Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

நியூசீலாந்து முதலில் துடுப்பெடுத்து ஆட உள்ளது

நியூசீலந்து அணியில் Southee, Boult, Nicholls and McClenaghan!! இல்லை இன்று.

இன்றைய நியூசீலாந்து அணி

New Zealand M Guptill, K Williamson, C Munro, C Anderson, R Taylor, G Elliott, M Santner, L Ronchi, N McCullum, A Milne, I Sodhi

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நியூசீலாந்து  35/3

  • தொடங்கியவர்

சிக்சரில் ஆரம்பித்து அடங்கிய நியூஸிலாந்து! பந்துவீச்சில் கெத்துகாட்டும் இந்தியா!

டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு. நாக்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தமட்டில் ஆசியக் கோப்பை ஃபைனலில் ஆடிய அணியே இதிலும் தொடர்கிறது.  நியூஸிலாந்து அணியில் போல்ட் மற்றும் சவுத்தி இடம்பிடிக்கவில்லை.

236895.jpg

முதல் பந்தை சிக்ஸரோடு துவங்கிய நியூஸிலாந்து அடுத்த பந்திலேயே கப்தில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 10 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை குவித்துள்ளது.  இந்திய தரப்பில் அஸ்வின், நெஹ்ரா, ரெய்னா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

 

nz%281%29.jpg

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம். ஆனால் இந்தியா ஒருமுறை கூட நியூசிலாந்தை,  ஐ.சி.சி போட்டிகளில் வீழ்த்தியதில்லை. முதல் உலகக் கோப்பையை இந்தியா வென்ற போதிலும்,  அதில் இந்தியா தோன்ற ஒரே ஆட்டம் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டுமே.

அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியும்,  பேட்டிங், பந்துவீச்சு என சமபலம் கொண்ட  நியூஸிலாந்து அணியும்  தனது டி20 உலகக் கோப்பையை வெற்றியோடு துவங்க போராடும் என்பதில் சந்தேகமிருக்காது.ஆட்டத்தின் துவக்கத்தில் நியூஸிலாந்தின் முன்னாள் வீரரான மறைந்த மார்ட்டின் க்ரோவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

http://www.vikatan.com/news/sports/60641-india-bowl-first-against-kiwis.art

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை மகளிர் டி20: இந்திய அணி வெற்றி
1924664_1902014526691615_714806330202364

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 91 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது

  • கருத்துக்கள உறவுகள்

நியூ சீலன்ட்.... 126 / 7--- 20....!

இந்தியா ....... 26 / 4 .... 4.5....!

39/4----8

  • கருத்துக்கள உறவுகள்

42/6---9.4  பாண்டியா அவுட்....!

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஜீவன் மட்டும்தான் வெல்லுறார் .tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

43/7---10.1.... ஜடேஜா கோன்...!

53/7---13

  • தொடங்கியவர்
முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 72 ஓட்டங்களால் வென்றது
2016-03-15 21:00:07

மகளிர் உலக இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி. 72 ஓட்டங்களால் வென்றது.

 

15538mithali-raj-600.jpg

இந்திய மகளிர் அணித்தலைவி மிதாலி ராஜ் துடுப்பெடுத்தாடுகிறார்



பெங்களளூரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைக் குவித்தது.


அணித்தலைவி மிதாலி ராஜ் 32 பந்துகளில் 42 ஓட்டங்களையும் ஹேர்மன்ப்ரீத் கவ்ர் 29 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில்  5 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்களையே பெற்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15538#sthash.FLAggfqO.dpuf

 

 

 

இலங்கை மகளிர் அணியை நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்களால் வென்றது
2016-03-15 22:28:30

மகளிர் உலக இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணியை நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்களால் வென்றது.

15539nz-lanka.jpg


 டில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில்  8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களைப் பெற்றது.

 

டிலானி மொனோதரா 31 பந்துகளில் 30 ஓட்டங்களையும்  யசோதா மெண்டிஸ் 30 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். சாமரி அத்தபத்து 17 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை மகளிர் அணியில் வேறு எவரும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெறவில்லை.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.


அணித்தலைவி சுஸி பேட்ஸ் 37 பந்துகளில் 37 ஓட்டங்களையும் ரஷெல் பிரீஸ்ட் 26 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15539#sthash.kuxwcblt.dpuf

நியூசீலாந்து வெற்றி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தொடரும் சோகம் சொந்த மண்ணில் கிவிக்களிடம் பணிந்தது இந்தியா!

டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு. நாக்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தமட்டில் ஆசியக் கோப்பை ஃபைனலில் ஆடிய அணியே இதிலும் தொடர்கிறது.  நியூஸிலாந்து அணியில் போல்ட் மற்றும் சவுத்தி இடம்பிடிக்கவில்லை.

236931.jpg


127 என்ற இலக்கை துரத்திய இந்தியா  79 ரன்களுக்கு சுருண்டது.இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சீட்டுக்கட்டுகளை போல இழந்தது. கோலி, தோனி தவிர யாருமே சரியாக ஆடாததால் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.  ஐசிசி போட்டிகளில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தியதே இல்லை என்ற சோகம் தொடர்கிறது. நியூஸிலாந்து தரப்பில் சான்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

236895.jpg

முதல் பந்தை சிக்ஸரோடு துவங்கிய நியூஸிலாந்து அடுத்த பந்திலேயே கப்தில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் அஸ்வின், நெஹ்ரா, ரெய்னா, பூமராஹ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.நியூஸிலாந்து தரப்பில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 34 ரன்களை குவித்தார்.
 

nz%281%29.jpg

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம். ஆனால் இந்தியா ஒருமுறை கூட நியூசிலாந்தை,  ஐ.சி.சி போட்டிகளில் வீழ்த்தியதில்லை. முதல் உலகக் கோப்பையை இந்தியா வென்ற போதிலும்,  அதில் இந்தியா தோன்ற ஒரே ஆட்டம் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டுமே.

அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியும்,  பேட்டிங், பந்துவீச்சு என சமபலம் கொண்ட  நியூஸிலாந்து அணியும்  தனது டி20 உலகக் கோப்பையை வெற்றியோடு துவங்க போராடும் என்பதில் சந்தேகமிருக்காது.ஆட்டத்தின் துவக்கத்தில் நியூஸிலாந்தின் முன்னாள் வீரரான மறைந்த மார்ட்டின் க்ரோவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

http://www.vikatan.com/news/sports/60641-india-bowl-first-against-kiwis.art

1977433_560591037436059_8835001193384760

  • தொடங்கியவர்

நாளைய போட்டிகள்

பங்களாதேஷ் vs பாகிஸ்தான்

மத்திய ஐரோப்பிய நேரம் 10.30

 

இங்கிலாந்து vs மேற்கு இந்தியத்தீவுகள்

மத்திய ஐரோப்பிய நேரம் 15.00

 

  • தொடங்கியவர்
மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்
2016-03-15 09:55:28

ஆண்­க­ளுக்­கான உலக இரு­பது கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு சமாந்­தர­மாக மக­ளி­ருக்­கான ஐந்­தா­வது ஐ.சி.சி. உலக இரு­பது 20 கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

15527_01.jpg

 

இத்­ தொ­டரில் தொடர்ச்­சி­யாக 4 ஆவது தட­வை­யாக அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி சம்­பி­ய­னா­கு­வ­தற்கு முயற்­சிக்கும் என பெரிதும் நம்­பப்­ப­டு­கின்­றது.

 

மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் குழு ஏ யில் அவுஸ்­தி­ரே­லியா, நியூஸிலாந்து, இலங்கை, தென் ஆபி­ரிக்கா, அயர்­லாந்து ஆகிய நாடு­களும் குழு பியில் பங்­க­ளாதேஷ், இந்­தியா, பாகிஸ்தான், இங்­கி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடு­களும் பங்­கு­பற்­று­கின்­றன.

 

ஆரம்ப தின­மான இன்­றைய தினம் பெங்­களூரில் இந்­தி­யாவை பங்­க­ளாதேஷ் எதிர்த்­தா­டு­வ­துடன் டெல்­லியில் இலங்­கையை நியூஸிலாந்து சந்­திக்­கின்­றது.

 

மகளிர் உலக இரு­பது 20 போட்­டி­களில் ஐந்­தா­வது அத்­தி­யா­யத்தில் தொடர்ச்­சி­யாக 29 வீராங்­க­னைகள் விளை­யா­ட­வுள்­ளனர்.

 

அவர்­களின் விபரம்:

 

மேற்­கிந்­தியத் தீவுகள்: ஸ்டெஃபானி டெய் லர், மெரிசா அகி­லெய்ரா, டியேந்த்ரா டொட் டின், ஸ்டேவி ஆன் கிங், அனிசா மொஹமத், ஷக்­கிரா செல்மான்.

