Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சமூகம் இழந்ததை எண்ணி வருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோடுங்கள்!

Featured Replies

தமிழ் சமூகம் இழந்ததை எண்ணி வருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோடுங்கள்!
 
 
தமிழ் சமூகம் இழந்ததை எண்ணி வருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோடுங்கள்!
தமிழ் சமூகம் இழந்ததை எண்ணிவருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோட வேண்டும். இந்த உலகில் நாம் எவருக்கு சலைத்தவர்கள் அல்ல. எங்கள் பூமியை வெற்றி பூமியாக உருவாக்க வேண்டும். நேற்று நடந்ததை விட்டு நாளை நடப்பதற்காக வாழ இந்த தமிழ் சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தெரிவித்தார்.
 
 சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
 
 இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர்களாக ராஜா, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சமூகம் புதுமையை நோக்கி நடைபோடவேண்டும். பழமை வேண்டாம் என்ற அபிலாசைகள் இல்லை. பழமையை மறக்கமால் புதியதை விரும்புகின்ற சமூகம் தான் உலகில் மற்றவையவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும் என்றார்.
 
இதில் மகிழ்ச்சி கரமான வாழ்க்கைக்கு இன்றைய காலத்தில் அவசியமானவை தொன்று தொட்டு வரும் பழமைகளா? மாறிவரும் புதுமைகளா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றன.
 
 இதன் போது இந்தியாவில் இருந்து வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர்களாக ராஜா, மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
 
                                                       raja1.jpg
 
                                                       raja3.jpg
 
                                                       raja2.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது 

அம்பேத்காருக்கு இந்தியாவில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்?இவர் பெளத்த மதத்தை தழுவியவர் என்பதானல் இலங்கையின் தமிழ்பகுதியில் இவரை அறிமுகப்படுத்துகின்றார்களா?

தமிழகத்தின் சனரஞ்சக பட்டிமன்ற பேச்சாளர்களை நடுவர்களாகக் கொண்டு இந்தியத் துணைத் தூதரகம் பட்டிமன்ற கொண்டாட்டம் நன்றாக நடத்தி விட்டுப் போகட்டும். 'சிவாஜி' புகழ் ராஜா அடிக்கும் நகைச்சுவைகளை மக்கள் கேட்டு ரசிக்கட்டும். ஆனால் இந்நிகழ்ச்சிக்கு அண்ணல் அம்பேத்காரின் பெயரை இழுப்பது தான் எரிச்சலைத் தருகின்றது. நீங்கள் நடத்தும் இந்த கொண்டாட்டத்துக்கும் அந்த மகத்துவமான அரசியல் சமூகப் போராளிக்கும் என்ன சம்பந்தம்?

FB

சமூகப் போராளி அம்பேத்காரின் 125 வது பிறந்த நாளை முதன் முறையாக இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் கொண்டாவுள்ளது. நல்ல விடயம். அம்பேத்கார் சாதியத்தை எதிர்த்த போராளி. அம்பேத்காரை சிறப்பு செய்ய விரும்பினால் மரியாதை செய்யவிரும்பினால் கொழும்பிலும் ஒரு நிகழ்வை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது அவரது கொள்கைகளை பரப்ப விரும்பியிருந்தால் சிங்களவர்கள் மத்தியிலும் சாதியம் உள்ளது . எனவே அங்கும் நிகழ்வு ஒன்றை நடத்தியிருக்கலாம். ஆனால் இந்து மதத்தையும் உயர் சாதித்துவத்தையும் அடையாளமாக வைத்து நடக்கும் ஒரு அரசு என விமர்சனத்துக்குள்ளகிக் கொண்டிருக்கும் அரசு. அம்பேத்கார் கொள்கைகளையோ அவரது கனவுகளையோ தன்னுடைய நாட்டிலேயே இன்னமும் முழுமையாக நடை முறைப் படுத்தாத ஒரு அரசு எதற்கு யாழ்ப்பாணத்தில் அவரது பிறந்த நாளில் விழா எடுக்க வேண்டும் ?? இதன் பின்னணி அரசியல் என்பது மோசமானவை . மீண்டும் மீண்டும் தமிழர்களே பலிக் கடா ஆகக் கூடாது ..

FB

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ராஜீவ்காந்தி பமிலிக்கு நீங்க அப்பவெ... சொல்லி இருந்தால்.. தமிழ் சமூகம் இப்படி இழப்புக்களைச் சந்திக்க வேண்டி.. வந்திருக்காதே ராஜா சார். 

எல்லாரும் வந்து தமிழனை அடிச்சுக் கொன்று போட்டு... மற மற என்றீங்க.. ஆனால்.. உங்க வீட்டில இழவு வீழ்ந்தால் மட்டும் மறக்கமாட்டன் என்றீங்க. என்ன நீதியோ..?! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.