Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினியின் நூல் போர்க்குற்றங்களை மறுதலிக்கின்றது! சிங்கள ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பகலவன் said:

ஜனநாயக முறைப்படி அந்த மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி மட்டுமே மீளப்பெற முடியும் என்று வைத்தால் இன்னும் நல்லது. 

நிச்சயமாக. உங்கள் முறை என்னுடையதை விட, ஜனநாயகத்துக்கு உவப்பானதாயேயுளது.

இதில் முக்கியம் மாகாண அதிகாரத்தின் வரையறை. மாகாணத்துக்கென்று அதிகாரங்கள் என்னதான் தெளிவாக வரையறை செய்யப்பட்டாலும், சில சட்டமூலங்களை கீழ்சபையில் சமர்பித்து பின்கதவால் மாகாண அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பர். உதாரணம் திவிநெகும சட்டம்.

இத்திட்டம் உச்ச நீதிமன்று போன போது, to her credit, ஷிராணி மாகாணங்களின் ஒப்புதல் இல்லாமல் இது செல்லாது என்றார். ஆனால் இப்படி நேர்மையாக எப்போதும் உச்சநீதி மன்றம் நடக்கும் என்று தமிழர்கள் நம்பி ஏமாற முடியாது.

எனவே இந்த தீர்பளிக்கும் பாகத்தை நீதிமன்றில் இருந்து முதல்வர்கள் சபைக்கு மாற்றலாம். ஆனால் அங்கும் நம் பலம் 2:7. எனவே அங்கும் சிம்பிள் மெஜொரிட்டிக்கோ 2/3 கோ நாம் உடன் படக்கூடாது.

1) கீழ்சபையில் ஒரு சட்டம் நிறைவேறி 6 கிழமைக்குள் அதில் மாகாண அதிகாரங்களை பறிக்கும் சரத்துகள் இருக்கிறதா இல்லையா என எல்லா முதல்வர்களும் முடிவு செய்ய வேண்டும்.

2) ஒருவரேனும் இருக்கிறது என முடிவு செய்தால், அவர் அதை முதல்வர்கள் சபையில் பிரேரிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டம் முழுநாட்டுக்கும் அமுலாகும்.

3) முதல்வர்கள் சபைக்கு விடயம் வந்தபின், முடிந்தால் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்து, திருத்திய சட்டம் ஏகமனதாய் ஏற்கப்பட்டால்- அது சட்டமாகும். ஏக ஆதரவு இல்லாதவிடத்து, மாகாண அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிவாகும். ஆம் என்ற மாகாணங்களில் புதிய சட்டம் அமுலாகும். இல்லை என்ற மாகாணங்களில் உள்ளபடியே இருக்கும்.

மேலே கூறப்பட்டிருப்பது அதியுட்ச சமஸ்டி ஏற்பாடு,  சமஸ்டி என்ற பதத்தை பாவிக்காமல் இப்படி ஒரு ஏற்பாட்டை நாம் அடைந்தால் - அது பெருவெற்றியாய் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனிநபர்கள் அதாவது...ஜனாதிபதி,முதலமைச்சர்,பிர‌தமர்,உச்சநீதிமன்ற நீதியரசர்கள்,ஆளுநனர் போன்றோர் தங்களது அதிகாரங்கள் மூலம் மாகாணசபை அதிகாரங்களை குறைக்க இடமளிக்க கூடாது.....அதற்கு ஏற்றவகையில் அரசியல் தீர்வு இருக்க வேண்டும்.... 

On 3/28/2016 at 8:24 PM, goshan_che said:

தெனாலி,

எங்கள் விக்கிபீடியா வேங்கைக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கீழே பாத்தீர்களா, near, amongst எண்டு எக்கில ஹேர் புடுங்கிறார். இதனால்தான் நான் பதிலே சொல்லாமல் கடந்துபோனேன்.

ஐநா அறிக்கையை வாசித்து கிரகிக்க கூடிய ஆக்களுக்கு நாம் சொல்வது விளங்கி இருக்கும்.

Near =அருகில், மிகவும் குறுகிய ஒரு யுத்த பிரதேசத்தில் மக்கள் அருகில் ஆட்டிலெறியை, ராணுவ தளபாடங்களை புலிகள் வைத்திருந்து சண்டையிட்டனர் என்கிறது ஐநா.

Amongst = மத்தியில். எனவே புலிகள் மக்கள் மத்தியில் இருந்து சண்டையிடவில்லை என்கிறார் அண்ணர்.

