் நெருக்கடியான கட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களை மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் எதிர்கொண்டனர்.

எனினும் மார்லன் சாமுவேல்ஸும், பிராத்வையிட்டும் அதிரடியாக ஆடி வெற்றியை தமது அணியின் பக்கம் திருப்பினர்.

கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில் பென் ஸ்டோகஸ் வீசிய அந்த ஓவரில் பிராத்வையிட் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

டி 20 வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் ஒரே நேரத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

முன்னதாக ஆடிய இங்கிலாந்து அணியினர் தமது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை எடுத்தனர்.

அதிகபட்சமாக ஜோ ரூட் 54 ஓட்டங்களை எடுத்தார். எனினும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மார்லன் சாமுவேல்ஸ் மட்டுமே இறுதிவரை உறுதியாக நின்று ஆடி அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார்.

http://www.bbc.com/tamil/sport/2016/04/160403_t20_finals

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.