Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'ஒரு வரி காதல் கதை. 分 உனக்கு எத்தனை சகோதரர்கள் என்று கேட்டேன், யாருமில்லை நீ மட்டும்தான் மட் என்றாள்.'

ஒரு வரியில், காதல் கதை. 😂

  • 3 weeks later...
  • Replies 313
  • Views 62.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Cold Drink GIFs | Tenor

பாட்டியின்,  குளிர்பானத்தை... பறித்துக் குடித்த இளைஞன்.  😂

May be an image of text that says 'தியேட்டரில் படம் ஆரம்பித்து ஓடிக்கொண்டிக்ி........ நம்மாளு பக்கத்தில் ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என, சிறிது சிறிதாக குடிப்பதை பார்த்து, எரிச்சலடைந்த நம்மாளு பாட்டியிடமிருந்து குளிர்பானத்தை பிடுங்கி, மடக்... என ஒரே மூச்சில் குடித்துவிட்டு.... நம்மாளு பாட்டி கூல்டிரிங்க்சுன்னா இப்படி குடிக்கணும்.. ...தெரியுதுங்களா.... பாட்டி: அடப்பாவி மவனே. அவசரப்பட்டி நம்மாளு ஏன்? என்ன..? பாட்டி: அதுலதான் நான் வெத்தலைய துப்பிகிட்டு இருந்தேன் இவ்ளோ நேரம்..!'

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன்
இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து
வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும்
போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில்
அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர்
அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்
திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும்
பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய
உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச்
சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன்
சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’
என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.
அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து
திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள்.
தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச்
செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.
நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத்
திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர்
தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.
இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும்
அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும்
பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப்
பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப்
பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன்
கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று
சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று
சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக
குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி
சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும்
திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று
நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த
சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த
திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

Sreenivasan T

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person
 
டாக்டர்... எனக்கு, பயங்கரமான பிரச்சினை.  
 
ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க.
நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான்.
 
" டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "
 
டாக்டரு சொன்னாரு..
"தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!"
"ரொம்பத் தேங்ஸ் டாக்டர்.
 
எவ்வளவு பீஸு?"
" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "
" ஓ அப்டீங்களா? சரிங்க
டாக்டர் ஐயா. வர்றேன். "
 
ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.
ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.
" அடடே என்னா தம்பி,
அப்புறம் வரவே இல்லே? "
"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."
 
" ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? "
" நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "
டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.
" என்ன தம்பி சொல்றீங்க?
வெவரமா சொல்லுங்க! "
 
" அது ஒண்ணுமில்லீங்க.
அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன்.
அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன்.
இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. "
 
Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

டொக்ரரின் உழைப்பில் மண்ணைப் போட்ட அண்ணாச்சி.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of one or more people

ஒரு  ஊர்ல கோர்ட்ல கேஸ் ஒண்ணு நடக்குது. 
அந்த ஊர்  அம்மணி ஒருவரை  சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...!

வாதி தரப்பு வக்கீல்:  "ஏம்மா உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."
அம்மணி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? 
உன்னைப்பத்தி சொல்லவா ? 
நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய.
சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...,  
அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே..
ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." 

அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, 
"சரிம்மா.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
அம்மணி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, 
ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.
சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... 
இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !"

ஜட்ஜ் : (அவசரமா மேஜையை தட்டி) 
"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு 
வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் சொன்னாரு பாருங்க...!
"கோர்ட் மறுபடியும் ஆரம்பிச்சதும் நீங்க ரெண்டு பேரும் 
'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்த அம்மணிகிட்ட கேட்டீங்கன்னா 
செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அவரைப் பற்றி என்ன வரலாறு தெரியுமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

M.R. ராதா  சொன்னது  தான்

25 வருசமாக பொய்யை மட்டுமே சொன்ன  வக்கீல்

நீதிபதியானவுடன் நீதி  தருவான் என்று நினைக்கும் மக்கள் கூட்டம் தானே  நாம்??

