Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை கைதாகிறார் நாமல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தை மேற்கொள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பொலிஸ் தலைமையகத்திடம் செய்துள்ள முறைப்பாடுகளுக்கு அமையவே, கூட்டு எதிர்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தை மேற்கொள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பொலிஸ் தலைமையகத்திடம் செய்துள்ள முறைப்பாடுகளுக்கு அமையவே, கூட்டு எதிர்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

   

முறைகேடான முறையில் சொத்துக்களை சேர்த்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுத்த கோரிக்கையை உதாசீனம் செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கடந்த யூன் மாதம் 30 திகதி குறித்த ஆணைக்குழு உச்சி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவை மதிக்காததால் நாமல் ராஜபக்ச ஆணைக்குழுவை அவமதித்துள்ளதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ச முறைகேடாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்டுவரும் விசாரணைகளுக்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி முன்னதாக வாக்குமூலம் பெற்றுக்கொடுக்குமாறு அறிவித்திருந்த போது, மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தனக்கு கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரியிருந்ததாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினமும் அவர் சமூகமளிக்காததால் மே மாதம் 25 ஆம் திகதி சமூகமளிக்குமாறு மீண்டும் கால அவகாசம் வழங்கிய போதிலும், அதனையும் நாமல் ராஜபக்ச உதாசீனம் செய்தவிட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நாமல் ராஜபக்ச, தனக்கு எதிராக இலஞச ஊழல் விசாரணை ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது தனக்கு பெருமை என்று கூறியிருந்தார். அது மாத்திரமன்றி தன்னிடமும், தனது சகோதரர்களிடமும் இருப்பதாகக் கூறப்படும் உழங்கு வானூர்தி, குதிரைகள், லெம்போகினி போன்றவற்றை பிடித்துக் காடடுமாறும் சவால் விடுத்திருந்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161243&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இந்த உலகம் நம்மனள நம்புது...! <_<

  • கருத்துக்கள உறவுகள்

LolLolLolLol.gif

Edited by Nathamuni

சிங்கள-பௌத்த கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் காலையில் கைது செய்யப்படுவதும் மாலையில் விடுவிக்கப்படுவதும் நல்லாட்சி என்ற புதிய பெயரில் தொடரும் சிங்கள-பௌத்த அரசின் நவீன பயங்கரவாதமாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்களை ஏன் கைது செய்கிறார்கள்?:D:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நல்லவர்களை ஏன் கைது செய்கிறார்கள்?:D:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தை மேற்கொள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பொலிஸ் தலைமையகத்திடம் செய்துள்ள முறைப்பாடுகளுக்கு அமையவே, கூட்டு எதிர்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

நல்லது செய்பவர்களை தான்.... கடவுள் அதிகம் சோதிப்பார்.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

70 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக அழைத்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் பெற்றுக்கொண்ட நன்கொடையானது நாமலின் தனிப்பட்ட வங்கிக் கணக்கினூடாக சென்றுள்ளது.

இது குறித்த விசாரணைகளுக்காகவே இன்று நாமல் ராஜபக்க்ஷ விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/110588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

namalகிரிஷ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு முன்னிலையான நாமல் ராஜபக்ச இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து நாமல் ராஜபக்சவை கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, நீதிவான் லங்கா ஜெயரத்ன, அவரை வரும் 18ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2016/07/11/news/17348

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.