Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹர்த்தாலை பூரணமாக அனுஷ்டிக்குமாறு கோருகின்றார் அமைச்சர் டெனீஸ்வரன்!

Featured Replies

ஹர்த்தாலை பூரணமாக அனுஷ்டிக்குமாறு கோருகின்றார் அமைச்சர் டெனீஸ்வரன்!
 
 
ஹர்த்தாலை பூரணமாக அனுஷ்டிக்குமாறு கோருகின்றார் அமைச்சர் டெனீஸ்வரன்!
கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நாளைய தினம் வடமாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்டிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன்.
 
மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 
கடந்த காலங்களில் குறிப்பாக புங்குடுதீவில் இதே போன்று சம்பவம் நடைபெற்று ஒரு மாணவியை இழந்து நிற்கின்றோம். அதேபோன்று சம்பவம் தற்போது வவுனியாவிலும் நடைபெற்றுள்ளது.
 
அத்தகைய காமுகர்களுக்கு சட்டத்தில் இருக்கின்ற அதிக பட்ச தண்டனையினை பெற்று கொடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை  விரைவுபடுத்துமாறு நாளைய தினம் (24.02.2016) நடைபெற இருக்கும் ஹர்த்தாலை விழிப்புணர்வோடு மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஏனெனில் கடந்த காலங்களில் பொது அமைப்புக்களாலும் மக்களாலும் நடாத்தபட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் திசைமாறி சென்று, நீதி கேட்க சென்ற எல்லோரும் இறுதியில் சட்ட முரணான செயலில் ஈடுபட்டு தற்பொழுது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
எமது இலக்கு கொடூரமான இச்செயற்பாடுகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கு சரியாக  வழிநடாத்தப்படாமையினால் திசை மாறி இருக்கின்றது.
 
எனவே அன்பான பொது மக்களே ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் இந்த சாத்வீகப் போராட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
 
ஆகவே எம் சிறுமிகளை பாதுகாக்க வேண்டுமெனில் பொது மக்கள் பொறுப்புடனும், விழிப்புணர்வுடனும் செயற்பட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு பாடுபட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்து நிற்கின்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா.. சிங்கள இராணுவமும்.. பொலிஸும் உள்ள வரை.. உது நிற்காது. இது இன அழிப்பின் தொடர் அங்கம். முன்னர் கூண்டோடு அழித்தது.. இது சிறுகச் சிறுக அழிப்பது.

மைத்திரி நல்லாட்சியில் இது எத்தனையாவது சம்பவம். அவரும் எனி நடக்காது நடக்காது என்று பசப்பிட்டு போயிடுறார்.. ஆனால் நடக்குது எல்லாம்.

இந்த மாணவி வன்புணர்வுப் படுகொலை என்பது புங்குடுதீவு மாணவி அளவுக்கு ஊடகப் பிரசித்தம் இல்லாததால்.. மைத்திரி.. மடங்கிட்டார்.. கொழும்போடு. 

நாளை ஒரு அறிக்கை விடக்கூடும்.. ஒரு பின்னாள் சொறீலங்கா சனாதிபதை நாடு இழந்துவிட்டது என்று. சிங்களவன் வார்த்தைகளால் தமிழரை மயக்கலாம் என்று நினைக்க வெளிகிட்டான். குளிர் விட்டுப் போட்டு அவ்வளவு தான். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இது செய்தியில் இருக்கு ...
அடுத்து ஊர் செய்தில் மட்டுமே இருக்கும் 
பின்பு சாதாரணம் ஆகிவிடும்.

புலிகள் கடும்போக்கனவர்கள் என்று சாடுபவர்கள் 
ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகள் இருந்த போது இப்படி ஏதாவது நடந்ததா?
ஏன் / யார் புலிகளை கடும்போக்காக மாற்றியது ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.