அந்த குறுகிய நிலப்பரப்பில், மக்களுக்கு அருகில் நிற்பதுக்கும், மக்கள் மத்தியில் நிற்பதுக்கும் ஒரு வேறுபாடுமில்லையே? முட்டையில் மயிர் புடுங்குவது என்பது இதைத்தான்.

இவரிடம் தான் சொன்ன பிழையான தகவலை ஏற்கும் நேர்மையை, எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

ஒரு திரியில் விஜயனை, அசோகன் நாடு கடத்தினான் என்று ஒரு historical bombshell ஐ போட்டுப் போனார்.

விஜயனை விட 150 வருடம் பிற்பட்டவன் அசோகன் என்பதை சுட்டிக் காட்டினேன். ஒரு சத்தமும் இல்லை. அட்லீஸ் தன் தவறை ஒத்துக் கொண்டு ஒரு சிறுபதிவு? இல்லை.

இப்படி பட்ட கருத்து நேர்மையற்ற அரைகுறை விக்கிபீடியா வேங்கைள்தானாம் இவ்வினத்தில் இனப்பற்றாளர்கள்.

அது சரி, அப்ப ஏன் ஐ நா மக்களை விட்டுட்டு கிளிநொச்சியில் இருந்து ஓடினார்கள் ....இப்ப வந்து புலிகளை மட்டும் குறை சொல்லாமல் அப்பவே இருந்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே ...என்ன கொலை செய்த பிறகு தான் இந்த துள்ளல் எல்லாமே ..இதன் அர்த்தம் என்ன ....கண்மூடித்தனமாக காரணங்கள் சொல்ல கூடாது ...அப்ப விட்டுட்டு இப்ப அறிக்கையோ ...அதுவும் புலிகள் தான் எல்லாம் .....சொறிலங்கா என்ன தமிழ் மக்களை கொஞ்சினார்களா ....முதலில் ஒரு அரசாங்கம் செய்த படுகொலை தான் தண்டிக்கப்பட வேண்டும் ...

On 3/29/2016 at 5:43 PM, goshan_che said:

நாம் இனவழிப்புக்கு உள்ளானவர்கள் - நாம் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நிச்சயமாக இல்லை.

ஆனால் எமது இலக்கு என்ன? இன அழிப்பை நிறுவுவதா? எமக்கான அரசியல் தீர்வை பெறுவதா?

இன அழிப்பு என்பது நிறுவப்படுவது கஸ்டம். அப்படியே நிறுவினாலும் அதில் நான் மேலே சொன்ன நாடுகள் எல்லாம் இழுபடும். குறிப்பாக இந்தியா, தனது கோடிக்குள் ஒரு இனப்படுகொலை நடக்க கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது நிறுவப்படும்.

அப்படி நடக்க அவர்கள் விடுவார்களா? ஒரு போதும்மில்லை.

போர்குற்றம் எனும் போது, அதில் இவர்களிடம் பெரிதாய் பொறுப்புக்கூறல் இராது. பிரச்சினை இலங்கை அரசோடும் புலியோடும் மட்டுப்படும்.

இதை பாவித்து ஒரு தீர்வை பெற முயற்சிப்பதே இப்போ நாம் செய்யக் கூடியது/வேண்டியது/

அதுக்கான சாத்தியம் உள்ளதா ...சொல்லுங்கள் ....புலி இருக்கும் போது அவர்களால் தங்களுக்கு உண்டான தடையை அறுத்து எறியவே வெளி நாடுகள் எல்லாம் ...தீர்வு என்று அப்போது கதைத்தார்கள் ...இப்ப புலிகளை எல்லாரும் சேர்ந்து அளித்தாகிவிட்டது ...இனி எல்லாம் தீர்வு என்பது வெறும் பேச்சு மட்டுமே ...இதனை புரிவதற்கு ஒரு பெரிய அறிவு தேவை இல்லை ...புலிகள் இருக்கும்  போது தான் தீர்வு என்ற கண்ணாம்பூச்சி ....இப்ப அதன் அவசியம் என்ன ...அவர்களின் பொது எதிரி புலிகளை அழித்து விட்டாச்சு ...

