Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் படையினர் மீது எறிகணைத் தாக்குதல்: 4 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் இவர்களுக்கு அப்பாவி மக்களின் நிலையில் இருக்க விருப்பமில்லை. தாங்கள் தாங்கள் தங்கள் குடும்பங்களுடன் புலம்பெயர் நாடுகளில் குளிர்காயும் இவர்கள் பொறுமை சகிப்புத்தன்மை கதைப்பார்கள்.

**************************

கடந்த ஜீசிஈ சாதாரண தரப்பரீட்சையை வாகரை மாணவர்கள் இழந்தனர். அதனால் அவர்களின் கல்வி நிலை மேலும் மேலும் பின் தங்குமே தவிர முன்னேறாது. அந்த இளம் பிஞ்சுகளே கூலிப்படைகளின் நோக்கங்களுக்கும் இராணுவத் தேவைகளுக்காகவும் பலியிடப்படுகின்றனர்.

தாயகத்தில் இருந்து பொம்பிளை எடுத்து குடும்ப வாழ்வில் உள்ள எத்தனை புலம்பெயர்ந்த தமிழர்கள்...5,000,00 பேரில் ஒரு 50,000பேர் தாயகம் திரும்பி போர்க்களப் பின்புல வேலைகளில் என்றாலும் ஈடுபடத் தாயாரக உள்ளனரா??? இந்த வெட்டிகள் எங்களைப் பார்த்துக் கேட்குங்கள் நீ என்ன செய்தாய் என்று. ஜெயசிக்குறு களத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் பல களங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்கர் அமைப்புக்கு என்று சென்று பல ஆபத்துக்கள் மத்தியிலும் கருமமாற்றிய தாயகக் கடமையை செய்த கொஞ்சம் துணிவு என்பதாவது இருக்கிறது. நாங்களும் பணம் நகை கொடுத்தவர்கள் தான். அத்தோடு கடமை முடிந்தது என்று கருதவில்லை. பங்கர் வெட்ட கேட்ட போது சைக்கிளை போட்டு விட்டு வெளிநாடு ஓடியோர்கள் மத்தியில் விமானத்தாக்குதல்கள் மத்தியிலும் எமது உயிரை பணயம் வைத்துப் பணி செய்திருக்கிறோம். இவை பெருமைக்காக இங்கு சொல்லாப்படவில்லை. நாம் அதை எமது சகோதரர்களுக்காவும் சகோதரிக்களுக்காகவும் செய்தோம். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்தோம். இவர்களின் கேள்விக்காக இதை முன்வைக்கவில்லை. இவர்களுக்கு உண்மையான தாயகப்பற்றிருந்தால் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு போய் போர்க்களத்தில் சேவை செய்ய முன்வரட்டும். ஒரு 50,000 பேர் போவதால் புலிகளுக்கு வரும் நிதி பெரிய அளவில் குறைந்துவிடாது..!

இந்த வெட்டிகளால் செய்ய முடியுமா...???!

துன்பத்தில் பயத்தில் உளலும் அப்பாவி ஏழை மக்களை பலியிட்டு அவர்களின் அழுகுரலில் அவலக் குரலில் ஒரு ஈழம் அமையத்தான் வேண்டுமா..?! ஏன் அந்த மக்களுக்கு வாழ்வுரிமை இல்லையா..?! அவர்கள் தமிழீழத்தில் வாழும் ஆசை அற்றவர்களா..?! இவர்கள் விடுமுறைகழிக்கவா தமிழீழம்...??!

அப்பாவி மக்களின் உயிரிழப்பை எதைக் காட்டியும் நியாயப்படுத்த முடியாது.புலிகளைப் பார்த்துக் கேள்வி கேட்க எமக்கும் உரிமை உண்டு. அவர்கள் கேட்டபோதெல்லாம் ஓடிச் சென்று உதவியவர்கள் என்ற வகையில்.

போராளிகளை போராட்டத்தை உயிரினும் மேலாக மதிக்கும் அதேவேளை இந்தப் போராளிகளையும் போராட்டத்துக்கும் காரணமான மக்களை அதை விட அதிகம் நேசிக்கின்றோம். அவர்களின் அநியாய இழப்புக்களை காரணங்காட்டி நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தடுத்து நிறுத்தப்பட புலிகள் தங்களால் ஆன முயற்சி செய்ய வேண்டும். மக்களுக்காகவே போராட்டம். அதுவும் தாயகத்தில் வாழும் மக்களுக்கானது. வெளிநாட்டில் குடும்பம் நடத்தவல்ல போராட்டம் ஆரம்பித்தது.

