Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

Featured Replies

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

 

விக்­கி­னேஸ்­வரன் தமிழ், சிங்­கள அடிப்­ப­டை வாதி­க­­ளுக்கு களம் அமைத்­துக் கொடுத்து பிரச்­சி­னை­களை சிக்­க­லாக்கும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கிறார்.  வடக்கில் இரா­ணுவப் பிரசன்னம் படிப்­ப­டை­யாக குறைக்­கப்­படும். எதி­ர்­கா­லத்தில் அங்கு அகதி முகாம்­க­ளுக்கு இட­மில்லை. மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று  சபை முதல்­வரும், உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்­ச­ரு­மான லக்ஷ்­மன் கிரி­யெல்ல  தெரிவித்தார்.  cv-wigneswaran--lakshman-kiriella.jpg

இது தொடர்பாக அமைச்சர்  மேலும் தெரி­விக்­கையில், 

நாட்டில் இன்று மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­கி­ன்­றன. அதே­வேளை கடந்த கால காட்டு தர்பார் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு சட்­டத்தின் ஆதிக்கம் நாட்­டுக்­குள் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது. 

கடந்த ஒரு வரு­டத்தில் புதிய நல்­லாட்சி அரசாங்கம் தமிழ் மக்­க­ளி­னதும், சிறு­பான்மை மக்­க­ளி­னதும் ஜன­நா­யக உரி­மை­களை பாது­காத்து சம உரி­மை­களை வழங்­கி­யுள்­ளது. அத்­தோடு தமிழ், சிங்­கள மக்­க­ளி­டை­யே தேசிய நல்­லி­ண­க்­கத்தை ஏற்­ப­­டுத்­­து­­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்­கவும் விசேட வேலைத்­திட்­டங்­களை நாட்டில் முன்­­னே­டுத்து வரு­கின்­றனர். 

வடக்கில் ஒரு அகதி முகாம்­கூட இருக்­கக்­கூ­டாது. மக்கள் அனை­வரும் அவர்­க­ளது சொந்தக் காணி­க­ளி­லேயே மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்­டு­மென்­பது தான் அரசின் கொள்­கை­யாகும். அதற்­கான அனைத்த நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு வரு­­கின்­றன. எனவே அர­சாங்கம் படிப்­ப­டி­யாக தமிழ் மக்­க­ளி­னது தேவை­களை நிறை­­வேற்றி வரு­கி­றது. 

மனித உரி­மை­களை, அடிப்­படை உரி­மை­களை பாது­காக்க விசேட திட்டங்­களை முன்­னெ­­டுக்­கின்­றது. இத­னை சர்­வ­தேசம் புரிந்து கொள்ள வேண்டும். முப்­பது வரு­ட­காலம் யுத்தம் முடி­வ­டைந்து தற்­போது ஒரு­வ­ரு­ட­கால காலப்­ப­கு­திக்குள்தான் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே அனைத்­­­தையும் உடனடியாக நிறை­வேற்ற முடி­யாது. 

வட­மாகாண முத­ல­மைச்சர் படித்­தவர், பண்­பா­னவர் அர­சியல் வியூகம் தெரி­ந்­த­வர் என நினைத்தேன். ஆனால் தற்­போ­­தைய அவ­ரது செயற்­பாடுகள் கவ­­லை­ய­ளிக்­கின்­றன. இரா­ணுவ முகாம்­க­ளை ஒரே நாளில் அடைக்­கச் சொல்­கிறார். அவர் வெ ளியிடும் கருத்­துக்கள் தமிழ், சிங்­கள அடிப்­படை வாத இன­வா­தி­க­­ளுக்கு தீனி போடு­வ­தாக அமைந்­தள்­ளன. அவர் நாட்­டுக்குள் பிரச்சி­னை­களை மேலும் சிக்­க­லாக்­குகின்றார். 

முத­ல­மைச்­சரின் நட­வ­டிக்­கைகள் நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தா­கவே அமைந்­துள்­ளன. வடக்கில் படை­யி­னரை வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சியம் அர­சுக்கு கிடை­யாது. அதே­வே­ளை தேசிய பாது­காப்பு தொடார்­பிலும் அர­சு கவனம் செலத்த வேண்­டும். எனவே படிப்­ப­டி­யாக வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெ ளியேற்­றப்­ப­­டும்.

எதிர்க்­க­ட்சித் தலை­வர் இரா. சம்­பந்தன் ஆக்­க­பூர்­வ­மான நட­வடிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு வழங்கி செயற்­ப­டு­கின்றார். எதிர்க்­­கட்சித் தலை­வ­ருக்க அர­சியல் வியூகமும் தாற்­ப­ரி­யமும், விட்டுக் கொடுப்பும் தெரிந்­துள்­ளது. அந்த அர­சியல் நாக­ரீகம் விக்­கி­னேஸ்­வ­ர­­னுக்கு தெரி­யா­தது கவ­லை­ய­ளிக்­கின்­றது என்றார்.

 http://www.virakesari.lk/article/7563

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களில் ஒருவரான உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்­ச­ர் லக்ஷ்­மன் கிரி­யெல்லவின் போலிப் பிரசாரமும், சிங்கள-பௌத்த இனமமதவெறி அரசின் இழுத்தடிப்புக்களை மூடி மறைக்கும் நயவஞ்சக செயற்பாடுகளும் கடும் கண்டனத்துக்கு உரியது.

இது போன்று  நாக்கூசாமல், நாகரிகமற்று பொய்களை உரைக்கும் சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் தான் நல்லாட்சி அரசில் பொருத்தமில்லாத அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.  

முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­­னின் நீதியான நேர்மையான செயற்பாடுகளே இதுபோன்ற சிங்கள-பௌத்த இனமதவெறியர்களை பயமுறுத்துகிறது என்பது இங்கு தெளிவாகிறது.

வட மாகாணசபையில் குழப்பம் விளைவிக்கும் போக்கிரிகள் இது போன்ற பொய்களை எதிர்த்து ஒன்றும் செய்வதில்லை.  

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடிச் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தியவர்களுக்கு, முதல்வரின் நடவடிக்கைகள், அப்படி காலத்தைக் கடத்த முடியாது செய்தே  ஆகவேண்டும், என்கின்ற நிலைக்கு தள்ளி விட்டதே என்கின்ற எரிச்சல். இனியென்ன சம்மந்தனையும், சுமந்திரனையும் உசுப்பி முதல்வருக்கு எதிராய் அறிக்கைகள் விட, எல்லாம் கிடப்பில் போகுமெண்ட நினைப்பில்  வேலைகள்  முழுமூச்சாய் நடக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.