 

பாகிஸ்தான்: அஸ்­மா­வியா இக்பால், பிஸ்மா மாறூவ், ஜவே­ரியா கான், நய்ன் அபேடி, சானா மிர்.

 

இங்­கி­லாந்து: சார்லட் எட்வேர்ட்ஸ், லிடியா கிறீன்வே, ஜெனி கன், சாரா டெய்லர்.

 

தென் ஆபி­ரிக்கா: மினொன் டு பிரீஸ், ட்ரிஷா செட்டி, ஷப்னிம் இஸ்­மாயில், டேன் வன் நிக்கேர்க்.

 

நியூஸிலாந்து: சுஸி பேட்ஸ், சொஃபி டிவைன், சாரா மெக்­லஷான்.

 

இலங்கை: சமரி அத்­தப்­பத்து, ஏஷானி லொக்­கு­ சூ­ரிய, உதேஷிகா ப்ரொபோதினி.

 

இந்தியா: மிதாலி ராஜ், ஜூலான் கோஸ் வாமி.

 

அவுஸ்திரேலியா: அலெக்ஸ் பிளக்வெல், எலிஸ் பெரி.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15527#sthash.kY4n3JJR.dpuf
  • தொடங்கியவர்
மெத்யூஸ் அணித் தலைவராகியமை அணிக்கு பயனுள்ளது – இலங்கை அணியின் பயிற்றுநர் கிரஹம் ஃபோர்ட்
2016-03-16 10:01:50

(கொல்­கத்­தா­வி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

இந்­தி­யாவில் நடை­பெற்­று­வரும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் வெற்­றி­பெ­று­வ­தற்கு இலங்கை அணி 40 ஓவர்­க­ளிலும் அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­து­வது அவ­சியம் என இலங்கை அணி பயிற்­றுநர் கிரஹம் ஃபோர்ட் தெரி­வித்தார்.

 

1555431.jpg

உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு அணி பயிற்றுநர் கிரஹம் ஃபோர்ட், அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், முகாமையாளர் ஜெரோம் ஜயரட்ன ஆகியோர் சோல்ட் லேக், ஜவாத் பூர் இரண்டாவது பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது....

........................................................................................................................

 

மெத்யூஸ் அணித் தலை­வ­ரா­கி­யமை அணிக்கு பய­னுள்­ள­தாக அமை­கின்­றது எனவும் கிரஹம் ஃபோர்ட் கூறினார்.

 

இலங்கை அணி­யினர் கொல்­கத்தா சோல்ட் லேக், ஜவாத்பூர் இரண்­டா­வது பல்­க­லைக்­க­ழக மைதா­னத்தில் நேற்று பயிற்­சியில் ஈடு­பட வரு­கை ­தந்­த­போது அங்கு சென்­றி­ருந்த இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

''சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகளில் சக­ல­து­றை­களிலும் பிர­கா­சிப்­பது அவ­சியம். துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு, களத் ­த­டுப்பு ஆகிய அனைத்­திலும் திறமை வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

 

போட்­டியின் முழு­மை­யான 40 ஓவர்­க­ளிலும் இந்த மூன்று துறை­க­ளிலும் எதி­ர­ணி­க­ளை­ விட சிறப்­பாக விளை­யாட முயற்­சிக்­க ­வேண்டும்'' என்றார் க்ரஹம் போர்ட்.

 

''நாளுக்கு நாள் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் தன்­மையும் அதில் நிலவும் போட்­டித்­தன்மை மாறு­பட்­டுக் ­கொண்டு போகின்­றது.

 

மற்­றைய சில அணி­க­ளுடன் ஒப்­பி­டும்­போது கடந்த ஐந்து மாதங்­களில் நாம் பின்­னி­லையில் இருக்­கின்றோம்.

 

1555406.jpgஎதி­ர­ணிகள் அனைத்­துமே சிறந்த நிலையில் இருக்­கின்­றன.

 

எனவே, இலங்கை அணி­யினர் சிறப்­பாக செயற்­ப­ட­வேண்டும்'' என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

இலங்­கையின் துடுப்­பாட்டம் குறித்து கேட்­ட­போது, ''இலங்­கையின் துடுப்­பாட்ட நிலையைப் பார்க்­கும்­போது சற்று கவலை ஏற்­ப­டு­கின்­றது.

 

எனினும் பயிற்சிப் போட்­டி­க­ளின்­போது துடுப்­பாட்­டத்தில் முன்­னேற்றம் ஏற்­பட்­டமை ஆறுதல் அளிக்­கின்­றது. அவர்கள் ஈட்­டிய ஒவ்­வொரு அனு­ப­வத்தைக் கொண்டும் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்'' என்றார் அவர்.

