Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்தார்:

Featured Replies

ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்தார்:

 
Bookmark and Share
 

தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்தார்:

 


விடுதலைப்புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்ததாக அவரது தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா தெரிவித்து உள்ளார்.

விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது தொடர்பில் நீர்வேலி தெற்கில் வசித்து வரும் அவரது தாயாரிடம் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும்  தெரிவிக்கையில்,

எனது மகன் 1975ம் ஆண்டு 10ம் மாதம் 4ம் திகதி பிறந்தவர். பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்த வேளை 1989ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் இருந்ததில்லை.

அந்நிலையில் 2007ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி ஏறாவூரில்  இடம்பெற்ற மோதலில் நகுலன் உயிரிழந்து விட்டதாக 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி இராணுவம் அறிவித்தது. இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் அது தொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

அதன் பின்னர் மீண்டும் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதி வார பகுதியில் நகுலன் இலங்கை இராணுவத்தின் இரகசிய முகாம்களில் ஒன்றான மின்னேரியா இராணுவ முகாமினுள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அதனை நாம் கேள்வியுற்று ஒருவர் எவ்வாறு இரு தடவை உயிரிழக்கலாம் என நாம் அது தொடர்பில் யாழில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் நாள் அன்று எம்மை இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் மட்டக்களப்புக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் எம்மை தங்க வைத்தனர்.

அந்த விடுதிக்கு எமது மகனை அழைத்து வந்து எம்முடன் கதைக்க விட்டனர். அதன் பின்னர் மகனை மீண்டும் அழைத்து சென்றனர். அவ்வேளை மகனுக்கு திருமணத்திற்கு பெண் பாருங்கள் அவரை விரைவில் விடுதலை செய்வோம் என மகனை அழைத்து வந்தவர்கள் கூறி சென்றனர்.

அதன் பின்னர் நாங்கள் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் முற்றான பின்னர் 2013ம் ஆண்டு நடுப்பகுதியில் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தனர்.

மகனின் விடுதலையை அடுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்தோம் திருமணத்தின் போது இராணுவத்தினர் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர் அத்துடன் அவர்கள் திருமண வேலைகளில் கூட உதவி ஒத்தாசைகள் செய்தனர்.

திருமணம் முடிந்து 15ம் நாள் மீண்டும் எனது மகனை கைது செய்து கொண்டு சென்றனர். பின்னர் ஒரு மாதத்தின் பிறகு விடுதலை செய்தனர்.

திருமணத்தின் பின்னர் மகன் விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தார் அவருடைய மனைவி ஆசிரியை ஆவார். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

அவ்வேளைகளில்  நீர்வேலி இராணுவ முகாமில் இருந்து வருவதாக ரவி மற்றும் மோகன் என தம்மை அறிமுகம் செய்து கொண்ட இருவர் வந்து மகனுடன் கதைத்து செல்வார்கள். சில வேளை தமது முகாமுக்கு அழைத்து செல்வார்கள். அங்கு என்ன நடந்தது என மகன் எமக்கு எதுவும் கூறுவதில்லை.

எமது மகனுடன் தொடர்பில் இருந்த ரவி மற்றும் மோகன் ஆகிய இருவரும் எம்முடனும் நன்றாகவே பழகினார்கள் எம்முடனும் வந்து நலம் விசாரித்து கதைப்பார்கள்.

இந்த சம்பவங்களுக்கு பின்னர் கடந்த பல மாதங்களாக எவருடைய தொந்தரவும் இல்லாமல் மகன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

அந்நிலையில் கடந்த 25ம் திகதி திங்கட்கிழமை மாலை வேளை வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் மூவர் வந்து இருந்தனர். அதில் ஒருவர் நன்றாக தமிழ் பேசினார் மற்றவருக்கு தமிழ் தெரியாது என கூறினார் மற்றையவர் முச்சக்கர வண்டியில் அமர்ந்து இருந்தார்.

தமிழ் கதைத்தவர் மகன் எங்கே என கேட்டார். மகன் வன்னியில் உறவினர் ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று உள்ளார் என கூறினேன்.

அப்ப நாங்கள் நாளை வருகின்றோம் என கூறி சென்றார்கள்.  அதன் படி மறுநாள் செவ்வாய்க்கிழமை(நேற்றைய தினம்) காலையில் வீட்டுக்கு வந்தார்கள் வந்தவர்கள் மகன் எங்கே என கேட்டார்கள். அவ்வேளை மகன் தோட்டத்தில் உள்ளார் ஏன் மகனை விசாரிக்கிறீர்கள் என கேட்டேன். மகனிடம் விசாரணை ஒன்று மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள். .

