Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதாம் தூக்கிலப்பட்டார் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கக் கைக்கூலி அரசினால் அவசரத்தில் தீர்ப்பு; ஆத்திரத்தில் அநீதி

பெருநாள் கொண்டாட்டங்களில் உலகம் மூழ்கியிருந்த சமயத்தில் சர்வதேசத்தையும் ஆத்திரத்திலும், எரிச்சலி லும், சோகத்திலும் ஆழ்த்தும் கெடுநாளாக அதை மாற்றி யிருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "எடுபிடியா' யாக விளங்கும் ஈராக்கின் தற்போதைய அரசு.

ஒரு புறம் உலகுக்காகப் பாடுகளைச் சுமந்த உத்தமர் இயேசுவின் பிறப்பை நினைப்பூட்டும் கிறிஸ்மஸும் அதைத் தொடர்ந்து வரும் புதுவருடப் பிறப்புமாகப் பண்டிகை நாள்கள். மறுபுறம், உலக முஸ்லிம்களின் தியா கத் திருநாளாம் ஹஜ் பெருநாள்.

இவற்றுக்கு இடையே, முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு அவசர அவசரமாக மரண தண்டனை நிறைவேற்றி உலகையே அதிர்ச்சிக்குள்ளும், ஆத்திரத்துக் குள்ளும், துயரத்துக்குள்ளும் ஆழ்த்தி யிருக்கிறது ஈராக் கின் பொம்மை அரசு.

அமெரிக்கக் கைக்கூலியாக கைப்பொம்மையாக ஏகாதிபத்திய எஜமானனின் தாளத்துக்கு ஆடும் ஈராக்கிய அரசிடமிருந்து இந்தப் போக்கு எதிர்பார்க்கப்பட்டதுதான்.

சதாம் ஹுசைன், தமது ஆட்சிக் காலத்தில் தவறிழைத் திருக்கலாம். மனித குலத்துக்கு எதிராகக் கொடூரங்களைப் புரிந்திருக்கலாம். அல்லது அவரது ஆதரவாளர்கள் கூறு கின்றமை போல அவர் நீதி, நியாயமாக நடந்து கொண்ட அரசுத் தலைவராகக் கூட இருக்கலாம்.

எது, எப்படியென்றாலும், அவர் விடயத்தில் ஈராக்கிய கைப்பொம்மை அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்ட முறைமையும், அதை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு "உலகப் பொலிஸ்காரனான' அமெரிக்கா புரிந்த ஆக்கிரமிப்பு அட்டூழியங்களும், சதாம் ஹுசை னின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து நீதியான விசார ணையை முன்னெடுப்பதற்கோ, நியாயமான தண்ட னையை விதிப்பதற்கோ, அதை செயற்படுத்துவதற்கோ உரிய தகுதியை அல்லது சட்டத் தகைமையை அவற் றுக்கு இல்லாமல் செய்து விட்டன என்பதே உலகின் பொது வான அபிப்பிராயமாகும்.

ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு தலைப்பட்சமான ஆக் கிரமிப்பு நடவடிக்கை மூலம் சதாமின் ஆட்சி கவிழ்க்கப் பட்ட நிலையில்

அரசுத் தலைவராக இருந்த சதாமைக் கைது செய்து, சிறையில் அடைத்து விட்டு, அவரது "பாத்' கட்சியைத் தடை செய்து, அடக்கி, ஒடுக்கி, அக்கட்சி மீது மக்களுக்கு உள்ள செல்வாக்குக் குறித்து ஜனநாயக வழியில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக அடைத்து மூடச் செய்து விட்டு

அமெரிக்கா நடத்திய "ஜனநாயக' நாடகத்தில் அதிகாரம் ஏறியவர்களே ஈராக்கின் இன்றைய ஆட்சியாளர்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

சதாமின் ஆட்சியில் ஜனநாயகம் மறுக்கப்பட்டது, நீதி அடைக்கப் பட்டது, சர்வாதிகாரம் கோலோச்சியது என் றெல்லாம் அமெரிக்கத் தாளத்துக்கு ஏற்ப பல்லவி பாடும் ஈராக்கின் இன்றைய ஆட்சியாளர் கள், சதாமின் "பாத்' கட் சிக்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து, அதன் மீது ஏறித்தான் தாங்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள் என்பதை மறந்து விட்டமை ஆச்சரியத்துக்குரியது.

சதாம் விடயத்தில் அவர்கள் நடத்திய நீதி விசாரணை நாடகம் ஒன்றும் சதாம் கால நீதி விசாரணைக்கு மேம் பட்டதல்ல என்பதும் உலகறிந்த உண்மைதான்.

எனவே, சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை நிறை வேற்றிய செயற்பாடு தமிழக முதல்வர் கலைஞர் கருணா நிதி கூறியிருக்கின்றமை போல ""அவசரத்தில் தீர்ப்பு; ஆத்திரத்தில் அநீதி'' என்ற அவ சர, ஆத்திர நடவடிக்கை தான். அதில் சந்தேகம் ஏதுமில்லை.

இந்த விவகாரத்தில் உலகின் கருத்தை இந்திய அரசுத் தலைமை யும் பிரதிபலித்திருக்கின்றது.

""இந்தச் சம்பவமானது மிக்க ஏமாற்றத்தைத் தந்த துரதிஷ்ட வசமான நிகழ்வு'' என்ற இந்தியாவின் அதிருப் தியே உலக மக்களின் பெரும்பான்மையினரின் மனக் குமுறலுமாகும்.

