Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயாகத் தந்தையாக…

Featured Replies

தாயாகத் தந்தையாக…
சேர்மனியில் பிரதானமான நகரங்களில் ஒன்று பிராங்போட் மெயின்ஸ். அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் தனத்தின் நண்பரின் திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதற்கு வந்திருந்தான். திருமணத் தம்பதியினருடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, நின்றபோது, மேடைக்கு முன்னிருந்த அனைவரினது கண்களும் அவனையும் அவன் பிள்ளைகளையும் உற்று நோக்கின.
புகைப்படம் எடுந்து முடிந்தபின் தனம் தனது பிள்ளைகளை அணைத்துக் கூட்டிச் சென்று, முன்பிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். அப்போது அங்கே வந்த ஒருவர் "இவர்கள் என்ன இரட்டைப் பிள்ளைகளா"  என வினாவினார்.
தனம்   "ஓமோம்..." என்றான்
"இரட்டைப் பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாப் பிறப்பது அதிஸ்டம்தான்… இவையளின்ரை அம்மா எங்க? வேலைக்கா? "என்றார்
" இல்லை… வரவில்லை…. "
தொடர்ந்து அங்கே இருந்தால் பலபேரின் கேள்விக்கு உள்ளாகலாம் என நினைத்த தனம், அங்கிருந்து வெளியேறினான்.
அப்போது அவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் அலைபோல் மனதில் ஆர்ப்பரித்தன.
அவன் பிராங்போட் நகருக்கு அண்மையில் உள்ள சிறியநகரம் ஒன்றின் அலுவலகத்தில் பிரதான உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தான். மதியச் சாப்பாட்டுக்கு அருகில் உள்ள உணவகத்துக்குச் சென்று உணவருந்துவது வழக்கம். அங்கே தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருவதைக் கண்டபோது அவருடன் பேச வேண்டுமென்ற எண்ணம் தலைதூக்க அப்பெண்ணுக்கு அருகில் சென்று, அவளுடன் பேசித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். பின்னர் அடிக்கடி சந்தித்துப் பேசத் தொடங்கினார்கள்.
ஒருநாள் ஏதோ வேலை விடயமாக தனம் உணவருந்த வரவில்லை.
வருவார் வருவார் என எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் வராதது ஏமாற்றமாக இருந்தது.
மறுநாள் தனம் வந்தபோது, அவள் அவனருகில் சென்று  "நேற்று நீங்கள் வராதது எனக்கு மகிழ்ச்சியைத் தொலைத்த மாதிரி இருந்தது " என்றாள்.
" ஏன் அப்படி? "
 " இல்லை… இங்க… எந்தத் தமிழ் ஆட்களும் வாறதில்லை. நான் இருக்கிற இடத்திலும் தமிழ் ஆட்கள் இல்லை… உங்களைக் காணும்போது ஒரு பேச்சுத் துணை வந்த சந்தோசம்… அதனால்தான். நீங்க வராதது… ஒரு மாதிரி இருந்துச்சு…"
" அதென்ன ஒருமாதிரி… என்றவன், எனக்கும் அப்படித் தான்… " எனக் கூறினான்.
"மெய்யாவா!"
 " மெய்யாகத்தான்."
இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள்.
ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது   " வீட்டைபோனால் உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு? " எனத் தனம் கேட்டான்.
" ரிவி, இன்ரெநெற், ஸ்கைப், ரெலிபோன்…என பொழுதுபோகுது."
" அப்படியானால் ஒருநாளைக்கு நாங்க எங்கேயாவது சந்தித்து ஆறுதலாகப் பேசலாமே…"
" நல்லது… ஆனால் லீவு எடுக்கிறதுதான்…"
"ஏன் உங்களுக்கு லீவு இல்லையா?"
 " இருக்கு… கேட்கவேணும்… உங்களுக்கு எப்ப லீவு?"
" எனக்கு… சனி ஞாயிறு லீவுதான். சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்வன். ஞாயிறு… அங்கை இங்கையென்று….. ஓய்வுதான்… சிறிது நேரம் அவன் யோசித்தபின் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்...  ஞாயிற்றுக்கிழமை லீவு எடுங்கள்… வேறை எங்காவது ஒரு இடத்துக்குப் போயிருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆறுலலாகப் பேசலாம்…"
" முயற்சி செய்கிறன்… "
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
தனம் லீவைப் பற்றிக் கேட்டான்.
அவள்  "ஒருமாதிரி ஞாயிற்றுக்கிழமை எடுத்திருக்கிறன்."
" நல்லது. அப்ப… நீங்கள் எத்தனை மணிக்கு வருவீங்கள்?"
"  அடிக்கடி கள் பாவிக்கிறீங்க… "
" நான் கள்ளுப் பாவிக்கிறதில்லை… "