அதன் பின்னர் தோட்டத்திற்கு செல்லும் வழியை கேட்டார்கள். விசாராணை செய்ய என்றால் நான் மகனை வீட்டுக்கு அழைக்கின்றேன். வீட்டில் வைத்து விசாரணை செய்து விட்டு செல்லுங்கள் என நான் கூறினேன். அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள்.

நானும் மகனை அவர்களின் கூற்றை நம்பி அழைத்தேன். வீட்டுக்கு வந்த மகனை யாழில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து விட்டு விடுகின்றோம் என அழைத்து சென்றார்கள். அதன் போது தந்தையாரும் தானும் வருவதாக கூறி அவர்களுடன் சென்றார்.

அங்கு சென்ற பின்னர் மேலதிக விசாரணைக்காக வவுனியா அழைத்து செல்கின்றோம் என கூறி தந்தையை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

புனர்வாழ்வு பெற்று திரும்பிய மகனின் கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131549/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2 நாளில் நகுலன் பற்றி எமது ஊடகங்கள் எழுதித் தள்ளியவை...

1. அவர் இறுதிப் போரின் போது வடக்குக்கு வெளியில் இருந்தார்.

2. வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்று ரகசியமாகத் திரும்பி இருந்தார்.

3. ராமுடன் சேர்ந்து கருணாவுடன் தொடர்பு வைத்து காட்டிக்கொடுத்துவிட்டு புனர்வாழ்வு பெற்று வந்தார்.

4. அவர் இறுதிப் போரின் போது தலைமறைவாகி.. புனர்வாழ்வே பெறாமல்.. ஒளித்து மீண்டும்.. தோன்றினார்.

 இப்படி 4 விதமாக ஒரு நிகழ்வை வைச்சு கதை.. எழுதக் கூடிய அளவுக்கு எமது ஊடகங்கள் (வீரகேசரி உட்பட) இருக்கின்றன. இவர்கள் செய்தி புனைகிறார்களா இல்ல.. புனை கதை எழுதுகிறார்களா..

இதில இங்கு சிலர் எமது ஊடகச் செய்திகளை அப்படியே நம்ப வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். :rolleyes:tw_angry:

இணைய  போராளிகள்  எதுவும்  செய்யாமல்  இப்படி  கீபோட்டில்  அடிச்சு  எழுத்தை  அழிக்கவேண்டியது  தான் ....ஒரு   காரியமும்  ஆகாது பாவம்  முன்னால்  போராளிகள்  நிலை .

  • கருத்துக்கள உறவுகள்

நகுலன் ராமுடன் தெற்கில் இருந்ததும் உண்மை கருணாவின் தொடர்பில் இருந்ததும் உண்மை. 

59 minutes ago, nedukkalapoovan said:

கடந்த 2 நாளில் நகுலன் பற்றி எமது ஊடகங்கள் எழுதித் தள்ளியவை...

1. அவர் இறுதிப் போரின் போது வடக்குக்கு வெளியில் இருந்தார்.

2. வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்று ரகசியமாகத் திரும்பி இருந்தார்.

3. ராமுடன் சேர்ந்து கருணாவுடன் தொடர்பு வைத்து காட்டிக்கொடுத்துவிட்டு புனர்வாழ்வு பெற்று வந்தார்.

4. அவர் இறுதிப் போரின் போது தலைமறைவாகி.. புனர்வாழ்வே பெறாமல்.. ஒளித்து மீண்டும்.. தோன்றினார்.

 இப்படி 4 விதமாக ஒரு நிகழ்வை வைச்சு கதை.. எழுதக் கூடிய அளவுக்கு எமது ஊடகங்கள் (வீரகேசரி உட்பட) இருக்கின்றன. இவர்கள் செய்தி புனைகிறார்களா இல்ல.. புனை கதை எழுதுகிறார்களா..

இதில இங்கு சிலர் எமது ஊடகச் செய்திகளை அப்படியே நம்ப வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். :rolleyes:tw_angry:

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

நகுலன் ராமுடன் தெற்கில் இருந்ததும் உண்மை கருணாவின் தொடர்பில் இருந்ததும் உண்மை. 

 

இப்ப என்னாச்சு அந்தத் தொடர்புக்கு.. ஏன் கைது...?!  முரளிதரன் இப்ப அமைச்சராக.. துணை அமைச்சராக இல்லையோ..??! அல்லது முரளிதரன் தன் தலைமையில்.. சிங்களவனுக்காகப் போராடப் புறப்பட்டது மைத்திரி.. ரணிலுக்குப் பிடிக்கல்லையா..??! tw_blush::rolleyes:

விடுங்க ஆளாளுக்கு புனை கதையா எடுத்து விடுறாங்க..

