Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையின் பின்னணியில் புலிகளை அழித்தவர்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபையின் பின்னணியில் புலிகளை அழித்தவர்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன்

இன்று வடக்கு மாகாண சபையை நடத்துவது ஐங்கரநேசனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் என்றால் அது முழுதான உண்மையாகிவிடாது. இந்த இருவரின் பின்னணியிலும் விடுதலைப் புலிகளின் அழிவுடன் நேரடித் தொடர்புடைய அவுஸ்திரேலிய வாசியான தமிழர் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் என்பவர் செயற்படுகிறார். வட மாகாண சபையின் வெற்றுத் தீர்மானங்கள், சுன்னாகம் நீலத்தடி நீரில்பிரச்சனையில் தொடர்புடைய அழிவுகள் உட்பட நிர்வாகிகளை நியமிப்பதிலும் நிமலன் கார்த்திகேயனை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து நிகழ்த்தப்படும் அழிவுகளின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கு நாடுகளின் முகவர்களாகச் செயற்பட்ட பலர் செயற்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் தமது சொந்த நலன்களுக்காகவும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிவு நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு அளவுகளில் குழுக்களும் தனி நபர்களும் செயற்படுகின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்காக பெரும் நிதி கொடுப்பனவுகளை மேற்கு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்கின்றன.

அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டும் மூன்று வேறுபட்ட குழுக்கள் ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரன் ஊடாக அழிவுகளை ஏற்படுத்த முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்களைத் தொடர்புகொண்டு அவர்களைத் திசைதிருப்புவது. புதிய முற்போக்கு ஜனநாயகக் குழுக்கள் தோன்றிவிடாமல் தடுப்பது, போராளிகளின் தகவல்களைச் சேகரித்து அவற்றை உளவு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது போன்ற நடவடிக்களிலிருந்து, கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது போன்றவை வரை இக் குழுக்களும் தனி நபர்களும் மேற்கொள்கின்றனர்.

போராட்டத்திலும் அரசியலும் அக்கறையுள்ள தனி நபர்களை தமது பண உதவியில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தும் இத் தனி நபர்களும் குழுக்களும் விக்னேஸ்வரனையும் ஐங்கரநேசனையும் விட ஆபத்தானவர்கள். முதமைச்சர் விக்னேஸ்வரன் நிமலன் என்ற முகம்தெரியாத ஐந்தாம் படை ஏஜன்ட் ஒருவரின் கைப்பொம்மையாகச் செயாற்படுகின்ற அளவிற்கு இக் குழுக்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் போன்ற தோற்றப்ப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் இக் குழுகளும் தனி நபர்களும், தாம் பெற்றுக்கொள்ளும் பணத்திற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் ஊடாக இலங்கைப் பேரினவாத அரசிற்குச் சார்பாகச் செயற்படுகின்றனர்.

கொழும்பில் வசிக்கும் சட்டத்தரணி புவிகரன் என்பவரே தமிழ் மக்கள் பேரவை முன் மொழிந்த யாப்பு மாற்ற வரைபை எழுதினார் என கூறிய போதும், அத்தீர்மானம் அவுஸ்திரேலியாவில் நிமலன் கார்த்திகேயன் உட்பட்ட சிலரினாலேயே எழுதப்பட்டது. தவிர, வர்த்தமானியில் பிரசுரிகப்படாத முதலமைச்சரின் சட்டவிரோத நிர்வாக நியமனங்களின் பின்னால் நிமலன் கார்திகேயன் செயற்படுகிறார் என்பது ஆதாரபூர்வமாக நிறுவக்கூடிய உண்மை. கடந்த மாதம் வட மாகண முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட பெண்கள் பிரச்சனை தொடர்பான அமைச்சுக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயலக்சுமி என்பவர் கனடாவில் வசிப்பவர். நிமலன் கார்த்திகேயன் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெர்ந்தொகைப் பணத்தை வாரியிறைத்து கனடாவிலிருந்து தனது அடிமையை இறக்குமதி செய்து இந்தப் பதவியை வழங்கியுள்ளார்.

