Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி கிடைக்க வேண்டும் மூதூரில் அக் ஷன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

Featured Replies

நீதி கிடைக்க வேண்டும்
மூதூரில் அக் ஷன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று
showImageInStory?imageid=1:tn
 

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் நடந்த படு­கொ­லைச்­சம்­ப­வத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறு­வ­னத்தைச் சேர்ந்த 17, தொண்­டர்கள் படு­கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் 10, வரு­டங்கள் பூர்த்­தி­யான நிலையில் அப்­பெற்­றோர்­களும் உற­வி­னர்­களும் தங்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்­லை­யென்­பதை கவ­லை­யுடன் தெரி­வித்­தமை இங்கு பதிவு செய்­து­கொள்­ளப்­ப­டு­கி­றது.

எனது மகள் ரொமிலா சிவப்­பி­ர­காசம் மேற்­படி சம்­ப­வத்தில் படு­கொலை செய்­யப்­பட்டாள். அவளின் படு­கொ­லைக்கு யார் பொறுப்பு, எவ்­வாறு நடந்­தது என்­பது இதுவரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. உண்­மையைக் கண்­ட­றி­வதில் அர­சாங்­கமும் அக்­கறை காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. தங்கள் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்­றிய தொண்­டர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட விவ­கா­ரத்தில் பிரான்ஸ் நாட்டு அக் ஷன் பாம் நிறு­வ­னமும் கைவிட்ட நிலையே காணப்­ப­டு­கி­றது. ஆரம்­பத்தில் காட்­டிய அக்­க­றையை அவர்கள் இப்­பொ­ழுது காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்­லை­யென மிக வேத­னை­யுடன் அந்த தாய் கூறி­யதைக் கேட்டு மனம் இடிந்து போன நிலைக்கு ஆளானோம்.

ஆகஸ்ட் மாதம் 2006ஆம் ஆண்டு முதலாந் திகதி மூதூ­ருக்கு கட­மைக்குச் சென்றார். தொலை­பே­சியில் இங்கு பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. வீட்­டுக்கு வர­மு­டி­யாது அம்மா என தொலை­பே­சியில் எனது மகள் ரொமிலா கூறினார். தகப்பன் மகளைக் கூட்­டி­வரப் புறப்­பட்­ட­போதும் நிறு­வன அதி­கா­ரிகள் நாங்கள் கூட்டிக் கொண்­டு­வருவோம். நீங்கள் வர­வேண்­டா­மென தடுத்­தார்கள். நாங்கள் அதை நம்­பி­யி­ருந்தோம். ஆனால் நான்காம் திகதி கொல்­லப்­பட்­டார்கள் என்ற கொடூ­ர­மான செய்தி தான் எமக்குக் கிடைத்­தது.

சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு முதல் நாள் எமது மகள் எம்­முடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்­டு­பே­சிய போது “அம்மா. பய­மாக இருக்­கி­றது; சாப்­பா­டு­மில்லை, கஞ்­சிதான் குடிச்சோம்” என அழுது அழுது கூறினார். நான்காம் திகதி தொலை­பேசி மூடப்­பட்­டு­விட்­டது. நிறு­வ­னத்தின் பெரி­யவர் அங்கு இருந்­தி­ருந்தால் படு­கொலை செய்­யப்­பட்ட அனை­வ­ரையும் காப்­பாற்றிக் கொண்டு வந்­தி­ருப்பார். துர­திஷ்­ட­வ­ச­மாக அவர் அன்று இருக்­க­வில்­லை­யெனக் கேள்­விப்­பட்டோம்.

இறந்­த­வர்­க­ளு­டைய சட­லங்­களைக் கூட, யாரும் கொண்­டு­வந்து தர­வில்லை. எனது மகனும் அவ­ரது நண்­பர்­களும் மற்­ற­வர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளுமே டிராக்டரில் சட­லங்­களைக் கொண்­டு­வந்­தார்கள்.