" நான் அந்தக் கள்ளைச் சொல்லவில்லை… "நீங்கள் என்று விகுதியிலை வாறத்தைச் சொன்னனான்."
" அப்படியா..? அப்ப பேரைச் சொல்லுங்களன்.".
" சுதாஜினி…. "
 "நல்ல பெயர்… சுதாஜினி. நீங்கள்…"
"   ம்ம்… பிறகும் கள்ளா? " என்று அவள் கூறி, அவன் கூற வந்த வார்த்தையை தடுத்து விட்டாள்.
அவன் அதைக் கைவிட்டு, " கள்ளா என்று என்னையா…" என்றான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவனும் சிரித்தான்.
இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.
எங்கே எப்போது சந்திப்பதென்று இருவரும்; தீர்மானித்துக் கொண்டதுடன் தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
மறுநாள் சுதாஜினி அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.
அவள் மனம் படபடத்தது.
சிறிது நேரம் தாமதமாக அவன் வந்தான். வரும்போதே,  "மன்னிக்கவும் சுதாஜினி. வழியில வாகன நெரிசல் ஏற்பட்டுப்போச்சு."  என்றான்.
அவள் பொய்க் கோபம் காட்டித் தலையை ஆட்டினாள்.
காரின் முன் கதவைத் திறந்து  "  ஏறுங்க…"  என்று கூறிய பின், " முதலில் வலது காலை வைச்சு ஏறுங்க… " என்றான்.
அவள் சிரித்தபடியே  " எல்லாம் என்ரை கால்தான் " எனக் கூறிக்கொண்டு, காரின் முன்பக்கம் ஏறி, அவனுக்கருகில் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் பிரபலமான ஒரு உணவகத்துக்குச் சென்றார்கள். .
தனம் '"உங்களுக்கு விருப்பமான சாப்பாட்டுக்குச் சொல்லுங்க…" என்றான்.
 "எனக்கு என்னெண்டாலும் பிரச்சினையில்லை… நீங்க சொல்லுங்க... "
" இல்லை நீங்க சொல்லுங்க… நீங்கதான் முதலில் சொல்ல வேண்டும்... பன்மையில பேசாதீங்க…"
 "சரி…. எதைச் சொல்ல…"
பேச்சில் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையிலே குறிப்பிட்டார்கள்.
இருவரும் ஒரே உணவுக்கு சொன்னார்கள்.
உணவு வந்தது. இருவரும் உரையாடியபடியே சாப்பிட்டார்கள்.
உணவிற்கான கட்டணத்தை அவனே கொடுத்தான். பின்னர் இருவரும் ஒரு ஆற்றங்கரைக்குச் சென்று அதன் அருகில் அமர்ந்திருந்து பேசினார்கள். இவ்வாறு இருவரும் தொடர்ந்து சந்திக்க, சந்திக்க இருவரிடையேயும் மிக நெருக்கம் ஏற்பட்டு அது அவர்கள் உள்ளங்களில் காதலாக மலர்ந்தது.
ஒருநாள் ஒரு குளக்கரையிலே அமர்ந்திருந்து, அங்குள்ள நீர்பறவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, இரண்டு வெள்ளை அன்னங்கள் சோடியாக நீந்தி வந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். சுதாஜினி அன்னத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசினாள்.
அவன் சிரித்தான். பின்னர் அவன்  " நானும் திருமணம் செய்யலாம் என யோசிக்கிறன்…"  என்றான்.
" யாரை …? "  அவன் முகத்தைப் பார்த்தாள்.
அதற்கு அவன் பதில் கூறவில்லை.
மீண்டும் கேட்டாள். "யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள்?"
" நாளைக்குச் சந்திக்கும்போது கூறுகிறன்."
மாலை வேளை குளிர்காற்று மெல்ல வீசியது. இருவரும் எழுந்து சென்றார்கள்.
இரவு முழுதும் சுதாஜினிக்கு, யாரைத் திருமணம் செய்யப் போகிறார்? என்பதே கேள்வியாக இருந்தது.
மறுநாள் காலை தனத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி எடுத்தாள்.
" என்ன நீங்க இன்றைக்கு வேலைக்குப் பொகவில்லையா? " என்றான்.
" கொஞ்சம் தலையிடியாக இருந்தது…. அதனால போகவில்லை…"
 " அப்ப உங்களைப் பின்னேரம் சந்திக்கிறன்…"
"  ஓ சந்திப்பம்…. நேற்றுச் சந்தித்த இடத்தில் ….  "அங்கே அன்னம் பார்க்கலாம்… வாறன்…"
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
அவள் மௌனமாக இருந்தாள்.
"என்ன நீங்கதான் சந்திக்கலாம் எனக் கூறினீங்க… இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
" நேற்று இரவு ஒரே தலையிடி… அதுதான் ஒரு மாதிரி இருக்கு… பேசிக்கொண்டிருந்திட்டு திடீரெனவும் புறப்பட்டிட்டம். "
" எட… அதுதானா… விசயம். நான் கலியாணம் செய்யப்போவதாகக் கூறினதை பற்றி யோசிச்சிற்றீங்களா?"
" இல்லை… இல்லை… யாரைச் செய்யப் போகிறீங்க என்பதை அறியலாம் என்றுதான்…"

