Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை

Featured Replies

நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை
 
 

article_1461408033-water.jpgசெல்வநாயகம் கபிலன்

புத்தூர், வரலாற்று பிரசித்தி வாய்ந்த நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை (23) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கற்கோவளம் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்;.

யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த முதியவர் கிணற்றில் பாய்ந்துள்ளார்;. அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்;த்த போது குறித்த முதியவர்; நீரில் மூழ்குவதை கண்டுள்ளனர்.

மேற்படி முதியவர்; யாழ். பல்கலைகழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக கடமையாற்றியுள்ளார்.

இவர்; தற்கொலை செய்யும் எண்ணத்துடன் குதித்தாரா? அல்லது அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக குளிப்பதற்காக குதித்தாரா? என இதுவரை அறியப்படவில்லை.

சடலத்தினை மீட்பதற்கு கடற்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/170526#sthash.z2yh9xA2.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நிலாவரையில் பூப்போட்டால் கீரிமலையில் வந்து மிதக்கும் என்ற ஐதீகம் உள்ளது. அந்தச் செய்தி தென்னிலங்கை யாத்திரீகர்களையும் சுண்டியிழுத்துத் தினம்தோறும் அங்கு குவியவைக்கிறது. :shocked:

முதியவரைக் கீரிமலைக்குச் சென்று தேடினால் கிடைக்கலாம். :unsure:

16 minutes ago, Paanch said:

நிலாவரையில் பூப்போட்டால் கீரிமலையில் வந்து மிதக்கும் என்ற ஐதீகம் உள்ளது. அந்தச் செய்தி தென்னிலங்கை யாத்திரீகர்களையும் சுண்டியிழுத்துத் தினம்தோறும் அங்கு குவியவைக்கிறது. :shocked:

முதியவரைக் கீரிமலைக்குச் சென்று தேடினால் கிடைக்கலாம். :unsure:

ஆமா இந்த கதையை சின்ன வயதில நீங்களுமா நம்பினீங்கள் :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அந்தச் செய்தி தென்னிலங்கை யாத்திரீகர்களையும் சுண்டியிழுத்துத் தினம்தோறும் அங்கு குவியவைக்கிறது

அப்ப நிலாவரையும் கன்னியா வெந்நீருற்றுப் போன்று.. புத்தர் உச்சா இருந்த இடம் என்று பெளத்த சாசன.. தொல்பொருளியல்.. சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு.. புத்தரின் புனித பூமியாகிடும் என்றீங்க. tw_angry::rolleyes:

  • தொடங்கியவர்
நிலாவரை கிணற்றின் 152 அடி ஆழத்திலிருந்து சடலம் மீட்பு
 
24-04-2016 10:21 AM
Comments - 0       Views - 37

article_1461473653-aa.jpgசெல்வநாயகம் கபிலன்

வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், ஞாயிற்றுக்கிழமை (24) கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (23) பிற்பகல், நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.  

சனிக்கிழமை (23) இரவு வரை அவரை இனங்காணாத நிலையில், திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து கடற்படையின் நீர்முழ்கி வீரர்கள் காங்கேசன்துறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

சுழியோடிகள், நீர்மூழ்கி வீரர்கள் என இரு பிரிவுகளாக தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், குறித்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நவீன ஜீ.பீ.எஸ் கருவிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில்,  சடலம் நீரின் 152 அடி ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, வீரர்களால் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/170540/%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-#sthash.m0kjSOiY.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.