Jump to content

சிம்பிளான... மோர் குழம்பு


Recommended Posts

பதியப்பட்டது
சிம்பிளான... மோர் குழம்பு
 
Simple Mor Kuzhambu Recipe
 
 மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
தேவையான பொருட்கள்:
 
மோர் - 1 கப்
 
தேங்காய் - 1/2 கப்
 
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
 
சீரகம் - 1 டீஸ்பூன்
 
பச்சை மிளகாய் - 1
 
கடுகு - 1 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
கறிவேப்பிலை - சிறிது
 
மிளகாய் - 1
 
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
 
செய்முறை:
 
முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லித், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/simple-mor-kuzhambu-recipe-010583.html
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்து பார்த்தேன் நல்லாய் இருக்கு....! தேங்காய்ப் பூ கடிபடுகுது. பூவைப் பிழிந்து முதல் பால் விட்டுச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். காரத்துக்காக கொஞ்சம் மிளகும் போட்டிருந்தேன்...!!  tw_blush:

Posted
6 hours ago, suvy said:

செய்து பார்த்தேன் நல்லாய் இருக்கு....! தேங்காய்ப் பூ கடிபடுகுது. பூவைப் பிழிந்து முதல் பால் விட்டுச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். காரத்துக்காக கொஞ்சம் மிளகும் போட்டிருந்தேன்...!!  tw_blush:

நன்றி சுவி அண்ணா..:) உண்மையில் செய்து பார்தீர்கள் என்னும்போது சந்தோசமாக இருக்கு.

ஆனால் இந்த சமையல் பதிவை இணைத்தபோது நினைத்தேன்... நீங்கள் இதை மோர் சொதி என்று எழுதுவீர்கள் என்று..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோர் இங்கே இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோர் குழம்பு நாளை செய்து பார்க்கப்போகின்றேன்.....நன்றி நவீனன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

b07dd906d6c90400271d52a760b8ed24.png

Posted
2 hours ago, ரதி said:

மோர் இங்கே இருக்கா?

butter milk என்று இருக்கும் கடைகளில் பாருங்கோ அது தான் மோர்

ING-buttermilk-2_sql.jpg

yogurt என்றால்  தயிர்

3 hours ago, நவீனன் said:

நன்றி சுவி அண்ணா..:) உண்மையில் செய்து பார்தீர்கள் என்னும்போது சந்தோசமாக இருக்கு.

ஆனால் இந்த சமையல் பதிவை இணைத்தபோது நினைத்தேன்... நீங்கள் இதை மோர் சொதி என்று எழுதுவீர்கள் என்று..

 

சொதி தான் குழம்பு அல்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிராமணாளின் மோர்க் குழம்பு இப்படித்தான் இருக்கும்....!

சொதிக்கு மோர் விடுவதில்லை. சின்ன வெங்காயம், பச்சை மிளகாயுடன் வெறும் பால்தான்....!

Posted
13 hours ago, ரதி said:

மோர் இங்கே இருக்கா?

மோர்... மோர்... மோர்... :)  இப்படியும் கிடைக்கும்..

https://www.ocado.com/productImages/223/22382011_0_640x640.jpg?identifier=610eb6dba730f96ad07dcc8d4ed3251b

http://images.woolworthsstatic.co.za/Ayrshire-Cultured-Buttermilk-500ml-20011727.jpg?o=K2D1ebHhQ9WivCemaTvdqQqlL0gj&V=VttO&

10 hours ago, suvy said:

பிராமணாளின் மோர்க் குழம்பு இப்படித்தான் இருக்கும்....!

சொதிக்கு மோர் விடுவதில்லை. சின்ன வெங்காயம், பச்சை மிளகாயுடன் வெறும் பால்தான்....!

விளக்கத்திற்கு நன்றி அண்ணா..:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடியல்ல butter milk என்டால் மோர் என்று தெரியும்.ஆனால் இதை ஒரு கடைகளிலும் நான் கண்டதாக ஞாபகம் இல்லை...உதை குடித்தால் வயிற்றால போகாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3 March 2016 at 8:36 PM, ரதி said:

முடியல்ல butter milk என்டால் மோர் என்று தெரியும்.ஆனால் இதை ஒரு கடைகளிலும் நான் கண்டதாக ஞாபகம் இல்லை...உதை குடித்தால் வயிற்றால போகாதா?

அக்கோய்,

உங்க Asda வில இருக்குது.

அது சரி, தயிருக்குள்ள தண்ணிய விட்டு கலந்தடித்தால் மோர்த்தண்ணி....

உங்கின பழைய ஆக்களட்ட கேட்டால் சொல்லுவினமே!

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2002-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டன. இதன் மருத்துவப் போராளிகள் "சிறப்பு மருத்துவப் போராளிகள்" எனப்பட்டார்.    
    • சிறிலங்கா வன்வளைப்பு தமிழீழ ஆட்புலத்தில் புலிகள் மேற்கொண்ட முதலாவது நடமாடும் மருத்துவ சேவை 1/10/2004     தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் சிறப்பு மருத்துவ போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது.  வைத்தியர் எழுமதி கரிகாலன் தலைமையில் 15 வைத்தியர்கள் காலை பூந்தோட்டத்தில் உள்ள அகதிகள் முகாமிலும் பின்னர் வவுனியா மகாரம்பைக்குளத்திலும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.    
    • லெப். கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் (KMMS) சிறப்பு மருத்துவப் போராளிகளால் சேவை வழங்கப்படுகிறது 12/06/2005   பாலமோட்டை, கோவில்குஞ்சுக்குளம், மாதர்பணிக்கர் மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் சுமார் 450 மாணவர்கள் முதல் நாள் வைத்திய நிலையத்திற்கு வருகை தந்தனர்.      
    • இது இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல. இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன். இவர்கள் இந்திய குடியுரிமை கோருவது…அங்கே செட்டில் ஆகி விட்டனர். பிள்ளைகள் பிறந்து அங்கே படிக்கிறனர். சுருக்கமாக இவர்கள் இந்தியர்களாக மாறி விட்டார்கள் என்பதால். பலருக்கு சட்டம் அனுமதிக்காக வீடுகளும் உண்டு (முகாமில் இருப்போருக்கு அல்ல). இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.
    • இந்த திரிக்கும் நீங்கள் எழுதிக் கொண்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?? சிலதுகளுக்கு எப்படி போட்டு அடித்தாலும் நன்றி நன்றி என்று சிரித்தபடிதான் திரியுங்கள். அதுக்கு கொஞ்சம் சூடு சுரணை வேண்டும்.  இதற்கு மேலும் எழுதி மீண்டும் எச்சரிக்கை வாங்க விரும்பவில்லை. டொட். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.