எரிபொருள் மூல வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய சொத்துக் கொண்ட நாடு ஈராக். அந்த மூலவளத்தைச் சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியவாதிகள் கூட்டாக நடத்தும் ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே சதாம் ஹுசைனின் ஆட்சி, ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் கவிழ்க்கப்பட்ட மையாகும். அதன் மற்றொரு திருப்பமாக இப்போது சதாம் ஹுசைன் கழுவேற்றப்பட்டிருக்கின்றார

  • Replies 77
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப் பழி வாங்குவோம்' சதாமின் சமாதியில் சூளுரை

* பாக்தாத்தில் தொடர் குண்டு வெடிப்புகள்

சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட அமெரிக்காவை பழிவாங்குவோமென அவரின் `கப்ரூ' வில் (சமாதியில்) அவரின் ஆதரவாளர்கள் சபதம் செய்து வரும் நிலையில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 16 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

தூக்கிலிடப்பட்ட சதாமின் உடல் அவரின் சொந்த ஊரான திக்ரித் அருகே உள்ள அவ்ஜா என்ற கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு தற்போது சதாமின் ஆதரவாளர்கள் அலை அலையாக வந்து அஞ்சலி செலத்திய வண்ணம் உள்ளனர். மிகவும் சிறிய கிராமமான அவ்ஜாவுக்கு நூற்றுக்கணக்கான சதாம் ஆதரவாளர்கள் வந்த படி உள்ளனர்.

சதாம் சமாதியில் நின்று, ஈராக் பொம்மை அரசைக் கவிழ்ப்போம், அமெரிக்காவையும் புஷ்ஷையும் பழிவாங்குவோம் என அவர்கள் சபதம் எடுத்து வருகின்றனர்.

மோசூல் நகரிலிருந்து சதாமுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஒருவர் கூறுகையில்; "கடவுளின் பெயரால் நான் கூறுகிறேன்; நிச்சயம் அமெரிக்கர்களைப் பழிவாங்குவேன், ஈரானியர்கள் சதாமைக் கொன்று விட்டனர். அமெரிக்கர்களுக்கு எதிராகவும், அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராகவும் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டம் வந்து விட்டது" என்றார் அவர்.

சதாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஈராக் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. புன்னகைத்தபடி சதாம் நிற்பது போன்ற பெரிய படம் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

சதாம் சமாதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஈராக்கில் பெரிய அளவில் இனக் கலவரம் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

சதாம் ஆதரவாளர்கள் அவரது சமாதியை நினைவிடமாகவும், தியாகத்தின் சின்னமாகவும் மாற்றி விடுவார்கள் என்பதால்தான் அவரை இரகசிய இடத்தில் வைத்து அடக்கம் செய்ய ஈராக் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தான் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டது.

சதாம் சமாதியில் நூலகம், மதப் பள்ளி;

இதற்கிடையே, சதாம் சமாதி அமைந்துள்ள இடத்தில் மதப் பள்ளி ஒன்றையும் சதாம் குறித்த நூலகம் ஒன்றையும் அமைக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

சதாமின் உறவினரான முயாத் அல்-ஹஸ்ஸா இது குறித்துக் கூறுகையில்," இந்த இடத்தை ஒரு மதப் பள்ளியாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இங்கு சதாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதப் பள்ளியும் நூலகமும் அமைக்கப்படும்.

இந்த இடத்தை நினைவிடமாக மாற்றுவோம். இதன் மூலம் சதாமுக்கு கௌரவம் கிடைக்கும்" என்றார் அவர்.

சதாம் ஹுசைன் நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் கொண்டவர். கவிதைகள், கதைகளையும் அவர் நிறைய எழுதியுள்ளார். சிறையில் இருந்த போது கூட அவர் நிறைய கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றை இந்த நூலகத்தில் வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சதாமுக்கு மிகவும் பிடித்த உலகத் தலைவர் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்டாலின் தான். அவரது வாழ்க்கை வரலாற்று நூலை அதிகம் விரும்பிப் படிப்பாராம் ஹுசைன். ஸ்டாலின் குறித்து சதாம் எழுதியுள்ளவற்றையும் இந்த நூலகத்தில் இடம் பெறச் செய்யப் போகிறார்கள்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சதாமின் தூக்குத் தண்டனையும் உலகின் பிரதிபலிப்பும்

கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசெய்னின் சடலம் வட ஈராக்கின் திக்ரித் பிராந்தியத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அவ்ஜாவில் ஞாயிறன்று அடக்கம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கத் துருப்புகளினால் கொல்லப்பட்ட மகன்மார் உதய் மற்றும் குசேயின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்திலேயே தந்தையும் புதைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சதாம் ஹுசெய்னின் புதைகுழிக்குச் சென்று அஞ்சலிப் பிரார்த்தனை செய்து வருவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அவரின் புதைகுழி `அரசியல் புனித யாத்திரைக்கான தலமாக' மாறக்கூடுமென்று ஈராக்கிய ஆட்சியாளர்கள் அஞ்சவில்லை என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகம் பூராவும் மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய அளவுக்கு இஸ்லாமிய நாடுகள் உட்பட உலக நாடுகளின் அரசாங்கங்கள் வெளிக்காட்டிய பிரதிபலிப்புகள் கடுமையானவையாக இருக்கவில்லை என்பது பெரும் வேதனையைத் தருகிறது. ஏறத்தாழ சகல அரசாங்கங்களுமே முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி மீதான தூக்குத்தண்டனை நிறைவேற்றம் குறித்து போதுமானளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி கண்டனத்தைத் தெரிவிக்கத் தயங்கியிருக்கின்றன. `துரதிர்ஷ்டவசமானது', `ஏமாற்றம் தருகிறது' என்ற பதங்களே பல அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டமை உண்மையிலேயே முழு உலக நாடுகளுமே தயக்கமேதுமின்றிக் கடுமையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டிய ஓர் அரச அட்டூழியமாகும். புராதன மனித நாகரிகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப்படுகின்ற ஈராக்கில் வன்முறைப் போக்கை இது மேலும் தீவிரப்படுத்தி நாட்டைச் சின்னாபின்னமாக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தூக்குத்தண்டனை மூலமாக, ஈராக்கில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை விலக்கிக் கொள்வதற்கான மார்க்கங்களை நாடுவதற்குப் பதிலாக, போரை மேலும் தீவிரப்படுத்தித் தொடருவதற்கான `தெளிவான சமிக்ஞையை' அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் காண்பித்திருக்கிறார். தூக்குத்தண்டனை நிறைவேற்றம் தொடர்பிலான உலகின் பிரதிபலிப்புகள் குறித்து தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடிய புஷ், சதாம் ஹுசெய்னின் மரணத்தை ஜனநாயகத்தை நோக்கிய ஈராக்கின் பயணத்தில் ஒரு மைல்கல் என்று வர்ணித்திருப்பதன் மூலம் அரசியல் நோக்குடனான கொடூரப் பழிவாங்கும் செயல்களுக்கு ஜனநாயக முத்திரை குத்தியிருக்கிறார். முன்னாள் ஈராக் ஜனாதிபதியின் மரணம் அந் நாட்டைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் முரண்பாடுகளையோ அல்லது இரத்தக் களரியையோ நிறுத்தப் போவதில்லை என்று கூறுவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி தவறவில்லை. இதன் மூலம் ஈராக்கியர்களுக்கு வெள்ளை மாளிகை காண்பித்திருக்கும் `ஜனநாயகத்துக்கான பாதை' யின் இலட்சணத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட அதேதினத்தன்று தலைநகர் பாக்தாத்தில் வீதியோரமாக வெடித்த குண்டொன்றுக்குப் பலியான அமெரிக்கப் படைவீரருடன் சேர்த்து 2003 மார்ச் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஈராக்கில் பலியான அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை சரியாக 3 ஆயிரத்தை எட்டியிருந்தது. மேலும், துருப்புகளை அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானிப்பதாக இருந்தால் கூட, இந்த அபகீர்த்திமிக்க போரிலே புஷ்ஷுக்கு மேலும் ஏமாற்றத்தைத் தரப்போகின்ற ஆக்கிரமிப்புப் பயணத்தில் மூவாயிரமாவது அமெரிக்கப் படைவீரரின் மரணம் ஒரு வித்தியாசமான `மைல்கல்' என்று சொல்ல முடியும். கடந்த இரு வருடங்களில் 2006 டிசம்பர் மாதமே அமெரிக்கப்படைகளைப் பொறுத்தவரை, படுமோசமான காலப்பகுதியாக அமைந்தது. அந்த மாதம் 111 அமெரிக்கப் படையினர் ஈராக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். `சதாம் ஹுசெய்ன் அவர்களே, நீங்கள் இல்லாத உலகம் முன்னரைவிட சிறப்பானதாக இருக்கிறது. நல்லதொரு தலை முழுகல்' என்று சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும் கூறிய புஷ், அந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற வஞ்சப் பங்களிப்பை உலகிற்கு பிரகாசமாக தனது வாயாலேயே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இன்று உலகிலே அதிகப் பெரும்பான்மையான மக்களினால் வெறுக்கப்படுகின்ற ஓர் அரசாங்கத் தலைவர் என்றால் அது புஷ்ஷைத் தவிர, வேறு யாருமாக இருக்க முடியாது. அவ்வாறு மனுக்குலத்தின் பெரும் பகுதியினால் வெறுக்கப்படுகின்ற - அருவருக்கப்படுகின்ற ஒரு அராஜகவாதி முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதியை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த கொடுங்கோலன் என்று கூறுவதையும் அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தை நோக்கிய ஈராக்கின் பயணத்தில் ஒரு மைல்கல் என்று வர்ணித்து மகிழ்வதையும் உலகம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, இத்தகையதொரு நிலைமை மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒரு மாபெரும் சவாலாகும். தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக சதாம் ஹுசெய்னின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்படும் காட்சியை குரூரத் தத்ரூபமாக தொலைக்காட்சிகளில் மனிதகுலம் பார்க்கக்கூடியதாக இருந்த நிலைமையை என்னவென்று வர்ணிப்பதென்றே எமக்குத் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடனான சர்வதேச அனுமதியளிக்கப்படும் சந்தர்ப்பத்தைத் தவிர, வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் சுயாதிபத்தியம் கொண்ட தேசம் ஒன்றுக்கு வேறு எந்த நாடுமே படைகளை அனுப்ப முடியாது என்பதே சர்வதேச சட்டம். இந்தச் சர்வதேச சட்டத்தை மீறி, உலகத்தின் அபிப்பிராயங்களையெல்லாம் துச்சமென மிதித்து 2003 மார்ச்சில் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் துருப்புகள் ஈராக்கை ஆக்கிரமித்தன. சதாம் ஹுசெய்ன் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்றும் அவரால் உலக அமைதிக்கு ஆபத்து என்றும் கூறியே புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயரும் தங்கள் படைகளை அனுப்பினார்கள். இன்று சுமார் 4 வருட கால ஆக்கிரமிப்புக்குப் பிறகு அந்த பேரழிவு ஆயுதங்கள் என்று கூறப்பட்டவற்றில் ஒன்றைத்தானும் அமெரிக்க - பிரிட்டிஷ் துருப்புகளினால் கண்டு பிடிக்க முடியவில்லை. முழு உலகிற்குமே பொய் கூறி சுயாதிபத்தியம் கொண்ட நாட்டை ஆக்கிரமித்து இன்றுவரை சுமார் 6 இலட்சம் ஈராக்கியர்கள் பலியாவதற்கு காரணமாயிருக்கும் புஷ்ஷும் பிளயரும் செய்திருக்கும் கொடுமையை என்னவென்று வர்ணிப்பது? இவர்கள் இருவரும் செய்திருப்பது மனித குலத்துக்கு எதிரான குற்றமில்லையா?