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

M.R. ராதா  சொன்னது  தான்

25 வருசமாக பொய்யை மட்டுமே சொன்ன  வக்கீல்

நீதிபதியானவுடன் நீதி  தருவான் என்று நினைக்கும் மக்கள் கூட்டம் தானே  நாம்??

என்ன விசுகர் சரியான இடம் பார்த்து m .r  ராதா சொன்னதெல்லாம் சொல்லுறியள்......இனிமேல் என்னை தம்பி என்று கூப்பிடவேணும் சரியா......!   😂

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people

கால் முறிந்த, பாட்டி.

மாடிப்படி ஏறும் போது, கால் இடறி கீழே விழுந்த பாட்டிக்கு, 
வைத்தியம் பார்த்த டாக்டர் சொன்னார்.... 

பாட்டி, இனிமேல்  ஆறுமாசத்துக்கு மாடிபடி ஏறக்கூடாது. 

ஆறு மாதம் கழித்து...: 

பாட்டி... இனிமே தாராளமா மாடிப்படி ஏறலாம். கால் நல்லாயுடுச்சு. 

அப்பாடா... இப்பவாது, சொன்னியே....
எத்தனை நாளைக்குத் தான்,  பைப் வழியா... ஏறி இறங்குறது. 😂 🤣

Raghu Ram

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்",
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...
நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது".........!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சமோசா கடைக்காரர் மிகவும் சரியாகவே சொல்லியுள்ளார். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ உலகம்  · 
Rejoindre
 
Kanaga Rajan Kanaga Rajan  ·   · 
 
🍄 விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.
🍄 இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு #சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.
🍄 ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,
🍄 மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த #காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.
🍄 அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,
🍄 இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.
🍄 தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக #வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.
🍄 நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..
🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳

Peut être une image de 1 personne, nature et arbre

  • கருத்துக்கள உறவுகள்

                                                      ஜனநாயகமும் சர்வாதிகாரமும்.

ஜனநாயகம்:---

பிள்ளைகள் : அம்மா எங்களுக்கு  சைக்கிள் வாங்கித் தாங்கம்மா..... இந்தா  மூன்று சில்லு சையிக்கிள். இதை வைத்து ஓடுங்கோ.

சர்வாதிகாரம்:---

பிள்ளைகள்: அப்பா எங்களுக்கு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா......இந்தா மூன்று சில்லு சைக்கிள். இதை வைத்து ஓடுங்கோ.

(சில மாதங்களின் பின் )

ஜனநாயகம்:---

அம்மா எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா....... கொஞ்சம் பொறுங்கோ பிள்ளைகள் பக்கத்து வீட்டில் கடன் கேட்டிருக்கிறேன் தந்ததும் உங்களுக்கு புது சைக்கிள் வாங்கித் தருகிறேன்.

சர்வாதிகாரம்:---

பிள்ளைகள்: அப்பா எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா...... ம்கூம் முடியாது நீங்கள் இதைத்தான் வைத்து ஓடவேண்டும். இதற்குமேல் கேட்டால் குரல்வளையை நசித்து விடுவேன்.

ஜனநாயகம்:---

பிள்ளைகள்: அம்மா உங்களுக்கு கடன் கிடைத்துட்டுதுதானே எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா........அம்மா வந்து அந்த மூன்று சில்லு சைக்கிளில் ஒரு சில்லைக் எடுத்து விட்டு இந்தாருங்கோ பிள்ளைகள் நீங்கள் விரும்பியபடி இந்த இரண்டு சில்லு சைக்கிளை வைத்து ஓடுங்கள். 

(பிள்ளைகள் சைக்கிளையும் அம்மாவையும் பார்க்கிறார்கள், அம்மாவின் கழுத்திலும் கைகளிலும் தங்க ஆபரணங்கள் மின்னுகின்றன.

சர்வாதிகாரம்:---

பிள்ளைகள் வெளியே வந்து பார்க்கிறார்கள், முற்றத்தில் புத்தம் புதிய இரண்டு சில்லு சைக்கிள் நிக்கிறது. தோட்டத்தில் அப்பா வியர்வை சிந்த வேலை செய்து கொண்டிருக்கிறார்.

யாவும் கற்பனை.......!

