Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

550563528_1424727405255924_7040552422847

  • Replies 313
  • Views 62.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and people studying

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.
நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை.
இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்!
நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார்.
வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார்,
“அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!!

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
👩‍❤️‍💋‍👨பேசும் கவிதைகள்💞 Tamil Kavithai
  ·

  • கருத்துக்கள உறவுகள்

554263644_1190270993134675_6931837587626

Baskar Jayraman Mookkammal

serSnootdp0 6r10he1sf4530pm0te8t1 efbtgma1c86ca:26c27g63,89c ·

#இதுதான்_பிரபஞ்ச_விதி

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை அனுமதிக்கச் சொன்னார்.

2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து,

"இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் வாங்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார்.

நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது,

மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார்.

அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது.

டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.

நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?"

நோயாளி கூறினார், "நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..."

டாக்டர் சொன்னார், "நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க. இப்போது ஞாபகம் வருகிறதா?"

"ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..."

"அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, கார் பழுதாகி விட்டது.

சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.

குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது.

நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.

நீங்கள் பைக்கில் வந்தீர்கள்...

பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள்.

பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்...

சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது.

நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம்.

அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம்.

நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள்.

அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, அது விலைமதிப்பற்றது.

ஆனாலும், நான் உங்களிடம்,: "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன்.

அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,*

எனது விதியும் கொள்கையும் என்னவெனில்...

பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை.

இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்." என்றீர்கள்.

அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன.

பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்...,

அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' என்று அன்று நினைத்தேன்.

அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன்.

நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.

உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன்.

இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது.

நீங்கள் இங்கே என் விருந்தாளி.

உங்கள் சொந்த விதியின்படி... என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது.

இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும்.

"நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்." மருத்துவர் கூறிவிட்டு கேபினை விட்டு வெளியே சென்றார்.

*அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன...

அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது.

நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன.

அதுவும் ஆர்வத்துடன்.

அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதுதான் பிரபஞ்ச விதி.......! 👍

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

556529117_1484357872609413_5019228471790

சங்கு கல் மண்டபம் ......மக்களை எச்சரிக்கும் மண்டபம் . ......!

🤡 Tamil Creativity 🟰 Tamil Comedy Memes & video’ s 🤡  · 

Cini Mini ·otrSposdnel671u6aa3h34m45hh8ta5l40269tfm73103 011tltii40culh ·

வெள்ளக்காரன் வந்து தான் அறிவியலை கற்று கொடுத்தான்ணு சொல்லும் தற்குறிகளின் கவனத்திற்கு

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?

ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என நினைக்கத் தோன்றும்..

ஆனால்...

நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள்.

அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்....

இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.

வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன.

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது..

இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..

ஆனால் உண்மையில் இது அறிவியலுக்காக..பயனுள்ள தகவல்கள் ️"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது.

பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ன ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க.....

திடீரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேரமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முனியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUG கை பிடுங்கிவிட்டு, தனது செல் போனை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

Sundhari S ·tedrspoSnolf0u 1hi33l4aa5e àilha7l,clg8u1ahH8270l1t:fr1013ma ·

ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான்.

ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது. நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.

கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை. அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் வேண்டாம் என்றனர்.

அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள். நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். ஆனால்

ஒரு நிபந்தனை. நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது. சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,”என்றார். உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.

ஹெலிகாப்டர் இயக்குபவர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். குட்டிக் கரணம் போட்டார். வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.

கீழே இறக்கியதும் அவர் அந்தக் கஞ்சனிடம், ”எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?” என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக, ”எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும்

சமாளித்து விட்டேன்,” என்றான்.

அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க, கஞ்சன் சொன்னான், ”என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.”.......!

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

558861565_5124621261096517_1779344922496

உலக இந்துமத மகா சபை  ·

Kulenthiran Uthayakumar ·porontsdSe0896e:3t2cl5099c368b1l71uc t2o1ra9 ii,t3mmh1ml8ot8 ·

1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.