ஜனாதிபதியாக இருந்த போது சதாம் ஹுசெய்ன் ஈராக்கிய மக்களைக் கொடுமைப்படுத்தியிருக்கக் கூடும். தனது அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களையும் அரசியல் எதிரிகளையும் கொலை செய்திருக்கக் கூடும். அத்தகைய ஒரு கொடுங்கோன்மை ஆட்சியாளரை தூக்கியெறிவது என்பதும் தண்டிப்பது என்பதும் ஈராக்கிய மக்களின் உரிமை. அந்த உரிமையை அமெரிக்காவோ அல்லது அதன் ஜனாதிபதியோ தனதாக்க முடியாது. உலகில் ஆட்சியதிகாரத்தில் இருந்த அல்லது தற்போது இருக்கின்ற எந்தவொரு நாட்டினதும் தலைவர் அரசு இயந்திரத்தின் பிரதான அங்கம் என வர்ணிக்கப்படும் ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளையும் மக்களையும் கொலை செய்யவில்லை என்றோ, கொடுமைப்படுத்தவில்லை என்றோ எவராலும் கூறமுடியுமா? அரசியல் அதிகாரம் என்பது அடிப்படையில் வன்முறைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

அமெரிக்கப் படைகளினால் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் வெள்ளை மாளிகையின் பொம்மைகளாக அதிகாரத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் அரசாங்கம்தான் 1982 இல் 148 ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்த சம்பவத்துக்காக சதாம் ஹுசெய்னுக்கு எதிராக மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றஞ் சுமத்தி தூக்கிலிட்டிருக்கிறது. அமெரிக்க இராணுவத்தினால் இன்று ஈராக்கியர்கள் கொலை செய்யப்படுகின்றமைக்கு எதிராக யார் மீது `மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப்' புரிந்ததாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது?

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாம் தூக்கிலிடப்பட்ட தொலைக்காட்சி காட்சி மின்விசிறியில் தூக்கிட்டு பலியானான் பாகிஸ்தான் சிறுவன்

[03 - January - 2007] [Font Size - A - A - A] தினக்குரல்

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்ட காட்சியின் வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்த பாகிஸ்தான் சிறுவன் முபாஷர் அலி (9) ஆபத்தை உணராது மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதில் இறந்தான்.

இந்தத் துயரச் சம்பவம் பாகிஸ்தானின் ரஹீம்யர் கான் மாவட்டத்தில் சிறுவனின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெற்றோர் வேறு அறையில் இருந்த போது மற்றொரு அறையில் விளையாடிக் கொண்டிருந்த முபாஷர் அலி தனது 10 வயது சகோதரியின் உதவியுடன் மின் விசிறியில் கயிற்றை மாட்டி தூக்கிட்டுக் கொண்டுள்ளான்.

இந்தத் தகவலை பொலிஸ் வட்டாரங்கள் திங்கட்கிழமை தெரிவித்தன.

`சதாம் தூக்கிலிடப்பட்ட வீடியோக் காட்சி தொலைக்காட்சியில் பலமுறை காட்டப்பட்டது. இதனை எனது குழந்தைகள் பார்த்தனர். அதைப்பார்த்து, அதேபோன்று செய்ய முயன்றுள்ளனர். இதில் முபாஷர் அலி இறந்தான். விளையாட்டு வினையானதை உணர்ந்து அவன் கூக்குரல் எழுப்பும் சத்தம் கேட்டு நாங்கள் அந்த அறைக்குள் செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது' என்று கண்ணீர் மல்க முபாஷர் அலியின் தந்தை ஆலம்கீம் பரசா கூறினார்.

பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்று மாவட்ட பொலிஸ் உயரதிகாரி சுல்தான் அகமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க சினமா மட்டுமல்ல

அவர்கள் கொடுக்கும் தண்டனைகளும் கூட

உலகை நரகமாக்குகிறது என்பதற்கு

இதுவும் ஒரு சான்று கறுப்பி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாம் தூக்குசெல்போனில் படம் பிடித்தவர் கைது

ஜனவரி 04, 2007

பாக்தாத்: சதாம் உசேன் தூக்கில் போடப்படுவதை செல்போனில் படம் பிடித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சதாம் உசேன் கடந்த சனிக்கிழமை தூக்கில் போடப்பட்டார். அப்போது அது வீடியோவில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் பின்னர் மீடியாக்களுக்கு அரசால் வழங்கப்பட்டது. இதில் கழுத்தில் கயிற்றை போடுவது வரையிலான காட்சிகள் மட்டுமே வெளியிடப்பட்டன.

saddamlastminsgp9.jpg

ஆனால் சதாமுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அங்கிருந்தவர்களில் ஒருவர் செல்போன் கேமரா மூலம் முழுக் காட்சிகளையும் படம் பிடித்தார்.

இந்தக் காட்சிகளை பின்னர் அவர் சில தொலைக்காட்சிகளுக்கும், இணைய தளங்களுக்கும் வழங்கினார். அதில் சதாம் தூக்கில் போடப்படுவதற்கு முன்பு அங்கிருந்தவர்கள் சதாமை சரமாரியாக விமர்சித்தது, அவர்களுக்கு சதாம் பதிலளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் சதாம் இறந்த பிறகு ஒழிந்தான் சர்வாதிகாரி என்ற கோஷம் போடப்பட்டதும் இடம் பெற்றுள்ளது.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தூக்கில் போடுவது தொடர்பான சர்வதேச விதிமுறைகளை இராக் அரசு மீறி விட்டது என்றும், அமெரிக்க ராணுவம் மீது குற்றம் சாட்டியும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஆனால் இதை அமெரிக்க ராணுவம் மறுத்தது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வில்லியம் கால்டுவெல் கூறுகையில், இந்த வீடியோவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நாங்கள் சதாமை தூக்கிலிட்டிருந்தால் இதுபோல நடந்திருக்காது. முழுக்க முழுக்க இராக் அரசு சம்பந்தப்பட்ட விஷயம் இது.