தவிர, வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் அமைத்த போலி நிபுணர் குழு சுன்னாகம் நிலக்கீழ் நீரை மாசடையவில்லை என அறிவித்தது தெரிந்ததே, இப் போலி நிபுணர் குழுவின் அறிக்கைக்கு முன்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து மற்றொரு போலி அறிக்கையும் ஐங்கரநேசனைக் காப்பாற்றும் நோக்கில் வெளியாகியிருந்தது, இந்த இரண்டு அழிவு நடவடிக்கைகளின் பின்னணியிலும் நிமலன் கார்த்திகேயனின் பங்கே பிரதானமானது, பிரித்தனியாவிற்கு விக்னேஸ்வரன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நிமலனை மீறி அவரை யாரும் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாகவிருந்தது, ஆனால் அதன் பின்னாலிருந்து பெரும் அழிவிற்கான திட்டமிடலை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அமரிக்கவிலிருந்து செயற்படும் இளம் வழக்குரைஞர் தாஷா மனோரஞ்சன், பிரித்தானியாவிலிருந்து கனடாவிற்குச் சென்று அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தில் தமிழ் அமைப்புக்களைக் கையாளும் நோக்கில் வேலைபார்க்கும் மரியோ அருள்தாஸ் போன்ற நிமலனுடன் இணைந்து செயற்படும் உளவு நிறுவன ஏஜன்டுகள் தொடர்பான முழுமையான விபரங்களையும், இவர்களின் மூளையாகச் செயற்படும் சுதா நடராஜா போன்றவர்கள் குறித்தும் விபரிப்பதற்கு முன்பதாக நிமலனின் பின்னணியை அறிந்துகொள்வது அவசியமானது.

United Nations Development Programme (UNDP) என்ற அமைப்பில் தொழில்ரீதியாக 2002 ஆம் ஆண்டு இணைந்துகொண்ட ராசையா நிமலன் கார்த்திகேயன் அதன் ஊடாகவே ஈழப் போராட்டத்தில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். தன்னைத் தீவிர புலி ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட நிமலன் இலங்கை அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக்கொள்வதற்கு UNDP ஐக் காரணம் காட்டினார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களின் பின்னர் கிளிநொச்சியில் UNDP இன் திட்டமிடல் உதவி முகாமையாளராக நியமிக்கப்படுகிறார். 2003 ஆம் ஆண்டில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்புக் கிளையின் தலைவராகப் பொறுப்பேற்ற நிமலன், சுனாமிக் காலத்தில் வழங்கப்பட்ட நிதியை கையாணவர்களில் ஒருவர். பின்னதாக ராஜபக்ச அரசின் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது சுதா நடராஜாவுடன் இணைந்து கலந்துகொண்ட நிமலன் அமெரிக்க உளவாளி ரிச்சார்ட் ஆர்மிதாஜுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி அவரின் நம்பிக்கைக்குரிய ஏஜண்டாக மாறினார்.

அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளராகவிருந்த ரிச்சார்ட் ஆர்மிதாஜ் என்ற பயங்கரவாதி, புலம்பெயர் நாடுகளிலிருந்த தனது முகவர்கள் ஊடாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இடைவெளியை ஏற்படுத்திய பின்னர் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டார். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட ஏஜண்டுகள் இன்றும் தேசியவாதிகள் என்ற வேடமணிந்து அழிவுகளைத் துரிதப்படுத்துகின்றனர்.

இன்று தமிழ்ப் பேசும் வட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் என்ற அழிவு நடவடிக்கைகளின் பின்னால் அணிதிரட்டப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மக்கள் சார்ந்த அமைப்புக்கள் தோன்றிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், எதிர்ப்புக் குழுக்களையும் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்வதற்கான அரசியல் நடவடிக்கையை அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அதன் முகவர்களில் ஒருவரே இன்று வடமாகாண சபையை நடத்தும் ராசையா நிமலன் காfர்த்திகேயன். இவ்வாறான விசக் கிருமிகளை அன்னியப்படுத்துவதும் புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதும் இன்றைய சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமை!

http://inioru.com/who-is-behind-npc/

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன்  என்ற சந்தர்பவாத சுயநலவாதியை வட மாகாணசபையுடன் இணைத்து புரளியை கிளப்பும் போலியான புனைவுகளை வெளியிடும் இனியொரு செய்திகளும் 90% பொய்களை சுமந்துவரும் தமிழின விரோத சந்தர்பவாத சுயநல செய்திகளே!  வினவு போன்ற தரம் குறைந்த இணைய வரிசையில் இனியொருவும் ஒன்று. 