" ஒரு பெண்பிள்ளையைத்தான்… அறிஞ்சா உதவி செய்வீங்களா?"
" அறிந்த ஒருவர். தெரிந்த ஒருவர். செய்வன்தானே. " அவள் பதிலில் சோகம் இழையோடி இருந்தது.
அவள் முகத்தை அவன் பார்த்தான். அவளும் அதைப் பார்த்தாள்.  " யாரென்று அறிய ஆசைப்படுகிறீங்க… நானும் இன்று கூறுவதாகத்தானே சொன்னனான். யாரையும் இல்லை. உங்களைத்தான்…"
"என்ன என்னையா?"|
"என் மனத்தில் தோன்றியதைக் கேட்டன்… பிழையென்றால் மன்னியுங்கள். "
அவள் மௌனமாக இருந்தாள்.
" உடனடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்று இல்லை. யோசித்துச் சொல்லுங்க… "
அவள் சிறிது நேரம் குனிந்தபடியே மௌனமாக இருந்தாள்.
குளத்தில் நீர் பறவைகள் சோடியாகவும் கூட்டமாகவும் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த தனம் " நீங்கள் காட்டிய அன்னம் சோடியாக வருகுது.. "என்றான்.
தலை நிமிர்ந்து அதனைப் பார்த்தாள். அவள் பார்த்ததையிட்டு அவன் சிரித்தான். அங்கே அன்னமில்லை.
அவள் அவனைப் பார்த்தாள்.
" என்ன கோபமா? நான் கேட்டதில் பிழையிருந்தால் மன்னியுங்கோ என்றும் சொல்லிப்போட்டன். யோசிச்சுச் சொல்லுங்க எண்டும் சொல்லிப்போட்டன். அப்படியிருந்தும் நீங்க பேசாமல் இருக்கிறீங்க… அது எனக்கு உள்ளார தேனையாக இருக்கு… போவம்"  என்றான்.
"இல்லை இல்லை இருப்பம்…"
"ம்ம்ம் என்று மூஞ்சியை நீட்டிக்கொண்டா?"
" ஏன் நான் மூஞ்சியை நீட்டிக்கொண்டா இருக்கிறன். மூஞ்சி ஒரே மாதிரித்தான் இருக்கு.