இந்தத் தாயின் குரலை தான் இப்ப ஓரளவுக்கு நம்பலாம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு தெரிந்ததையே எழுதினேன். அந்த தொடர்பின் மூலமே இவர் சிக்கல் பிடுங்கல் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்.

 

இப்ப இந்த கைது மகிந்தவின் திருவிளையாடல் ஏதும் இருக்கலாம், மேதின நிகழ்வுக்காக என்பது சந்தேகமே. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

'நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்| அவன் ஏன் ஒழிந்திருக்கவில்லை?'
28-04-2016 06:56 AM
எம்.றொசாந்த்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிபிள்ளையை ஒளிந்திருக்குமாறு நான் சொன்னேன் என்று கூறிய நீர்வேலி முகாமிலிருந்து நகுலனின் வீட்டுக்கு வந்து செல்லும் ரவி, அவன் ஏன் ஒழிந்து இருக்கவில்லை என்றும்; கேட்டுள்ளார்.

நகுலன், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியிலுள்ள அவரது தோட்டக் காணியில் வைத்து செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.

நகுலன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில், அவரது தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா, தமிழ்மிரருக்கு நேற்றுப் புதன்கிழமை (27) கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

'1975ஆம் ஆண்டு பிறந்த எனது மகன், 1989ஆம் ஆண்டு (14 வயதில்), விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். அதன்பின்னர், அவருக்கும் எங்களுக்குமிடையில் எவ்விதத் தொடர்புகளும் இருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பில் சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படைப்பிரிவில் தளபதியாக இருந்ததாக அறிந்தோம். இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக இராணுவம், 2007ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர், நகுலன் உள்ளிட்ட தளபதிகள், இறுதி யுத்;தத்தில் கொல்லப்பட்டதாக, 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம் மீண்டும் கூறியது.

இதனையடுத்து நாங்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். ஷஒருவரை இரண்டு முறை இறந்ததாக அறிவிக்கின்றனர். உண்மை நிலை என்ன என்று அறியவேண்டும்... எனக் கோரினோம்.

அதன்பின்னர், 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில், நகுலன் வெளிநாடு தப்பிச் செல்ல முற்பட்டபோது கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டதாக இராணுவம் கூறியது.

தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு மாவீரர் தினத்தன்று, எங்களை மட்டக்களப்பு வாருங்கள் என்று இராணுவத்தினர் அழைத்து, அங்குள்ள விடுதியில் எங்களைத் தங்க வைத்தனர். அங்கு மகனை அழைத்துவந்து, எங்களுடன் கதைக்க வைத்தனர். மகன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும், அவருக்குத் திருமணம் செய்துவைத்தால் விடுதலை செய்கின்றோம் எனவும் இராணுவத்தினர் எங்களுக்குக் கூறினர்.

அதற்கமைய நாங்கள், மகனுக்குப் பெண் தேடி, 2013ஆம் ஆண்டு, ஆசிரியை ஒருவருக்குத் திருணம் செய்துவைத்தோம். திருமணத்தில், இராணுவத்தினரும் பங்குபற்றினர். சிவில் உடையில் வந்தவர்கள், திருமண வீட்டுக்கான உதவிகளையும் செய்தனர். திருமணம் முடிந்து 15ஆவது நாள், மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு மாதம் கழிந்ததன் பின்னர் அவரை விடுதலை செய்தனர்.

இதன்பின்னர், நீர்வேலி இராணுவ முகாமில் இருந்து வந்த ரவி, மோகன் என தங்களை அறிமுகப்படுத்திய இருவர், மகனுடன் தொடர்புகளைப் பேணினர். அவர்கள், எங்கள் வீட்டுக்கு வந்து, எங்களுடனும் நெருக்கமாகப் பழகினர்.
மகனை முகாமுக்குக் கூட்டிச் செல்வார்கள், பின்னர் கூட்டி வருவார்கள். தொந்தரவு என்று இல்லாமல் இருந்தார்கள். எனினும், முகாமுக்குச் சென்று வருவது தொடர்பில், மகன் எங்களுக்கு எதுவும் சொல்வதில்லை.

இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை இரவு, வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வந்த மூவர், மகன் தொடர்பில் விசாரித்தனர். மகன் எங்கே எனக் கேட்டனர். மகன், கிளிநொச்சியில் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தார் எனக் கூறினோம்.

