Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் 'டாப் 10' மோசமான சாலைகளை தெரிந்துகொள்ளுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் 'டாப் 10' மோசமான சாலைகளை தெரிந்துகொள்ளுங்கள்!


  •  

dangerousroad1.jpg

ந்தியாவின் டாப் -10 மோசமான சாலைகளை உங்களுக்கு தெரியுமா....

1. ஜோஜிலா  பாஸ்:

இமாலயத்தின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,538 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் குறுகிய சாலையான இந்த பாதையில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே நேராக செல்ல முடியும். பனிக்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். நாட்டின் கடினமான சாலைகளில்  இதுவே மிகவும் மோசமான சாலையாக கருதப்படுகிறது.  ஸ்ரீநகரில் இருந்து லே வழியாக  பயணம் செய்யும் போது நீங்கள் இந்த பாதையை தாண்டி வரவேண்டும். ஜோஜிலா பாஸ், லடாக் மற்றும் காஷ்மீர் இடையே ஒரு முக்கியமான இணைப்புப் பாதையாக கருதப்படுகிறது.  

2. நேரல்-மாத்தேரான் சாலை:

dangerousroad2.jpg

இந்த சாலையானது மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரமானது. பார்ப்பதற்கு பாம்பு போல வளைந்து நெளிந்து காணப்படும் சாலையாக அமைந்துள்ளது. நேரலில் இருந்து   மாத்தேரான் மலைப்பகுதி வரை செல்லும் சாலை மிகவும் மென்மையாகவே காணப்படும். சாலைகள் குறுகலாக காணப்படுவதால் வேகமாக செல்ல முடியாது. இந்த பாதையில் கார் ஓட்ட விரும்பவில்லை என்றால்  அருகிலுள்ள டாக்ஸிகளை அழைத்துக்கொள்ளலாம்.

3. தேசிய நெடுஞ்சாலை 22:

dangerousroad3.jpg

நெடுஞ்சாலைகளில் தற்போதைய சூழ்நிலையில் யூகிக்க முடியாத தேசிய நெடுஞ்சாலை 22 பயங்கரமான நெடுஞ்சாலையாக திகழ்கிறது. 22 வது தேசிய நெடுஞ்சாலை  459 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. இது ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேஷ் என மூன்று மாநிலங்களை இணைக்கிறது. நரக நெடுஞ்சாலை எனவும்  அழைக்கப்படுகிறது. மலையை வெட்டி இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.  பாறைகள் குடைந்து இருப்பதால் சுரங்கங்கள் வடிவில் இந்த சாலை அமைப்பு காணப்படுகிறது.

4. சாங் லா:

dangerousroad4.jpg

இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 5360 உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பாதையானது இமாலய மலைப்பகுதிகளில் உள்ள லடாக்கில் அமைந்துள்ளது. சாங் லா சாலை வழியாக செல்லும் போது பயணிகள் மூச்சுத்திணறல் மற்றும் குமட்டல் முதலான பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். சாங் லா ஆண்டு முழுவதும் பனி மூடப்பட்டிருக்கும்  சாலையாகும்.  சீன எல்லையில் அதன் அருகாமையில் இராணுவத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. காற்று மற்றும் காலநிலை மிகவும் கடுமையான இருக்ககூடிய சாலை. அதனால் கூடுதலாக சூடான ஆடைகள் மற்றும் நீங்கள் ஒரு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும்.

5. லே-மணாலி நெடுஞ்சாலை:

dangerousroad5.jpg

இமாச்சல பிரதேசத்திற்கும், காஷ்மீருக்கும் இடையில் அமைந்துள்ளது லே-மணாலி நெடுஞ்சாலை. இந்த சாலையானது காஷ்மீர், லடாக் மாவட்டத்தில் உள்ள லே-யையும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியையும் இணைக்கிறது.மொத்தம் 479 கி.மீ தூரம் கொண்டது. இந்த சாலையில் செல்லும்போது, நத்தை வேகத்தில் செல்ல வேண்டும். பனிக்காலத்தில் இந்த பாதையில் பயணிக்கும்போது,  கவனமாக செல்ல வேண்டும். அதிக நேரம் பயணிப்பது சுவாச நோயை ஏற்படுத்தும்.