எனது ஆம்­பிளைப்பிள்­ளை­க­ளுக்கு வெளி­நாட்டில் அடைக்­கலம் தாருங்கள் என மன்­றா­டினோம். ஒரு சின்ன அளவு உத­வி­யையும் அக் ஷன் பாம் செய்ய முன்­வ­ர­வில்லை. ஏலவே, எனது மூத்­த­மகன் அனஸ்லி சிவப்­பி­ர­காசம் திரு­கோ­ண­மலை புனித பிரான்ஸிஸ் சவே­ரியார் பாட­சாலையில் படித்துக் கொண்­டி­ருந்­த­போது, பொதுக்­குழாய் நீரை எடுக்க பாட­சா­லைக்கு வெளியே வந்­த­போது (21.2.1998) இனந் தெரி­யா­த­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டான். அவன் இறந்து எட்­டு­ வ­ரு­டங்­க­ளுக்குப் பிறகு மூதூர் படு­கொ­லையில் எனது மகள் ரொமி­லாவை பறி­கொ­டுத்தேன் என அந்­தத்தாய் புலம்­பிய வண்ணம் தன் ­வே­த­னையை எம்­முடன் பகிர்ந்து கொண்டார்.

திரு­கோ­ண­மலை மனை­யா­வெ­ளியில் இருக்கும், கணேஷ் சிவ­னேஸ்­வரி தனது கணவன் செல்­லையா கணேஷ் மற்றும் தனது மகள் கவிதா கணேஷ் ஆகிய இரு­வ­ரையும் மூதூர் படு­கொலைச் சம்­ப­வத்தில் பறி­கொ­டுத்த வேத­னையை எம்­முடன் பகிர்ந்து கொண்டார்.

எனது கணவன் 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக அக் ஷன் பாம் என்ற தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றி வந்­தவர். எனது மகள் கவி­தாவும் அதே நிறு­வ­னத்தில் கட­மை­யாற்­றினார். நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­பின்­பா­வது எமது பிள்­ளை­களின் படு­கொலை சம்­ப­வத்­துக்கு நல்­ல­தொரு நீதி கிடைக்­கு­மென பெரி­ய­ளவில் நம்­பி­யி­ருந்தோம். புதிய அர­சாங்கம் வந்து 18 மாதங்­க­ளுக்கு மேலா­கி­விட்­டது. எது­வுமே நடை­பெ­ற­வில்லை. எனது கணவன், மகள் இழப்பை நட்டஈடு­களோ, சன்­மானங்­களோ ஈடு­கட்ட முடி­யாது. இரு உயிர்­களை அநி­யா­ய­மாக எமது குடும்பம் பறி கொடுத்து நிற்­கி­றது. எனது மகள், கணவன் ஆகி­யோரின் இழப்­புக்­களை எப்­ப­டித்தான் தாங்கி இந்த பத்­து­வ­ரு­டங்கள் ஓடி­விட்­டது என்­பதை என்னால் நம்ப முடி­ய­வில்லை. இரு உயிர்­களின் இழப்­புக்கள் என்­னையும் எனது குடும்­பத்­தையும் எப்­படிப் பாதித்­தி­ருக்­கி­றது என்­பதை சொல்லிப் புரிய வைக்க முடி­யாது என, தனது கண­வ­னையும் மக­ளையும் பறி­கொ­டுத்த அந்த தாய், கண்ணீர் வழிந்­தோட, தனது துய­ரத்தை எம்­மிடம் கொட்­டினார்.

2006ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை ஒரு துயரம் நிறைந்த ஆண்­டாகும். ஊட­க­வி­ய­லா­ளர்கள், 5 மாண­வர்கள் படு­கொலை, இளைஞர் கொலை, மீனவர் கொலை, கடற்­ப­டைத்­தளம், சீனக்­குடா விமான நிலை­யத்தின் மீதும் ஆட்­லறித் தாக்­குதல், (12.08.2006) பவுல் முனை கடற்­ப­ரப்பில் அதி­வேக, டோரா படகு வெடித்து சித­றி­யது (7.1. 2006) அநு­ரா­த­புரச் சந்­தியில் வீதிச் சோதனைச் சாவ­டிக்கு அருகில் கிளேமோர் தாக்­கு­தலில் 6 பேர் கொல்­லப்­பட்­டமை.