  • 2 weeks later...
On 6/10/2016 at 8:30 PM, போல் said:

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன்  என்ற சந்தர்பவாத சுயநலவாதியை வட மாகாணசபையுடன் இணைத்து புரளியை கிளப்பும் போலியான புனைவுகளை வெளியிடும் இனியொரு செய்திகளும் 90% பொய்களை சுமந்துவரு ம் தமிழின விரோத சந்தர்பவாத சுயநல செய்திகளே!  வினவு போன்ற தரம் குறைந்த இணைய வரிசையில் இனியொருவும் ஒன்று. 

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் ,முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்தவர் ,வட மாகாணசபையின் பல குழப்பங்களுக்கு இவர்தான் காரணம் ,இவர் UNDP பணியில் இருந்த போது இடைநிறுத்தப்படடவர் .

3 hours ago, Gari said:

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் ,முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்தவர் ,வட மாகாணசபையின் பல குழப்பங்களுக்கு இவர்தான் காரணம் ,இவர் UNDP பணியில் இருந்த போது இடைநிறுத்தப்படடவர் .

ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் தனது சொந்த நலனுக்காக எந்தப் பேயோடும், எந்த தமிழின விரோதிகளுடனும் கூட்டுச்சேர தயங்க மாட்டார்.

இவர் முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார் என்பதை விட முதலமைச்சர் அவர்களின் உறவினர் என்ற உரிமையில் அவரின் பணிகளில் மூக்கை வலிந்து நுழைத்துக் கொண்டிருந்தவர் என்பது தான் உண்மை.

இவரது மோசமான சுயரூபங்களை அறிந்திராத முதலமைச்சர், மூக்கை வலிந்து நுழைத்துக் கொண்டிருந்த ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் நன்கு அறிமுகமானவர் என்ற வகையில் சில விடயங்களில் அவரது உதவிகளை பெற்றிந்ததார் எனத் தெரிகிறது. ஆனால் இவரின் சுயரூபங்களை உணர்ந்ததும் எட்ட வைத்துள்ளார்.

அது போலவே இன்னுமொரு பகற் கொள்ளைக்காரனான, அதுவும் ஆதாரவற்ற பிள்ளைகளின் பணத்தைக் கூட கொள்ளையடிக்கத் தயங்காத மன்மதராசா என்பவரையும், உறவினர் மற்றும் நன்கு அறிமுகமானவர் என்ற வகையில் தனிப்பட்ட செயலாளராக வைத்திருந்தார். பின்னர் இவரின் சுயரூபங்களை உணர்ந்ததும் இவரையும் கொஞ்சம் எட்ட வைத்துள்ளார்.

தனிப்பட்ட செயலாளர்களை தமக்கு விரும்பியபடி நியமிப்பது முதலமைச்சர், அமைச்சர், பிரதமர் போன்றவர்களின் சிறப்பு உரிமை. அதில் வெளி மனிதர்கள், ஏன் கட்சியோ அரசோ கூடத் தலையிட முடியாது. அப்பிடி இருந்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிலரின் சுயரூபங்கள் தெரிந்ததும், அவர்களை தள்ளி வைத்திருப்பது பாராட்டுக்கு உரியது தானே! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எவரையும் இலகுவில் நம்பும் குணம் கொண்டவராக இருந்திருந்தால் இப்போது மாறியிருப்பார் என்று நினைக்கின்றேன். ஆனால் ஒருவரது பின்புலத்தை சரியாக ஆராயாமல் உதவியாளர்களாக, ஆலோசகர்களாக வைத்தது தவறு. வெள்ளைவேட்டிக் கள்ளர்கள் பலர் கனவான்களாக உலா வரும் இன்றைய உலகில் எவரையும் இலகுவில் நம்பக்கூடாது.

போல் என்பவர் விழுந்தடித்துக்கொண்டு 'இனியொரு ' 90% போய் என்கிறார். பின்னர் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் முதல்வரின் தனிச்செயலாளராக இருந்தவர் என்றதும் சொந்தம் என்பதால்  தெரியாமல் செய்தது என்கிறார். தனது சொந்தக்காரரையே புரிந்துகொள்ள முடியாத முதல்வரால் எப்படி அந்நியர்களை புரிந்து கொள்ள முடியும். 
இந்த ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் நியமனத்துக்காக முதல்வர் un உடனும் கோபப்பட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது. இப்போது 'போல் அவர்கள் தான் 90% பொய்யர் போல் தெரிகிறது. 