பார்த்தான். " இப்ப அழகாத்தான் இருக்கு…"
"இதுக்கு முந்தி அழகு இல்லையா?"
"அப்படி நான் சொல்லவில்லையே…அன்பாககப் பழகிறீங்க.. அழகா இருக்கிறீங்க.. அறிவா இருக்கிறீங்க… அன்னியோன்னியமாகப் பேசிறீங்க… நல்ல நட்பாக இருக்கிறீங்க.. வேலை செய்யிறீங்க… அதனாலதான் உங்களை எனக்குப் பிடித்தது. திருமணம் செய்யலாமா எண்டு கேட்டன். கேட்டதற்கே இப்படி?"
"உண்மையாகத்தான் கேட்டனீங்களா?"|
" இதென்ன கதையுங்க….. உண்மையாகக் கேட்;காமல்… இப்பவும் கேட்கிறன். உண்மையாகத்தான் கேட்கிறன்."
அவள் மௌனமாக இருந்தாள்.
"என்ன மௌனம்? என்னோடை பேசிறீங்க, பழகிறீங்க, இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
இபபொழுதும் அவள் தலைகுனிந்து மௌமாக இருந்தாள்.
"மௌமாக இருக்கிறீங்க… மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று நான் எடுக்கலாமா?"
தலையசைத்தாள். குனிந்தாள். அவன் தன் கரம் கொடுக்க அதைப் பற்றி அவள் எழுந்தாள.; அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டாள். சினிமாக் காட்சியில் வருவதுபோல் இருவர் மனமும் உடலும் வானத்தில் மகிழ்வடன் சிறகடித்துப் பறந்தன. .
இருவரும் கை கோர்த்தபடி ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று கோப்பி அருந்தியபின் வீட்டுக்குச் சென்றார்கள்.
சில மாதங்களின் பின் திருமணம் நடைபெற்றது. இருவரும் சுவிஸ், கோலண்ட் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்கள். வேலைக்குச் சென்றார்கள். தனம் தன் வேலை நேரம் முடிந்தபின்
சுதாஜினி வேலை செய்த இடத்தி;குச் சென்று அவளை அழைத்து வருவது வழக்கமாக இருந்தது.
புதிய வீடு எடுத்தார்கள். புதிய தளம்பாடங்கள் போட்டார்கள். நண்பர்களை அழைத்தார்கள். விருந்துபசாம் செய்தார்கள். திருமண முதலாண்டு நிறைவையும் மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
சுதாஜினி வேலை செய்த இடத்தில் புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது, சுதாஜினியின் வேலை மாலை நேரமாக மாற்றப்பட்டது. இவ் வேலை நேர மாற்றம் தனத்துக்கு பிடிக்கவில்லை. அதனால் வேலையை விடும்படி கூறினான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
வேலைநேர மாற்றத்தினால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் மிகக் குறைவாக இருந்தது. தனம் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவள் வீட்டில் இல்லாதது தனத்துக்கு உள்ளாறக் கவலையை ஏற்படுத்தியது.
அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு தொலைபேசி எடுத்தாலும் மனைவியுடன் பேச முடிவதில்லை. அந் நேரங்களில் அவள் தொலைபேசி, ஸ்கைப்,, முகநூல் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். இதனால் பல புதிய நண்பர்களின் தொடர்பும் அவளுக்குக் கிடைத்தது. ஆனால் கணவனின் தொடர்பு குறைந்தது.
"  நான் ரெலிபோன் எடுக்கிற நேரங்களில் யாரோடை கதைக்கிறாய்… ஏதாவது அவசரமென்றாலும் தொடர்பு கொள்ள முடியாம இருக்கு…"  என்று அவன் ஒருநாள் கோபமாகப் பேசினான்.
அதைக் கேட்டு அவள், அவன்மேல் சீறி விழுந்தாள். இச் செயல் தனத்துக்க மேலும் கவலையை அதிகரித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் சுதாஜினி தாய் தகப்பனைப் பார்க்க இந்தியா செல்ல வேண்டுமென்று தனத்திடம் கூறினாள்.
அவன் யோசித்தான். அதன் பின் போய் வர ஒழுங்க செய்வதாகக் கூறி அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டான். விமான நிலையத்திற்கு சென்று அவளை வழியனுப்பி வைத்தான்.
மூன்று கிழமைகளின்பின் அவள் திரும்பி வந்தாள். தனம் விமான நிலையத்திற்கு சென்று அவளை அழைத்து வந்தான்.
வீட:டுக்கு வந்தவள் யாருக்கோ தொலைபேசி எடுத்து பேசினாள்.
"வீட:டுக்கு வந்து ஆறுதலாக இருக்கக்கூட இல்லை. அதுக்குள்ள ரெலிபோன்… யாரோடை பேசுகிறாய்…?"
