Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வித் தரப்படுத்தலில் வடக்கு மாகாணம் கடைசி இடம்!

Featured Replies

கல்விப் பொதுத் தராதர பெறுபேறுகள் அண்மையில் வெளியானதையடுத்து, தேசிய தரப்படுத்தில் செய்யப்பட்டதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. இந்தவிடயம் தனக்குக் கவலையளிப்பதாக ஈழ மக்கள் ஜனனாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த காலங்களில் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்த நாம் அயராது பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். யுத்தம் நிலவிய காலங்களில் தரைப்பாதை போக்குவரத்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில்கூட கடல் மார்க்கமாக கல்வித் துறை சார்ந்த பல்வேறு உபகரணங்களை கொண்டு சென்றும். பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்தும் வடக்கின் கல்வி நிலையை எம்மால் இயன்றளவில் காபாற்றியும் மேம்படுத்தியும் வந்துள்ளோம்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் கல்வி நிலையானது பாரிய சவாலுக்கு உட்பட்டிருந்தது. அதனையும் நாம் முறியடித்து, முற்றாக அழிந்தும் பாதிப்படைந்தும் காணப்பட்ட பல பாடசாலைக் கட்டிடங்களை மீளமைத்தும் புனரமைப்புச் செய்தும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் அனைத்து உபகரணங்களையும் வழங்கியும் விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள், கணனி கூடங்கள் போன்றவை அமைத்தும், ஆசிரிய வளங்களைப் போதுமானவரை பகிர்ந்தும் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்தியிருந்தோம்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று வடக்கின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சி கண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மை இனங்காட்டிக்கொண்டு, இந்த அரசில் இணக்க அரசியல் ரீதியாகப் பங்கெடுத்து வருகின்ற தமிழ்த் தலைமைகளின் அக்கறையின்மையே இதற்குக் காரணமாகும். அதே நேரம், முன்னர் கல்விப் பணிப்பாளராக இருந்த ஒருவர் தற்போதைய வடக்கு மாகாண சபையில் கல்விக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். அப்படி இருந்தும் வடக்கின் கல்விநிலை இவ்வாறு வீழ்ச்சி கண்டு வருகிறதென்றால் இவர்களின் அக்கறையின்மை திறமையின்மை, செயலாற்றலின்மை போன்றவையே இதற்குக் காரணமாகும்.

அதே நேரம், இத்தகைய ஒருவர் கல்விப் பணிப்பாளராக இருந்த நிலையில் அவரது செயற்பாடுகள் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியும் இப்போது எமது மக்களிடையே எழுந்துள்ளது.

அதே நேரம், கிழக்கு மாகாணம் மேற்படி தேசிய தரப்படுத்தலில் 8 ஆவது இடத்தை – கடைசிக்கு முந்திய இடத்தைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருப்பவரும் ஏற்கனவே கல்வித்துறை சார்ந்த உயர் பதவி வகித்தவர் எனக் கூறப்படுகின்றது. அதே போன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சுகளுக்கு பொறுப்பாக உள்ள இருவரும் ஒரே கூட்டணிக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.

தமிழ் மக்களின் மீட்பர்கள் எனக் கூறிக்கொண்டு இருக்கும் இவர்கள் இவ்வாறு எமது கல்வி நிலையை நாட்டின் இறுதியான இரண்டு நிலைகளுக்கு தள்ளிவிட்டிருப்பது வேதனைதரும் விடயமாகுமென அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://tamilleader.com/

இது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம்.   ஏற்கனவே சாதாரண தர பரீட்சையில் யாழ் 22 மாவட்டங்களில் 21வது இடத்தை பெற்றதாக தகவல். நான் படிக்கும் காலத்தில் கிழக்கிலுள்ள தமிழரும் முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்தில் வந்து படித்தார்கள். இலங்கையின் மூளை என யாழ் இருந்த காலம் மீண்டும் வருமா? மூளை சாலிகளின் வெளியேற்றமும் இருப்பவர்கள் வெளிநாடு போவதே குறியாக இருப்பதும் அவர்களை நம்பிக்கையுடன் வாழவிடாது  அங்கே  வாழ்வதே வீண் என புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் மீண்டும் நிருபிக்க முயல்வதும் இதற்கு காரணம் என நான் நினைக்கிறன். வேறு காரணிகளும் இருக்கலாம். தயவு செய்து சுயநல  அரசியலை விட்டு மீண்டும் யாழ் நாட்டின் தலை என நிமிரும் வழி  செய்வோம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

இது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம்.   ஏற்கனவே சாதாரண தர பரீட்சையில் யாழ் 22 மாவட்டங்களில் 21வது இடத்தை பெற்றதாக தகவல். நான் படிக்கும் காலத்தில் கிழக்கிலுள்ள தமிழரும் முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்தில் வந்து படித்தார்கள். இலங்கையின் மூளை என யாழ் இருந்த காலம் மீண்டும் வருமா? மூளை சாலிகளின் வெளியேற்றமும் இருப்பவர்கள் வெளிநாடு போவதே குறியாக இருப்பதும் அவர்களை நம்பிக்கையுடன் வாழவிடாது  அங்கே  வாழ்வதே வீண் என புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் மீண்டும் நிருபிக்க முயல்வதும் இதற்கு காரணம் என நான் நினைக்கிறன். வேறு காரணிகளும் இருக்கலாம். தயவு செய்து சுயநல  அரசியலை விட்டு மீண்டும் யாழ் நாட்டின் தலை என நிமிரும் வழி  செய்வோம்

உது தான் இப்ப பொிய பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

உது தான் இப்ப பொிய பிரச்சனை.