காலை 5.30 மணிக்கு சதாமை ஈராக் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு எங்களது படைகள் அங்கிருந்து திரும்பி விட்டன. எங்கு சதாம் தூக்கிலிடப்பட்டார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்று 'புருடா' விட்டார் கால்டுவெல்.

இதற்கிடையே, சதாம் தூக்கிலிடப்பட்ட காட்சியை இரண்டு அரசு அதிகாரிகள் தங்களது செல்போன் மூலமாக படம் பிடித்ததாக தண்டனை நிறைவேற்றப்பட்டபோது உடன் இருந்த மங்கீத் அல் பரூன் என்ற வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆனால் அறைக்கு வெளியே இருந்த பாதுகாவலர்கள்தான் சதாமை நோக்கி கோஷமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை செய்த இராக் அரசு தற்போது பாதுகாவலர் ஒருவரைக் கைது செய்துள்ளது. இவர் மூலமாக செல்போன் படம் வெளியே போனதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

http://thatstamil.oneindia.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறன் நீ அழுகிறமாதிரி அழு. :D

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் சிறுபான்மையினரின் போரட்டங்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கிய ஒருஇரானுவ அதிகாரி . குருடிஷ்மக்கள்,சியாமக்கள் ஆகியோரின் மதவழிபாட்டை தடை செய்த புண்ணியவான். அவரின் மரணத்துக்கு கவலை படுகிறது இன்னுமோரு புலத்து சிறுபான்மை வர்க்கம்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சதாம் சிறுபான்மையினரின் போரட்டங்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கிய ஒருஇரானுவ அதிகாரி . குருடிஷ்மக்கள்,சியாமக்கள் ஆகியோரின் மதவழிபாட்டை தடை செய்த புண்ணியவான். அவரின் மரணத்துக்கு கவலை படுகிறது இன்னுமோரு புலத்து சிறுபான்மை வர்க்கம்.......

இல்லை,இல்லை ஒரு காலத்தில் குர்திஷ் இன மக்களுக்கு நிறைய உதவி செய்தவர்தான் சதாம்.ஆனால் அவர் நிலை மாறியதற்கு காரணம் குர்திஷ் இன ஒரு சில அரசியல் வாதிகளே***********காக்கை வன்னியன் இனம் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல அங்கேயும்......எனக்கு அந்த குர்திஷ் மக்களிடம் நிறையபழக்கம் உண்டு.சுருக்கமாக சொல்லப்போனால் சகுனி அமெரிக்காவின் கை அங்கே இலகுவாக குர்திஷ் பாமரமக்களிடம் விளையாடியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாமை துõக்கிலிடுவதை கவுரவமாக நடத்தியிருக்கலாம் * இப்போது யோசனை சொல்கிறார் அதிபர் புஷ்

வாஷிங்டன் : ""சதாம் உசேனை துõக்கிலிடும் நிகழ்ச்சியை இன்னும் கொஞ்சம் கவுரவமாகச் செய்து இருக்கலாம்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடந்த 30ம் தேதி துõக்கிலிடப்பட்டார். அப்போது, அவரை பாதுகாவலர்கள் "நரகத்துக்கு போ' என்று திட்டியது, ஏளனம் செய்தது, அந்த நிகழ்ச்சி முழுவதையும் மொபைல் போன் மூலம் வீடியோவில் பதிவு செய்து வெளிப்படுத்தியது ஆகியவை உலகளவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் புஷ் இது நாள் வரை வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஜெர்மனி அதிபர் மெர்கெலுடன், அதிபர் புஷ் நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது நிருபர்களைச் சந்தித்த புஷ்<, "" சதாம் உசேனை துõக்கிலிடும் நிகழ்ச்சியை இன்னும் கொஞ்சம் கவுரவமாகச் செய்து இருக்கலாம் என்பதே எனது கருத்து. அதே நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்த சதாம் உசேனுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. துõக்கிலிடும் நிகழ்ச்சியை வீடியோ எடுத்த விவகாரம் குறித்து விசாரணை நடப்பதை வரவேற்கிறேன். இது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் புஷ் நித்திரைவிட்டு எழும்பியிருக்கிறாரா

நல்லவரோ? கெட்டவரோ? ஒரு உயிரை பறித்துவிட்டு..அதை படம் வேறு எடுக்கிறார்களே...கொடுமை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புஷ்ஷை தூக்கிலிட வேண்டும்மகாதிர் ஆவேசம்

ஜனவரி 08, 2007

புத்ரஜயா (மலேசியா): சதாம் உசேனுக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையை ஜார்ஜ் புஷ்ஷûக்கும் கொடுக்க வேண்டும் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளார்.

அமெ>க்காவின் தீவிர எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் மகாதிர். 2003ம் ஆண்டு இவர் யூதர்கள் உலகை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் புஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் சதாம் தண்டனை குறித்து மகாதிர் காட்டமான கருத்தை வெளியிட்டுள்ளார். மகாதிர் முகம்மதுவுக்குச் சொந்தமான அமைதிக் கழகம் சார்பில் போர்க் குற்றவாளிகளை அம்பலப்படுத்துதல் என்ற பெயரில் ஒரு கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் மேற்கத்திய நாடுகள் செய்து வரும் போர்க் குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஆப்கன், ஈராக், பாலஸ்தீனம், வியட்நாம் போர், ஹீரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மகாதிர் பேசுகையில், அமெரிக்க அதிபர் புஷ்ஷûம், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும்தான் உண்மையில் மிகப் பெரிய போர் குற்றவாளிகள். சதாம் உசேனின் கரங்களில் இருந்ததை விட இவர்களின் கையில்தான் அதிக ரத்தக்கறை உள்ளது.

புஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சதாம் உசேன் சந்தித்த அதே 'கட்டப் பஞ்சாயத்து' முன்பு அவரையும் நிறுத்தி, சதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையை புஷ்ஷûக்கும் தர வேண்டும்.

பிளேர் ஒரு குற்றவாளி. சதாம் செய்ததை விட அதிக அளவிலான தவறுகளை பிளேர் செய்துள்ளார். அமைதியை ஏற்படுத்துவதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து படைகள் கொன்று குவித்ததை விட சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமானது தான் என்று காட்டமாக கூறினார் மகாதிர்.

http://thatstamil.oneindia.in

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாமை தூக்கில் போட்டவிதம் தவறானது பிளேயர் கண்டனம்.

ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம்உசேனை தூக்கில் போட்ட முறையையும் அத்தருணம் நடைபெற்ற அநாகரிகமான சம்பவங்களையும் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் கண்டித்துள்ளார். சாதாமின் தூக்கு நடைபெற்றபோது விடுமுறையில் இருந்த பிளேயர் அது குறித்து கருத்துரைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பிரிட்டன் நிதியமைச்சர் கோர்டன் பிரவுண் இது சரியான செயல் அல்ல என்று பாராளுமன்றத்தில் வைத்து கண்டித்திருந்தார். அதற்கு ஒரு வாரத்தின் பின்னர் இப்போது பிளேயரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. மறுபுறம் வட அயர்லாந்தில் உள்ள கத்தோலிக்கப் பின்னணி கொண்ட சின்பெயின் அமைப்பை பிளேயர் வாழ்த்திப் பூமாரி பொழிந்துள்ளார். புரட்டஸ்தாந்து மதத்தவரை போலீஸ் படையில் சேர்க்க மறுத்த சின்பெயின் இப்போது தளர்வான போக்கை அறிவித்துள்ளமையால் இந்தப் பாராட்டு கிடைத்துள்ளது. பதவி விலகும் காலம் நெருங்கும்போது தலைவர்களுக்கு வரும் சுடலைஞானத்தின் கீற்றுக்கள் போலவே இவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

அலைகள்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் பிளேயர் மெதுவாய் வாய் திறக்கிறாராக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிளேயர் அண்ணாவிற்கு என்ன நடந்தது. :lol:

அண்ணா பதவி விலகப்போகிறார் இனித்தான் மனிதாபிமானம் தலைதூக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரொனி பிளேயர் பதவி விலகப்போராரா?. அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளின் சட்டத்தின் படி ஒரு ஜனாதிபதி 2 முறைதான் நாட்டை நிர்வாகிக்கலாம். ஆனால் அவுஸ்திரெலியாவினைப்போல இங்கிலாந்திலும் பிரதமர் ஆட்சி நடைபெறுகிறது. அவர் எத்தனை முறையும் பிரதமராக வரலாம் தானே.

ம் ஆனால் அவரின் கட்சியில் அவர் நம்பிக்கை இழந்ததன் காரணமாக அவர் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்து விட்டார் அவரின் கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் போர்கொடி தூக்கி இருப்பதே காரணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாம் உசேன் பற்றிய புதிய வீடியோ காட்சி பாத் கட்சி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு

பாக்தாத்:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை துõக்கிலிட்ட பின்னர் எடுக்கப்பட்ட மற்றொரு புதிய வீடியோ தொகுப்பு, இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடந்த மாதம் 30ல் துõக்கிலிடப்பட்டார். இந்த நிகழ்வுகளை ஈராக் அரசே வீடியோவில் பதிவு செய்து ஒளிபரப்பியது. ஆனால், சதாம் கழுத்தில் கயிறு மாட்டப்படுவது வரையிலான காட்சிகள் மட்டுமே இதில் இருந்தன. ஒரு நாள் கழித்து, மொபைல் போன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட மேலும் ஒரு வீடியோ காட்சி இன்டர்நெட்டில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் சதாம், பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் செய்வது, கோபமாக சில வார்த்தைகளை கூறுவது, பிரார்த்தனையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இது முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சதாமுக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றிய முகமூடி அணிந்த ஆறு பாதுகாவலர்கள் மற்றும் அப்போது அங்கு இருந்த 15 முக்கிய நபர்கள் இவர்களில் யாராவது ஒருவர் தான் இந்த காட்சிகளை பதிவு செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சதாம் உசேன் துõக்கிலிடப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட மேலும் ஒரு புதிய வீடியோ காட்சி, இன்டர்நெட்டில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 வினாடிகள் ஓடக்கூடிய இந்த காட்சிகள், "கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர் சதாம் பற்றிய புதிய காட்சிகள்' என்ற தலைப்பில் ஈராக் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இன்டர்நெட் சதாம் உசேனின் பாத் கட்சிக்கு ஆதரவானது.

சதாம் துõக்கிலிடப்பட்டதற்கு சிறிது நேரத்திற்கு பின்னர் அவரது உடல் படுக்கையில் வைக்கப்பட்டிருக்கும் போது, மொபைல் போன் கேமரா மூலம் இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சதாமின் காலில் இருந்து தலை வரை படிப்படியாக தெரியும்படி வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியில், சதாம் உசேன் உடல் வெள்ளை அங்கியால் மூடப்பட்டுள்ளது. தலை மற்றும் கழுத்து பகுதி வெளியில் தெரியும்படி அங்கி விலக்கி வைக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக, அவரது தலை வலது பக்கத்தில் 90 டிகிரி கோணத்தில் திரும்பியுள்ளது. கழுத்தின் இடது பக்கத்தில் தாடையில் இருந்து ஒரு அங்குலம் கீழே வட்ட வடிவில் ரத்தக் காயம் உள்ளது. இடது கன்னத்தில் சிராய்ப்புகள் காணப்படுகிறது. அவரது தலையைச் சுற்றியுள்ள அங்கியும் ரத்தம் படிந்து காணப்படுகிறது.

