Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Computer Science B.Sc. in India

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே.

எனக்கு உங்களுடைய உதவி ஒன்று தேவைப்படுகிறது.

நான் எனது தொழிற்கல்வியை சுவிசில் முடித்து விட்டேன். Commercial Apprenticeship நான் பண்ணி முடித்துள்ளேன். ஆனால் எனக்கு இதை விட கம்பியுட்டர் சம்மந்தமான விடயங்கள் தான் ஆர்வமாக உள்ளது. இங்கே சுவிசில் Computer Science படிப்தற்கு நான் காசு கட்டி தான் படிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 3 வருடங்களில் Computer Science (B.Sc.) முடிக்கலாம். பணமும் மிச்சப்படுத்தலாம். இந்தியாவில் கம்பியுட்டர் படித்தவர்களிற்கு இங்கு சுவிசில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே நான் தமிழ்நாட்டிற்கு சென்று Computer Science செய்யலாம் என நினைக்கின்றேன். பிரச்சனை என்னவென்றால் எனக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது. பிரெஞ்சும் ஆங்கிலமும் ஓரளவிற்கு தெரியும். தமிழ்நாட்டில் Computer Science செய்வதற்கு ஆங்கிலம் அவசியம் தேவையா? அல்லது ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமா? இந்த 3வருட படிப்பிற்கு எவ்வளவு கட்டணம்?

இதைபற்றி நான் நிறைய காலேச்சிற்கு எழுதிவிட்டேன். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் பிழையாக உள்ளது. முடிந்தவர்கள் உதவி செய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் Computer Science படிப்பது என்றால் கட்டாயம் ஆங்கிலம் தேவை வடிவேலு சார்.

நீங்க ஆங்கிலம் பிரத்தியேக வகுப்புக்கு கட்டாயம் போனால்தான் நல்லம்.

வடிவு சார்

தமிழ் நாட்டில கணனி பற்றிப் படிக்க ஏன் ஆங்கிலம் கட்டாயம் தேவையாக இருக்கும் என்று நினைக்கிறீங்கள்?

கணனியில றெம்ப ஆர்வமாக இருக்கிறீங்கள். எனவே அதை படிக்கிறது பற்றி கொஞ்சம் அறிஞ்சிருப்பீங்கள் என்ற நம்பிக்கையில கேக்கிறன்....

Computer Science இக்கும் Computer Engineering இக்கும் என்ன வித்தியாசம்?

சரி கணனித்துறை சம்பந்தம் இல்லாமல் பொதுவாகவே பாத்தால் Science இற்கும் Engineering இற்கும் என்ன வித்தியாசம்?

உங்கடை சிங்கார சுவிச்சிலை Computer Science இற்கா இல்லை Computer Engineering ஆ செல்வாக்கு இருக்கு?

நீங்கள் எப்படியான வேலையை எதிர்பார்க்கிறீங்கள் படித்து முடிந்தவுடன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னையில் லயோலா மற்றும் வைஷ்ணவ் (D.G. Vaishnav College) கல்லூரிகள் Computer Science (B.Sc.) க்கு சிறந்தவை. வருடத்துக்கு 15,000 - 18, 000 ரூபாய் வரை செலவாகும்.( புத்தகங்கள் தவிர்த்து - அங்கு புத்தகங்கள் விலை குறைவு) முதல் வருடத்தில் ஆங்கிலம் மற்றும் தாய்மொழி பாடங்களை கட்டாயம் எடுக்க வேண்டும். ஆங்கில அறிவு கட்டாயம் தேவை. பெயர்தான் தழிழ்நாடு ஆனால் சென்னையில் 99% மான பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி முறைதான் உள்ளது. அரசுப் பாடசாலை மற்றும் கல்லூரிகளிலும்தான் கூடுதலாக தமிழ்வழிக் கல்விமுறை உள்ளது.(அவற்றுக்கு கொடுக்கப்படும் மதிப்பை படங்களில் பாத்திருப்பீர்கள்). மேற்குறிப்பிட்ட கல்லூரிகள் மூலமாக வேலைவாய்ப்பும் கிடைப்பதாக அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Computer Science இக்கும் Computer Engineering இக்கும் என்ன வித்தியாசம்?

சரி கணனித்துறை சம்பந்தம் இல்லாமல் பொதுவாகவே பாத்தால் Science இற்கும் Engineering இற்கும் என்ன வித்தியாசம்?