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de une personne ou plus et texte qui dit ’அன்று படித்தால் வேலை. இன்று படிப்பதே வேலை.. அன்று ஓடினோம் வயிற்றை நிறைக்க. இன்று ஓடுகிறோம் வயிற்றை குறைக்க.. அன்று ஒரே புரட்சி. இன்று ஒரே வறட்சி.. அன்று கைவீசி நடந்தோம் இன்று கைப்பேசியுடன் நடக்கிறோம்.. அன்று ஜனநாயகம். இன்று பணநாயகம்.. அன்று விளைச்சல் நிலம். இன்று விலைப்போன நிலம்.. அன்று தொட முடியாத உச்சத்தில் காதல் இன்று தொட்டு முடியும் எச்சம் காதல்.. அன்று பெரியவர்களின் பாதையில் இன்று இளைஞர்கள் போதையில்.. அன்று வாழ்ந்தது வாழ்க்கை இன்று ஏதே ஒரு வாழ்க்கை.. எவ்வளவு வேறுபாடுகள்........’

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

animiertes-tee-teekanne-bild-0036.gif துளசியும், "கிரீன் டீயும்".... குளிருக்கு நல்லதாம். 🤣 animiertes-tee-teekanne-bild-0039.gif

May be an image of text that says 'உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான்... "எப்படி சுவாமி இந்தக் குளிரைத் தாக்குப் பிடித்து தனிமையில் இருக்கீங்க?" என்று. "அது வேறொன்றுமில்லை! துள சியும், க்ரீன் டீயும்தான் காரணம். இதில் உனக்கு ஏதாவது ஒன்று கேள்... தருகிறேன்" என்றார் சுவாமி. "க்ரீன் டீ குடுங்க சுவாமி..." என்றான் சிஷ்யன். சுவாமி உள்ளே குரல் கொடுத் தார்... "துளசி! ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா..."'

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

அதுசரி .....சிஷ்யனுக்கு எத்தனை வயதிருக்கும்......70 க்கு மேல் என்றால் க்ரீன் டீ சரியாய் இருக்கும்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

அதுசரி .....சிஷ்யனுக்கு எத்தனை வயதிருக்கும்......70 க்கு மேல் என்றால் க்ரீன் டீ சரியாய் இருக்கும்......!  😂

சிஷ்யனுக்கு.... துளசியை கண்டவுடன். கிரீன் ரீ யை குடிக்க மனம் வந்திராது.  😂

  • கருத்துக்கள உறவுகள்
 
Rejoindre
 
Raji Raji  ·   · 
 
நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.
மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர்.
தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.
சிறிது நேரத்திலேயே உணவு வந்தது.
கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார்.
தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும்.
அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை...
பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை.
ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன்.
வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார்.
சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல்.
அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது.
எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார்.
நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது.
அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள்.
மிகவும் சுவையான உணவு நான் ஆர்டர் கொடுக்காதது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.
அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.
எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார்.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள்.
அவர்களால் பேசவே முடியவில்லை
தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்
அது தான் #வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள்.
தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள்.
கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம்.
இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே.
அந்த மன உளைச்சலால்,
ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்...
கவலை கொள்ளாதீர்கள்...
கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம்.
அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.
அதை தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும்.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும்.
யாராலும் தடுக்க முடியாது.......!  😂
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’எல்லோரும் 100 வயதான ஒரு மனிதரிடம் அவரது உடல்நல ரகசியங்களை ಶളతలల கேட்டார்கள்: கிழவன் சொன்னான்: நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். எனக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது என் மனைவிக்கு வாக்குறுதி அளித்தேன் இரண்டு பேர் சண்டையிடும்போது, தோல்வியுற்றவர் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வருகிறேன்! எல்லோரும் மீண்டும் கேட்டார்கள்: ஆனால் உங்கள் மனைவியும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது எப்படி? கிழவன் பதிலளித்தார்: இன்னொரு ரகசியத்தைச் சொல்கிறேன். அவள் என்னைப் பின்தொடர்ந்தாள் நான் 5 கிலோமீட்டர்களை முடிக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த! 17:5’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

கணவனும் மனைவியும், 100 வயது வரை வாழும் ரகசியம் அருமை. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 First official Briyani Day. | Pixstory

 animiertes-hahn-bild-0010.gif  animiertes-pferd-bild-0042.gif

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். 
அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். 

அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. 
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... 
இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான். 
சர்வர் முதலில் மழுப்பினான். 

அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் 
கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.

“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன். 

“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? 
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. 
அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்...

Jayanthi  ·

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமனாரும், மருமகனும்.

May be an image of text that says 'நாலு பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு.. "மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம்.. You are great...!" "ஆமாம் மாப்பிள்ளை.. சந்தோஷம்.. நிம்மதியா இருக்கேன்.. "ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா.." பள்ஸ் "என்னது..?" "பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்.. "ஆமாமில்ல.... அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும்.. பெரிய்ய்ய வேலையாப் போயிருக்கும்...'

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு டீக்கடை வாசலில் நின்னுட்ருந்தேன். ரொம்ப்ப்ப்ப அரிதா டீ சாப்பிடும் பழக்கம் உண்டு...!
டீ சொல்லிட்டு மாஸ்ட்ரோட மீசையும், நெத்தி மேல ஒரு வரிசையில் மட்டும் 5,6 மிமி முடி வச்சு அதுல பாதிக்கு ப்ரவுன் கலர் அடிச்சிருந்த ரசனையின் பின்னணி என்னவா இருக்கும்ன்னு யோசிச்சிட்டிருந்தேன். 'சார் கொஞ்சம் ஜீனி கொடுங்கன்னு', என் பின்னாடி இருந்து ஒருத்தர் கை நீட்டினார்...
மாஸ்டர் கொடுக்கிறதுக்கு யோசிச்ச ஒரு வினாடியில் அவருக்கு பின்னாடி நின்னுட்டிருந்த ஒரு சீனியர் மாஸ்டர் படக்குன்னு டப்பாவுக்குள் கையை விட்டு ஜீனி அள்ளி கொடுத்தார். வாங்கினவர் வாயில் போட்டுட்டு போய்ட்டார். எனக்கு இந்த செயல் பார்க்க வித்தியாசமா இருந்தது. தண்ணி கேப்பாங்க, பீடி பத்த வைக்க நெருப்பு கேப்பாங்க. இதென்னடா ஜீனி கேக்குறாங்கன்னு யோசிச்சிட்டே சீனியர் மாஸ்டர் என்ன பேசுறார்ன்னு கவனிச்சேன்...
அடேய், யாராவது ஜீனி கேட்டா உடனே கொடுக்கணும்டா.., அது ரொம்ப முக்கியம்.
இல்லண்ணே... திடீர்ன்னு வந்து ஜீனி கொடுன்னு கேட்டாரு.. அதான் எதுக்குன்னு..
டேய், அவங்க கேக்க கூட மாட்டாங்க, கையை நீட்டினாலே நாம கொடுத்துறணும். அவங்க சுகர் பேஷண்ட்டா இருக்கலாம். மாத்திரை போட்டு சுகர் குறைந்திருக்கலாம். அவசர அவசரமா வந்து கேப்பாங்க. அவங்களால பேச முடியாது. நாம ஒரு நிமிஷம் தாமதிச்சாலும் மயக்கம் போட்டுருவாங்க டா..., அந்த பாவம் நமக்கு வேணாம். சட்டுன்னு குடுத்துறனும்.. என்னா.. !!
சரிணே, எனக்கு தெரியாதுணே.... இனிமே கொடுத்திடறேன்ணே.!!
இந்த உரையாடலை கேட்டு மெர்சலாகிட்டேன். டீக்கடையில ஒரு அண்டர்கிரவுண்டு முதலுதவி மையம் நடத்திட்டிருக்காங்க...!!
தமிழா உன்னை அடிச்சுக்க முடியாது... வாழ்க நின் கொற்றம்... ❤