கிழக்கை கதி­க­லங்க வைத்த மாவி­லாறு யுத்தம் (1.08.2006) இந்த யுத்தம் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்­பெ­யர்ந்­தமை போன்ற ஏகப்­பட்ட துய­ரச்­சம்­ப­வங்­களை தனது நிகழ்ச்சி நிர­லாகக் கொண்ட ஆண்டு 2006 ஆம் ஆண்­டாகும்.

மாவி­லாறு யுத்தம் தொடங்­கப்­பட்டு சுமார் நான்கு நாட்­க­ளுக்குள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை மாத்­தி­ர­மல்ல, உலக நாடு­க­ளையே கதி­க­லங்க வைத்த மூதூர் படு­கொ­லை­யென வர்­ணிக்­கப்­படும் அக்­ஈஷன் பாம் தொண்­டர்­க­ளான 17 பேர் கொல்­லப்­பட்­டார்கள். (4.8.2006) அவர்­களின் உயிர்கள் பறிக்­கப்­பட்டு இன்­றுடன் பத்­து­ வ­ரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

இப்­ப­டு­கொ­லையில் அக் ஷன் பாம் தொண்­டர்­க­ளான முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக் ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

இந்தப் பணி­யா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது தாங்கள் கட­மை­யாற்றும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தை அடை­யா­ளப்­ப­டுத்தும் சீரு­டைகள் அணிந்து இருந்­த­துடன் நிறு­வன வளா­கத்­துக்­குள்­ளேயே பல நாட்கள் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். மாவி­லாறு யுத்தம் மூண்­டதன் கார­ண­மா­கவும் உக்­கி­ர­மான போர் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையே வெடித்த நிலையில் வெளியில் செல்ல முடி­யா­மலும் மாற்றார் வந்து பாது­காப்­பு வழங்க முடி­யாத நிலையில் நிறு­வன வளா­கத்­துக்குள் சுமார் மூன்று நாட்கள் உண­வின்றி, உறக்­க­மின்றி, பாது­காப்பைத் தேட­மு­டி­யாமல் அடை­பட்­டுப்போய்க் கிடந்த அவர்­க­ளுக்­குத்தான் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அந்தக் கொடூரம் நடந்­தது. இப்­ப­டு­கொ­லையில் பலி­யா­ன­வர்­களில் மணம் புரி­யாத 4 இளம் பெண்கள், ஏனைய 13 பேரும் ஆண்­க­ளாவர்.

இப்­ப­டு­கொ­லையைக் கேள்­வி­யுற்ற பல்­வேறு சர்­வ­தேச அமைப்­புக்கள், மனித உரிமை ஸ்தாப­னங்கள், ஆர்­வ­லர்கள், கதி­க­லங்கிப் போனர்கள். சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் ஐ.நா.வின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் ஆலயம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் உட்­பட்ட பல அமைப்­புக்கள் இப்­ப­டு­கொ­லையை, வன்­மை­யாகக் கண்­டித்­தன. மனித குல­வ­ர­லாற்றில் கண்­மூடித்­த­ன­மான காட்­டு­மி­ராண்­டித்­தனம் என அவை சாடி­யி­ருந்­தன .