வங்கியில் ஒரு அதிகாரியாக மாதம் 50 ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்தது ஒன்று 

லா சப்பலில் வந்து நின்று   கோப்பை கழுவுது......

என்னத்தை சொல்ல.....?

நாலு சாத்தணும் போல இருக்கு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓஎல் கிட்ட வரவே பொடிக்கு காதில விழ வீட்டில கதைக்கிறது பாஸ் பண்ணாட்டி தமையனை அனுப்பின மாரி லன்டன் கனடாக்கு அனுப்பவேணும் எண்டு பொட்டை இருக்க வீட்டுக்கு வாறபோற இனசனம் பக்கத்து வீட்டுக்கு சொல்லுறது தமக்கைக்கு பாத்த மாரி வெளிநாட்டு பக்காமா சோதினை மிடிஞ்ச கையோட புறோக்கரிட்ட சொல்லி பாக்க சொல்லவேணும் என்டு. இந்த லட்சனத்தில வீட்டில தேப்பன் தாய் இருந்தா பொடிபொட்டைக்கு படிப்பு யோசனை வருமோ? மன்டையிலதான் ஏறுமோ? வெளிநாட்டுக்கனவுதான் 16 வயசிலையே பொடிபொட்டைக்கு ஊரில. இப்பிடி இருக்கிற சமூகம் எங்க விளங்குமோ?நாசாமாத்தான் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Thirdeye said:

ஓம் ஓஎல் கிட்ட வரவே பொடிக்கு காதில விழ வீட்டில கதைக்கிறது பாஸ் பண்ணாட்டி தமையனை அனுப்பின மாரி லன்டன் கனடாக்கு அனுப்பவேணும் எண்டு பொட்டை இருக்க வீட்டுக்கு வாறபோற இனசனம் பக்கத்து வீட்டுக்கு சொல்லுறது தமக்கைக்கு பாத்த மாரி வெளிநாட்டு பக்காமா சோதினை மிடிஞ்ச கையோட புறோக்கரிட்ட சொல்லி பாக்க சொல்லவேணும் என்டு. இந்த லட்சனத்தில வீட்டில தேப்பன் தாய் இருந்தா பொடிபொட்டைக்கு படிப்பு யோசனை வருமோ? மன்டையிலதான் ஏறுமோ? வெளிநாட்டுக்கனவுதான் 16 வயசிலையே பொடிபொட்டைக்கு ஊரில. இப்பிடி இருக்கிற சமூகம் எங்க விளங்குமோ?நாசாமாத்தான் போகும்.

 

இங்கே இப்ப ரசிகர் மன்றம் அமைத்து உதவி செய்றாங்கள் 

இது எழுபதுகளிலேயே தொடங்கிவிட்டது .

இந்த வெளிநாட்டு படையெடுப்பிற்கு நாட்டு பிரச்சனையும் தரப்படுத்தலும் தான் முக்கிய காரணமாக இருந்தாலும்,

வெளிநாட்டில் இருந்து வந்த பணம், அவர்கள் நாட்டிற்கு திரும்பி வந்து காட்டும் பந்தா ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களையும் வெளிநாட்டு மோகத்தில் ஆழ்த்திவிட்டது 

வெளிநாடு வந்தர்களுததான் தான் தெரியும் அதன் கொடுமை அதுவும் வயது செல்லத்தான் அந்த ஞானமும் பிறக்கின்றது .

நாட்டில் இருப்பவர்கள் மாறப்போவதே இல்லை அவர்களிலும் பிழையில்லை வெளிநாட்டு மோகம் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் ஒன்றுதான் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் நாங்கள் வாழுகிறோம் ஆனால் நாம் அந்நியர்களாகவே உணர்கிறோம். சரி ஊருக்குப் போய் பாருங்கள் வெளிநாட்டில் வாழ்வதால் அங்கும் நாம் அந்நியர்தான்.

அண்மையில் ஒரு செய்தி வாசிச்சிருப்பியள், ஒஆடசாலை மாணவர் ஒருவர் ஆசிரியரை வகுப்பறையில்வைத்து அடித்ததால் குறிப்பிட்ட ஆசிரியர் கோமாநிலையில் இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றதாக.

இது நடந்தது கொக்குவில் பக்கத்தில் ஒன்றாகப்படித்த பாடசாலை மாணவியை ஆசிரியர் காதலிக்க முயற்சிக்கிறார் என அம்மாணவியே பெடியனுக்குச் சொல்ல பையன் கதிரையால எடுத்து இறுக்கிவிட்டுட்டான் காரணம் அம்மாணவன் சம்மந்தப்பட்ட மாணவியை காதலிப்பதாகச் செய்தி வருகுது.

இப்போதைய படிப்பு இந்தமட்டில்தான் வருகுது.

வெளிநாட்டுக்காசு இதனால் படிப்பெல்லாம் பாழ்பட்டுப்போச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.