சுயநலத் தமிழர்களே உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேளுங்கள்..நீங்கள் உரைப்பது மனிதர்மமா என்று..! நீங்கள் காசுக்கு போராட்டத்தை குத்தகைக்கு எடுப்பீர்கள் என்றால் உயிரைக் கொடுப்பவனுக்கு எதுவுமே இல்லையா...??!

எமது வேண்டுகோள்..புகலிடமோ தாயகமோ..மக்கள் எல்லோரும் ஒருவரே. ஆகவே மக்களை அழிவில் இருந்து காக்க வேண்டும். அவை தொடரக் கூடாது. புலிகள் தாக்குதல் நடத்தட்டும் விடட்டும் அது அவர்களின் கையில். ஆனால் அவர்களோடு கூடி நிற்கப்போகும் மக்களைப் பலப்படுத்த வேண்டியதும் அவர்களின் கடமை. அநியாய ஆழிவுகளை தடுக்க வேண்டியது அவர்களின் பொறுப்பும் கூட..! அவர்கள் அதைத் தட்டிக்கழிக்க முடியாது. அது ஐநா விதிகளுக்கு உட்பட்டதும் கூட..! :)

************************** நீக்கப்பட்டள்ளது - மோகன்

Edited by மோகன்

இப்பிடியான கூமைகள் தான் மக்களுக்காய் பேசுவதாய் இலங்கை படைகளுக்கு வக்காலத்து வாங்கும் இரண்டும் கெட்டான்களால்த்தான் இண்று மக்கள் தாயகத்தில் படும் இன்னல்களுக்கு காரனம்.

இரண்டும் கெட்டான்களான கூமைகள் இரண்டும் கெட்டானான பொய்யான புனைகதைகளை சொல்லியே மக்களை என்ன செய்வது எண்று தெரியாது செய்ய வதந்திகளை பரப்பு கின்றன. இந்த வண்டவாளத்தில் எங்களை வெட்டிகள் எண்று வேறை பினாத்தல். அதிலை சாணக்கியன் எண்டவரை உதவிக்கு அழைப்பு.

அனேகமான துரொக ஊடகங்களை மட்டும் படிப்பதால் வரும் பாதிப்பு இது.

துன்பத்தில் பயத்தில் உளலும் அப்பாவி ஏழை மக்களை பலியிட்டு அவர்களின் அழுகுரலில் அவலக் குரலில் ஒரு ஈழம் அமையத்தான் வேண்டுமா..?! ஏன் அந்த மக்களுக்கு வாழ்வுரிமை இல்லையா..?! அவர்கள் தமிழீழத்தில் வாழும் ஆசை அற்றவர்களா..?! இவர்கள் விடுமுறைகழிக்கவா தமிழீழம்...??!

திண்ட சோறு செறிக்க கதை அளக்கிறீர். அப்பிடி எண்டால் என்ன *** க்கு இவ்வளவுகாலமும் சண்டை பிடிச்சவை எண்டு ஒருக்கா சொல்லுமன். இதுக்கு முன்னமும் எவ்வளவு மக்கள் செத்து போட்டார்கள் அவ்வளவு பேரையும் சாக்காட்டியவனோடு நீர் உறவாட வேணும் எண்டதுக்காக எல்லாருமாய் போய் சிங்களவன் காலிலை விழவேணுமோ.?

வடிவாக சொல்லுகிறீ பாதிக்கிணறு தாண்டினாலும் பறவாய் இல்லை திரும்பி வாருங்கள் எண்டுறீர். பலர் சொல்லும் கருத்து உம்மை இனங்காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாணக்கியன்,குறூக்ஸ்க்காக விடுதலை புலிகள் தாக்குதல் நடத்த முடியாது.உலகின் எந்த விடுதலை போராட்ட வரலாற்றிலும் மக்கள் இறந்துள்ளார்கள்.தமிழ் ஈழமும் அதற்கு விதிவிலக்கல்ல.தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் பிறக்க முன்பிருந்தே கொல்லப்பட்டுக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனமாக வாதம் செய்து கண்ட பலன் என்ன? போராட்டத்தின் அரிவரி படிக்காமல் வந்து புலம்புவது ஏன்?

70/80களில்தான் வன்முறைப் போராட்டம் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் வன்முறைப் போராட்டத்தை ஆதரிக்காமல் மக்கள் இயக்கங்களைக் காட்டிக் கொடுத்திருந்தால், இயக்கங்கள் வளர்ந்திருக்கமாட்டாது. தமிழர்களும் புலம் பெயர்ந்திருக்கமாட்டார்கள். ஆங்காங்கே நிலப்பறிப்பு நடந்திருக்கலாம், இனக்கலவரங்கள் நடந்திருக்கலாம். சராசரி 75% எடுத்துப் பல்கலைக்கழகம் போயிருக்கலாம். சிங்களம் படித்து அரச உத்தியோகத்தர் ஆகியிருக்கலாம். ஊருக்கொரு சண்டியர்கூட்டமும், திருவிழாச் சண்டையும் நடாத்திக் கொண்டிருக்கலாம். இப்படியே அடுக்கிக் கொண்டுபோகலாம்.