அக்­கொ­டூரக் காட்­சியைப் பார்த்த சிலர் இப்­படி விவ­ரணம் செய்­தார்கள். மனித மூளை­கள் தரை­யெல்லாம் சிதறிக் கிடந்­தன. மனித சரீ­ரத்தின் உன்­ன­த­மான பார்வை மணிகள் பரவிக் கிடந்­தன என அக்­காட்­சியை சம்­பவம் நடை­பெற்­ற­தற்குப் பின் பார்த்­த­வர்கள் அழுது புலம்­பி­ய­தாக அந்­நா­ளிலே செய்­தி­ வெ­ளி­யிட்ட ஏடு ஒன்று தெரி­வித்­தி­ருந்­தது. கடந்த 25 வரு­ட­கால வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு கொடு­மை­யான படு­கொலை நடந்­த­தில்லை­யென பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் பட்­டி­னிக்கு எதி­ராக செயற்­பட்­டு­வரும் அமைப்­பான ACF தெரி­வித்­தி­ருந்­தது. சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் திரு­கோ­ண­மலை மாவட்ட தலை­வ­ராக அன்­றைய நாளில் செயற்­பட்டு வந்த யுவோன் என்­பவர் தான் வெளி­யிட்ட அறிக்­கையில் இச்­சம்­பவம் பற்றி பின்­வ­ரு­மாறு கண்­டனம் தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்­கையின் வட கிழக்கில் 1983 ஆம் ஆண்­டுக்­குப்பின் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­க­ளுக்கு மனி­தா­பி­மான ரீதியில் தொண்டுப் பணிகள் செய்­து­வரும் தொண்­டர்கள், பணி­யா­ளர்கள் பாது­காப்­பு­ கு­றித்தும் அங்­குள்ள பாது­காப்பு நிலை­மைகள் மீதும் அக்­க­றையும் அவ­தா­னிப்பும் செலுத்தி வரு­கிறோம்.

மூதூர் மக்­க­ளுக்கு பெறு­மதி மிக்க பணி­களை ஆற்­றி­வந்த தொண்­டர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான மூர்க்­கத்­த­ன­மான தாக்­குதல் இது­வாகும். இவ்­வா­றான காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்கள் மனி­தா­பி­மான பணி­க­ளையும் தொண்­டு­க­ளையும் மிக­மோ­ச­மாகப் பாதிக்­கு­மென யுவோன் தனது அறிக்­கையில் (9.8.2006) குறிப்­பிட்­டி­ருந்தார்.

இச்­சம்­பவம் நடை­பெற்ற மறு­வாரம் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் கருத்துத் தெரி­வித்த இடர்­மு­கா­மைத்­துவம் மற்றும் மனித உரி­மைகள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் ஊழியர் படு­கொலை விவ­கா­ரத்தில் படை­யினர் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்ற விடயம் இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வாறு படை­யி­ன­ருக்கு தொடர்பு இருக்­கு­மானால் அவர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.

மக்­க­ளுக்­காக தொண்­டாற்­றிய இவர்­களை யார் எந்த நோக்­கங்­க­ளுக்­காக கொலை செய்­தார்கள் என்ற உண்­மையைக் கண்­ட­றி­வது புதி­ரா­க­வே­யுள்­ளது. விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விசா­ர­ணையின் பின் உண்­மைகள் கண்­ட­றி­யப்­ப­டு­மென நம்­பு­கின்றேன். அந்த உண்­மையின் அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார் (8.8.2006).

இவை­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட, கற்­றுக்­கொண்ட பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் பற்­றிய ஆணைக்­கு­ழு­வினர் இலங்­கையில் இடம்­பெற்ற மிக­மோ­ச­மான மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்பில் திரு­கோ­ண­ம­லையில் 2006 ஆம் ஆண்டு இடம்­பெற்ற 5 மாண­வர்கள் படு­கொலை மற்றும் 17 தொண்­டர்கள் படு­கொ­லைகள் சம்பந்­த­மாக (9.120) பரிந்­து­ரையில் பின்­வ­ரு­மாறு விதந்­து­ரை­களைச் செய்­தி­ருந்­தார்கள்.

ஜன­வரி 2, 2006 இல் இடம்­பெற்ற திரு­கோ­ண­மலை 5 மாண­வர்­களின் படு­கொ­லைகள் மற்றும் ஆகஸ்ட் 4 இல் இடம்­பெற்ற பட்­டி­னிக்­கெ­தி­ரான தொண்டர் நிறு­வ­னத்தின் 17 தொண்­டர்கள் கொலைச்­சம்­ப­வங்­களில் மேலும் புலன் விசா­ர­ணைகள் மற்றும் சம்பந்­தப்­பட்­ட­வர்கள் மீதான வழங்கு தொடர்­பாக புலன் விசா­ர­ணைகள் செய்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பரிந்­து­ரை­களை அமுல்­படுத்­து­வ­தற்கு ஆணைக்­குழு பல­மா­கப் ­ப­ரிந்­து­ரைக்­கின்­றது என மேற்­படி நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்டு நிலை­யிலும் பல்­வேறு கண்­ட­னங்­களும் விமர்­ச­னங்­களும் இருந்­து­வந்த­போதும் இப்­ப­டு­கொ­லை­மீது கவனம் காட்­டாமை, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­காமை என்­பன இன்று வரை இழு­ப­றி­கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கின்­றது என்­பது உண்மை. இவ்­வி­டயம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களும் உற­வி­னர்­களும் தமது அதி­ருப்­தியை மாத்­தி­ர­மல்ல, விச­னத்­தையும் தெரி­வித்து வரு­வதைக் கேட்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=04/08/2016

