Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இறந்து விட்டார் - விஜயகலாவின் கருத்துக்கு டக்லஸ் பதில்

Featured Replies

பிரபாகரன் இறந்து விட்டார் - விஜயகலாவின் கருத்துக்கு டக்லஸ் பதில்

பிரபாகரன் இறந்து விட்டார் - விஜயகலாவின் கருத்துக்கு டக்லஸ் பதில்

 

எமக்கு கிடைத்த தகவல்களின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என, முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.

இதன்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பிரபாகரனின் மரணச் சான்றிதல் இன்றும் வழங்கப்படவில்லை என்ற கருத்தை வௌியிட்டிருந்தார். இது குறித்து இன்று ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், விஜயகலா மகேஸ்வரன் அரசியல் சுயலாபம் கருதியே இவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனை கொலை செய்தமை தொடர்பான மரபணு (DNA) பரிசோதனை கொலையாளியுடன் பொருத்தப்பட்டதாகவும் அதனையும் மூடிமறைப்பது போன்றே அவரது கருத்துள்ளதாவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கூறினார்.

அத்துடன், தான் அமைச்சராக இருந்த போது யுத்தத்தை நிறுத்துவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், குறிப்பாக அரசாங்கத்துடன் பேசியதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் இது குறித்து பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அவர்கள் இதற்கு முறையாக ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=80230

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனை கொலை செய்தமை தொடர்பான மரபணு (DNA) பரிசோதனை கொலையாளியுடன் பொருத்தப்பட்டதாகவும் அதனையும் மூடிமறைப்பது போன்றே அவரது கருத்துள்ளதாவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கூறினார்.

 

16 minutes ago, நவீனன் said:

தான் அமைச்சராக இருந்த போது யுத்தத்தை நிறுத்துவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், குறிப்பாக அரசாங்கத்துடன் பேசியதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் இது குறித்து பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும். tw_blush:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ நிரந்தர தேசியத் தலைவர்... 
மேதகு வேலுப்பிள்ளை பிரகாரனை வைத்து.....

ஒட்டுக்குழு கட்சியினர் செய்யும்..... காமெடி, சகிக்க முடியாதது.
உங்கள்.... பிழைப்புக்கு.... நம்ம, தலைவன் தான்....  கிடைத்தானா?

அதிலும்.. பார்க்க, பிச்சை எடுத்து.... உழைப்பது மேல்.

  • தொடங்கியவர்

டக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டுக்கு மாவை சேனாதிராசா பதில்

 


 
 
டக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டுக்கு மாவை சேனாதிராசா பதில்

இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று பதிலளித்தார்.

 

காணொளியில் காண்க…

http://newsfirst.lk/tamil/2016/05/டக்ளஸ்-தேவானந்தாவின்-குற/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையள் இப்பிடியே மாறி மாறி மற்றவன் மேலை பழியை போட்டுக்கொண்டு அரசியல் செய்ய வேண்டியதுதான். சிங்களவன்  கண்ணும் கருத்துமாய் தன்ரை வேலையை கச்சிதமாய் செய்துகொண்டிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியும் அதே அமைச்சரவையில் இருந்தவர் தானே.. அவர் மட்டும் எப்படி பொறுப்புத்துறக்கலாம்... மாவை ஐயா. எமது விடுதலைப்போராட்டம் அழியனுன்னு சம் கும்பல் மகிந்தவுடன் ஹிந்தியாவுடன் ஒத்துழைத்தது என்பதை சொல்ல நிறைய சான்றுகள் உள. டக்கிளசும் சுத்தமில்லை... இவையும் இல்லை. tw_angry:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.