 

லசித் மலிங்­கவின் நிலைமை குறித்து கேட்­ட­போது, ''போட்­டி­களில் வெற்­றி­களை ஈட்­டிக்­கொ­டுக்கக் கூடிய ஒரு சிறந்த வீரர் மலிங்க. துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக கடந்த நான்கு மாதங்­களில் முக்­கிய போட்­டி­களில் விளை­யா­ட­வில்லை.

 

எனினும், மீள் வரு­கையில் அதி சிறப்­பாக பந்­து­ வீ­சி­யி­ருந்தார். அவர் நல்ல நிலையில் இருப்பார் எனவும் திற­மையை வெளிப்­ப­டுத்­துவார் எனவும் கரு­து­கின்றேன்'' என போர்ட் பதி­ல­ளித்தார்.

 

ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் அணித் தலை­வ­ரா­னது மற்றும் முன்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் பற்றி கருத்து தெரி­வித்த கிரஹம் போர்ட், ''மெத்யூஸ் அணித் தலை­வ­ரா­கி­யமை அணிக்கு பய­னுள்­ள­தாக அமை­கின்­றது.

 

சாதா­ரண வீர­ராக விளை­யா­டி­ய­போதும் அவர் சிரேஷ்டமானவர் என்ற வகையில் தனது அனு­ப­வத்தைப் பகிர்ந்து கொண்­டி­ருந்தார். எனவே தொடரும் போட்­டி­க­ளிலும் அவர் சிறப்­பாக செயல்­ப­டுவார்.

 

''தினேஷ் சந்­திமால், லஹிரு திரி­மான்ன ஆகியோர் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சித்து வரு­கின்­றனர். இவர்கள் இரு­வரும் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக (நேற்­று­ முன்­தினம்) நடைபெற்ற பயிற்சிப் போட்­டியில் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்­தனர்.

 

தில­க­ரட்ன டில்­ஷானும் பிர­கா­சித்தால் அணிக்கு இன்னும் வலு சேர்ப்­ப­தாக அமையும். ஆசிய கிண்ண கடைசி லீக் போட்­டியில் டீல்ஷான் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தாடி கணி­ச­மான ஓட்­டங்­களைப் பெற்றார்.

 

ஆனால் அடுத்த இரண்டு பயிற்சிப் போட்­டி­களில் அவர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

 

எனினும் அவர் எதிர்­நீச்சில் போட்டு திற­மையை வெளிப்­ப­டுத்­துவார் என நம்­பு­கின்றேன்.

 

அவர் பிர­கா­சித்தால் அது அணிக்கு பயன்­த­ரு­வ­தாக அமையும். பயிற்சிப் போட்­டியில் கடைசி நான்கு ஓவர்­களில் பாகிஸ்தான் 51 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் எமது அணி 13, 14ஆவது ஓவர் ­களில் மூன்று விக்­கெட்­களை இழந்­தது. இவைதான் போட்­டியில் திருப்பு­ மு­னை­க­ளாக அமைந்­தன.

 

எனவே, வலைப்­ப­யிற்­சி­களில் கிர­மமாக ஈடு­பட்டு திற­மையை வெளிப்­ப­டுத்து முயற்­சிக்­க­வேண்டும்'' என்றார் கிரஹம் போர்ட்.

 

ஆனால், நேற்­றைய வலைப்­ப­யிற்­சி­யின்­போது இலங்­கையின் எட்டு வீரர்கள் மாத்­தி­ரமே அரங்கில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

 

இது கிரமமான பயிற்சிக்கு வழிவகுக்குமா என்பது சந்தேகமே. இதேவேளை, ஆப்கானிஸ்தானுடான நாளைய போட்டியை முன்னிட்டு இலங்கை அணி எவ்வாறான தயார் நிலையில் இருக்கின்றது என அவரிடம் கேட்டபோது, ''ஆப்கானிஸ்தானுடனான போட்டி மாத்திரமல்ல ஒவ்வொரு போட்டியும் முக்கியம்.

 

எனவே, ஒவ்வொரு போட்டியையும் நன்கு கணித்து சகலதுறைகளிலும் பிரகாசிக்க இலங்கை அணி முயற்சிக்கும்'' என பதிலளித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15554#sthash.rfkcvAn6.dpuf
  • தொடங்கியவர்

முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதல்: வெற்றியுடன் தொடங்குமா பாகிஸ்தான்?

