Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பாடசாலைகளில் சீன மற்றும் தமிழ் சிறார்கள் முன்னிலையில்!!

Featured Replies

பிரித்தானிய பாடசாலைகளில் சீன மற்றும் தமிழ் சிறார்கள் முன்னிலையில்!!

பிரித்தானிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சீனச் சிறுவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஆய்வறிக்கை கூறுகின்றது.

முன்னேறுவதற்கான துடிப்பான பெற்றோரின் சிந்தனையும் அவர்களது வீடுகளில் பின்பற்றப்படும் அமைதியான நடைமுறைகளுமே இவ்வளர்ச்சிக்கு காரணம் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.

spinny-520606

கடந்த ஆண்டு கணிப்பின்படி 1600 சீனச்சிறுவர்கள் தங்களது தாய்மொழியாக சீனமொழியை பதிவுசெய்திருக்கின்றார்கள். 2800 தமிழ்ச்சிறுவர்களும் தங்களது தாய்மொழியாக தமிழை பதிவுசெய்திருக்கின்றார்கள்.

பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர்ந்த 317 மொழிகளை சேர்ந்த வெளிநாட்டினர் கல்விகற்றுவருகின்றார்கள். அதில் ஆகக்கூடுதலான இடத்தை உருது மொழியினரும் (144000) பொலிஸ் மொழியை (113000) இனரும் பஞ்சாபி மொழியை (105000) சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

speak-520609

http://tamilleader.com/

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நல்ல திறமைசாலிகள் என்பதை, அடுத்த தலைமுறையும்... நிரூபிப்பது மகிழ்ச்சியானது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறார்கள் என்ற செய்தி வந்ததாக தெரியவில்லை. குறிப்பாக.. ஆசிய மாணவர்களில்.. சீன வம்சாவளி மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள்.. (பாகிஸ்தான்.. பங்களாதேஷ் அடங்காது)..  முன்னிலை என்று அண்மையில் பிபிசியில் செய்தி வந்திருந்தது. அதனை உல்டா பண்ணி தமிழ் மாணவர்கள் என்று வடித்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஈழத்தமிழ் மாணவர்களையும்.. இந்திய வம்சாவளி மாணவர்கள் வட்டகைக்குள் தான் வைத்துக் கருதுகிறார்கள். ஈழத்தமிழ் சமூகம்.. இந்திய சமூகத்தோடு ஒப்பிடும் போது பிரித்தானியாவில் சிறியது. 

Chinese and Indian pupils get more top grades at GCSE than British children

http://www.dailymail.co.uk/news/article-1261415/Chinese-Indian-pupils-grades-GCSE-British-children.html

British children from poorest homes 'being failed at school'

By comparison, some 73.5 per cent of poor Chinese pupils made the grade, while 57 per cent of Indian and 56 per cent of Bangladeshi teenagers gained good results.

http://www.telegraph.co.uk/education/educationnews/9071991/British-children-from-poorest-homes-being-failed-at-school.html

(எம் ஊடகங்கள் செய்தி புனையும் போது தங்கள் வசதிக்கு.. எடுத்து விடுவது.. மறைத்து விடுவது.. மறந்து விடுவது.. சும்மா தாராளமா நடக்குது. அண்மையில்.. கிழக்கில் நடக்கும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகச் செய்திகளிலும் இதனைக் காணலாம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அதானே... பாத்தன், சிலோன் தமிழ் ஆக்கள் அநேகமானவர்கள் வீட்டில் ஆங்கிலம் கதைத்து தம்மை பிரிட்டன் பிரஜைகளாக காட்டிக் கொள்பவர்கள் என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

அதானே... பாத்தன், சிலோன் தமிழ் ஆக்கள் அநேகமானவர்கள் வீட்டில் ஆங்கிலம் கதைத்து தம்மை பிரிட்டன் பிரஜைகளாக காட்டிக் கொள்பவர்கள் என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.tw_blush:

அப்படி ஒன்னும் இல்லை. பார்க்கிறது தமிழ் படம் தான். ஆனால் பேசுறது ஆங்கிலத்தில். சாப்பிடுறது சோறு தான்.. ஆனால் அழுது வடிப்பது ஆங்கிலத்தில். சும்மா ஒரு பந்தா தான். நமக்கு தான் வெட்டி பந்தாவில ஒரு அலாதிப் பிரியமில்ல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அப்படி ஒன்னும் இல்லை. பார்க்கிறது தமிழ் படம் தான். ஆனால் பேசுறது ஆங்கிலத்தில். சாப்பிடுறது சோறு தான்.. ஆனால் அழுது வடிப்பது ஆங்கிலத்தில். சும்மா ஒரு பந்தா தான். நமக்கு தான் வெட்டி பந்தாவில ஒரு அலாதிப் பிரியமில்ல. tw_blush:

அவர்கள்... கையாலயா Smiley , கரண்டியாலையா.... Eating emoticon (Eating smileys) சோறு சாப்பிடுகின்றவர்கள். Smiley

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவர்கள்... கையாலயா Smiley , கரண்டியாலையா.... Eating emoticon (Eating smileys) சோறு சாப்பிடுகின்றவர்கள். Smiley