அவர்கள், மறுநாள் செவ்வாய்க்கிழமையும் வீட்டுக்கு வந்தனர். மகனைக் கேட்;டனர். மகன் தோட்டத்தில் இருப்பதாகக் கூறினோம். தோட்டம் எங்கு இருக்கின்றது என்று கேட்டார்கள். ஷவீட்டுக்குக் கூப்பிடுகின்றோம். இங்கு வைத்து விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்... என்று கூறி, தோட்டத்திலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்தோம்.
வீட்டுக்கு வந்த மகனை, முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டனர். நாங்கள் மறுப்புத் தெரிவிக்க, யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்துக்குக் கூட்டிச் சென்று விசாரித்துவிட்டு விடுதலை செய்கின்றோம் என்று கூட்டிச் சென்றனர். தற்போது, வவுனியாவில் வைத்துள்ளதாக அறிகின்றோம்.

நீர்வேலி முகாமில் இருந்து வீட்டுக்கு வந்து செல்லும் ரவியிடம் தொடர்புகொண்டு, ஷமகனைத் திரும்பப் பிடித்துவிட்டார்கள்... என்று சொன்னோம். அதற்கு அவர், ஷஅவனை ஒளிந்து இருக்கச் சொன்னேன். ஏன் ஒளிந்து இருக்கவில்லை?... என்று கேட்டார். ஆத்திரமடைந்த நான், ஷபுனர்வாழ்வு பெற்ற ஒருவர், ஏன் ஒளிக்க வேண்டும்? ஒளிவது என்றால் எத்தனை நாட்களுக்கு ஒளிந்து இருப்பது?... எனக் கேட்டேன்.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்டத் தளபதியான ராம் என அழைக்கப்படும் எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் கைது செய்யப்படும் போது, நானும் கைது செய்யப்படுவேன் என நகுலன் எனக்குக் கூறினான்' என, நகுலனின் தாயார் தெரிவித்தார்.

இதேவேளை, நகுலன் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவரது மனைவி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில்,  நேற்று முறைப்பாடு செய்துள்ளார் என்று அவ்வாணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் உறுதிப்படுத்தினார்.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ), கடந்த 24ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாகவே, நகுலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்;ளார் என்றும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/170844#sthash.aDl7PCnT.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அஞ்சரன் said:

இணைய  போராளிகள்  எதுவும்  செய்யாமல்  இப்படி  கீபோட்டில்  அடிச்சு  எழுத்தை  அழிக்கவேண்டியது  தான் ....ஒரு   காரியமும்  ஆகாது பாவம்  முன்னால்  போராளிகள்  நிலை .

புத்தகங்கள் வெளீயீடு செய்பவர்களை என்ன வேண்டும் 

இவர்கள் கதிரை போராளிகள் மட்டுமே  காலத்தை கடத்தி புனைகதை புனைந்து கடந்து செல்பவர்கள் அவர்களுக்காக வாழக்கை தொலைத்தவர்களை நினைத்தும் பார்க்காவர்கள். 

8 hours ago, முனிவர் ஜீ said:

புத்தகங்கள் வெளீயீடு செய்பவர்களை என்ன வேண்டும் 

இவர்கள் கதிரை போராளிகள் மட்டுமே  காலத்தை கடத்தி புனைகதை புனைந்து கடந்து செல்பவர்கள் அவர்களுக்காக வாழக்கை தொலைத்தவர்களை நினைத்தும் பார்க்காவர்கள். 

போராட்ட  அடித்தளம்  இட்டதே  இவ்வாறான  எழுத்துக்களும்  சந்திப்புக்களும்  தான் ..முகத்தை  மூடி  வைத்துக்கொண்டு  கீபோட்டு  தேய  புரட்சி  பேசுவது  இல்லை  நாடு  பிடிப்பது .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அஞ்சரன் said:

போராட்ட  அடித்தளம்  இட்டதே  இவ்வாறான  எழுத்துக்களும்  சந்திப்புக்களும்  தான் ..முகத்தை  மூடி  வைத்துக்கொண்டு  கீபோட்டு  தேய  புரட்சி  பேசுவது  இல்லை  நாடு  பிடிப்பது .

உன்மை தான்

ஆனால் காலம் கடந்த பின் இவர்கள்  காட்டும் கூத்து இன்னும் பலருக்கு  (இலங்கையில்) இடைஞ்சலாக அமைகிறது உதாரணமாக பல கைது களை சொல்லலாம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.