Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்: வேதனையான விடயமாகும்

Featured Replies

பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்: வேத­னை­யான விட­ய­மாகும்

 

sampaltivu-budha-statue-2.jpg

திரு­கோ­ண­மலை சாம்பல் தீவு சந்­தியில் வைக்­கப்­பட்ட புத்தர் சிலை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்­ட­கா­லத்­திற்­கு­ப் பின்னர் இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களும் இணைந்து நாட்டின் வளர்ச்­சிக்கு பங்­க­ளித்­து­வரும் நிலையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெ­று ­வது வேத­னை­யான விட­ய ­மாகும் என திரு­கோ­ண­மலை மாவட்­டப் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்­ண­சிங்கம் தெரி­வித்தார்.

மேற்­படி விடயம் தொடர்­ பில்­ ஊ­ட­கங்­க­ளுக்கு அவர்­க­ருத்­து­ வெ­ளி­யி­டு­கை­யி லேயே இவ்­வாறு கூறினார்.

அவர் மேலும் தெரி­விக்கையில், இவ்­வி­வகாரம் தொடர்பில் எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது குறித்த சில மக்­களில்­லாத இடங்­களில் இவ்­வா­றான சிலை வைப்பு மற்றும் பௌத்த ஆலயம் அமைக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன

நல்­லாட்சி அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கு இது­வ­ரை­யிலும் எவ்­வித நன்­மை­க­ளையும் செய்­ய­வில்லை.

எனினும், இப்­பௌத்த விகாரை அமைப்­பதில் அர­சாங்­கத்­திற்கு நேரடி தொடர்பு எதுவும் கிடை­யாது என நான் நம்­பு­கின்றேன்.. மாறாக இது ஒரு சிலரின் திட்­ட­மிட்ட செய­லா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. குறித்த இடத்தில் உள்ள பஸ்­த­ரிப்பு நிலயம் இரா­ணு­வத்­தினர் விடு­வித்தன் பின்னர் மக்கள் பயன் பாட்­டிற்­கு­துப்­ப­ரவு செய்­யப்­பட்ட நிலையில் கடந்த 10.07.2016 அன்று இந்த சிலை வைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த காலத்தில் திரு­கோ­ண­மலை பிர­தான பஸ்­நி­லை­யத்தில் இவ்­வா­றான சிலை ஒன்று வைக்­கப்­பட்­ட­தானால் எழுந்த நில­மையால் மாவட்­டத்தில் மக்கள் பல பிரச்­ச­னை­க­ளைச்­சந்­திக்க நேர்ந்­தது.

குறித்த காலத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அமைச்­ச­ராக விருந்தார். அவரும் இன்னும் சிலரும் இங்கு வரு­கை­தந்து நில­மை­களை அவ­தா­னித்து சில நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தனர்.

மட்­டு­மன்றி அந்த விடயம் நீதி­மன்றம் கொண்டு செல்­லப்­பட்­ட­தனால். குறித்த சிலை வழி­பாட்­டிற்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது இன்றும் நட­மு­றையில் உள்­ளது. இந்­நி­லையில் இவ் விவ­காரம் மீளவும் உரு­வா­கி­யுள்­ளது கடந்த குச்ச வெளிப்­பிர தேச அபி­வி­ருத்­திக்­கு­ழுவில் நடந்த கூட்­டத்தில் குச்ச வெளிப்­பி­ர­தே­சத்தில் 14 விகா­ரைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது புல்­மோட்டை அரி­சி­மலை மற்றும் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பல இடங்­களில் அமைப்­ப­தற்­காக ஒதுக்­கப்­பட்­டது. இவ்­வா­றுபௌ த்த மக்கள் இல்­லாத இடங்­களில் ஆல­யங்­களை அமைப்­பது நல்­லி­ணக்­கத்­திற்கு கு ந்தக­மான விட­ய­மாகும்.

பௌத்த மக்கள் உள்ள இடங்­களில் அமைப்­பது தேவை­யான ஒரு விட­யம்தான் அந்த மக்கள் வழி­பட அது வழி வகுக்கும் மாறாக பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் அமைப்பது ஏனைய மக்களின் மனங்களைப்புண்படுத்தும் விடயமாகும் இவ்வாறான விடயங்களை அரசு அனுமதிக்க கூடாது. இவை எந்த விதமான அங்கீகாரமுமின்றிச் செய்யப்படுகின்றன. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/9062

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த இராணுவவீரர்கள் இருக்கினமல்லோ அவையள் வழிபட் வேண்டும்தானே....tw_tounge_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்: வேத­னை­யான விட­ய­மாகும்

 

sampaltivu-budha-statue-2.jpg

நாங்கள் வீட்டிலை புத்தர்சிலையை வடிவுக்கு வைக்கிறமாதிரி உவையளும் எல்லா இடத்திலையும் சும்மா வடிவுக்கு வைக்கினமோ தெரியேல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு முன்னால் ஒரு உண்டியலை வைத்து பாலஅபிசேகம் செய்தால் புத்தர் பிறகு எங்கன்ட ஆள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.