Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா?

Featured Replies

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா?

 

நீண்டகாலமாகப் பதவியிலிருந்த அமெரிக்க உச்சநீதிமன்ற பழமைவாத நீதிபதி, ஆண்டொனின் ஸ்கேலியா, மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட கட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்திருக்கிறது.

160214022942_scalia_judge_640x360_afp_no
 காலமான பழமைவாத நீதிபதி ஸ்கேலியா

 

நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார்.

79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

( அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இறக்கும் வரை பதவியில் இருக்கலாம் என்பது அமெரிக்க சட்டம்).

இறந்த நீதிபதிக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ஒபாமா, அவருக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இது அவரது எதிர்க்கட்சியான, குடியரசுக் கட்சியின் எதிர்ப்பைத் தூண்டியிருக்கிறது.

புதிய நீதிபதியை நியமிக்க தனக்கும், அவரை விசாரித்து , அவரது நியமனத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த செனட்டுக்கும் ஏராளமான கால அவகாசம் இருப்பதாக ஒபாமா கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னோட்டமான பிரதான கட்சிகளின் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வுக்கான கட்சி 'பிரைமரிகள்' நடந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், இந்த நீதிபதியின் மறைவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 11 மாதங்களுக்குக் குறைவான காலத்தையே கொண்டிருக்கும் அதிபர் ஒபாமா , உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிப்பதை எப்பாடுபட்டாவது தடுக்க அமெரிக்க செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியினர் திட்டமிடுவார்கள்.

உச்சநீதிமன்றத்தில் இருக்கும் மொத்தம் ஒன்பது நீதிபதிகளில் தற்போது நான்குபேர் தாராளவாதக் கொள்கைகளை உடையவர்கள். நான்கு பேர் பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டிருப்பவர்கள். ( ஐந்தாவது பழமைவாத நீதிபதி, தற்போது இறந்த ஸ்கேலியா). எனவே தற்போது காலியாகும் ஒரு இடத்தை ஒரு தாராளவாதக் கொள்கையுடையவரை நியமித்து நிரப்பினால், உச்சநீதிமன்றம், அமெரிக்காவின் பெரும் சமூகப் பிரச்சனைகளில் சற்று மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

ஒபாமாவின் தேர்வு ஒரு தமிழரா?

160214065410_srisrinivasanus_judge_624x3

 ஸ்ரீ ஸ்ரீநிவாசன்

அடுத்த நீதிபதி நியமனம் குறித்து வாஷிங்டனில் வரும் வாரங்களில் பெரும் முயற்சிகள் நடக்கலாம்.

உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் மாகாண சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதிகளிலிருந்தே பெரும்பாலும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகள் பிரேரிக்கப்படுவது வழக்கம்.

இந்த முறையை ஒபாமா இப்போதும் பின் பற்றினால், நீதிபதியாக பிரேரிக்கப்படவிருக்கும் பெயர்களில் இந்தியாவில் பிறந்த தமிழரான, ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரும் ஒன்று.

ஸ்ரீகாந்த் அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். கடந்த 2013ம் ஆண்டில் அவர் கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் இவர்.

http://www.bbc.com/tamil/global/2016/02/160214_usjudgescalia?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

வாஷிங்டனை ஆளப்போகும் நெல்லைத் தமிழரின் பின்னணி என்ன?

 

மெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த 9 பேரில் ஒருவர், அண்மையில் இறந்து விட, அந்த இடத்தில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படவுள்ளார். இதில் 5 பேர் பழமைவாத கொள்கையுடையவர்கள்.  4 பேர் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.  இறந்து போன ஆண்டோனின் ஸ்கோலியா முற்போக்கு சிந்தனை கொண்டவர். அவரைப் போலவே சிந்தனை கொண்ட ஸ்ரீநிவாசன், ஒபாமாவின் சாய்சாக இருக்கிறார்.

was.jpg

அமெரிக்காவில் கொலம்பியாவில் உள்ள அப்பீல்ஸ் நீதிமன்றத்தில் தற்போது 48 வயது ஸ்ரீநிவாசன் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாக கருதப்படும் இங்கிருந்துதான்  அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கம். எனவே ஸ்ரீநிவாசனுக்குதான்  வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதுவும் அதிபர் பரிந்துரைத்து விட்டால் செனட் சபை அதனை நிராகரித்து விட முடியாது. ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். எனவே ஸ்ரீனிவாசனின் நியமனம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவேத் தெரிகிறது.

ஒபாமா தனது பதவி காலத்தில்  ஏற்கனவே 2 உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவியில் அமர்த்தி விட்டார். தற்போது ஸ்ரீநிவாசனை  3வது உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பரிந்துரைக்கிறார்.  அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிக்கு ஓய்வு வயது வரம்பு கிடையாது. ஆயுட் காலம் முழுவதும் பணியில் இருக்கலாம்.

ஸ்ரீநிவாசனின் பூர்வீகம், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரம் ஆகும். ஸ்ரீனிவாசனின் தந்தையான பத்மநாபன் ஸ்ரீகாந்த், மேல திருவேங்கடநாதபுரத்தில் பிறந்து வளர்ந்தவர்.  பணிநிமித்தமாக பஞ்சாப் மாநிலம் சண்டிகாருக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. சண்டிகாரில்தான் ஸ்ரீநிவாசன் பிறந்துள்ளார்.

கணித பேராசிரியரான இவரது தந்தை பத்மநாபனுக்கு கன்சாஸ் சிட்டி பல்கலையில் பணி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குடும்பம் அமெரிக்கா சென்று குடியேறியது. இவரது தாயார் சரோஜாவும் இதே பல்கலைக்கழகத்தில்தான் கணிணித் துறை பேராசிரியராக பணியாற்றினார். ஸ்ரீநிவாசன் ஸ்டான்போர்ட் பல்கலையில் சட்ட படிப்பு படித்தார்.

கடந்த 1995ஆம் ஆண்டு ஸ்டேன்போர்ட் ஸ்கூல் ஆப் பிசினசில்  மேற்படிப்பு படித்தார். ஹார்வர்ட் பல்கலையிலும் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு. அமெரிக்க அரசின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனராலாகவும் இருந்துள்ளார். ஸ்ரீநிவாசன் சிறந்த கூடைப்பந்து வீரரும் கூட. இவருக்கு  இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

http://www.vikatan.com/news/world/59144-srinivasan-replace-justice-antonin-scalia.art

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் வைஸ்ணவர் போல உள்ளது.நான் நினைக்கிறேன் இவர் தமிழை விட சம்ஸ்கிரதம்,ஹிந்தி போன்ற பாசை நன்றாக கதைப்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா தமிழ்பெயர் வைச்சிருக்கிறவனெல்லாம் தமிழனாக முடியாது. தமிழே தெரியாத தமிழ் வாசனையே இல்லாத  நபர்களையெல்லாம் தமிழன் எண்டு தலையிலை தூக்கி வைச்சு ஆடக்கூடாது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா நீதிபதியை நிர்ணயித்தால் ....
அதை காங்கிரஸ் புறக்கணிக்கும் 

வரும் கார்த்திகை தேர்தலில் வெல்பவரே நீதிபதியை தேர்வு செய்யாலம் 
என்கிறது காங்கிரஸ்.

அந்த இழுபறியே ஒரு முடிவில்லாம இருக்கு 

இதுக்குள்ள இவருக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு திரியுது ஒரு கூட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.