Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா மாணவி பாலியல் தாக்குதல், கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

Featured Replies

வவுனியா மாணவி பாலியல் தாக்குதல், கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

வவுனியாவில் ஹரிஸ்ணவி என்ற 13 வயது மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது இனந்தெரியாதவர்களினால் பாலியல் குற்றம் புரியப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் கிளிநொச்சி நகரங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

160223152725_vavuniastudentrapedemo_512x
வவுனியா ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் கோரினார்கள்.

வவுனியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏ9 நெடுஞ்சாலையை மறித்து வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்து சாலை மறியலும் நடத்தப்பட்டது,

வவுனியா பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் மதியம் ஒரு மணி நேரம் வகுப்புக்களைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளைப் புறக்கணித்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பினர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தனர்.

வவுனியா மன்னார் வீதி காமினி மகாவித்தியாலயத்திற்கு எதிரில் இருந்து ஆரம்பமாகிய கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி கச்சேரி வாசலில் சென்று ஏ9 நெடுஞ்சலையில் சாலை மறிப்புப் போராட்டத்துடன் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் கையளிக்கப்பட்டது.

முகஜரைப் பெற்றுக்கொண்ட வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நடத்தி வருவதாகவும், கூறினார்.

இத்தகைய சம்பவங்கள் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சமூகக் குற்றங்களைத் தடுப்பதற்குப் பொதுமக்களும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்பின் முக்கியஸதர்கள் மற்றும் வவனியா மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160223_vavuniagirl

 

கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு முழுவதும் நாளை ஹர்த்தால்! விவசாய சங்கமும் முழு ஆதரவு!

கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நாளைய தினம்  யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தும் முற்றாக நிறுத்தி ஹர்த்தால் அனுஸ்டிக்கிறோம். எனக்கோரி துண்டுப்பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளது.

 

குறித்த மாணவியின் படுகொலையை கண்டித்து நாளைய தினம் ஹர்த்தாலுக்கு வியாபாரிகள் சங்கமும் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில் நாளைய தினம் வடமாகாணம் முழுவதுமான முழுநேர ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், மற்றும் பொதுஅமைப்புக்கள் என்பன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

    1456218400_agriculture1.jpg                                           

http://onlineuthayan.com/news/9323

                                              

  • கருத்துக்கள உறவுகள்

12734236_1101919756524793_64267471230126

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.