தெளிவான விளக்கங்களை கீழ்வரும் இணைப்புக்களில் பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Computer_science

http://en.wikipedia.org/wiki/Computer_engineering

http://en.wikipedia.org/wiki/Software_engineering

இந்தியாவில் இவை எல்லாவற்றையும் படிக்கலாம். Programmer ஆக வேலை செய்வதற்கு பல்கலைக் கழகப் பட்டம் கட்டாயம் அவசியமா தெரியவில்லை. எனினும் பெரிய கம்பனிகளில் பட்டதாரிகளைத்தான் வேலைக்கு எடுப்பார்கள்; பட்டதாரி இல்லாவிட்டால் வேலையில் முன்னுக்கு வரமுடியாது.

படிக்கப் போற பெடியன் தேட வேண்டியதை கிருபன் தேடிக் குடுத்திட்டார்.

அவர் சுவிஸ் இல் எதிர்பார்க்கும் வேலையை பொறுத்தது BSc ஆ அல்லது BEng ஆ தேவையானது என்று.

ஏமாத்தாமல் உண்மையாக படிப்பிக்கும் இடங்களில் Computer Science கடினமானது. பொதுவாக கணனித்துறைக்கு செல்வாக்கு இருக்கு என்பதற்கா BSc அய் படிக்க போக மாட்டார்கள். கொஞ்சம் பைத்தியம் பிடித்தவர்கள் தான் படிப்பார்கள். IIT Kanpoor Computer Science இற்கு பிரசித்தி பெற்றது.

சுவிஸ் இல் பலமாக இருப்பது வங்கி சம்பந்தப்பட்ட சேவைகள் மற்றது bio-medical/drugs industry என நினைக்கிறன். அவற்றினை மய்யப்படுத்திய IT service sector செல்வாக்கு உள்ளதாக இருக்கும் என நினைக்கிறன். அதற்கு ஏற்ற படி ஒரு course பொருத்தமாக இருக்கலாம்.

ஆங்கிலம் கட்டாயம் தேவையாக இருப்பது ஒரு தேவைக்குத்தான். தமிழில் படிச்சுப்போட்டு தமிழ் ஆக்களிடத்தில் வேலை செய்வது என்றால் பிரச்சனையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஆக்களிடத்தில் வேலை செய்வது என்றால் பிரச்சனையில்லை.

எங்கை சுவிசிலயோ

இந்த இணைப்பில் http://www.webindia123.com/career/mca/list...tion=Tamil+Nadu

இந்தியாவில் உள்ள, தமிழ் நாட்டில் உள்ள கணணி சம்பந்தமான அனைத்து கல்லூரிகளினதும் விபரம் இருக்கு.

நீங்கள் ப்ரோகிரமராக வர வேண்டுமென்றால் பொருத்தமான படிப்பு BCA (Bachelor of Computer Applications)

http://www.webindia123.com/career/mca/list...Applications%29

, கல்லூரியைத் தேர்வு செய்யும் போது கவனமாக விசாரித்துத் தேர்வு செய்யுங்கள்.அத்தோடு கட்டாயம் ஒரு குறிப்பிட்ட அப்லிகேசன் தெரின்ச்சு இருக்க வேணும் வேலை எடுக்க ,உதுக்கெண்டு பல தனியார் பயிற்ச்சி நிறுவனங்கள் இருக்கின்றன.SAP,ORACLE,MS certification னெண்டு கனக்க இருக்கு.இதில முன்னணி வகிக்கும் நிறுவனக்கள் NIIT http://www.niitstudent.com/india/

http://www.123oye.com/jobs-archive/nov05/niit.htm

http://www.apnic.net/mailing-lists/s-asia-...5/msg00022.html

http://timesofindia.indiatimes.com/articleshow/589019.cms

மற்ரும் சத்தியம் computers என்று நினைக்கிறேன்.தமிழ் நாட்டில் தற்போது இருப்பவர்களிடம் தான் தற்போதைய தகவல்கள் தெரியும் .இணயத்திலும் உது பற்றி கனக்க தேடலாம்.