 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள். படம்: பிடிஐ.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள். படம்: பிடிஐ.

டி 20 உலகக் கோப்பையில் சூப்பர் 10 சுற்று குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பாதுகாப்பை காரணம் காட்டி நீண்ட இழுபறிக்கு பின்னர் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. ஆசியக் கோப்பையில் இந்திய அணியிடம் மோசமாக அடைந்த தோல்வி ஒருபுறம் அமைய, கொல்கத்தா வந்திறங்கியதும், கேப்டன் அப்ரீடி, இந்திய ரசிகர்கள் தங்கள் அணி மீது செலுத்தும் அன்பை புகழ்ந்த விதம், முன்னாள் வீரர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் இந்த விவகாரத்தில் அப்ரீடி தேசத்துரோகம் இழைத்து விட்டதாக மூத்த வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஆசிய கோப் பையில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழித்தீர்க்க முயற்சிக்கும். தொடரை வெற்றி யுடன் தொடங்கும் பட்சத்தில் அப்ரீடி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வங்க தேச அணி உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தியது. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வங்க தேச தொடக்க வீரர் தமிம் இக்பால் அருமையாக விளையாடி சதம் அடித்தார். நல்ல பார்மில் உள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக் கூடும். ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல்ஹஸன் தனது கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்தார். அவர் 25 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஷாகிப் அல்ஹஸன் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் அவருக்கு உலகக் கோப் பையில் கைகொடுக்கக்கூடும். ஆசியக் கோப்பையில் தசைப் பிடிப்பு காரணமாக விலகிய இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இன்று களமிறங்குவது அணிக்கு கூடுதல் பலம்.

ஆசியக் கோப்பையில் பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன் சேர்த்து அணி வெற்றிபெற உதவிய மற்றொரு தொடக்க வீரரான சவுமியா சர்க்காரும் நல்ல பார்மில் உள்ளார்.

2009ல் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் இம்முறை வேகப்பந்து வீச்சு பலத்துடன் களமிறங்குகிறது. மொகமது அமீர், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ் ஆகிய மூன்று இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். பந்து வீச்சில் இருக்கும் வலுவானது பேட்டிங்கில் குறைந்தே காணப்படுகிறது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப் படுத்தாதது பெரிய குறையாக உள்ளது. ஆசியக் கோப்பையை தவிர சர்வதேச அளவில் அதிக அளவிலான ஆட்டங்களில் பாகிஸ் தான் அணி கலந்துகொள்ள வில்லை. பிஎஸ்எல் டி 20 லீக்கில் கிடைத்த அனுபவம் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தகுந்த பலனளிக்கவில்லை.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தாமதமாக வந்ததால் சரியான வகையில் பயிற்சிகளும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் கிடைத்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் மொகமது ஹபீஸ் 70 ரன் எடுத்தது அணியின் பேட்டிங்குக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

ஷர்ஜீல்கான், ஷோயிப் மாலிக், அகமது ஷெஸாத், உமர் அக்மல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவதை வைத்தே அணி யின் முடிவு அமையும். அப்ரீடிக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கக்கூடும் என்பதால் அவர் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக் கூடும்.

அணி விவரம்:

வங்கதேசம்:

மோர்டசா (கேப்டன்), அரபாத் சன்னி, மஹ்மதுல்லா, சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மான், அபு ஹைதர், நுருல் ஹசன், அல்-அமின் ஹொசைன், நசீர் ஹொசைன், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், தஸ்கின், அஹ்மத், மிதுன், முஸ்டாபிஜூர் ரஹ்மான்.

பாகிஸ்தான்:

அப்ரீடி (கேப்டன்),

மொகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொகமது இர்பான், ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், முகமது நவாஸ், முகம்மது சமி, காலித் லத்தீப், மொகமது அமீர், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ராம் மன்சூர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article8360085.ece

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாணவேடிக்கை காட்டுவாரா கிறிஸ் கெய்ல்: இங்கிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

 
மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். படம்: பிடிஐ.
மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். படம்: பிடிஐ.

டி 20 உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் மோது கின்றன.

உலகக்ம் முழுவதும் நடை பெறும் பல்வேறு டி 20 லீக் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களை உள்ளடக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியும், சமபலத்துடன் காணப்படும் இங்கிலாந்து அணியும் மோதும் இன்றைய ஆட்டத்தில் கடினமான போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது.

2012ல் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் உள்ளனர். அதேவேளையில் 2010ல் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாதிக்கும் முனைப்பில் துடிப்புடன் உள்ளது.