" நான் யார்… யாரோடை பேசுகிறன் என்று எல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். " எனக் கூறி, சுதாஜினி சத்தம் போட்டாள்.
தனம் மௌனமாக இருந்தான்.
இதிலிருந்து இருவருக்கும் முறுகல் நிலை தோன்றி, படிப்படியாக அதிகரித்தது. அதனால் சில வேளைகளில் தனம் தன் நண்பர்கள் வீடடில் தங்கும் நிலை ஏற்பட, சுதாஜினி வீட்டில் தனிமையில் இருக்கும் நிலை தோன்றியது,
பாவம் என்ன செய்கிறாளோ.. என எண்ணித் தனம் வீட்டுக்கு செல்லும் வேளைகளிலும் அவள் தொலைபேசியிலோ, ஸ்கைப்பிலோ மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பாள். இச்செயல் தனத்துக்கு மேலும் சினத்தைத் தூண்டுவதாகவே இருந்ததுடன், இருவருக்குமிடையே முரண்பாடுகளை மேலும் படிப்படியாக வளர்த்த வண்ணமாகவே இருந்தது.
எத்தனையோ பெண்களை இச் செய்தித் தொடர்புகள்தான் கெடுத்துள்ளன. என யோசித்த தனம் மனைவியைக் கண்டித்தான்.
ஆனால் அவள் கேட்கவில்லை. கோபம் கொண்டாள். "எங்களை அடக்கியாள நினைக்காதையுங்கோ…" என்று ஆவேசமாகக் கத்தி, " இப்படியானல் இருவரும் சேர்ந்த வாழ்வது கஸ்டம் " என்றம் கூறினாள்.
தனம் மௌனமாக இருந்தான்.
மீண்டும் அவள் " நாளைக்கே இதற்கு ஒரு முடிவெடுகிறன் " எனக் கூறினாள். அதற்கமைய சட்டத்தரணி ஒருவரை நாடினாள். அவளின் முறைப்பாடு கோடு வரை சென்றது.
நீதிபதி விவாகரத்துக்கு ஒருவருடம் அவகாசம் கொடுத்தார்.
அவள் வேறு இடத்துக்கு சென்று தங்கினாள்.
இக்காலத்தில் சுதாஜினியின் உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வைத்தியரை நாடினாள். உடல் பரிசோதனையின் போது அவள் கற்பமடைந்துள்ளதாகத் தெரியவந்தது. அதனைக் கலைக்க வைத்தியரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
ஒன்றும் செய்யமுடியாத நிலை. அடிக்கடி வைத்தியப் பராமரிப்புக்கு செல்ல வேண்டி வந்தது.
ஒருமுறை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது தனத்துக்க தெரிந்த ஒருவர் அங்கு சென்றதால் அச் செய்தி தனத்துக்க வந்தது.
தனம் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவளை நலம் விசாரித்தான்.
அவள் நடந்ததைக் கூறி, " குழந்தை பிறந்தால் இரண்டு குழந்தைகளையும் நான் வளர்க்க முடியாது. ஆண் பிள்ளையை நான் வளர்க்கிறன்… பெண் பிள்ளையை உனக்குத் தாறன்… " என்றாள். .
அவன் " எனக்குப் பிரச்சினை இல்லை… இரண்டையும் என்னட்டைத் தந்தாலும் நான் வளர்க்கிறன் " | என்றான்.
உரிய மாதத்தில் குழந்தை பிறந்தது. பெண் பிள்ளையை அவனிடம் ஒப்படைத்தாள். ஆண்பிளையை தான் வளர்த்தாள்.
இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு இடங்களில் வளர்ந்தன.
மூன்று வருடங்கள் சென்றன. சுதாஜினியின் மனநிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முகநூல் மூலம் தொடர்பு கொண்ட ஒருவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது காதலாகக் கனிந்தது. திருமணம் செய்வதானால் குழந்தையை ஏற்க முடியாது என அவன் திடட்வட்டாகக் கூறிவிட்டான். அதனால் தனத்தின் தொலைபேசி இலக்கத்தை தேடிப் பெற்று, அவனுக்கு தொலைபேசி எடுத்தாள்.
" சுதாஜினி பேசுகிறன் "
" என்ன திடீரென்று… சுகமாக இருக்கிறாயா? மகன் எப்படி இருக்கிறார்?"
"அவன் விடயமாகத்தான் பேச வேண்டியுள்ளது. ".
" சொல்லுங்க பிரச்சினை இல்லை…"
"அவனையும் நீங்க வளருங்கோ… அதற்கான உரிமையைச் சட்டப்படி எடுத்துத் தாறன்."
" ஏன்? வளர்க்கிற ஆசை விட்டுப்போச்சா? "
" நான் வேறொருவரைத் திருமணம் செய்யப் போகிறன். அவருக்கு குழந்தையுடன் திருமைணம் செய்ய விருப்பம் இல்லை.. அதுதான்…"
" எனக்குப் பிரச்சினையில்லை…"
இரண்டு குழந்தைகளையும் தாய் தந்தையாக வளர்த்தான்.
"அப்பா… வீடு வந்திற்று நிப்பாட்டுங்கோ.."  என்று மகள் உரத்துக் கூற, அவன் சிந்தனையும் தடைப்பட்டது. காரும் நின்றது.
யாவும் கற்பனை
மணியம்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லாயிருக்கு செம்பகன் tw_thumbsup: ஆனால் யாவும் கற்பனை என்பது பொய் :grin:

