Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் கறுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்ட பெண்கள் தினம்! - பரவலாக பேரணிகள், போராட்டங்கள்

Featured Replies

 

இருண்ட தினம் பிரகடனம்!

 

இருண்ட தினம் பிரகடனம்!
மகளிர் தினமாகிய இன்றைய தினத்தையும், இந்த மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகின்றோம் என வலியுறுத்தி யாழ்.பரமேஸ்வரா சந்தியில் வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
 
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும், இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய இன்றைய தினம் மற்றும் இந்த முழு மாதத்தினையும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாகப் பிரகடனப்படுத்துகின்றோம்.
 
நாம் ஒருபோதும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ விட மாட்டோம், பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்க மாட்டோம், பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற விட மாட்டோம். பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான நீதி கிடைக்கும் வரை நாம் ஓய மாட்டோம். போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
இதேவேளை இன்றைய தினத்தை இருண்ட நாளாக எடுத்தக்காட்ட எமது வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றுவோம், கறுப்பு உடைகள், கறுப்புப் பட்டிகளை அணிவோம் எனவும் இந்த அமைப்பு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
 
                           striike000.jpg
 
                           strike000000000.jpg
 
                           strike00000000.jpg
 
                            1457416160_strike00.jpg
 
                            1457416177_strike0.jpg
 
                            stieke2.jpg
 
                                   strike00000.jpg                     
 
 
  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச மகளீர் தினமான இன்று “இருண்ட பங்குனி” எனும் தொனிப்பொருளில், வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பேரணிகள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மகளிர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன

சர்வதேச மகளீர் தினமான இன்று “இருண்ட பங்குனி” எனும் தொனிப்பொருளில், வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பேரணிகள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மகளிர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன

   

யாழ்ப்பாணத்தில்

சர்வதேச மகளீர் தினமான இன்று “இருண்ட பங்குனி” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டதுடன், நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் வன்முறைகளுடன் கூடிய கொலைச் சம்பவத்தினையும் கண்டித்து கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் செயற்பாட்டிற்கான வலையமைப்பு மற்றும் வடமாகாணத்தின் பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ். திருநெல்வேலி பரமெஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுர்வதேச மகளீர் தினத்தில் நாம் ஒருபோதும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்கமாட்டோம். பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்கமாட்டோம். பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக எமது ஆண்கள் மாற அனுமதிக்கமாட்டோம். பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களுக்கு எதிரான நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம் என்ற 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி அவர்களே, பெண்கள் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறையினை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்குகள் விசாரணைக்கு உடனடியாக வரும் வகையில், விசேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்பட வேண்டுமென்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறும், கறுப்பு பட்டி அணிந்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சியில்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று பெண்கள் அமைப்பினரால் இருண்ட நாளாக கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்கள் கறுப்புப் பட்டிகளை வாயில் கட்டியவாறு பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

இதன் போது அவர்கள் நீதிக்கான பயணம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அவர்களே பெண்கள் சிறுவர்கள் எதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சினையாக அறிவிக்க வேண்டும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு வரும் வகையில் விசேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிராக வன்முறைகளுக்க சரியாக நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம், போன்ற பல்வேறு வாசங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பழைய கச்சேரியிலிருந்து புதிய கச்சேரிக்கு ஊர்வலமாக சென்ற பெண்கள் அங்கு மேலதிக அரச அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மன்னாரில்

சர்வதேச பெண்கள் தினமான இன்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக் கோரி மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்புப்பட்டி போராட்டம் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் குருஸாந்தன் மஹாலட்சுமி தலைமையில் இன்று காலை மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமாகியது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.

மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை அடைந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக் கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தமது கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர்.இதனைத் தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் பஸார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னர் ஒன்று கூடி, தமது வாயை கறுப்புத் துணியினால் கட்டியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் காணப்பட்டனர். இறுதியாக அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற பெண்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர். குறித்த அமைதி ஊர்வலத்தில் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் உற்பட பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று முல்லைத்தீவில் பெண்கள் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வழங்கிய மகஜரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது.இவ்வாறு நடைபெற்ற பல வன்முறைச் சம்பவங்களுக்கு நீதி கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. ஆகவே, பெண்களுக்கான தினமாகிய மார்ச் – 08, மற்றும் இந்த மாதத்தையும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகிறோம். வன்முறைக்குட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் குடும்பத்தினரும் அவர்களது உரிமைக்காக போராடிக் கொண்டிருப்பவர்களும் நீதிக்காக காத்திருந்து நம்பிக்கை இழந்துவிட்டோம்.

புங்குடுதீவில் 2015 இல் 15 வயதான பாடசாலை மாணவி பாலியல வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி நாடு முழுவதும் மக்கள் எழுச்சி கொண்டும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாறாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மட்டக்களப்பு, புத்தளம், கம்பஹா, வவுனியா என தொடர்கின்றது. நாம் இனியும் இதனை பொறுக்கமாட்டோம். ஆகவே இந்த நாளையும் மாதத்தையும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்தியுள்ளோம் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில்

சர்வதேச மகளிர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் பேரணி என்பவற்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர். மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது. மகளிருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் உட்பட பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் இவர்கள் ஏந்தியிருந்தனர்.

 

women-day-black-080316-seithy%20(1).jpg

 

 

women-day-black-080316-seithy%20(2).jpg

 

 

women-day-black-080316-seithy%20(3).jpg

 

 

women-day-black-080316-seithy%20(4).JPG

 

 

women-day-black-080316-seithy%20(5).JPG

 

 

women-day-black-080316-seithy%20(6).JPG

 

 

women-day-black-080316-seithy%20(7).JPG

 

 

women-day-black-080316-seithy%20(8).JPG

 

 

women-day-black-080316-seithy%20(9).JPG

 

 

women-day-black-080316-seithy%20(10).jpg

 

 

women-day-black-080316-seithy%20(11).jpg

 

 

women-day-black-080316-seithy%20(12).jpg

 

 

women-day-black-080316-seithy%20(13).jpg

 

 

women-day-black-080316-seithy%20(14).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=153000&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

12823363_1110541335662635_34574618055150

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.