டேரன் சமி தலைமையில் களமிறங்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர்கள் வரிசை யில் டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல் நம்பிக்கை அளிக்கக்கூடிய வர்களாக உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இது 7வது முறையாகும். இதற்கு முன்னர் தலா மூன்று ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றி கண்டுள்ளன. சுழலுக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் எப்படி விளையாடுகின்றன என்பதை பொறுத்தே இன்றைய ஆட்டத்தின் முடிவு அமையக்கூடும்.

இங்கிலாந்து அணி அடில் ரஷித், மொயின் அலி, லயாம் டாவ்ஸன் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சாமுவேல் பத்ரி, சுலைமான் பென், மார்லோன் சாமுவேல்ஸ் ஆகியோர் சுழலில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பேட்டிங்கில் எந்த வகையான பந்து வீச்சையும் துவம்சம் செய்யும் கிறிஸ் கெய்ல் தொடரை இன்று வெற்றிகரமாக தொடங்க உதவக் கூடும். இங்கிலாந்து பேட்டிங்கில் கேப்டன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ள னர்.

அணி விவரம்:

மேற்கிந்தியத் தீவுகள்:

டேரன் சமி (கேப்டன்), , கிறிஸ் கெய்ல், கார்லோஸ் பிரத்வெய்ட், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல், மார்லன் சாமுவேல்ஸ், ஜான்சன் சார்லஸ், ஆந்த்ரே பிளட்சர், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ், தினேஷ் ரம்தின், சாமுவேல் பத்ரி, சுலைமான் பென்,ஜெரோம் டெய்லர்.

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் பிலிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லயாம் பிளங்கெட், ரீஸ் டாப்ளே, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், லியாம் டாவ்ஸன்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8360091.ece

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் --- பங்களாதேஷ்  ஆடுகின்றன.

பாக்கி பாட்டிங்....!

87 / 1 ---- 9.1

106/1---12.

இவங்கள் அடிக்கிற அடியைப் பார்த்தால் நடிகையைச் சந்திக்கிறதில ரெம்பத் துடிப்புடன் செயல்படுகிறது மாதிரித்தான் தெரியுது....!

  • தொடங்கியவர்

 ஸ்பின்னர்களையும் குறைத்து மதிப்பிட்டதால் தோல்வி-அலசல்

 
  • ரோஹித் சர்மாவின் அவுட்தான் சரிவைத் தொடக்கியது. | படம்: ஏ.பி.
    ரோஹித் சர்மாவின் அவுட்தான் சரிவைத் தொடக்கியது. | படம்: ஏ.பி.
  • தவானின் அலட்சியமான ஸ்வீப் மற்றும் எல்.பி. | படம்: ராய்ட்டர்ஸ்.
    தவானின் அலட்சியமான ஸ்வீப் மற்றும் எல்.பி. | படம்: ராய்ட்டர்ஸ்.

உலகக்கோப்பை டி20 தொடரை இந்திய அணி சற்றும் எதிர்பாராதவிதமாக தோல்வியில் தொடங்கியுள்ளது. தொடர் வெற்றிகளுடன் வந்த இந்திய அணிக்கு இந்தத் தோல்வி ஒரு அதிர்ச்சிப் பின்னடைவுதான்.

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தனது முன்னணி பவுலர்களான சவுதி, மெக்லினாகன், போல்ட் ஆகியோரை தேர்வு செய்யாமல், சோதி, சாண்ட்னர், நேதன் மெக்கல்லம் ஆகியோரை தேர்வு செய்தது முதலில் பார்ப்போருக்குமே ஆச்சரியமாகவே இருந்தது. அதே போல் என்ன ஸ்பின் எடுத்தாலும் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது என்று ரசிகர்கள் நம்பலாம், ஆனால் அணி வீரர்களே அப்படி நம்புவது உயர் மட்ட கிரிக்கெட்டில் சாத்தியமில்லை.

நேற்று அதுதான் இந்தியாவுக்கு நடந்தது. மேலும் இந்தப் பிட்சில் 126 ரன்கள் என்பதே கடினமான ஸ்கோராக இருக்கலாம் என்பது பற்றிய எந்த ஒரு விழிப்பும் இல்லாததாகவே இந்திய அணி ஆடியது. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், நமக்குத்தான் வெற்றி என்று அதீத நம்பிக்கையில் இந்திய அணி ஆடியதாகவே படுகிறது.

