Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களுக்கு, ஊர்காவற்றுறை நீதவானின் அதிரடி அறிவிப்பு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு பகுதியில் கைவிடப்பட்டுள்ள, பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சி.வித்தியா வழக்கு விசாரணையின் போது மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வழக்கில் இன்றைய தினம் ஆஜராகிய குற்றப் புலனாய்வு பிரிவினர் புங்குடுதீவு பகுதியில் அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெற சாத்தியம் அதிகம் இருப்பதற்கு காரணம் பாழடைந்த ,கைவிடப்பட்ட வீடுகள், கட்டடங்களே காரணம் என நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன்போது ஏற்றுக்கொண்ட நீதவான் “இன்றிலிருந்து குறித்த கட்டடங்களை இனங்கண்டு அழிக்குமாறு” சம்பந்தப்பட்டவர்களிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் “வெளிநாட்டில் இருந்து கொண்டு புங்குடுதீவு தாயக காணிகள், வீடுகள், கட்டடங்களை உரிய பராமரிப்பு செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக அவ்விடம் சென்று, பார்வையிட்டு சொத்துக்களை பொறுப்பேற்குமாறு” பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து வேலணை பிரதேசசபை கட்டடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.house

house1

 

http://www.ntamil.com/30541

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணுக்கு மருந்தை போடச்சொன்னா ,இவங்கள் காலை வெட்டசொல்லுறாங்க tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி நடவடிக்கையே ஆயினும் தேவையான நடவடிக்கை.

நான் ஒவ்வொரு வருடம் போகும் போது கவனிப்பேன், தென்மராட்சி, வன்னி போன்ற 2009 வரை சண்டை நடந்த ஊர்களில் கூட மக்கள் தமது காணிகளுக்கு திரும்பி வீடுகளை புனரமைத்து விட்டார்கள்.  ஆனால் 90 க்கு பின் சண்டையே நடவாத தீவுப்பகுதியில் இன்னும் வளவுகள் பற்றைக்காடாக இருக்கிறன.

உள் ஊரில் மட்டுமில்லை, வேலணை-ஊறாத்துறை ரோட்டில் கூட, இதைக் காணலாம்.

வீடுகளை திருத்தாட்டியும், புதிதா கட்டாட்டியும் பரவாயில்லை, உடைச்சு வெளியாக்கி வளவையாவது துப்பரவா வச்சிருக்கலாம்.

7 வருசமாச்சு போர் முடிந்து, இனியும் வளவை திரும்பிப் பாக்காதவையின்ர வளவை எடுத்து, இல்லாத சனத்துக்கு கொடுத்தாலும் தகும்.

  • கருத்துக்கள உறவுகள்

 யாராவது ஏழை எளியதுகள் திருத்தி சுத்தமாக, பாதுகாப்பாக  வைத்திருந்தால் திடீரென வெளிநாட்டில் இருந்து  வந்து எந்த ஆமி, பொலிசை வைத்து அசைலம் அடிச்சினமோ அவர்களை வைத்தே குடியிருந்தவர்களை   மிரட்டி எந்த இழப்பீடும் இல்லாமல்  எழுப்பி கலைத்துப்போட்டு விக்கிறவையும், வேற யாரையும் குடி இருத்திறவையும் உண்டு. உப்பிடிச் செய்தால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம். தங்கள் காணியளை பராமரிக்கிறதுக்கு காசு அனுப்புவர்களும் உண்டு, அந்தக் காணியை கஸ்ரப்பட்டவர்களுக்கே எழுதிக் கொடுத்த நல்லவர்களுமுண்டு. ஆனால் நல்லது செய்தவர்களுக்கு அநியாயம் செய்த குடியிருப்பாளர்களுமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தீவுகள் இவ்வாறு அழிந்து போய்க்கிடக்கின்றன

அழிந்துவிட்டன

அழிந்து வருகின்றன.

ஆனால் புங்குடுதீவு மட்டும் ஏன் தொடர்ந்து   பேசப்படுகிறது??

ஏன் அவசரமாக அவலச்சங்கு ஊதப்படுகிறது??

ஏற்கனவே நான் எழுதியது தான்.

சிங்களத்தின் கோரமுகம்

இதை அறியணும்.

ஒன்று டக்ளசின் 30 வருட கொடூர வக்கிர ஆட்சி

மற்றது முள்ளி வாய்க்காலால் வந்து அகதி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களிடம்

(வன்னியை அபகரிக்கும் நோக்குடன் அவர்களை வன்னியைத்தவிர்த்து வேறு இடங்களில் விட)

அரசு விடுத்த ஒரே ஒரு கேள்வி உனது   பூர்வீகம் எது என்பது தான்.

அந்த ஊரை அறியாத அந்த ஊரில் பிறக்காதவர்கள் கூட துருவித்துருவி

அவர்களது பெற்றோர்

பாட்டனாரின் சொந்த ஊர் அறியப்பட்டபோது

அவர்கள் தீவுப்பகுதியைச்சேர்ந்தவர்களாக இனம் காணப்பட்டார்கள்.

அவர்கள் எந்த தீவைச்சேர்ந்தவர்களாக இருந்தபோதும்

புங்குடுதீவில் இறக்கப்பட்டார்கள்

இவ்வாறு இறக்கிவிடப்பட்டவர்கள் ஐயாயிர் பேர்.

எந்தவித வருமானங்களுமின்றி

எந்தவித வசிப்பிடங்களுமின்றி

இறக்கப்பட்ட  இவர்களால் புங்குடுதீவு திடீரென ஊதிப்பெருப்பித்ததன் விளைவுகள் இன்றையநிலைக்கு காரணம்.

அத்துடன் தண்ணீர்ப்பிரச்சினை மற்றும் போக்குவரத்துப்பிரச்சினையை மிகவும் கடுமையாக முகம் கொடுக்கும் மண்.

இவற்றிற்கு தீர்வு காண்பது ஒரு அரசின் முக்கிய கடமை.

ஆனால் அதிலிருந்து விலகி அந்த பிரதேசத்தை மேலும் வெறுமையாக்கும் நிலையைத்தான் இந்த உத்தரவும் தருகிறது.

இருந்தாலும் அந்த மண்ணில் பிறந்த நாங்கள் எம்மால் முடிந்ததற்கும் மேலாக அம்மண்ணை செழுமைப்படுத்தி

அந்த மண்ணில் மக்களை வாழ்விக்க

பாடசாலைகள் வைத்தியசாலை தண்ணீர் பிரச்சினையை தீர்த்தல் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி

மக்களை குடியேறச்செய்தல் என்பனவற்றிற்கு  தொடர்ந்து முயன்றே வருகின்றோம்.

தொடருவோம்.

 

 

Edited by விசுகு

"டக்கியின் முப்பது வருட வக்கிர ஆட்சி "

சிரிப்பை அடக்க முடியவில்லை .

சொந்த ஊரில் நடந்ததே தெரியாது போலிருக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

"டக்கியின் முப்பது வருட வக்கிர ஆட்சி "

சிரிப்பை அடக்க முடியவில்லை .

சொந்த ஊரில் நடந்ததே தெரியாது போலிருக்கு  

அப்போ  நீங்க எழுதுவது தானே...?

எனக்கு கடுப்பேத்தவும்

புலிகளைப்பழிவாங்கவும் என்று

சிங்களத்தின் வக்கிரத்தை கொடூரத்தை கண்டும் காணாமல் இருப்பதுபோல் 

டக்கியின் வக்கிரங்களும் கொடூரங்களும் உங்களால் மறுக்கப்படாது என எதிர்பார்க்கின்றேன் வழமைபோல்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.