Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாய ராஜபக்ஸ மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை? – சரத் பொன்சேகா

Featured Replies

கோதபாய ராஜபக்ஸ மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை? – சரத்

பொன்சேகா

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன் போது முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

'போர் இடம்பெறாத காலத்தில் காவல்துறையினரின் பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்ளத் தேவையில்லை, எனவே மஹிந்த ராஜபக்ச என்ற நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரின்; பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு அதில் திருப்தி அடைய வேண்டும்.'

'இராணுவத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மஹிந்தவின் அருகாமையில் வைத்துக் கொண்டிருக்கும் கெப்டன் நெவில் போன்றவர்கள் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் பயிற்சி பெற்றுக்கொள்ளவில்லை.'

'கோதபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் சர்ச்சை காணப்படுகின்றது. பயங்கரவாதிகள் ஒருபோதும் 25 மீற்றர் தொலைவில் வைத்து குண்டை வெடிக்கச் செய்திருக்க மாட்டார்கள்.'

'குண்டு துளைக்காத வாகனம் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த பயங்கரவாதிகள் முட்டாள்கள் அல்ல.'

'இந்த குண்டுத் தாக்குதல் நிச்சயமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் தாமகேவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.'

'போர் இடம்பெற்ற காலத்திலும் மஹிந்த ராஜபக்சவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை, அதனை புலனாய்வுத் தகவல்களின் மூலம் தெரிந்து கொண்டோம்.'

'மஹிந்த ராஜபக்சவிற்கு இருந்த அச்சுறுத்தல் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பயங்கரவாதியுடன் இணைந்து தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தமையேயாகும்.'

'போரை செய்த இராணுவத் தளபதிக்கு 15 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் இருக்க முடியுமாயின் போர் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதற்கு எவ்வித சிக்கல்களும் இருக்காது.'

'கூட்டு எதிர்க்கட்சியினர் குரங்குகளைப் போன்று கத்துகின்றனர். உண்மைகள் எதுவெனத் தெரிந்து கொள்ளாது இவ்வாறு கூச்சலிடுகின்றனர்' என சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131776/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நேரில் பார்த்த பல அறிவுஜீவிகள் இங்கு யாழ் களத்தில் இருக்கிறார்கள் 
இவர் இப்படி சொல்கிறார் ???
யாழ் களத்தில் இருந்து இருவரை அங்கு அனுப்ப வேண்டும்போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Maruthankerny said:

நேரில் பார்த்த பல அறிவுஜீவிகள் இங்கு யாழ் களத்தில் இருக்கிறார்கள் 
இவர் இப்படி சொல்கிறார் ???
யாழ் களத்தில் இருந்து இருவரை அங்கு அனுப்ப வேண்டும்போல் இருக்கிறது.

எங்கடை வேலை சங்கு ஊதுறது மட்டும்தான். மற்றும்படி எங்களுக்கு அடிஅத்திவாரம் தெரியோணுமெண்ட அவசியமில்லை

சரத் சொல்வதை நம்பும் அளவிற்கு வந்திருக்கினம் இப்ப .:cool:

இதை சாட்டி இனி ஒண்டுமே நாங்கள் செய்யவில்லை ஆனால் உலகம் பிழையாக விளங்கிவிட்டது உங்கட சங்கை ஊதுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருப்பதற்கு காரணம் 
சொல்வதை செய்வது 
செய்வதை சொல்வது 

உலக பத்திரிகை வந்தாலும் அதுதான் 
ராஜீவை கொன்றீர்களா ?
அது ஒரு துன்பியல் சம்பவம்.

சுவிசில் ஒருவரின் அண்ணரை புலிகள் 1986இல் சுட்டிருந்தார்கள் 
இவர் ஒரே புலி எதிர்ப்பு.
கிட்டு வந்து கூட்டம் வைத்தார் நான் இவரை கூட்டி சென்றேன் 
நான் சொன்னேன் வருவதை நான் பார்க்கிறேன் நீ எழுந்து கேள் ஏன் சுட்டீர்கள் என்று?

கிட்டுவின் பதிலில் நான் அதிர்ந்தே போனேன்.
முதாலவது வார்த்தையே .....
நான்தான் அவரை சுட்டேன்.
இன்ன இன்ன காரணங்களால் தான் சுட்டேன் 
நானே நேரடியாக சென்று அவருக்கு இது பற்றி மன்னிப்பு கொடுத்து 
எச்சரிக்கை செய்தேன். உங்கள் சகோதரி அப்போது உடன் இருந்தார் நீங்கள் அவரிடம் கேளுங்கள் என்றார்.
பின்பு கூட்டம்முடிய உங்களிடம் நான் பேச வேண்டும் என்றார்.

நாங்கள் இருவரும் நின்றோம் 
இவரிடம் மன்னிப்பு கேட்டார் உங்கள் சகோதரர் என்ற முறையில் மனவருத்தம் 
ஆனால் அவருடைய செயல்கள் மன்னிப்பை தாண்டி சென்றுவிட்டது 
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றார்.

சரத் பொன்சேக்காவின் வார்த்தைகளில் யார் வரலாறு படிக்கிறவர்கள் என்பது 
பலருக்கு மறந்து போச்சு.
தமிழினியின் பெயரால் வந்த புத்தகத்தில் 6 வருடம் கழித்து முள்ளி வாய்க்காலை படித்த கூட்டம் 
எமக்கு வகுப்பெடுக்க பார்க்கிறது.
அந்த அளவில் மதி மத்தமம் கொண்டிருக்கின்றது. 

புலிகள்  சென்றது தார்மீக பாதை 
அதில் ஒழித்து செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை.
அதனால்தான் வெட்டை வெளியில் நடந்து சென்றார்கள்.

மனைவியை அடுத்தவினிடம் கூட்டி செல்லும் கேவலம் கெட்டவர்கள்தான் 
எதிரியின் முக மூடிக்குள் ஒழிந்து செல்கிறார்கள்.

புலிகளின் வரலாறு என்பது மிகவும் எளிதானது 
சென்றார்கள் 
வென்றார்கள் 
வந்தார்கள் அல்லது இறந்தார்கள் 

இந்த வெளிப்படை அரிப்பு எடுப்பதால்தான் 
இன்று நேற்றல்ல பல காலமாய் பலர் பேய் கதை பூத கதைகளுடன் 
கிளம்பி இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.