நியூஸிலாந்து அணியின் சமீப கால ஆட்டங்கள் பற்றிய உணர்வு இந்திய அணிக்கு இருந்ததா இல்லையா என்பது பற்றி நாம் எதுவும் கூற முடியவில்லை. ஆனால் அந்த அணி மிகப்பெரிய போட்டித் தொடர்களில், குறிப்பாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சவாலாகவே திகழ்ந்து வந்துள்ளது என்பதை இந்திய வீரர்கள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஷிகர் தவண் முதலில் அவர் மீது அவருக்கே இருக்கும் அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். பிட்சை அருகிலிருந்து பார்த்து விட்டு 5-வது பந்து அதுவும் ஸ்டம்புக்கு நேராக ஸ்வீப் முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு அவர் தன்னம்பிக்கை மிகுந்த பேட்ஸ்மென் இல்லை என்பதை அவருக்கு யாராவது எடுத்துக் கூறினால் நல்லது.

அதே போல் ரோஹித் சர்மா குறைவாகவே சாதித்திருந்தாலும் பேச்சு அதிகமாகியுள்ளது. மொகமது ஆமீரைத் தடவி விட்டு அவர் ஒன்றும் பெரிய பவுலர் இல்லை, சாதாரண பவுலர் என்கிறார். சாண்ட்னர் சமீபகாலமாக நியூஸிலாந்து அணிக்கு ஒரு சக்தியாக இருந்து வருவது தெரியாமல் தடதடவென இறங்கி வந்தார், பேட்டை முன்னமேயே ஸ்ட்ரோக்குக்காக கொண்டு சென்றார் பந்து நன்றாகத் திரும்பியது. பவுன்சும் இருந்ததால் விக்கெட் கீப்பர் லுக் ரோங்கி கூட தடுமாறித்தான் பந்தைச் சேகரித்து ஸ்டம்ப்டு செய்தார், ஆனால் ரோஹித் சற்று அதிகமாகவே வெளியே வந்திருந்தார்.

பிட்சில் சுழற்பந்துகள் பயங்கரமாக திரும்பும்போது உடலுக்கு நெருக்கமாக மட்டையை வைத்து, பந்து வந்தவுடன் முறையான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுவதுதான் சிறந்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மென்கள் இதற்கான பொறுமை அற்றவர்கள் என்பதை விட, இதற்கான உத்திகளை மறந்து விட்டனர் என்பதே சாலப்பொருந்தும், புனேயில் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களத்திலும் சாதாரண இலங்கையின் ஸ்விங் பவுலிங்கைக் கூட ஆடத் திராணியில்லாமல் தோல்வி தழுவினர்.

ரெய்னாவும் பிட்சின் தன்மை அறியாமல் பந்துகள் திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டையை ஊருக்கு முன்னாலேயே தன் இஷ்டத்துக்குத் திருப்பி முன் விளிம்பில் பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். யுவராஜ் சிங்கும் அதே போல்தான் மெக்கல்லமின் பந்திற்கு தவறான உத்தியைக் கடைபிடித்து பந்து மெக்கல்லமே கேட்ச் ஆனது.

விராட் கோலி 27 பந்துகளுக்கு தன்னை உத்தி ரீதியாக சரியாக வைத்துக் கொண்டார், ஒரே நம்பிக்கை அவர்தான் எனும்போது லெக்ஸ்பின்னர் சோதி அவரது ஒழுங்கைக் குலைத்தார். கோலியை தனது உடலுக்கு விலகி வருமாறு ஒரு டிரைவை ஆடுமாறு செய்து, ஒரு பந்தை வீசி திருப்ப எட்ஜ் ஆனது. 39/5 என்று ஆனது இந்திய அணி. ஹர்திக் பாண்டியாவுக்கு ஒன்றும் புரியவில்லை, ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் போது பந்து உள்ளே வரும் என்பதைக் கூட கணிக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஜடேஜாவும் தனது மட்டையை முன்னமேயே பந்தைத் திருப்ப கொண்டு சென்றதால் விளிம்பில் பட்டு சோதியிடமே கேட்ச் ஆனது. அஸ்வினுக்கு சோதி வீசியது அற்புதமான பந்து ஸ்டம்ப்டு ஆனார், இவரும் நடந்து வந்து ஆட முயன்றார்.