இப்ப மோடி நினைத்தால் முடியாத விடயம் என்ன ....13+  நடை முறை படுத்த முடியாதா ? ஏன் இந்த நாடகம் இப்ப .....அறிவாளிகள் புலிகளை எதிர்ப்பவர்கள் சொல்லுங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபாதாசன் said:

அது சரி, அப்ப ஏன் ஐ நா மக்களை விட்டுட்டு கிளிநொச்சியில் இருந்து ஓடினார்கள் ....இப்ப வந்து புலிகளை மட்டும் குறை சொல்லாமல் அப்பவே இருந்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே ...என்ன கொலை செய்த பிறகு தான் இந்த துள்ளல் எல்லாமே ..இதன் அர்த்தம் என்ன ....கண்மூடித்தனமாக காரணங்கள் சொல்ல கூடாது ...அப்ப விட்டுட்டு இப்ப அறிக்கையோ ...அதுவும் புலிகள் தான் எல்லாம் .....சொறிலங்கா என்ன தமிழ் மக்களை கொஞ்சினார்களா ....முதலில் ஒரு அரசாங்கம் செய்த படுகொலை தான் தண்டிக்கப்பட வேண்டும் ...

தகாத வார்தை பிரோயோக விதி பற்றி நிர்வாகத்திடம் ஒரு விளக்கம் கேட்டுள்ளேன். அவர்களின் பதிலை பொறுத்து, உங்களுக்கான எனது பதில் வழங்கப்படும்.

21 hours ago, goshan_che said:

நிச்சயமாக. உங்கள் முறை என்னுடையதை விட, ஜனநாயகத்துக்கு உவப்பானதாயேயுளது.

இதில் முக்கியம் மாகாண அதிகாரத்தின் வரையறை. மாகாணத்துக்கென்று அதிகாரங்கள் என்னதான் தெளிவாக வரையறை செய்யப்பட்டாலும், சில சட்டமூலங்களை கீழ்சபையில் சமர்பித்து பின்கதவால் மாகாண அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பர். உதாரணம் திவிநெகும சட்டம்.

இத்திட்டம் உச்ச நீதிமன்று போன போது, to her credit, ஷிராணி மாகாணங்களின் ஒப்புதல் இல்லாமல் இது செல்லாது என்றார். ஆனால் இப்படி நேர்மையாக எப்போதும் உச்சநீதி மன்றம் நடக்கும் என்று தமிழர்கள் நம்பி ஏமாற முடியாது.

எனவே இந்த தீர்பளிக்கும் பாகத்தை நீதிமன்றில் இருந்து முதல்வர்கள் சபைக்கு மாற்றலாம். ஆனால் அங்கும் நம் பலம் 2:7. எனவே அங்கும் சிம்பிள் மெஜொரிட்டிக்கோ 2/3 கோ நாம் உடன் படக்கூடாது.

1) கீழ்சபையில் ஒரு சட்டம் நிறைவேறி 6 கிழமைக்குள் அதில் மாகாண அதிகாரங்களை பறிக்கும் சரத்துகள் இருக்கிறதா இல்லையா என எல்லா முதல்வர்களும் முடிவு செய்ய வேண்டும்.

2) ஒருவரேனும் இருக்கிறது என முடிவு செய்தால், அவர் அதை முதல்வர்கள் சபையில் பிரேரிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டம் முழுநாட்டுக்கும் அமுலாகும்.

3) முதல்வர்கள் சபைக்கு விடயம் வந்தபின், முடிந்தால் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்து, திருத்திய சட்டம் ஏகமனதாய் ஏற்கப்பட்டால்- அது சட்டமாகும். ஏக ஆதரவு இல்லாதவிடத்து, மாகாண அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிவாகும். ஆம் என்ற மாகாணங்களில் புதிய சட்டம் அமுலாகும். இல்லை என்ற மாகாணங்களில் உள்ளபடியே இருக்கும்.

மேலே கூறப்பட்டிருப்பது அதியுட்ச சமஸ்டி ஏற்பாடு,  சமஸ்டி என்ற பதத்தை பாவிக்காமல் இப்படி ஒரு ஏற்பாட்டை நாம் அடைந்தால் - அது பெருவெற்றியாய் அமையும்.

இது எல்லாம் நடக்குமா ...இப்ப இந்தியாவுக்கு என்ன தடை எங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல ? முதல் தான் புலிகள் ...இப்ப யார் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 29 March 2016 at 0:52 PM, goshan_che said:

இதற்கு நீங்கள் காட்ட கூடிய இரண்டு உதாரணங்கள் உளன.

1) சோல்பெரியாப்பின் 29 ம் பிரிவை, 1வது குடியரசு யாப்பு அகற்றியது

2) தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பை உச்சநீதி மன்றம் அகற்றியது.