  • தொடங்கியவர்

நன்றி குமாரசாiமி அவர்களே! உண்மையும் கொஞ்சம்... இருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி...!

அத்தனையும் தாவுமடி.. அன்பு மீனாட்சி..!

ஆயிரத்தில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி...?

 

இது ஒரு தமிழ்ப் படத்துப் பாடல்!

 

உங்கள் கதையில் பட்டாம் பூச்சி மலர் தாவவில்லை!

மலரே தாவுகின்றது!

 

வாசிக்க மிகவும் கவலையாக இருந்தது... போதாக் குறைக்கு.. 'உண்மை' கலந்திருக்கலாம் என்றும் சொல்கின்றீர்கள்!

தொடர்ந்து எழுதுங்கள்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி புங்கையூரான்... இப்போது வண்டுகளை  நாடி மலர்கள்தான் தாவுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இது பெண்களிடம் தாய்மையின் கனிவு அருகி வருவதைக் கோடிட்டுக் காட்டுகின்றது....!

பகிர்வுக்கு நன்றி செம்பகன்....!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை மனதை தொட்டது . வழமையாக மனைவியை அடிமைபடுத்தி அடக்கி பிறகு விட்டுட்டு போற ஆண்கள் தான் அதிகம் . ஆனா இங்க ஒரு பெண் செய்திருக்கிறா. ஆச்சரியமாக இருக்கிறது . ஆனால் பெற்ற பிள்ளையை தன் நலனுக்காக விட்டுக்கொடுப்பது என்பது எப்படி என்பதை என்னால நம்ப முடியுது இல்லை . மிக அழகாக அவர்கள் காதல் மலர்ந்த விதத்தை விபரித்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.