"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள்.

2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.

3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.

திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.

"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?".

மகள் சொன்னாள்.

4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "

நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?

-படித்ததில் பிடித்தது.........!

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று

கொண்டு இருந்தார்...

அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்...

அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! 😜"

நீதி:"

*PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT*"

எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

படித்ததில் பிடித்தது.

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

காலம் மாறும் போது..

சிறுகதை.

அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான்.

அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் “உழவனே! உன் அருகே பாம்பு. ஒடு, ஓடு” என்று குரல் கொடுத்தான்.

எதுவுமே நடவாதது போல இயல்பாகத் திரும்பிப் பார்த்த உழவன் எந்தப் பரபரப்பும் காட்டாமல் அந்தப் பாம்பைக் கையால் பிடித்துத் தூக்கி எறிந்தான்.

அதிர்ச்சி அடைந்த அரசன், “கொடிய பாம்பு அது. நீ பிடித்தபோது கொத்தி இருந்தால் உன் உயிர் போய் இருக்குமே” என்றான்.

“அரசே! இந்த நிலத்தில் வேலை செய்யும்போது இப்படி எத்தனையோ ஆபத்துகளைச் சந்திக்கிறேன். அவற்றிற்கு அஞ்சினால் நானும் என் குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்றான் அவன்.

அந்த விவசாயிக்கு உதவி செய்ய நினைத்த அரசன் வளமான நிலங்களையும் பொற்காசுகளையும் அவனுக்கு வழங்கினான். செல்வந்தனாக ஆனான் அவன். ஆண்டுகள் பல கழிந்தன. அரசனும் அமைச்சனும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள்.

அந்த உழவன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான்.

அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கிணான்.

அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருநத்து:

“கையில் என்ன கட்டு?” என்று கேட்டான் அரசன்.

“அரசே! ஒரு முள் கீறி அது பெரிய புண்ணாகி விட்டது. அதற்குக் கட்டுப் போட்ட மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்கச் சொன்னார். இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் உழவன்.

இதைக் கேட்டு வியப்படைந்த

அரசன், “அப்படியா உன் உடம்பைப்

பார்த்துக்கொள்”

என்று அவனிடம்

சொல்லிவிட்டு அகன்றான்.

வழியில், “அமைச்சரே! அன்று இவன் கொடிய பாம்பைத் தூக்கி எறிந்தான். இன்றோ முள் குத்தியதற்குக் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஓய்வு எடுக்கிறான். தலை கீழ் மாற்ற மாக உள்ளதே” என்று கேட்டான்.

“அரசே!

அன்று

அவன்

ஏழை. உழைத்துப் பிழைத்ததால் எதற்கும் அஞ்சவில்லை. இன்றோ செல்வந்தனாகி உழைப்பே இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறான்.

“காலமும் சூழ்நிலையும் மாறும் போது எல்லாம் மாறத்தானே செய்யும்” என்றார் அமைச்சர்........! 😃

Voir la traduction

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

559380219_1150977093899078_7211131894266

ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, தான் உட்கார வேண்டிய நாற்காலி கூரையில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் மாணவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கரும்பலகையில் சென்று இப்படி எழுதினார்:
இன்றைய தேர்வு - 15 நிமிடங்கள், 30 மதிப்பெண்கள்.
கேள்வி 1. நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் -1 மதிப்பெண் √.
கேள்வி 2. நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிட்டு, உங்கள் செயல்பாடுகளைக் காட்டுங்கள் -1 மதிப்பெண் √.
கேள்வி 3. நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும்,அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள்~28 மதிப்பெண்கள் √.😜

100% பொழுது போக்கு ·

  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

ஒரு பொண்ணும் ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.. அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் 'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள். மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய், இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான் கதையில் திருப்பம்....

மூன்று நாள் கழித்து அந்த பெண் தானாக, பையன் இல்லாமல் வருகிறாள். வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும்.

அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?"

அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே.. இப்ப எங்கடி வந்த?"

அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?"

மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர். அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த மூன்று பேர் மட்டும் அல்ல... சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்தனர்..

அந்த பதில் என்ன?

"என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா."

கதை நீதி : நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும்.......!

Voir la traduction

560074626_122256214916037466_20979008024

மூணு நாள் சார்ஜ் நிக்கும் போனை எறிந்து போட்டு புதுமாடல் போன் வாங்கி தினமும் சார்ஜ் போடும் சிறியருக்காக ......! 😇

  • கருத்துக்கள உறவுகள்

Bjp Eswaramoorthy Kannan ·

குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck)

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்.

மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

Voir la traduction......!

basurero-twerk.gif

  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

ஒரு கதை சொல்லட்டுமா சார்?

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னைத் தெரிகின்றதா?" என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம்செய்து கொள்ளுங்களேன்" என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர்,

"நான் ஆசிரியராக உள்ளேன்" என்றார். "ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர்.

" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார்,

மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்"

இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார்.

"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.

Voir la traduction


564033470_122256677210037466_78135278452

  • கருத்துக்கள உறவுகள்

Mujeeb New NJENJ68Bbab.png se sent super bien à Trinquemalay, Province de l'Est, Sri Lanka.  ·

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, ஒற்றைத் தாயின் மகள்.

அவளது அம்மா அவளை ரொட்டி வாங்க கடைக்கு அனுப்பினாள்.

அவள் திரும்பி வரும் வழியில், ஒரு அந்நியன் அவளை புகைப்படம் எடுத்தான்.

அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

பொது அழுத்தத்தின் கீழ், ரொட்டி நிறுவனம் அவரை பிராண்ட் தூதராக மாற்றியது.

அவரது புகைப்படம் இப்போது தென்னாப்பிரிக்கா முழுவதும் ரொட்டி விளம்பரப் பலகைகளில் உள்ளது. அதற்கு ஈடாக, தாய்-மகள் இருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டைப் பெற்றுக் கொடுத்ததுடன், பட்டப்படிப்பு வரை பெண்ணின் கல்விச் செலவை நிறுவனம் ஏற்கும். இப்படியும் நடக்கும் .

( புகைப்படத்தில் பதிவான )

ஒரு அற்புதமான தருணம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக மாற்றும் என்பதற்கான உதாரணம் .

புகைப்படம் பிடிப்பாளர்களும் சாதாரணமானவர்கள் அல்ல பலம் வாய்ந்தவர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .

©mujeeb

Voir la traduction

566199462_867106309314264_71198637292207

  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...

Voir la traduction

565097878_122257107980037466_42028586530

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

568584103_4134422863466344_3280407279720

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....

இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா

புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

*'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்'

படித்து பகிர்ந்து

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

தினமும் ஒரு வரி தத்துவம் ·

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....

இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா

புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

*'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்'

படித்து பகிர்ந்து

Voir la traduction

மன வலி தரும் கதை ...ஆழப் படித்தால் அம்மா ஒரு தெய்வம் ...வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம்.

"அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:

"சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.

ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.

நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.

அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை."

படித்து பகிர்ந்து

Voir la traduction


***..வாழ்க்கை தத்துவங்கள் ..***  ·

Jino Sivaji ·edSoportns7c8b9545g1gu7 58c3um1l2gm31 ,ct579r2e8umu9o51:0t8o ·

ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார்.

ரொம்ப எளிமையான மனிதர்.

தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை.

சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்?

இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார்.

அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார்.

வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை.

தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை.

மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.

இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார்.

இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை.

அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார்.

இவர் அதை மறுத்து விட்டார்.

சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அவர் அதுவும் வேண்டாம் என்றார்.

சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார்.

தேவையில்லை என்றார் இவர்.

நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்.

அதுவும் வேண்டாம் என்றார்.

