Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை! வடக்கு முதலமைச்சர் -உரிமையை கொடுத்தால் சேர்ந்தே வாழலாம்

Featured Replies

சமஷ்டி உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை! வடக்கு முதலமைச்சர் -உரிமையை கொடுத்தால் சேர்ந்தே வாழலாம்

 
சமஷ்டி உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை! வடக்கு முதலமைச்சர்  -உரிமையை கொடுத்தால் சேர்ந்தே வாழலாம்
 
 
சமஸ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்துசெல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். 
 
கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்துசெல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
 
வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமை நாட்டை துண்டாடும் செயல் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து வடக்கு முதல்வர் கருத்து வெளியிட்டுள்ளார். 
 
எங்கெல்லாம் சமஸ்டி உள்ளதோ அங்கெல்லாம் மக்கள் பிரிந்துசெல்லவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்கொட்டலாந்து மற்றும் சுவிசலாந்து முதலிய நாடுகளிலும் இந்த முறை காணப்படுவதாக தெரிவித்தார். 
 
இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையை கொடுத்தால் பிரிந்துவிடுவார்கள் என்றொரு கருத்து உள்ளதாக கூறிய அவர் சிறுபான்மை மக்களின் உரிமையை கொடுத்துபர் பாருங்கள் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரும் முடிந்தவரை சிங்களத்தை கனியவைக்க முயல்கிறார். ஆனால் சமஸ்டியை ஆலகாலவிடமாக முன்னிறுத்தி அரசியல் செய்த சிங்களக்கட்சிகளே முதலில் சமஸ்டியென்றால் ஒன்றும் விடமல்ல என்று புரியவைக்க வேண்டும். இல்லை பிரிவினைதானென சொல்லும் துணிவும் வேண்டும். சமஸ்டியால் விளையக்கூடிய நன்மைகளை தெளிவுபடுத்துவதோடு எப்படி இராணுவத்துக்குப் பரபரப்பாகச் சிங்களப்பெருந்தேசிய வெறியூட்டிப் படைநடத்தினீர்களோ அதைவிட வேகமாக அரசியற்படைநடாத்துவதே இணக்கமுயற்சிகளை வலுவாக்கும். இப்போதும் சிங்களவர்வசமே செயற்பாட்டு நகர்வு தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 முதல்வர் ஒரு விளக்கம் கொடுத்தால், இனவாதிகள் பல விளக்கம் கொடுப்பார்கள். மெய்யை விட, பொய்தான் பலரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. காரணம் பொய்க்குத்தான் கவர்ச்சி  அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.