தோனி 30 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில் எதிர் முனையில் விக்கெட்டுகளைத் தூக்கி கொடுத்து சென்ற பேட்ஸ்மென்களைக் கண்டு கடுப்பாகிவிட்டார் போலும். நேதன் மெக்கல்லம்மை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தார். நெஹ்ரா கடைசியில் அதிவேக பவுலரான மில்ன பந்துக்கு ஒதுங்கிக் கொண்டு பவுல்டு ஆனது இந்திய பேட்டிங்கின் தலைகுனிவின் குறியீடாக அமைந்தது.

முதலில் அணியை மாற்றாமல் 10, 15 போட்டிகளுக்கு ஆடுவதை தோனி மறுபரிசீலனை செய்ய வேண்டும், நிச்சயம் யுவராஜ் அல்லது ரெய்னாவுக்குப் பதில் மணீஷ் பாண்டே உள்ளே வர வேண்டும், அதே போல் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் ரத்தங்களை உள்ளே கொண்டு வர வேண்டும்.

ஏனெனில் இப்போதைக்கு இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் அதீத நம்பிக்கையில் ஆடி வருகின்றனர், இதனால் அவர்களது அணுகுமுறைகளில் திமிர் தலைதூக்குவதை உணர முடிகிறது.

அதனால்தான் அவ்வப்போது அணியிலிருந்து நீக்கி, உட்கார வைத்து சில வீரர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் அளிப்பது அவசியம். இதனை கங்குலி செய்தார். சச்சின் டெண்டுல்கரையே 4-ம் நிலையில் களமிறங்க வலியுறுத்தினார். தோனி அது போன்ற ஒரு கடினமான அணுகுமுறையைக் கையாளவில்லையெனில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்.

மொத்தத்தில் பிட்சின் தன்மையையும், நியூஸிலாந்து பவுலர்களையும் அலட்சியமாகக் கருதிய அணுகுமுறையின் தோல்வியே இது.

இனி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வேண்டும், பாகிஸ்தானை எப்போதும் வென்று விட முடியும் என்று நாம் கருத முடியாது, எனவே தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வி தழுவியுள்ளது இந்திய அணிக்கு இந்தத் தொடரில் மேலும் விஷயங்களை கடினமாக்கியுள்ளது.

மேலும் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் தட்டுத்தடுமாறி ஜெயிப்பது அல்லது தோல்வியடைவது எந்த வித கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாக இல்லை.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/article8360710.ece

  • கருத்துக்கள உறவுகள்

163/3---- 16.4. பிரிலியன்ட் கட்ச்.

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் 201/5

பங்களாதேஷ் 26/1  4 overs

Group 2

  Team              
Last updated 15 March 2016 at 17:19
1 New Zealand 1 1 0 0 0 2.35 2.0
2 Australia 0 0 0 0 0 0.00 0.0
3 Bangladesh 0 0 0 0 0 0.00 0.0
4 Pakistan 0 0 0 0 0 0.00 0.0
5 India 1 0 1 0 0 -2.35 0.0

http://www.bbc.com/sport/cricket/world-twenty20/table

  • கருத்துக்கள உறவுகள்

44/2....5.5.

  • தொடங்கியவர்

மத்தியூஸின் பாட்டன் மரணம்

March 16, 2016

17angelo-mathews-1-1403199447

இலங்கை அணியின் தலைவரான மத்தியூஸின் பாட்டனார் நேற்றுச் மரணமடைந்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் ரி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்கு மத்தியூஸ் தலைமைதாங்கி வருகிறார்.

இந்த நிலையில் அவரது பாட்டனார் மரணமடைந்துள்ளார். ஆனால் மத்தியூஸ் உலகக் கிண்ணத் தொடருக்கான அணியை வழி நடத்துவதுக்காக, இலங்கைக்கு திரும்பாமல் தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=10692

  • கருத்துக்கள உறவுகள்

58/3....8. அப்ரிடி போலிங்...!

71/4...10.2.

கூக்லி போலிங் பற்றி ஒரு சிறு காணொலி போட முடியுமா நவீன்...!

  • கருத்துக்கள உறவுகள்

117/6....17.4.

146/6....20. மாட்ச் ஓவர். பாகிஸ்தான் வெற்றி. மோர் டீடெய்ல் கிவ்விங் நவீனன்...!! tw_blush:

Group 2

  Team              
Last updated 16 March 2016 at 13:17
1 Pakistan 1 1 0 0 0 2.75 2.0
2 New Zealand 1 1 0 0 0 2.35 2.0
3 Australia 0 0 0 0 0 0.00 0.0
4 India 1 0 1 0 0 -2.35 0.0
5 Bangladesh 1 0 1 0 0 -2.75 0.0

http://www.bbc.com/sport/cricket/world-twenty20/table

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.