நீதித்துறையில் நீங்கள் பல

பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும்.

அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன்.

மக்கள் தொண்டுக்கு ஊதியம் எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார்.

முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார்.

ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார்.

அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார்.

அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார்.

இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது.

அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இது நடைபாதை.

இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன்.

இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது.

சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம்.

பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள்.

இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள்.

நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது.

நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார்.

அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள்.

நான்தான் நீதிபதி.

உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர்.

ஐயா வணக்கம்!

எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம்.

ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள்.

பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள்.

அதற்கு நீதிபதி இது மக்கள் நடந்து போகிற நடைபாதை.

அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும்.

எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை.

நீங்கள் சொல்லுங்கள் என்றார்.

சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள்.

என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை.

அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி.

நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள்.

அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள்.

உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார்?

நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள்.

Voir la traduction

561716082_822706466954745_87021066077825

  • கருத்துக்கள உறவுகள்

Baskar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy.  · 

ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..

விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..

அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்..

"ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?"

இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்..

ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்..

அவருக்கு பதிலில் திருப்தி இல்லை..

அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்"..

அதிலும் அவருக்கு சம்மதமில்லை..

இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது..

ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்..

அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்..

அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..😊"

ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது..👏🏻"

அது கலாம் ஐயாவின் கைத்தட்டல்.

ஐயா அவர்கள் கூறினார்:

" குட்..! இதுதான் உண்மையான பதில்..💓"

அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..👍🏻"

அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?

கனிவான அன்பும்

தளராத நம்பிக்கையும்

உயர்வான எண்ணமும் கொண்ட

நாம் எல்லாருமே அழகுதானே?...

அந்த நம்பிக்கை தானே அழகு!"

அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது.💓"

படித்ததில் ரசித்தது...

Voir la traduction

569066098_1216522760509498_2355881053633

  • கருத்துக்கள உறவுகள்

Puthiyamaadhavi Sankaran ·

மூதாட்டி கற்றுக் கொடுத்த வியாபார தர்மம்.

மகாராஷ்டிரா நாக்பூர் அருகே அந்த மூதாட்டி விற்கும் காரி -டோஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோழர் காம்ப்ளே எங்களை மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார்.

டோஸ்ட் வாங்கியாச்சு.

இப்போ அதை முக்கி சாப்பிட சூடான சாய் வேணும். நான் என் பொருளாதரப் புத்தியை அவளிடம் காட்டினேன்.

" மெளசி, ஆஃப் சாயா பி தேனேக்கா" நீங்க எங்களுக்கு தேநீரும் கொடுக்கணும். டீயும் சேர்த்து விற்பனை செய்தால் நல்லா விற்பனை ஆகுமே"

இது நம்ம படிச்ச பொருளாதர தொழில் அபிவிருத்தி.

அந்த மூதாட்டி கண்கள் புன்னகைக்க சொன்னாள்....

" பேட்டி.. பக்கத்தில ஒருத்தர் சாய் விக்கிறார் பாரு. அவரு குடும்பமும் பிழைக்கணும்"

நான் திரும்பிப் பார்த்தேன்.

எதிரே அந்த மனிதர் சாய் விற்றுக் கொண்டிருந்தார்.

அவரு யாரு என்று கேட்டேன்.

தெரியாது, என்னமாதிரி ஒருத்தர் அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு தன் அடுத்த கஸ்டமருக்கு பொட்டலம் போட ஆரம்பித்துவிட்டாள்.

அவளுக்கு சாய் விற்கமுடியும். ஆனால் அதை அவள் செய்யவில்லை.

வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு

அந்த ஆதித்தாயின்

பொருளாதர வியாபாரக் கொள்கை பிடித்திருந்தது.

வியாபாரம், முன்னேற்றம்

என்பதெல்லாம்

" தான் மட்டும் வாழ்வதல்ல"

மற்றவர்களையும் வாழ வைப்பதுதான்."