இதில் 1மாவது நடக்கும் போது, இலங்கை பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கவில்லை. தவிரவும் "கோடீஸ்வரன்" வழக்கு மற்றும் மலையக மக்கள் வாக்குரிமை பறிப்பு, சிங்களம் மட்டும் சட்டங்கள் எடுத்து காட்டுவது போல, 29 ம் பிரிவு அமலில் இருந்த போதே தமிழருக்கு எதிரான செயல்கள் நடக்கவே செய்தன. 

2மாவது - சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இணைக்கும் மட்டுமான ஒரு தற்காலிக ஏற்பாடு. இந்திய இலங்கை, ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டு, முஸ்லீம்களின் வகிபாகத்தை ஏற்று அவர்களுக்குரிய பங்கை கொடுத்து, கிழக்கில் இருந்து விரட்டப்பட்ட தமிழரை ஓரளவுக்கு மீளகுடியமர்த்தி, பிரபா-அஸ்ரப் காலத்தில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தி, இதை நிரந்தரமாக்கியிருந்தால், இணைப்பை துண்டிப்பது, இலகுவில் முடிந்திராது.

ஆனால் இப்போ எங்களுக்கே புரிகிறது, வடக்கு-கிழக்கு இணைப்பு, என்பது முஸ்லீம்களின் பங்களிப்பின்றி சாத்தியமில்லை என்பது.

ஆனாலும் எல்லா தமிழர் ஆதரவு நகர்வுகளும் பின் வாபஸ் பெறப்பட்டன என்பதில்லை. வத்தலோ தொத்தலோ 13ம் திருத்தமும் அதுதந்த மாகாணசபையும் இன்னும் இருக்கிறது. குத்துயிரும் குலையுயிருமாய் என்றாலும் தமிழ் அரச கரும மொழியாய் இருக்கிறது.

60 களில் எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாமல், சிங்கள ஓன்லிக்கு முகம் கொடுத்து, தமிழ் மொழியே இலங்கையில் அழித்தொழிக்கப் பட்டுவிடுமோ? என்ற நிலையோடு ஒப்பிடும் போது, இது நிச்சயமாக ஒரு முன்னேற்றமே.

பெரும்பான்மைதுவம் என்பது ஜனநாயகம் அல்ல.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் விருப்புப்படி, சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்ட, ஒரு நிர்வாக அமைப்பை நிறுவுதல்.

பெரும்பான்மைதுவம் என்பது -தனியே எண்ணிக்கையில் கூடியோர், தம்விருப்பை ஏனையோர் மீது திணிப்பது.

இலங்கையில் இதுவரை நடந்தது ஜனநாயகம் அல்ல, பெரும்பான்மைதுவம்.

தமிழர், ஓரினச்சேர்கையாளர், கிறீஸ்தவர், மாற்றுத்திறனாளிகள் என பல்வகைப்பட்ட சிறுபான்மைகள் வஞ்சிக்கப் பட்ட ஒரு ஆட்சிமுறையே அங்கு நிலவியது, நிலவி வருகிறது.

இந்த முறை அரசியலமைப்பு ஆக்கத்தில், இவ்வாறு பெரும்பான்மைதுவம் முன்னிலை பெறுவதை தடுக்கும் சில பொறிமுறைகளை உள்ளடக்கி, சர்வதேச ( குறிப்பாக இந்திய) மேற்பார்வையில், இவை மீளப்பெறாமையை உறுதிப் படுத்த முடியும்.

ஆயுதப்போராட்டம் தோற்றுப்போன நிலையில், இதை முயற்சி செய்து பார்ப்பதை தவிர, எமக்கு வேறு தெரிவுகள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஏற்கனவே 87 இல் போடப்பட்ட ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தம்தான் அதில் குறிப்பிட்ட வடக்கு கிழக்கு இணைப்பை சிறிலங்கா தன்னிச்சையாக ஒரு உச்சநீதிமன்றத்தீர்ப்பின் மூலம் மீறிய போது இந்தியா ஒப்புக்குத்தானும் கண்டனம் தெரிவிக்கவில்லை.தன் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டாலும் அது தமிழரின் அரசியல் பிரச்சனை என்பதால் பண்டுகவள்ளாமல் விட்டது.இந்தியாவை முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்வைப் பெற நினைப்பது ஒருபோதும் பலனழிக்காது.வரு அதுய்யம்பூந்துறை நடந்து ஒட்டு மொத்த தமிழகம் அரசியல் எழுச்சி பெற்று மத்திய அரசுக்கு நெருக்கடியான கொடுத்தால் சாத்தியமாகலாம். மற்றபடி சர்வதேச மத்மியஸ்துடனான்ன அரசுயல்தீர்வே நிலையானதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.