6. மூணாறு ரோடு:

கொடைக்கானல்-மூணாறு சாலை (பழைய SH-18) தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி தேனி மாவட்டத்தின் வழியாக சென்று, கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் முடிவடைகிறது. இந்த சாலை 81 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இது 1942ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட சாலை ஆகும். இந்த சாலை 2,480 மீட்டர் (8,140 அடி) உயரத்தில் வந்தரவு சிகரத்தில் அமைந்துள்ளது.

dangerousroad61.jpg

இந்த சாலை 1990 ஆம் ஆண்டு மூடப்படுவதற்கு முன்பு இதுவே தென்னிந்தியாவின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த சாலை ஆகும்.1915 ஆம் ஆண்டு வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரை சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து பெரிஜம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷன் வரை சாலை அமைக்கப்பட்டது. இதுவே எஸ்கேப் ரோடு என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. 

இச்சாலை மூணாறு முதல் கொச்சி வரை செல்லும் சாலையுடன் இணைகிறது. இச்சாலை வழியாக கொச்சியை அடைய 11 மணி நேரமாகும். மழைக் காலங்களில் இச்சாலையை பயன்படுத்த முடியாது.

7. மூன்று நிலை ஜிக் ஜேக் சாலை:

dangerousroad7.jpg

உலகின் மிக மிக கிறுகிறுக்க வைக்கும் சாலை இதுவாகும். இந்த சாலை சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஜிக் ஜேக் சாலையில் 30 கிலோமீட்டருக்குள் 100க்கும் மேற்பட்ட கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. உலகிலேயே கண்களுக்கு  விருந்தளிக்கும் சாலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சுழல் சாலையானது திபெத்திலிருந்து இந்திய வரலாற்று பாதையான பழைய சில்க் பாதை அமைந்துள்ள கிராமத்தின் அருகே அமைந்துள்ளது. கிழக்கு சிக்கிம் மாகாணத்தில் அமைந்துள்ளது.

8. கார்டுங் லா பாஸ்:

dangerousroad81.jpg

கார்டுங் லா கணவாய் மலைப்பாதையானது கடல்மட்டத்திலிருந்து 5,359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையானது காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் அருகிலுள்ள லே நகரில் அமைந்துள்ளது. இந்த பாதையானது இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களே திணறக்கூடிய வகையில் இந்த சாலை அமைந்துள்ளது. இந்தப்பாதையானது அக்டோபர் மாதம் முதல் மே வரை மூடப்பட்டிருக்கும்.

9. கிஷ்த்வார்-கைலாஷ் சாலை:

dangerousroad91.jpg

புதிதாக அமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1638 மீட்டர்  உயரத்தில் அமைந்துள்ளது.  இது மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வழிப்பாதையாகும். இதில் ஜி.பி.எஸ் கொண்டு செல்வதன் மூலம் வழியை பார்த்துக்கொண்டே செல்லலாம். இந்த பாதையில் அவசரப்பட்டு செய்யும் செயல்கள் உங்களை மரணத்திற்கே அழைத்து செல்ல கூடியது.

10. ராஜ்மச்சி சாலை:

dangerousroad10.jpg

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் ராஜ்மச்சி சாலை அமைந்துள்ளது. இந்த சாலை எப்போதுமே கருங்கல்லாலேயே அமைக்கப்பட்டு இருக்கும். பருவமழைக்காலங்களில் வழுக்கும் தன்மை உடையது. கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ராஜ்மச்சி கிராமம். மலை ஏறுபவர்களும் இந்த வழியை பின்பற்றுவதுண்டு. மிகவும் மோசமான சாலைகளில் முக்கியமான சாலையாக கருதப்படுகிறது.

-துரை. நாகராஜன்

http://www.vikatan.com/news/india/61911-indias-top-10-worst-roads.art

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி!


கொடைக்கானலிருந்து மூணாறு நகரத்திற்கு 30  வருடத்திற்கு முன் ஜீப்பில் பயணம் செய்திருக்கிறேன்.. கும்மிருட்டான அடர்ந்த வனப்பகுதியும், ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் கொண்ட மிக ரம்யமான ஆளரவமற்ற, போக்குவரத்து மிக மிக குறைவாக காணப்படும் சாலை.. இரவில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அவசியம் காண வேண்டிய இடம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.