Peut être un dessin de cafetière, boule à thé et boisson

  • கருத்துக்கள உறவுகள்
முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில்’
என்றால் யாருக்கும் தெரியாது.
ஆனால்,
‘மம்மூட்டி’
என்றால்,
தெரியாதோர் இருக்க முடியாது.
நான்,
என்னால்,
என்னுடைய,
என்ற
அகம்பாவம்,
ஆணவம்,
சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த தருணம்.
இந்திய திரை உலகின் உண்மையான மெகா சூப்பர் ஸ்டார்
மம்மூட்டி Mammootty அவர்களை தமிழ் மலையாளம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எல்லா தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள்.
மம்மூட்டி எழுதிய,
“மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”
என்ற அவரின் நூலில்
பின் வரும் சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார்:
ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி காரில் புறப்பட்டேன்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வாகனம்.
அமைதியாய் என் காரில் ஒலிநாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன்.
அந்த அடர் இருளில் மெல்லிய எளிய உருவம் ஒன்று பாதை ஓரம் நின்று கை காட்டியது.
பார்க்க ஒடிசலான வயசான கிழவர்.
கையில் சிறு விளக்குடனும்,
தலையில் முக்காடுடனும்,
கை நீட்டி நின்று கொண்டிருந்தார்.
இந்த ராத்திரி வேளையில் யார் என தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன் என,
வண்டியை நிறுத்தாமல் சிறிது தூரம் போயிருப்பேன்.
மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குறுகுறுப்பு.
அந்த கிழவரின் கண்ணில் தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைத்தது.
வண்டியை திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன்.
அந்தக் கிழவர் அங்கேயே தான் நின்றிருந்தார்.
கீழே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
இருட்டில் நான் முதலில் அவளை கவனிக்கவில்லை போலும்.
எங்கய்யா போகணும்? என்றேன்.
இல்லைய்யா,
இது என் பேத்தி.
வவுத்து வலி.
நெறமாச கர்ப்பிணி.
ரொம்ப நேரமா இங்கேயே நிக்கிறேன்.
ஒரு வண்டியும் வரலைய்யா என்றார்.
சரி, ஏறுங்க என சொல்லி இருவரையும் ஏத்திக் கொண்டு ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு விரைகிறேன்.
இன்னுமா நாம யாருனு இவருக்கு தெரியல?
என்ற யோசனை மட்டுமே என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
நானும் ஒரு சாதாரண மனிதன் தானே!
ஒரு வேளை பேத்தி பற்றிய கவலையிலும்,
இந்த இருளிலும்,
நம்மை அவருக்கு அடையாளம் தெரியாது போயிருக்கலாம் என என்னை நான் சமாதானம் செய்து கொண்டேன்.
அந்தப் பெண் கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையிலிருந்தாள். மருத்துவ மனையை அடைந்ததும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவ மனைக்குள்ளே விரைந்தனர்.
அப்போது நான் காரை விட்டு இறங்காததால்,
செவிலியர்களும் என்னை கவனிக்கவில்லை.
பிறகு அந்தக் கிழவர் என் அருகில் வந்து,
ரொம்ப நன்றிய்யா.
அவசரத்துக்கு உதவின.
இந்தா,
இத டீ செலவுக்கு வச்சிக்க.
என என் கையில் ஒரு நோட்டை திணித்தார்.
அந்த ஓட்டை ஒடிசலான,
அழுக்கு பிடித்த,
எந்த கடையிலும் சிங்கிள் டீ கூட குடிக்க உதவாத,
செல்லாத,
ரெண்டு ரூபாய் நோட்டை பார்த்து விட்டு,
அவரை ஒரு முறை மீண்டும் ஏறெடுத்து பார்க்கிறேன்.
அவரோ,
சும்மா வச்சுக்கய்யா,
என்ற படி மருத்துவமனைக்குள் வேக வேகமாக போய் சட்டென மறைந்து விட்டார்.
ஆம்.
நானும்,
எனது நடிகன் என்ற கிரீடமும்,
சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த கணம் அது.
நான் இதுவரை எத்தனையோ தேசிய விருதுகள் வாங்கி விட்டேன்.
ஆனாலும் அதை எல்லாம் விட,
இன்னும் பத்திரமாய்
பொக்கிஷமாய்
அந்த ரெண்டு ரூபாய் நோட்டை பாதுகாத்து வருகிறேன்.
அது எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பானது.
 
படத்தில் அவரின் அருமை மனைவி சுல்பஃத் அவர்களுடன்......!

Peut être une image de 2 personnes, barbe et personnes souriantes

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.