Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுணதீவில் அதிரடித்தாக்குதல்....சடலங்கள் மீட்பு......

Featured Replies

வவுணதீவில் நேற்றிரவு அதிரடித்தாக்குதல் - படையினரின் சடலங்களும் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் படைத்தளத்தின் காவலரண்கள் மீது நேற்றிரவு அதிரடித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு இரவு 11.10 மணியளவில் தமது கண்காணிப்பு நிலை ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகளால் வவுணதீவு படைத்தளம் மீது ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன்காரணமாக நான்கு படையினர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவரின் உடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலின்போது படையினருக்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் அறியப்படவில்லை. இது குறித்த விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

-Sankathi-

வவுணதீவு படை முகாமிலிருந்து எறிகணை வீச்சு.

வவுணதீவு சிறிலங்காப் படைமுகாமிலிருந்து நேற்று இரவு 7.30 மணிதொடக்கம் நள்ளிரவுவரை தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியிலிருந்து 8.30 மணிவரை எறிகணைத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எறிகணைகள் ஆதித்தியமலை, கரடியனாறு ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது வீழ்ந்துவெடித்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் காரணமாக தாண்டியடி வைத்தியசாலைக்கு இடம்பெயர்ந்து செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-Sankathi-

Edited by யாழ்வினோ

நல்ல செய்தி. முழுவிபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. MCNS இன் இணையத்தளத்தில் இச்செய்தி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. கேக்கச் சந்தோசமாக இருக்குது. விபரமாகச் சொல்லுங்கோ

கந்தப்பு தெரிஞ்ச விபரம் அவ்வளவுதான்.

தாக்கப்பட்டது கவலரண்கள் முகாமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பாதுகாப்பு அமைச்சே தமது கண்காணிப்பு நிலை தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஊடுருவிய படையினர் மீதான தாக்குதலாகக் கூட இது இருக்கலாம். எல்லாவற்றிக்கும் விடை விடுதலைப் புலிகளின் வெளியிடும் தகவல் மூலமே தெரியவரும்.

நல்ல செய்தி. கேக்கச் சந்தோசமாக இருக்குது. விபரமாகச் சொல்லுங்கோ

இதைவிட விபரமாக எப்படிச் சொல்லுறது கந்தப்பு?? :icon_idea::D

Edited by யாழ்வினோ

புலிகளின் சமாதான செயலத்தின் இணையத்திலிருந்து

Large number of civilians displace by SLA’s artillery fire in Vavunathivu

Following last night's SLA move from Vavunathivu camp which was repulsed by the LTTE, SLA is continuing with indiscreminate artillery fire. Civilians has begun to displace.

Last night, Sri Lankan military’s another attempt to move towards LTTE area from their Vavunatheivu military camp was successfully repulsed by the LTTE at 11.00 pm, 21 January 2007.

In this clashes 2 bodies of the Sri Lankan military were recovered by the LTTE. One RPG LMG, one PK LMG, one Radio set, 10 Grenades, and several ammunitions were also captured.

Since then Sri Lankan military has been indiscreminately firing artillery causing civilians to displace.

Edited by மின்னல்

வவுணதீவில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு - இரு சடலங்களும் மீட்பு (மேலதிக விபரம் இணைப்பு).

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு படைத்தளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி சிங்களப் படைகள் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களின்போது கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து அயுத தளபாடங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஆர்.பி.ஜி எல்.எம்.ஜி - 01

பி.கே எல்.எம்.ஜி. - 01

தொலைத்தொடர்பு கருவி - 01

கைக்குண்டுகள் - 10

மற்றும் ரவைகள் உட்பட பல ஆயுததளபாடங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களால் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சம்பவம் குறித்து சிங்களப் பாதுகாப்பு அமைச்சின் ஊடகநிலையம் தெரிவிக்கையில் இரவு 11.10 மணியளவில் தமது கண்காணிப்பு நிலை ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகளால் வவுணதீவு படைத்தளம் மீது ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன்காரணமாக நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வவுணதீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவரின் உடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

-Sankathi-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.