இதெல்லாம் நடைபெறமுடியாமல் பண்ணியது சாதாரணமக்கள்தான். ஏனெனில் மக்கள் 56 இல் இருந்து சிங்களவனுடன் சேர்ந்து ஒரு நாட்டில் வாழ முடியாது என்பதில் தெளிவாகத்தான் இருந்திருக்கின்றார்கள். தற்போதுதான் சிலர் அழிவுகள் இல்லாமல் தட்டில் சுதந்திரம் வாங்கலாம் என்ற கனவில் வாழமுயற்சிக்கின்றார்கள்.

60 லட்சம் மக்களை இழந்துதான் யூத இனம் இஸ்ரேலை உருவாக்கியது. ஒரு சுதந்திர நாடு தியாகங்களாலும், இழப்புக்களாலும்தான் கட்டியெழுப்பப்படுகின்றது. இவற்றை சிந்தித்து அறிய அறிவாளியாக இருக்கத் தேவையில்லை. ஆறவது அறிவு இருந்தாலே போதும்.

அப்பாவி மக்களின் உயிரிழப்பை எதைக் காட்டியும் நியாயப்படுத்த முடியாது.புலிகளைப் பார்த்துக் கேள்வி கேட்க எமக்கும் உரிமை உண்டு. அவர்கள் கேட்டபோதெல்லாம் ?ஓடிச் சென்று உதவியவர்கள் என்ற வகையில்

ஓடிச் செண்று உதவினீரா..?? அது என்ன புலிகளிக்காகவா உதவினீர்..?? அப்படி எண்றான் அது உம்முன்டைய கடமை இல்லை பாவம் புலிகள் எண்று உதவியது போல புலம்புகிறீர்... போராட்டம் என்பது உமக்குமானதா இல்லையா என்பது உம்முடைய கையில் மட்டும்தான் இருக்கிறது... அதில் புலிகள் உமக்காக கைமாறு செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை... அதுக்காக தமிழ்மக்கள் எவரும் உமக்கு நண்றி கூட சொல்ல கடமை படவில்லை...

இங்கையே களதில் இருப்பவர்களிடையே சிலரின் காலைகள் இராணுவ கம்பி வேலிக்குள் விடிந்து இருக்கிறது.. அவர்கள் எல்லாம் பேசாமல் இருக்க நகை குடுத்தேன் பங்கர் வெட்டினேன் எண்டு கதை சொல்லுறீர்.. போராடி இருந்தால்தான் தெரியும் அதன் கடின பாதை.. பங்கர் மட்டும் வெட்டி குடுத்தவைக்கு எப்படி தெரியும்...??? :lol::lol::lol:

Edited by Thala

யாழ் களத்தில் ஒன்றல்ல பல மன நோயாளிகள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்களையும் சேர்த்துதானோ? நன்றி.

இந்தப் பகுதியில் கருத்தே எழுதாத ஒருவரை இழுத்து அவருக்காக புலிகள் சண்டையத் தொடக்க முடியாது என்று ஒரு நோயாளி புலம்புது. இன்னொரு முத்தின நோயாளி யாரோ எழுதியதை இன்னொருவர் பெயரில் கெட்டித்தனமாக மேற்கோள் செய்து புலம்புது.

இந்தப் பகுதியில் இது எனது 2ஆவது பதிவு. எனவே இந்தப் பகுதியை வாசிக்கிறவைக்கு விளங்கும் யார் யார் மனநேயாளிகள் என்று. :lol:

யாழ் களத்தில் ஒன்றல்ல பல மன நோயாளிகள் :lol:

குறுக்கால, நெடுக்காலை எண்டு ஆளாளுக்கு போனால் எங்களுக்கு குழப்பம் வரும்தான்... இதிலை இரண்டு பேரும் போறது ஒரே வளி எண்டதாலையும் குழப்பம் வாறது சகஜம்...

வேணும் எண்டா சொல்லுங்கோ நான் வேணும் எண்டே போட்ட குறுக்கு எண்ட பேரை நெடுக்கு எண்டு மாத்துறன்... இது ஒண்டும் பயத்தாலை இல்லை... (பேர் மட்டும்தான் வேற இஅரண்டுபேரும் குறுக்காலைதான் போறியள்) :lol::rolleyes::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.