இந்த புதிய வீடியோ காட்சி, ஈராக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரொனி பிளேயர் பதவி விலகப்போராரா?. அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளின் சட்டத்தின் படி ஒரு ஜனாதிபதி 2 முறைதான் நாட்டை நிர்வாகிக்கலாம். ஆனால் அவுஸ்திரெலியாவினைப்போல இங்கிலாந்திலும் பிரதமர் ஆட்சி நடைபெறுகிறது. அவர் எத்தனை முறையும் பிரதமராக வரலாம் தானே.

இப்ப உமக்கு என்ன பிரச்சினை நீர் என்ன பிரதமமந்திரி ஆக போறீறோ அவுஸ்ரேலியாவிற்கு பேசாம பொல்லூண்டுறதை விட்டுபுட்டு ...........

:lol::lol::D

சரி அப்ப சதாம் இறந்ததிற்கு புலத்தில் இருக்கும் நாங்கள் கண்ணீர் அஞ்சலி கூட்டம் ஒன்று நடத்துவோமோ யம்முவும் நீரும் சேர்ந்து ஒரு மேடை நாடகம் போடுவோமோ

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை,இல்லை ஒரு காலத்தில் குர்திஷ் இன மக்களுக்கு நிறைய உதவி செய்தவர்தான் சதாம்.ஆனால் அவர் நிலை மாறியதற்கு காரணம் குர்திஷ் இன ஒரு சில அரசியல் வாதிகளே***********காக்கை வன்னியன் இனம் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல அங்கேயும்......எனக்கு அந்த குர்திஷ் மக்களிடம் நிறையபழக்கம் உண்டு.சுருக்கமாக சொல்லப்போனால் சகுனி அமெரிக்காவின் கை அங்கே இலகுவாக குர்திஷ் பாமரமக்களிடம் விளையாடியுள்ளது.

\

புலத்தில் இருக்கும் சில தமிழர்களை கேட்டால் சில இராணுவ அதிகாரிகள் நல்லம் என்று தான் சொல்லுவார்கள்,ஆனால் அவர்கள் புலிகளுக்கு(ஈழ தேசியத்திற்கு எதிராக செய்த கொடுமைகள் பல) அதற்காக அந்த இராணுவ அதிகாரி இறந்தவுடன் அநுதாபம் தெரிவிக்க முடியாது தானே.லக்ஷ்மன் கதிர்காமர்,டக்லஸ்,கருணா போன்றோவர்களாள் சில தமிழர்கள் நன்மை பெற்று வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள் அவர்க்ளை கேட்டால் இவர்கள் தமிழர்களுக்கு உதவி செய்தது என்று தான் கூறுவார்கள்,ஆனால் பெருமான்மை தமிழர்கள் இவர்களால் பாதிக்கபட்டது உண்மை தானே அது போல குர்த்திஷ் மக்கள் ஒரு சிலருக்கு நன்மை கிடைத்திருக்கும் அதை வைத்து கொண்டு ஒட்டு மொத்த குர்த்திஷ் மக்களையும் கணிக்க முடியாது குர்த்திஷ் மக்களின் விடுதலையை நசுக்கியவர் தானே.

கழுத்தில் காயத்துடன் சதாமின் சடலம் இணையத்தில் புதிய ஒளிநாடா

[10 - January - 2007] [Font Size - A - A - A]

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசெய்னின் சடலம் கழுத்தில் காயங்களுடன் காணப்படுவதை காண்பிக்கும் புதிய வீடியோவொன்று இணையத்தளத்தில் வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட ஒளிநாடா பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதாமின் உடல் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. சதாமிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவரது உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டவேளை குறிப்பிட்ட படம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் போர்த்தப்பட்டிருந்த துணி நீக்கப்பட்டு சதாமின் தலை காண்பிக்கப்படுகின்றது.

அவரது தலை வலது பக்கமாக 90 பாகையில் திருப்பப்பட்டுள்ளது. இடது கழுத்தில் தலைக்கு கீழே காயங்கள் காணப்படுகின்றன. பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன.

குறிப்பிட்ட படம் வெளியாகியுள்ளமை அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டமையினால் உண்டாகியுள்ள சீற்றத்தினை மேலும் அதிகரிக்கலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சதாம் ஹுசெய்னின் தடை செய்யப்பட்ட பாத் கட்சிக்கு ஆதரவான இணையத்தளத்திலேயே 27 செக்கன் வீடியோ வெளியாகியுள்ளது.

மறைந்த அழிவற்ற மாவீரனின் புதிய ஒளிநாடா என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரையாடல்களும் பதிவாகியுள்ளன

http://www.thinakkural.com/news/2007/1/10/...s_page18906.htm

குர்திஷ் படுகொலை தொடர்பான விசாரணை ஆரம்பம் சதாம் - கெமிக்கல் அலி உரையாடல் ஒலிபரப்பு

[10 - January - 2007] [Font Size - A - A - A]

குர்திஷ் இனத்தவர்களுக்கு எதிரான படுகொலைகள் குறித்த விசாரணைகள் ஈராக்கில் திங்கட்கிழமை ஆரம்பமான வேளை, சதாமும் கெமிக்கல் அலியும் அது பற்றி உரையாடிய ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் ஒலித்துள்ளன.