 

  • கருத்துக்கள உறவுகள்
திருகோணமலை- மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அக்சன் பெய்ம் தன்னார்வ தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேரின் 10 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று காலை சட்ட உதவி மையத்தில் நடைபெற்றது.  குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த கவிதா என்பவரின் தாயாரும், கணேஷ் என்பவரின் பாரியாருமான சிவனேஸ்வரியினால் நினைவுச்சுடர்  ஏற்றி வைக்கப்பட்டது.

திருகோணமலை- மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அக்சன் பெய்ம் தன்னார்வ தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேரின் 10 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று காலை சட்ட உதவி மையத்தில் நடைபெற்றது. குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த கவிதா என்பவரின் தாயாரும், கணேஷ் என்பவரின் பாரியாருமான சிவனேஸ்வரியினால் நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

   

பிரான்ஸ் நாட்டின் அக்சன் பெய்ம் நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் வேனிக் அன்றே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சகோதரர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

trinco-ACF-memo-050816-seithy%20(1).jpg

 

 

trinco-ACF-memo-050816-seithy%20(2).jpg

 

 

trinco-ACF-memo-050816-seithy%20(3).jpg

 

 

trinco-ACF-memo-050816-seithy%20(4).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162977&category=TamilNews&language=tamil

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை வெளிக்கொணரும் இன்னொரு கொடிய நிகழ்வு.

இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்: தண்டிக்கப்படாத கொலையாளிகள்?

பிரெஞ்சு தொண்டர் நிறுவனமான ஏ.சி.எப் என்றழைக்கப்பட்ட 'அக்ஷன் கொன்ரே லா பெயிம்' நிறுவனத்தின் உள்ளூர்ப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைச் சூத்திரதாரிகள், 10 வருடங்களாகியும் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை குறித்து, உறவினர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை (04) இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்ட, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கடந்த 2006ஆம் ஆண்டில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரில், இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்ற காலப் பகுதியில், இந்த படுகொலைச் சம்பவம் நடந்தது.

விடுதலைப் புலிகள், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்துவிட்ட நிலையில், இரு தரப்புக்குமிடையில் மோதலும் தீவிரமடைந்திருந்தது.

மூதூர் நகரில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த அலுவலகத்துக்குள் வைத்தே, இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று, வழமை போல் கடமையின் நிமித்தம் அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள், மோதல் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் தான், அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

தொலைபேசி ஊடாக, உறவினர்களுடன் அவர்கள் தொடர்பில் இருந்த போதிலும், 3ஆம் திகதியுடன், அத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டதாக, உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தின் போது, அங்கு 4 பெண்கள் உட்பட 17 உள்ளூர்ப் பணியாளர்கள் மட்டுமே தங்கியிருந்தனர்.

அங்கு தங்கியிருந்த அனைவரும் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் தகப்பன், மகள் உட்பட 16 பேர் தமிழர்கள் என்றும் மற்றையவர் முஸ்லிம் என்றும் கூறப்பட்டது.

இச்சம்பவம் இடம்பெற்று இப்பொழுது 10 வருடங்களாகின்ற நிலையில், இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உளப் பாதிப்புக்களிலிருந்து தாங்கள் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை என்று உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றம், நம்பகத்தன்மையுடன் விசாரணைகளை நடத்தி, நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென அந்த அமைப்பு, சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையொன்றில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/113229

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.