மேலும் இப்போது மேற்குலகில் இப்படியான வேலைகள் குறைந்து கொண்டு வருகின்றன.முக்கியமான காரனம் அவுட் சோசிங்.இப்போ இந்தியாவில் தான் அதிக சம்பளத்துடன் இவ்வறான வேலைகளை எடுக்கலாம்.

http://www.indiaeducation.info/usefullinks/top10colleges.asp

Top ten colleges in India

City wise ranking

1 - Loyola College, Chennai

2 - St Xavier's College, Collates

3 - St Xavier's College, Mumbai

4 - St Stephen's College, Delhi

5 - Presidency College, Kolkata

6 - Lady Shri Ram College, Delhi

7 - Presidency College, Chennai

8 - Hindu College, Delhi

9 - Miranda House, Delhi

10 - Madras Christian College, Chennai

Chennai

1. Loyola

2. Presidency

3. Madras Christian

4. Stella Maris(Girls only)

5. Queen Mary's (Girls only)

For Engineering

1 - Indian Institute of Technology, Kanpur

2 - Indian Institute of Technology, Kharagpur

3 - Indian Institute of Technology, Bombay

4 - Indian Institute of Technology, Madras

5 - Indian Institute of Technology, Delhi

6 - BITS, Pilani

7 - Indian Institute of Technology, Roorkee

8 - IT-BHU

9 - Indian Institute of Technology, Guwahati

10 - Anna University, Chennai

http://www.india-today.com/itoday/06071998/edu.html

Edited by narathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் நீங்கள் தமிழில் பட்டதாரி ஆக விரும்பினாலும் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மீதிப்பிரச்சனையை நீங்களே கூட்டி கழித்து பாருங்கள்.

காவடி சார்

அந்த நாட்டு மொழியிலையும் படிக்கவில்லை ஆங்கிலமும் அவ்வளவு தெரியாது எண்டதை நொண்டிச்சாட்டா வைச்சு தமிழ்நாட்டில ஆங்கிலம் கட்டாயம் இல்லாத இடத்தில படிக்க நிண்டா படிச்சு முடிச்சா பிறகும் தமிழிலை தானே பிளந்து கட்ட முடியும்? தமிழிலை மாத்திரம் பிளந்து கட்ட நிக்கிறவைக்கு கக்க்க போ எண்டு கட்டி அணைக்கக் கூடியது வேறு யார்?

வடிவேலு,

இங்கே பொதுவாகவே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் இது ஒரு துறையை அல்லது ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுக்க இருக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

முதலில் உங்களால் என்ன செய்ய முடியும் உங்கள் எல்லைகள் என்ன என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.பின்னர் உங்களிடம் இருக்கும் உயர்தர வகுப்புத் தகுதிகள் என்ன என்று பார்த்துக் கொள்ளங்கள்.ஏனெனில் இந்தியாவில் இருக்கும் ஐஐடி போன்ற உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்குள் உள் இடுவதற்கு உயர் தரத்தில் ஆகக் கூடிய மதிப் பெண்கள் அவசியம்.இவற்றில் வெளி நாட்டு மணவர்களுக்கு என தனியான பிரவேச நடை முறைகள் இருக்கு.இவற்றை நான் தந்த இணைப்பில் இருக்கும் அந்த அந்தக் கல்லூரிகளின் இணைய வழி இணைப்பின் மூலமறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கல்லூரியைத் தேர்ந்தெடுத்த பின்னர் என்ன பட்டப் படிப்பு என்று தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கு அந்தக் கல்லூரியில் அதற்கான வசதிகள், பாடத் திட்டம், படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் போன்ற விடயங்களை ஆராய வேண்டும்.

நான் குடுத்த இணைப்பில் இருக்கும் NIIT என்னும் நிறுவனம் ஒரு தனியார் பயிற்ச்சி நிறுவனம் இந்தியாவில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக இந்த நிறுவனத்தின் கற்கை நெறிகளை படிக்கிறார்கள் இது முற்றிலும் தொழிற்துறை சார்ந்ததாக இருக்கும்.இப்போது இந்த நிறுவனம் இணைவலை ஊடாக இந்த கற்கை நெறிகளை ஒன் லைனாகவும் செய்கிறார்கள் போல் உள்ளது.

மேலும் எதாவது தனிப்பட்ட ஆலோசனைகள் வேணும் எண்டா தனி மடலில் தொடர்பு கொள்ளவும்.தெரிந்ததைச் சொல்லலாம் அல்லது தெரிந்து கொள்ளக்கூடிய வழியைக் காட்டலாம்.

Edited by narathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.