சதாம் ஹுசெய்ன் இல்லாத நிலையில் விசாரணைகள் ஆரம்பமான அதேவேளை, அவரது கதிரையும் வெள்ளைப் பேனாவும் காணப்பட்டுள்ளன.

டிசம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமானவுடன் சதாம் ஹுசெய்னுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பின்னர் வாகனங்களிலும், வீதிகளிலும் நூற்றுக் கணக்கான உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நான் அவர்களை இரசாயன ஆயுதங்களால் தாக்கினேன் என கெமிக்கல் அலி எனப்படும் அலி ஹசன் தெரிவிப்பதும் ஒலித்துள்ளது.

சர்வதேச சமூகம் ஏதாவது தெரிவித்தால் அவர்களையும் இரசாயன ஆயுதங்களால் தாக்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதாம், இந்த ஆயுதங்கள் எனது உத்தரவின் பேரிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆயிரக்கணக்கில் கொல்லும் என தெரிவிப்பதும் ஒலிநாடா மூலம் வெளியாகியுள்ளது.

இது அவர்களை உணவோ, நீரோ இல்லாமல் தமது வீடுகளிலிருந்து வெளியேறச் செய்யும் எனவும் சதாம் தெரிவித்துள்ளார்.

கெமிக்கல் அலி குறிப்பிட்ட வீடியோ வேதனையளிப்பது எனவும், எனினும் அந்தக் கொலையைச் செய்தவர்கள் ஈராக்கிய படையினர் அல்ல, ஈரானியர்களே எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஒளி, ஒலி நாடாக்கள் என்னைக் குற்றஞ்சாட்டினாலும், நான் சதாமின் வழியை பின்பற்றினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.thinakkural.com/news/2007/1/10/...s_page18910.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கழுத்து அறுபட்ட நிலையில் சதாமின்

புதிய படம் : பற்றி எரிகிறது பாக்தாத்

பாக்தாத்,ஜன.10 (தினபூமி)

கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சதாம் கிடக்கும் புதிய கேசட் வெளியாகியுள்ளதால் ஈராக்கில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்துள்ளது. கலவரப்பகுதியில் அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்ததால் பாக்தாத் நகரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

ஈராக் மாஜி அதிபர் சதாம் உசேன் கடந்த டிசம்பர் மாதம் 30_ம் தேதி தூக்கிலிடப்பட்டார். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஷியா பிரிவு முஸ்லீம்களை அவர் கொன்றதாக குற்றஞ்சாட்டி ஈராக் நீதிமன்றம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது. அப்பீல் கோர்ட்டும் சதாமின் மனுவை நிராகரிக்க அவசரம் அவசரமாக சதாம் தூக்கிலிடப்பட்டார்.

கடந்த 30_ம் தேதி காலையில் இந்திய நேரப்படி சரியாக 8.22 மணிக்கு சதாம் தூக்கிலிடப்பட்டார். சாகும்போதும் அவரை நிம்மதியாக சாகவிடவில்லை. கழுத்தில் தூக்குக்கயிரை மாட்டியபின்பு சதாமின் ஜென்ம எதிரியின் பெயரை சொல்லச் சொல்லி தூக்குத்தண்டனை கொலையாளிகள் வற்புறுத்தியுள்ளனர். அதுவரை அமைதியாக இருந்த சதாம் சட்டென்று டென்ஷனாகி கொலையாளிகளை கண்ணாபின்னா என்று திட்டிவிட்டார்.

சதாம் தூக்கிலிட்டபின்பு சில வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சதாமின் கடைசி நிமிடங்கள் அதில் பதிவாகி இருந்தது. சதாமின் கழுத்தை தூக்குக்கயிறு இறுக்கும்போது அவரது கழுத்து எலும்பு மடார் என்று ஒடியும் காட்சி அதில் வெளியாக ஈராக் மக்கள் கொந்தளித்தனர். அந்த வீடியோ காட்சிகள் பலரின் மனதை உலுக்கியது. இவ்வளவு கொடூரமாகவா சதாமை தூக்கிலிட்டார்கள் என்று அமெரிக்கா மீது ஆத்திரம் ஏற்பட்டது.

இதனை எதிர்பார்க்காத அமெரிக்க அதிபர் புஷ் சதாம் நாகரீகமாக தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்நிலையில் இன்னொரு வீடியோ கேசட் வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சதாமின் உயிர்பிரியும் அந்த கடைசி வினாடிகள் அடங்கிய அந்த கேசட் ஈராக் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தூக்குக்கயிறு இறுகியதால் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சதாம் மிதப்பது போல வீடியோ காட்சி இண்டெர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காட்சியை பார்த்த ஈராக் மக்கள் கொந்தளிக்க பாக்தாத்தில் கலவரம் மூண்டது. மொத்தம் 27 வினாடிகள் அந்த வீடியோ கேசட்டில் சதாம் தூக்கிலிடப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இண்டெர்நெட்டில் இந்த வீடியோ காட்சி ஒளிபரப்பான அடுத்த சில நிமிடங்களில் மத்திய பாக்தாத் பகுதியில் சன்னி தீவிரவாதிகள் ஈராக் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகளை வீசியும் பீரங்கிகளால் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

குறிப்பாக அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் மெல்ல மெல்ல மற்ற நகரங்களுக்கும் பரவியது. இதனையடுத்து சன்னி முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் மீது அமெரிக்க விமான படைகள் குண்டுமழை பொழிந்தது. ஆவேசமான அவர்கள் அமெரிக்க துருப்புகள் மீது பதிலடி கொடுக்க பாக்தாத் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஈராக்கியர்களிடையே இனமோதலை ஏற்படுத்த அமெரிக்கர்கள் திட்டமிட்டு அந்த வீடியோ காட்சியை ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.