Jump to content

திருக்கை மீன் குழம்பு


Recommended Posts

பதியப்பட்டது

திருக்கை மீன் குழம்பு

தேவையானவை:
 திருக்கை மீன் - அரை கிலோ
 சின்ன வெங்காயம் - 20
 தக்காளி - 1
 பூண்டு - 30
 புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு
 நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
 வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க:
 மிளகு - 3 டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) -
4 டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - சிறிதளவு
 கல் உப்பு - தேவையான அளவு

p100.jpg

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை புளிக்கரைசலுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இதில் வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறம்மாற வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில் புளிக்கரைசல் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.

vikatan

Posted

சுவியண்ணா, ரதியைக் காணேலை இங்கால் பக்கம்... நாளைக்கு சுவியண்ணா வீட்டில் திருக்கை மீன் குழம்பாகத் தான் இருக்கும் :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு சிவராத்திரி...! இந்த இடத்தில திருக்கையும் வாங்கேலாது , உலக்கையும் வாங்கேலாது  மீனா...!

நான் ரதியை கயல் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் திருக்கைமீன் ரதி என்கிறீங்கள், அவ்வளவு விஸ்தாரமாகவா இருப்பா. ஆனால் அவவின் கருத்துக்கள் திருக்கைவாலால் அடிக்கிறதுக்குச் சமம்....!  tw_blush:

அப்பாடா காலையிலேயே தொடங்கியாச்சு.

Posted
31 minutes ago, suvy said:

நாளைக்கு சிவராத்திரி...! இந்த இடத்தில திருக்கையும் வாங்கேலாது , உலக்கையும் வாங்கேலாது  மீனா...!

நான் ரதியை கயல் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் திருக்கைமீன் ரதி என்கிறீங்கள், அவ்வளவு விஸ்தாரமாகவா இருப்பா. ஆனால் அவவின் கருத்துக்கள் திருக்கைவாலால் அடிக்கிறதுக்குச் சமம்....!  tw_blush:

அப்பாடா காலையிலேயே தொடங்கியாச்சு.


ரதி இதை பார்த்து திருக்கைவாலால் மீனாவுக்கும்,சுவிஅண்ணாவுக்கும் அடிக்கவேணும்..tw_yum:

அது ரொம்ப தேவை இங்கு...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீனா , இவர் நவீனன் தேரை இழுத்துத் தெருவில விடுகிறார்...!

ரதியை வேற காணேல்ல , திருக்கைவால் வாங்க கடை கடையாய் ஏறி இறங்குறாவோ தெரியாது.

எதற்கும் நீங்கள் திருக்கை வாலின் படத்தைப் போட்டுடாதையுங்கோ...!

Posted
11 hours ago, suvy said:

ரதியை வேற காணேல்ல , திருக்கைவால் வாங்க கடை கடையாய் ஏறி இறங்குறாவோ தெரியாது.

 

அந்த பயம் இருந்தால் காணும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திருக்கை மீனின்ட படத்தை பார்த்தால் மீன் சாப்பிட மனசு வருமா?...படத்தை இணைத்த மீனாவை திருக்கை வாலால் தான் அடிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.