கரண்டியால.. சோறு.. கையால முருக்கங்காய் வழிக்கிறது.. இப்படி எத்தினை நடக்குது இங்க. tw_blush:tw_yum:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nedukkalapoovan said:

தமிழ் சிறார்கள் என்ற செய்தி வந்ததாக தெரியவில்லை. குறிப்பாக.. ஆசிய மாணவர்களில்.. சீன வம்சாவளி மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள்.. (பாகிஸ்தான்.. பங்களாதேஷ் அடங்காது)..  முன்னிலை என்று அண்மையில் பிபிசியில் செய்தி வந்திருந்தது. அதனை உல்டா பண்ணி தமிழ் மாணவர்கள் என்று வடித்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஈழத்தமிழ் மாணவர்களையும்.. இந்திய வம்சாவளி மாணவர்கள் வட்டகைக்குள் தான் வைத்துக் கருதுகிறார்கள். ஈழத்தமிழ் சமூகம்.. இந்திய சமூகத்தோடு ஒப்பிடும் போது பிரித்தானியாவில் சிறியது. 

Chinese and Indian pupils get more top grades at GCSE than British children

http://www.dailymail.co.uk/news/article-1261415/Chinese-Indian-pupils-grades-GCSE-British-children.html

British children from poorest homes 'being failed at school'

By comparison, some 73.5 per cent of poor Chinese pupils made the grade, while 57 per cent of Indian and 56 per cent of Bangladeshi teenagers gained good results.

http://www.telegraph.co.uk/education/educationnews/9071991/British-children-from-poorest-homes-being-failed-at-school.html

(எம் ஊடகங்கள் செய்தி புனையும் போது தங்கள் வசதிக்கு.. எடுத்து விடுவது.. மறைத்து விடுவது.. மறந்து விடுவது.. சும்மா தாராளமா நடக்குது. அண்மையில்.. கிழக்கில் நடக்கும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகச் செய்திகளிலும் இதனைக் காணலாம்.)

Children whose mother tongue is Tamil are also doing better than those whose first language is English.

அண்ணை  இந்த லிங்கை ஒருக்கால் பாருங்கோ

http://www.express.co.uk/news/uk/663801/Chinese-speaking-English-pupils-reading-writing

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை உறுதிப்படுத்துவதற்கான லிங்கை இணைத்தமைக்கு நன்றி.

வர வர எங்கட ஊடகங்களை நம்ப முடிவதில்லை. அதுதான்... இந்தச் சந்தேகம். 

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

தமிழ்சிறீ அண்ணா.. செய்தி உண்மை தான். அப்போ நீங்கள் மகிழ்ச்சி அடைவதில் நியாயமுள்ளது.  எங்களுக்கும் மகிழ்ச்சியே. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Athavan CH said:

பிரித்தானிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சீனச் சிறுவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஆய்வறிக்கை கூறுகின்றது.

பிரித்தானிய பாடசாலைகளில் சீன மற்றும் தமிழ் சிறார்கள் முன்னிலையில்!!

சீனனுக்கு கொடி போட்டிருக்கு....எங்கை தமிழன்ரை கொடியை காணேல்லை....ஓ  நாடில்லாத அனாதைகளோ??????

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

அப்படி ஒன்னும் இல்லை. பார்க்கிறது தமிழ் படம் தான். ஆனால் பேசுறது ஆங்கிலத்தில். சாப்பிடுறது சோறு தான்.. ஆனால் அழுது வடிப்பது ஆங்கிலத்தில். சும்மா ஒரு பந்தா தான். நமக்கு தான் வெட்டி பந்தாவில ஒரு அலாதிப் பிரியமில்ல. tw_blush:

தமிழில பிள்ளையல ரோட்டில பேசுவம், எதிரில் வெள்ள, கறுவல் வந்தாலும் ஓகே. ஆனால் தமிழர் வந்தால், ஆங்கிலத்தில்... சும்மா ஒரு பந்தா தான். :cool:

******

தமிழர் படிப்பில் சீனர்களுடன் போட்டி என்பது உண்மை. பிரச்சனை என்னவென்றால் பாடசாலைகளில் ஆய்வு எடுக்கும் பதிவத்தில், பாகிஸ்தானியர், பங்களாதேஸியர், இந்தியர், பிரிட்டிஸ் ஆசியர் (ஆபிரிக்காவிருந்து வந்த இந்தியர்) வேறு ஆசியர் என்ற பிரிவுகளே உள்ளன. தமிழர்கள், சிலர் வேறு ஆசியர் எனவும் சிலர் பிரிட்டிஸ் ஆசியர் எனவும் பதிவு இடுகின்றனர். விபரம் தெரிந்தவர்கள் other என்ற இடத்துக்கு எதிராக சிறிலங்கன் தமிழ் என எழுதுவார்கள்.

குழுப்பம் தீர எங்கண்ட 'நாடு கடந்த அரசாங்கம்' :grin: மக்களுக்கு எவ்வாறு குறிப்பது என அறிவிக்கோனும். 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.