வாழு.

வாழ விடு.

என் குடியிருப்புக்கு கீழே இருந்த கடையில் ( provision store) எல்லாம் கிடைக்கும். காய்கறி தவிர.

காய்கறி வாங்கி விற்க முடியாது என்பதல்ல.

ஆனால் அந்தக் கடைக்காரர் அதைச் செய்யவில்லை. காரணம்

அக்கடைக்கு வெளியே தள்ளுவண்டியில் காலையிலும் மாலையிலும் காய்கறி வியாபாரம் உண்டு.

கடைக்காரருக்கு எவ்வளவு பெரிய மனசு.

வாழு

வாழ விடு.

Voir la traduction

568686781_25077391285225522_108219807295

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு

போட்டிக்கு நாமும் தொடங்கணுமில்ல.

இது தான் பொருளாதார படிப்பு.

படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Natesan Natesan ·

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது… சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.

மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா… இதை வெச்சுக்கோ… சீக்கிரம் கதவைத் திற… நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்–& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது… அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது… ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்…. அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!

நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் ........!

Voir la traduction

571130413_2434267683666702_8355923364425

  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

ஒரு குட்டிப் பையன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.

சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது .

” ஏன் , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Freeயா சாப்பிடுமே ” என்றான்.

அவர் சிரித்தபடி ,” தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே ” என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் .

வந்தவுடனேயே சிறுவன் கொல்லைக்குத்தான் ஓடினான். அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது.

தோட்டக்காரர் சொன்னார் ,

” கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் ” சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது .

சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை .

Voir la traduction

571336169_122258864624037466_65671462373

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

friends-joey-tribbiani.gif

டாக்டர்: சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது...?

நோயாளி: கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ்சம் பொங்கல சாப்ட்டு தொலைச்சிட்டேன் டாக்டர்...

ம்... அப்புறம்...?

அப்புறம் சாப்ட்டுட்டு ரிலாக்ஸா உட்க்காந்திருக்கும் போதே திடீர்னு படபடன்னு வந்திடுச்சி டாக்டர்...

அப்புறம் கை காலெல்லாம் லைட்டா ஆட்டம் கொடுத்திருக்குமே...?

ஆமா டாக்டர்...!

அப்புறம்... லேசா தல சுத்திருக்குமே..?

இல்ல... கொஞ்சம் வேகமாக சுத்துற மாதிரி ஃபீலிங் இருந்துச்சி டாக்டர்...

ஓ... அப்புறம் உக்காந்திருக்கிற சோபால கொஞ்சம் ரிலாக்ஸா சரிஞ்சி உட்க்கார்ந்தா நல்லாருக்கும்னு தோனிருக்குமே...?

அய்யோ... ஆமா டாக்டர்....

அப்புறம்... அதே சோபால சாய்ஞ்சாப்பல படுத்து தூங்கணும்னு தோனிருக்குமே...?

ஆமா டாக்டர்... ஆமா டாக்டர்.... அப்படியே நேர்ல பாத்தமாதிரியே சொல்றீங்களே....

அப்புறம்... சோபால சரிஞ்சி படுத்தப் பிறகு நெஞ்சில யாரோ ஏறி மிதிச்சா மாதிரி இருந்திருக்கும்... பயந்து போய் என்ன பார்க்க வந்துட்டீங்க ரைட்டா...?

டாக்டர்ர்ர்.... நீங்க ஜீனியஸ் டாக்டர்... எப்படி டாக்டர் அப்படியே சொல்றீங்க...?

இந்த சிம்டெம்ஸ்லாம் எனக்கும் இருக்கு...

ஐய்யோ டாக்டர் நீங்களும் கிரகணம் பிடிச்சிருந்த டைம்ல சாப்புட்டுட்டீங்களா...?

இல்ல... உங்க வீட்டு 'பொங்கலை' முன்ன ஒரு தடவ நானும் சாப்ட்டிருக்கேன்...!

Pulsar Thiyagu

😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.