 

UN Turns Down Northern Chief Minister Wigneswaran’s Bid to Appoint Kinsman Nimalan Karthikeyan as Special Adviser at Monthly Salary of US $ 5000 Dollars and Expenses

4 hours ago, hasan said:

போல் என்பவர் விழுந்தடித்துக்கொண்டு 'இனியொரு ' 90% போய் என்கிறார். பின்னர் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் முதல்வரின் தனிச்செயலாளராக இருந்தவர் என்றதும் சொந்தம் என்பதால்  தெரியாமல் செய்தது என்கிறார். தனது சொந்தக்காரரையே புரிந்துகொள்ள முடியாத முதல்வரால் எப்படி அந்நியர்களை புரிந்து கொள்ள முடியும். 
இந்த ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் நியமனத்துக்காக முதல்வர் un உடனும் கோபப்பட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது. இப்போது 'போல் அவர்கள் தான் 90% பொய்யர் போல் தெரிகிறது. 

"இனியொரு", "வினவு"  தளம் பற்றி உலகு அறியும். அதற்கு வாக்காலத்து வாங்குவது உங்கள் உரிமை.
எது உண்மை என்பது உலகத்துக்கு தெளிவாக தெரியும்.

ஒன்றாக வாழும் தன் பிள்ளைகளே என்ன கூத்து ஆடுகிறார்கள் என்று தெரியாத பெற்றோர் இக் காலத்தில் நிறைய இருக்கும் போது, அவர்கள் கூத்துக்கள் வெளிப்படும் வரையில் அறியாமல் இருக்கும் காலத்தில், வெவ்வேறு இடங்களில் சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை, குறிப்பாக அவரது கூத்துக்களை  சகல சொந்தங்களும்  அறிந்திருக்க வேண்டும் என்பது விதண்டாவாதம்.

ஒன்றாக வாழும் தன் கணவன் ஆடும் பல திருகு தாளங்களை மனைவியும், தன் மனைவி ஆடும் பல திருகு தாளங்களை கணவனும் அறியாது இருக்கும் சம்பவங்கள் நிறைந்த இக்காலத்தில் வெவ்வேறு இடங்களில் சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை, குறிப்பாக அவரது திருகு தாளங்களை சகல சொந்தங்களும்  அறிந்திருக்க வேண்டும் என்பது விதண்டாவாதம்.

 

4 hours ago, hasan said:

UN Turns Down Northern Chief Minister Wigneswaran’s Bid to Appoint Kinsman Nimalan Karthikeyan as Special Adviser at Monthly Salary of US $ 5000 Dollars and Expenses

வட மாகாணசபையில் "இனப்படுகொலை" என்ற தீர்மானத்தால் வெகுண்டெழுந்த தமிழின விரோத அரைவேக்காடுகளால் உண்மைகளை திரித்து எழுதப்பட்ட எழுதப்பட்ட குறித்த செய்தியை பற்றிய உண்மையான பின்னணிகளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே தெளிவுபடுத்திய பின்னரும், அதை இணைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஹாசன் அவர்கள் தான் தினமும் பொய்களை அவிழ்த்துவிடும் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களை விஞ்சிய பொய்யராக இருக்க வேண்டும்.

எந்த அரசியல் அனுபவமும் இல்லாமல், நீதி, நேர்மையான தூய வாழ்க்கை வாழ்ந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தமிழர்களின் உரிமைக்காக நேர்மையாகவும், நீதியாகவும், உறுதியாகவும் குரல் கொடுப்பது சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும், தமிழினப் படுகொலையாளர்களுக்கும், தமிழின அழிப்பை மூடி மறைக்க முயலுபவர்களுக்கும், கள்ளக் காணி பிடிப்பதிலும் தமிழர்களுக்கு வரும் பணத்தை சுருட்டி பிழைப்பு நடத்தும் முஸ்லிம் அரசியல்வாதிக் காடையர்களுக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதால், இவர்கள் அனைவரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் மீது சேறடித்து தமது கபட காரியங்களைச் செய்ய முனைகின்றனர் என்பது மட்டும் தெளிவு.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.